- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான் வீரபாண்டியன்.. அவனோடு நின்றிருந்த நபர் அவன் மனைவியும் அவன் பெற்ற மக்களும் என்று நினைத்தால் அது தான் தவறு.. வழியனுப்ப வந்திருந்தது தமிழ்..
தமிழுக்கே சற்று குற்ற உணர்ச்சியாக தான் இருந்தது.. இன்று நேற்றல்ல.. ஆருஷி ஒவ்வொரு முறை இங்கு வந்து நீண்ட நாள் டேரா போடும் போதும் இந்த குற்ற குறுகுறுப்பு மனதோரம் தேங்கி தான் கிடக்கும்.. "அப்படி என்ன ஊருல உலகத்துல இல்லாத அக்கா.. ஏன் நாங்கெல்லாம் எங்க பிள்ளைகளை கட்டிக் கொடுக்கலையா.. இல்ல புகுந்த வீட்டுக்கு தான் அனுப்பலையா.. எந்த வீட்ல நடக்கும் இந்த அநியாயம்?.. இதெல்லாம் சரியே இல்ல தமிழ்.. உங்க அக்காவை இப்படி வீட்டிலேயே வச்சுக்கிட்டா.. உன்னோட மாமா இன்னொரு பொண்டாட்டியை தேடி போய்கிட்டே இருப்பாரு.. இந்த காலத்துல ஆம்பளைங்களுக்கு.. இன்னொரு பொண்ணை தேடி போக காரணமா வேணும்?.. ஆனா நீ தான் சிறப்பாக காரணம் அமைச்சு குடுக்குறியே".. என்று அக்கம்பக்கத்திலிருந்து நட்பு வட்டம் வரை அறிவுரை சொல்லாத ஆட்களே இல்லை.. அக்கா சிறப்பாக வாழ வேண்டும் என்ற ஆசை அவனுக்கு மட்டும் இல்லையா என்ன??..
மீனாட்சி உறவினர்களின் திருமணம் காதுகுத்து என்று இரண்டு நாட்கள் வெளியூர் சென்று வந்தால் கூட குருவும் துவாரகாவும்.. சூழ்நிலையை சமாளிக்க முடியாது ஆளுக்கு ஒரு மூலையில் காத்து போன பலூன் போல் சோர்ந்து கிடப்பர்.. இங்கே எல்லோரின் நிலைமையும் இதுதானே.. வீட்டில் அம்மா இல்லாமல் அணுவும் அசையாது.. துரும்பும் நகராது.. அம்மாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.. அம்மாவின் உருவம் க்ளோனிங் செய்தது போல் ஆங்காங்கே வீடு முழுக்க நிரம்பி வழிய வேண்டும்.. எங்கு பார்த்தாலும் அவள் மட்டும் தான் தெரிய வேண்டும்..
அப்படிப்பட்ட அன்னையின் மறு உருவமாக ஆருஷியை கண்டவனுக்கோ பாசத்தில் அடிக்கடி மூளை வேலை செய்ய மறுத்து விடுகிறது.. அறிவார்ந்த மருத்துவன்தான்.. அந்த வீட்டில் நல்லது கெட்டது அனைத்தையும் யோசித்து முடிவு எடுப்பவன் அவனே.. அக்காள் தன் மாமனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மற்றவர்களை விட அதிக ஆசை கொண்டவன் தான்..
ஆருஷி இரண்டாம் இரட்டையர்களை பெற்றுக் கொள்ள இங்கே வந்த போது நிச்சயமாக ஐந்து மாதத்தில் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றுதான் உறுதி எடுத்துக் கொண்டான்.. ஆனால் பிடிக்காத சில வேலைகளை நாளை நாளை என்று ஒத்தி போடுவது போல்.. நாளை அனுப்பிக் கொள்ளலாம் நாளை மறுநாள் அனுப்பி விடலாம் என்று.. நாட்களை ஒத்தி போட அது வேகமாக நகர்ந்து ஒரு வருடம் ஆகிப் போய்விட்டது.. பாவம் அவனும் என்ன செய்வான்.. எப்பேர்ப்பட்டவனுக்கும் லூசுத்தனமான வீக் பாயிண்ட் ஒன்று இருக்கும் அல்லவா.. இவனுக்கு அக்காவும் தங்கையும்தான் பலவீனம்.. பலம் அனைத்தும்..
இப்போது கூட தவறு செய்த மாணவன் போல் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு தன் முன்னே நின்ற மச்சானை கண்கள் சுருக்கி பால்வாடி பையனை பார்ப்பது போல் குறும்புடன் பார்த்தான் வீரபாண்டியன்..
"என்னாச்சு டாக்டரே.. ஏதோ சோகமா இருக்கீங்க போலிருக்கு.. அதான் நினைச்சதை சாதிச்சு புட்டியே.. அப்புறம் என்ன?.. சந்தோசமா இருக்க வேண்டியதுதானே".. அவன் இயல்பாகத்தான் கேட்டான் மனதில் ஏதும் சஞ்சலமின்றி..
"அது இல்ல மாமா.. நானும் உங்க கூட அக்காவை அனுப்பி விடலாம்ன்னு தான் நினைச்சேன்.. ஆனா இன்னும் பதினஞ்சு நாள்ல ஆராவோட பிறந்தநாள் வருது.. உங்களுக்கே தெரியுமே!!.. பிறந்தநாள் அன்னைக்கு எப்போதுமே ஆரா அக்காவை ரொம்ப தேடுவா.. அன்னைக்கு தானே எங்க அம்மாவோட இறந்த நாளும்.. அவளுக்கு அது பத்தின எந்த ஞாபகமும் வந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விட்டுட கூடாதுன்னு நாங்க ரொம்ப கவனமா இருப்போம்.. அக்காவும் இத்தனை நாள் இங்கே இருந்துட்டா.. சரி ஒரு பதினஞ்சு நாள் தானே.. கூடவே வச்சிருந்து அப்புறம் நானே கொண்டு வந்து உங்க வீட்ல விடலாம் என்று நினைச்சேன்.. மத்தபடி பிளான் பண்ணி எதுவும் பண்ணல மாமா.. சும்மா விளையாட்டுக்காக தான்".. இன்று தர்ம சங்கடமாக தயங்கி தயங்கி தன் தரப்பு விளக்கத்தை கூறியவுடன்.. தன் மச்சானின் பணிவான வார்த்தைகளை கேட்க சகிக்காமல்..
"அடேய்ய்.. ஏன்டா?.. இதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட செட் ஆகல.. பலதரம் சொல்லிட்டேன்.. எதிரும் புதிருமா என்கிட்ட முறைச்சுட்டு மல்லுக்கு நிப்பியே.. அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு.. டேய் தமிழு.. அம்மாவோட அண்ணன் பையன் ஒருத்தன் மெட்ராஸ்ல படிச்சிட்டு இருக்கான்.. போய் அவன பாத்துட்டு.. திரும்பி வர ராத்திரி ஆகிடுச்சு.. வீட்டுக்கு வந்த நேரம் திடீர்னு உன்னைய கலாட்டா பண்ணி வம்புக்கு இழுக்க தோணுச்சு.. அதான் பின் வாசல் வழியா குதிச்சு என் தேனுவை தூக்கிட்டு போனேன்.. உண்மையிலேயே அவளை கடத்திக்கிட்டு போகணும்னு நினைச்சிருந்தா புள்ள பொறந்த மூணாவது மாசமே தூக்கிட்டு போயிருப்பேன்.. அதுவுமில்லாம உங்க கிட்ட மாட்டிகிட்டு திரும்ப வீட்டுக்குள்ள வரணும்னு என்ன அவசியம்".. என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்கவும்.. தமிழ் அதை ஆமோதித்து மெலிதாக புன்னகைத்தான்.. மாமனை பற்றி அவனுக்கும் தெரியாதா என்ன.. இருவருக்கும் ஏதாவது வம்பு சண்டை போட்டு சலசலத்துக் கொண்டே இருக்க வேண்டும்.. அன்பு பாசம் எல்லாம் மனதிற்குள் மட்டும் தான்..
"நேத்து ராத்திரியே உங்க அக்கா எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிப்புட்டா.. நான்தான் ஊர்ல திருவிழா முடிச்சிட்டு பதினஞ்சு நாள் கழிச்சு திரும்ப கொண்டு வந்து விடறேன்னு சமாதானப் படுத்தி அவளை கிளம்ப சொன்னேன்.. கடைசில நீ வந்து ஓவர் ஆக்டிங் போட்டு அவ மனசை கலைச்சுபுட்ட.. சரி பரவாயில்லை பதினஞ்சு நாளதானே? அட்ஜஸ்ட் பண்ணிக்கிடறேன்.. அப்புறம் இங்க பட்டணத்துல ஏதோ.. பலூன்.. பலூனா.. அட.. அதான்டா திங்கிற பொருளு.. ஐஸ் கிரீம் கடல் பாசியெல்லாம் போட்டு தருவாகளே".. என்று வீரா புருவத்தை ஒற்றை விரலால் தேய்த்தபடி யோசிக்க..
"ஃபலூடா மாமா" என்றான் தமிழ் புன்னகையுடன்.. ஹான் அதான்.. எங்க ஊர் ஓட்டல்ல கிடைக்கவே இல்லை.. ரொம்ப ஆசைப்பட்டா.. என்னால வாங்கி கொடுக்க முடியல.. அடிக்கடி வெளியே கூட்டிட்டு போய் அவ ஆசைப்பட்டதை வாங்கி கொடு.. முந்தா நாள் கூட இடுப்பு வலின்னு சொல்லி வெசனப்பட்டா.. நாலு புள்ள பெத்து சத்து கெட்டு போச்சு.. என் கூட இருந்திருந்தா எங்கம்மை.. உளுந்தங்கஞ்சி.. ராகி களி.. முருங்கைக் கீரை அடைன்னு ஏதாவது செஞ்சு கொடுத்து.. உடம்புல சத்து பிடிக்க வச்சிருக்கும்.. இங்க வெந்த சோத்தை தவிர என்னத்த சாப்புடுதீக.. பக்கத்து வீட்டு மீனாட்சியம்மா கிட்ட சொல்லி இதெல்லாம் கொஞ்சம் செஞ்சு கொடுக்க சொல்லு.. இல்லைனா நீயும் பாப்பாவோ அம்மைக்கு போன் பண்ணி பக்குவம் எப்படின்னு கேட்டு செஞ்சி குடுங்க.. நல்லா பாத்துக்கோங்க டா.. உங்க ரெண்டு பேருக்கும் வேலை இருக்குன்னு தெரியுது.. இருந்தாலும் அவளுக்கு கூடமாட கொஞ்சம் ஒத்தாசையா இருங்க.. நாலு பிள்ளைகளை பார்த்துக்கணும் இல்ல.. மூத்தவனுங்களை ஊருக்கு தூக்கிட்டு போறேன்னு சொன்னாலும் விடமாட்டேங்கா.. தலையக்கூட சீவ மாட்டேங்குறா.. அவளுக்கு எப்பவும் மத்தவங்களை தான் பார்த்துக்கணும்.. அவளை கவனிச்சுக்கவே மாட்டா.. ஊர்ல இருந்தா நான் ஏதாவது வஞ்சிக்கிட்டே இருப்பேன்.. எனக்கு பயந்து ஓரளவு தன்னை கவனிச்சிகுவா.. இங்கன வந்து ரொம்ப கெட்டுப் போயிட்டா.. என்று அதீத அன்பு காதலின் வெளிப்பாடாக வீரபாண்டியனின் அக்கறை மிகுந்த வார்த்தைகளை சிறிய புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான் தமிழ்.. வீரபாண்டிக்கு தெரிந்து விட்டது பதினைந்து நாட்கள் என்றால் எப்படியும் ஓரிரு மாதங்கள் இழுத்தடித்து விடுவான் இந்த கேடி தமிழ் என்று..
"அவள பாத்துக்கோங்கடா" என்று நான்காம் முறையாக சொன்னவனின் விழிகள் லேசாக கலங்குவது போல் உணர்ந்த தமிழ்.. அதற்கு இடம் கொடுக்காமல்.. "மாம்ஸ்.. அவ முதல்ல என்னோட அக்கா.. அப்புறம் தான் உனக்கு பொண்டாட்டி.. உன்னைய விட அவளை நல்லாவே நாங்க பாத்துக்குவோம்".. மீண்டும் பழையபடி வம்பு வளர்க்க..
"என்னத்த.. இங்க வந்து நல்லா மெலிஞ்சு போயிட்டா.. உடுப்பெல்லாம் தொள தொளன்னு கிடக்கு.. என்னத்த பாத்துக்கறீர்ளோ.. என்ற சலித்துக் கொண்டான்.. உண்மையில் ஆருஷி கணவனின் பிரிவில் கொஞ்சம் மெலிந்து தான் போயிருந்தாள்..
மாமனும் மச்சானும் சில நேரங்களில் இப்படித்தான் மனம் விட்டு பாசத்தை பரிமாறிக் கொள்வார்கள்.. மிகக் குறைந்த நிமிடங்களே இந்த அதிசயங்கள் நிகழும்.. மீண்டும் கீரியும் பாம்பும் போல சீறி கொள்வார்கள்.. "என் மேல உனக்கு கோபமே இல்லையா மாம்சே".. சுருட்டை முடிக்கார மாமனின் மீசையை முறுக்கி விட்டு கேட்டான் தமிழ்..
"என்னடா கோபம்.. என் பொஞ்சாதி உனக்கு அம்மா மாதிரின்னா நான் உனக்கு அப்பன் இல்லையா.. உன்னையும் பாப்பாவையும் பார்த்துக்க வேண்டியது எங்க கடமை.. என் பிள்ளைகளும் சந்தோசமா இருக்கணும்.. என் பொண்டாட்டியும் சந்தோஷமா இருக்கணும்.. அதானே எனக்கு வேணும்".. என்று பெருந்தன்மையாக தமிழின் தோள்களை தட்டி கொடுக்க.. கருவிழிகள் நனைந்து விட சட்டென மாமனை அணைத்துக் கொண்டான் தமிழ்..
வீரபாண்டியன் மகிழ்ச்சியாக உணர்ந்தாலும் அதை வெளிக்காட்டு கொள்ளாமல் தனக்கே உரிய மிடுக்குடன்.. "அடேய்.. என்னடா இது.. எல்லாம் ஒரு மாதிரியா பாத்துட்டு போறானுங்க ..தள்ளி நில்லுடா.. உன்னைய கட்டிப்பிடிக்கிறதுக்காக ஊர்லருந்து ஓடோடி வந்தேன்".. என்று தமிழை விலக்கி நிற்க வைத்து.. "சட்டையை கசக்கி புட்டான்.. கிறுக்குப்பய" என்று முறைத்தபடி தன் சட்டையை நீவி விட்டுக் கொள்ள.. அவனோ கண்ணோரம் துடைத்தவாறு சிரித்துக் கொண்டான்..
"அந்நேரம்.. அய்யா.. உதவி பண்ணுங்க".. என்று ஒரு யாசகர் வந்து அருகே நிற்கவும்.. தன் சட்டை பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் எடுத்து அவர் தட்டில் போட்ட வீரபாண்டி.. "அய்யாவுக்கு எந்த ஊரு" என்றான் இயல்பாக பின் கை கட்டி.. வீரபாண்டியன் அப்படித்தான்.. எங்கு போனாலும் எல்லா மனிதர்களிடமும் இயல்பாக பழக ஆரம்பித்து விடுவான்..
"எனக்கு செவலைப் பட்டி.". அந்த முதியவர் கூறவே "அப்படியா.. நானு பூந்தளிர் கிராமம்.. இங்கே என்ன பண்றீரு".. என்று பேச்சு வளர்க்க சாதாரணமாக விசாரிக்க ஆரம்பித்தான்..
"அது.. மழையில்ல.. பயிறு விளையல.. வாங்கின லோனை கட்ட முடியல.. நிலத்தையெல்லாம் பேங்க்காரங்க ஜப்தி பண்ணிட்டாங்க.. பிழைக்க வழி இல்ல.. புள்ளைங்க அடிச்சு விரட்டிட்டாங்க.. வேற என்ன பண்றது.. பிறந்து வளர்ந்து ராஜா மாதிரி வாழ்ந்த ஊர்ல பிச்சை எடுக்க முடியாதே.. அதான் கண்ணுக்கு தெரியாம இங்க வந்து.. ஒருவேளை சோத்துக்கு அல்லாடிகிட்டு கிடக்கோம்".. சொல்லும்போதே அழுதுவிட்டார் அவர்.. வீரபாண்டி.. தமிழுக்கும் கூட நெஞ்சம் கனத்து போனது..
"எதுக்கு சோத்துக்கு தின்றாடனும்.. என் கூட வந்துருங்க.. எங்க ஊரு விவசாய பூமி தான்.. உங்களுக்கு ஏதாவது வேலை போட்டு தரேன்.. அங்கன வந்து பொழைச்சுக்கிடுங்க".. என்றதும்.. முன்பின் பழக்கம் இல்லாதவனின் தாராள மனதில் நெகிழ்ந்துதான் போனார் அவர்.. உழைத்து உரமேறிய உடம்பு.. இங்கே வந்து பிச்சையெடுக்க விருப்பம் இல்லாமல் கூனி குறுகி தான் போயிருந்தார்.. ஆனாலும் திடீரென ஒருவன் வந்து என்னோடு வாருங்கள் வேலை தருகிறேன் என்று அழைத்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
"மன்னிச்சுக்கிடுங்க தம்பி.. என்னோட சேர்ந்து ஒரு ஆறு பேர் இருக்காங்க.. எல்லாரும் வேற வேற ஊர்ல இருந்து பொழப்பை தேடி வந்தவங்க.. அவங்களை விட்டுட்டு நான் மட்டும் வந்தா நல்லா இருக்காதுங்களே.. அவங்களுக்கு துணையா நானும் இங்கேயே இருந்துக்கிடறேன்.. தம்பி என்னைய தப்பா நினைச்சுக்க கூடாது" என்றார் தன்மையாக..
சில வினாடிகள் விழிகளை தாழ்த்தி பிடரியை வருடியவாறு யோசித்துக்கொண்டிருந்த வீரபாண்டியன்.. "இப்போ அவங்க எங்கே?".. என்று அந்தப் பெரியவரிடம் கேட்க ரோட்டின் எதிர் முனையில் கை காட்டினார் அவர்.. "வாங்க போவோம்" என்று அவரை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான் வீரபாண்டியன்.. தமிழும் உடன் சென்றான்..
அத்தனை பேருக்கும் வேலை தருவதாக கூறி பேருந்து நிலையத்துக்கு அழைத்து வந்திருந்தான் வீரபாண்டியன்.. நிலங்களை இழந்து விவசாயத்தை கைவிட்ட நிலையில்.. உயிரற்ற ஜடமாக.. வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்கள்.. மீண்டும் கௌரவமாக வேலை செய்யப் போகிறோம் கிராமத்து மண்ணில் அடியெடுத்து வைக்கப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியில்.. அவனுடன் கிளம்பியிருந்தனர்.. அத்தனை பேரின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அதற்கு காரணமானவன் சாதாரணமான முகத்துடன் தன் பாக்கெட்டை துழாவுவதில் விழித்தான்..
"தமிழு.. அத்தனை பேரையும் ஊருக்கு கூட்டிட்டு போக டிக்கெட்டுக்கும் வழியில் ஏதாவது வாங்கி கொடுக்க சாப்பாட்டுக்கும் பணம் போதுமா தெரியல.. நீ ஏதாவது வச்சிருக்கியா" என்று.. உரிமையாக அவன் பாக்கெட்டை தூழாவி பர்சை எடுத்தவனோ.. சில 500 ரூபாய் நோட்டுகளை உருவி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான் ..
பெற்ற தகப்பன் எப்படி குழந்தைகளுக்கு முதல் ஹீரோவோ.. அதே போல் தமிழின் முதல் ஹீரோ வீரபாண்டியன் தான்.. இன்று வேறு அவன் செய்த நல்ல காரியத்தில் மலையளவு உயர்ந்து போய் நிற்க.. தன்னை மீறி.. "மாமா.. ஐ லவ் யூ".. என்று பாய்ந்து வீரபாண்டியனை கட்டி அணைத்துக் கொண்டவன் கன்னத்தில் பச்சக் என்று முத்தமிட்டிருந்தான்.. அங்கிருந்தவர்கள் அனைவரும் இதைக் கண்டு சிரிக்க.. "அய்யோ.. பொசுக்கு பொசுக்குன்னு கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்து மானத்தை வாங்குறானே.. தமிழு நீ சரியே இல்லடா".. என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு மச்சானை விலக்கி விட்டவன்.. பேருந்து வரும் ஹாரன் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்துவிட்டு..
"பஸ் வந்துருச்சு... எல்லாரும் வயசானவங்க.. பஸ்ல ஏத்தி சீட்ல உட்கார வைச்சுட்டு அப்புறம் வீட்டுக்கு போ".. என்று கட்டளை இடவே.. தமிழும்.. அங்கே நின்றிருந்த வயதானவர்களை பஸ்ஸில் ஏற்றி சீட்டில் அமர வைத்து விட்டு இறங்கினான்..
படிக்கட்டில் வந்து நின்ற வீரபாண்டியன்.. பார்த்து போடா.. அடுத்த மாசம் டான்னு வந்து நிப்பேன் உங்க அக்காவ என்கூட அனுப்பல.. உன்னை விவாகரத்து பண்ணிடுவேன்.. ஜாக்கிரதை".. என்றும் மிரட்ட.. "ஹான்.. பாக்கலாம் பாக்கலாம்" என்று கையை அசைத்து டாடா காட்டினான் தமிழ்..
பஸ் புறப்படும் நேரம்.. "மாமா.. மாமா.. நீங்க எங்க இருக்கீங்கஅஅஅ" என்ற குரலில்.. "ஐயோ என் பொண்டாட்டி வாய்ஸ்".. பஸ் நிறுத்துங்க.. யோவ் பஸ்ஸ நிறுத்தறியா.. இல்லையா".. என்று குரல் கொடுத்து அருவாளை ஒட்டுநர் கழுத்தில் வைத்து பஸ்ஸை நிறுத்தியிருந்தான் வீர பாண்டியன்..
குறுக்கு சந்திலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தாள் ஆருஷி.. இடுப்பில் இரண்டும்.. கையில் இரண்டுமாக.. தமிழ் அவளிடம் சென்று குழந்தைகளை வாங்கிக் கொள்ள.. "நான் வர்ற வரைக்கும் வண்டியை எடுக்கப்படாது" என்று டிரைவரை மிரட்டி விட்டு ஆருஷியின் இடுப்பில் நின்ற இரண்டையும் வீரபாண்டியன் வாங்கிக் கொண்டான்..
"ஏன் புள்ள.. என்னத்துக்கு இப்படி ஓடி வர்ற.. என்கிட்ட ஏதாவது சொல்லனுமா.. போன் போட்டுருக்கலாம் இல்ல".. என்று மனைவி மூச்சு வாங்கிக் கொண்டு நிற்பதை பதட்டத்துடன் பார்த்துக்கொண்டே சிறு கோபத்துடன் உரைத்திருந்தான்..
"அது.. அதில்ல.. மாமா.. நா.. நானும்.. உங்க கூட ஊருக்கு வாரேன் என்னையும் கூட்டிட்டு போய்டுங்க".. என்றாள் மூச்சுக்களுக்கு இடையே துண்டு துண்டான வார்த்தைகளுடன்..
இன்ப அதிர்ச்சியை இன்னொரு முறை காதில் வாங்க விரும்பிய வீரபாண்டியன் "என்னது நெசமாத்தான் சொல்றியா.. ஊருக்கு வர போறியா என் கூட.. அட கிறுக்கி.. இதை வீட்டிலேயே சொல்லி இருந்தா.. அலுங்காம குலுங்காம கூட்டிட்டு வந்திருப்பேன்ல.. எப்படி மூச்சு வாங்க ஓடி வந்திருக்க பாரு?.. செருப்பு கூட போடல மட்டி.. இந்தா என் செருப்பை போடு".. என்று வீரபாண்டியன் செருப்பை கழட்ட.. அதற்குள் தமிழ் தனது செருப்பை கழட்டி கீழே குனிந்து அவள் கால்களில் அணிவித்திருந்தான்..
"நிஜமாவே இந்த ஆள் கூட போக போறியா".. வெளிப்படையாகவே கேட்டான் தமிழ்..
"ஆமாண்டா.. இப்ப என் புருஷன் கூட போறது தான் சரின்னு படுது.. ஆரா பிறந்த நாளைக்கு வேணும்னா திரும்பி வாரேன்.. என்னை தடுக்காதடா தமிழ்.. ஊருக்கு போக பேக் பண்ணி வைச்ச துணிமணி ஒண்ணும் கொண்டு வரல.. நாலு பிள்ளைகளை கூட்டிட்டு வர்றதுக்கே போதும் போதும்னு ஆகி போச்சு".. அவசர அவசரமாக பேசியவளை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி இருக்கையில் அமர வைத்தான் வீர பாண்டி..
"பார்த்து போயிட்டு வாக்கா.. போய் போன் போடு.. ஒழுங்கா சாப்பிடு.. சரியான நேரத்துக்கு தூங்கு.. பிள்ளைகளை பாத்துக்கோ.. மாமன அப்பப்ப கண்காணி.. பூரிக்கட்டைய பக்கத்திலேயே வச்சுக்கோ".. என்று ஆருஷியின் இருக்கைக்கு.. முன் இருக்கையில் அமர்ந்து அரை மணி நேரம் அன்பு மழை பொழிந்து கொண்டிருந்தவனை கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தான் வீரபாண்டியன்..
"சார்.. பஸ் எடுக்கணும்.. சார் நைட் எட்டு மணிக்கெல்லாம் ஊருக்கு போய் சேரனும்.. கொஞ்சம் தயவு காட்டுங்க சார்.. இரண்டு ஹல்க் வீரர்களின் உடற்கட்டையும் வீரபாண்டியனின் மீசையையும்.. சற்றுமுன்னே அருவாள் வைத்து மிரட்டியதையும் கண்டு நடத்துனர் ஓட்டுனரும் பம்மிக்கொண்டே பேச..
"ஹான்.. சரி.. சரி.. அக்கா போனா போன இடம்னு அங்கேயே தங்கிடாத .. சீக்கிரம் வந்துடு.. உன்னைய விட்டா யாரு இருக்கா எனக்கு.. உன்னை மாதிரி யாராச்சும் அயிரை மீன் குழம்பு வைக்க முடியுமா.. இல்ல பாசம் காட்ட தான் முடியுமா.. அதுக்காக உன்னை எங்க கூடவே தங்க வச்சுக்க முடியுமா.. அதுக்கு இந்த கொடுமைக்காரன் மாமா தான் விட்ருமா.. நீ போய் தானே ஆகணும்.. சரி.. போ.. பரவாயில்ல".. கண்களை துடைத்துக் கொண்டு நின்றவனை கண்டு உருகி.. "தம்பி".. என்று ஆருஷி எழுந்து நிற்க..
"கொரோனா வந்த காலத்தில எனக்கு ஐஞ்சு வயசு" என்று தமிழ் ஆரம்பிக்க.. வேகமாக அவனை பிடித்து கீழே தள்ளி விட்டான் வீரபாண்டியன்..
"வண்டியை எடுங்க" என்று நாக்கை சுழட்டி அவனே விசிலடிக்க.. விட்டால் போதும் என்று பேருந்தை கிளப்பியிருந்தார் ஓட்டுநர்..
"அப்போதும் ஊர் தாண்டும் வரையிலாவது நான் பேருந்தில் அக்காவோடு வருவேன்" என்று அடம்பிடித்து ஃபுட் போர்டில் ஏறத் துடித்த தமிழை.. இரண்டு வழிகளிலும் உள்ளே நுழைய விடாமல்.. போதிதர்மர் போல் கைகளை சுழற்றி களரி வித்தையை பயன்படுத்தி.. தடுத்து நிறுத்தினான் வீரபாண்டியன்.. எப்படியோ ஒரு சோம்பியை தடுத்து நிறுத்தியாயிற்று என்று பெருமூச்சு விடுவதற்குள்..
"நிறுத்துங்க.. நிறுத்துங்க" என்று பஸ்ஸின் முன்னால் வந்து விழுந்தது ஒரு குரல்.. "யாரு?" என்று எல்லோரும் எட்டிப் பார்க்கும் வேளையில்.. மீனாட்சி வேர்த்து விறுவிறுத்து ஓடி வந்து கொண்டிருந்தாள்.. பாவம் அவ்வளவு தூரத்திலிருந்து ஓட்டமும் நடையுமாக.. வந்திருப்பாள் போலிருக்கிறது ஏகத்துக்கும் மூச்சிறைத்தது.. அத்தனை அன்பு கொண்ட மீனாட்சியின் உள்ளம் கண்டு கண்கள் கலங்கி போனாள் ஆருஷி..
"என்னடி சொல்லாம கொள்ளாம கிளம்பிட்ட.. சரி இதுல முறுக்கு அதிரசம் சீடை.. ரவா லட்டு எல்லாம் வச்சிருக்கேன்.. உங்க மாமியாருக்கு பிடிச்ச பச்சரிசி தட்டையும் இருக்கு.. கூட ஒரு நாலு நாள் இருந்துட்டு போகலாம் இல்ல.. பிள்ளைங்களுக்கு கூட ஒரு டிரஸ் எடுத்து தரல.. குழந்தைகளுக்கு மோதிரம் செஞ்சு போடணும்னு நினைச்சேன்.. இப்படி அவசர அவசரமா கிளம்புறியே".. மீனாட்சி ஜன்னல் வழியே பேசிக் கொண்டே கண்ணை கசக்கிட..
"என்னது".. வீரபாண்டியன் நெஞ்சை பிடித்துக் கொண்டான்..
"திரும்ப வருவேன் அத்தை.. கண்ணு கலங்காதீங்க.. சிரிச்ச முகத்தோட வழியனுப்பி வைங்க".. ஆருஷி மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொள்ள..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு .. "சரி தங்கம் பார்த்து போயிட்டு வா.. போய் போன் போடு" என்று அவள் கன்னம் வழித்து நெற்றி முட்டியவள்.. புன்னகை முகத்தோடு கையசைத்து விடை கொடுத்தாள்..
ஊர் எல்லையை கூட தாண்டவில்லை.. "பஸ் நிறுத்துங்க பஸ் நிறுத்துங்க" என்று பஸ்ஸுக்கு வெளிப்புறமாக யாரோ தட்டி தட்டி சத்தம் போட.. முடியவே முடியாது என்று ஓட்டுநர்.. வேகமேடுக்க நினைத்த வேளையில் பேருந்தின் முன் வந்து நின்றது அந்த டூ வீலர்.. பேருந்தில் இருந்தவர்கள் "இப்போ யாருடா" என எட்டிப் பார்க்க.. ட்ரிபிள்ஸ் பயணத்தில் வந்த குரு ஆரா.. துவாரகா மூவரும் வண்டியிலிந்து இறங்கினர்..
பஸ்சுக்குள் ஏறி ஆளுக்கு அரை மணி நேரம் அன்பை பொழிய.. டிரைவருக்கு நெஞ்சுவலி வராத குறை.. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா.. தலையில் கை வைத்துக் கொண்டான் வீரபாண்டியன்.. அழுது அழுது அக்காவை கட்டிப்பிடித்து உருகி கொண்டிருந்த ஆராவின் தலையில் கொட்டி வெளியே இழுத்து வந்தான் குரு.. "ஆரா.. ஆரா".. என பின்னால் இறங்கப் போன ஆருஷியை பாய்ந்து பிடித்தான் வீரா..
ஆராவை சமாதானப்படுத்துவதற்காக எதிரே இருந்த ஐஸ்கிரீம் பார்லரில் மூவரும் நுழைந்த பிறகுதான் பஸ் கிளம்பியது..
"சார்.. இனிமே யாரும் வர மாட்டாங்க தானே".. ஓட்டுனர் ஒரு திகிலுடன் கேட்க..
"இனிமே வர்றதுக்கு யார் இருக்கா தைரியமா ஓட்டுங்க".. என்று வீரபாண்டியன் ஒருகணம் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் வண்டியை எடுக்க சொன்ன வேளை..
"அக்கா.. அக்காஆஆ.. சீப்பை மறந்து வெச்சிட்டு வந்துட்டே.. ஊருக்கு போனா எப்படி தலை வாருவ.. மாமா வேற உன்னை சீவி சிங்காரிச்சுக்க சொல்லுச்சே".. என்று கத்திக் கொண்டே பைக்கில் வேகமாக வந்து கொண்டிருந்தான் தமிழ்..
வீரபாண்டியனுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை.. "மறுபடியும் முதல்ல இருந்தா!!.. ஐயோ டிரைவர் வண்டியை எடுங்க.. வேகமா போங்க".. என்று அவசர அவசரமாக உத்தரவுகளை பிறப்பிக்க.. டிரைவரோ "இதோ கிளம்பிட்டேன்".. அதைவிட வேகமாக பேருந்தை ஓட்டினார்..
"யாருங்க.. அது தம்பி குரல் மாதிரி தெரியுது".. என்று ஆருஷி எட்டி பார்க்க முயலவே..
"ஐயோ பாகிஸ்தான் தீவிரவாதி பின்னாடி துரத்திகிட்டு வரான்டி.. அதையெல்லாம் நீ பார்க்க கூடாது".. என்று அவள் கண்களை பொத்தி தன் பக்கமாக இழுத்துக் கொண்டவன்.. "மாமா மடியில படுத்துக்கோ.. நான் சொல்ற வரைக்கும் கண்ணை திறக்க கூடாது.. ஆமா".. என்று அவளை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு உஃப் என மூச்சு விட்டான்..
"அப்பா.. மாமாஆஆஆஆ".. என்று பைக்கில் விரட்டி கொண்டு வந்த தமிழை கைகாட்டிய குழந்தைகளை அணைத்து பிடித்து வாயை பொத்தினான்..
"என்ன புள்ளைங்க மாமான்னு சொல்லுது" என்று மீண்டும் பின்னால் பார்க்க முயன்றாள் ஆருஷி..
"அது.. மாமா.. இல்ல.. ஒசாமா ஒசாமா னு சொல்றாங்க.. தீவிரவாதி.. நீ திரும்பி பார்த்தா குருவி சுடறாப்ல சுட்டிருவான்.. அந்த பக்கம் திரும்பாத".. என்றதும்
"ஆத்தி அந்த பக்கம் நான் திரும்பவே மாட்டேன்" என்று ஜன்னலை மூடினாள் ஆருஷி.. டிரைவர் ஓட்டுநர் முதற்கொண்டு அத்தனை பேருக்கும் அப்போதுதான் மூச்சே வந்தது.. பாகிஸ்தான் தீவிரவாதி பஸ்ஸை கடத்தியிருந்தால் கூட இவ்வளவு கவலைப்பட்டிருப்பார்களா தெரியாது.. தமிழை கண்டதும் அலறி நடுங்கித்தான் போயினர் அத்தனை பேரும்.. ஒரு மருத்துவனுக்கு பயந்து அந்த பேருந்து அதிவேகத்தில் ஊரைவிட்டு ஓடியிருந்தது..
தொடரும்..