• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 22

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
மாலை கிளம்பும் வேளையில் பைக்கை முறுக்கிக் கொண்டு ஆராவிற்காக காத்திருந்தான் குரு.. அவள் வரமாட்டாள் என்றொரு எண்ணம் வலுவாகத் தோன்றினாலும்.. "என் ஆருக்குட்டி என்கிட்டே வராம எங்கே போய்டும்".. இன்னொரு மனம் அவளுக்காக வக்காலத்து வாங்கியது..

காலேஜ் முடிந்து அடுத்த கணமே வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பும் ஆள் அவன்.. "நானு நானு" என்று.. பள்ளி முடிந்து பெல் அடித்த அடுத்த கணமே பையை தூக்கிக் கொண்டு வரும் சிறு குழந்தை போல.. கீழே விழும் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு ஓடி வருவது ஆராவின் வழக்கமாக இருக்கும்.. ஆனால் இன்றோ.. கல்லூரி முடிந்து கால் மணி நேரங்கள் ஆன பின்னும் அவள் வராது போகவே.. ஆராவை தேடிக் கொண்டு அவன் விழிகளை அலைய விட்ட தோரணையில்.. "சார் ஆரா அவ பிரண்ட்ஸ் கூட பேசிட்டு நிக்கிறா.. நான் வேணா கூட்டிட்டு வரட்டுமா?" என்று கேட்டாள் மாணவி ஒருத்தி..

"இல்ல வேண்டாம்.. நானே பாத்துக்கிறேன்".. என்று பைக்கை ஆஃப் செய்து விட்டு எழுந்து வந்தவனுக்கு காரணமின்றி உள்ளுக்குள் கோபம் கிளர்ந்தெழுந்தது..

இதுவரை அவன்தான் அலட்சியப்படுத்தி இருக்கிறான்.. விளையாட்டுக்காக தான் என்றாலும்.. அவளாகத்தானே வந்து ஒட்டிக் கொண்டாள்.. ஆனால் இன்று அவளின் ஒதுக்கம்.. இந்த இருபது வருடங்களில் புதிதாக தோன்றி இதயத்தை ஏதோ செய்தது.. தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவன் தன்மானத்தை தட்டி எழுப்பியதா அல்லது கோபத்தை கிளப்பிவிட்டதா.. வேறேதும் உணர்வா.. சரியாக வகைப்படுத்திக் கொள்ள முடியவில்லை அவனால்..

"குரு.. குரு".. இன்று பார்கவி முதுகின் பின்னால் அழைத்ததை கூட பொருட்படுத்தாமல்.. காதில் வாங்கிக் கொள்ளாமல் வேகமாக கல்லூரியினுள் நுழைந்து ஆராவினை தேடிக் கொண்டிருந்தான் அவன்..

"சீனியர்.. சீனியர்".. என்று அரவிந்த் முதுகுக்குப் பின்னால் அழைத்துக் கொண்டு சென்றவளை பார்த்தவுடன் கோபம் உச்சிக்கு எறியது..

"அவன் தான் கண்டுக்கவே மாட்டேங்குறான்னு தெரியுது இல்ல.. அந்த திமிர் பிடிச்ச நாய் பின்னாடி எதுக்கு தேவையில்லாம அலையுறா இவ".. என்று.. அக்கறையும் ஆத்திரமும் போட்டி போட்டு எழவும் தீவிழிகளால் அவளை எரித்தபடி ஆராவை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருந்தான்..

"சீனியர்ர்ர்ர்".. என்று ஒரு வழியாக அழைத்து அரவிந்தன் கவனத்தை திசைதிருப்பி இருந்தாள் ஆரா..

புஜங்களை வெளிப்படையாக காட்டும் டி-ஷர்டில்.. நோட்டுப் புத்தகத்தை தூக்கிப்போட்டு கேட்ச் படித்துக் கொண்டே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன்.. அவள் குரல் கேட்டும் கேட்காதது போல் அங்கிருந்து நகர முயன்றான் .. எப்படியோ ஓடி வந்து பிடித்து விட்டாளே..

"டேய் மச்சான் இந்த கருத்த பன்னிகிட்டே மாட்டிக்காத.. தின்னு தின்னே உன் சொத்தை அழிச்சிடும் என்று கோலிவுட் சல்மான் கான்களும் ஷாருக் கான்களும்.. அறிவுரை என்ற பெயரில் கேலி செய்துவிட்டு அங்கிருந்து நழுவினர்..

"சீனியர்".. என்று மூச்சு வாங்க அங்கேயே நின்றவள்.. ஏதோ சொல்ல வாயெடுக்க.. புருவத்தை தேய்த்துக் கொண்ட படி.. சங்கடத்துடன் வலுக்கட்டாயமாக புன்னகைத்தான் அரவிந்த்..

"ஐயோ சிரிச்சிட்டான்" .. ஆரா துள்ளி குதிக்காத குறை தான்.. "இப்போ பாத்து.. பக்கத்துல எவளுமே இல்லையே.. இந்த வீணா போன கீர்த்தியும் ரம்யாவும் எங்கதான் போய் தொலைஞ்சாளுங்க".. என்று பார்வையை அலைய விட.. "என்ன விஷயம் சொல்லுங்க".. என்றான் அரவிந்த் வேண்டாவெறுப்பாக..

"அது.. நீங்க?".. என்று வார்த்தைகள் வராமல் அவள் திக்கித் திணறிக் கொண்டிருந்த வேளை.. "ஆரா".. என்று.. ஓங்கி ஒலித்த கணீர் குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்பினர்..

வேகமாக அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் குரு.. இன்னும் ஒரு வார்த்தை அவனிடம் பேசினால்.. உன்னை உயிரோடு புதைத்து விடுவேன் என்பது போன்ற அனல் பார்வையுடன்..

இதுதான் சந்தர்ப்பம் என.. "உன் ப்ரொபசர் வராரு.. நான் கிளம்புறேன்" என்று சாதுர்யமாக நழுவிக் கொண்டான் அரவிந்த்.. இந்த முறையும் தோல்வி.. வழக்கம் போல குரு கெடுத்து விட்டான்.. ஒவ்வொரு முறையும் அவள் முயற்சியை தவிடு படியாக்கும் குருவை கண்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றவள் அவன் மீதான வெறுப்பில் திரும்பி நடக்கும் வேளையில்.. நெருங்கி அவள் கையை பற்றியிருந்தான் குரு..

அவன் முரட்டுத்தனமான பிடியில் முகம் சுணங்கியவள் "விடுங்க சார்".. என்றாள் வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு..

"ஏய் லூசு.. காலேஜ் முடிஞ்சு அரை மணி நேரம் ஆகப்போகுது.. உன்னைய காணோம்னு காலேஜ் ஃபுல்லா தேடிக்கிட்டு இருக்கேன்.. இங்க நின்னு அவன் கூட என்னடி பண்ணிட்டு இருக்க".. பற்களை கடித்துக் கொண்டு கோபமான அவனின் மிரட்டும் தோரணையில் கொஞ்சம் கூட அசராதவள்..

"வழக்கம்போல வந்து கெடுத்து விட்டுட்டு கேள்வியா கேக்குறீங்க.. இந்த காலேஜ்ல எத்தனையோ பேர் பாய்ஸ் கிட்ட பேசுறாங்க.. அரட்டை அடிக்கிறாங்க.. அதெல்லாம் உங்களுக்கு பெரிய விஷயமா தெரியலையா? என்னை மட்டும் ஏன் எப்ப பாரு கண்ட்ரோல் பண்ண நினைக்கிறீங்க.. இதெல்லாம் சரியே இல்லை.. முதல்ல கையை விடுங்க" என்று அவன் பிடியிலிருந்து தன் கையை உருவி கொள்ள முயன்றாள்.. அப்படியெல்லாம் விட்டுட முடியாது என்பது போல் இன்னும் இரும்பு பிடியாக அழுத்தமாக பற்றிக் கொண்டான் அவன்..

"உன்னை நான் கண்ட்ரோல் பண்ணாம வேற யார் பண்ணுவாங்க.. உன் நல்லது கெட்டதுல எனக்கு அக்கறை இல்லையா என்ன?.. அவன் வேண்டாம் ஆரா.. பின்னாடி நீ தான் கஷ்டப்படுவ.. இந்த சைட் அடிக்கிறது கடலை போடுறது இதெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு படிக்கிற வழியை பாரு.. உன் அண்ணன் உன் மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கான்.. நானும் தான்".. என்றான் கண்டிப்பான குரலில்..

என்ன பேசுறீங்க ப்ரொபசர் சார்.. சைட் அடிக்கிறதால என்ன பிரச்சனை வந்துட்டு போகுது.. இதெல்லாம் வயசு கோளாறு.. ஹார்மோன் சேஞ்ச்.. உங்களுக்கு தெரியாதா?.. ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்து அட்ராக்ட் ஆகலைனா தான் அவளுக்கு ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்.. நான் ஒன்னும் இதை சீரியஸ் ரிலேஷன்ஷிப் குள்ள கொண்டு போக மாட்டேன்.. அப்படியே போனாலும் கஷ்டம் எனக்கு தானே.. நீங்க ஏன் பெருசா கவலைப்படுறீங்க.. முதல்ல கையை விடுங்க.. எல்லாரும் பாக்குறாங்க.. அவள் சுற்று மற்றும் பார்த்துக் கொண்டு தன் கையை விடுவித்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தாள்..

அவள் பேச்சும் நடவடிக்கையும் ஒரு தினுசாக மாறி இருக்கவே.. குருவின் விழிகள் சுருங்கி பார்வையில் கூர்மை பரவியது..

"என்னாச்சுடி உனக்கு.. ஏன் ஒரு மாதிரி பிஹேவ் பண்றே.. யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்களா.. பார்கவி.. அப்பத்தா.. என்னோட அப்பா.. யாராவது உன்னை ஹர்ட் பண்ணிட்டாங்களாடா கண்ணா?.. குரலில் மென்மை நுழைந்து கொள்ள அவள் கலைந்த கேசத்தை வருட முயன்றான் மறுகரத்தால்..

"ப்ச்".. என்று முகத்தை சுழித்துக்கொண்டு.. தலையை பின்பக்கம் இழுத்துக் கொண்டவள்.. "அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ என்னை அரவிந்த் கூட பேச விட மாட்டேங்குற.. அந்த கடுப்பு தான்".. என்றாள் எரிச்சலாக..

"ஓஹோ நீ கண்டவன் கிட்ட பேசுவ.. நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணுமா".. மீண்டும் மூர்க்கமானான் குரு..

"ஏன் நீ மட்டும் லவ் பண்ணல?.. பார்கவி மேடம் கிட்ட பேசல? நான் ஏதாவது தலையிட்டேனா".. ஆராவும் பதிலுக்கு எதிர்த்து பேசினாள்..

"என் வயசு என்ன?.. உன் வயசு என்னடி.. உனக்குன்னு ஒரு பக்குவம் வந்ததுக்கப்புறம் நீ யார்கிட்ட வேணா பேசு.. யாரை வேணா லவ் பண்ணித் தொலை.. நான் எதுவும் கேட்க போறது இல்ல.. அதுவரைக்கும் எங்க சொல்படி தான் நீ நடக்கணும்".. என்றவனுக்கு மூளை அவன் கட்டுப்பாட்டில் இல்லை..

"எனக்கு ரூல்ஸ் போட நீ யாரு.. என்னை பார்த்துக்க என்னோட அண்ணன் இருக்கான்.. நீ ரொம்ப அக்கறை எடுத்துக்க வேண்டாம்.. எப்பவும் என்னை கண்ட்ரோல் பண்ண நினைக்காதே குரு.. என் லைஃப் ஏன் இஷ்டப்படி தான் வாழுவேன்".. என்று அவன் மனதை நொறுக்கினாள் ஆரா..

"ஓங்கி அறைஞ்சேன்னு வச்சுக்கோ செவுலு பிஞ்சிடும்.. என்ன வாய் நீளுது.. என் கோபத்தை கிளறாதே ஆரா".. என்று கண்களை உருட்டி எச்சரித்தவன்.. அவன் கோபத்தின் வீரியம் தாங்காமல் ஆராவின் கண்கள் கலங்கி நிற்பதை கண்டதும்.. அடுத்த கணமே.. பனியில் வைத்த பாதரசமானிப்போல் மொத்த கோபமும் உறைநிலைக்கு சென்று விட்டான்..

நீண்ட பெருமூச்சுடன் நிதானமாக.. "சரி இதை பத்தி அப்புறமா பேசிக்கலாம்.. வா வீட்டுக்கு போகலாம்".. என்று பற்றியிருந்த கையை விடாமல் அவளை தன் பக்கம் இழுத்தான்.. இதற்கு மேல் எப்படி மறுப்பதென்றே புரியவில்லை அவளுக்கு.. என்ன சொன்னாலும் இன்று தன்னுடன் அழைத்து செல்லாமல் விடமாட்டான் என்பதால் பதில் பேசாமல்.. அவனோடு நடந்தாள் ஆரா..

குரு அவள் தோளில் கை போட்டுக்கொள்ள இருவரும் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர் பைக் பார்க்கிங் நோக்கி.. தூரத்திலிருந்து பார்கவியின் விழிகள் இருவரையும் வன்மத்துடன் நோக்கிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை அவர்கள்..

"எனக்கு அரவிந்தை பிடிச்சிருக்கு.. அவன் கூட பேசணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு.. நான் என்ன நாளைக்கே அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு ஓடிப்போக போறேன்னா என்ன.. நீ ஏன் சின்ன விஷயத்தை இவ்வளவு எக்சாஜுரேட் பண்றே குரு".. விடாமல் அதைப்பற்றியே பேசிக் கொண்டு வந்ததில் குருவின் கோபம் மீண்டும் கிளர்ந்தெழுந்தாலும்.. முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்.. "பேசலாம்டி.. பொறுமையா பேசலாம்".. என்று அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவள் தோள்களில் தட்டிக் கொடுத்து அழைத்துச் சென்றிருந்தான்..

விலக நினைத்து.. அவள் எடுத்த முயற்சிகள் யாவும் வீணாகி போக.. இன்னும் அதிகமாக அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்று நெருங்கிக் கொண்டிருந்தான் குரு.. காலையிலும் மாலையிலும் என்னோடுதான் கல்லூரி வரவேண்டும் இல்லையெனில் கெட்டு குட்டிச்சுவராகி விடுவாய் என்று வலுக்கட்டாயமாக தன்னோடு இழுத்துச் சென்றான்..

"என்னடி குரு சார் உன்னையே சுத்தி சுத்தி வர்றாரு.. அவருக்கு தெரியாமல் ஏதாவது திருட்டுத்தனம் பண்றியா".. என்று தோழிகள் முதற்கொண்டு அனைவரும் கேட்டு வைக்கும் வகையில்.. அவள் மீது ஒரு கண்ணை வைத்திருந்தான் குரு..

"ஆரா கிளாசுக்கு போ".. என்று அரவிந்த சைட் அடிக்கும் நேரத்தில் சத்தமாக அழைத்து.. அவன் கண்டிக்கும் தொனியில் அவள் மூட் ஸ்பாயில் ஆக.. "எப்படித்தான் மூக்கு வேர்க்குமோ இந்த முள்ளம்பன்றிக்கு".. முனங்கி கொண்டே செல்வாள்..

குருவின் மீது ஈர்ப்பு கொண்ட மாணவிகளுக்கு அவன் ஆராவின் மீது மட்டும் கவனம் செலுத்துவது பொறாமையை வரவழைக்கவே.. "என்னடி குரு சார்.. நம்மகிட்டே மட்டும்.. வள் வள்ளுன்னு விழறாரு.. இந்த ஆரா கிட்டே மட்டும் குழையறாரு.. சரி இல்லையே".. என்று அவள் காது படவே.. ரெஸ்ட் ரூமில் சில மாணவிகள் பேசிக் கொண்டிருக்க.. பாத்ரூமினுள் இருந்தவளால் சட்டென வெளியே வர இயலவில்லை அந்நேரத்தில்..

"அது ஒரு அக்கறைடி.. அம்மா அப்பா இல்லாத பொண்ணு.. அதனால கேரிங்கா பாத்துக்குறாரு.. நாளைக்கே பொண்டாட்டி வந்துட்டா இவளை தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பாரு.. இந்த காலத்துல அண்ணன் தம்பிகளே நிரந்தரம் இல்ல.. இது என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் ஒரு கருமமும் புரியல.. இதுக்கெல்லாம் அவர் பெருசா முக்கியத்துவம் கொடுப்பாருன்னு தோணல" என்றாள் இன்னொருத்தி..

"அப்போ இது லவ் இல்லையா"..

"அடச்சீ.. வாயைக் கழுவு.. குரு சார் பர்சனாலிட்டி என்ன.. அவர் அழகு என்ன.. அவர் போய் இப்படி ஒருத்தியை லவ் பண்ணுவாரா.. கண்ணு இல்லாதவன் கூட அந்த தப்பை பண்ண மாட்டான்.. குரு சார் பார்கவி மேடம்மை லவ் பண்றாரு.. ரெண்டு பேருக்கும் என்ன ஜோடி பொருத்தம்.. அள்ளுது போ.. மேட் ஃபார் ஈச் அதர்.. இல்ல?"

"ஆமா உண்மைதான்.. ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் பக்கா.. குறுக்கே எந்த கரடியும் அவங்க காதலுக்கு நடுவுல வந்து இன்டர் பியர் ஆகாம இருக்கணும்".. என்று சிரித்து பேசிக்கொண்டு வெளியே சென்று விட்டனர் அவர்கள்..

அதன் பின் வெளியே வந்தவள் வகுப்புகளை புறகணித்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டாள்..

"எங்க போச்சு இந்த அறுந்த வாலு.. மீனு வேற பிஸிபேளாபாத் பேபி பொட்டேட்டோ ஃப்ரை கொடுத்துவிட்டு இருக்கே.. குரங்கு குட்டி இந்நேரம் மோப்பம் பிடிச்சு ஓடி வந்திருக்கணுமே.. என்று இதழில் சிறு புன்னகையுடன் அவளை தேடிக் கொண்டிருந்தான் குரு..

"சார் ஆபர்ணா உடம்பு சரியில்லைன்னு சொல்லி HOD கிட்டே லீவ் லெட்டர் எழுதி கொடுத்துட்டு அப்பவே வீட்டுக்கு போயிட்டா".. என்று வான்டட்டாக வந்த தகவல் சொன்னாள் அவள் வகுப்பு தோழி ஒருத்தி..

"என்னது.. உடம்பு சரியில்லையா".. இதயம் திடுகிட்டது சட்டென.. "காலையில நல்லா தானே இருந்தா.. பீரியட்ஸ் டேட் கூட இல்லையே".. என்று எண்ணிக் கொண்டே போனில் அவள் எண்ணை அழைத்து காதில் வைத்திருந்தான் குரு.. ஃபுல் ரிங் சென்று கட் ஆனது..

"தூங்கறாளோ".. என.. அடுத்து மீனாட்சிக்கு அழைத்திருந்தான்..

"அம்மா"..

"சொல்லுடா"..

"ஆரா வந்தாளா"..

"ஆமா.. ஏதோ உடம்பு சரியில்லையாம்.. தலை வலிக்குதாம்.. சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டா.. அவளுக்குதான் காப்பி போட்டு எடுத்துட்டு போறேன்".. என்றாள் அவள்..

"சாப்பிடற நேரத்துக்கு எதுக்கு காபி.. பேசாம சாப்பாடு ஊட்டி விட்டுடு.. காலையில செஞ்ச சாம்பார் சாதம் இன்னும் மிச்சம் இருக்கா"..

"இருக்கு"..

"அதை சூடு பண்ணிட்டு.. அந்த பேபி பொட்டேட்டோ ஃப்ரையை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இன்னும் முறுகலா வறுத்து"..

"உனக்கு எடுத்து வைக்கணுமா.. மதியம் சாப்பிட வீட்டுக்கு வர்றியா என்ன?.. கொண்டு போன சாப்பாட்டை யாருக்கு கொடுத்து தொலைச்ச".. வழக்கமான மம்மியாக துளைத்து எடுத்தாள் மீனு..

"அய்யோ.. எனக்காக செய்ய சொல்லல.. காலேஜ் கட் அடிச்சிட்டு வீட்டுக்கு வந்து குட்டி கரணம் போட்டு கவுந்து படுத்து கிடக்கே.. அந்த குரங்கு குட்டிக்கு.. வர வர அவ நடந்துக்கிற முறையே சரி இல்ல.. சரியா படிக்கிறதும் இல்ல.. சரியா சாப்பிடறதும் இல்லை.. வந்து வச்சுக்கிறேன் அவளை" என்று போனை வைத்து விட்டான்..

ஏனோ தானோ என்று பத்து நாட்கள் கழிந்திருந்த நிலையில்.. காரணம் இல்லாமல் எரிந்து விழுந்து கொண்டே சேனலை மாற்றிக் கொண்டிருந்தவனை இடுப்பில் கைவைத்து புரியாமல் நோக்கி கொண்டிருந்தாள் மீனாட்சி..

"இப்ப எதுக்குடா நாய் மாதிரி விழற.. என்னடா பிரச்சனை உனக்கு".. என்று தன் பங்குக்கு அவளும் எகிறினாள்..

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.. எங்கே உன்னோட குட்டி மருமக.. என்னை பார்த்தா மூஞ்சிய திருப்பிக்கிட்டு போறா.. நான் இருந்தா வீட்டுக்கு வர மாட்டேங்குறா.. என்ன நினைச்சிட்டு இருக்காளாம் மனசுல.. என்னை பார்த்தா எப்படி தெரியுதாம் அந்த பொடிசுக்கு".. என்றான் சிடுசிடுப்போடு.. அடிக்கடி அவர்கள் சண்டை போடுவது வழக்கம் என்பதால் மீனாட்சி அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை..

"எனக்கென்ன தெரியும்.. என்கிட்ட.. துவாரகா கிட்ட எல்லாம் நல்லா தானே பேசுறா.. உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனையோ.. நீ ஏதாவது சீண்டி வம்புக்கு இழுத்திருப்பே.. அவ முறுக்கிகிட்டு பேசாம இருக்காளோ என்னவோ.. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறதும் அடிச்சுக்கிறதும் கடிச்சுக்கிறதும் இன்னைக்கு நேத்தா நடக்குது.. என்னை எதுக்குடா நடுவுல இழுக்கிற.. நீயாச்சு அவளாச்சு".. என்று தோள்களை குலுக்கி கொண்டு சென்று விட்டாள்..

தங்கை சோர்ந்து காணப்படுவதை அறிந்து கொண்டு.. அவனிடம் துருவி துருவி வெவ்வேறு விதமாக கேள்வி கேட்ட தமிழ்.. "கடைசியில் ட்ரக்கிங் போலாமா பாப்பா.. உனக்கு பிடிச்ச மாதிரி அட்வென்சரஸ் ட்ரிப்".. என்று கேட்டிருந்தான்..

"வேண்டாம்ணா.. படிக்க வேண்டியது நிறைய இருக்கு.. பிராக்டிகல்ஸ் கட் ஆகும்.. அதோட.. உன்னை நம்பி தாரா பாப்பா இருக்கே.. ஹாஸ்பிடல்ல.. நீ ரெண்டு நாள் இல்லைனா உன்னோட பொண்ணு அத்தனை பேரையும் டிரில் வாங்கிடுவா".. என்று ஆரா நினைவுபடுத்தவும் தான் தாராவை பற்றிய எண்ணமே வந்தது அவனுக்கு.. உண்மைதான் ஒரு நாள் தமிழை காணாது போனாலும்.. மருத்துவமனையே ஒரு வழியாகி போகும்.. இன்னும் காயங்கள் ஆறாத நிலையில் அச்சத்தில் மேலும் மேலும் ரணப்படுத்திக் கொள்வாள் தாரா.. அவளுக்காக நிச்சயம் அவன் இங்கே இருந்தே ஆக வேண்டுமே .. தாராவை மகள் என்றதும் அவன் இதழில் மின்னலாக ஒரு குறுஞ்சிரிப்பு தோன்றி மறைந்தது..

"அக்காவை பாக்காம ஒரு மாதிரி இருக்கு.. அக்கா வேணும்".. என்று கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவனின் மடியில் படுத்துக்கொண்டாள் ஆரா.. ஆருஷி அருகே இருந்தால் கூட போதும்.. எவ்வளவு துன்பங்களும் இடர்பாடுகளும் வந்தாலும் பெரியதாகவே தோன்றாது இருவருக்கும்..

அக்காவை தேடுகிறாள்.. அதுதான் அவள் ஏக்கத்திற்கு காரணம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் தமிழ்.. வீட்டிலிருந்தவரை அவளை சீண்டி சீண்டி வம்புக்கு இழுத்து சிரிக்க வைத்துக் கொண்டுதான் இருந்தான்..

குலுங்க குலுங்க சிரித்து விளையாடிக் கொண்டிருப்பதில்.. அவள் கலகலக்கும் சத்தம் கேட்டு வீட்டின் அந்தப் பக்கம் ஒருவனுக்கு கோபம்தான் வந்தது.. சமீப காலமாக அவனோடு அப்படியெல்லாம் விளையாடுவதில்லையே அவள் என்ற ஏக்கமாக கூட இருக்கலாம்..

அன்று ஆராவின் பிறந்த நாள்.. எப்போது மணி பன்னிரென்டை தொடும்.. இந்த வருடமாவது முதன் முதலில் தன் தங்கைக்கு தான்தான் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று முடிவோடு.. 11 45 க்கெல்லாம் தன் அறையை விட்டு வெளியே வந்தான் தமிழ்.. தொப்பென்று யாரோ எகிறி குதிக்கும் சத்தம்..

கடுப்புடன் கண்களை மூடி திறந்தான் அவன்.. திருடன் நம்பர் ஒன் வீட்டுக்குள் இறங்கி விட்டான்.. இனி தான் முதல் வாழ்த்து சொல்வதெல்லாம் நடக்காத காரியம்.. அறைக்குள் சென்று அடைந்து கொண்டான் தமிழ்.. குரு இருக்கும் இடத்தில் தமிழ் இருக்க மாட்டான் அல்லவா.. பகை.. பகை..

மாடியில் யாரோ குதிக்கும் சத்தம்.. மீனாட்சி..

திருடி நம்பர் 2.. கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.. ஆராவிற்கு வாழ்த்து சொல்ல.. ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியது மீனாட்சி குடும்பம்..

திருடி நம்பர் த்ரீ.. இங்கே தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.. என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்..

அறைக்கதவை தட்டும் சத்தம்.. திறக்கவே கூடாது என்று தான் நினைத்திருந்தான்.. ஒரு வேளை ஆராகுட்டியாக இருந்தால்.. என்று அவன் அபரிமிதமான அறிவு கொண்ட மூளை கேள்வி எழுப்ப..

பெருமூச்சுடன்.. சில கணங்கள் தாடையை தேய்த்தவாறு அமைந்திருந்தவன்.. ஒரு கட்டத்தில் எழுந்து சென்று கதவை திறந்தான்..

கண்ணை கசக்கிக் கொண்டு உறக்க கலக்கத்துடன் நின்றிருந்தாள் துவாரகா..

"ஹாப்பி பர்த்டே ஆரா".. என்று கண்களை கூட திறக்காமல்.. கட்டிப்பிடித்துக் கொண்டு தமிழின் இதழ்களில் முத்தமிட்டு.. விலகினாள் அவள் ..

"ஏய்.. கண்ணை திறடி".. உதட்டைத் துடைத்துக் கொண்ட தமிழின் கடுமையான குரலில் இமைகளை மெல்ல திறந்தாள் துவாரகா..

"அச்சோ.. தமிழ் மாமா நீங்களா.. நான் ஆரான்னு நினைச்சேனே".. அப்பாவியாக விழித்தாள் அவள்..

"நீங்க ஆராவுக்கு இங்கேதான் முத்தம் கொடுப்பீங்களா துவாரகா மேடம்".. தன் உதட்டை சுட்டிக்காட்டி முறைத்தான் அவன்..

"அது.. ஆராவுக்கு கன்னம் சென்டர்ல இருக்கும்னு நினைச்சு".. என்று மேற்கொண்டு தொடர முடியாமல் திருட்டு முழியோடு விழிகளை தாழ்த்திக் கொண்டவள் அவன் எதையோ தேடுவதைக் கண்டு "என்ன மாமா தேடுறீங்க".. அவளும் அவனோடு கலந்து கொண்டு தேடினாள்..

"இல்ல.. கையால அடிச்சா அதையும் ஒரு கிளுகிளுப்பு எபிசோடா மாத்திடுவே நீ.. அதான் உன்னை அடிக்க கட்டைய தேடுறேன்".. என்று சுவரோரம் சாய்த்து வைத்திருந்த உருட்டு கட்டையை கையிலெடுக்க.. லாங் ஸ்கர்ட்டை தூக்கிப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியிருந்தாள் துவாரகா..

வீரபாண்டியன் ஆருஷி வரவே இல்லை.. சுற்று வட்டாரங்களில் பஸ் ஸ்டிரைக்காம்.. டிரைவர்களுக்குள் கோள் மூட்டி ஸ்டிரைக் ஆரம்பித்து வைத்ததே வீர பாண்டியன் என்ற விஷயம் சற்று நேரத்திற்கு முன்புதான் அவன் மனைவிக்கு தெரிவிக்கப் பட்டது..

இன்னும் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழையை எதிர்பார்க்கலாம்..

தொடரும்..
 
Member
Joined
May 3, 2025
Messages
37
ஜாலியா சுத்திட்டு இருந்த பொண்ண எப்படி feel பண்ண வெச்சிருக்குங்க....
பாவம் குரு அவனுக்கு சுத்தி என்ன நடக்குதுனே தெர்ல...

Colour,size tha எப்போதும் intha society ku தெரிஞ்சா விஷயம்... நல்லது எதுவும் தெரியாது...விட்டு தள்ளு ஆரா பாப்பா...

அடிப்பாவி துகி சும்மா இருக்காரவன எதுக்கு உசுபர😅....

அய்யய்யோ பாண்டிய உன் நிலமா இப்படியா ஆகணும்.... எத பண்ணாலும் பார்த்து பண்ண மாட்ட... hehehe பூரி கட்டய ஒளிச்சுவெச்சுறு...😄😄
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

மாம்ஸ் ஆரு கைல மாட்டாத ஓடிரு 😂😂😂
அடேய் குரு என்னடா இப்படி ஆகிட்ட 😳😳😳
ஆனா டேய் எப்பாங்களா எல்லாம் தெரிஞ்சும் எதுவுமே தெரியாத மாதிரியே நடிக்கிறீங்க பாரு 😁😁😁
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
அட சாமி உலகமகா நடிகர்களடா நீங்க. எப்ப துகி ஆராவுக்கு மட்டும் கன்னம் நடுவுல இருக்கா. 🤔🤔🤔🤔🤔🤔 என்ன டூபாக்கூர் இது.

நல்லா இருந்த புள்ளய இப்படி கிளப்பிவுட்டுட்டீயே பார்கவி. பாவம் இங்க குருதான் எதும் தெரியாம, தெளிவில்லாம இருக்கானே. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

வீரா மாம்ஸ் ஆருவுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு. எஸ்கேப். இல்லைன்னா என்னவிதமான ஆயுதங்கள் பறக்கும் தெரியல.
 
Top