- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
கிட்டத்தட்ட ஒரு வருடமாக.. வீட்டில் வளைய வந்த ஆருஷி புகுந்த வீடு சென்று விட்டதில்.. அவள் பிறந்த வீடு வெறிச்சோடி போனது.. வழக்கம்போல முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு ஆளுக்கொரு திசையில் முடங்கிக் கொண்டனர் தமிழ் ஆரா.. இருவரும்..
ஊருக்கு சென்று விட்டதும்.. வந்து சேர்ந்து விட்டோம் என்று ஒரு குறுஞ்செய்தியை போட்டுவிட்டு மொபைலை சுவிட்ச் ஆப் செய்து விட்டான் வீரபாண்டியன்..
நான்கு குழந்தைகளும்.. பாரபட்சம் பாராமல் அனைவரையுமே மிரட்டி உருட்டி கொண்டிருக்கும் அக்காவும்.. அவளோடு எப்போதும் அன்பு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பியும் தங்கையுமாக.. கலகலத்துக் கொண்டிருக்கும் அந்த வீடு.. சத்தமே வராமல் அமைதியாக இருந்ததில்.. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட ஏதோ வித்தியாசமாக உணர்ந்தனர்..
நடுராத்திரி ஒரு மணி ஆனாலும் அக்கா பசிக்குது என்றால் போதும்.. முகம் சுளிக்காமல்.. எழுந்து சென்று பால் காய்ச்சி.. அல்லது காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கும் தமக்கை அவள்.. பெற்ற தாய் கூட இப்படி செய்வாளா தெரியாது..
"தலை வலிக்குதா தமிழு.. கொஞ்சம் காபி போட்டு எடுத்தாரவா.. தைலம் தேய்ச்சு விடட்டுமா.. கொஞ்ச நேரம் படுத்து தூங்கு டா.. கசாயம் கொண்டு வரவா.. தூதுவளை போட்டு ரசம் வெச்சிருக்கேன்.. மொத்த சளியும் இறங்கிடும்".. என்று பல நேரங்களில் அவனுக்கே மருத்துவராகி போவாள் ஆருஷி..
தனி ஒருவனாய் படிப்பு வேலை என்று ஓடிக் கொண்டிருந்த வேளையில் தமிழுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் கொடுத்தவள் ஆருஷி.. தைரியமா செய் தமிழ்.. பாத்துக்கலாம்.. என்று வலு கொடுப்பவள்.. அவனைப் பொறுத்தவரை சாமியறையில் படத்துக்குள் அடங்கியிருக்கும் மூன்று தேவிகளின் மொத்த உருவம் ஆருஷி..
எப்போதும் ஷிப்ட் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தால்.. "ஹேய்ய்.. மாமா".. என்று குதுகளித்து வரும் அக்கா பிள்ளைகள் இல்லை.. "இப்படியே ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுத்து கெடுக்காத டா தமிழு.. இனிப்பு சேராது டா.. பூச்சி வரும்".. அவர்கள் பின்னால் புலம்பிக்கொண்டே வரும் அக்கா...
"பரவாயில்லக்கா.. ஒண்ணும் ஆகாது.. என்னைக்காவது ஒருமுறை தானே".. என்று பிள்ளைகளை தொடாமல் குளித்துவிட்டு வந்து.. சோபாவில் அமர்ந்தால்.. களைப்பு தீர காபி ஸ்னாக்சுடன் அன்பும் அக்கறையும் சேர்ந்து கிடைக்கும் மாலைப் பொழுதுகள்..
ஆராவும் சேர்ந்து கொள்ள அரட்டைக் கச்சேரி விளையாட்டு.. சீரியல் என வீடே களை கட்டும்.. இப்போதும் வேலை முடிந்து மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தால்.. ஆரா காப்பி போட்டு தருகிறாள்.. அருகே அமர்ந்து பேசுகிறாள்.. ஆனால் அக்கா இல்லாமல்??..
"என்ன தமிழு.. இன்னிக்கு ரொம்ப வேலையோ.. சோர்வா தெரியற".. என்றவள் குரலும் தலைகோதும் விரல்களும் இல்லாமல் சோர்ந்து போகிறான் தமிழ்..
திருமணம் செய்து கொடுத்து இங்கேயே வைத்திருக்க முடியுமா.. நிதர்சனம் இதுதானே.. என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஆராவிற்கு உண்டு.. அதனால் அவள் எந்த சோகத்தையும் பெரிதாக வெளிக் காட்டுவதில்லை.. தமிழும் அப்படிதான்.. அளவு கடந்த பாசம் தான்.. பிரிவை ஏற்றுக் கொள்ளாமல் அவனையும் மீறி சோகத்தை தட்டி எழுப்புகின்றது..
ஆராவும் தமிழும் டிவி பார்ப்பதும்.. ஏதோ சமைத்து பேருக்கு உண்பதுமாக நாட்களை இழுத்துப் பிடித்து வெளியே தள்ளினர்..
காலையில் தமிழை சீண்டி வம்பிழுக்க வந்த துவாரகாவை இழுத்து அணைத்து நெஞ்சில் புதைந்து கொண்டான் தமிழ்..
"தமிழ் மாமா.. என்னை விடுங்க.. அச்சச்சோ சூரியன் மேல வரப்போகுது.. எங்க அப்பா பார்த்தாரு.. அம்புட்டுதான்.. தொலைஞ்சேன்".. என்று அவள் விலக முற்பட இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான் அவன்.. நெருக்கத்தில் அவன் தகிக்கும் மூச்சுக் காற்றை உணர்ந்தவளுக்கோ நெஞ்சத்தில் சிறு அச்சம் எழ..
டாக்டரே.. உடைஞ்சு போன எலும்பை ஒட்ட வைக்க படிச்சு இருக்கீங்களா.. இல்ல இருக்கிற எலும்பை உடைக்க படிச்சிருக்கீங்களா.. வலிக்குது விடுங்க".. அவள் திமிறினாள்..
"கொஞ்ச நேரம் அப்படியே இரு தனுஷ்கா".. என்றவனோ விட்டால் ஒரு வயது குழந்தை போல அவள் மீது ஏறிப் படுத்துக் கொள்ளும் துடிப்புடன்.. நெருங்கி வந்தவனின் கைச் சிறைக்குள் நெளிந்தவளால் மூச்சு கூட விட முடியவில்லை.. தனுஷ்கா என்று வேறொரு பெண்ணின் பெயரை வேடிக்கையாக சொன்னாலும்.. மனதில் பரவிக் கிடந்த வெறுமையை தீர்க்கும் பொருட்டு தன்னிடம் வடிகால் தேடுகிறான் என்று உணர்ந்து கொண்டவள்.. விலக முயற்சிப்பதை விட்டுவிட்டு.. மூடியிருந்த விழிகளில் முத்தமிட்டு.. மென்மையாக அவன் கேசத்தை வருடி கொடுத்தாள்.. இதுதான் வேண்டும் என்பது போல் உறங்கும் குழந்தையாய் புன்னகைத்தான் தமிழ்..
உடன் பிறந்தவளை தாயை விட.. உயர்ந்தவளாக போற்றும் இந்த அன்பும் பாசமும்தான் துவாரகா தமிழின் மீது அதீத காதல் கொள்வதற்கான காரணம்.. மணி ஐந்தரையை தொட்டிருக்க.. "அய்யோ.. அண்ணா எக்சர்சைஸ் பண்ண வந்துருவானே".. என்று.. தமிழை கண்ட இடத்தில் கிள்ளி வைத்து எழ முயற்சித்தாள்..
காந்தக்கண்ணழகி.. "இதோ இங்கே கிள்ளு.. அங்கே கிள்ளு".. என்று வாகாக காட்டிக் கொண்டிருந்நவனோ.. "ப்ச்.. ஏய்.. போகாதடி".. என்று புது கணவன் உறக்கத்தில் மனைவியை தேடுவது போல் சிணுங்கி.. கைகளை காற்றில் துழாவியவனுக்கு.. சிக்கியதோ அவள் தாவணி மட்டுமே..
முந்தைய நாள்.. கோவிலுக்கு விளக்கு போட போனவள் உடையை மாற்றாமல் அதோடு சென்று படுத்து விட்டாள்.. தாவணி பாவாடை தமிழ் மச்சானுக்கு ரொம்ப பிடிக்குமே.. என்று அப்படியே விடியற் காலையில் தரிசனம் கொடுக்க வந்திருக்க.. "ஆமாம்.. ஆமாம்.. ரொம்ப பிடிக்கும்" என்று அவளது தாவணியை உருவி.. முகத்தில் போட்டுக் கொண்டு உறங்கினான் அவன்..
"அய்யயோ.. என் தாவணி.. டேய்.. மாமா.. என் தாவணியை கொடுடா".. அவள் தாவணியை இழுக்க.. அவன் அவளை இழுக்க.. மீண்டும் அவன் மீதே தொப்பென விழுந்தாள்..
சட்டென விழிகளை திறந்தான் தமிழ்..
புது சோப்பின் மீது ஒட்டிக்கொண்ட பழைய சோப்பு போல.. அவன் மீது அவள்.. மலங்க.. மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்..
"இப்போ எதுக்குடி என்மேல ஏறி அங்க பிரதட்ஷணம் பண்றே".. சிவந்து போன விழிகள்.. கோபமா.. தாபத்தின் அடையாளமா?.. இவ்வளவு நேரம் அவள் மீது உருண்டதெல்லாம் கணக்கில்லையாம்..
"நீ ஏன் மேன்.. இடுப்பை புடிச்சிட்டு இருக்கே".. அவளும் மூக்கை சுருக்கி கேள்வி கேட்க தன்னிச்சையாக அவன் விழிகளோ அந்த முணுமுணு இதழ்களில் படிந்தன..
கிராஃப் வரையும் அளவிற்கு ஏறும் முத்தக்கணக்கு.. நான்கு நாட்களாக ஒரே எண்ணிக்கையில் மெயின்டெயின் ஆகின்றது.. அக்கா ஊருக்கு போனதில் பாவம் பிள்ளைக்கு கவலை.. இரவெல்லாம் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு ஆராவோடு கதைகள் பேசி.. ஒன்றாக படம்(கார்ட்டூன் படங்கள்) பார்த்து விழித்துக் கிடப்பவன்.. துவாரகா விடியும் வேளையில் வந்து.. "மாமா.. கியூட் தமிழ் மாமா".. என்று கொஞ்சி நெருங்கும் போதுதான்.. தூக்க மாத்திரை விழுங்கியதை போல் அவளை கைவளைவில் வைத்துக் கொண்டு உறங்கவே ஆரம்பிப்பான்.. அதில் சில நாட்களாக கணக்கு மிஸ் ஆகிப் போனது.. அதற்கும் சேர்த்து இன்று இதழ்கள் வீங்கிப் போனது..
வேகமாக விலகி "போடா முரட்டுப் பயலே.. இருடா எங்கண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்று அவன் வேகம் தாங்காமல் இதழ்களை துடைத்துக் கொண்டு கோபத்துடன் தெறித்து ஓடினாள் துவாரகா..
"ஏன் அவனுக்கும் முத்தம் வேணுமா?".. என்று நக்கலாக கூறியவாறு அவள் தாவணியில் சுருண்டு கொண்டான் தமிழ்..
மூடிய கண்களுக்குள்.. தாவணியை தொலைத்த அவள் எழில் மேனி வந்து குறுக்காக நின்று இம்சிக்கவே.. இதழ்கள் தானாக விரிந்து புன்னகைத்துக் கொண்டது..
"நல்லா வளர்ந்துட்டா".. என்று வெட்கக் குறுகுறுப்பை மீசைக்குள் ஒளித்துக் கொண்டவன்.. தன் விரல்களில் முத்தமிட்டுக் கொண்டான்.. என்னாச்சோ.. என்ன பண்ணி தொலைச்சானோ கோபித்துக் கொண்டு ஓடிய துவாரகாவிற்கே வெளிச்சம்..
காலை உடற்பயிற்சியை அமைதியாக முடித்துக் கொண்டிருந்தவனை சுற்றியே குருவின் விழிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.. அக்காச்சி ஊருக்குப் போன ஒருவாரம் அழுகாச்சியாதான் இருப்பான் தம்பிப்பய.. என்று குரு அறிந்து வைத்திருந்தாலும்.. நண்பனின் வாட்டம் அவனையும் தொற்றிக் கொண்டது..
கீழே கம்பு ஊன்றி நடந்து சென்ற தாத்தா ஒருவரிடம்.. "என்ன.. தாத்தா .. உங்க அக்கா ஊருக்கு போய்ட்டாங்களா" .. என்று தமிழை பார்த்தபடியே தாத்தாவிடம் கேட்க..
"என் அக்கா ஊருக்கு இல்ல.. உலகத்தை விட்டே போயிடுச்சு.. நானே இன்னைக்கோ நாளைக்கோன்னு கிடக்கேன். என் அக்கா இன்னுமா உசிரோட இருக்கும்.. ஏண்டா வயித்தெரிச்சல கிளப்புற".. தாத்தா நடுங்கிக்கொண்டே சலித்தார்..
"அது சரி.. அக்கா தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அவங்களுக்கு புகுந்த வீடு தான் நிரந்தரம்.. அப்பப்ப பொறந்த வீட்டுக்கு வரவழைச்சு பாத்துக்கலாம்.. அதுக்காக இங்கேயே தங்க வைக்கணும்னு நினைக்க கூடாது.. பாசம் வைச்சா மட்டும் போதாது பக்குவமா யோசிக்கவும் தெரியணும்".. என்று கர்லாகட்டையை சுற்றிக் கொண்டிருந்தவனின் காதுகளில் விழும்படி.. சத்தம் போட்டு சொல்லவும் திரும்பி அவனை முறை தான் தமிழ்..
"என்னடா சொல்றே கிறுக்குப் பயலே!!.. ஒண்ணும் புரியலயே".. புருவத்தின் மேல் கையை வைத்து மாடிக்கு நிமிர்ந்து பார்த்த தாத்தா கண்களை சுருக்கி கேட்கவும்..
"முகத்தை இப்படி வச்சுக்காதீங்க பாக்க சகிக்கலன்னு சொல்றேன்.. உராங்குட்டான் மாதிரி இருக்கு.. இந்த மூஞ்சிய பாத்துட்டு போய் நான் எப்படி காலேஜ்ல கிளாஸ் எடுக்க முடியும்".. என்று.. தமிழைப் ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு கிண்டலடித்தான் குரு..
"யாரைப் பார்த்துடா உராங்குட்டான்னு சொல்ற.. நீ தாண்டா வெள்ளை பன்னி.. உனக்கு தாண்டா காண்டாமிருகம் மாதிரி அங்கங்க வீங்கி போய் கிடக்குது".. தாத்தா டென்ஷனாகி விட்டார்..
"அய்யோ. தாத்தா.. இது மசில்ஸ்".. என்று மாடியிலிருந்து தன் புஜத்தை காட்டினான் குரு..
"நீ மஜ்னுவா இருந்தா எனக்கென்ன.. அந்த காலத்துல நான் ரோமியோ.. அது எப்படி என்னை நீ குரங்குன்னு சொல்லலாம்.. வயசுக்கு மரியாதை இல்லையா!!.. போறவனை நிறுத்தி வச்சுட்டு வம்பு பண்றியா.. இருடா என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரேன்" என்று.. தாத்தா வேகமாக வீட்டுக்கு சென்றுவிட.. அப்பாவிப் பையன் குரு விழிக்க.. தமிழ் தன்னை அறியாமல் பக்கென்று சிரித்து விட்டான்..
அவன் பளீர் புன்னகை கண்டபிறகே.. "அப்பாடா.. இப்போதான் நிம்மதியா இருக்கு".. சிறு புன்னகையுடன் இடுப்பில் கை வைத்து அவனை பார்த்தவாறே குரு நீண்ட பெருமூச்சு விட்டான் குரு.. சட்டென புன்னகையை உதட்டுக்குள் மறைத்துக் கொண்டு மறுபடி உராங்குட்டான் ஆனான் தமிழ்..
"யாருடா அது.. என் புருஷனை உராங்குட்டான்னு சொன்னது".. தாத்தாவின் பாட்டி.. கொண்டையை முடிந்து கொண்டு இடுப்பில் சேலையை இழுத்து சொருகி விட்டு குரு வீட்டு வாசலில் சண்டைக்கு வந்து நிற்க..
"எவடி அவ.. என் வாசல்ல நின்னு சண்டை போடறது".. ராக்கம்ஸ் வெளியே வந்தார்.. அப்புறம் என்ன.. ஒரே சண்டை.. செம என்டர்டெயின்மென்ட்..
சொற்கள் மேல் சொற்கள் போட்டு "ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி உன் புருஷன் என் இடுப்பை பார்த்ததுக்கு.. இப்போ கம்பளைண்ட் கொடுக்க போறேன்".. ராக்கம்மாவின் மிரட்டலில் வாண்ட்ட டாக வந்து மாட்டியிருந்தார் தாத்தா..
"எதேய்.. இது எப்போ.. தாத்தா" நெஞ்சைப் பிடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க தயாராக..
"ஏன்யா.. இவ இடுப்பை பாத்தியா".. தாத்தாவின் மனைவி பொக்கை வாயோடு மொடமொடத்து அவரை முறைத்தாள்..
ஐம்பது வருடத்திற்கு முன்னே.. விடலை பருவத்தில் பாட்டி இடுப்பை பார்த்த சங்கதியெல்லாம் இன்னுமா நினைவில் வைத்திருப்பார் தாத்தா.. செலக்ட்டிவ் அம்னீசியா வந்தது போல் விழிக்க.. மீனாட்சி டிவி சீரியலை விடுத்து.. ஜன்னல் வழியை விறுவிறுப்பான விவாதத்தை எட்டிப் பார்த்துக் கொண்டே சப்பாத்தி மாவை உருட்டினார்..
"எக்ஸ்கியூஸ் மீ ஓல்ட் லேடிஸ் கொஞ்சம் ஓரமா நின்னு சண்டை போடறீங்களா".. என்று இரு வயது முதிர்ந்த மகளிரையும் தள்ளி ஓரமாக நிப்பாட்டி விட்டு.. குறுக்காக பையை மாட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகி விட்டான் சண்டைக்கு காரணமானவன்..
தமிழ் சரியாகி விட்டானா என்று கவலையுடன் ஜன்னல் வழியை எட்டிப் பார்த்தாள் துவாரகா..
கரண்டியை வைத்துக்கொண்டு ஆரா துரத்திக் கொண்டிருக்க.. எகிறி குதித்து வீடு முழுக்க ஓடிக் கொண்டிருந்தான் தமிழ்.. அவன் மகிழ்ச்சியை கண்ட பிறகே.. மனம் நிறைந்து போக.. ஜன்னல் பக்கம் சாய்ந்து இருவரது பாசப் பிணைப்பை ரசித்துக் கொண்டிருந்தாள் துவாரகா.. ஆரா ஆருஷியின் மீதான தமிழின் அன்பு எப்போதுமே துவாரகாவை மெய்சிலிர்க்க வைக்கும்.. பகுதி குறையாது தனக்கும் அதே அளவு அன்பு வேண்டும் என்று அவளை ஏங்க வைக்கும்..
அக்கா தாய் என்றால் தங்கை சேய் அல்லவா.. ஞாயிற்றுக்கிழமைகளில் சிகைக்காய் பொடிக்கான சேர்மானங்களை வாங்கி வந்து காயவைத்து அரவை மில்லுக்கு அவனே எடுத்துப் போய் அரைத்துக் கொடுத்து.. அக்காவும் தங்கையும் குளித்து முடித்தவுடன்.. இருவரையும் அமர வைத்து சாம்பிராணி புகை போட்டு கூந்தலை பராமரிப்பது எல்லாம் சினிமாக்களில் மட்டும் தானே கண்டிருக்கிறோம்.. இங்கே நிஜத்திலும் வாரம் இருமுறை நடக்கும்..
இதற்கெல்லாம் காரணம் வீரபாண்டியன்.. ஹேர் டிரையர் போட்டு.. சகோதரிகளின் முடியை உலர வைத்துக் கொண்டிருந்தவனை.. என் பொண்டாட்டியோட நீளமான முடிக்கு சிகைக்காய் பொடி தான் பயன்படுத்தணும்.. சாம்பிராணி போட்டு தான் முடியை உலர வைக்கணும் என்று ஊர் மக்களை கூட்டி வந்து ஒரு பஞ்சாயத்து நடத்தி.. ஐந்து மாதத்திற்கு தேவையான சிகைக்காய் பொடியும்.. நலங்கு மாவும்.. அந்த மில்காரரை அரைக்க வைத்து.. அவரோ இடுப்பு வலிக்கு ஆஸ்பத்திரிக்கு போய் ஊசி போட்டு கொண்டு வந்தாராம்..
அடுத்த மாதமே புகுந்த வீட்டிற்கு கிளம்பிப்போன ஆருஷியை.. நிறுத்தி வைத்து நாலு மாச சிகைக்காய் பொடியை யாரு யூஸ் பண்றது.. இருந்து காலி பண்ணிட்டு போ என்று தங்க வைத்துக் கொண்டதெல்லாம் வீரபாண்டியனால் ஜீரணிக்க முடியாத சம்பவங்கள்.. வேலியில் போகும் ஓணானை தூக்கி வேட்டியில் போட்டுக் கொண்டது போல்.. தமிழைக் கண்டு மிரண்டு போன தருணங்கள்..
தமிழ் அக்கா தங்கையை அன்புருக கவனித்துக் கொள்வதை பார்த்துவிட்டு.. ஏக்கத்தோடு.. துவாரகாவும் குருவிடம் சியக்காய் பொடியை மிக்ஸியில் அரைத்து தர சொல்ல.. அவள் தொல்லை தாங்க முடியாமல் யூடியுப்பில்.. சீயக்காய் பொடி எப்படி அரைப்பது என்று குறிப்பெடுத்துக் கொண்டு சேர்மானங்களை வாங்கி வந்தவன்.. தங்கைக்கோர் கீதம் பாடுவதற்காக கிச்சனுக்குள் சென்றான்..
அவன் அரைத்தது பெரிய விஷயம் அல்ல.. நாலு மிளகாயை கூட போட்டு அரைத்தது தான் கொடுமை.. அதிலும் மிக்ஸி பிளேடு உடைந்து போக.. ஜார் மூடி பறந்து போக.. "என்னடா அரைக்கிறே" என்று எட்டிப்பார்க்க வந்த மீனாட்சி ஹோலி பேபி ஆனார்..
"ஒரு நாள் வேலை பார்க்கிறேன்னு என் கிட்சன ஒரு வழி பண்றானுங்களே" என்று.. இருமிக் கொண்டே காந்தலுடன் நெஞ்சிலும் வாயில அடித்துக் கொண்டாள் மீனாட்சி..
"என்ன சிகைக்காய் பொடி ரெட் கலர்ல இருக்கு" என்று துவாரகா சந்தேகத்துடன் பார்க்க.. "அது.. காஷ்மீரி".. என்று அவன் ஆரம்பிக்கவும்.. "ஓ காஷ்மீரி குங்குமப்பூ பொடியா.. வித்தியாசமான கலவையா இருக்கும் போலிருக்கே.. எனக்கு கூட முடி கொட்டுது.. இரு முதல்ல நான் குளிச்சு பாத்துட்டு வாரேன்" என்று.. தலையில் எண்ணெய் மசாஜ் செய்து ஆயில் பாத் எடுக்கப் போன ராக்கம்ஸ்.. சில்லி சீயக்காயை கொஞ்சம் கிண்ணத்தில் வழித்து போட்டு.. பாத்ரூமிற்கு சென்றுவிட.. வாயைத் திறக்கவில்லையே அந்த கல்நெஞ்சக்காரி மீனாட்சி..
"அய்யய்யோ"..
பாத்ரூமிலிருந்து.. நேரடியாக ஆம்புலன்சில் எகிறி குதித்து ஏறிய போது.. "கிழவிக்கு நல்லா வேணும்" என்று தெருவே கைகொட்டி சிரித்தது..
"அடப்பாவி.. என்னடா போட்ட.. இப்படி காந்துது".. என்று பாட்டி.. ஸ்ட்ரெச்சரில் உருண்டு கொண்டே கத்தவும்.. "கலருக்காக கொஞ்சமா.. காஷ்மீரி மிளகாய் போட்டு அரைச்சேன்".. என்றான் குரு அப்பாவியாக..
"என்னது"..
ஒட்டு மொத்த தெருவும் கோரசாக அலறியது.. பிறகென்ன.. திருப்பதிக்கு வேண்டி வைத்திருந்த பாட்டியின் முடியை.. ஆஸ்பத்திரிக்கு கொடுக்க வேண்டியதாகிப் போனது..
"ஒரு சிகைக்காய் பொடி அரைச்சு தர தெரியல.. நீயெல்லாம் ஒரு அண்ணனா.. பக்கத்து வீட்ல செந்தமிழ்ச்செல்வனை பார்த்து கத்துக்க.. அக்காவையும் தங்கச்சியையும் எப்படி கவனிச்சிக்கிறான்னு".. என்று துவாரகா கேவலமாக ஒப்பீடு செய்ய வெகுண்டெழுந்த குரு பையன்.. "அறைஞ்சிருவேன்.. இங்க பாரு.. அவனை என் கூட உதாரணம் காட்டாத.. அரைக்கிறது கரைக்கிறதெல்லாம் எனக்கு வராது.. சுலபமா ஏதாவது வேலை இருந்தா சொல்லு.. செய்கிறேன்" என்று தோள்களை குலுக்கினான்..
"சாம்பிராணி போட்டு எடுத்துட்டு வந்து என் முடியை காயவை.. என்று குளித்துவிட்டு ஈர தலையை உலர்த்துவதற்காக சோபாவில் தயாராக அமர்ந்து கொண்டிருந்தாள் துவாரகா..
நெருப்பு கங்குகளின் இடையில் சாம்பிராணியெல்லாம் சரியாகத்தான் போட்டு எடுத்து வந்தான் குரு.. ஆனால் பாவம்.. புகை காட்ட சொன்னால் நெருப்பை காட்டி.. துவாரகாவின் முடியை கொளுத்தி விட்டு.. அவள் அலறி.. பயர் என்ஜின் வந்து போகும் அளவிற்கு வீடே களேபரமாகி போனது..
"இன்னும் ஏதாவது வேலை இருக்கா.. அம்மா உனக்கு?
அப்பத்தா உனக்கு?.. அப்பத்தா ஊர் எல்லையைத் தாண்டி ஓடியிருந்தார்..
"டாடி உங்களுக்கு"?
என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு மாவீரன் பட ராம்சரண் போல் தயாராக நின்று கொண்டு அடுத்து உறங்கிக் கொண்டிருந்த வெற்றியின் சால்ட் அன்ட் பெப்பர் கேசத்தை சாம்பிராணி போட்டு கொளுத்த போனவனை தடுத்து.. அம்மாவும் பெண்ணும்..
"இனி சத்தியமா உன்கிட்ட எந்த வேலையும் சொல்ல மாட்டோம்.. மரியாதையா இங்கேருந்து போயிடு" என்று.. சாஷ்டாங்கமாக காலில் விழுந்து.. அவன் ஆர்வத்தை அடக்க வேண்டியதாக போயிற்று.. அதற்காக குரு துவாரகாவின் மீது வைத்திருக்கும் பாசத்திற்கோ.. அக்கறைக்கோ குறையேதும் சொல்வதற்கில்லை.. ஒவ்வொருவரும் பாசத்தை காட்டும் விதம் ஒவ்வொரு மாதிரி அல்லவா.. குரு தனது பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டான்.. அவன் அடித்து கடித்து.. செல்லம் கொஞ்சி விளையாடுவதெல்லாம் ஆராவிடம் மட்டும்தான்.. தங்கையிடம் கூட அந்த நெருக்கம் கிடையாது என்பதே உண்மை..
கல்லூரியில் மதிய உணவு இடைவேளை.. பார்கவி வந்து நின்றாள்..
"குரு சாப்பிட போகலாமா.. அதான் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமாகப் போகுதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.. காலேஜ் ஃபுல்லா இதான் ஹாட் டாபிக்".. என்று குதுகலமாக தோள்களை குலுக்கியவள்.. "இனிமே எதுக்கு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணனும்.. சேர்ந்தே சாப்பிடலாமே".. என்று பார்கவி.. ஆசையோடு கேட்க..
நெற்றியை தேய்த்துக்கொண்டு குரு ஏதோ சொல்ல வாயெடுத்த வேளை
"குரு பசிக்குது.. அக்கா இல்லாததுனால சாப்பாடு கொண்டு வரல.. மீனாட்சி எனக்கும் சேர்த்து ஏதாவது கட்டிக் கொடுத்துச்சா".. என்று வயிற்றை தடவிக் கொண்டே வந்த ஆராவிடம் அவன் கவனம் திரும்பியது..
"ஹேய்.. இது என்ன காலேஜா.. உன் வீடா.. காலேஜ்ல மரியாதையா சார்ன்னு சொல்லணும்னு உனக்கு தெரியாதா.. அது என்ன உன் தம்பி மாதிரி.. பெயர் சொல்லி கூப்பிடுற".. என்று.. ஆரா.. இடை புகுந்த கோபத்தில்.. தன் கடுமையைக் காட்டியிருந்தாள் பார்கவி..
"சாரி மேடம்.. மறந்துட்டேன்" உதட்டை சுழித்தாள் ஆரா.. பார்கவியின் சுடு சொற்கள்.. பெரிதாக அவளை பாதிக்கவில்லை.. கோபமோ வருத்தமோ எளிதில் ஆராவை தொற்றிக் கொள்ளாது.. எதையும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் இயல்புடையவள்.. குருதான் முகம் மாறி இறுகி காணப் பட்டான்..
"ஆரா.. என்னோட லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போ" என்று தனது லஞ்ச் பேக்கை எடுத்து டேபிள் மீது வைத்தான் சிடுசிடுப்போடு.. அவன் முகத்தைக் கண்டு இதற்கு மேல் பேச்சை வளர்த்தால் ஏதேனும் பனிஷ்மென்ட் கொடுப்பானோ என்று மதிய உணவை எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்து விட்டாள் ஆரா..
"ஒரு நிமிஷம் நில்லு".. என்று அவளை பின் தொடர்ந்து வந்த பார்கவி.. பத்து நிமிடங்கள் என்ன பேசினாளோ..
கொண்டு போன உணவை திரும்பக் கொண்டு வந்து குருவின் டேபிளில் வைத்துவிட்டு.. "எனக்கு பசிக்கல சாப்பாடு வேண்டாம்".. என்றுவிட்டு மௌனமாக வெளியேறி இருந்தாள் ஆரா..
கண்கள் இடுங்க வினோதமாக பார்த்த குருவிற்கு ஆராவின் இந்த முகம் புதிது..
தொடரும்..