• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 15

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
இரவு ரோசாப்பூவுடன் டூயட் பாடி கொண்டிருந்த ஆண்கள் இவர்கள் தானா என்று சந்தேகப்படும் அளவிற்கு ஒன்றை ஒன்று முறைத்துக் கொண்டு வெறியோடு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தன காலை வேளைதனில்.. வழக்கம்போல மாமன்னன் காத்து வரலை என்ற கதவை திறந்து வைத்துக்கொண்டு படுத்து உறங்கியதெல்லாம் வேறு கதை.. அனிச்சை செயல்.. தவிர்க்க முடிவதில்லை.. முத்த கணக்கு தாறுமாறாக எகிறிப் போனதெல்லாம் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய விஷயம்..

இரண்டாம் உலகப்போரில் தப்பித்து வந்த இரு நாட்டு எதிரிகள் போல் அந்த பார்வையில் தான் எத்தனை பகை.. வழக்கம்போல சண்டைகளும்.. ஏய்.. ஏய்ய்ய்.. சத்தங்களும்.. தெருமுனை அண்ணாச்சி கடையில்.. காட்டன்.. நோ ஸ்டாக் என்று போர்டு வைக்கும் அளவிற்கு விற்று தீர்ந்து போயின.. ஆனால் ஒரு விஷயம் தான் புரியவில்லை இருவருக்கும்.. எதிர் வீட்டுக்காரர் இரண்டு வீட்டிற்கும் நடுப்புறம் நின்று.. சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார்.. அவர் கண்களில் நன்றி பெருக்கு.. மொத்த குடும்பமும் விழித்தது.. காரணம் தான் புரியவில்லை.. ரெண்டு பகையாளிகளும் சைட் அடித்துக் கொண்டு.. சாரி.. முறைத்துக் கொண்டு.. உடற்பயிற்சியை சிறப்பாக முடித்தனர்..

"குட்டி பிசாசு எட்டிப் பாக்குதா".. என்று பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தான் குரு.. "அப்படியே சத்தம் போடாம கிளம்பிடனும்".. என்று வண்டியை உருட்டிக் கொண்டே வெளியே வர..

"அடேய் குரு.. எங்கேடா கிளம்பிட்ட".. அண்டார்டிகா கண்டத்திற்கும் கேட்கும்படி கத்திக் கொண்டிருந்தாள் அவன் தாய் மீனாட்சி.. அவள் கத்திய வேகத்தில் பதறி பைக்கை கீழே போட்டு விட்டான் குரு..

"ஏம்மா.. கத்துற.. ஃபிரண்ட பாக்க போறேன்மா.. சொல்லிட்டு தானே வந்தேன்.. வாசலைத் கூட தாண்டல அதுக்குள்ள மறந்து போச்சா".. அவன் பற்களை கடித்துக் கொண்டு தன் எரிச்சலை வெளிப்படுத்த..

"மறந்துப் போச்சு டா.. அம்மாவுக்கும் வயசாகுதுல்ல.. வரும்போது ஒரு கிலோ கடலை பருப்பு வாங்கிட்டு வந்துடுறியா.. நாளைக்கு வடைக் குழம்பு வைக்கலாம்னு நினைக்கிறேன்.. ஆரா ரொம்ப நாளா கேட்டுகிட்டு கிடக்கா".. என்றதும் இன்னும் கடுப்பாகிப் போனான்..

"யம்மா.. நான் ஒரு ப்ரொபஸர் மா.. எனக்குன்னு ஊருக்குள்ளே ஒரு மரியாதை இருக்கு.. கடலை பருப்பு வாங்கிட்டு வர சொல்லுற".. என்று பைக்கை தூக்கி நிறுத்தியவாறு சலித்துக் கொண்டான்..

"ஏன் ப்ரொபசர் கடலை பருப்பு வாங்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன.. குழம்பு வச்சு கொடுத்தா ஒரு சொட்டு விடாம சட்டியை வழிச்சி நக்க தெரியுதுல.. உங்களுக்கெல்லாம் மளிகை சாமான் வாங்குறது அவ்வளவு கேவலமா போச்சா.. ஏன் தமிழும் கூட தான் டாக்டருக்கு படிச்சிருக்கான்.. காலையில அண்ணாச்சி கடையில துவரம் பருப்பு வாங்கிட்டு வரலயா?.. அவன் புள்ள.. நீயும் இருக்கியே!!".. என்று இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்க்க..

வெளியே செல்கின்ற நேரத்தில் நிறுத்தி வம்பு வளர்த்துக் கொண்டிருந்த அன்னையின் மீது ஏற்கனவே கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவனோ தமிழையும் தன்னையும் ஒப்பிட்டு குறை சொல்லியதில்.. "அம்மா அவனையும் என்னையும் ஒப்பிடாத.. அவன் வேற.. நான் வேற.. முதல்ல அவனைப் பத்தி என்கிட்டே பேசறதை நிறுத்து.. அவன் பேரைக் கூட என் காதால கேட்க விரும்பல".. என்றான் சிடுசிடுப்பாக..

"ஆமாமா.. அதான் உங்க வெறுப்பு கோபத்தையெல்லாம் நேத்து நைட்டு பார்த்தோமே.. புழுதி மனநிலை புரண்டு விளையாடிய குழந்தைங்க மாதிரி.. ரெண்டு பேரையும் பிரிச்சு இழுத்துட்டு போக நாங்க பட்ட பாடு எங்களுக்கு தானே தெரியும்".. என்று மீனாட்சி நேற்று நடந்த ரோசாப்பூ.. கதையை மனதில் வைத்துக் கொண்டு கூறவும்.. "என்னம்மா சொல்றீங்க ஒண்ணுமே புரியல".. என்று நெற்றியை சுருக்கி புரியாதவன் போல் பாவனை காட்டினான் குரு.. விட்டால் போதும் என பறக்கத் தயாராகி இருந்தவன் பேச்சுவாக்கில் ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கிக் கொண்டிருந்தான்..

"உனக்கு புரியாதுப்பா.. புரியவே புரியாது.. புரிஞ்சாலும் புரியாதவன் மாதிரி தான் நடிப்பீங்க.. நீ கெளம்பு.. நான் உங்க அப்பாவ அனுப்பி வாங்கிக்கிறேன்".. என்று உள்ளே சென்றுவிடவே.. அப்பாடா.. விட்டது தொல்லை என்று அடுத்த கணமே அசுர வேகத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றிருந்தான் குரு..

ஒரு வழியாக ஆராவின் கண்ணில் மண்ணை தூவி விட்டு.. வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவனோ சிக்னலில் நிற்க..

நானே வருவேன்.. இங்கும் அங்கும்.. நானே வருவேன்.. வருவேன்.. வருவேன்..

என்று காதோரம் இனிமையாக கேட்ட பாடலில் லயித்தவன் அதனை தொடர்ந்து வந்த "ஹாஹாஹா".. என்ற பேய் சிரிப்பில் "அம்மா பேயி" என்று ஜெர்க் ஆகி.. பின்னால் திரும்பி பார்க்க.. எதிர்பார்ப்பை வீணாக்காமல் அவன் ஃபேவரைட் குட்டிச்சாத்தான் தான் பின்சீட்டில் அமர்ந்திருந்தது..

எடுத்த முயற்சிகள் யாவும் வீணாகிப் போக தலையிலடித்துக் கொண்டவனோ.. "ஏய்.. நீ எப்போ டி வண்டியில ஏறுன".. என்றான் லேசான அதிர்ச்சியுடன்..

"எப்பவும் போலதான்".. என்று தோளைக் குலுக்கியவள்.. "ஆமா எங்கே போறே".. என்றாள் வரும்போது பெட்டி கடையிலிருந்து சில்லறைக்கு பதிலாக அண்ணாச்சி கொடுத்த ஆரஞ்சு மிட்டாயை பிரித்து வாயில் போட்டு மென்று கொண்டு..

"ப்ச்.. நான் எங்கே போனா உனக்கென்னடி.. மரியாதையா இறங்கு.. சிக்னல் விழப் போகுது".. என்றான் கடுகடுவென.. அம்மாவிடம் சண்டை போட்டதில் தன்னை மறந்து கத்தி குட்டிச் சாத்தானை எழுப்பி விட்டிருந்தான்..

அவன் எரிச்சலும் கடுமையான முகமும்.. அவளுக்கு புதிதில்லை என்பதால்.. "முடியாது இறங்க மாட்டேன்.. வீட்ல ரொம்ப போர் அடிக்குது.. அக்காவும் குழந்தைகளும் சீரியல் பாக்கறாங்க.. அண்ணா வெளிய போயிட்டான்.. நான் மட்டும் என்ன பண்றது.. எங்க போறியோ என்னையும் கூட்டிட்டு போ.. எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன் ஒரு ஓரமா அமைதியா உட்கார்ந்துக்குறேன்.. பிராமிஸ்" என்று வாக்குறுதி கொடுத்தவளை திரும்பிப் பார்த்தவனுக்கு.. ஒரு பக்கம் அவள் வந்தாலும் நன்றாக தான் இருக்கும் என்று மனம் மகுடி வாசித்தாலும் இன்னொரு புறமோ.. "அவளை அழைச்சிட்டு வராதீங்க.. நம்ம பிரைவசி ஸ்பாயில் ஆகிடும்".. என்று பார்கவி கூறியதை நினைவு கூர்ந்தவன்..

"அடியேய் புரிஞ்சுக்கோ.. நான் பார்கவியை பார்க்க.. இசிஆர்.. போறேன்.. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம் டி.. இவ்வளவு நாள் உன் கூட தானே சுத்திக்கிட்டு இருந்தேன்.. ஃபர்ஸ்ட் டைம் தனியா மீட் பண்ண போறோம்.. பிரைவசி வேண்டாமா.. உன்னை நடுவுல வச்சுக்கிட்டு நாங்க என்ன பண்ண முடியும் சொல்லு".. என்று வெளிப்படையாகவே கேட்டு விட..

முகத்தை சுருக்கி அவன் தோள் மீது சாய்ந்தவள்.. "அதுவும் சரிதான் நான் வந்து என்ன பண்ண போறேன்.. நீங்க காதல்ங்கிகிற பேர்ல பண்ற காமெடியை என்னால பாக்கவும் முடியாது.. ஆனா எனக்கும் ஈசிஆர் லாங் டிரைவ் போகணும்னு ரொம்ப நாளா ஆசை.. அப்படியே ஈசி ஆர்ல ஏதாவது ஒரு ஓரமா இறக்கி விட்டுட்டு.. நீ பார்கவியை மீட் பண்ணிட்டு வரும்போது என்னை பிக்கப் பண்ணிக்கோயேன்".. என்றாள் பூனை போல் தன் நாசியை அவன் தோளில் உரசி..

"செருப்பு பிஞ்சிடும் இறங்குடி கீழ.. உன்னை தனியா விட்டுட்டு போய் ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா.. உன் நொண்ணனுக்கு யார் பதில் சொல்றது.. முக்கியமா என் அம்மாவுக்கு யார் பதில் சொல்றது.. ஏன் எந்நேரமும்.. ஏதாவது கொரியன் சீரிஸ் வெப் சீரிஸ் பாப்பியே.. வீட்ல உட்கார்ந்து அதை பார்த்து தொலைய வேண்டியதுதானே.. எதுக்கு என் உயிரை வாங்குற".. என்று காலை நேர வெயிலின் தாக்கத்தை.. வெம்மையாக அவளிடம் வெளிப்படுத்தினான்..

"எங்கண்ணன்.. சைல்டு லாக் போட்டு விட்டு போய்ட்டான்.. எதுவுமே ஓப்பன் ஆக மாட்டேங்குது".. உதட்டை சுளித்தாள் ஆரா..

"சரி அப்ப நான் என்னோட யூசர் நேம் பாஸ்வேர்ட் தரேன்.. வீட்டுக்கு போய் உட்கார்ந்து பாரு"..

"அடப்பாவி.. இப்ப மட்டும் நான் எது பார்த்தாலும் பரவாயில்லையா.. அன்னைக்கு நார்மலா ஒரு ஷோ பார்த்ததுக்கே அந்த கத்து கத்துன.. இப்போ மட்டும் இளைய தலைமுறை நாசமா போகாதா!!"

"அது ஏற்கனவே நாசமா போய்தானே கிடக்கு.. எல்லாம் உன் மேல இருக்கிற நம்பிக்கையில தாண்டி கொடுக்கிறேன்.. அதுவுமில்லாம.. நீ என்ன படம் பார்த்தாலும் எனக்கு வாட்ச் ஹிஸ்டரியில வந்துரும்.. அதை வச்சு தெரிஞ்சுப்பேன்.. இப்ப இறங்கி தொலையேன்".. என்று கெஞ்சும் நிலைக்கு வந்து விட்டான்..

"சரி போறேன்.. ஆனா என்னை தனியா ஈசிஆர் கூட்டிட்டு போகனும்"..

"இறங்குடி".. உறுமினான்..

"யூசர் நேம் பாஸ்வேர்டு சொல்லு".. என்று கீழே இறங்கினாள்..

பச்சை விழுவதற்கு இன்னும் 14 வினாடிகளே பாக்கி இருக்க.. "யூசர்நேம்.. ஆபர்ணா.. பாஸ்வேர்ட்.. ஆரா2003" என்றான் குரு..

"ஹிஹி.. இன்னும் இந்த பாஸ்வேர்டு மாத்தலையா நீ.. பேங்க் அக்கவுண்ட்.. ஜி பே.. மெயில் ஐடி.. எல்லாத்துக்கும் ஒரே பாஸ்வேர்டு வச்சிருக்கே.. யாராவது ஹேக் பண்ணிட போறாங்க குரு".. என்று 9.. 8 குறைந்து கொண்டே வந்த வினாடிகளை சிக்னல் விழும் திரையில் கவனித்துக் கொண்டே அவனிடம் பேசிக் கொண்டு நின்றிருந்தாள்.. பக்கத்தில் வந்த டூ வீலர்வாசிகள் வேறு அவளையே பார்த்துக் கொண்டிருக்க.. சற்றே எரிச்சல் கிளம்பியது அவனுக்கு..

"இனிமே மாத்திடறேன் தாயே!!.. கிளம்பு.. சிக்னல் விழப்போகுது முதல்ல ஓரமா போய் நில்லு".. என்று அவளை விரட்டி அடித்து சாலை ஓரத்திற்கு அனுப்பி இருந்தவன் சிக்னல் விழுந்த அடுத்த வினாடியே சிட்டாக பறந்திருந்தான்.. "பார்த்து போடா.. இவ்வளவு ஸ்பீடா போகாதே" என்று ரோட்டில் நின்று கத்திக் கொண்டிருந்தாள் அவள்..

"பாப்பாஆஆ".. என்றொரு பாசத்தில் குழையும் கிராமத்துக் குரல் பின்னால் கேட்க "யாரது.. பழக்கப்பட்ட வாய்ஸ் மாதிரி தெரியுது".. என்று திரும்பிப் பார்க்க.. அங்கே வீரபாண்டியன்..

"ஹை.. நம்ம வில்லேஜ் ஹீரோ.. மாம்ஸ்.. எப்ப வந்தீங்க".. மாமனை பார்த்த குஷியில் குதூகளித்தாள் ஆரா..

"இப்பதான் பஸ்ல இருந்து இறங்கினேன்.. நீ யாரையோ பார்த்து கத்திக்கிட்டு கிடந்தியா.. அட நம்ம பாப்பா குரலாச்சேன்னு இங்கன ஓடி வந்தேன்.. வர்ற அவசரத்துல உனக்கு தின்றத்துக்கு பண்டம் ஒண்ணுமே வாங்கிட்டு வரல பாப்பா.. அம்மா வாழைத்தாரும்.. பனம்பழம் நுங்கு".. கொண்டு போக சொல்லுச்சு.. அதையும் மறந்து போட்டு வந்துட்டேன்".. என்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆராவோடு நடந்தான் வீரா..

"ஆமா.. பொண்டாட்டியை மட்டுமே நினைச்சிட்டு இருந்தா.. மத்ததெல்லாம் மறந்துதான் போகும்".. ஆரா கேலி செய்ய..

"ஆனா பொண்டாட்டிக்கு தான் என் ஞாபகமே இல்லையே".. என்று பெருமூச்சு விட்டு நொந்து கொண்டான்..

"மாமா கந்தன் கடை இட்லி சாம்பார்.. செம டேஸ்டா இருக்கும் வாங்கி கொடு மாம்ஸ்".. ஆரா அந்த நடைபாதை கடையை காட்டவும்..

"காலையிலே சாப்பிடலையா நீ.. மணி பத்தரை ஆகுது.. தங்கச்சி தம்பியை பாத்துக்குறேன்னு இங்கன வந்து உட்கார்ந்துகிட்டு உன்னைய சாப்பிட வைக்காம என்ன பண்றாளாம் அவ".. என்று மச்சினி மீது கொண்ட அக்கறையை சிறு கோபத்தின் மூலம் வெளிப்படுத்தியவனுக்கு எப்போதும் பேச்சு மனைவியை தொட்டுக் கொள்ளாமல் முடிவதே இல்லை..

பேசிக் கொண்டே கடையை வந்தடைந்திருந்தனர் இருவரும்..

"ஒரு பிளேட் இட்லி கொடுங்க.. அப்படியே மசால் வடையும்".. என்று தட்டை வாங்கி அவள் கையில் கொடுத்தவன்..

"ஏன் பாப்பா உங்க அக்காவுக்கு தான் அறிவு இல்ல.. உங்க அண்ணன் ஒரு மனசாட்சி கெட்ட பய.. நீயாவது அவளுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி விடலாம்ல".. என்று கடைக்காரரிடமிருந்து சாம்பார் கிண்ணத்தை வாங்கி அவள் தட்டில் ஊற்றினான் ..

"நான் என்ன மாம்ஸ் பண்றது.. உமக்கு விவரம் பத்தல".. என்றாள் இட்லியை சாம்பாரில் தோய்த்து வாயில் திணித்துக் கொண்டே..

"என்னது எனக்கு விவரம் பத்தலையா.. என்ன புள்ள இப்படி சொல்லிட்ட.. எம்புட்டு முயற்சி பண்றேன்.. உனக்குமா புரியல".. அப்பாவியாக விழித்து கேள்வி கேட்டான்.. நம் அழகு மஞ்சப் பை மாக்கான்..

"பின்னே என்ன மாம்ஸ்.. வான்னு கூப்பிட்டா வந்துருவாளா அவ.. கில்லி படம் பாத்ததில்லையா நீரு.. வீரபாண்டியா இருந்தா வேலைக்காகாது.. முத்துபாண்டியா மாறனும்.. மயிலே மயிலேன்னா இறகு போடாது மாமு.. புடுங்கிறனும்.. கொஞ்சம் தேங்காய் சட்னி ஊத்தூங்க".. என்று கடைக்காரரிடம் தட்டை நீட்டி வாங்கிக் கொண்டவளோ சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்..

"அதெல்லாம் மிரட்டி உருட்டி பார்த்தாச்சு.. எங்க?.. உன் அக்கா.. கருணை காட்டவே மாட்டேங்குறாளே.. நேத்து என் பங்காளி கல்யாணத்துக்கு எல்லாம் ஜோடி ஜோடியா வந்து நிற்கிறானுவ.. நான் மட்டும் தனியா போய் நின்னு எம்புட்டு விசனப்பட்டேன் தெரியுமா பாப்பா".. என்றான் சோகமாக.. ஆராவை பார்க்கும் போது கனிவும் குழந்தைத்தனமும் தானாக வந்து ஒட்டிக் கொள்ளும் வீராவிற்கு.. பெற்றது நான்கும் ஆண் பிள்ளைகள்தானே.. எப்போதும் அவள்தான் மூத்த மகள் அவனுக்கு..

"ஏன் மாம்ஸ்.. பீல் பண்றே.. வேணும்னா என்னைய கூட்டிட்டு போ".. என்று அவள் கண்சிமிட்டி சிரிக்க..

"ப்ச்.. காமெடி பண்ணாத பாப்பா.. பொண்டாட்டியோட போய் நிறைவா நின்னா தானே ஊர்காரனுங்க மதிப்பானுங்க.. இப்படியே மொட்ட பையனா.. ஊருக்கும் உங்க வூட்டுக்குமா மஞ்சப்பையை தூக்கிட்டு திரிஞ்சிட்டு இருந்தா.. மத்த வேலைகளை நான் எப்ப தான் பார்க்கிறது.. உண்மையான ஆதங்கம் அவன் பேச்சில் தெரிய..

"பொண்டாட்டி திருவிழாக்கு திருவிழா வந்து போகும்போதே நாலு புள்ள பெத்துட்டே மாம்ஸ் நீ.. இன்னும் நிரந்தரமா அங்கேயே இருந்தா ஒரு கிராமத்தை உருவாக்கிடுவ போலிருக்கே".. என்று அவன் கலக்கம் தீர்க்கும் பொருட்டு ஆரா கலகலப்பாக பேச்சை மாற்ற..

"வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடா பாப்பா".. என்று அதட்டலாக கூறினாலும் அந்த முறுக்கு மீசைக்கடியில் வெட்க புன்னகை ஒன்று உதயமானதை கண்டு கொண்ட ஆரா.. "அய்யோ என் மாமனுக்கு வெட்கமெல்லாம் வருது.. மாம்ஸ்.. நான் சொல்றது நல்லா கேட்டுக்கோ.. அகிம்சை சரிப்பட்டு வராது.. அதிரடியா இறங்கினா தான் ஜெயிக்க முடியும்.. இனி சிங்கப் பாதைதான்".. என்று அழுத்தமாக சொல்லவும்..

"அப்படியா" என்றான் வீரா.. ஏதோ புரிந்தது போல்..

"அப்படிதான்".. அவள் தலையை ஆட்ட.. அவனும் மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு திட்டத்துடன் தலையை ஆட்டினான்..

இரவு பனிரெண்டு மணிக்கு.. "ஐயோ யாராச்சும் என்னை காப்பாத்துங்களேன்.. டேய் தமிழு.. ஆரா ரெண்டு பேரும் எங்கடா போயிட்டீங்க.. வீட்டுக்குள்ள திருடன் புகுந்துட்டான்டா.. வாங்கடா வாங்கடா".. என்று ஆருஷியின் குரலில் லைட்டை போட்டுக் கொண்டு இருவரும் அக்காஆஆ.. என பதட்டத்தோடு ஓடி வர..

அங்கே.. ஆருஷியை தோளில் போட்டுக்கொண்டு.. தனது இரண்டு பிள்ளைகளை மார்பில் போட்டுக்கொண்டு.. வீட்டை விட்டு வெளியேறி ஓடிக் கொண்டிருந்தான் கடத்தல் மன்னன் வீரபாண்டியன்..

வெளியே ஓடி வந்த தமிழ்.. கபடி விளையாடுது போல் கார்னரில் நின்று வளைத்து பிடிக்க முயல.. அவனுக்கு தண்ணி காட்டிவிட்டு மறுபக்கம் ஓடிவரவும்.. அந்த அதிரடி மன்னன் யாரோ என்று நினைத்து ஐடியா கொடுத்த ஆரா வழிமறிக்க.. அடுத்த ரெண்டு மூலைகளில் அவன் இரண்டு பிள்ளைகளும் வழிமறித்து அடேய் எங்கம்மாவை விடுடா.. என்று கத்த மீண்டும் வந்த வழியே திரும்பி சென்று தோளில் துண்டை போல் கிடந்த மனைவியுடனும்.. அணைத்து பிடித்திருந்த குழந்தைகளுடனும் வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான் முகமூடி மனைவி திருடன் வீரபாண்டியன்..

தொடரும்.. 15
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
May 3, 2025
Messages
37
ஹாஹா welcome back பாண்டியா... அப்டியே தூக்கிட்டு ஓடியிரு...
இல்லனா இந்த தமிழ் பையன் விடமாட்டான்...
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

அய்யோ தடிமாடுகளா எங்க மாம்ஸ் ஐ சந்தோஷமா இருக்க விடுங்கடா 😁😁😁
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
ஐய்யோ வீரா மாம்ஸ் என்ன இப்படி ஆகிப்போச்சு. யு டர்ன் போட்டு வீட்டுக்கே ஓடி வந்துட்டீங்களே. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

உமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாய் போனதே.

அடேய் நீங்க இரண்டு பேரும் பாடுன பாட்டுல எதிர்வீட்டுக்கு வந்த இம்சை ஓடிப்போனதால தான் அவர் சாஷ்டங்கமா விழுந்துட்டார். உங்க அலம்பல்ல அவருக்கு ஒரு நன்மை. 🤣🤣🤣🤣🤣🤣
 
Top