• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 14

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
"ஓய்.. துகி.. இந்தாடி என் அண்ணன் வாங்கிட்டு வந்த சைஸ் சரியில்லாத டிரஸ்.. எங்க வீட்ல இந்த சைஸ்ல பொண்ணுங்க இல்லையே!! அதனால நீயே வச்சுக்கோ".. என்று துகியின் அறைக்குள் நுழைந்த ஆரா.. தமிழ் வாங்கி வந்த சுடிதாரை அவளிடம் கொடுக்க..

புருவம் சுருங்க அதை வாங்கி பிரித்து பார்த்தவளோ.. அடுத்த கணமே கண்கள் விரிய பரவசத்துடன் "வாவ் மை ஃபேவரிட் கலர்.. செமையா இருக்கே".. என்று தன் மீது வைத்து கண்ணாடியில் தன்னை ரசித்து பார்த்தாள்..

"அதெப்படி துகி.. எங்கண்ணன்.. எனக்கு வாங்கிட்டு வர டிரஸ்ல ஒண்ணு எனக்கு கரெக்ட்டா இருக்கு இன்னொன்னு.. எக்ஸ்ட்ரா ஸ்மால் சைஸ் ல இருக்கு.. அதுவும் சைஸ் சரியா வாங்காத டிரஸ் எல்லாம் உன்னோட ஃபேவரட் கலர்ல வேற இருக்கு".. என்ன ரகசியமோ.. புருவங்களை ஏற்றி இறக்கி கிண்டலாக கேட்க..

"என்னை கேட்டா.. சைஸ் மாத்தி வாங்கிட்டு வந்த உங்க அண்ணனை போய் கேளு".. என்றாள் துகி எதுவும் அறியாதவள் போல்.. ஆனாலும் அவள் கன்னச் சிவப்பு.. அழகிய உணர்வுகளை அம்பலப் படுத்திவிட..

"இத்தோட.. இருபத்தி ஏழு டிரஸ்.. சைஸ் மாத்தி வாங்கிட்டு வந்திருக்கான்.. ஏதோ பண்றீங்க ஒன்னும் சரியில்ல".. என்று ஆரா ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு வெளியேறினாள்..

இதழில் புன்னகை ஒளிந்து கொள்ள "போடி போடி" என்று.. கவனத்தை உடையில் பதித்து திருப்தியாக ரசித்துக் கொண்டிருந்தாள் துவாரகா..

"ஹாஹான்.. போய்ட்டேன்.. போய்ட்டேன்".. என்று வழக்கம்போல் இரவு உணவை குருவின் வீட்டில் மீனாட்சி கையினால் முடித்துக் கொண்டு சுவர் ஏறி தொம்மென வீட்டுக்குள் குதித்தவள் முன் உதயமானான் தமிழ்..

அச்சோ எங்கேயோ வெளியே போனான்.. இவ்வளவு சீக்கிரம் வந்துட்டானே என ஒரு கணம் அதிர்ந்து போனவளோ.. "எப்போடா அண்ணா வந்தே".. என்று சிரிப்புடன் கண்களை உருட்ட பார்வையால் கூர்ந்த தமிழின் பின்னால் நின்று கொண்டு ஏதோ சைகை காட்டிக் கொண்டிருந்தாள் ஆருஷி.. பாவம் ஆராவிற்கு ஒன்றுமே புரியவில்லை..

"மேடம் எங்கே போய்ட்டு வர்றீங்க".. மார்பின் குறுக்கே கைகட்டி நின்று நக்கலான தொனியில் கேட்டான் தமிழ்..

"அ.. அது.. கருவேப்பிலை தீர்ந்து போச்சு.. நான்தான் தமிழு.. நம்ம அண்ணாச்சி கடையில போய் வாங்கிட்டு வர சொன்னேன்".. ஆருஷி எடுத்துக் கொடுக்க..

தமிழின் பார்வை.. சிமெண்ட் தரையை தாண்டி செங்கல் தடுப்புக்கு அந்த பக்கமிருந்த தோட்டத்தை துழாவியது.. கொத்து கொத்தாக கருவேப்பிலை.. இருள் வேளையிலும்.. கரும்பச்சை நிறத்தில் காற்றில் அசைந்தாட.. திரும்பி அக்காளை ஒரு பார்வை பார்த்தான் அவன்..

"ஐயோ கருவேப்பிலைன்னா சொன்னேன்.. அது புள்ள சிக்கன் 65 கேட்டுச்சா.. சரின்னு.. நம்ம பாய் கடையில் கால் கிலோ கறி வாங்கிட்டு வர சொன்னேன்".. என்று மீண்டும் ஒரு பிட்டை போட..

"ஓஹோ.. ஒன்பது மணிக்கு எந்த பாய் கறி கடையை திறந்து வச்சிருக்காப்ல.. அது சரி கையில வாங்கிட்டு வந்த கறியை காணும்.. வர்ற வழியில பசியில அப்படியே பச்சையா தின்னுட்டாளோ உன் தங்கச்சி".. என்று அவள் வெறுங்கையைப் பார்த்து கிண்டலாக கேட்கவும்.. ஆரா.. கையைப் பிசைந்தபடி "அக்கா காப்பாத்து" என்று ஆருஷியை மலை போல் நம்பிக்கொண்டு நின்றிருந்தாள்..

"ஆமா பிள்ளை பச்சையா தின்னுருச்சு போல.. அம்புட்டு பசி".. என்ன ஏதென்று உணராமல் பதட்டத்தில் உளறி அதற்கும் சப்பை கட்டு கட்டினாள் ஆருஷி..

தமிழ் ஆருஷியை முறைக்க.. "அடியேய்.. அக்கா".. ஆரா பற்களை கடிக்க.. "பாய் கறி கடைக்கு இதுதான் ஷார்ட் ரூட்டா?" என்று மதில் சுவரை காட்டினான் தமிழ்..

"அடேய் இப்ப எதுக்குடா பிள்ளையை வாசலிலேயே வைச்சு என்கொயரி பண்ணிக்கிட்டு இருக்க.. பிள்ளைங்க விளையாடிட்டு இருந்தாங்க.. பந்து.. பக்கத்து வீட்ல விழுந்துடுச்சு.. நான் தான் போய் எடுத்துட்டு வர சொன்னேன்.. என்ன ஆரா வந்து கிடைச்சுதா" என்று ஆருஷி ஆராவிடம் கண்ணடித்து சத்தமாக கேட்க "இல்ல பந்து எங்கேயோ உருண்டு ஓடிச்சிருச்சு".. என்றாள் அவள் சோகமாக..

"பந்து உருண்டுச்சோ இல்லையோ ஆனா நீ நல்லாவே உருட்டுற".. என்று அக்காளை பார்த்து நக்கலாக சொன்னவனோ.. ஆராவின் பக்கம் திரும்பி.. "நான் எத்தனையோ வாட்டி வார்ன் பண்ணிட்டேன்.. இனிமே என் கை தான் பேசும் ஆரா".. என்று தமிழ் கடுமையான குரலில் எச்சரிக்க

"ஆமா இவன் அடிச்சிட்டாலும்" முணுமுணுபோடு உதட்டை சுழித்துக் கொண்டாள் ஆருஷி..

"நான் உன் மேல வச்சிருக்கற அன்புக்கும் பாசத்துக்கும் மரியாதை கொடுக்கிறதா இருந்தா.. இனிமே அந்த வீட்ல நீ அடி எடுத்து வைக்க கூடாது.. இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்". என்று தீவிரமான குரலில் அதட்டவே.. இருவருக்குமே சற்று அதிர்ச்சிதான்..

இன்று மாலை வேளையில் துவாரகாவுடன்.. தன்னிலை மறந்து எக்குத்தப்பாக நடந்து கொண்டதில் ஏற்கனவே டென்ஷன்.. இனி குடிக்கவே மாட்டேன் என்று மதுப்பிரியர்கள் செய்யும் சத்தியத்தை போல.. இனி அந்த சுண்டெலியுடன் பேசவே கூடாது ஒவ்வொரு முறையும் அவன் மனதுக்குள் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும்.. "காத்தே வரல" என்று காலையில் கதவை திறந்து வைக்கும் பொழுது.. காற்றோடு காற்றாக கற்பூரமாய் கரைந்து தான் போகின்றது..

என்னவோ அவள் எதிரில் வந்து நின்றாலே டாக்டரின் மூளை வேலை நிறுத்தம் செய்து ஹார்மோன்கள் மட்டுமே அதிவேகத்தில் செயல்படுகின்றன.. நீ பேசுற பேச்சில அவ வாயவே திறக்க கூடாது.. உன்னை திரும்பிய பார்க்க கூடாது என்று மூளை இடும் கட்டளைகளை மனம் வேறு விதமாக புரிந்து கொள்கின்றதோ என்னவோ.. ஒவ்வொரு முறையும் அவள் வாயை திறக்க முடியாத படிக்குதான் செய்து விடுகின்றான்.. ஏறிட்டு முகத்தை பார்க்க முடியாதபடிக்கு நாணம் கொள்ள செய்கின்றான்..

தவிர்க்க நினைத்து இன்னும் அதிகப்படியாக நெஞ்சின் அடி ஆழத்திற்குள் புதைத்துக் கொள்ள.. துகி என்னும் மோகினியிடமிருந்து மீண்டு வர வழி தெரியாமல்.. அவனே திணறி கொண்டிருக்கும் வேளையில் தன் மீதுள்ள கோபத்தை.. மற்றவர்களிடமும் காட்டும் பொருட்டு..

"இங்கே பாரு.. ஆரா.. அந்த வீட்டு பெரிய மனுஷன் பேசின பேச்சு இன்னமும் என் காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு.. நீ அந்த வீட்டு வாசப்படியை மிதிக்கிறது என்னை அவமானப் படுத்துற மாதிரி".. என்று அழுத்தமாக கூறவும்

"அண்ணா".. என்று அதிர்ந்தாள் ஆரா.. முகத்தில் ஒரு வித தீவிரத்துடன்.. ஆருஷியும் தம்பியின் பேச்சு வேறு கோணத்தில் பயணிப்பதை கண்டு விழிக்க.. அத்தோடு நிறுத்திக் கொண்டு உள்ளே சென்று விட்டான் அவன்..

ஆரா சோகமாக நின்று கொண்டிருக்க ஆருஷி வேகமாக வெளியே ஓடி வந்தாள்..

"என்னடி இப்படி சொல்லிட்டு போறான் இவன்".. அவள் கலக்கமாக கேட்க..

"ப்ச்.. அவன் கிடக்கிறான்.. எப்பவும் பேசுற மாடுலேஷன் வொர்க் அவுட் ஆகலைன்னு.. இன்னைக்கு வேற மாதிரி பேசிட்டு போறான்.. இது நமக்கு இல்ல.. அவனுக்கு அவனே கொடுத்துக்குற வார்னிங்".. என்றாள் ஆரா சாதாரணமாக..

"அப்படிங்கற?".. என்று ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள் ஆருஷி..

"அப்படித்தான்.. நேத்து தானே முருங்கைக்காய் சாம்பார் வெச்சே.. இன்னைக்கு என்ன.. முருங்கக்கா கார குழம்பு.. எனக்கு தான் இது பிடிக்காதுன்னு தெரியும்ல.. உன்னால தான் எகிறி குதிச்சு பக்கத்து வீட்ல போய் சாப்பிட்டு வந்தேன்..

"தமிழ் ஆசையா சாப்பிடுவான் இல்ல".. ஆருஷி தம்பி பாசத்தில் கூற..

"சரிதான்.. நீ தினமும் விதவிதமா முருங்கைக்காய் டிஷ் பண்றதுனாலதான்.. மேல ஒருத்தன் வாச கதவை திறந்து வைச்சு வழிமேல விழி வைச்சு காத்துட்டு இருக்கான்"..

"என்னடி சொல்ற ஒன்னுமே புரியலையே"..

"புரிஞ்சிருந்தா இந்நேரம் நீ உன் புருஷன் வீட்டில் இருந்துருப்பியே" .. இப்படி சொல்லவும் மூக்குக்கு மேல் கோபம் வந்தது ஆருஷிக்கு

"என்னங்கடி ஆளாளுக்கு இதையே சொல்றீங்க.. விவரமே இல்லாம தான் நாலு புள்ள பெத்தேனா?..

"அதானே புரியல" என்றாள் ஆரா.. கேலியாக..

"வாய மூடுடி.. வயசு பிள்ளைங்க.. படிச்ச பிள்ளைங்க.. புதிர் போட்டு பேசிக்கிறீங்க.. ஒன்னும் புரிய மாட்டேங்குது.. அதுக்காக நான் மட்டி ஆயிடுவேனா.. என் புருஷன் கிட்ட கேட்டு பாரு நான் எம்புட்டு அறிவாளின்னு சொல்லுவாரு".. ஆருஷி பெருமை பேசிக் கொள்ள..

"சொன்னாரு சொன்னாரு" என்றாள் ஆரா ஒரு மார்க்கமாக..

"ஐயோ மறந்துட்டேன் என் புருஷன் வீடியோ கால் பண்ற நேரம்.. போன் எடுக்கலைன்னா நேர்ல வந்து நிப்பாரு.. பொண்ணா பொறந்து என்னத்த கண்டேன்.. பொறந்த வீட்ல ஒரு நாலு நாள் கூட சேர்ந்தாப்ல தங்க முடியுதா.. புடவையை பிடித்துக்கொண்டு பின்னாடியே வந்துட வேண்டியது".. என்று புலம்பிக் கொண்டே அவள் உள்ளே செல்ல..

"என்னது நாலு நாளா.. மாசக் கணக்கு போய்.. வருஷக் கணக்கா ஆகுதுடி".. வாயில் கை வைத்தாள் ஆரா..

இங்கே ஆருஷி வீடியோ காலில்.. வீரபாண்டியனை பிடிக்க.. "மெட்ராஸ் வந்துகிட்டே இருக்கேன்டி தேனு.. வந்து பேசுறேன்.. இல்ல.. உன்னை தூக்கறேன்".. என்று மீசையை முறுக்கி.. ரயிலில் இருந்து VLOG போட்டு அழைப்பை துண்டித்தான்..

இங்கே அறைக்குள் வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தமிழ்.. "இது சரிப்பட்டு வராது தமிழ்.. மனச கட்டுப்படுத்து.. அவ உனக்கு வேண்டாம்.. உன் அப்பாவை இழுத்து வச்சு பேசினவன் உன் அக்காவையும் தங்கச்சியும் அசிங்கமா பேசணுமா.. இதுக்குதான் தனியாளா இவ்வளவு கஷ்டப்பட்டியா.. அவளை மனசுலருந்து தூக்கிப் போட்டு விடு".. என்று தனக்குள் தர்க்கம் செய்து கொண்டிருக்க..

"முப்பத்தி ஏழு முத்தம் கொடுத்துட்டு.. தூக்கி போட்டுருவியா அவளை.. இது எந்த விதத்தில் நியாயம்.. அந்த பொண்ணு பாவம் இல்லையா".. என்று துவாரகாவிற்கு ஆதரவாக வக்காளத்திற்கு வாங்கியது மனசாட்சி..

"முத்தம் தானே கொடுத்தேன்.. என்ன ரேப்பா பண்ணிட்டேன்.. அதுவும் பாதி விபத்து.. மீதி முத்தக் கணக்குல சேராது.. ஆக மொத்தம் அவளுக்கு நான் முத்தமே கொடுக்கல".. என்று நழுவப் பார்த்தவன்.. எதையோ நினைத்து இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டான்..

மறப்பதெல்லாம் நடக்கும் காரியமா.. "ரொம்ப தூரம் போயிட்டே தமிழ் முடிச்சுட்டு தான் திரும்பி வரணும்".. என்று மனசாட்சி கொக்கரித்து சிரிக்க.. இடுப்பில் கைவைத்து இதழ் குவித்து ஊதியவன்..

"ரொம்ப கஷ்டம்.. சாவடிக்கிறா ராட்சசி.. அந்த லிப்ஸ் பாத்தவுடனே.. என் ஆக்ஸிடோசின் ஹார்மோன்ஸ்க்கு என்ன தான் ஆகுமோ தெரியல".. என்று சோர்வாக தொப்பென கட்டிலில் அமர..

"இஸ்க்.. இஸ்க்".. என்று எதிர் ஜன்னலில் இருந்து ஏதோ சத்தம்..

"அச்சோ போன வாரம்.. தப்பிச்சு போன தண்ணி பாம்பு மறுபடியும் வீட்டுக்குள்ள வந்துடுச்சா" என்று தமிழ் சுற்றும்முற்றும் தேட.. எதிர் ஜன்னலிலிருந்து டார்ச் லைட் மூலம் அவன் முகத்தில் வெளிச்சம் வந்து மோதியது.. கண்கள் கூச அந்தப் பக்கம் திரும்பி பார்த்தான்.. வேறு யாரு.. அவன் இம்சை அரசிதான்..

இரு கை விரல்களை ஹார்ட் ஷேப்பில் இதயத்திற்கு நேரே வைத்து அம்பு விட்டவள்.. இதழைக் குவித்து முத்தமிட.. அங்கே விட்ட அம்பு இங்கே வந்து இதயத்தில் மோதும் வரை.. சிலையாக நின்றவனோ பிறகு சுதாரித்து.. வேகமாக சென்று.. கோபத்தில் இறுகிய முகத்துடன் ஜன்னலை அடித்து சாத்தினான்.. பல நேரங்களில் இது நடக்கும் விஷயம் தான் என்றாலும்.. பன்னீர் ரோஜாவின் முகம் பியூஸ் போன பல்பாக இருண்டு போனது..

இரவு பதினோரு மணிக்கு.. சமையல் கட்டின் அலமாரி முழுக்க தேடிக் கொண்டிருந்தாள் ஆரா.. "என்னடி நடுராத்திரியில சமையல் கட்டை உருட்டிகிட்டு இருக்கே.. என்ன வேணும்.. டீ போட்டு தரட்டுமா".. என்று தலை கலைந்து உறக்க கலக்கத்துடன் வந்து நின்றாள் ஆருஷி..

"அதில்லக்கா.. ஸ்னாக்ஸ் வச்சிருந்தேன்.. காணும்.. அதான் தேடிட்டு இருக்கேன்.. நீ போ நான் தேடி எடுத்துக்கிறேன்" என்றுவிட்டு.. மீண்டும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்க..

"ஏண்டி சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள உனக்கு மறுபடி பசிக்குதா.. ராத்திரி வேளையில எண்ணெய் பலகாரம் சாப்பிடாதே ஆரா.. ஜீரணமாகாது.. அப்புறம் காலையில வயித்த வலிக்குதுன்னு என் உயிரை வாங்க வேண்டியது"... என்று ஆருஷி அதட்டல் போட்டாள்..

"ஐயோ இப்ப சாப்பிட மாட்டேன்...நைட்டு உட்கார்ந்து வெப் சீரிஸ் பார்க்க போறேன்.. அந்த நேரத்துல சாப்பிடத்தான் கேட்டேன்".. என்றவள்..

"என்ன?.. எங்கே தேடியும் காணோம்.. என்று இடுப்பில் கை வைத்து யோசிக்கவும்.. ஏதோ கண்டு கொண்டவளாக.. முகத்தில் சட்டென தோன்றிய திகைப்புடன்.. "ஆமா இன்னிக்கு என்ன தேதி".. என்று கலவரத்துடன் கேட்க..

"பனிரெண்டு".. என்றாள் ஆருஷி ஆரவாரம் இல்லாமல்...

சொல்லிவிட்டு சில கணங்கள் கழித்து இன்றைக்கு தேதி பனிரெண்டு என்பதை உணர்ந்தவள்.. சிறு திடுக்கிடலுடன் நிமிர..

"அச்சச்சோ.. இன்னிக்கு தேதி பனிரெண்டு".. இருவரும் ஒரு சேர சொல்லிக் கொண்டனர்..

வேகமாக ஓடியவர்கள்.. "ஹேய்.. அவன் எங்க இருக்கான்னு பாருடி".. ஆளுக்கு ஒரு அறையாக தேடிக் கொண்டிருந்தனர் தமிழை..

முன்பு போல் அல்லாமல் சற்று நெருக்கமாகவே அமர்ந்திருந்த வீடுகளில்.. வாசலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்த குடும்பங்கள் வேகமாக எழுந்து உள்ளே சென்றுவிட கதவுகள் படார் படாரென்று அடித்து சாத்தப் பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டன..

"அய்யோ.. இன்னிக்கு தேதி பனிரெண்டு.. வாங்க உள்ள போகலாம்" தன் வீட்டிற்கு வந்த விருந்தாளியை.. பதட்டத்தோடு உள்ளே அழைத்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டு உரிமையாளர்..

"ஏன் என்னாச்சு".. அவர் கேட்க..

"மணி பதினோன்னு".. அவருக்கு டென்ஷன் கூடியது..

"ஏன் எல்லாரும் எழுந்து வேகமா உள்ள போய் கதவை சாத்திக்கிட்டாங்க.. சின்ராசு பாடப் போறானா".. பாவம் ஒன்றுமறியா அப்பாவியாக அவர் கேள்வி கேட்க..

ரோசாப் பூ.. சின்ன ரோசாப் பூ..
என்று ஒரு குரல்..

ஹை டோன் பிஜிஎம் மியூசிக்கில் அந்த வீட்டு மனிதர் திரும்பி பார்க்க..

வேறு யாரு.. குருதான் பாடியது.. முழு போதை..

இந்த பக்கம்..

உன் பேரை சொல்லும் ரோசாப் பூ..
இது தமிழ்.. இதுவும் போதையில்..

(Bgm நீங்களே கற்பனை செய்து கொள்ளவும்.. பிளஸ் லாலாலாலா.. Too)

வீட்டு மாடியில் நின்று.. இந்தப் பக்கம் தமிழும் அந்தப் பக்கம் குருவும்.. அந்தாக்ஷரி நடத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன இரண்டு குடும்பங்களும்.. ஆரா.. ஆருஷி அவர்கள் மாடியில்.. துவாரகா.. மீனாட்சி அவர்கள் மாடியில்.. வெற்றி நைட் டியூட்டி..

தூக்கத்திலிருந்து எழுந்து கேலண்டரை பார்த்த அப்பத்தா.. "கிரஹம் புடிச்சவனுங்க.. ஆரம்பிச்சுட்டானுங்க" என்று எங்கிருந்தோ தேடி.. இரண்டு பஞ்சை காதில் வைத்துக் கொண்டு மீண்டும் படுத்துக்கொண்டது..

" ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டானுங்களோ".. எப்ப படம் ஆரம்பித்தது என்ற ரீதியில் கேட்டுக் கொண்டிருந்தாள் ஆரா..

"இல்ல.. இல்ல.. அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான்".. என்று பதில் சொல்லிவிட்டு.. துவாரகா கீழே கண்ணை பதிக்க..

"அட.. செம என்டேர்டைன்மெண்டா இருக்கும் போல இருக்கே.. உள்ள ஒரே புழுக்கம்.. நான் என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வரேன்".. அந்த ஆள் வேட்டியை தூக்கி பிடித்துக் கொண்டு வாசலிலேயே அமர்ந்து விட.. விதி யாரை விட்டது தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார் அந்த வீட்டு உரிமையாளர்..

"அசோக் இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ.. உங்க அப்பன் என்னை கேவலமா பேசி நாம ரெண்டு பேரும் பிரிஞ்ச நாள்.. மறக்கவே மாட்டேன்டா".. தமிழ் போதையில் உளற..

"நானும் மறக்க மாட்டேன்டா.. நண்பனா இருந்த நீ எதிரியா மாறின நாள்.. எங்க அப்பாவை அடிச்ச உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன்டா".. அந்தப்பக்கம் குரு..

"உன்னை அழிக்காம விட மாட்டேன்டா".. இந்தபக்கம் தமிழ்..

"ஏய்ய்"..

"ஏய்ய்ய்"..

மேலே நின்றிருந்தவர்கள் காதை குடைந்தனர்.. "எக்கோ மேல அடிக்கிற அளவுக்கு எப்படி கத்துறானுங்க ச்சை".. என்று கடுப்பானாள் ஆருஷி..

குரு: மனசெல்லாம் பந்தலிட்டு…மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்…

"என்னையா மச்சான்?".. குரல் தழுதழுத்தான் தமிழ்..

உசுருக்குள் கோயில் கட்டி…ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்…

"பாவி பைய உங்க அப்பன் வந்து எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டானே மச்சான்"..

"எங்க அப்பாவ பத்தி பேசாதடா தமிழு உனக்கு அவ்வளவு தான் மரியாதை"..

"பேசுனா என்னடா பண்ணுவ நாயே"..

மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்…உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்…

"ம்ம்.. அது.. அந்த பயம் இருக்கணும்".. என்றான் தமிழ் தள்ளாடிக் கொண்டு ..

ரோசாப் பூ.. சின்ன ரோசாப் பூ..

இந்த முறை தமிழ் ஆரம்பித்தான்..

கண்ணாடி பார்க்கையில…அங்க முன்னாடி உன் முகந்தான்…

"எனக்கும் அப்படித்தான் மச்சான்" என்று குரு அழுதான்..

"குடிகார கபோதிங்க.. மாசா மாசம் இந்த தேதியில் குடிச்சுபுட்டு நம்ம உசுர வாங்குதுங்களே!!".. தலையில் அடித்துக் கொண்டாள் மீனாட்சி..

"ஒரு மம்மி பேசுற பேச்சா இது.. போய் தவடையில நாலு போட்டு இழுத்துட்டு வராம.. இப்படி மாடியில நின்னு வேடிக்கை பாக்குறீங்களே நீங்கெல்லாம் ஒரு மதரா".. துவாரகா ஏற்றிவிட..

"நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது ஆனா சுத்தமா உரைக்கல.. ஏன்டி.. ஒவ்வொரு மாசமும் இவனுங்க பண்ற கூத்துக்கு கண்டிச்சு அடிச்சு திட்டி.. எதுவும் வேலைக்காகாம.. கடைசில நானே திருந்திட்டேன்.. இவனுங்களை கேள்வி கேக்க கூடாதுன்னு.. இதுங்க திருந்தற மாதிரி தெரியல".. கடுப்பானாள் மீனாட்சி..

கண்ணே நீ போகையில…கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்…

மேலே துவாரகாவை கை காட்டி பாடினான் தமிழ்..

நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா… ரெண்டு பேரும் கையை விரித்துக் கொண்டு ஒரு சேர பாடினர்..

"அடேய்.. என்ன வாய வெச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? நடு ராத்திரியில எதுக்குடா கழுதை மாதிரி கனைச்சுக்கிட்டு இருக்கீங்க.. வந்தேன்னா விளக்குமாறு பிஞ்சிடும்".. ராக்கமா பொறுமை இழந்து வெளியே வந்து கத்த..

ராசாத்தி..

என் ஆச ராசாத்தி..

ராசாத்தி.. ராசாத்தி.. ராசாத்தி..

என்று குருவும் தமிழும்.. ராக்கம்மாவை குறி வைத்து பாட..

"என் புருஷன் எனக்கு வைச்ச செல்லப்பேர் வச்சு பாட்டு பாடாதீங்கன்னு எத்தனை வாட்டி சொல்றது.. செருப்பு பிஞ்சு போயிரும்.. எக்கேடும் கெட்டு போங்கடா நாய்களா".. என்று அவர் உள்ளே சென்று விட்டார்..

மறுபடி ரோசாப்பூ.. லைன் கட்டியது..

"என்னடா ரோசாப்பூ ரோசாப்பூன்னு உருகுற.. உங்க அப்பன் கேவலமா பேசும் போது இந்த ரோசாப்பூவை வாடகைக்கு விட்டுருந்தியா".. தமிழ் தள்ளாட்டத்துடன் வந்து குருவின் சட்டையை பிடிக்க..

"இந்த வாயும் திமிரும்தான்டா உனக்கு ஆப்பு வைக்குது.. எங்க அப்பாவை அடிச்ச கையை உடைக்கிறேன் இருடா".. என்று அவன் மீது பாய.. இரண்டும் கட்டிப்பிடித்துக் கொண்டு உருண்டு சண்டை போட.. மேலே நின்ற கும்பல் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்ததே அன்றி பதறி ஓடி வந்து தடுக்கவில்லை..

சாலையின் ஒரு ஓரமாக புழுதியில் விழுந்து கிடந்தன இரண்டும்.. தோள் மீது கை போட்டுக் கொண்டு கால் மீது கால் போட்டு..

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. குரு..

உன் பேரை சொல்லும் ரோசாப்பூ.. தமிழ்..

நான்காவது முறையாக முழு பாடலை பாடி முடித்து.. "ஒரு காலத்துல எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் மச்சான்.. இப்படி பிரிச்சு புட்டாய்ட்டாங்களே".. என்றான் குரு விட்டதை பார்த்து..

"டேய் என்னை பழி வாங்க உன் தங்கச்சியை கட்டி வச்சிட மாட்டியே" என்றான் தமிழ்..

"சே.. சே.. என் எதிரிக்கு கூட அப்படி ஒரு நிலைமை வரக்கூடாதுன்னு நினைக்கிறவன்டா நானு.. என் நண்பனை கஷ்டப்படுத்த நினைப்பேனா"..

"ஹாஹா.. நண்பன்டா.. மீனாட்சி இன்னைக்கு மட்டன் குழம்பு வச்சுதா"..

"எப்படி கண்டு புடிச்சே"..

"கையில வாசனை வருதேடா"..

ஈஈ.. பல்லை காட்டினான் குரு..

"திரும்ப ஒரு வாட்டி பாடுவோமாடா".. இது தமிழ்..

ஹ்ம்ம்.. பாடலாம்.. ராசாத்திஇஇ.. என்று குரு ராகமிழுக்க..

"அடச்சே.. இது பாட்டி பாட்டுடா.. நம்ம பாட்டை பாடுவோம்"..

ரோசாப் பூ சின்ன ரோசாப் பூ.. இரண்டும் காலை ஆட்டிக் கொண்டு மொட்டை மாடியில் படுத்திருப்பது போன்று பாடிக்கொண்டிருக்க..

"ஐயோ என் புருஷன் வர்ற நேரம்.. சீக்கிரம் வாங்கடி" என்று மீனாட்சியோடு மற்ற மூன்று பெண்களும் ஓடி வந்து.. அந்தந்த வீட்டு பீசை தூக்கிக் கொள்ள..

"சீக்கிரம் தடயத்தை எல்லாம் அழிக்கணும்.. இல்லனா குடி போதையில கொஞ்சி குலாவினதை மனசுல வச்சுக்கிட்டு.. அடுத்த டெரரா ஒரு சண்டை போடுவானுங்க.. இவனுங்க பண்ற வேலையால.. பக்கத்து வீட்டுல சிரிச்சு பேச முடியுதா.. இல்ல.. ஒரு காபி பொடி சர்க்கரை.. கடன்தான் வாங்க முடியுதா?".. என்று பற்களை கடித்துக் கொண்டு இதுதான் சாக்கு என்று குருவின் முதுகில் மொத்திக் கொண்டே இழுத்துச் சென்றாள் மீனாட்சி.. அந்த பக்கம் "நைட்டு அந்தப் பேச்சு பேசி அறிவுரை சொல்லிட்டு அவனோட சேர்ந்து உருண்டுகிட்டு கிடக்குது பாரு எரும!!".. ஆருஷியும் தமிழை வசைப்பாடிக்கொண்டே இழுத்துச் செல்ல..

இங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும்.. என்ற எண்ணத்துடன்.. எதிர் வீட்டிற்கு வந்து இருபது நாட்களாக டேரா போட்டிருந்த விருந்தாளி அன்று இரவுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியிருந்தார்..

தொடரும்..
 
New member
Joined
May 20, 2025
Messages
8
Mugil enthana time padichalum salikadhu 🤣🤣🤣🤣🤣 avlo siripa irukum sirichu sirichu vairu matum illa vaiyum valikudhu especially inda epi aiyoooo mudiyala da samy 😂😂😂😂😂😂😂
Like Natchathira pandal mari....
 
Last edited:
Member
Joined
May 3, 2025
Messages
37
Haha அந்த பாட்டுக்கு வாய் இருந்திருந்த எவ்ளோ கதறிருக்கும்... டேய் நீங்க லவ் பண்ண ஊர எதுக்கு டா தூங்க விடாம பண்றீங்க...

ஆரா நீ நம்ம இனம்... என்ன நடந்த எங்கென்ன சோறுதா முக்கியம்...
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

அடேய் அன்பு தோழமைகளே சொந்த காரன் வீட்டுக்கு வந்த விருந்தாளிய இப்படி பாட்டு பாடியே விரட்டி விட்டீங்களே டா பாவிகளா 🤣🤣🤣
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
35
யாரவது வந்து அந்த ஏரியாவுல டேரா போட்டுட்டு சுகமா இருக்கலாம்ன்னு வந்தாங்கன்னா அவ்வளவு தான்.

பன்னிரெண்டாந் தேதி இவனுங்க பாசமழையிலையும், பாசமான பாட்டையும் கேட்டு சொல்லாம கொள்ளாம ஓடியே போயிருவாங்க. 🤣🤣🤣🤣🤣 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

சிரிச்சு சிரிச்சு முடியல.
 
Top