- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
இவ்வளவு நேரமாக டிவி ரிமோட்டுகாக சண்டை போட்டுவிட்டு.. ஒரு வழியாக அவன் கையில் வந்த ரிமோட்டை வைத்து சேனல் சேனலாக மாற்றிக் கொண்டே.. அருகிலிருந்தவளை முறைத்துக் கொண்டிருந்தான் குரு..
"வந்ததுல இருந்து ஒரு வார்த்தை கூட படிக்கல.. நாலு வடை.. ஒரு காபி.. பத்தாததுக்கு என் காப்பிய வேற புடுங்கி குடிச்சுப்புட்டு எப்படி தூங்குது பாரு தீனி பண்டாரம்".. என்று திட்டியவன்.. சோபாவின் ஓரமாக சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஆராவின் மண்டையில் ஓங்கி கொட்ட கையை ஓங்க.. தோட்டத்திலிருந்து வெண்டைக்காய்களை பறித்து பாத்திரம் நிரம்ப போட்டுக் கொண்டு அங்கே வந்த மீனாட்சியை கண்டதும் .. அவளை கொட்டுவதற்காக தூக்கிய கையை அப்படியே தன் பக்கமாக வளைத்து தலையை கோதுவது போல பாவனை செய்து கொண்டான் குரு..
ஆனாலும் அவன் செய்கைகள் சந்தேகத்தையே வரவழைக்க.. "தூங்குற புள்ளைய என்னடா பண்றே".. என்ற சிடுசிடுத்தவாறே கேட்டுவிட்டு ஆராவிடம் கனிவாக படிந்த மீனாட்சியின் பார்வை மீண்டும் குருவின் பக்கம் கோபமாக திரும்பியது..
கேசத்தை கோதிக் கொண்டே.. "ஒண்ணும் இல்ல.. ஒண்ணுமே இல்லையே".. உன் மருமகளை தட்டிக் கொடுத்து தூங்க வைக்கிறேன்.. என்று பற்களை கடித்துக் கொண்டு சமாளிப்பாக அவள் காலில் தட்டி கொடுத்தவனின் கை மீது.. வாகாக இன்னொரு காலையும் நீட்டிக் கொண்டு திரும்பிப் படுத்தாள் ஆபர்ணா.. மூக்குசிவந்து போனவன் அதற்கு மேல் பொறுமையை இழுத்து பிடிக்க முடியாது.. வேகமாக அதே காலில் ஒரு அடியை போட்டு.. "குரங்கே.. படிக்கிற நேரத்துல என்ன தூக்கம்.. யூனிட் டெஸ்ட் எல்லாத்திலயும் ஃபெயில்.. செமஸ்டர்ல மட்டும் படிச்சு பாஸ் பண்ணினா போதுமா.. எழுந்து படி ஆரா..".. என்று சற்றே கடுமையான குரலில் அதட்ட..
"டேய் வளர்ற பிள்ளையை குரங்குன்னு சொல்லாதடா.. தூங்குனா தூங்கிட்டு போகட்டும்.. நைட் முழுக்க அவ ரூம்ல லைட் எரிஞ்சது.. பாவம் குழந்தை விடிய விடிய படிச்சிட்டு இப்பதான் நேரம் கிடைக்கும்போது தூங்குது.. அது பொறுக்கலையா உனக்கு.. எப்ப பாரு ஏண்டா அவளை படி படின்னு டார்ச்சர் பண்றீங்க.. விடுடா".. என்று சமையலறையில் இருந்து மீனாட்சியின் குரல் சப்போர்ட்டாக வரவும்.. சரிதான்.. என்று முந்தைய நாள் இரவிலிருந்து நடந்த சம்பவங்களை யோசித்துப் பார்த்தான் குரு..
பன்னிரண்டு மணிக்கு மேல் முழிப்பு தட்டவும்.. தொண்டை வறண்டு போனது போல உணர்ந்த குரு தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து சமையலறை பக்கம் வர.. ஆராவின் அறையில் விளக்கின் வெளிச்சம்..
"குட்டி குரங்கு இந்த நேரத்துல லைட் போட்டு வச்சுக்கிட்டு தூங்காம என்ன பண்ணுது".. என்று அறைக்கு வந்து போனை எடுத்து வீடியோ காலில் அழைக்க.. அழைப்பு ஏற்கப்பட்டும் அவனுடன் பேசாமல் கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருந்தாள் ஆரா..
"நியூட்டன்ஸ் தேர்ட் லா..
அன் ஆப்ஜெக்ட் இம்மர்ஸ்ட் இன் அ லிக்விட் வெதர் ஃபுல்லி ஆர் பார்ஷியலி"..
கூர்மையான பார்வையுடன் புருவங்களை வளைத்தவனோ "ஆரா".. என்றான் அழுத்தமாக.. அவனை ஏறிட்டும் பார்க்காமல்..
"இரு குரு படிச்சிட்டு இருக்கேன்ல.. டிஸ்டர்ப் பண்ணாதே, ஃபோனை கட் பண்ணு".. என்றுவிட்டு மீண்டும்.. "இஸ் ஈக்குவல் டு".. என்று படிக்க ஆரம்பிக்க..
"ஆரா நீ படிக்கிறது ஆர்க்கிமிடிஸ் பிரின்சிபில்".. என்றான் காட்டமான குரலில்.. சட்டென படிப்பதை நிறுத்திவிட்டு ஃபோன் திரையை பார்த்தவள்.. "ஆர்க்கிமிடிஸ் பிரின்ஸ்பல்?".. என்றாள் கேள்வியாக..
"ம்ம்".. என்று அழுத்தமான பார்வையுடன் தலையாட்டினான் அவன்..
"அப்ப இது நியூட்டன்ஸ் தேர்ட் லா இல்லையா".. என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க..
அவளின் தில்லாலங்கடி வேலைகள் தெரிந்தவன்.. உலக உருண்டை சதுரமாக மாறக்கூட வாய்ப்புண்டு.. ஆனால் ஆரா.. நள்ளிரவில் கண்விழித்து படிக்க வாய்ப்பே இல்லையே என்பதை சரியாக கணித்திருந்தவனாக.. "இப்ப எதுக்கு மூணாங் கிளாஸ் பாடத்தை உட்கார்ந்து மூன் லைட்டுல படிச்சிட்டு இருக்கே".. என்றான் சந்தேகம் தீராமல்..
"அது.. ஹான்.. வாழ்க்கை இப்படியே இலக்கில்லாமல் போகுதே.. நாம ஏன் படிச்சு.. யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்து கோல்டு மெடல் வாங்க கூடாதுன்னு தோணுச்சு.. அதனாலதான்.. இன்னைல இருந்து படிச்சு இந்தியாவை வல்லரசு ஆக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. சரி நான் படிக்கணும்.. எனக்கு படிப்பு தான் முக்கியம்".. என்று ஓவர் பில்டப்புடன்..
"இந்தியன் எக்கானாமி இஸ் தி பெஸ்ட் எக்கானமி".. என்றவள் தலையை உலுக்கிக் கொண்டு.. "அடச்சே அந்த ஆருஷியோட சேர்ந்து கில்லி படம் பார்த்தது தப்பா போச்சு".. என்று தனக்குள் முனங்கியவளுக்கு "என்ன படித்தோம் என்றே மறந்து போனது"..
குருவோ அலைபேசியின் திரை வழியாக.. புருவங்கள் இடுங்க.. விழிகளை கூர்மையாக்கி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
"ஐயோ ப்ரொபசர் பாண்டி குறுகுறுன்னு பார்க்கிறானே.. யான் என்ன செய்யும்" என்ற திருட்டு விழியோடு "நீ வேணா போய் தூங்கு குரு.. நான் விடிய விடிய படிப்பேன்.. ஏதாவது சந்தேகம் இருந்தா நாளைக்கு கேட்டுக்குறேன்.. குட் நைட்" என்று விட்டு..
"கண்டதை படிக்க துடிக்காமல் கற்றவர் போல் தினம் நடிக்காமல்".. என்று திடீரென தமிழுக்கு தாவியவள்.. போனை அணைக்க முற்பட..
"ஏய் இரு.. என்ன ரூம்ல பல்லி கத்தற சத்தம் கேட்குது".. பார்வையை அவள் பக்கத்தில் ஓட விட்டவன்.. "ஃபோன் கேமராவை அந்த பக்கம் திருப்பு" என்றான் சற்றே கடுமையான குரலில்..
"ஐயோ வேணாம் குரு.. அங்க ரெண்டு பல்லி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கு.. அதையெல்லாம் நம்ம பார்த்தா நரகத்துல கிருமி போஜனம் தண்டனை கிடைக்குமாம்.. பாவம் பல்லிகள் பொழைச்சிட்டு போகட்டும்.. நாம கண்ணை மூடிக்கலாம்".. என்று விழிகளை மூடிக்கொள்ள..
"அது பல்லியா.. அடல்ஸ் ஒன்லி அல்லியான்னு நான் பாக்கறேன்.. உன்னை ஃபோனை திருப்ப சொன்னேன்".. என்றான் அவன் அழுத்தமும் அதட்டலுமாக..
"பட்டப் பகலில் கருவாடு திருடி மாட்டிக் கொண்ட பூனை போல முகத்தை வைத்துக்கொண்டு அலைபேசியை தனது இடது பக்கமாக திருப்ப.. அவள் மடிக்கணினியில்.. Never have i ever.. என்ற டெலி சீரீஸில்.. நாயகனும் நாயகியும் முத்தமிட்டு கொள்ளும் காட்சி..
"ஹிஹி.. இவ்வளவு நேரம் படிப்பு சம்பந்தமாக தான் போயிட்டு இருந்துச்சு.. நான் கூட நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன் பாரேன்.. நீ பாக்குற நேரம்.. என்னோட கெட்ட நேரம்.. எதிர்பாராத விதமா".. என்று அவள் இழுக்க..
"ஓஹோ".. என்றான் நக்கலான பார்வையுடன்..
"நெஜமா குரு.. என்னை நம்பு.. நான் பாக்குறது எல்லாம் படிப்பு சம்பந்தப்பட்ட டாகுமென்டரி மூவிதான்.. ஆனா நீயும் எங்க அண்ணனும் பார்க்கும்போது மட்டும்.. என்னை மாட்டி விடவே இந்த மாதிரி சீன் வந்துடுது.. நான் என்ன பண்ணட்டும்.. சொல்லு".. என்று அப்பாவியாக கேட்க.. அழுத்தமான பார்வையுடன் அவளை முறைத்திருந்தவன்..
"குவாண்டம் மெக்கானிக்ஸ் யூனிட் எடு".. என்றான் கட்டளையாக..
"அந்த போர்ஷன் நீ இன்னும் எடுக்கவே இல்லையே குரு".. என்று இளித்தாள் ஆரா..
"தெரியும் அதை நீதான் எடுக்க போற.. என்றதும்".. தூக்க கலக்கத்துடன் கண்கள் சிவந்து போயிருந்தவள்.. "புரியலையே".. என்று தலையை சொரிந்தாள்..
"நாளைக்கு.. என்னோட கிளாஸ் நீதான் கிளாஸ் எடுக்க போறே.. ஒழுங்கா பிரிப்பேர் பண்ணிக்கோ.. குட் நைட்".. என்று அழைப்பை துண்டித்து விட.. அடுத்த ஐந்தாவது நிமிடம் சுவரெறி குதித்து.. குருவின் அறையில் சரஸ்வதி தேவியின் தத்துப் பிள்ளையாய் வீற்றிருந்தாள் ஆரா..
வீட்டில் தான் குரு.. காலேஜில் ப்ரொபசர்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாலும் வேலைக்காகாது.. நிச்சயம் கிளாஸ் எடுக்க சொல்லி மானத்தை வாங்கி விடுவான்.. பனிஷ்மென்ட் கொடுப்பான்.. ஏன் அவனிடமே பாடத்தைக் கேட்டு.. பயிற்சி பெற்றுக் கொள்ளக் கூடாது.. என நடு இரவில் ஆப்பிளை கடித்தபடி.. அவன் மீது காலை போட்டுக்கொண்டு அவள் படித்துக் கொண்டிருக்க.. அவனோ ஒரு பக்கம் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான்.. மூன்று மணி வரை படித்து விட்டு.. அவன் நெஞ்சின் மேல் காலை போட்டுக்கொண்டு.. அவன் கால் பக்கத்தில் தலையை வைத்து உறங்கி இருந்தாள் ஆரா.. சற்று நேரத்தில் முகத்தின் மீது வந்து விழுந்த கால் சில்லி மூக்கை உடைத்து விட.. "அம்மாஆஆஆஆ".. அடித்து பதறி எழுந்தவன்.. இடம்மாற்றி காலை தூக்கிப் போட்டு அவன் வாழ்க்கை விளக்கை அணைக்கும் முன்.. அவளை கிள்ளி அடித்து எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.. அத்தனையும் ராக்கம்மா போனில் போட்டோவாக.. ஆனால் எல்லாம் அவுட் ஆப் போக்கஸ்.. பாவம் பாட்டிக்கு இருட்டில் கண் தெரியாது..
காலையில் முதல் வகுப்பில்.. நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு பக்திபழமாக அமர்ந்திருந்தவளை பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் குரு..
மாணவர்களது.. காலை வணக்கங்களை ஏற்றுக் கொண்டு.. "இன்னைக்கு நான் கிளாஸ் எடுக்க போறதில்ல.. கொஞ்சம் ஹெட் ஏக்.. சோ.. எனக்கு பதிலா குவாண்டம் பிசிக்ஸ் படிச்சு நல்லாவே ப்ரிப்பேர் பண்ணிஇருக்கிற ஆபர்ணா இப்போ கிளாஸ் எடுப்பாங்க".. என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை கோர்த்து விட்டு.. "வாங்க ஆபர்ணா".. என்றவன் முதல் பெஞ்சில் மாணவர்களோடு சென்று அமர்ந்து விட.. "ஆரா.. அரோகரா.. நீ செத்தே".. மாணவர்களின் குரல் கேலியாக கிண்டலாக அவள் காதுகளில் ஒலிக்க.. இரவு முழுவதும் வாங்கிய திட்டுக்களும் கொட்டுக்களும் ரோஷமாக வெளிப்பட்டது அந்நேரத்தில்..
குருவின் மாணவி ஆயிற்றே.. தெளிவாக அழுத்தம் திருத்தமாக.. புரியும் படியாக நேர்த்தியாக.. முழுப்பாடத்தை அந்த அரை மணி நேரத்திற்குள் விளக்கி இருந்தாள் ஏப்ஸ்.. "வாவ்.. ஆரா".. இந்த ரீதியில் மாணவர்கள் வியப்பும் ஆர்வமுமாக கவனித்துக் கொண்டிருந்தனர்..
"குட்டி குரங்குக்கு அறிவெல்லாம் இருக்கு.. ஆனா வாலும் வாயும்தான் நீளம்.. ஃபிரெஷ்ஷா வைச்சிருக்கிற மூளையை அப்பப்போ தூசி தட்டி யூஸ் பண்ணினா பிரைட் ஃபியூச்சர் உண்டு".. என்று உள்ளுக்குள்ள நினைத்துக் கொண்டு.. அணிந்திருந்த காட்டன் சட்டைக்கு இணையாக.. உடல் மொழியையும் விரைப்பாகவே வைத்துக் கொண்டு.. அவள் விளக்கவுரையை கவனித்துக் கொண்டிருந்தான் குரு..
"சார்.. தெ ப்ரோபசர் பர்ஃபியும் மாத்திட்டாரோ.. பிராக்ரன்ஸ் வேற மாதிரி வருதே".. குரு அமர்ந்திருந்த பெஞ்சுக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த இரு மாணவிகள் மெல்லிய குரலில் கிசுகிசுத்துக் கொள்ள.. பற்களை கடித்துக் கொண்டு பாடம் நடத்தியவாறே சாக்பீசை அவர்கள் மீது தூக்கி எரிந்தாள் ஆரா..
"ஆராஆஆ".. அவன் கணீர் குரலில் அதட்ட..
"சார் உங்க பெர்ஃப்யூம் பத்தி டிஸ்கஸ் பண்றாங்க".. என்று சிறப்பாக போட்டுக் கொடுக்கவே.. குருவின் பார்வை அந்த இரண்டு மாணவிகளை நெருப்பு வளையமாக சூழ்ந்து கொண்டது.. "சாரி சார்".. என்று பம்மிவிட்டு ஆராவை பார்த்து முறைத்தனர் இருவரும்.. நின்று கொண்டிருந்தவளுக்கு கேட்ட விஷயம் அவன் கூர்மையான காதுகளுக்கு கேட்டிருக்காதா என்ன?.. இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று கண்டும் காணாமலும் அலட்சியம் செய்தவனை மையப் புள்ளியாக்கி அதை பெரிது படுத்திய ஆராவிற்கும் பாரபட்சமின்றி முறைப்பு பரிசாக கிடைத்தது.. எப்படியோ நல்லபடியாக வகுப்பு எடுத்து முடித்து விட்டாள்..
நாட் பேட்.. என்று எழுந்து நின்றவனோ "எல்லாருக்கும் புரிந்ததா.. ஏதாவது டவுட்ஸ் இருந்தா கேட்கலாம்.. ஆபர்ணா எக்ஸ்பிளைன் பண்ணுவாங்க" என்று மீண்டும் அவளை கோர்த்து விட.. வேண்டுமென்றே சந்தேகம் கேட்ட மாணவ மாணவிகளிடம்.. "கொன்னுடுவேன் மரியாதையா உட்காரு.. அறுத்து காக்காவுக்கு போட்டுருவேன்.. கேள்வி கேக்கிற அந்த நாக்கை" என்று சில பல கெட்ட வார்த்தைகளை வாயசைப்பின் மூலம் அவர்களுக்கு மட்டும் புரியும் படியாக கூறியவளோ.. "வேற ஏதாவது டவுட் இருக்கா" என்று சிரித்தபடியே கேட்க அனைவரும் கப்சிப்..
"குட்".. மெலிதான புன்னகையுடன் அவளை பாராட்டி விட்டு.. அங்கிருந்து சென்று விட்டான் குரு..
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எந்த வகுப்புகளும் இல்லை என்பதால் ஸ்டாஃப்ரூமில் வந்து அமர்ந்தவன்.. அடுத்த வகுப்பிற்காக பிரிப்பேர் செய்து கொண்டிருந்தான்..
குருவோடு அங்கே வேறு சில ஆசிரியர்களும் இருக்கவே.. அவர்களிடம் புன்னகைத்து விட்டு தன் வேலையில் கவனம் செலுத்தியிருந்தவன்.. முக்கியமான குறிப்பேட்டிற்காக.. நூலகம் செல்ல எத்தனிக்க.. எதிரே வந்து தடுத்து நிறுத்தினாள் பார்கவி..
"ஹாய் குரு.. என் போன்ல சிக்னல் இல்ல.. உங்க போன் கொஞ்சம் கொடுங்களேன்.. ஒரு கால் பேசிட்டு தரேன்" என்று கேட்க..
"இந்தா" என்று தன் போனை அவள் கையில் கொடுத்துவிட்டு.. தன் இருக்கைக்கு வந்து அமர்ந்து கொண்டான் குரு.
வெளியே சென்று யாருடனோ சில நிமிடங்கள் பேசிவிட்டு.. உள்ளே வந்தவள்.. போனை அவனிடம் கொடுக்க..
"பேசிட்டியா" என்றான்.. ஃபோனை டேபிளில் வைத்துவிட்டு..
"ம்ம்".. என்றவள்.. இப்போதுதான் அவனை நன்றாக கவனித்தாள்.. காலை சூரியனின் இளம் மஞ்சள் நிற ஷர்ட்டும்.. பிளாக் பாண்டும் அணிந்து கூடுதல் வசீகரத்தோடு மிளிர்ந்தவனை ரசனையாக பார்த்தவள்.. "குரு யூ லுக் கிரேட்" என்றாள் தன்னை மறந்து.. "தேங்க்யூ" என்றான் மோகனப் புன்னகையுடன்..
அந்த சிரிப்பு.. அவள் இதயத்தில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த.. விழிகளை கூட சிமிட்ட மறந்தவள்.. "உங்க ஷர்ட் ரொம்ப நல்லா இருக்கு".. என்றாள் பற்கள் தெரிய புன்னகைத்து..
குனிந்து தன் ஷர்ட்டை பார்த்தவன்.. "ஓஹ்.. லாஸ்ட் மந்த் வாங்கினது.. ஆராதான் செலக்ட் பண்ணினா".. என்றதும் அடுத்த கணம் பார்கவியின் முகம் கருத்து போனது..
"ஓஹ்".. என்று ஸ்ருதியில்லாமல் உரைத்தவள்.. பேச்சை மாற்றும் பொருட்டு "ஆமா கேட்கணும்னு நினைச்சேன்.. இது உங்க தங்கை துவாரகா தானே.. செம க்யூட்" என்று அவன் ஃபோனில் ஸ்கிரீன் சேவராக சிரித்துக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை காட்டி கேட்க.. "அது துவாரகா இல்லை ஆபர்ணா.. செம க்யூட்டா இருக்கா இல்ல".. என்றவன்.. அந்த ஃபோனை கையிலெடுத்து திரையில் தெரிந்த உருவத்தை.. ஒருமுறை ரசித்து விட்டு.. கீழே வைக்க.. கடுப்பை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு "எங்கே நான் பார்க்கிறேன் கொடுங்க".. என்று வாங்கியவள்.. போட்டோவை பார்ப்பது போல் சட்டென அவன் கேலரியை திறந்து மற்ற போட்டோக்களையும் ஸ்வைப் செய்ய.. அதை கண்டும் காணாதவன் போல் சாதாரணமாகவே இருந்தான் குரு..
கிட்டத்தட்ட ஒரு இருபதாயிரம் போட்டோக்களில்.. பெரும்பான்மையாக.. விதவிதமாக ஆரா..
கொதித்துப் போனாள் பார்கவி.. "என்ன குரு இது.. உங்க ஃபோன் முழுக்க இவ தான் இருக்கா.. உங்க தங்கச்சி அம்மா குடும்ப போட்டோ கூட அந்த அளவுக்கு இல்லையே" என்று வாய் விட்டே கேட்டு விட..
"ஆமா.. அவதான் என் ஃபோனை வாங்கி விதவிதமா போட்டோ எடுத்து வச்சிருக்கா சின்ன குரங்கு".. என்றான் சலிப்பாக..
"அப்போ டெலிட் பண்ணிடுங்க".. என்று.. அவளே செலக்ட் ஆல் கொடுத்து டெலிட் செய்ய போக..
சட்டென போனை பிடுங்கியவன்.. "எதுக்காக டெலிட் செய்யற.. நல்லா தானே இருக்கு.. அதுபாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே".. என்றான் ஃபோனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு..
"இப்படி தேவையில்லாத குப்பையை சேர்த்து வச்சா போன் ஹேங் ஆயிடும்".. என்று அவள் கடுப்புடன் சொல்லவும்..
"ஆனா ஆகிட்டு போகுது ..இன்னொரு போன் வாங்கி.. மொத்த குப்பையையும் அதுல டிரான்ஸ்பர் பண்ணிக்கிட்டா போச்சு".. என்று சாதாரணமாக சொன்னவன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு சென்று விட்டான்..
ஆகமொத்தம் இந்த குப்பையை தூக்கி போட போவதில்லை.. அப்படித்தானே!.. பார்கவிக்கு இந்த உறவு முறையை எந்த பட்டியலில் சேர்ப்பதென்றே தெரியவில்லை.. ஒரு நாள் விளையாட்டாக அவன் தோள்பட்டையில் அடித்ததற்கு.. ஆஆஆஆ.. என்று அலறி.. அந்த இடத்தை அழுத்தமாக பற்றிக்கொள்ள.. "என்னாச்சு குரு".. என்று பதறினாள் பார்கவி..
"பக்கத்து வீட்டு பப்பி கடிச்சு வச்சுருச்சு".. என்று தன் புஜத்தை தேய்த்துக் கொண்டான்..
"பக்கத்து வீட்ல டாக் வளக்கறாங்களா" பார்கவி அறியாமல் கேட்க..
"ப்ச்.. நான் ஆராவை சொன்னேன்".. என்றவனின் முகத்தில் கொஞ்சம் கூட கோபம் பிரதிபலிக்கவில்லை.. ஏதோ என் பிள்ளை குறும்பு செய்தது என்று பெருமிதத்துடன் சொல்லும் தாயின் ரசனையே அதிகமாக வெளிப்படுவதை தெளிவாக குறித்துக் கொண்டாள் பார்கவி..
"நீங்க அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்குறீங்க குரு" என்றாள் பார்கவி கோபத்துடன்..
"ஆமா.. நான்தான் இடத்தை கொடுத்து கடிச்சு வைன்னு சொன்னேன்.. அட வேற போம்மா.. பல்லு குறுகுறுன்னு இருந்தா எங்கேயாவது கடிச்சு வைக்கும் குரங்கு".. என்று இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னவன் அவ்விடம் விட்டு சென்று விட பார்கவிக்கு தான் காதில் புகை வந்தது.. ஆராவை அடியோடு ஒழித்து விட்டு தான் அவன் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு அதற்கான திட்டங்களை வகுக்க தயாரானாள் பார்கவி..
இதோ ஆரா.. மாலையில் தன் வீட்டுக்கு போய்.. அங்கே ஸ்நாக்ஸ் எதுவும் கிடைக்காத பட்சத்தில் குரு வீட்டிற்கு தஞ்சம் புகுந்து விட்டாள்.. போய் புத்தகத்தை எடுத்து வா என்று தலையில் கொட்டி அனுப்பி வைக்க.. மீண்டும் சென்று புத்தகத்தை எடுத்து வந்தவளோ அதை தலையணையாக்கி உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. இதில் மீனாட்சியின் சப்போர்ட் வேறு..
"ஏம்மா இவ படிப்பு விஷயத்துல நீ தலையிடாதே.. உன்னால தான் இவ கெட்டுப் போறா.. ஓவர் செல்லம்.. ஏய்.. எழுந்திருடி".. என்று.. பாதத்தில் நறுக்கென கிள்ளிவிட.. சுருக்கென காலை உருவிக் கொண்டு.. சோபாவின் மேல்பக்கம் நகர்ந்து உடலை குறுக்கிக் கொண்டு உறங்கினாள்..
அந்நேரம் அங்கு வந்த துவாரகா.. "என்ன காமெடி பீஸ் இங்கே இருக்கு.. அப்ப அந்த முரட்டு பீஸ் இன்னும் வீட்டுக்கு வந்து சேரலையோ".. கேலியாக உரைத்து விட்டு அண்ணனின் பக்கத்தில் அமர்ந்து கொள்ள.. தூங்கிக் கொண்டிருந்த பிசாசு எழுந்து வந்து இருவரின் நடுவே அமர்ந்து கொண்டு.. துவாரகாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு குருவின் மேல் காலை போட்டு கொண்டு சுகமாக உறங்கியது..
"இவ ஒருத்தி.. சரியான ஒட்டுண்ணி.. பக்கத்துல ஒட்டிக்க.. ஆளுங்க இல்லாம இருக்கவே இருக்காது இது".. என்று இருவரும் சலித்துக் கொண்டாலும் அவளை தள்ளி விட வில்லை..
"எங்கே நடக்கும் இந்த அநியாயம்".. ராக்கம்மா காதில் மூக்கிலும் புகை வராத குறை அவ்வளவு வயித்தெரிச்சல்..
அண்ணனும் தங்கையும் ஏதோ ஒரு ரியாலிட்டி ஷோ பார்த்துக் கொண்டிருக்க.. ஆரா.. உறக்கத்தின் மூலம் பிஜிஎம் கொடுத்துக் கொண்டிருந்தாள்..
எப்போதும் இரவை தாண்டி வீட்டுக்கு வரும் வெற்றிவேல்.. அன்று கொஞ்சம் சீக்கிரமாக வந்து விட்டார்..
"அய்யயோ.. உங்க அப்பா வந்துட்டாருடா குரு".. என்று சிக்னல் கொடுத்துவிட்டு மீனாட்சி வாசலை நோக்கி ஓட.. அதற்குள் மகனை வீட்டுக்குள் அழைத்து வந்திருந்தார் ராக்கம்ஸ்..
என்ன செய்வது என்று அறியாமல் குருவும் துவாரகாவும் கும்பகர்ணியாக உறங்கிக் கொண்டிருந்த ஆராவை மடியில் வைத்துக் கொண்டு விழித்திருக்க.. வாசலை தாண்டி உள்ளே வரும் முன் மீனாட்சி பாய்ந்து சென்று கணவனை கட்டிக் கொள்ள.. அந்நேரம் டிவியில் அந்த பாடல்..
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…மென்பார்வையில் மீதியும் தேய…
என்று பார்வையால் ரொமான்ஸ் செய்து ஆன்ட்ரியா ரேஞ்சுக்கு மீனாட்சி பர்பார்ம் செய்ய.. மிரண்டு போனார் வெற்றி..
"அடியேய் புள்ளைங்க பாக்குறாங்க காலம் போன காலத்துல என்னடி இது கன்றாவி பாட்டு".. என்று காதைக் கடித்தாலும் மனைவியின் ரொமான்டிக் லுக் கொஞ்சம் கிளர்ச்சியாகவே இருந்தது.. கழுத்தில் வேறு கைப்போட்டு ஆன்ட்ரியா போல் வளைய.. வெற்றிவேலும் அதற்கேற்றார்போல் வளைந்தார்..
"யப்பா.. மம்மி என்னா பர்ஃபார்மென்ஸ்".. குருவும்.. துவாரகாவும் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்..
என்னாச்சு இவளுக்கு..என்று எட்டிப் பார்த்த ராக்கம்ஸ்சுக்கு.. "நீ வேற குறுக்கா மறுக்கா ஓடாதே.. போய்த் தொலை கிழவி".. என்ற மைன்ட் வாய்சுடன்.. மூக்கில் ஒரு குத்து..
வெளியே "சாரி மாமியாரே கவனிக்கல".. என்று மீண்டும் கையை நீட்டி ஆட ராக்கம்ஸ் தெருவில் சென்று நின்று கொண்டார்..
ம்ம்… இன்று நேற்று என்று இல்லை…ஏன் இந்த நிலை…ம்ம்… உன்னைக்கண்ட நாளினின்றேநான் செய்யும் பிழை…
என்று வெற்றி பிள்ளைகளை பார்க்க விடாதவாறு.. குறுக்கும் நெடுக்கமாக ஆடிக் கொண்டிருந்தவள்.. "ஏதாவது பண்ணி தொலைங்கடாஆஆ.. வயசான காலத்துல டான்ஸ் எல்லாம் ஆட முடியல.. கால் நடுங்குது" என்று பாட்டோடு சேர்ந்து கதற .. குரு கையால் பற்றி ஆராவை பிடித்து சோபாவில் பின் பக்கம் தூக்கிப்போட்டு விட்டு அட்டென்ஷனில் நின்று கொண்டான்..
"அப்பாடியோவ் மிஷன் கம்ளிட்டட்".. என மூச்சுவிட்டு எதுவுமே நடவாதவாறு சமையல் கட்டுக்குள் நுழைந்து கொள்ள.. "என்னாச்சு இவளுக்கு.. வந்தா.. ஆடினா.. போனா".. என ஒன்றும் புரியாமல் ஙே.. என்று விழித்தார் வெற்றிவேல்..
தொடரும்..