• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 19

Active member
Joined
Jan 18, 2023
Messages
122
Nightoda nighta kadathiytana ...onnum theriyama velanthiya oru ammava veetla vachutikittu pannara velaya da ethu....
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
133
அறையின் கதவை திறந்து கொண்டு ஜாகிங் செல்வதற்காக வெளியே வந்த மகனை வினோதமாக பார்த்தார் ரமணியம்மா..

"என்னம்மா இப்படி பாக்கறீங்க..!!" நெற்றியை தேய்த்தபடி கேட்டவன் மணிக்கட்டுக்கு மேல் டி-ஷர்ட் இழுத்து விட்டுக் கொண்டான்..

"ஆமா உன் உதடு ஏன் இப்படி வீங்கி போயிருக்கு.. பெயின் கில்லர் போட்டது ஏதாவது அலர்ஜி ஆகிடுச்சா என்ன..?" ரமணியம்மா புரியாமல் கேட்டார்..

"என்ன வீங்கி இருக்கு..?" கண்களை சுருக்கி உதட்டை வருடி கொண்டே கண்ணாடியை பார்த்தான்.. சொன்னது போல் உதடு சற்று தடித்துதான் போயிருந்தது..

"ஒருவேளை மருந்து அலர்ஜியாகி இருக்கும்..!!" என்றார் ரமணி..

"ஆமாம்" என்றான் யோசனையோடு..

"இனிமே அந்த மருந்து எடுத்துக்காதே..!!"

"அதுக்கு வாய்ப்பே இல்லை.." என்றவன் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று விட்டான்..

"அடேங்கப்பா அடி கொடுத்த கைப்பிள்ளைக்கே இத்தனை காயம்னா.. அடி வாங்கினவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறியா நீயி.."

தொலைக்காட்சியில் இந்த நகைச்சுவை காட்சி ஓடிக் கொண்டிருக்க.. அதை மாற்றி நியூஸ் சேனல் வைத்தார் ரமணியம்மா..

சிறிது நேரம் கழித்து அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் பத்மினி..

பின்னால் அவள் நடந்து வரும் அரவம் கேட்டு.. "பத்மினி எனக்கு ஒரு காபி மட்டும்" என்றவாறு திரும்பி பார்த்தவர் அவள் முகத்தைக் கண்டு அலறி விட்டார்..

"ஐயோ என்னடியம்மா இது.. உன் உதடு ஏன் பலூன் மாதிரி வீங்கி இருக்கு.. அவன்தான் மாத்திரை சாப்பிட்டானாம்.. ஏதோ அலர்ஜி.. உனக்கு என்னம்மா வந்துச்சு..? பதறிப் போனார் அவர்..

"அது.. நான்.. நானும் மாத்திரை சாப்பிட்டேன்ம்மா.." சமாளிக்க வேறு வழி தெரியவில்லை..

"ஏன் உனக்கு என்ன ஆச்சு..?"

"கொ.. கொஞ்சம் தலைவலி" என்றாள்.. திக்கி திணறி..

"என்ன கொடுமை இது.. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் அலர்ஜி ஆகி இருக்குன்னா அந்த மாத்திரை சரியே இல்லை.."

"ஆமாமா நைட் முழுக்க தூங்கல.. ஒரே தொந்தரவு.."

'இனிமே ரெண்டு பேரும் அந்த வலி நிவாரணி எடுத்துக்காதீங்க..!!"

"இதை உங்க பிள்ளை கிட்ட சொல்லுங்க.." என்றவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்..

உடனடியாக யாருக்கோ அழைத்தார் ரமணியம்மா..

"கௌரி..!!"

"என் மகனுக்கும் மருமகளுக்கும் பெயின் கில்லர் மாத்திரை சாப்பிட்டு எதோ அலர்ஜி ஆகிடுச்சு.."

"ஆமா அவனுக்கு உதடு வீங்கி போச்சு.."

"இவளுக்கு உதட்டுல.. இடுப்புல.. நெஞ்சுக்கு மேல.. அப்புறம் கழுத்துல கன்னத்துல.. சிகப்பு சிகப்பாக தடிப்பு இருக்கு..‌"

"என்னது நான் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கணுமா.. பிள்ளைங்க கஷ்டப்படுறாங்க பார்த்துகிட்டு அமைதியா இருக்க சொல்ற..?"

"அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங்களா.. என்னடி சொல்ற..? ஹலோ.. ஹலோ.." அழைப்பு துண்டிக்கப்பட்டதில் ஒன்றும் புரியாமல் விழித்தார் ரமணியம்மா..

புது சுவை தெரிந்ததில் இரவு முழுக்க மயக்கம் தீராமல் பித்துபிடித்து முத்தம் கொடுத்ததில் வந்த வினை..

ரமணி அம்மாவிற்கு இருப்பு கொள்ளவில்லை..

"ஐயோ இந்த பிள்ளைக்கு உடம்பெல்லாம் அலர்ஜியாகி இருக்கே.. நான் என்ன செய்வேன்.." என்று புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில் உதய் கிருஷ்ணா வீட்டிற்கு வந்திருந்தான்..

தனது காலணியை கழட்டி ராக்கில் வைத்துவிட்டு உள்ளே வந்தவனிடம் "உதய் இந்த பொண்ண கொஞ்சம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா..!! உனக்கு உதட்டில் மட்டும்தான் வீக்கம்.. இந்த பொண்ணுக்கு உடம்பெல்லாம் அலர்ஜியாகி சிவந்து போயிருக்கு.. அந்த வலி நிவாரணி இவளுக்கும் ஒத்துக்கல.." ரமணியம்மா சொல்ல உதய் பத்மினியை ஏறிட்டுப் பார்த்தான்..‌

"ரமணியம்மா கொஞ்சம் அமைதியா இருங்க.. நான் என்ன குழந்தையா..? எனக்கு ஹாஸ்பிடல் போக தெரியும்..!! அவ்ளோ பெரிய பிராப்ளம் இல்ல.. அரை நாள் லீவு எடுத்து ஓய்வு எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போயிடும்..‌ விடுங்க.." என்று சமையல் கட்டுக்குள் சென்று விட.. அவளை பின்தொடர்ந்து உதய் கிருஷ்ணா சமையலறைக்குள் நுழைந்தான்.. குரலை செருமினான்.. நிமிர்ந்து பார்த்தாள்..

"ஹாஸ்பிடல் போகணுமா..!!"

"ஏன்?"

"இல்ல பல்லு பட்டு ஏதாவது இன்பெக்ஷன் ஆகிட போகுது..!!" எனும்போது அவன் கண்கள் பல் பட்ட இடங்களை மேய்ந்தன..

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நான் பாத்துக்கறேன்.. ஒரு அரை நாள் மட்டும் லீவு எடுத்துக்கறேன்.."

"எதுக்கு..?" இனம் புரியாத பரபரப்பில் அவன் குரல் உயர்ந்தது..

"இப்படியே எப்படி ஆபீஸ் வர முடியும்.." தன் வீங்கி போன உதட்டை காண்பித்தாள் பத்மினி.. அவனை விட அவளுக்கு சேதாரம் அதிகம்.

"ம்.." என்றவன்.. பிடரியை கோதியபடி அங்கேயே நின்றிருந்தான்

"என்ன வேணும்..? இன்னும் சமையல் முடியல.. முடிஞ்சதும் கிளீன் பண்ணிடுவேன்.." என்றாள் அவள்.. அவன் பார்வை சமையல் மேடையை இலக்கின்றி ஆராய்வதை கண்டு..

"இல்ல.. அது.. இல்ல.."

"அப்புறம்..?"

"ஐம் சாரி.. நான் என்ன செஞ்சேன்னு எனக்கே தெரியல.. நான் கண்ட்ரோலை இழந்துட்டேன்.. இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததே இல்லை.." என்றவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு வேலையில் கவனமானாள்..

"என்ன பேசிக்குதுங்க இதுங்க.." ரமணியம்மா எட்டி பார்த்தார்.. ஒன்றும் கேட்கவில்லை.. சண்டை போடாம இருந்தா சரிதான்.. இடுப்பை பிடித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..

"ரொம்ப வீங்கி இருக்கு.. டாக்டரை பார்க்கலாமா..!!"

"ஐயோ வேண்டாம்..‌"

"ஏன்..? எனக்கு ரொம்ப கில்டி பீலிங்கா இருக்கு.."

"ப்ச்.. டாக்டர் ஏன் இப்படி உதடு வீங்கி இருக்குன்னு கேட்டா என்ன சொல்றது..‌ ராத்திரி முழுக்க நீங்க என்னை விடாம.." என்று நிறுத்திவிட்டு நெஞ்சுக் கூடு ஏறி இறங்க மூச்சு வாங்கியபடி கண்கள் மூடி திறந்தாள்..

"விடுங்க.. அதுவே சரியாகிடும்.."

"சாரி என்னோட வலியை உனக்கு தந்துட்டேன்..!!"

"பரவாயில்லை விடுங்க.."

"இப்பவும் ஐ ஃபீல் டூ கிஸ் யூ.." இதையும் இயந்திரம் போல் சொன்னவனை கண்டு உறுத்து விழித்தாள்..

"நோ.. நேத்து ஏதோ வலிக்குதுன்னு சொன்னீங்களேன்னு அலோவ் பண்ணினேன்.." கண்களில் மிரட்சியுடன் தலையசைத்தாள்..

"இப்பவும் எனக்கு வேணும்.. ஏன் எதுக்காக..? எதுவும் புரியல.. பட் ஐ நீட் யூ பேட்லி.." பஞ்சமும் வறட்சியும் தலைவிரித்தாடும் உலகில்.. உணவைக் கண்டு கொண்ட கடைசி மனிதனைப் போல் அவன் கண்கள் மின்னியது..

"ஒரு நிமிஷம்.. என் இடுப்பை தொடக்கூடாது.. என் கன்னத்தை அழுத்தி பிடிக்க கூடாது.. ரொம்ப ஜென்டிலா ஒரு கிஸ் அவ்வளவுதான்.. இதுக்கப்புறம் நீங்க என்னை தொந்தரவு பண்ணக்கூடாது.. ஓகே..?" காரசாரமில்லாமல் ஒரு முத்தமா.. அதிருப்தியுடன் அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் இதழை நோக்கி குனிந்தான்..

கரம் அவள் இடையை நோக்கி முன்னேறியது.. மற்றொரு கரம் அவள் கன்னத்தை பற்றிக்கொள்ள பரபரத்தது..

இடுப்பை தொட முயன்ற கரத்தை இறுக பற்றி கொண்டாள்.. அக்டோபஸ் கரத்தினுள் அகப்படாமல் தன் மெல்லிய கன்னத்தை விலக்கிக் கொண்டாள்..

"ப்ளீஸ்.." என்று இறைஞ்சிய கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவனால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை..

"சாரி ஐ காண்ட்.." என்றவன் அவள் இரு கரங்களையும் விலக்கி விட்டு இடையோடு கரம் போட்டு இழுத்து.. கன்னத்தை அழுத்தமாக பற்றி கொண்டு இதழை கவ்வினான்.. முந்தைய இரவு முழுக்க முத்தமிட்ட பயிற்சி எப்படி நிதானமாக உதட்டை சுவைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தது..

ஆனால் முந்தைய இரவு போல் மேலே விழுந்து பாயாமல் மென்மையான முத்தம்.. அவன் கதகதப்பான இதழுக்குள் பத்மினியின் சின்னஞ்சிறு உதடுகள் அடங்கி போயின.. வீக்கத்திற்கும் எரிச்சலுக்கும் சற்று இதமாகத்தான் இருந்தது பற்கள் படாத வரை..‌ அதிகபட்ச ஆசைகள் அந்த பற்களில் தான் அடங்கி இருக்கின்றனவோ என்னவோ.. கட்டுப்படுத்தவே முடிவதில்லை.. ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி எடுத்தால்தான் முத்தங்கள் முழுமை அடைகின்றன..

தன்னை மறந்தான்.. அவள் வலியை மறந்தான்.. பசியும் காமமும் மனிதனை மாற்றி விடுகின்றன.. இதுதான் உதய கிருஷ்ணாவின் இன்னொரு பக்கமோ என்னவோ.. கடவுள் பாதி மிருகம் பாதி என்பார்களே.. காமம் கொண்ட மிருகமா இவன்..?

இனிதான் தெரியும்.. அவன் யாரென?

முழு பலத்தை திரட்டி அவனை விலக்கி விட்டு பளாரென அறைந்திருந்தாள் பத்மினி.. பாவம் வலி தாங்க முடியவில்லை..

அவன் கடித்தது சரி என்றால் அவள் அடித்ததில் தவறில்லையே..!!

நாற்பது வயது வரை அவன் அனுபவித்திராத இன்னொரு சுகம்.. முத்தமிடும் போது அவள் தேகமெங்கும் விரல்களை மேயவிட்டு விளையாடுவதில் அலாதி இன்பம்..‌ அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.. பத்மினியின் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது.. எதற்கு என்று அறியாமல் இல்லை.. தலையை உலுக்கி "சாரி" என்றான்..

"என்ன ஆச்சு உங்களுக்கு..!!" இது நீங்கள் தானா என்பதைப் போன்ற பார்வை அவளிடமிருந்து..

தன்னிலை உணர்ந்து "ஐ டோன்ட் நோ.." என்றவன் அங்கிருந்து சென்றிருந்தான்..

மதியத்திற்குள் ஓரளவு வீக்கம் வடிந்திருந்தது..

"எங்க காட்டு.. அப்பாடா இப்ப கொஞ்சம் பரவாயில்லை.. சாயங்காலம் போல முழுக்க சரியாகிடும்.." ரமணியம்மா திருப்தியாக பார்த்து மருமகளை அனுப்பி வைத்தார்..‌

ஆனால் மாலையில் வரும் போதும் மருமகள் உதடு வீங்கித்தானே வந்தாள்..

"என்னடியம்மா..‌ முழுக்க வீக்கம் வத்திடும்னு பாத்தா இப்படி அதிகமா வீங்கி போயிருக்கே.. மறுபடி மாத்திரை போட்டியா..‌ திரும்பவும் தலைவலியா என்ன..? நான்தான் சொன்னேனே அந்த பெயின் கில்லரை போடாதேன்னு.." ரமணியம்மா பதட்டத்தோடு இரைந்தாள்..

"இது உங்க மகன்கிட்ட சொல்லுங்க.. ஏதோ காணாதது கண்டது மாதிரி ச்சீ.. !!" சலிப்போடு தன் அறைக்கு சென்றாள் பத்மினி..

அலுவலகத்தில் இப்படி செய்வான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவள்..

அதிசயமாக அவள் நுழைந்த நேரத்தில் கண்ணாடி பகுதிகளில் திரைச் சீலைகள் இழுக்கப்பட்டிருந்தன..

"உங்ககிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல சார்.."

எழுந்து வந்தான் அவன்.. "வேற என்ன எதிர்பார்த்த.. ? கிட்ட வந்து என் கையை பிடிச்சது நீதானே.. உங்களுக்கு பிடிச்ச விஷயத்தை நினைச்சுக்கோங்கன்னு சொன்னது நீதானே..!! புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக்கிட்டு சாதம் ஊட்டி விட்டது நீதானே.. அப்போ உன் கிட்டதானே இதை எதிர்பார்க்க முடியும்.."

அவள் இரு கைகளைப் பற்றிக் கொண்டு மெல்ல இதழை நோக்கி நெருங்கினான்..

"ஏன் இப்படி..?" தலையை சற்று பின்னே நகர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள்..

"எனக்கு தெரியல.. உன்கிட்ட இப்படி தோணுது.." பத்மினியை இடையோடு பற்றினான்.. அவள் துள்ளினாள்.. "இது ஆஃபீஸ்.." விடுங்க சார்..

"தட்ஸ் ஓகே.. திஸ் இஸ் மை ஆபிஸ்.. நான் பாத்துக்கறேன்.." என்றவன் மென்மையாக உதடுகளை ஒற்றியெடுத்தான்.. கிறக்கத்தில் விழிகளை மூடியிருந்தாள் பத்மினி.. மனதிற்கு பிடித்தவனின் முத்தம் வலியிலும் இனிக்கத்தான் செய்கிறது.. அதிலும் நேற்றிலிருந்து அவளும் பெண்மை மொட்டுகள் தாழ் திறந்து ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறாள்..

"சார் வேண்டாம்.. இது ஆபீஸ்.." அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை..

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் இதழை அழுத்தமாக அணைத்திருந்தான்.. இப்படித்தான் முத்தங்கள் நீண்டு உதடுகள் புண்ணாகின..‌

"ரமணியம்மா நான் இன்னைக்கு உங்க கூட படுத்துக்கறேன்.." ரமணியம்மாவின் கட்டிலில் வந்து அமர்ந்தாள் பத்மினி..

"என்னவாம் இவளுக்கு..!!" அவளை பின்தொடர்ந்து வந்திருந்தான் உதய் கிருஷ்ணா..

"எனக்கும் தெரியலையேடா.. என்னம்மா ஆச்சு..?" என்றார் அவர் மருமகளை பார்த்து..

பதில் சொல்லாமல் படுத்துக் கொண்டாள் பத்மினி..

"விடுடா எதையாவது பார்த்து பயந்துருப்பா.. இன்னைக்கு என் கூட தங்கட்டும்.. கொஞ்சம் தெளிஞ்சவுடனே அங்க வந்து படுப்பா.."

"அவ ஒன்னும் அங்க வந்து படுக்க தேவையில்லை.. உங்களோடவே வச்சுக்கோங்க.. எனக்கும் நிம்மதி..!!" பத்மினியை முறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினான் உதய் கிருஷ்ணா..

மறுநாள் காலையில் ரமணியம்மாள் கண் விழித்துப் பார்க்கையில் பத்மினியை அங்கே காணவில்லை..

தொடரும்..
🤣🤣🤣🤣
 
Top