• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
ஆதவன் எப்போதும் போல் மலர்ச்சியுடன் உதயமாகி விட்டிருந்தான்.. குளுமை குறையத் தொடங்கி.. வெம்மையின் தாக்கம் மெல்ல ஆரம்பித்திருந்த கோடை காலம் அது.. நள்ளிரவைத் தாண்டியும் குறையாத புழுக்கத்திற்கு பழகி மக்கள் உறங்கவே தாமதமாகி விடும்.. அதற்கு மேல் இரக்கம் கொண்டு வீசும் சிலீர் காற்றில் மக்கள் சுகம் காணும் வேளையில்.. அதை கெடுப்பதற்காகவே சரியான நேரத்திற்கு முன்னதாகவே உதித்துவிடும் வெய்யோனை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நம் மக்கள் கூட்டம்..

நான் எப்பவும் போலதாண்டா வரேன்.. போறேன்.. இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டி.. ஏரி காட்டையெல்லாம் அழிச்சு பிளாட் போட்டு வித்துட்டு.. வெயில் ஜாஸ்தி.. அனல் அதிகம்னு சொன்னா நான் என்னடா பண்ணுவேன்.. என்று புலம்பிக் கொண்டேதான் சூரிய தேவனும் உதயமாகிறார்.. பாவம் அவரும் எவ்வளவு வசை மொழிகளைத்தான் தாங்கிக் கொள்வார்..

ஆனால் அந்தத் தெருவில் வெயில் பற்றிய கவலையெல்லாம் இல்லை..

தென்றல் காலனி..

அவ்வளவு பெரிய தெருவில் மொத்தமே பத்து வீடுகள்தான்.. ஏகப்பட்ட மரங்கள்.. வீட்டுக்கு வீடு காயகறி தோட்டம்.. அல்லது மாடித் தோட்டம்.. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே உருவாகி மொபைல் தோன்றிய பின் அழிந்து போன வழக்கமான வீதியில் விளையாடும் குழந்தைகள் இங்கே உண்டு.. எந்த அரசியல்வாதி.. ரியல் எஸ்டேட் சொந்தக்காரன் கண்ணிலும் இந்த இடம் படவில்லையோ என்னவோ.. இன்னும் நகரத்தின் மையப்பகுதி என்றாலும் இன்னும் பச்சை பசேல் மரம் செடிகொடிகளுடன் குளிர்ச்சியாக அந்த காலனி மட்டும் தனித்திருப்பதே எட்டாவது அதிசயம்தான்.. எந்த முயற்சிகளும்.. புரட்சிகளும் இல்லாது.. எந்த நன்மைகளும் நடந்திடாதே!!..

இங்கேயும் அந்த காலணியை கட்டிக் காக்க இருவர் உண்டு.. செந்தமிழ்ச்செல்வன்.. குரு பிரகாஷ்.. மரம் வெட்டி பிளாட் போட வரும் எந்த அன்னிய சக்திகளையும் காலனியின் வாயிலோடு விரட்டியடிப்பது தான் இவர்களின் வேலை.. கலெக்டரே வந்து நின்றாலும் இங்கே எதுவும் செல்லுபடி ஆகாது.. மரங்களை வளர்ப்பதும் இயற்கையோடு இணைந்து வாழ்வதும் நன்மை அல்ல.. கடமை.. அந்தக் கடமைகளை தங்கள் வீட்டிலிருந்து துவங்க வேண்டும் என்று அவரவர் வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பசுமை திட்டம்.. அக்கம் பக்கத்து வீடுகளை கவர்ந்து இப்பொழுது அவர்களும் மரங்களும் பூச்செடிகளும் காய்கறி தோட்டங்களும் அமைத்துக் கொள்ளவே.. அந்த காலனியே சிறு பூங்காவாக கண்களை குளிர்வித்துக் கொண்டிருக்கிறது .. இருவரும் கல்வியில்.. பணியில்.. பணத்தில் ..உயர்ந்து நின்ற போதிலும்.. மாளிகையே கட்டிக் கொள்ளும் அளவிற்கு வசதி கொண்ட போதிலும்.. தங்கள் தேவைக்கேற்ப.. அதிக நிலப்பரப்பினை ஆக்கிரமிக்காது அழகாக வீடு கட்டி அவ்வப்போது அதை பராமரித்துக் கொண்டு வாழ்கின்றனர்..

தமிழ்.. குரு.. இருவரும் கிட்டத்தட்ட ஒரே உயரம்.. ஒரே மாதிரியான கட்டுக்கோப்பான உடல்வாகு..

ஒரே நேரத்தில்.. உடற்பயிற்சி செய்தால் கட்டுக்கோப்பான தேகம் இருக்கத்தானே வேண்டும்.. ஒருவன் திராவிட நிறம்.. இன்னொருவன் சிவந்த நிறம்.. களையான லட்சணமான ஆண்கள்.. அடடா என்ன ஒற்றுமை.. இவர்கள் நிச்சயம் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு..

இருவரும் பரம எதிரிகளாம்.. ஏரியாவில் பேசிக்கொள்கின்றனர்.. நிழல் தீண்டினால் கூட டெட்டால் போட்டுக் குளிப்பவர்கள்.. மூச்சு காற்றப்பட்டால் கூட ஸ்பிரே அடித்துக் கொள்பவர்கள்.. அவ்வளவு வெறுப்பாம்.. பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வருவது போல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட இரு வீடுகள்..

செந்தமிழ்ச்செல்வன் வீடு..
கந்த சஷ்டி கவசத்தை ஒருபுறம் ஓட விட்டு.. ஊதுபத்தி சாம்பிராணி மணம் கமழ .. அக்காளும் தங்கையும் சமைத்துக் கொண்டிருந்தனர்.. அக்கா ஆருஷி.. தங்கை ஆபர்ணா..

ஆரூஷியின் நான்கு வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க.. ஒரு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தன.. ஆம் இரண்டு இரண்டாய் நான்கு பிள்ளைகள்..

"இந்த வாட்டியும் ஆம்பள புள்ள பெத்து போட்டா வீட்டுக்கே வராதே.. உங்க வீட்டிலேயே தங்கிடு.. என்று கணவன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வாய் தவறி சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு.. பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டாள் ஆருஷி.. பிரசவத்துக்கு வந்தது.. இன்னும் திரும்பி போகவில்லை.. பிள்ளைகளுக்கே ஒரு வயது ஆகப் போகின்றது.. போகவில்லை என்பதை விட அனுப்பப்படவில்லை என்பதை உண்மை..

போன வாரம் கூட வாசலில் நின்று கத்தி விட்டு போனான் ஆருயிர்.. ஆருஷியின் கணவன் வீரபாண்டியன்.. பூந்தளிர் கிராம விவசாயி.. தோட்டம் துரவு.. வயல்.. கழனிகளின் சொந்தக்காரன்.. ஊரின் பெரிய தலைக்கட்டு.. ஆனால் இந்த வீட்டில் கிஞ்சித்துக்கும் மரியாதை கிடையாது.. மாதாமாதம் வந்து தெருவில் நின்று கத்திவிட்டு போவான்..

"அடேய்.. எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.. வெளிய வாடா.. இன்னிக்கு நீயா நானான்னு பார்த்துப் போடறேன்".. என்று வாசலில் நின்று வேட்டியை மடித்து கட்டியபடி தொண்டை வலிக்க கட்டிக் கொண்டிருந்தான் வீரபாண்டியன்..

தலையை துவட்டிக் கொண்டே அலட்சியமாக எட்டிப் பார்த்த அருஷியின் தம்பி.. செந்தமிழ்ச்செல்வன்.. புன்னகையுடன் வெளியே வர.. "இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல".. வீரபாண்டியனிடம் எரிச்சல்..

"என்ன மாம்ஸ்.. உள்ள வாங்க உட்காந்து பேசிக்கலாம்" என்றான் அவன் மரியாதையுடன்.. ஆனால் அவன் வார்த்தைகளில் மரியாதையை விட நக்கல் தொனி அதிகம் பிரதிபலிக்க..

நேரடியாகவே "என் பொண்டாட்டியை எப்படா அனுப்புவ.. அவளை இங்கேயே வச்சுக்கறதா முடிவு பண்ணிட்டியா" என்றான் காரசாரமாக.. பாவம் நடையாக நடந்து ஐம்பது ஜோடி செருப்புகள் தேய்ந்து போய் விட்டன.. ஊர்நலனுக்காக கலெக்டர் ஆபீசிற்கு கூட இத்தனை முறை நடந்ததில்லை..

"இரு மாம்ஸ் ஏன் அவசரப்படுற.. அக்கா இப்பதானே பிரசவத்துக்கு வந்தா.. செய்ய வேண்டிய சீர் செனத்தி எல்லாம் செஞ்சு முறையா அனுப்பி விடுறேன்.. அதுக்குள்ள ஏன் கால்ல சுடு தண்ணி ஊத்துனாப்புல பறக்குற".. என்று சாவகாசமாக அந்த திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டான்.. எதிர்வீட்டு சிட்டுக்குருவி ஒன்று அவனை சைட் அடிக்க மொட்டை மாடிக்கு வந்து நின்றது..

"என்னது பறக்குறேனா.. அடேய்.. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா.. பிரசவத்துக்கு பொறந்த வீட்டுக்கு வந்தவளை மூணு மாசம் வச்சு அனுப்புவாங்க.. அஞ்சு மாசம் வச்சு அனுப்புவாங்க.. ஏழு மாசம் கூட வச்சு அனுப்புறவங்கள பார்த்து இருக்கேன்.. ஆனா ஒரு வருஷமா.. என் பொண்டாட்டிய கண்ணுல காட்டாம உங்க வீட்டிலேயே வச்சிருக்கியே.. இதெல்லாம் நியாயமா.. என் வயித்தெரிச்சல் சும்மா விடுமா.. உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுடா.. அப்படியே ஆனாலும் பர்ஸ்ட் நைட் நடக்காது.. அப்படியே நடந்தாலும்.. உனக்கு ஒரு பொம்பள பிள்ளை கூட பிறக்காது.. அப்படியே பிறந்தாலும்.. உன் பொண்டாட்டி பிரசவத்துக்கு பொறந்த வீட்டுக்கு போனா பத்து வருஷம் கழிச்சு தான் திரும்பி வருவா.. இது என் சாபம்".. என்று கீழே கிடந்த மண்ணை வாரி அவன் மீது வீச.. விருட்டென எழுந்து நின்றவேனோ.. "யோவ் மாமா இப்பதான் குளிச்சிட்டு வந்தேன்.. சாபம் கொடுக்கறதுனா தூர நின்னு கொடுக்க வேண்டியது தானே.. மண்ணை வாரி போட்டு ஏன் என்னை அழுக்கு பண்ற.. பொண்டாட்டியெல்லாம் பொறந்த வீட்டுக்கு போயிட்டு திரும்பி வராம இருக்கிறதெல்லாம் எம்புட்டு பெரிய கொடுப்பினை தெரியுமா.. நான் உனக்கு நல்லதுதான் பண்ணி இருக்கேன்.. அதை புரிஞ்சுக்காம".. என்று சலித்துக் கொண்டே டி ஷர்டில் படிந்திருந்த மண்ணை.. டவலால் தட்டி உதறிக் கொண்டிருந்தான்..

"என்ன மாமா.. ஏன் இப்படி கத்துறீங்க".. என்று வெளியே ஓடி வந்தாள் ஆருஷி.. மனைவியை பார்த்ததும் ஒட்டுமொத்த கோபமும் பஞ்சாக பறந்து போக.. "தேனு".. என்றான் வீரா குழைவாக.. அவன் அவன் கண்களில் அவ்வளவு ஏக்கம்..

"மாமாஆஆ".. என்று அவளும் இழுக்க..

"வயசு பையனை வச்சுக்கிட்டு என்ன வேலை பாக்குதுங்க பாரு" என்று.. வாய்க்குள்ளயே முணுமுணுத்துக் கொண்டவன் எழுந்து அக்காவின் காதோரம் "வாசல்லயே நிக்க வச்சு பேசி அனுப்பி விட்டுடு.. உள்ளே வந்தா உன் கையில கால்ல விழுந்து பருந்து மாதிரி கொத்திக்கிட்டு போயிடுவாரு.. அடுத்த பிள்ளைக்கு அடி போடதான் பார்ட்டி இங்க வந்திருக்கு".. என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்..

அதன் பிறகு கணவனை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி மூக்கை சிந்தி.. கண்ணீரை காட்டி அவனை பலவீனமாக்கி.. "அடுத்த மாதம் கண்டிப்பாக வந்து விடுகிறேன்" என்று சத்தியம் செய்து அனுப்பி வைத்தாள்.. இத்தோடு ஆறு அடுத்த மாதங்கள் முடிவடைந்து விட்டன.. பாவம் என்னும் மலைபோல் மனைவியின் பேச்சை நம்பிக்கொண்டிருக்கிறான் வீரபாண்டியன்!!..

கணவன் முக்கியம் தான்.. ஆனால் தங்கையையும் தம்பியையும் விட்டுச் செல்ல மனம் வரவில்லையே.. புகுந்த வீட்டிற்கு சென்று விட்டால் அடிக்கடி இங்கே வருவதெல்லாம் நடக்காத காரியம்.. விவசாய பூமியில் மாடாக உழைக்கும் கணவனுக்கு தோள் கொடுக்க வேண்டும்.. தம்பி தங்கையை நினைத்துப் பார்க்கவும் போனில் பேசவும் மட்டுமே முடியும்.. அடிக்கடி வந்து போகும் தூரமில்லை.. இந்தியாவின் முதுகெலும்பான கிராமம் தமிழ்நாட்டு மேப்பில் கண்டுபிடிப்பது கூட கடினம்தான்..

இப்போது வளர்ந்துள்ள டெக்னாலஜியின் மூலம் வீடியோ காலில் பார்த்து பேசிக்கொள்ளலாம்.. பண்டிகை காலங்களில் கூட பிறந்த வீட்டு பக்கம் வர முடியாது.. இப்படிப் பிரசவத்திற்கு வந்து டேரா போட்டால் தான் உண்டு.. பிறந்த வீட்டிற்கு வருவதற்காகவே பத்து பிள்ளை பெற திட்டமிட்டு இருக்கிறாள் ஆருஷி..

"இன்னும் பத்து புள்ள பெத்துக்கனும் மாமா" என்று ஒரு நாள் ஆசையுடன் கணவனிடம் சொல்ல.. வீரபாண்டியன் மனம் நெகிழ்ந்து மீசையை முறுக்கிக் கொண்டு குஷியாகத்தான் இருந்தான்.. ஆனால் போக போக அவள் திட்டம் தெரிந்த பிறகு.. அலறியடித்து ஓடுவது வழக்கமாகி போனது.. எப்படியோ கணக்கு தப்பி மழையும் குளிரும் செய்த சதியில் மீண்டும் இரண்டு முத்துக்கள்உருவாகியதும்.. "ஹை ஜாலி ஜாலி" என்று பிறந்த வீட்டிலேயே டென்ட் போட்டுவிட்டாள் ஆருஷி..

அடேய் உன் பொண்டாட்டி கிளம்பிட்டா.. இனி அடுத்த மாமாங்கம் வரைக்கும் வரமாட்டா.. அதுக்குதேன் உள்ளூர் பொண்ணை கட்ட சொன்னேன்.. அவதான் வேணும்னு கட்டிக்கிட்டு ஆடிமாச ஆப்பர்ல குடும்பம் நடத்துறியேடா.. ஊர் பெரிய மனுஷனுக்கு இதெல்லாம் அழகா!!".. என்று அங்கலாய்த்துக் கொண்டார் வீரபாண்டியனின் தாய் அங்கம்மா..

"விடும்மா.. அதுங்களும் நம்ம புள்ளைங்கதான.. அங்கே தனியா கிடந்து கஷ்டப்படுதுங்க.. இவ போனா ஒத்தாசையா இருக்குமே.. நாள்பூரா கழனியில என் கூட கிடந்து கஷ்டப்படுதா.. புள்ளை பெத்த சமயத்துலயாவது அவளுக்கு ஓய்வு கொடுத்தாதானே உடம்புல பலம் சேரும்".. விட்டுக் கொடுக்க மாட்டான் மனைவி வீட்டாரை.. ஆனால் இங்கே வந்தா தெரு சண்டைதான்..

"ஏன்டா.. அதுக்காக ஒருவருஷமா?.. நாளைக்கு உன் புள்ளைங்க.. யார் இவன்னு கேக்காம இருந்தா சரிதேன்".. என்று நொடித்துக் கொண்டாள்..

அதை நான் பாத்துக்கிறேன்.. நீ சோத்த போடு.. என்று மனைவியின் செயலை நியாயப்படுத்தினாலும்.. இது கொஞ்சம் ஓவர்தான்..

"இருடி.. உன்னை அலறியடிச்சு ஓடிவர வைக்கிறேன்".. என்று அவன் பெயரையும் ஒரு பெண்ணின் பெயரையும் போட்டு கல்யாண பத்திரிக்கையை வாட்ஸ் அப்பில் போட்டோ எடுத்து அனுப்பி விட..

"மாமா.. கீரவாணிக்கு பதிலா கோணவாணின்னு இருக்கு.. பேர் சரியா போடுங்க மாமா.. அப்புறம் உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும் அப்படின்னு போட்டு என் பேர்.. குழந்தைங்க பேரை போட்டு வைச்சிருக்கீங்க.. எங்களால வரமுடியாது.. வேணும்னா உங்களுக்கு குழந்தை பிறந்ததும் சொல்லி அனுப்புங்க.. வர முயற்சி பண்றேன்".. என்று வாய்ஸ் நோட் போட்டு அனுப்பி இருந்தாள்..
கணவன் மீது அவ்வளவு நம்பிக்கை.. மாமா.. என்று அழைத்து விட்டால் போதுமே.. தேனு.. என்று உருகி விடுவான்..

இவள் தான் இப்படி என்றால்
செந்தமிழ்ச்செல்வன் அதைவிட மோசம்.. ஆருஷி திருமணமாகி சென்றுவிட்ட காலகட்டத்தில் அக்காவை பிரிந்து.. காய்ச்சலில் படுத்து விட்டான்.. பிறகென்ன.. அடுத்தவாரமே பஸ்பிடித்து வந்து ஐசியூ வாசலில் தவம்.. ஒருமாதம் டேரா.. அடுத்து ஆடிமாதம்.. மனைவியை பிரிந்த ஏக்கத்தில் கணவனுக்கு ஜுரம்.. தேனு.. தேனு.. என்று புலம்புவதை வீடியோ எடுத்து அனுப்பினாள் அங்கம்மா.. "உன் புருஷரு நடிக்கிறாரு.. நம்பாதே".. என்று ஆடிமாதம் முடிந்து நான்கு லிட்டர் கண்ணீரோடு அனுப்பி வைத்தான் தமிழ்..

வீரபாண்டியன் உண்மையிலேயே நல்லவன்.. நல்ல உழைப்பாளி.. உழைத்து உரமேறிய உடம்பு.. வெள்ளை நிற வேட்டி சட்டை முறுக்கு மீசை.. கையில் காப்பு.. என பெர்பெக்ட் வில்லேஜ் ஹீரோ மெட்டீரியல்.. வயது முப்பத்தாறை தொட்டிருந்தாலும் இன்னும் ஜல்லிக்கட்டு காளையாக துள்ளலோடு வலம் வந்து கொண்டிருப்பவன்.. என்னையெல்லாம் கட்டியிருந்தா என் மாமனை எப்படி பார்த்திருப்பேன் தெரியுமா.. என்று இன்னும் வயது பெண்கள் ஏக்க பெருமூச்சு விடும் அளவிற்கு அழகன் தான்..

மனைவி மீது அளவு கடந்த பாசம் கொண்டவன்.. வெங்காயம் நறுக்க கண்ணீர் சிந்தினால் கூட.. கண்ணீர் வராத வெங்காயம் எப்படி சாகுபடி செய்வது என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவான்.. கிராமத்தில் அவ்வளவு மரியாதை கொண்ட ஒருவனை தான்.. இங்கே டம்மி பீஸ் ஆக்கி ரிட்டன் அனுப்பி வைக்கின்றனர் அவன் மனைவி வீட்டார்.. அவன் அன்புக்கு பாத்திரமான ஆருஷியும் கணவன் மீது அளவில்லாத காதல் கொண்டவள் தான்.. புகுந்த வீட்டிலிருந்தாள் தம்பி தங்கையை நினைத்து அழுவாள்.. பிறந்த வீட்டிற்கு வந்தால் "அய்யோ முருங்கைக்காய் என் புருஷனுக்கு ரொம்ப பிடிக்குமே".. என்று மூக்கை சிந்துவாள்.. அவள் மட்டுமல்ல எல்லா பெண்களும் அப்படித்தானே.. அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அடம்பிடிப்பது அங்கே சென்றால் கணவனை நினைத்து மருகுவது.. இரண்டு நாட்களில் பெட்டியை கட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து.. நீங்க என்னை நினைக்கவே இல்ல எனக்கு போன் பண்ணவே இல்ல.. என்று கணவனின் உயிரை வாங்குவது.. இரட்டை வாழ்க்கை.. அவளும் அதில் ஒருத்தியே..

ஆனாலும் நம் செந்தமிழ் செல்வன்.. முதல் பிரசவத்திற்கு வந்த சகோதரியை ஒன்பது மாதங்கள் கழித்து அனுப்பி வைத்தான்.. இரண்டாவது பிரசவம்.. இதோ பதினொரு மாதங்கள் முடிவடைந்து விட்டன.. பிறந்த குழந்தைகள் பேசவே ஆரம்பித்தாயிற்று.. இருந்தாலும் அக்காளை அவள் வீட்டிற்கு அனுப்ப மனம் வரவில்லையே.. சரி இவங்க பாசமலர் சென்டிமென்ட்டை பொறுமையா பார்க்கலாம்.. கதைக்கு வருவோம்..

"அக்கா.. பட்டு".. என இருவரையும் அவசரமாக அழைத்துக் கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன்.. குளித்துவிட்டு டி-ஷர்ட் ரேங்க் பேன்ட் உடன் தலையை துவட்டி கொண்டே வந்தவன்.. அழைத்திருந்த வேகத்தில் இருவரும் கூடத்தில் வந்து நின்றனர்..

"என்னடா"..

"என்னடா அண்ணா".. இருவரின் குரலிலும் எரிச்சல்.. என்ன நடக்க போகிறது எனத் தெரியுமே.. தினமும்தொடரும் பழங்கதை..

"நேரமாச்சு. ம்ம்.. ஆகட்டும்".. என்று மார்பின் குறுக்கே கைகட்டி நிற்க..

ஆருஷியும்.. ஆபர்ணாவும்.. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

"ம்ம் சீக்கிரம் ..எனக்கு நேரமாகுது".. அவன் அதட்டவும்.. உறுதிமொழி எடுப்பது போல் கையை நீட்டி கொண்டவர்கள்..

"எப்பவுமே பக்கத்து வீட்டு ஆளுங்களோட பேசமாட்டேன்.. அவங்க வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்.. அவங்களோட அன்னந்தண்ணி புழங்க மாட்டேன்.. இது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்".. என்று இருவரும் ஒரு சேர சத்தியபிரமாணம் எடுக்க.. "குட்".. என்றவன்.. திருப்தியோடு அங்கிருந்து சென்றிருந்தான்..

குரு பிரகாஷ் வீடு..

"அய்யயோ.. என்னை விட்டுடுங்கடா.. நான் பாவம்.". என்று எழுபத்தி ஏழு வயதில்.. வயது பெண் போல் ஓடிக் கொண்டிருந்த ராக்கம்மாவை அமுக்கி பிடித்தனர் அந்த குடும்பத்தினர்..

"நீ கையை பிடி.. நீ காலை பிடி.. சீக்கிரம் கட்டி போடு".. என்று ஏகப்பட்ட சத்தங்களுக்கு இடையே.. இருக்கையில் அமர வைக்கப்பட்டார் அவர்..

நடுநாயகமாக வந்து நின்றவர் வெற்றிவேல் அந்த குடும்பத்தின் தலைவன்.. அவர் மகன் குரு பிரகாஷ்.. மகள் துவாரகா.. மனைவி மீனு எனப்படும் மீனாட்சி அனைவரும் அப்பத்தாவை சுற்றி வளைத்திருக்க..

டேய் வேண்டாம் டா.. இது கொலையை விட கேடான பாவம்".. என்றார் ராக்கம்மா கிலியுடன்.. வெற்றிவேலின் தாய் அவர்..

பெற்ற தாயை சட்டை செய்யாமல் "ம்ம்.. ஆரம்பிங்க" என்று கையை கட்டி நின்றார் அவர்.. "அப்பத்தா மேல நீங்க வைச்சிருக்கிற பாசத்தின் சாட்சியா".. என்று அவர் தொடங்கி வைக்க..

"எப்பவுமே நாங்க பக்கத்து வீட்டு ஆளுங்களோட பேச மாட்டோம்.. அவங்க வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டோம்.. அவங்க நிழலையும் ஏறெடுத்து பார்க்க மாட்டோம்.. அவங்களோட அன்னந்தண்ணி புழங்க மாட்டோம்.. இது அப்பத்தா மேல சத்தியம்".. என்று.. கதறிக் கொண்டிருந்த ராக்கம்மாளின் தலையில் மூவரும் கை வைத்து சத்தியம் செய்ய.. மாமியார் மீதுள்ள காண்டில்.. வேகமாக அடித்து முதலில் சத்தியம் செய்தது என்னவோ மீனாட்சி தான்..

"ஹ்ம்ம் ஓகே"..என்று அங்கிருந்து சென்று விட்டார் வெற்றிவேல்.. அப்பத்தா மீது சத்தியம் செய்தால் மீற மாட்டார்களாம்.. அவர் கணக்கு..

"எத்தனை சத்தியம் போட்டாலும் கிழவி ஸ்ட்ராங்காவே இருக்கே" முனகி கொண்டே அங்கிருந்து சென்றிருந்தார் மீனாட்சி..

"அண்ணா.. என்னை கொஞ்சம் காலேஜ்ல டிராப் பண்றியா".. என்று துவாரகா புத்தகங்களை எடுத்து வர.. எனக்கு வேலை இருக்கு.. நீ ஆட்டோல போய்டு.. என்றுவிட்டு காலை உணவு சாப்பிட சென்றுவிட்டான் குரு..

தொடரும்..
 
Member
Joined
Feb 15, 2025
Messages
9
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

டேய் தமிழ் எங்க வீரா மாம்ஸ் பாவம் உன்ன சும்மா விடாது டா ஆரூஷி ஐ வீட்டுக்கு அனுப்பி வை ஆண் பாவம் பொல்லாதது 🫣🫣🫣🤣🤣🤣
அட போங்கடா நீ உங்க சத்தியம் சக்கட பொங்கலும் 😏😏😏
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
4

அயோ இந்த கதையா... செமயா இருக்கும்... ரசிச்சு ரசிச்சு சிரிச்ச கதை.... தேங்ஸ் சனாத்தங்கம்... டியர் ரீடர்ஸ் என்ஜாய்.... 😂😂😂😂😂
ஒன்..
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
Feb 26, 2025
Messages
37
ஆகாத குடும்பம் ஆனா சத்திய பிரமாணம் மட்டும் ஒரே போல் இருக்கு
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
இந்த கதையை படித்ததில்லை. பிரதிலிபில இருந்துச்சு. மிஸ் பண்ணிட்டேன். சைட்ல போட்டதுக்கு தேங்க்ஸ் சனா டியர்.

இதெல்லாம் ஓவர்டா தமிழ். பிள்ளை பெத்துக்க வந்த உங்க அக்காவை ஒரு வருஷமா அனுப்பாம வச்சிருக்கியே. பாவம் வீரா. 🥺🥺🥺🥺 ஆண்பாவம் பொல்லாதது. சீக்கிரம் அனுப்பிவிடு.

இது என்ன இரண்டு வீட்டிலையும் ஒரே மாதிரி சத்திய பிரமாணம். 🤔🤔🤔🤔🤔 எங்கனயோ இடிக்கிறமாதிரி இருக்குதே.
 
Member
Joined
May 3, 2025
Messages
37
Thanks sana baby for giving this story in this site...
நிறைய சிரிச்சு சிரிச்சு ரசிச்ச கதை....
மறுபடியும் படிக்கலாம்...அதுவும் பாண்டியன் ஓடது...

செந்தமிழு இது ஓவர்... பாவம் எங்க பாண்டியன் "தேனு தேனு" உருகுறாரு...
அனுப்பி வைக்க வேண்டியது தானா...

Hehe ராக்கம்'s நெனச்சலே சிரிப்பா வருதே..
இந்த சத்தியம் தேவை தானா...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
75
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Top