- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
மாங்கு மாங்கென்று இருவர் வீட்டிலும் தினமும் போடப்படும் சத்தியத்தின் ரிசல்ட்..
காலையில்..
இரு வீடுகளிலும் காம்பவுன்ட் சுவரின் அருகில் நின்று கொண்டு.. இந்தப் பக்கம் ஆருஷி.. புளி தண்ணியை கரைத்துக் கொண்டே.. சுந்தரி கலெக்டர் ஆகிட்டாளாமே.. என்று கேட்க.. அந்தப் பக்கமிருந்து.. மீனாட்சி.. ஆமா அந்த கார்த்திக் பையன் செத்துப்போய்ட்டானாம்.. அவன் பொண்டாட்டி எங்கயோ ஓடிப்போயிட்டாளாம்.. சுந்தரி தான் குழந்தையை வளர்க்கிறாளாமே.. என்றதும்.. பாவம் இருந்தாலும் அந்த பொண்ணுக்கு இவ்வளவு சோதனையும் வரக்கூடாது என்று புளித் தண்ணியை கரைத்து கீழே ஊற்றிவிட்டு சக்கையை சேமித்துக் கொண்டாள் பேச்சு ஸ்வாரஸ்யத்தில்.. மீனாட்சி கீரை இலைகளை கீழே போட்டுவிட்டு தண்டை பாத்திரத்தில் போட்டுக் கொண்டாள்..
அதே நேரம் இரண்டாவது மாடியில்.. ஆபர்ணாவும் துவாரகாவும்..
"ஏய்..பிளீஸ்.. netflix பாஸ்வோர்ட் கொடு துகி.. செம படம் ஒன்னு ரிலீஸ் ஆகி இருக்கு.. 365 டேஸ்.. தர்ட் பாட்டு.. இன்னைக்கு நைட்டு பாக்கணும் டி.. நீதான் போன மாசம் சபஸ்கிரிப்ஷன் போட்டியே.. யாரை கேட்டு பாஸ்வேர்ட் மாத்தினே"..
என்று தன் வீட்டு மாடி ஜன்னலில் அமர்ந்து கொண்டு.. காரம் போட்ட முந்திரி பிஸ்கட்களை கொறித்த படி கடுப்புடன் கேட்டு கொண்டிருந்தாள் ஆபர்ணா..
எதிர் ஜன்னலிலிருந்து "நான் எங்கடி பாஸ்வேர்டு மாத்தினேன்.. எங்க அண்ணன் மாத்தி விட்டுட்டான்.. டெய்லி பாஸ்வேர்டு மாத்தறான்.. என்று சலிப்போடு தலையிலடித்துக் கொண்டவள் "ஆக்சுவலி.. எனக்கே பாஸ்வேர்ட் தெரியாது.. ஏன் உங்க வீட்லதான் நெட்ஃபிக்ஸ் அக்கவுன்ட் இருக்குதே.. நேத்து கூட உன் லாப்ல பாஸ் பேபி பாத்துட்டு இருந்தியே.. அப்புறம் எதுக்குடி என்கிட்ட கேக்குற".. எங்கே அண்ணன் வந்து விடுவானோ என்று.. எட்டி எட்டி பார்த்தபடி திருட்டுத்தனமாக பேசிக் கொண்டிருந்தாள் துவாரகா..
"கடுப்பேத்தாதடி எங்க அண்ணன் சைல்ட் லாக் போட்டு வச்சிருக்கான்.. இல்லன்னா நான் ஏன் உன்கிட்ட அக்கவுன்ட் பாஸ்வேர்ட் கேட்க போறேன்.. ஒவ்வொரு படத்துலயும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.. அப்படின்னு டிஸ்க்ளைமர் கொடுக்குறாங்க.. இங்கு 20 வயசு ஆச்சு.. அப்ப கூட அடல்ட் கன்டென்ட்.. பார்க்க அலவுட் இல்லை.. சத்திய சோதனை.. இப்படியே போனா முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்கும்னு நினைச்சுட்டு இருக்கிற கோஷ்டில நானும் ஒருத்தியா போய்டுவேனோன்னு பயமா இருக்கு".. என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் ஆபர்ணா..
"அது சரிதான்".. என்று சிரிப்புடன்.. "ஆமா.. இவ்வளவு நேரமாச்சு ரெண்டுத்தையும் காணோம்.. இன்னுமா எக்சர்சைஸ் பண்ணுதுங்க".. சந்தேகமாக கேட்டாள் துவாரகா..
"ஆமா எக்சர்சைஸ் பண்றேங்கிற பேர்ல ரெண்டும் லவ் பண்ணிட்டு நிக்குங்க.. ஒருத்தனை ஒருத்தன் பாக்காம இருக்க முடியாது.. அவனுக்கு அடிபட்டா இவனுக்கு வலிக்கும்.. இவனுக்கு பிரச்சனை வந்தா அவனுக்கு அலாரம் அடிக்கும்.. அம்மா புள்ள.. அண்ணன் தங்கச்சி ரிலேஷன்ஷிப் கூட இவ்வளவு ஸ்ட்ராங் கிடையாது.. இவனுங்களுக்குள்ள இருக்கிற கெமிஸ்ட்ரி இருக்கே.. அப்பப்பபா.. ஆனா எதிரிங்கன்ற பேர்ல இவனுங்க பண்ற அழிச்சாட்டியம்தான் ஓவரா இருக்கு.. அதுலயும் காலைல வாங்குறானுங்களே சத்தியம் சர்க்கரை பொங்கல்.. ஷ்ஷப்பாஆஆ.. இதைத்தான் என்னால தாங்கிக்க முடியல.. பேசாம இவனுங்க ரெண்டு பேரையும் போட்டு தள்ளிட்டா என்ன?".. என்று அலுத்துக் கொண்டாள்.. ஆரா..
"அடியேய்.. உன் அண்ணனை நம்பிதான்டி என் வாழ்க்கையே இருக்கு.. கொஞ்சம் வெய்ட் பண்ணு.. கல்யாணம் பண்ணி நாலு பிள்ளை பெத்துடறேன். அப்புறம் பொறுமையா பூரா பயலையும் போட்டு தள்ளிடலாம்".. என்று ஐடியா துகி கொடுக்க..
அதை ஆமோதிப்பவள் போல்.. "அதுவும் சரிதான்.. நானும் தெர்மோ டைனமிக்ஸ் பேப்பருக்கு உன் நொன்னனைதான் நம்பி இருக்கேன்.. ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி கோர்ஸ் முடிக்கிறேன்னு என்ற அண்ணனுக்கு சத்தியம் வேற செஞ்சு கொடுத்து இருக்கேன்.. அதுக்கு குரு மனசு வைக்கனும்.. எல்லா பேப்பர்லயும் என்னை பாஸ் பண்ணி விடணும்".. என்று பெருமூச்சு விட..
"யாரு.. அவன்.. ஹான்.. நல்லா வைப்பான் உனக்கு பெரிய ஆப்பு வைப்பான் பார்த்துக்கிட்டே இரு".. என்று விளையாட்டாக எச்சரித்தாள் துவாரகா..
"அது என்னவோ சரிதான் எல்லா விஷயத்துலயும் விட்டுக் கொடுக்கிறான்.. ஆனா இந்த பாடப்புத்தகத்தை எடுத்துட்டா மட்டும் குருபகவான் அந்நியனா மாறிடுறான்.. இதுக்கெல்லாம் ஒரு விமோசனமே இல்லையா".. என்று சோகமாக நொந்து கொண்டாள் ஆரா..
அதற்கேற்றார் போல்.. அவரவர் வீட்டு மொட்டை மாடியில்.. இருவரும் கர்லாக்கட்டை தூக்கி உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் பரம விரோதிகளாய் ஒருவரை ஒருவர் தீயாக முறைத்துக் கொண்டிருந்தனர்.. அவ்வளவு வன்மமாம்.. வெறித்தனமான உடற்பயிற்சியும்.. புடைத்து நின்ற தசைக் கோளங்களும்.. "சண்டைக்கு வர்றியா".. என்பதை போல் இருக்க..
"கல்லா கட்டை தூக்குற அந்த கையை ஒரு நாள் விறகு உடைக்கிற மாதிரி முறிச்சு விடுறேன் பாரு" என்றான் குரு விழிகளில் அனல் தெறிக்க..
"ஆமா இவரு முறிச்சு விடுற வரைக்கும் நாங்க காட்டிகிட்டு சும்மா நிப்போம்.. பேசுற வாயை உடைச்சு முப்பத்திரன்டு பல்லையும் எண்ணி கையில கொடுத்திடுவேன் ஜாக்கிரதை".. என்று பற்களை கடித்தான் தமிழ்..
"பார்த்து பார்த்து பத்திக்க போகுது".. இரண்டாவது மாடியிலிருந்து குரல்.. இரண்டு தங்கைகளில் யாரென்று தெரியவில்லை..
அந்நேரம்.. வியர்வையில் குளித்திருந்த தமிழின் கையிலிருந்த கரலாக்கட்டை நழுவி கீழே விழ.. "அம்மாஆஆ" என்று அலறும் முன்.. பக்கத்து மாடியிலிருந்து எகிறி குதித்து ஓடி வந்து அவன் காலை பிடித்திருந்தான் குரு..
"என்னடா ஆச்சு.. சனியம் புடிச்சவனே மாடு மாதிரி வளர்ந்துருக்க.. ஒரு கர்லாக்கட்டை கூட ஒழுங்கா சுத்த தெரியாதா.. .. உருப்படாத நாயே.. நீயெல்லாம் வொர்க் அவுட் பண்ணலைன்னு எந்த கிழவி அழுதா".. என்று குரு அவன் கால் விரல்களை பிடித்து அடிபட்டிருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தான்..
"எனக்கு ஒன்னும் ஆகல.. நீ எழுந்து உங்க வீட்டுக்கு போடா.. பெருசா வந்துட்டான் அக்கறை ம** ன்னு.. உங்கப்பன் இதுக்கும்.. இல்லாத பேச்சு பேசி எங்களை கழுவி ஊத்தனுமா.. என்னை பாத்துக்க எனக்கு தெரியும்.. உன் வேலையை நீ பாரு".. என்று தன் கால்களை உதறி கொண்டு தமிழ் தள்ளி நின்று கத்தவே குரு பிரகாஷ் தன்மானம் விழித்துக் கொண்டது.. ஏதோ தமிழ் மீதான அக்கறையில் வந்து விட்டவன்.. இப்போது சுயம் பெற்று
"போறேண்டா உன் கூட கொஞ்சறதுக்காக ஒண்ணும் இங்கே வரல.. உன் வீட்டை மிதிச்ச என் காலை பினாயில் ஊத்திதான் கழுவனும்".. என்று வந்த வழியே நடந்தான்..
"ஏன் கழுவிக்கிட்டு.. வெட்டிப் போட்டுடேன்".. தமிழ் நக்கலாக கூறிக் கொண்டிருக்கும்போதே.. தன் வீட்டு மாடியில் எகிறிக் குதித்திருந்தான் குரு..
"பாத்து நாயே.. எக்கு தப்பா கீழே விழுந்து குறுக்கெலும்பு ஒடஞ்சிட போகுது".. புஷ்ஷப் எடுத்துக் கொண்டே கேலியாக கூறினான்..
"அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. உன் கால் வீங்கி இருக்கு போய் மருந்து போட்டுத் தொலை.. செத்துகித்துப் போய்டாதே".. என்று சிடுசிடுத்தான் குரு..
"அது என்னடா கையில வீக்கம்.. நீயும் உங்கப்பனும்.. எவன்கிட்டயாவது வம்பு வளர்த்து செமத்தியா வாங்கி கட்டிட்டு வந்தீங்களா.. மீனம்மா கிட்ட சொல்லி ஒத்தடம் கொடுக்க சொல்ல வேண்டியதூதானே.. அக்கறை கூட நக்கலாகவே வெளிப்பட்டது தமிழிடம்..
அப்பா என்றதும் மூக்கு சிவந்து போனான் குரு.. "வேணாம் தமிழு.. எங்க அப்பாவை பத்தி பேசாத உனக்கு அவ்வளவு தான் மரியாதை".. சீறிக் கொண்டு வந்தான்..
இதற்குதான் காத்திருந்தேன் என்பதை போல்.. "ஹேய்.. அப்படிதாண்டா பேசுவேன் உங்க அப்பாவ பத்தி மட்டும் இல்ல.. உங்க அம்மாவ பத்தி.. உன் தங்கச்சியை பத்தி.. அந்தக் கிழவியை பத்தி எல்லாரப்பத்தியும் பேசுவேன் என்னடா பண்ணுவ".. இவனும் எகிறிக் கொண்டு சண்டைக்கு தயாரானான்..
"தமிழு.. உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. எனக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னு தெரியாது"..
"என்னடா பண்ணுவே".. என்றான் தமழ் நெற்றி வேர்வையை வழித்து சொட்டென்று உதறிக்கொண்டே..
"அதான் தெரியாதுன்னு சொன்னேனே".. தோளைக் குலுக்கினான் குரு..".. மூன்றாம் உலகப் போர் போல் அவ்வளவு சத்தம்..
இங்கே இவர்கள் மேலே சண்டை போட்டுக் கொண்டிருக்க.. மூன்றாவது வீட்டில் புதிதாக வந்த விருந்தினர் ஒருவர்.. "ஐயோ பக்கத்து வீட்ல பெரிய சண்டை.. மாடியில் இரண்டு வயசு பசங்க.. பயங்கரமா சண்டை போட்டுக்குறானுங்க.. ஏதாவது பிரச்சனை வந்திடப் போகுது.. நீங்க போய் தலையிட்டு என்னன்னு கேளுங்க".. என்று அவர் பதட்டத்தோடு அந்த வீட்டு உரிமையாளரிடம் சொல்ல.. காதை குடைந்தபடியே சத்தமில்லாமல் வெளியே சென்று கதவை சாத்திவிட்டு வந்தார் அவர்.. பழகிப் போய்விட்டது போலும்..
"ஏய்"..
"ஏய்ய்ய்ய்"..
"ஏஏஏஏஏய்ய்ய்ய்ய்"..
"ஆரம்பிச்சுட்டானுங்க" என்று ஆளாளுக்கு காதில் பஞ்சை சொருகிக் கொண்டனர்..
"இவனுங்களுக்கு.. ஒருத்தனை ஒருத்தன் பாத்துக்கணும்.. பேசிக்கனும்.. அதுக்கு சண்டை ஒரு சாக்கு..".. என்று உதட்டை சுழித்தாள் மீனாட்சி..
"சண்டை போடுற மூஞ்சிங்கள பாரு.. ரெண்டும் தென்ன மரம் மாதிரி வளந்துருக்குதுங்க.. ஊர்ல இருக்கிறவனுங்க எல்லாரையும் பறந்து பறந்து அடிப்பானுங்களாம்.. இவனுங்க மட்டும் குழாயடி சண்டை மாதிரி வாய்லயே சண்டை போடுவானுங்களாம்.. இவனுங்க கிடக்கிறானுங்க.. விடு.. எதிர் நீச்சல் என்னாச்சு".. என்று மீனாட்சி கேட்கவும் .. தமிழ் மாடியிலிருந்து இறங்கி கீழே வந்தவன்.. "அக்கா" என்று அழைக்கவும் சரியாக இருக்கவே "அய்யோ வந்துட்டான்.. நான் போறேன்".. என்று ஆளாளுக்கு ஓடி மறைந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்..
அத்தனையும் வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டது அப்பத்தாவின் ஸ்மார்ட் ஃபோனில்.. "இனிமே எவனாவது என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுங்கடா, பாக்கறேன்".. ராக்கம்மா விவரமாக தலையாட்டி சிரித்தவளோ.. அடுத்த கணமே அதை தன் மகன் வெற்றி வேலுக்கும் குடும்ப வாட்சப் குரூப்பிலும் ஃபார்வேர்டு செய்துவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள்..
"இதை கண்டிப்பா நீ பார்க்கனும்" என்ற கேப்ஷனுடன் வந்திருந்த வீடியோவை ஓப்பன் செய்தார்.. வெற்றிவேல்..
மாசி மாசம் ஆளான பொண்ணே.. மாமன் உனக்குதானே.. என்று வீடியோ பாட்டு ஓட உடனே புளுடிக்.. ஏகப்பட்ட ரியாக்ஷன்ஸ்.. பாவம் பாட்டிக்கு அது தெரியவில்லை..
"ஏம்மா உனக்கெல்லாம் அறிவு இருக்கா?" ஆங்ரி எமோஜி போட்டு அம்மாவுக்கு வாட்சப்செய்திருந்தார் வெற்றிவேல்..
"அறிவு இருக்கறதுனால தான் எல்லாரும் பார்த்து தெரிஞ்சுக்கட்டும்னு அந்த வீடியோவை குரூப்ல போட்டு விட்டேன்.. பாத்துட்டு உன் பொண்டாட்டி மேல பாஞ்சுறாதே.. விட்டு பிடி.. இந்த மாதிரி டெய்லி நிறைய வீடியோ போட்டு விடுறேன்".. என்று அப்பத்தா பேசியது சரியாக அந்த பாடலுக்கு சிங்க் ஆகவே..
தலையிலடித்துக் கொண்டு.. ஃபோன் செய்தவரோ "ஏம்மா ஏய்.. முதல்ல என்ன வீடியோ போட்டுருக்கேன்னு பாருமா.. வர வர உன் அலப்பறை தாங்கல.. இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தேன்னு வை.. கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுருவேன் பாத்துக்க" .. என்று எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் ஸ்டைலில் கத்திவிட்டு ஃபோனை வைத்தான் வெற்றிவேல்..
"என்ன.. உண்மையை கண்டுபிடிச்சதுக்கு பாராட்டுவான்னு பார்த்தா திட்றான்".. என்று விழித்த ராக்கம்மா சந்தேகத்துடன் வீடியோ வை ஓபன் செய்ய.. திரையில் நாயகன் நாயகி கட்டி உருண்டு கொண்டிருந்தனர்.. "ஆத்தாடி.. இதையா அனுப்பினேன்.. எஞ்சாமி".. பாவம் பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை..
"மாசி மாசம் ஆளான பொண்ணே.. மாமன் உனக்குதானே".. என்றுபாடிக் கொண்டே வந்த மீனாட்சியை ஆங் என பார்த்தார் ராக்கம்மா..
"ஹே ஹேய்.. யாரு நாங்கெல்லாம்.. புலிக்கே புளியோதரை போட்டு ஹான்ட் ஷேக் கொடுத்தவங்க".. என்று கல்மிஷ புன்னகையுடன்.. வெளியே தோட்டத்து செடியிலிருந்து.. கருவேப்பிலையை உருவிக் கொண்டு.. அடுத்த செடியிலிருந்து இரண்டு மிளகாயை கிள்ளி கொண்டு மாமியாரை ஏற இறங்க பார்த்து.. இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டு தெனாவட்டாக சென்ற மீனாட்சியை "அடிப்பாவி" என வாயில் கைவைத்து பார்த்தார் ராக்கம்ஸ்..
தொடரும்..