• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 13

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
53
"வர வர இந்த வீட்ல ஒண்ணுமே சரியில்ல".. என்று வெற்றிவேல் அலுத்துக் கொண்டே.. அறையை நோக்கி செல்ல.. அவர் செல்லும் வரை அதே தோரணையில் நின்று கொண்டிருந்த இருவரும்.. தந்தையின் தலை அறைக்குள் மறைந்தவுடன்.. "அடியேய்.. எழுந்திரிடி.. எங்க அப்பா வர்றதுக்குள்ள எழுந்திருச்சு ஓடு".. துவாரகா உலுக்கி எழுப்ப.. "ஏய் கும்பகர்னி எழுந்திரு.. சம்சாரம் அது மின்சாரம் விசு மாதிரி எங்கப்பாவை வீட்டுக்கு நடுவுல கோடு போட வைச்சுடாதே.. இங்கிருந்து போய் தொலை" என்று அவள் மண்டையில் கொட்டினான் குரு..

"ஸ்ஆஆ".. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் குரு தலையைத் தேய்த்தவாறே அவன் நெஞ்சின் மீது சாய்ந்து விழுந்தாள் .. அவள் விழுந்த வேகத்திற்கு பின்னே சாய்ந்தவன் பின் சுதாரித்து.. "ஐயோ காரியத்தையே கெடுத்த!!.. அங்க பாரு.. எங்க அப்பத்தா உன்னையே பாக்குது.. அடியேய் வளச்சு வளைச்சு உன்னைய போட்டோ வேற எடுக்குதுடி.. டாகுமென்ட்ரி மூவி ரெடி பண்ணி உன் நொண்ணனுக்கும் எங்கப்பனுக்கும் வாட்ஸப் பண்றதுக்கு முன்னாடி எஸ்கேப் ஆகி எகிறி குதிச்சு ஓடிடு" என்று அலர்ட் செய்ய.. ஒற்றைக் கண்ணை திறந்து அப்பத்தாவை பார்த்தாள் ஆரா

ராக்கம்மா குப்புறப் படுத்துக்கொண்டு கீழிருந்து மேலே ஹாலிவுட் பட ரேஞ்சில் ஆங்கில் பார்த்து போட்டோ எடுப்பதை கண்டு.. முழுதாக உறக்கம் நீங்கியவளாக.. கோபத்தில் புசுபுசுவென மூச்சு விட்டவள்.. "குரு நான் வேணா இந்த கிழவிய கொன்னுடவா".. என்று இடுப்பில் கைவைத்து.. ராக்கம்மாவை கொலை வெறியுடன் முறைத்திருந்தாள்..

வாம்பயர் போல் பாய்ந்து ஆயாவை கடித்து வைக்க நின்றவளை இழுத்துப் பிடித்து.. "அய்யோ.. மேரா அப்பத்தா".. என்று நெஞ்சில் கை வைத்தவன்.. "அவசரப்பட்டு அவங்களை ஒன்னும் பண்ணி வச்சிடாதே காட்டேரி.. கடிச்சு வைக்கிற வேலையெல்லாம் என்னோடு நிறுத்திக்க.. அப்பத்தாவை கடிச்சு கொலை கேஸ்ல உள்ள போயிடாதே".. ஆரா மூச்சு வாங்கி நிற்கும் தோரணை கண்டு மிரட்டலும் உருட்டலுமாக எச்சரித்தான் குரு..

ராக்கம்மா அடங்குவதாய் இல்லை.. உருண்டு புரண்டு ஆராவை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்..

"ஐயோ பேசிகிட்டே நிக்காத.. இங்கேருந்து கிளம்பு.. எங்க அப்பா வெளியே வந்துட போறாரு".. என்று வெற்றிவேலின் அறையை பார்த்தபடியே.. ஆராவை முதுகில் கை வைத்து வாசல் வரை கொண்டு சென்று தள்ளி விட்டு வந்தாள் துவாரகா..

ஏய்ய்ய்.. என்னா.. வீட்டை விட்டு வெளியே தொரத்துறீங்களா?.. இருங்கடா மொத்த குடும்பத்துக்கும் சூனியம் வைக்கிறேன்.. முக்கியமா இந்த கிழவிக்கு முட்டை மந்திரிச்சு வச்சு பைத்தியம் பிடிக்க வைக்கல நான் ஆபர்ணா இல்ல".. என்று கொக்கரித்தாள் அவள்.. தூக்கம் தொலைந்த கோபம்.. சமையலையில் இன்னும் ரெண்டு உளுந்த வடைகளை மிச்சம் வைத்த ஆதங்கம்..

"தோ பாருடா... குட்டி சாத்தான்.. சூன்யத்தை பற்றி பேசுது.. ஆல்ரெடி நீ இங்க வந்து போறதையே.. எங்க வீட்ல ஜெகன் மோகினி நடமாட்டம் இருக்கறதா ஊரெல்லாம் பேசிக்கிறாங்களாம்.. ரெண்டு மூணு யூட்யூப் சேனல்ல வேற வந்து பேட்டி வேற எடுத்துட்டு போனாங்க" என்று கிண்டலாக சொல்லியவாறு துவாரகாவின் தோள் மீது கையைப் போட்டான் குரு..

"ஓஹ் அப்போ இவளை ஜெயமாலினு சொல்றியா அண்ணா!!".. என்று துவாரகா சத்தமாக கேட்டு சீண்டி விட.. "அடேச்சே.. ஜெயமாலினியை அசிங்கப்படுத்தாதே.. இது தட் லாங் ஜவுரி முடி.. வைட் டிரஸ்.. லெக்கிங்ஸ் போட்ட குட்டி பிசாசு" என்று வாரினான் அவன்.. அண்ணன் தங்கை சேர்ந்து ஆராவை வாரிவிடுவது வழக்கம்.. கீழேவிழுந்து சில்லறை பொறுக்குவது நம் ஆராவின் பழக்கம்.. அது போல் இன்றும் ஒவர் கலாயில் ரோஷ நரம்புகள் முறுக்கேற

"ஓஹ்.. அப்படியா.. நான் குட்டி பிசாசா.. என்னையே கலாய்க்கிறீங்களா.. அடேய்.. குட்டி பிசாசு பாத்துட்டீங்க.. கஞ்சுரிங் பேயை பார்த்ததில்லையே.. இப்போ காட்டறேன்".. என்று மூக்கு விடைக்க.. "அடியேய் மீனாட்சி.. பார்கவி யாருன்னு உன் புள்ள கிட்டே கேளு".. என்று வெளிப்புறமிருந்து கிச்சன் ஜன்னல் வழியாக குரல் கொடுத்து.. மிஷன் கம்ளிட்டட் ஆன திருப்தியுடன் சுவர் எகிறி குதித்து ஓடி விட்டாள் ஆரா..

டன்.. டன்.. டன்.. சீரியல் பிஜி எம்மோடு.. மீனாட்சி சமையல் கட்டிலிருந்து எட்டிப்பார்க்க.. "அச்சச்சோ..அண்ணா குட்டிசாத்தான் போட்டு கொடுத்துருச்சுண்ணா".. என்று துவாரகா ஷாக் ஆகி விழிக்க.. குரு கூட ஜெர்க் ஆகிப் போனான்.. காலகேயன் காலம் தாண்டி வந்து புரியாத மொழியில் கெட்ட வார்த்தை பேசினாலும் அசராமல் பதில் கொடுப்பான்.. அம்மான்னா கொஞ்சம் பயம்தான்..

"அடிப்பாவி சனிக்கிழமை விரதம்னு கூட பாக்காம சவர்மா வாங்கி கொடுத்தேனே.. மொத்தமா முழுங்கிட்டு இப்படி துரோகம் பண்ணிட்டாளே ராட்சசி.. இருடி ஆனபெல்.. நாளைக்கு காலேஜ்ல உன்னை கவனிச்சுக்கிறேன்".. என்று கோபத்துடன் பற்களுக்குள் முணுமுணுத்தவன் அம்மாவை அப்பாவியாய் பார்க்க..

"யாருடா அது பார்கவி".. இவ்வளவு நேரம் அம்மன் பட ஆரம்பக் காட்சியில் வந்த ரம்யா கிருஷ்ணன் போல் ஹோம்லி கேர்ளாக குடும்பத்தை ரட்சித்த மீனாட்சி.. இப்போது கிளைமாக்ஸ் காட்சி ரம்யா கிருஷ்ணன் போல் நாக்கை நீட்டிக்கொண்டு.. உக்கிரமாக வதம் செய்யும் நோக்குடன்.. சூலாயுதம் பதிலாக கரண்டியை தாங்கிக் கொண்டு தயாராக நிற்க..

"அம்மா.. அது.. ஹான்".. சென்ட்ர் பிரஷ் விளம்பரத்தில் வருவது போல் நாக்கு ரோலிங்.. அம்மாவின் அவதாரம் கண்டு..

"என்ன அம்மா.. நொம்மா?.. சொல்லு.. யார் அது பார்கவி".. என்று கோபமாக ஆரம்பித்து தன் வழக்கமான வசனம் பேச தயாராக.. "அய்யோ துகி.. காப்பாத்து டி" தங்கையை உதவிக்கு அழைத்தான் குரு..

"ஆத்தாடி.. இது காளியாத்தா.. உனக்கு சப்போர்ட்டுக்கு வந்தா உனக்கு பதிலா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரும்.. நான் வரல இந்த விளையாட்டுக்கு" என்று உள்ளே ஓடிவிட்டாள் அவன் ஊட்டி வளத்த பச்சைக் கிளி.. பாவி.. பச்சைத் துரோகி..ஓடிப் போன தங்கையை பார்த்து பற்களை கடிக்க..

"உன்னைத்தாண்டா கேட்கிறேன் யாரு அந்த பார்கவி லவ் பண்றியா!!.. என்று கேட்க..

ஆமாம்.. இல்லை.. நாலாப்பக்கமும் தலையாட்டினான் குரு..

மீனாட்சி முகம் பூதக்கண்ணாடியில் பார்த்தது போல் பெரியதாக.. "பண்ணுடா பண்ணு.. நல்லா பண்ணு.. எனக்கு கொள்ளி வச்சிட்டு"..

"ஐயோ அம்மா அபசகுனமா பேசி தொலையாதே.. அந்த குட்டிச்சாத்தான் ஏதாவது சொல்லிட்டு போதுன்னா.. உனக்கு அறிவு இல்லையா.. அது பார்கவி இல்ல.. பாரதி கவி"..

என்னது?

"பாரதியாரோட கவிதை போட்டி நடக்குது.. அதுல அந்த சைத்தான் பேர் கொடுத்திருக்கு.. நான்தானே எழுதிக் கொடுக்கணும்.. பாரதியார் கவிதைகள்தான் பார்கவின்னு ஷார்ட்டா சொல்லிட்டு போகுது".. என்று உலக உருண்டையை ஒருவாய் சோற்றுக்குள் மறைத்து மேக்கப் பண்ணினான் குரு..

"அப்படியா சொன்னா?".. என்றாள் மீனாட்சி சந்தேகமாக..

"அப்படித்தான். அங்க எண்ணெய் காயுது போய் கடுகை போடுங்க.. இங்கே வந்து என்னை தாளிக்காதீங்க".. என்று சலித்துக் கொண்ட நேரத்தில் போன் வரவும் எடுத்து காதில் வைத்தான்..

"என்ன குரு சொல்லிட்டியா.. நல்ல சான்சை மிஸ் பண்ணிடாதே.. இதுதான் வாய்ப்பு.. பட்டுன்னு உண்மையை போட்டு உடைச்சிடு" என்றாள் ஆரா எதிர்முனையில்..

ஏற்கனவே அன்னையின் எதிர்ப்பை மீறி பார்கவியின் விஷயத்தை எப்படி போட்டு உடைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தவன்.. ஆராவின் நக்கலான பேச்சில்.. ரத்த அழுத்தம் எகிற கண்களை மூடி திறந்து.. "ஃபோனை வைடி இல்லனா நேர்ல வந்து செருப்பால அடிப்பேன்".. என்று பற்களுக்கு இடையே கடுமையோடு வார்த்தைகளை கடித்து துப்பியவன் அழைப்பை துண்டித்து போனை சோபாவில் தூக்கி வீசினான்.. டென்ஷனோட தலையை கோதியவனுக்கு இந்த விஷயத்தை எப்படி டீல் செய்வதென்றே புரியவில்லை..

தன் மாணவர்களுக்கு கண்ணசைவில் கட்டளைகளை பிறப்பித்து ஆட்டுவிப்பவன்.. அவர்களை நல்வழியில் நடத்தி செல்பவன் குரு பிரகாஷ்.. தன் லவ் மேட்டரை அன்னையிடம் ஓபன் செய்ய.. நெடு நாட்களாக திணறிக் கொண்டிருக்கிறான் என்று சொன்னால் உலகம் நம்புமா.. ஆனால் அதுதான் உண்மை.. மற்ற விஷயங்களில் அந்த வீட்டில் அவன் வைத்தது தான் சட்டம்.. ஆனால் அவன் திருமணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் முழுக்க முழுக்க மீனாட்சியின் வசம்.. பயம் இல்லை.. தயக்கம்.. அம்மா தான் இப்படி என்றால் அப்பா.. அய்யய்யோ!!..

அவரது தங்கை மகளைதான் கட்ட வேண்டும் என்று அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்காத குறையாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனிடம் உருப் போட்டுக் கொண்டிருக்கிறார் வெற்றி.. அதனால் அவரிடமும் உதவி கேட்க முடியாது.. பார்கவியாவது பைரவியாவது.. என் தங்கை மகள்.. அலங்கார ரூபினி தான் உனக்கு சரியான பொருத்தம்.. என்று ஜமக்காலம்பட்டியிலிருந்து அடுத்த ரயிலில் அலங்காரி டோர் டெலிவரி செய்யப் படுவாள்..

கிராமத்து பெண்கள் அழகோ அழகு.. அவர்களுக்கென்று தனி நிறம் சுவை திடம் உண்டு.. ஆனால் அலங்காரியோ அமெரிக்கா ரிட்டன்ஸ் போல் போடும் ஆட்டம் சகிக்க முடியாது.. போன முறை வந்த போது ஆறாவது படிக்கும் போது வாங்கிய அல்டாப்பு உடையை மடிப்பு கலையாமல் வைத்திருந்து அணிந்து வந்தாளோ என்ற சந்தேகம் தோன்றியது அவனுக்கு.. அதில் வேறு மாமா.. என்று பாய்ந்து அவனை பிழியும் கட்டிப்பிடி வைத்தியம் வேறு.. சட்னி ஆகிப் போவான் குரு.. ஆசை மாமனை மயக்க பதினொரு பக்கத்தில் ஸ்கிரிப்ட் எழுதி.. அதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செயல்படுத்தியதும்.. வெற்றிவேல் துணை நின்று.. செயல்படுத்த உதவியதும் மறந்து போகுமா.. தெரியாமல் கூட அப்பாவிடம் பார்கவி பற்றி உளறி விட கூடாது.. மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டான்..

"இன்னும் எவ்வளவு நாளைக்கு தயங்கி கிட்டே இருக்க போற குரு உண்மையை சொல்லித்தானே ஆகணும்".. மனசாட்சி கழுதை வேறு உள்ளே குடைய

"சொல்லணும்.. சீக்கிரம் சொல்லணும்".. தன் நெஞ்சை நீவிக்கொண்டான்.. "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா".. மனசாட்சி கேள்வி எழுப்பியது..

"ஆமா அழகா இருக்காளே.. என்னை உருகி உருகி லவ் பண்ற பொண்ணு.. எனக்கும் அவளை பிடிச்சிருக்கு.. மேட் ஃபார் ஈச் அதர்.. வேற என்ன வேணும்".. என்று.. பார்கவியின் நினைவினில் புன்னகைக்க.. மீண்டும் ஃபோன் ஒலித்தது..

"ம்ம்ம்".. என்று அடிக்குரலில் உறுமலுடன் கோபத்துடன் விழிகளை மூடி திறந்து.. போனை எடுத்து சட்டென அழைப்பை ஏற்றவன்.. "அடியே கூறுகெட்ட குக்கரு உனக்கெல்லாம் அறிவே இல்லையாடி.. கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாம அம்மா கிட்ட போட்டு கொடுத்துட்டே.. இனிமே வீட்டு பக்கம் வந்தா மூஞ்சில மிளகாய் பொடி தூவிடுவேன்".. என்று கேப் விடாமல் கத்திக் கொண்டிருக்க..

"குரு".. என்ற குரலில் கப்சிப்பென்று அமைதியானான்..

பார்கவி?.. என்றவன் மீனாட்சி எங்கிருந்தாவது எட்டிப் பார்க்கிறாளா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்திருந்தான்..

"வேற யாருன்னு நினைச்சீங்க".. சற்றே கடுப்புடன் கேட்டாள் அவள்..

"சாரிடா.. நான் அந்த லூசு ஆரான்னு நினைச்சிட்டேன்"..

ஆரா பெயரை கேட்டதும் உள்ளுக்குள் எரிச்சல் பொங்கினாலும் அதை மறைத்துக் கொண்டு "ஷ்ஷப்பா.. எப்பவும் அவன் நினைப்பு தானா என்னைப்பற்றி யோசிக்கவே மாட்டீங்களா".. என்று செல்லமாக சிணுங்கினாள் பார்கவி..

செல்ல சிணுங்கல் புரபசரை டெம்ப்ட் செய்யவில்லை.. "ஹேய்.. உன்னைப் பத்திதான் நினைச்சுட்டு இருந்தேன்".. என்றான் மீண்டும் வீட்டை பார்த்துக் கொண்டே..

முகம் பளிச்சிட.. "நெஜமாவா? என்ன நினைச்சீங்க".. பார்கவி துள்ளி குதிக்காத குறை..

"அது.. என்று இழுத்தபடியே பிடரியை வருடியவன்.. "நம்ம லவ் மேட்டரை அம்மா கிட்ட எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்" என்றதும் சப்பென போனது அவளுக்கு..

"ப்ச்.. அவ்வளவுதானா".. அவள் உதட்டை சுழித்துக் கொள்ள.. "சரி நான் போனை வைக்கிறேன்" என்று.. வீட்டு வாசல் பக்கம் திரும்பியவன் ஃபோனை அணைக்க முற்பட்டான்..

ஆசையாக நான்கு வார்த்தைகள் கூட பேச முடியாமல்.. எப்பொழுதும் சுருக்கென பேசி முடிக்கும்.. மட சாம்பிராணியை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது என்று மனதுக்குள் நொந்து போனவள் "ஒரு நிமிஷம் குரு.. ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன்.. இவ்வளவு நாள் பெண்டிங்ல இருந்த மேட்டர்.. அப்ரூவ் ஆகிடுச்சு".. என்றாள் ஸ்ருதியில்லாமல் ஆரம்பித்து ஸ்வாரஸ்யமாக முடித்தவாறே..

"புரியல".. என்றான் குரு..

"அய்யோ.. எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க".. என்றதும் குருவின் விழிகள் வியப்பில் விரிந்தது..

அவள் மகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொள்ள.. "கிரேட்.. என்ன.. சடன்னா ஹாப்பி நியூஸ் கொடுக்கிறே.. எப்போ எப்படி நடந்துச்சு இது".. என்றான் உற்சாகக்குரலில்..

"அது.. என்னை வேற ஒருத்தன் பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு நம்ம லவ் மேட்டரை வீட்ல சொல்ல போறதா சொல்லி இருந்தேன்ல.. பொண்ணு பாக்குற ஈவன்ட் கேன்சல் ஆனாலும் அப்பா நம்ம லவ்வை இவ்வளவு நாள் பெண்டிங்ல தான் வச்சிருந்தாரு.. என்னவோ இன்னிக்கி கூப்பிட்டு.. குருவை நீ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு பரிபூரண சம்மதம்.. அவரை குடும்பத்தோட வந்து பேச சொல்லுன்னு சொல்லிட்டாரு".. என்று குதுகலிக்க.. கடைசி வரிகள்.. உள்ளுக்குள் புளியை கரைக்க.. "குடும்பத்தோட வந்து பேசணுமா.. ஓஹ் பேசிட்டா போச்சு".. என்றான் ஒரு மாதிரியான இழுவையுடன்..

"சீக்கிரம் பேசி அழைச்சிட்டு வாங்க குரு.. அப்பா கல்யாணத்துக்கு முகூர்த்தமே பாக்க ஆரம்பிச்சிட்டாரு.. என்னவோ அவருக்கு உங்களை ரொம்பவே பிடிச்சு போச்சு போலிருக்கு.. ரொம்ப பாஸ்ட்டா இருக்காரு".. என்றதும்.. "ஓவர் ஸ்பீட் உடம்புக்கு ஆகாது மா.. கொஞ்சம் மெதுவாவே போக சொல்லு" என்றான் குரு கேலியாக..

"நீங்க வேற நான் இன்னும் ஃபாஸ்ட்டா வேலை செய்யணும்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன்.. உங்களுக்கு கொஞ்சம் கூட நம்ம கல்யாணத்துல ஆர்வமே இல்ல குரு".. என்று சலித்தவள்.. சரி அதை விடுங்க.. புக்கையும்.. கம்யூட்டரையும் பார்த்துக்கிட்டே இருந்தா இப்படிதான் ரோபர்ட் 3.0 மாதிரி இருப்பீங்க.. நாம.. இந்த சந்தோஷத்தை செலபிரேட் பண்ண நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா".. என்றாள் எதிர்பார்ப்புடன்..

"நாளைக்கு".. என்று தாடையை தேய்த்தவாறு யோசித்தவான்.. காலேஜ் லீவுதானே? போகலாமே.. என்றதும் பார்கவிக்கு நம்பவே முடியவில்லை..

"குரு நீங்கதான் சொல்றீங்களா? நிஜமாவே போகலாமா".. என்று விழிகள் விரிய ஆச்சரியத்துடன் கேட்க.. அதன் உள்ளர்த்தத்தை உணர்ந்து கொள்ளாதவன்.. "ஹான்..நான் தான் சொல்றேன்.. போகலாம்.. ஆராவும் நாளைக்கு ஃப்ரீதான்.. வெட்டியா தான் இருப்பா.. அவளையும் அழைச்சிட்டு போகலாம்" என்று சொன்னதும்.. பொங்கிவந்த மகிழ்ச்சி தண்ணீர் ஊற்றியது போல் அமிழ்ந்து போக..

"குரு ப்ளீஸ் ஐ நீட் சம் ஸ்பேஸ்.. எனக்கு உங்க கூட கொஞ்சம் பிரைவசி வேணும்.. ஆரா வேண்டாம்.. அவளை அழைத்து வராதீங்க.. ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்கிறேன்".. என்றாள் அழுத்தமாக..

"சரி.. அவளை அழைச்சிட்டு வரல.. ஏதாவது காரணம் சொல்லி கழுதையை கழட்டி விட்டுட்டு வந்துடுறேன்".. என்றான் இயல்பாக.. பார்கவிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை..

"ஓகே குரு நான் வச்சிடுறேன்" என்று ஃபோனை அணைத்தவள்.. குருவோடு ரொமான்ஸ் கனவுகளில் மூழ்கினாள்..

அந்தப் புகழ்பெற்ற ஜவுளி கடையில் காரை நிறுத்திய தமிழுக்கு.. ஷோகேஸ் பொம்மை அணிந்திருந்த அனார்கலி மீது ஒரு கண்.. ஆராக்குட்டிக்கு இது நல்லா இருக்குமே.. என்று யோசித்தவன்.. உள்ளே சென்று அனார்கலியோடு அக்காவிற்கு ஒரு பேன்சி சில்க் சேலையும்.. நான்கு குட்டிகளுக்கும் உடைகளும் வாங்கிக் கொண்டு.. இன்னொரு பொம்மையின் சுடிதாரைக் கண்டு.. ஒரு கணம் இதழ்களில் புன்னகையோடு ரசித்தவன்.. மறுகணமே சிடுசிடுப்போடு "இந்த மாதிரி கேவலமான டிரஸ்செல்லாம் இந்த கடையில் இருக்கக்கூடாது.. அந்த துவாரகா உடம்புலதான் இருக்கனும்".. என்று துவாரகாவிற்கு பிடித்த பிங்க் நிறத்தில்.. அவளுக்கு அவலட்சணமாக இருக்கும் என்று புறத்தில் புலம்பி.. அகத்தில் ரசித்து.. அழகான உடை ஒன்றை வாங்கிக் கொண்டு.. வீடு திரும்பும் வேளையிலே.. சிக்னலில் நின்ற பொழுதினில் விழிகளை வெளிப்புறமாக மேய விட்டவனுக்கு துவாரகா யாரோ ஒரு இளைஞனுடன் ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் காபி ஷாப்பில் பேசிக் கொண்டிருந்த காட்சி கண்களில் விழவும்.. பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் "இவ யார் கிட்ட பேசிட்டு இருந்தா எனக்கென்ன வந்துச்சு".. தோள்களை குலுக்கியவன்.. சிக்னல் விழுந்ததும் காரை கிளப்பி நேராக செல்லாமல் யூ டர்ன் எடுத்து அந்த காபி ஷாப்பில் நிறுத்தியிருந்தான்..

"அப்புறம் துவாரகா.. அப்பா அம்மா.. கம்பல்ஷனுகாகதான் உங்களைப் பார்க்க வந்தேன்.. ஆனா உங்ககிட்டே பேசினபிறகு.. உங்களை ரொம்ப பிடிச்சு போச்சு.. நான் என் பேரண்ட்ஸ் கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுறேன்.. நீங்களும் உங்க வீட்ல பேசிடுங்க.. ஐ லைக் யூ வெரி மச் துவாரகா".. என்று ஆசையுடன் உரைத்தவன்.. மேஜை மீதிருந்த துவாரகாவின் கரத்தின் மேல் தன் கரம் பதிக்கும் நேரம்

"ஹாய்.. துகி".. என்று கம்பீரத் தோரணையுடன் அங்கே வந்து அமர்ந்தான் தமிழ்.. துவாரகாவின் விழிகள் கலவரத்துடன் விரிய..

"என்னடா.. லேட்டா வந்துட்டேனா.. மாமா மேல கோவமா".. என்று கொஞ்சும் விழிகளுடன்.. புன்னகை சிந்தி பேசியவனை வினோதமாக பார்த்தான் அந்த ஆடவன்..

"துவாரகா இது யாரு நீ சொல்லவே இல்லையே".. அவன் கண்கள் யோசனையாக இடுங்க..

துவாரகா வாய் திறப்பதற்கு முன் "ஐம் செந்தமிழ்ச்செல்வன்" என்று கை நீட்டவும்.. வேறு வழி இல்லாமல் "ஐம் தீபக்" என்று கைகுலுக்கினான் அவன்..

"நீங்க?".. என்று தீபன் புருவங்கள் இடுங்க கேட்கவும்.. அந்நேரம் துவாரகா மேஜை மீதிருந்த காபிக் கோப்பையை எடுத்து ஒரு மிடறு பருகப் போக.. "ஹேய்.. துகி.. எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.. பிரக்னண்டா இருக்கும்போது காபி குடிக்க கூடாதுன்னு.. மறந்துட்டியா" என்று அவள் கப்பை வாங்கி வைக்க.. துவாரகாவிற்கு திகைப்பில் விழிங்கிய காபி தொண்டைக்குழிக்குள் புரையேறி போனது..

"அச்சோ.. பாத்து.. பாத்து.. வயித்துல பாப்பா இருக்கு.. இப்படியா குடிப்பே".. என்று தலையை மெதுவாக தட்டிவிட "வாட்".. என்று அதிர்ந்தான் தீபக்..

அவன் பக்கம் அலட்சியமாக விழிகளை திருப்பியவன் "எஸ்.. ஷி இஸ் பிரகனண்ட்".. என்றான் தமிழ்.. சாதாரணமாக..

"என்ன.. துவாரகா.. வாட் த ஹெல் ஈஸ் ஹேப்பனிங் ஹியர்.. இவர் சொல்றது உண்மையா" தீவிழிகளுடன் கேட்டான் தீபக்..

துவாரகா தமிழையும் அவனையும் கண்டு திருதிருவென விழிக்க.. "அவ என்ன சொல்றது.. நான் சொல்றேன்.. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.. என் குழந்தைய அவ வயித்துல வளருது.. சீக்கிரம் மேரேஜ் பண்ணிக்க போறோம்.. உங்களுக்கு தேவையான தகவல் கிடைச்சிடுச்சா.. இப்ப நாங்க தனியா பேசணும் நீங்க இந்த இடத்தை விட்டு காலி பண்றீங்களா".. என்று தமிழ் அழுத்தம் திருத்தமாக பேசி.. விஷமப் புன்னகையுடன் அவனை பார்த்திருக்க.. அதிர்ச்சியில் கருத்த முகத்துடன்.. துவாரகாவை காரசாரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து எழ முற்பட்டான் தீபக்.. வேண்டுமென்றே அவன் கரத்தினில் கொதிக்கும் காபி கோப்பையை தட்டி விட்டான் தமிழ்..

"ஸ்ஸ்ஆஆ.. தீபக் வலியினில் துடிக்க "சாரி தெரியாம பட்டுடுச்சு.. என்று எகத்தாளப் பார்வையுடன் தமிழ் மன்னிப்பு கேட்க.. கையை உதறிக் கொண்டே தமிழை முறைத்தவன் அவன் தோற்றம் கண்டு அடக்கி வாசித்து அங்கிருந்து வெளியேறி இருந்தான்..

"கையை பிடிக்க வர்றே ராஸ்கல்?.. என்று.. அங்கிருந்து சென்றவனின் முதுகை வெறித்துக்கொண்டே பற்களை கடித்து தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன்.. துவாரகாவின் பக்கம் திரும்பி அவளை முடிந்த வரை முறைத்து விட்டு இருக்கையை விட்டு எழுந்தான்..

"பரவாயில்லையே டாக்டருக்கு என்மேல கூட கொஞ்சம் பொசசிவ்னஸ் இருக்கே.. தேடி வந்து எனக்கு வந்த ப்ரொபசலை கெடுத்து விட்டுட்டு போறாரே.. இவ்ளோ ஆசையை உள்ள வச்சுட்டு ஏன் மாமா வெளியே விரைப்பா நடிக்கிறே?.. என்று குறும்பு மிளிறும் கண்களுடன் கேட்டவளை கோபமாக முறைத்தான் தமிழ்..

"ஏய்.. யாருக்குடி உன் மேல ஆசை.. பாத்தா நல்ல பையனா தெரிகிறான் உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிட்ட மாட்டி கஷ்டப்படக் கூடாதுன்னு அவனை காப்பாத்தி விட்டுருக்கேன்.. சொல்லப்போனா இதெல்லாம் ஒரு சோசியல் சர்வீஸ்.. சரி அதைவிடு.. காலையில முழுக்க என் நெஞ்சில படுத்து கிடந்துட்டு.. இப்போ அவனைப் பார்த்து பல் இளிச்சுக்கிட்டு நிக்கிற.. பொண்ணாடி நீயெல்லாம்".. என்றான் எரிச்சலான குரலோடு..

"ஐயோ மாமா இதெல்லாம் முழுக்க முழுக்க என் அப்பாவோட வேலை.. காலேஜ் வரைக்கும் இந்த பவுடர் டப்பாவை கூட்டிட்டு வந்து.. அறிமுகப்படுத்தி வச்சு ரெஸ்டாரன்ட் போய் பேசுங்கன்னு எங்க ரெண்டு பேரையும் அனுப்பிவிட்டு அவர் கிளம்பி போயிட்டாரு.. நானே நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்குறதை பற்றி சொல்லனும்னு நெனச்சேன் அதுக்குள்ள நீங்களே"..

"என்னடி இருக்கு.. என்ன இருக்கு நமக்குள்ள.. என்று எகிறிக் கொண்டு வர.. மருண்ட விழிகளுடன் இருக்கையோடு சாய்ந்தாள் அவள்.. "அதெல்லாம் நமக்குள்ளே ஒண்ணுமில்ல".. என்றான் தமிழ்.. எங்கோ பார்த்துக் கொண்டு தெனாவட்டாக..

"ஆமா நமக்குள்ள இருபத்தி எட்டு முத்தம் மட்டும்தான் இருக்கு".. என்றாள் அவள்..

"முப்பத்தி ரெண்டு".. என்று திருத்தியவன் "அதுவும் உன்னை நினைச்சு குடுக்கல.. கீர்த்தி செட்டி கனவுல வந்தா அவளை நினைச்சு"..

"ஆனா எனக்குதானே கொடுத்தீங்க".. அவள் மூக்கை சுருக்க..

காந்த விழிகளை அவள் பக்கம் திருப்ப ஜெர்க் ஆனாள் துகி..

"நான் ஒன்னும் சுவர் ஏறி குதிச்சு உன் ரூமுக்கு வந்து உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கல.. நீயா தான் என்கிட்ட வந்தே.. வயசு கோளாறுல ஒரு பையன் எசகு பிசகா கனவு கண்டுட்டு இருக்கும் போது அவன் பக்கத்துல வந்துபடுத்தது உன் தப்பு.. இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது" என்று எகத்தாளமாக கூறியவன்.. அவள் மிச்சம் வைத்திருந்த காப்பியை மளமளவென்று குடித்துவிட்டு.. "உன் உதடு பட்டதும் இந்த காபி ரொம்ப கேவலமா போச்சு.. பேசாம புதுசா ஒரு காபி ஆர்டர் பண்ணி குடிச்சிருக்கலாம்.. காசு வேஸ்டா போகுதுன்னு வாயை கெடுத்துகிட்டேன்".. என்று இதழ்களை ஈரப்படுத்தியவாறு விழிகளால் அவள் உதடுகளை மொய்த்தவன்..

"நான் கிளம்புறேன்.. வீட்ல ட்ராப் பண்ணுங்க.. தெருவுல இறக்கி விடுங்கன்னு என் கார்ல வந்து உட்கார்ந்தா அப்புறம் நடக்கிறதே வேற.. என்னோட வருங்கால மனைவி இங்கதான் எங்கேயாவது சுத்திக்கிட்டு இருப்பா.. உன்னோட ஜோடியா பார்த்தா என் எதிர்காலம் பிரச்சனையா போயிடும்".. என்றவன் அங்கிருந்து எழுந்து சென்று விட.. புயல் அடித்து ஓய்ந்த ஃபீல்..

"அப்பப்பா.. சரியான மிர்ச்சி.. என்ன காரம்".. தலையை உலுக்கியவள்.. "ஆனாலும் இது வேறு மாதிரியான டேஸ்ட்".. என்று நாக்கை ரசித்து சுழட்டியவள் "கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆகணும்.. வேற வழி இல்ல துகி".. என்று பெருமூச்சு விட்டாள்..

தமிழ்ச்செல்வன் காரை எடுக்கும் முன் துவாரகா ஓடி சென்று அவன் காருக்குள் ஏறி அமர்ந்து கொள்ள .. மின்னல் போன்று ஒரு புன்னகை அவன் இதழ்களில் தோன்றி சட்டென்று மறைந்து போனது..

"என்னோட ஃபோனை எங்க வச்சேன்" என்று.. தன்னை சுற்றி அலைபேசியை தேடியவன்.. எக்கி பின் சீட்டிலிருந்து போனை எடுக்க.. அவன் இதழ்கள் பட்டுப் படாமல் துவாரகாவின் கன்னத்தை உரசி சென்றன..

"இப்போ யாரை நினைச்சு முத்தம் கொடுத்தீங்க" அவள் பட்டென்று கேட்டு விட.. சட்டென அவள் பக்கம் திரும்பி தேகத்தை குறுகுறுக்க வைத்த அந்த விழிகளும் .. மீசைக்குள் ஒளிந்து குவிந்திருந்த அந்த இதழும்.. குறும்போடு சேர்த்து காதலையும் அப்பட்டமாக பிரதிபலிக்க.. அவளுக்கோ அடிவயிற்றில் ஏதோ சொல்லோன்னா உணர்வு.. மருத்துவனின் பார்வையை சமாளிக்க இயலாது மூச்சுத் திணறி போனாள் துவாரகா..

"என்ன கேட்டே".. என்று புருவங்ஙளை உயர்த்தி கேட்டவாறு மெல்ல நெருங்கியவன்..

"அது.. இப்போ".. என்று அவள் வார்த்தைகள் தடுமாறுவதை சுவாரசியத்துடன் ரசித்து இதழுக்குள் சிரித்துக் கொண்டே.. துப்பட்டாவை தாண்டி கழுத்து வளைவினில் அழுத்தமாக இதழ் பதித்து.. அவள் விழிகள் மூடும் வேளையில் புன்னகைத்து.. கார் கதவை சரியாக சாத்திவிட்டு வேகமாக விலகினான்..

"கார் டோரை சரியா லாக் பண்ண தெரியல.. ஆனா இந்த கேள்வி கேட்கிறதுல ஒன்னும் குறைச்சலே இல்லை".. மீண்டும் சிடுசிடு டாக்டர் அவதாரம்..

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே!!"

"ஹான்.. இப்போ எப்படி ஆக்சிடென்ட்டலா கிஸ் பண்ணினேனோ.. அதே மாதிரி அப்போவும் ஃபோன் எடுக்கும்போது எதிர்பாராத விதமா கிஸ் பண்ணிட்டேன்.. அதை கிஸ் ன்னு சொல்ல முடியாது.. என்னோட லிப்ஸ் அங்கே தெரியாம பட்டுடுச்சு".. என்றான் இயல்பாக..

"தெரியாம?".. அவள் முறைத்தாள்..

"ஹ்ம்ம்?.. உன்னை ஆசைப்பட்டு கிஸ் பண்ண எனக்கென்ன பைத்தியமா.. உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல.. எனக்கானவ எங்கேயோ பிறந்திருக்கா.. அவளை நினைச்சிக்கிட்டே வண்டி ஓட்டும் போது அப்படியே மிஸ் ஆகி"..

"கிஸ் பண்ணிட்டீங்களாக்கும்".. துவாரகா நக்கலாக கேட்க..

"மறுபடி மறுபடி அதை கிஸ்ன்னு சொல்லாதே.. என்னோட லிப் தெரியாம ஸ்லிப் ஆகிடுச்சு.. திஸ் இஸ் நாட் கிஸ்.. திஸ் இஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்".. என்று புதுப் பெயர் சூட்டவும்.. "சரிதான்".. என்று ஒரு மார்க்கமாக தலையாட்டி ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள் அவள்..

வீட்டின் தெருமுனையை அடைவதற்கு முன் பத்து இருபது முறை இனிய விபத்துகள் நடந்து முடிந்திருக்க..

"அய்யோ.. இந்த வாயை வச்சுக்கிட்டு பரோட்டா எப்படி தின்னுவேன்".. தன் உதட்டை பாவமாக இழுத்து பார்த்துக் கொண்டே.. இறங்கினாள் அவள்..

"ஹேய் சீக்கிரம் இறங்கு.. எனக்கு நேரமாச்சு".. என்று கொதிக்கும் தண்ணீரை ரோட்டில் வீசியது போல் எரிந்து விழுந்தவன் கலைந்திருந்த கேசத்தை இருக்கைகளால் கோதிக் கொண்டு உதட்டை தொட்டு பார்த்தான்.. "ஓஹ்.. அவளோடது".. என்று குருதித் துளிகளை துடைத்துக் கொண்டவன் முப்பத்தி ஏழு.. என்று எண்ணிக்கையுடன் காரைக் கிளப்பினான்..

நடந்து சென்றவளோ தன்னை கடந்து சென்ற காரை பார்த்துக் கொண்டே நாப்பது என்றாள் வெட்கத்துடன்..

கணக்கு இடிக்குதே!!!.. டாக்டர் மூணு கள்ளக்கணக்குல மறைச்சிட்டானோ?..

தொடரும்..
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
34

போலி டாக்டர் செஞ்சாலும் செய்வான் பொசுக்கு பொசுக்குன்னு உம்மா கொடுத்துட்டு என்னமா நடிக்கிறான் பாரு பிராடு பைய 😁😁😁
அம்மாடி பார்கவி உன்னோட கலர் கனவுல ஒரு லோடு மண்ணு அள்ளி போட 🤣🤣🤣
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
May 3, 2025
Messages
30
தமிழு நீ என்ன design டா...
12B movie மாதிரி bus ஏறினா oru story இறக்குன ஒரு story மாரி நீ பண்ரடா🙏🙏...வேணும் ஒரு பக்கம் வேண்டாம் ஒரு பக்கம்....but accidental kisses count எகிறிடே போகுதே 😅...
இது பாண்டியன் ku சொல்லனும் first😝...

நல்லா கனவு காணு பார்கவி நீ.. ஒன்னு நடக்காது...
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
31
தமிழ் இதெல்லாம் ஓவர்டா. தெரியாம லிப்ஸ் அங்கங்க பட்டுருச்சு. இருக்கு ஆனா இல்லை இந்த ரேஞ்சுல பில்டப் கொடுக்குற. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ 🤣🤣🤣🤣🤣🤣

டாக்டரே கணக்குல வீக்கா, இல்லை தப்புதப்பா சொல்லுறீங்களே. தமிழ் என்ன டிசைனோ நீ. துகியை படுத்தி எடுக்கிற. 🤔🤔🤔🤔🤔🤔

இங்க ஒருத்தி பாரதி கவி கலர் கனவு வேற கண்டுட்டு இருக்கா. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top