- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
குத்துச்சண்டை வீரனைப் போல் ஆராவை தலைக்கு மேல் தூக்கி.. சோபாவில் பொத்தென போட்டிருந்தான் செந்தமிழ் செல்வன்.. கூடவே இரண்டு வாண்டுகளும் அரஜகம்.. ஆருஷியின் அடுத்த இரட்டையர்களோ முரட்டுத் தூக்கம்..
ஆரா.. சோபாவில் புரண்டு வயிறு வலிக்க வலிக்க சிரித்தபடி.. அவனை உதைக்க எத்திய காலை ஒரு கையால் வளைத்து பிடித்துக் கொண்டு.. ஒன் டூ த்ரீ என்ற சோபாவில் மறுக்கையால் ஓங்கி அடித்து ஸ்மாக் போட்டான் தமிழ்..
"அடேய்ய்.. வயசுப் பிள்ளையை இப்படியா.. தூக்கிப்போட்டு விளையாடுவ.. எத்தனை முறை தான் சொல்றது.. எக்கு தப்பா ஏதாவது அடிபட்டுச்சுன்னா.. நாளைக்கு கங்காரு மாதிரி தூக்கி சுமந்து கிட்டே திரிய போறியா" என்று சமையலறையிலிருந்து வேகமாக வந்து கரண்டியால் தமிழ்ச்செல்வனின் முதுகில் வலிக்கும்படி இரண்டு அடி வைத்தாள் ஆருஷி..
"எக்கோவ்.. அடிக்காதே வலிக்குது.. உன் தவப்புதல்வர்கள்தான் அத்தையை ஸ்மாக் போட சொன்னானுங்க".. என்ற எஸ்கேப் ஆகி துள்ளியவன்..
"கங்காரு மாதிரி தானே தூக்கிட்டா போச்சு" என்று எழுந்து நின்று ஆராவை இரண்டு கைகளையும் பிடித்து அந்தரத்தில் தூக்கி பொம்மை போல ஆட்டிவிட.. குட்டி சாத்தான் ஊஞ்சல் ஆடுவது போல் உல்லாசமாகத்தான் என்ஜாய் செய்து கொண்டிருந்தது.. ஆனால் ஆருஷிக்குதான்.. தமிழ் தங்கையை அந்தரத்தில் தூக்கி வைத்து அம்புலி மாமா போல் டான்ஸ் ஆடுவது திக் திக்கென்று இதயத்துக்குள் பயத்தை கொடுத்தது..
"டேய் தமிழு.. சொன்னா கேளு டா.. கைகால் எங்கேயாவது சுளுக்கு விழப் போகுது.. உன் ஆஸ்பத்திரிக்கு உன் தங்கச்சியைவே பேஷண்டா கொண்டு போய் சேர்த்துடாத.. இறக்கி விடுடா அவளை".. என்று பற்களை கடித்து சத்தம் போட்டு அதட்டவும்.. அக்காவின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அவளை கீழே இறக்கி விட.. பாய்ந்து சென்று அவன் முதுகில் ஏறிக்கொண்டது குட்டி குரங்கு.. "இந்தா பாரு.. அவன் விட்டாலும் இது விடாது.. சரியான அறுந்த வாலு.. இப்படி சண்டை போட்டு அடிதடி பண்ணி விளையாடுறதுக்கு பதிலா மூளையை யூஸ் பண்ற மாதிரி ஏதாவது விளையாடலாம்ல".. என்று கிச்சன் பக்கம் நடக்க..
அண்ணனின் முதுகில் உப்பு மூட்டை ஏறியவள் இரண்டு கால்களையும் நீச்சல் அடிப்பது போல் ஆட்டிக்கொண்டு "அதுக்கு மூளை வேணுமில்ல"..என்றாள் ஆரா தெனாவட்டாக..
"சரிதான்..ரெண்டும் மெண்டல்லு.. இவங்களால எனக்கு தான் ஹார்ட் அட்டாக் வந்துரும் போல".. என்று தலையிலடித்துக் கொண்டு பாரபட்சமில்லாமல் திட்டி விட்டு உள்ளே சென்று விட்டாள் ஆருஷி.. மாமா நாங்களும்.. என இரண்டு பக்கங்களிலும் தொற்றிக் கொண்டனர் வீர பாண்டியனின் மூத்த புதல்வர்கள்..
வெளியே விரைப்பாக சுற்றி தெரியும் தமிழின் உலகம் வண்ணமயமாக விரிவது இங்கேதான்.. தங்கையை வம்புக்கிழுப்பது.. அவளோடு விளையாடுவது அக்காவுடன் மனம் விட்டு சிரித்து பேசுவது.. குட்டீசோடு அரட்டை.. அவர்களோடு அமர்ந்து படம் பார்ப்பது.. அதிகபட்சம் இதுதான் அவன் என்டர்டெயின்மென்ட்.. ஆனால் இந்த ஃபிரேம்குள்ள துவாரகான்னு ஒருத்தி வரவே இல்லையே!!.. என்று கேட்டால் அதைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள பொறுமை வேண்டும்..
ஒன்னு இருக்கு.. ஆனா இல்ல.. என்பதை போல் துவாரகா அவன் மனதில் இருக்கிறாள்.. ஆனால் அவனைப் பொறுத்தவரை அது உண்மை இல்லை.. அப்படி சொல்லித்தான் அந்த டாக்டர் பையன் அவனையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.. என் மனசில என் அக்காவையும் தங்கச்சியும் தவிர.. வேற எந்த பொண்ணும் இல்லை என்று சொல்லும்போதெல்லாம் துவாரகாவின் முகம் எலி குட்டி போல் எட்டிப் பார்ப்பதை அவனால் தவிர்க்க முடிவதே இல்லை.. எலிப்பொறி வைத்துப் பிடித்து.. அந்த எலியை அண்டார்டிகா கண்டத்திற்கு அந்தப் பக்கம் தூக்கி வீசினாலும்.. அவன் மனம் என்னும் மசால் வடை அந்த எலியை அழகாக ஈர்த்து விடுகிறதே.. அனைத்தையும் அக்கா தங்கையிடம் ஒளிவு மறைவின்றி பேசும் செந்தமிழ்ச்செல்வனின் இதயத்தின் சீக்ரெட் பெட்டியில் ஒளிந்திருக்கிறாள் இந்த எலிக்குட்டி துவாரகா..
"மறுபடி சண்டை போட்டிங்கனா ரெண்டு பேருக்கும் சூடு வச்சுருவேன் சொல்லிட்டேன்".. காதில் வந்து விழுந்த புகார்களுக்கு வெளியே வராமல் பதிலளித்துக் கொண்டிருந்தாள் ஆருஷி.. "சின்ன வாண்டுங்க கூட அமைதியா விளையாடுது.. இதுங்க அலப்பறைதான் தாங்கல".. சலித்துக் கொண்டாள்..
இது பரவாயில்லை.. அவள் புகுந்த வீட்டிற்கு சென்றிருந்த காலங்களில் வீடியோ கால் போட்டு.. "அக்கா இவன் அடிச்சுட்டான்.. அவ கடிச்சுட்டா"..
"இவன்தான் என்னை கைய புடிச்சு முறுக்கிட்டான்.. இங்க பாரு வீங்கி போச்சு.. இங்க பாரு உன் தங்கச்சி செஞ்ச வேலையை.. பூனை மாதிரி நகத்தால பிராண்டி வச்சிருக்கா".. இன்று வீடியோ காலில் ஆதாரங்களை காட்ட.. ஆருஷிக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான்..
"நான் இப்போவே கிளம்பறேன்.. என்ன பிரச்சனைன்னு தெரியல.. என் தங்கச்சி மயங்கி விழுந்து கிடக்கா".. என்று ஆருஷி அழுது கொண்டே பெட்டி படுக்கையை கட்ட.. "அடியேய் மயங்கி விழறவங்க குறட்டை விடுவாங்களா என்ன?.. உன் தொங்கச்சி தூங்குறா.. உன் தம்பியோட ட்ராமா இது.. இங்கே பாரு".. என்று வாட்ஸ் அப்பில் வந்த வீடியோவை மறுபடி போட்டு காட்ட.. வயிறு முட்ட தின்றுவிட்டு குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த ஆராவின் அருகே அமர்ந்து.. "என்னன்னே தெரியல.. பிள்ள மயக்கம் போட்டு விழுந்திருச்சு.. ஸ்டார்டிங் இம்மீடியட்லி.. அர்ஜென்ட்".. என்று தந்தி கொடுத்து வீடியோவை கத்தரித்திருந்தான் டாக்டர்..
"அடப்பாவி".. என்று வாயில் கை வைத்த ஆருஷி.. கிளுக்கென சிரித்து விட.. அவள் அழகில் மயங்கிய வீரபாண்டியன் மனதினில் மத்தாப்புச்சாரல் சுகமாக பரவி.. அடுத்து அவள் கேட்ட கேள்வியில் யானை வெடி குபீரென வெடித்து சட்டை கிழிந்து போனது..
"பிள்ளைகளுக்கு என் ஞாபகமாவே இருக்கு போலிருக்கு.. அதான் என்னென்னமோ ட்ராமா பண்ணி என்னைய கூப்பிடுதுங்க.. ஒரு எட்டு போய் பாத்துட்டு வரவா மாமா!!".. என்று கேட்ட கேள்வியில் அவன் மயங்கி விழுந்திருந்திருந்தான்.. இதெல்லாம் நடந்தது மூத்த இரட்டையர்கள் பிறந்து இரண்டு வருட காலங்களில்..
அதன் பிறகு அடிக்கடி அண்ணன் தங்கை கட்டப்பஞ்சாயத்திற்கு வீடியோ காலில் ஆருஷியை அழைக்க.. சொல்வதெல்லாம் பொய்.. மேல வைக்காத கை.. என்ற ரீதியில் பஞ்சாயத்து பண்ணியே ஓய்ந்து போனாள் வால் பசங்களின் அக்கா..
மனைவியின் உடல் நலன் கருதி.. வீரபாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு.. டெலிபோன் டவரில் ஏறி நின்று.. எந்த வயரை புடுங்கி விட்டா.. மச்சான் ஊரிலிருந்து கால் வராம போகும் என்று ஆராய்ச்சி செய்த காலங்களும் உண்டு..
சரி நிகழ்காலத்திற்கு வருவோம்.. இதற்கு முன் விளையாடியது கூட பரவாயில்லை.. அடுத்த கேம் இதைவிட கொடுமை..
ஸ்டோன் பேப்பர் சிசர்..
"ஸ்டோன் பேப்பர் சிசர்".. என்று நான்கும் கோரசாக கத்தி.. கைகளில் வடிவங்களை மாற்ற.. ஆருஷிக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் எங்காவது சென்று முட்டி கொள்ளலாமா என்று தோன்றியது.. குழந்தைகளோடு சேர்ந்து கோட்டான்களும் விளையாடினால் என்னதான் செய்வது..
அதற்காக தமிழும் ஆராவும் எப்பொழுதும் கிறுக்குத்தனமாக இப்படியே விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை.. பல பரிமாணங்களில் ஜொலிப்பவன் தமிழ்.. சில நேரங்களில் தங்கையிடம் சிறுபிள்ளையாக.. பல நேரங்களில் தந்தையாக.. ஆசானாக.. தோழனாக.. என்று முதிர்ச்சியுடன்.. வழிகாட்டுபவன்.. விழிகளில் கண்டிப்பை தேக்கி அவளை மிரட்டுபவன்..
இதோ இப்பொழுது கிறுக்குத்தனமாக விளையாடும் இதே செந்தமிழ்ச்செல்வன் தான்.. இரண்டு நாட்களுக்கு முன்பாக.. கண்பார்வையில் மிரட்டி.. யூனிட் டெஸ்டுக்கான மொத்த பாடங்களையும் படிக்க வைத்திருந்தான் அவளை.. படிக்கும் விஷயத்தில் இரக்கம் பார்ப்பதே கிடையாது.. விளையாட்டுத் தனமும் உண்டு அதே நேரத்தில் அவன் மீது பயமும் உண்டு..
"அக்கா.. இந்த அரை லூசுக்கு மசாலா பூரி வேணுமாம்.. வாங்கி கொடுத்துட்டு வரேன்".. என்று குரல் கொடுத்துக்கொண்டே.. தமிழ் போனை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ள..
"தமிழ் சமைச்சிட்டு இருக்கேன் டா.. கண்டதையும் தின்னா சோறு எப்படி இறங்கும்" என்று.. கருவாடு தொக்கை கிளறிக் கொண்டே அடுப்படியிலிருந்து குரல் கொடுத்தாள் ஆரு..
"அதெல்லாம் இறங்கும்.. நீ சமைச்சு வை.. நொறுக்கு தீனி போட்டு அவசர பசியை ஆத்திட்டு வர்றோம்.. பிறகு பொறுமையா டின்னர் சாப்பிட்டுக்கலாம்.. என்று ஆராவின் கழுத்தில் கையை போட்டு வளைத்து பிடித்து அழைத்துச் செல்ல இரு மருமகன்களும் துள்ளிக் குதித்து முன்னே ஓடினர்..
"சரி.. அப்படின்னா எனக்கும் பானி பூரி ஒரு பிளேட்டு".. என்று குரல் கொடுத்தவள் மொபைல் அழைக்கவும் "மாமா".. என்று விழிகள் மின்ன ஆன் செய்தாள்.. வீடியோ காலில் வீரபாண்டியன்..
"மாமா எப்படி இருக்கீங்க?" என்று முகம் மலர.. கேட்டவளோ கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு சோபாவில் வந்து ஆயாசமாக அமர்ந்து கொள்ள.. அங்கேயோ சரவெடி பட்டாசு..
"ஏன்டி கேக்க மாட்டே.. ஏன் கேக்க மாட்ட.. அங்க போய் தம்பி தங்கச்சியோட சொகுசா உக்காந்துக்கிட்டு.. நக்கல் பண்றியா".. கோபத்தில் வெகுண்டெழுந்தான் அவன்..
"ஐயோ மாமா என்ன ஆச்சு? ஏன் இப்படி கோவப்படுறீங்க".. அவள் பதைபதைத்தாள்..
"பின்னே.. சாவகாசமா சுண்டல் தின்னுகிட்டே பேசவா. இங்க புருஷன் ஒருத்தன் தனியா இருக்கானே.. அவன் என்ன பண்றான்.. எப்படி இருக்கான்.. இதைப்பத்தியெல்லாம் உனக்கு எந்த கவலையும் இல்லைல.. தாலி கட்டுன புருசனை தன்னந்தனியா விட்டுட்டு போனா என்ன ஆகும்னு இப்ப காமிக்கிறேன்டி".. என்று.. ஒரு பாட்டில் மதுவை திறந்து வாயில் சரித்துக் கொண்டான்.. திகைத்து விழித்தாள் ஆருஷி.. எதிர்பார்க்கவில்லை இதை.. வீரா டி-டோட்டலர் ஆயிற்றே..
"குடிச்சு குடிச்சு சீரழியறேன் அதை பார்த்து சந்தோஷமா இரு".. என்றவனோ.. ஊறுகாயை தொட்டு நக்க..
"என்ன மாமா இப்படியெல்லாம் பண்றீங்க.. ஒரு பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!!".. கோபத்திலும் அழுகையிலும் வெடித்தாள்..
"ஒரு பெரிய மனுஷனை இந்த நிலைக்கு ஆளாகினதே நீதாண்டி.. என் கண் முன்னாடி எல்லாம் ஜோடி ஜோடியா திரியுறானுங்க.. ஆனா நான் மட்டும் இன்னும் சிங்கிளாவே சுத்திகிட்டு இருக்கேன்.. நேத்து கூட என் பசங்க ரெண்டு பேரும் வீடியோ கால்ல என்னை பாத்துட்டு.. இது யாரு பக்கத்து வீட்டு மாமாவானு கேட்கிறானுங்க.. இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா?".. என்று சீறினான்..
"அச்சோ மாமா தப்பா எடுக்காதீங்க நீங்க சேவ் பண்ணாம தாடியோடு இருந்தீங்களா.. அதான் பசங்களுக்கு அடையாளம் தெரியல"..
"சும்மா சப்பை கட்டு கட்டாதடி.. என்னை வேணாம்னு சொன்ன நீயும் எனக்கு வேணாம்"..
"அச்சோ மாமா நான் எப்போ உங்களை வேண்டாம்ன்னு சொன்னேன்"..
"குறுக்க பேசாதடி.. நான் சொல்றதை முழுசா கேளு.. இனி நீயும் எனக்கு வேண்டாம்.. நான் இங்கேயே ஒரு பார்ட்டிய பாத்து செட் பண்ணிட்டேன்".. என்று மீண்டும் மதுப்போத்தலை வாய்க்குள் சரித்துக்கொள்ள..
"சும்மா காமெடி பண்ணாதீங்க மாமா" என்றாள் ஆருஷி சிரித்துக் கொண்டே ..
"என்னது காமெடி பண்றேனா.. இந்தா காட்டுறேன் நான் யாருன்னு".. என்றவன்.. "ஏய் புள்ள குயிலு.. இங்கே வா புள்ள".. என்று அழைக்க.. புடவை ரவிக்கையில் ஓடிவந்து நெருங்கி அமர்ந்து ஃபிரேமுக்குள் செட்டானாள் ஒரு பெண்..
"யாரு மாமா உங்க தங்கச்சியா" என்றாள் ஆருஷி சிரிப்பை அடக்கிக் கொண்டு..
"ஹான்.. உன் தங்கச்சி.. என் கள்ள பொண்டாட்டி.. இனி நீ வர்ற வரைக்கும் இவளை மெயின்டைன் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. என் தங்கம்".. என்று வீரா அவளை கொஞ்சவும்.. குயில் கொடூரமாக வெட்கப்பட்டது.
"இவ உன்னை மாதிரி இல்ல இருபத்து நாலு மணி நேரமும் என் கூடவே இருப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்கா"..
"என்ன மாமா இப்படி பண்றீங்க வேணும்னா நானும் சத்தியம் பண்ணவா".. அப்பாவியாக கேட்டாள்..
"ஒன்னும் வேண்டாம் சத்தியத்துக்கு பேர் போன குடும்பம் உங்க குடும்பம்னு எனக்கு நல்லாவே தெரியும்.. எனக்கு குயிலும் இந்த பட்டை சாராயமும் போதும்".. குயிலியை தோளோடு பிடித்துக் கொண்டு மதுவை குடித்தான்..
"மாமா இதெல்லாம் சரி இல்ல.. நான் என் தம்பி கிட்ட சொல்லிடுவேன்".. கோபத்தில் மூக்கு விடைத்தது
"ஏய்..நீ உன் தொம்பிகிட்ட சொல்லு இல்ல.. உன் தும்பிகிட்ட சொல்லு.. எனக்கென்னடி?.. புருஷனோட வாழ துப்பு இல்லாதவளுக்கு கோபம் வேற வருதோ!!".. என்றான் ஏகத்தாளமாக..
"இந்தாங்க மாமா.. முந்திரிப்பருப்பு சாப்பிடுங்க.. அப்போதான் தெம்பா இருக்கும்.. என்று தட்டிலிருந்த முந்திரியை எடுத்து அவனுக்கு ஊட்டினாள் குயிலி.. இங்கே இரத்தம் கொதித்துப் போனாள் ஆருஷி..
"அடியே சக்காளத்தி இங்க நான் ஒருத்தி இருக்கும்போது... எவ்வளவு தைரியம் இருந்தா வீடியோ கால்ல என் முன்னாடியே என் மாமனுக்கு முந்திரி பருப்பு ஊட்டுவே.. உன்னைய சும்மா விடமாட்டேன்டி.. இருடி வந்து வகுந்து போடறேன்".. என்று மேல் மூச்சு வாங்க தொங்கிய ஜடையை கொண்டை முடித்து சண்டைக்கு நிற்க.. மனைவியின் பொசசிவ்னஸ் ரொம்ப பிடித்தாலும் வெளிக்காட்டாத வீரா மாமா..
"ஆமா.. இவ நேர்ல வந்து உன் கூட சண்டை போடுறாளாம்.. காமெடி பண்றா பாரு குயிலி பாப்பா.. எங்கே பார்த்தாலும் டிரௌசர் சட்டையா தெரியுது.. நாம கலர் கலரா கவுன் போடுற மாதிரி பத்து பொண்ணு பாப்பா பெத்துக்கலாமா".. என்று குயிலியின் தாடை பிடித்து கேட்க..
"ஏன் மாமா.. நான் பெத்து தர மாட்டேனா".. ஆருஷி உதட்டை பிதுக்கினாள்..
"ப்ச்.. அவ கிடக்கறா.. நீ சொல்லு.. தங்கம்.. எத்தனை பொம்பள பிள்ளை பெத்துக்கலாம்" என்று.. வீடியோ கால் போட்டுவிட்டு ஆருஷியை கவனியாதவன் போல் குயிலியிடம் பேசிக் கொண்டிருந்தான்..
"ஏன்டா.. மாட்டு தொழுவத்தில கூரை மேய வந்த மாரப்பன் மயங்கி விழுந்துட்டான்னு இளநீரில் எலுமிச்சம் பழம் கலந்து ஜூஸ் போட்டு பாட்டில்ல கலந்து வச்சா.. அதை எடுத்துட்டு வந்து இந்த நேரத்துல நீ ஏண்டா குடிச்சிட்டு கிடக்கே.". என்று வீரபாண்டியன் கையில் வைத்திருந்த பாட்டிலை வெடுக்கென பிடுங்கிக் கொண்டு சென்ற அங்கம்மா.. தெரியாத்தனமாக குயிலியின் நீண்ட ஜடையை மிதித்து விட.. தொங்க தொங்க மல்லிச் சரத்தோடு டோப்பா அங்கம்மாவின் காலடியில் வந்து விழுந்தது.. டோப்பா மூடியிருந்த வழுக்கை தலை இப்போது வெட்ட வெளிச்சமாக.. வீரபாண்டியன்.. ஆண் குயிலி இருவரும் திருதிருவென விழித்தனர்..
ஆருஷி நடப்பது எதுவும் புரியாமல் திகைப்புடன் வழுக்கைத் தலை குயிலியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க.. அங்கம்மா வைத்தார் அடுத்த ஆப்பு..
"ஏண்டா நீ.. சாமிக்கண்ணு பேரன் மாடுமுட்டி தானே".. என்று குனிந்து அவன் முகத்தை வெறிக்க வெறிக்க பார்த்தவர்.. வீரபாண்டியனின் பக்கம் திரும்பி..
"ஏண்டா வீரா இவனை தான் நேத்து ராத்திரியில இருந்து தூங்காம உக்காந்து.. முதலிரவுக்கு அனுப்பற மணப்பொண்ணு மாதிரி தயார் பண்ணிக்கிட்டு இருந்தியா.. நான் கூட ஏதோ திருவிழா கூத்துல ரெக்கார்ட் டான்ஸ் ஆட வைக்க போறீயோன்னு நினைச்சு புட்டேன்.. ஆமா இந்த காதுக்குள்ளே அடைக்கிற பஞ்சு எங்க போச்சு".. என்று அங்கமா அம்சமாக பற்ற வைத்துவிட்டு பஞ்சை தேடிக் கொண்டு செல்ல.. திருட்டு முழியுடன் தன்நெஞ்சை சரி செய்து கொண்டான் மாடு முட்டி..
அனைத்தையும் வீடியோ காலில் நிதானமாக ஒரு முறைப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருஷி..
"ஏலேய்.. கொடியில காய போட்டிருந்த புடவை உள் பாவாடையை திருடினது நீதானே".. அடுத்த பஞ்சாயத்து.. வேலாயி பாட்டி ஓடி வந்து மாடு முட்டியின் புடவையைப் பிடித்து எக்கு தப்பாக இழுக்க.. அவனும் அண்டர் பல்டி அடித்து அந்தரத்தில் அமர்ந்து கொள்ள.. வேலாயி கிழவி.. எதையோ பார்த்து பயந்து.. மூச்சடைத்து கீழே விழுந்தது..
"என்னடா கிழவி மயங்கிடுச்சு".. வீரபாண்டியன் எழுந்து நின்று அண்ணாந்து பார்த்து கேட்க.. "ஹிஹி புடவை தானே கட்டப் போறோம்னு உள்ள எதுவும் போடலை".. என்று அசடு வழிந்தான் மாடுமுட்டி..
"அடச்சீ கருமம் இறங்கி போடா.. எல்லாத்தையும் சொதப்பிக்கிட்டு".. என்று விரட்ட.. அவன் கீழே தொப்பென்று குதிக்கவும்.. "இந்தா இந்த கிழவியையும் தூக்கிட்டு போ" என்று துரத்தி விட்டவன்..
வீடியோ காலில் கன்னத்தில் கை வைத்து புருவங்களை உயர்த்தியபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து ஈஈ.. தாய்க்கிழவி போட்டுக் கொடுத்துடுச்சு.. என்று சிரித்து.. "தனியா இருக்கியா ருசி".. என்று கேட்க..
"ம்ம்".. என்று மைனா பட போலீஸ்காரன் பொண்டாட்டி போல் தலையாட்டினாள் அவள்..
"அப்போ நாம லவ் பண்ணலாமா?".. என்று கேட்டு புருவம் உயர்த்த.. நெஞ்சுக்கூடு ஏறி இறங்க சீற்றமாக தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் அவள்..
அந்தக் கோபத்தின் தாக்கம் டிசைன் மாறி அந்தப் பக்கம் ஏக்க பெருமூச்சாக வெளிவர.. "மாமனை இப்படியெல்லாம் பார்க்காதடி தங்கம்" என்றான் வீரா ஒரு மாதிரியான குரலில்.. எரிமலை வெடிப்பது போல் அடுத்து அவள் வாயிலிருந்து வந்த காரசாரமான வார்த்தைகள் அனைத்தையும்.. அமுக்கு டுமுக்கு அஜால் குஜால்.. டோனில் ரசனையாக கேட்டுக் கொண்டிருந்தான் வீரா..
தொடரும்..