• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
சூரியன் எப்போது உதிப்பான் என்று காத்திருந்தாள் போலும்.. மெல்லியகீற்றாக வெளிச்சம் படர ஆரம்பித்தவுடன் பொந்திலிருந்து எட்டிப் பார்க்கும் எலி போல் தன் மாடியிலிருந்து கண்களை மட்டும் மேலே உயர்த்தி யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று கருவிழிகளை சுழல விட்டவள் மெல்ல எழுந்து நின்று மாடிக்கு இந்த பக்கம் எகிறி குதித்தாள்.. எலி என்ற வர்ணனையிலேயே தெரிந்திருக்கும் அது யார் என்று..

காலை எழுந்தவுடன் பல் விலக்கிவிட்டு அம்மணி செய்யும் முதல் வேலை இதுதான்.. பெட் காஃபிக்கு பதில் டர்ட்டிக்கிஸ்.. நைட் பேண்ட் டி-ஷர்ட் சகிதமாக.. குடு குடுவென டாம் அன்ட் எலிக்குட்டி போல் ஓடி வந்தவள் மாடியறையின் கதவை திறந்து கொண்டு திருடி போல் உள்ளே நுழைந்தாள்..

அங்கே நீண்ட வரண்டாவை தாண்டி கீழே இறங்க படிக்கட்டும் இடது புறம் ஒரு அறையும் அமைந்திருக்க.. காலை நேர காற்றில் அசைந்தபடி மெலிதாக ஒலி எழுப்பிக் கொண்டிருந்த கதவை திறந்து கொண்டு அறையினுள் எட்டிப் பார்த்தது எலி குட்டி..

மார்பில் ஒரு கையும்.. தலைக்கு மேல் ஒரு கையுமாக.. கால்களை விரித்து கொண்டு.. அந்த முழுக்கட்டிலையும் ஆக்கிரமித்து ஆழ்ந்த நித்திரையிலிருந்தான் செந்தமிழ் செல்வன்..

"ஹாய் மாமு".. என்று க்ளோசப் புன்னகையுடன் தோள்களை குலுக்கி சிரித்தவள்.. பூனை போல் நடந்து சென்று.. கட்டில் மீது ஏறி அவனருகே படுத்து கொண்டாள்..

பிறகென்ன கண்களை கூட இமைக்க வில்லை.. பறந்து நெற்றியில் அசைந்தாடிக் கொண்டிருந்த அந்த ஒற்றை சுருள் முடி.. மூடியிருந்த இமைகள்.. கூர் நாசி என்று வர்ணிக்க முடியாது போயினும்.. ஆண்களுக்கே உரித்தான அந்த எடுப்பான கழுகு மூக்கு.. அடர்த்தியான மீசை.. அழுத்தமான இதழ்கள்.. உறங்கும்போதும் கூட அக்கா தங்கையை பற்றி தான் யோசித்துக் கொண்டிருப்பான் போலும்.. பொறாமையில் தலையில் கொட்டு வைக்க தோன்றியது.. எப்போதும் தன்னை பார்த்து பற்களை கடிக்கும் போது இறுகிப் போகும் அந்த தாடை.. அரிதாக.. என்றேனும் நிகழும் அதிசயமாக அவன் சிரிக்கையில் தோன்றும் அந்த கன்னக்குழி.. என்று ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டே வந்தவள்.. இவன் பாடி பில்டரா? டாக்டரா?.. பேசாம.. பாராசிட்டமால் கொடுக்கறதுக்கு பதிலா மதன் மித்ரா மருந்து பவுடர் வித்தா கூட நல்லா காசு பார்க்கலாம்.. என்று கட்டிங் தேகத்தை ரசனையாக பார்த்தவாறே அவன் கைவளைவுக்குள் அடங்கி கட்டிப்பிடித்து படுத்துக்கொள்ள..

என்னவோ பழக்கப்பட்ட பூனை குட்டி நெஞ்சின் மேல் கிடப்பது போல் திரும்பி படுத்து அணைத்துக் கொண்டு அவள் மீது காலை வேறு போட்டுக் கொண்டான் தமிழ்.. அவன் இதழ்கள் அவள் முன் நெற்றியில் அழுத்தமாக பதிந்திருக்க.. துவாரகாவிற்கோ சொர்கலோகத்திற்கு இறக்கை விரித்து பறப்பது போல் உணர்வு.. விழிகள் சொக்கி.. அவன் அருகாமையில்.. அணைப்பினில் கரைந்து ஆண் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தது அவள் ஜப்பான் மூக்கு.. தூங்கும்போது கூட பர்ஃபியூம் போடுவாங்களா என்ன.. கனவில் நடிகைகளுடன் டூயட் பாட வேண்டுமே.. அவள் ஒருமுறை கேட்கையில் அவன் தந்த பதில்..

எப்போது ஆரம்பித்தது இந்த நேசம்.. பெருகிவழியும் இந்த காதலுக்கு துவக்க புள்ளி வைத்தது அவனா?.. அல்லது இவளா?..

என்னதான் மீனாட்சி கைக்குழந்தையாக ஆபர்ணாவை தூக்கி வந்து குருவின் மடியில் போட்டாலும் இயல்பான சிறு பிள்ளைக்கே உரிய பொறாமையுடன் ஆபர்ணாவை அறவே வெறுத்தாள் துவாரகா..

அதிலும் தமிழ்செல்வன் தன்னுடன் விளையாடுவதை நிறுத்திய பிறகு.. தன் அண்ணன் தன்னை காட்டிலும் ஆராவை அதிகமாக தூக்கி வைத்துக் கொண்டாடுவதை கண்டு தமிழ் குடும்பத்தின் மீது வெறுப்பு அதிகமாகியது.. வெற்றிவேல் ராக்கம்மா அணியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு மீனாட்சியின் பற்பல இல்லீகல் க்ரைம்களை தன் மழலை மொழியில் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து அம்மாவிடம் அடிவாங்கியவள் துவாரகா..

ஆனால் நான்காம் வகுப்பில் படிக்கையில் சேற்றில் விழுந்து அழுது கொண்டிருந்த துவாரகாவை ஓடிவந்து தூக்கிவிட்டு.. "பாப்பா உனக்கு ஒன்னும் இல்லையே.. கைய கால நல்லா உதறு .. எங்கேயாவது அடிபட்டிருக்கா.. ஏன் உங்க அண்ணன் கூட வராம தனியா வந்தே.. எங்கே போனான் அந்த தடியன்.. இனிமே தனியா வரக்கூடாது புரிஞ்சுதா".. என்று கனிவும் கண்டிப்புமாக கையைப் பிடித்து அழைத்துச் சென்று வீட்டு வாசலில் விட்டு வந்ததுதான் விவரம் தெரிந்து அவர்களுக்குள் நடந்த முதல் உரையாடல்..

"தமிழ் அண்ணா ரொம்ப நல்லவரும்மா.. அவர்தான் கொண்டு வந்து வீட்டில் விட்டுட்டு போனாரு".. என்று தன் அன்னையிடம் சிலாகித்துக் கூறிக் கொண்டிருக்க.. "அண்ணனா.. அவன் என்னை அத்தைன்னு கூப்பிடறான், நீ என்ன அண்ணன்னு சொல்ற.. அவன் உனக்கு மாமா முறை வேணும்.. நீ வயசுக்கு வந்தா அவன் கையாலதான் ஓலை கட்டணும்னு எனக்கு ஆசை".. என்றவளோ ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு .. உங்க அப்பனையும் அப்பத்தாவையும் வைச்சிகிட்டு கனவுதான் காண முடியும்.. என்ற அங்கலாய்ப்புடன் எழுந்து சென்று விட்டாள்..

வயதுக்கு வந்த பின் ஓலை கட்டுவதை பற்றியெல்லாம் பெரிதாக யோசித்திராதவளுக்கு அண்ணன் அல்ல.. மாமா.. என்ற உறவுமுறை மட்டும் ஆழமாக மனதில் பதிந்து போனது.. அன்றிலிருந்து ஆராவிடம் அன்போடு பழக ஆரம்பித்திருந்தாள்.. அப்பா கூட்டணியிலிருந்து அம்மா கட்சிக்கு தாவி.. இருவரும் க்ரைம் பாட்னர்ஸ் ஆகிப் போயினர்..

அந்த சம்பவத்திற்கு பிறகு எங்கு பார்த்தாலும்.. "தமிழ் மாமா தமிழ் மாமா" என்று அழைத்து அவளே வலிய சென்று பேசுவது வழக்கமாகி போனது..

"ஏய்.. பாக்குற இடத்துல எல்லாம் இந்த மாதிரி மாமானு கூப்பிடுற வேலை வச்சுக்கிட்ட அப்புறம் நடக்கிறதே வேற".. என்று சிடுசிடுவென எரிந்து விழுந்தவனின் இன்னொரு முகத்தினில் சின்ன பிள்ளை மிரண்டு போவதை கண்டு கொண்டு.. "இன்னிக்கு எக்ஸாம் தானே" என்று.. அதே கடுமையுடன் கேட்டிருந்தான் தமிழ்ச்செல்வன்..

"ம்ம்".. இதழ் பிதுங்க.. அழத் துடிக்கும் பாவனையுடன் அவள் பதில் சொல்ல.. தன் சட்டை பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்துக் கொடுத்து.. "நல்லா எழுதணும் நிறைய மார்க் வாங்கணும்.. நல்லா படிச்சு அம்மா அப்பா பெயரை காப்பாத்தணும் சரியா!!" என்று கன்னத்தில் தட்டி அனுப்பி வைத்தான்.. சிறுவயதில் அவளோடு பேசிய தருணங்கள் மிக குறைவு.. ஆனால் தன் தங்கையின் மீது கொண்ட அக்கறையைப் போல.. எப்போதும் துவாரகாவின் மீதும் ஒரு கண் பதித்திருப்பதை அவனைத் தவிர யாரும் அறிந்திருக்கவில்லை.. அந்த சிறுவயதில் அவள் மீது முகிழ்த்தது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமே..

எட்டாம் வகுப்பு படிக்கையில் வயதுக்கு வந்த துவாராகாவிற்கு நீதான் ஓலை கட்ட வேண்டும் என்று தமிழை வீட்டுக்கு வந்து அழைத்தாள் மீனாட்சி..

"இந்த அத்தைக்கு அறிவே இல்ல சொந்த தாய்மாமன்தான் ஓலை கட்டணும்.. அவங்களையெல்லாம் விட்டுபுட்டு என்னைய வந்து முறை செய்ய சொல்றே.. ஏன் உன் புருஷன் பேசின பேச்செல்லாம் பத்தலையா.. இன்னும் நாண்டுக்கிட்டு சாகுற அளவுக்கு அவமானப்பட வைக்கலாம்னு பாக்குறியா.. நாங்கதான் அனாதை.. எடுத்து செய்ய ஆள் இல்ல.. உனக்கு என்ன குறைச்சல்.. உன் தம்பியும் அண்ணனும் அத்தனை பேர் இருக்காங்க இல்ல.. அவங்க யாரையாவது முறை செய்ய வை".. இன்று வெடுக்கென்று பேசி அனுப்பி வைத்து விட அழுது கொண்டே வீடு திரும்பினாள் மீனாட்சி..

ஆனால் இரண்டு நாட்கள் பள்ளிக்கு கூட விடுமுறை எடுத்து அல்லும் பகலும் வேலை செய்து கிடைத்த சொற்ப தொகையில் ஒரு புடவை வாங்கி மாடியில் துணி காயப்போட வந்த மீனாட்சியிடம்.. "இது துவாரகாவுக்கு" .. என்று அவள் கையில் கொடுத்துவிட்டு முகம் பார்க்க திராணியில்லாது கீழே இறங்கி ஓடிவிட்டான்..

"அடியேய்.. தமிழ் வாங்கி கொடுத்திருக்கான்டி உனக்காக!!".. என்று குதுகலத்தோடு அந்த புடவையை கொண்டு வந்து துவாரகாவிடம் கொடுத்தபோது அன்னையின் மகிழ்ச்சி அவளுள்ளும் ஒட்டிக்கொண்டது..

தமிழின் பொறுப்புணர்வு பற்றியும் அவன் குடும்பத்தின் மீது காட்டும் அளவு கடந்த அக்கறை.. அன்பைப் பற்றியும்.. அவர்களுக்காக ஓடி ஓடி உழைப்பதை பற்றியும் உதாரணமாகவோ அல்லது பெருமையாக சிலாகித்தோ.. ஒவ்வொரு நாளும் மீனாட்சி புகழ்ந்து பேசியதன் விளைவாக.. மனதின் மையப்பகுதியில் நீக்கமற நிறைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டான் தமிழ்ச்செல்வன்..

அதன் பிறகு பத்தாவது படிக்கையில்.. பருவ தேர்வு எழுதிவிட்டு மதிய விடுப்பில் வீட்டுக்கு வரும் வழியில்.. சில பள்ளி மாணவர்கள் சுற்றி வளைத்து வம்புக்கு இழுக்க..

கல்லூரி மாணவனாக கம்பீரத்துடன்.. "என்னடா.. என்ன வேணும் உங்களுக்கு.. பொம்பள பிள்ளை கிட்ட வம்பு பண்றதுக்கு தான் உங்க வீட்ல பெத்துவிட்டு இருக்காங்களா" என்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் காதை பிடித்து திருகி.. அவர்களை ஓட ஓட விரட்டிய தமிழ்.. அவள் மனதில் ஹீரோவாக உயர்ந்தான்..

பன்னிரண்டாம் வகுப்பில்.. நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்காக ஐம்பது குடம் தண்ணீர் ஊற்றி மரத்தடி பிள்ளையாரை திணற திணற குளிப்பாட்டுவதாக வேண்டிக் கொண்டு.. இரண்டு குடத்திலேயே இடுப்பொடிந்து போனவள் "சாரி பிள்ளையாரே.. பேசாம நீ மழை வரும் போது குளிச்சுக்கோயேன் ஈஈ".. என்று ஆல்டர்னேட்டிவ் வழி சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியவள்..

பிரசாதம் வாங்கிய புளியோதரை தொன்னையை மரத்தடியிலேயே மறந்து விட்டு வந்ததை உணர்ந்து நாலு கால் பாய்ச்சலில் மீண்டும் அவ்விடம் ஓட.. அங்கே விநாயகருக்கு குளிர குளிர அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.. நெளிந்து ஓட்டையாகி போன எவர்சில்வர் குடத்தில் நீரைக் கொண்டு வந்து ஊற்றிக் கொண்டிருந்தவன் செந்தமிழ்ச்செல்வன்.. "ஹை மாமு".. புன்னகையில் முகம் பளீரென ஒளிர..

"டேய் கணக்கு சரியா வச்சுக்கோ டா" என்று இன்னொருவனிடம் கூறிவிட்டு குடத்தோடு குளத்தை நோக்கி ஓடியிருந்தான் தமிழ்..

"சரிதான்.. இதோட இருபத்தி எட்டாவது குடம்.. ஏண்டா யாரோ செஞ்ச வேண்டுதலுக்கு நீ ஏன்டா கஷ்டப்பட்டு தண்ணி எடுத்து ஊத்திக்கிட்டு இருக்க.. சாயங்காலம் வேலைக்கு வேற போகனும் நீ.. இதெல்லாம் உனக்கு தேவையா!!".. என்று கல்லூரி தோழன் அவன் மீதிருந்த அக்கறை காரணமாக அலுத்துக் கொண்டான்..

ஒரு கணம் நின்று.. "என்னது யாரோவா.. எங்க துகி பாப்பா வேண்டுதல்டா .. பாவம் புள்ள விழுந்து விழுந்து படிச்சிருக்கு.. இந்த வேண்டுதல் நடக்காம அப்புறம் பிள்ளையார் கால வாரி விட்டுட்டார்னா என்ன பண்றது.. அதனாலதான் அதை நான் நிறைவேத்துறேன்" என்று.. இருபத்தி ஒன்பதாவது குடத்தை ஊற்றிவிட்டு மீண்டும் குளத்தை நோக்கி நடக்க.. "யார் வேண்டிக்கிட்டாங்களோ அவங்க தான் டா செய்யணும்" என்றான் அவன்..

"ப்ச்.. நான் வேற அவ வேறயா?".. என்று எந்த அர்த்தத்தில் உரைத்தானோ.. ஆனால் அந்த பதினேழு வயது பெண் புரிந்து கொண்ட அர்த்தம் வேறு.. அதுவரை பாசமாக படர்ந்து கிடந்த பாசியில் நேசம் என்னும் பூக்கள் மலர்ந்து.. ஹார்மோன்களின் தூண்டுதலினால் மனம் முழுக்க காதல் மணம் பரவி.. பெண்ணவளை திக்கு முக்காட வைத்திருந்தான் தமிழ்..

அவள் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று அவன் வேண்டுதல் செய்திருக்க.. அவன் நிறைவேற்றிய வேண்டுதல் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே சிரத்தையாக படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தாள் துவாரகா..

அண்ணன் இயற்பியல் படித்தான்.. இவள் இளங்கலை வேதியியல்.. எங்கே அண்ணனின் கல்லூரியிலேயே சேர்ந்தால் லூட்டி அடிக்க முடியாது.. சைட் அடிக்க முடியாது என்ற காரணத்தால் ஏதேதோ காரணங்கள் சொல்லி வேறொரு நல்ல கல்லூரியில் சேர்ந்து கொண்டவளுக்கு.. முதல் வாரத்திலேயே மூன்று ப்ரோபோசல்ஸ்.. "நான் எங்க தமிழ் மாமாவை லவ் பண்றேன்".. பெருமிதத்துடன் பதில் சொல்லி.. தான் எங்கேஜ்டு என்பதை கல்லூரி மொத்தத்திற்கும் தெரியப்படுத்தி.. காதல் சொல்ல வந்த ஆடவர்களை தள்ளி நிறுத்தினாள் துவாரகா..

பாட புத்தகம்.. கல்யாண பத்திரிக்கை.. என அனைத்திலும் செந்தமிழ்ச்செல்வன் துவாரகா என பைத்தியக்காரத்தனமாக எழுதி பார்ப்பது.. FLAMES போட்டு பார்ப்பது என பித்து தெளியாத காதல்.. "தமிழ் மாமா ஐ லவ் யூ".. என்று அவனிடம் நேரடியாக தன் விருப்பத்தை தைரியமாக உரைக்கும் அளவில் வந்து நிற்க.. கரண்ட் ஷாக் அடித்தவன் போல் சிலையாக நின்று விட்டான் அவன்..

பதிலுக்கு தமிழ் பெரியதாக என்ன சொல்லி இருக்கப் போகிறான்..

உக்கிரமாக நான்கு வார்த்தைகள்.. மிரட்டல்கள்..

அதனைத் தொடர்ந்து அறிவுரைகள்.. தூர நிற்கும் போது திருட்டுப் பார்வை.. அருகே வந்தால் உதாசீன பார்வை.. வெறுப்பான பேச்சு.. என இன்று வரை தமிழின் நாட்கள் ஒரே மாதிரியாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது..

தேனிலவு தம்பதிகள் போல் இதோ இரண்டும் கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருக்கிறது..

"அய்யோ.. அய்யோ.. அடியேய்.. எழுந்திருடி".. என்று அவள் முதுகில் நான்கு மொத்து மொத்தி எழுப்பி விட்டாள் ஆருஷி.. அந்த பூகம்பத்திலும் திரும்பி படுத்துக்கொண்டு தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு சுகமாக உறங்க ஆரம்பித்து விட்டான் தமிழ்..

"ஏண்டி நீ திருந்தவே மாட்டியா உங்க வீட்ல இடமா இல்ல.. இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு நீ வேற புதுசா ஏதாவது கிளப்பி விடாதே.. தினமும் அலாரம் வச்சு எழுந்து மேல வந்து உன்னை துரத்தி விடறதே என் பொழப்பா போச்சு"..

இந்தப் பயலும் கீழே வந்து படுன்னா கேக்க மாட்டேங்குறான்.. கேட்டா காவல் இருக்கானாம்.. ஒரு பெரிய இரும்பு கேட் போட்டு பூட்டினா காத்து கூட உள்ள வர முடியாது.. எதுக்கு அத்தனை கதவையும் திறந்து வைச்சுட்டு பப்பரபான்னு தூங்குறானோ தெரியலியே!!..

என்று புலம்பிக் கொண்டே துவாரகாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு மாடிக்கு வெளியே வந்தாள் ஆருஷி..

"உன் தம்பி ஏன் கதவை திறந்து வச்சுட்டு தூங்குறான்னு உனக்கு தெரியாதா".. என்று ஆருஷியை சீண்டினாள் துவாரகா..

"தெரியலையே" என்று ஆருஷி ஆழ்ந்து யோசிக்க..

"அது சரி.. அது தெரிஞ்சா நீ ஏன் புருஷனை அங்க தவிக்க விட்டுட்டு இங்கே கிடைக்கப் போறே".. என்றாள் கேலியாக..

"ஏய்.. ஓவரா பேசாத.. என் கதையை நான் பார்த்துக்கிறேன்.. ஆமா.. அவனே வேலை முடிச்சுட்டு வந்து அலுப்புல.. என்ன நடக்குதுன்னு கூட தெரியாம தூங்குறான்.. நீ ஏன் டி இங்கே வந்து பிரச்சனையை விலை கொடுத்து வாங்குற.. இனிமே இந்த பக்கம் வந்த தொலைச்சு புடுவேன்.. எல்லா பிரச்சனையும் சரியாகி பெரியவங்களா பார்த்து ஒரு நல்ல முடிவு எடுக்கிற வரைக்கும்.. அடக்க ஒடுக்கமா இரு".. என்று பட்டும் படாமலும் அறிவுரை சொல்ல..

"ஆமா உன் தம்பிக்கு.. ஒண்ணுமே தெரியாதுதான்.. இருபத்தி எட்டு" என்றாள் சம்பந்தமே இல்லாது..

"என்னடி கணக்கு இது?.. நேத்து இருபத்தி அஞ்சுன்னு சொன்னே.. இன்னைக்கு திடீர்னு வந்து இருபத்தி எட்டுன்னு சொல்றே".. ஆருஷி ஒன்றும் புரியாமல் தலையை சொரிய..

"அதை உன் தம்பிகிட்டேயே போய் கேளு".. என்றாள் துவாரகா எகத்தாளமாக..

"ம்க்கூம்.. ரொம்பத்தான் திமிரு.. பாரு.. பனியில நனைஞ்சு கன்னம்.. உதடெல்லாம் செக்கச் செவேல்ன்னு சிவந்து போய் கிடக்கு.. ஏதோ க்ரீமை பூசிக்குவியே.. அதை போய் பூசிக்கிட்டு போத்திக்கிட்டு படு".. என்றாள் ஆருஷி..

"ஆமா.. பல்லு பட்டு"..

"என்னது"..

"இல்ல பனி பட்டு.. கன்னம் உதடு இதோ கழுத்து எல்லாம் சிவந்து போச்சு.. அடேங்கப்பா வெயில் காலத்துல என்னா.. பனி.. எப்படித்தான் அண்ணன் உன்னைய வச்சுக்கிட்டு சமாளிக்கிறாரோ.. பாவம் அந்த மனுஷன்".. என்று பெருமூச்சு விட்டு.. மாடிக்கு அந்தப்பக்கம் எகிறி குதித்தாள் துவாரகா..

"அச்சோ.. ரொம்ப ஃபாஸ்டா இருக்காளே.. இவளா எனக்கு நாத்தனார்.. வீடு தாங்குமா!!.. நாளைக்கு திண்டுக்கல் போட்டு வாங்கி மாடி கதவை பூட்டி விடுகிறேன் இருடி"..

"ஆமா.. அதென்ன தினமும் ஏதோ ஒரு கணக்கு சொல்லிட்டு போறா..

10..13..17..20..25..28ன்னு.. ஒவ்வொரு நாளைக்கும் மூணு நாலு எண்ணிக்கையில கூடுது வாய்ப்பாடா இருக்குமோ".. என்று தீவிரமாக யோசித்த ஆருஷிக்கு மூளையில் எதுவும் பிடிபடாமல் போகவே..

"ஒண்ணுமே புரியல.. பேசாம மாமா கிட்டயே விளக்கம் கேட்போம்".. என்று போனை எடுக்க வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ அவளுக்காக காத்திருந்தது.

காலங்காத்தால.. "வீட்டுக்கு வர்றியா இல்லையா" என்று காரசாரமா.. மூச்சு பிடிக்க மூணு மணி நேரம் பேசி நடு நடுவே மானே தேனே பொன்மானே போட்டு இறுதியில் தற்கொலை மிரட்டலோடு முடித்து வீடியோ அனுப்பி இருந்தான் வீரபாண்டியன்..

நிதானமாக பார்த்துவிட்டு "டப்ஸ்மாஷ்.. சூப்பர் மாமா.. ஆனா ஆதி குணசேகரன் குரல்ல ட்ரை பண்ணி.. கோட்டா சீனிவாச ராவ் மாதிரி போய் கடைசில மொட்ட ராஜேந்திரன் குரல்ல முடிச்சு இருக்கீங்க.. இதுல பூவே உனக்காக விஜய் வாய்ஸ் வரவே இல்லையே.. அத்தை கிட்டே கேட்டு மிளகு ரசம் வச்சு குடிங்க மாமா".. என்று ரிப்ளை அனுப்பி இருந்தாள் அவன் மனைவி ஆருஷி..

தொடரும்..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
35
அடியே கூறுகெட்ட ஆருஷி நீ கல்யாணம் பண்ணி நாலு புள்ள வேற பெத்துட்ட. எங்க போய் முட்டிக்க. பனியில நனைஞ்சு கன்னமும், உதடும் சிவந்த போச்சு. சூப்பர்டிம்மா. உன்ன கட்டிகிட்டு பாவம் வீரா மாம்ஸ்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

தமிழ் நல்லா திருட்டு பூனை வேலை பார்க்கிற. துகி வர்றதுக்கு தான கதவை தாழ் போடாம தூங்குற. 🤔🤔🤔🤔 🥺🥺🥺🥺 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
May 3, 2025
Messages
37
தமிழு இது உலக மகா நடிப்புடா சாமி..🥳 புள்ளையா கிள்ளி விட்டுடு தொட்டல் ஆற்ற கதையா... நீயே கதவு தொறந்து வெச்சு romance பண்ணிட்டு என்னமா நடிக்கிற...😛😛

ஏய் தேனு பாத்துக்கோ உன் தம்பி எப்டி romance பண்றான்னு... பாவம் அங்க பாண்டியன் காஞ்சு போய் கடக்குறான்...
உன்ன வெச்சு என்ன பண்ண.... பாண்டிய வந்து இங்க பாரு...😁😁
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

அய்யோ ஆரு மா இப்படி பச்ச மண்ணா இருக்கியே டா குட்டி பொண்ணு கூட உன்ன கிண்டல் பண்ணுது 😜😜😜
டேய் தமிழ் கேடி பயலே கமுக்கமாக எல்லாத்தையும் பண்ணிட்டு தூக்குற மாதிரி என்னமா நடிக்கிறான் பாரு 😂😂😂
 
Top