• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 19

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
56
"ஹேய் ஆபர்ணா ஒரு நிமிஷம் நில்லு".. என்று அதிகார தோரணையில் அழைத்தவாறே ஆராவின் முன்பு வந்து நின்றாள் பார்கவி..

"சீக்கிரம் சொல்லுங்க மேடம் பசிக்குது".. எப்போதும் போல ஆரா கலகலத்துக் கொண்டே.. அவசரகதியில் நின்றிருக்க.. ஏற இறங்க அவளை பார்த்தவளோ..

"என்னாச்சு.. ஏன் உங்க அக்கா சமைக்கலைனா என்ன? உனக்கு அம்மா இல்லையா!!".. என்று மார்பின் குறுக்கே கை கட்டிக்கொண்டு.. ஏளன பார்வையுடன் இயல்பாகவே துவங்கியிருந்தாள் பார்கவி.. ஆராவைப் பற்றிய சகலமும் நாலாயிரம் முறை ஒப்பித்திருந்தான் குரு.. இருந்தாலும் ஆராவை புண்படுத்த வேண்டுமே!!

அம்மா என்றதும்.. அந்த இழப்போ. துயரமோ எதுவுமின்றி.. முக பாவனைகளை மாற்றிக் கொள்ளாமல் அதே புன்னகையுடன் "ஆமா அம்மா இல்ல.. நான் பிறக்கும்போதே இறந்து போயிட்டாங்க.. ஏன் குரு எதுவும் சொல்லலையா" என்று.. ஹாட் பாக்ஸை.. திறக்காமலேயே மூக்கின் அருகே கொண்டு சென்று.. வெஜிடபிள் பிரியாணியின் மணத்தை முகர்ந்தாள் ஆரா..

"ஏன் நாங்க தனியா இருக்கும் போது கூட உன்னை பற்றி தான் பேசிட்டு இருப்போமா என்ன.. எங்களுக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா.. பேசுறதுக்கு ஆயிரம் பர்சனல் விஷயங்கள் எங்களுக்குள்ள இருக்கு".. என்றாள் பார்கவி சுருக்கென.. குருவுடன் தன் நெருக்கத்தை பறைசாற்றும் பொருட்டு..

"அச்சோ மேடம் நான் அப்படி சொல்ல வரல.. ஏதாவது ஒரு சிச்சுவேஷன்ல என்னை பத்தின முழு விபரமும் குரு உங்க கிட்ட சொல்லி இருப்பான்னு என்று நினைச்சேன்".. என்றவளோ.. பார்கவி தன்னை முறைப்பதை கண்டதும்.. நாக்கை கடித்துக் கொண்டு "சொல்லி இருப்பார்ன்னு நினைச்சேன்" என்று திருத்தினாள் அழுத்தமாக..

முறைத்த விழிகளை இலகுவாக்கி. "சொல்லல.. சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படல.. நீ சொல்லு.. உனக்கு அம்மா அப்பா யாருமே இல்லையா".. என்றாள் மீண்டும் விடாப்பிடியாக..

இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதில் சட்டென முகம் மாறி போனாலும் சமாளித்துக் கொண்டு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்ட ஆரா.. சிறிய புன்னகையுடன் "ஆமா எனக்கு அம்மா அப்பா யாரும் இல்ல.. நான் பிறக்கும்போதே இறந்துட்டாங்க போதுமா" என்றாள் இழுத்துப் பிடித்து வைத்த பொறுமையுடன்.. பசி வேறு வயிற்றுக் கிள்ளியது.. காலையில் சாப்பிட்ட காய்ந்துபோன பிரெட்டும் ஜாமும் அவள் பாதி வயிற்றை கூட நிறைத்திருக்கவில்லை..

"ஓ பிறக்கும்போதே இரண்டு பேரையும்".. என்று நிறுத்திவிட்டு ஒரு மாதிரியாக.. இகழ்ச்சி புன்னகையுடன் தலையசைத்தவள் .. "நல்ல பொண்ணு நீ.. உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும் போலிருக்கே!!" என்று கேலிப் புன்னகை பூக்க .. ஆராவின் முகம் சுருங்கியது.. இருந்தாலும் பல பேர் வாயிலாக இதே வார்த்தைகளை கேட்டிருந்ததால்.. அடிபட்டு பழக்கப்பட்டு போயிருந்த மனதை எளிதில் மீட்டுக் கொண்டு.. மெல்லிய சிரிப்பை இதழ்களில் தவழ விட்டாள் ஆரா.. எங்கே அடித்தால் எப்படி இதயம் பாதிக்கும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள் பார்கவி.. ஆராவின் மீதான அத்தனை வன்மத்தையும் இன்று ஒன்று சேர கொட்டும் முடிவோடு தான் வந்திருந்தாள்..

"அம்மா அப்பா இல்லைன்னா அப்போ அனாதையா நீ?".. ஒன்றும் தெரியாதவள் போல்.. நெஞ்சில் கத்தியை பாய்ச்சிய இந்த கேள்வி அவளுக்கே கொஞ்சம் ஓவராக தான் பட்டது.. அடுத்தவரை இப்படி புண்படுத்தி பேசிப் பார்க்கும் மனோபாவம் கொண்டவள் இல்லைதான் பார்கவி.. குரு தனக்கே தனக்காக மட்டும் வேண்டும் என்ற பொறாமை குணம்.. அவளை இவ்வாறு காயப்படுத்த சொன்னதோ என்னவோ!!..

வலிக்கத்தான் செய்தது.. ஆனாலும்.. வலிக்காதது போல நடித்துக் கொண்டிருந்தாள் ஆரா.. இயல்பாக இதுபோன்ற காயப்படுத்தும் வார்த்தைகள்.. நாலா பக்கங்களிலும் அம்பு மழையாக பாய்ந்து வந்தாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடக்கூடிய மனப்பாங்கு படைத்தவள் தான் அவள்..

ஆனால் இத்தனை நாட்கள் உடனிருந்து தாயாக கவனித்துக் கொண்ட அக்கா ஊருக்கு சென்றுவிட்டதால் கிடைத்த தனிமை அவள் மனதை சோர்வுற செய்திருக்க.. பார்கவி நிற்க வைத்து தேவையில்லாமல் பேசிக் கொண்டிருப்பது வேறு எரிச்சலை உருவாக்கி இருந்தது.. இவளுக்கு பதில் வேறு யாராவது இருந்திருந்தால் தக்க பதிலடி கொடுத்து மூக்குடைத்து அலட்சியப்படுத்தி சென்றிருப்பாள்..

பார்கவி.. காலேஜ் லெக்சரர்.. அதுவுமில்லாமல் குருவின் இதயம் தொட்ட காதலி.. என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்த தேவையில்லாத விவாதத்தை கேட்டுக் கொண்டு அமைதியாக நிற்கிறாள்..

தன் முக மாற்றங்களை கண்டு ரசித்துக்கொண்டிருந்தவளுக்கு மேலும் தீனி போட விரும்பாமல்.. "இல்லை.. நான் ஒண்ணும் அனாதை இல்லை.. எனக்கும் சொந்தம் இருக்கு.. அண்ணாவும் அக்காவும் இருக்காங்க!.. என்று அழுத்தமாக பதிலளித்திருந்தாள்..

ஆராவின் மூக்கு நுனியில் துளிர்த்த கோபத்தை கண்டு "ஓகே கூல் கூல்.. ஐ டிடின்ட் மின் தட்.. அதாவது அம்மா அப்பா இல்ல.. குருவோட பக்கத்து வீடு.. சோ அதனால தான் உன்னை குரு ரொம்ப டேக் கேர் பண்ணிக்கிறார்ன்னு நினைக்கிறேன்.. இட்ஸ் ஓகே பரவாயில்லை.. எனக்கு புரியுது உங்க ரிலேஷன்ஷிப்.. நான் தப்பாவே நினைக்கல.. லைக் தெருவுல போற ஒரு சின்ன நாய்க்குட்டிய.. எடுத்து அன்பு காட்டி வளர்க்கிற அனுதாபம் இது.. அப்படின்னு நான் புரிஞ்சுக்கிட்டாலும்.. மத்தவங்க இதை ஏத்துக்கணும் இல்லையா.. நாளைக்கு உனக்கே கூட இது ஆபத்தா முடியலாமே".. என்று.. வெஞ்சின விழிகளுடன் பார்கவி பேசியதில்.. ஆரா விழித்தாள்.. முதன்முறையாக தெருவில் போகும் நாய்க்குட்டியாக நினைத்து ஒருவன் உன்னிடம் பரிவு காட்டுகிறான் என்பதே எதிர்பாராதவிதமாக அவள் மன வேதனையை அதிகப்படுத்தி இருக்க.. ஒரு கணம் அதுதான் உண்மையோ என்று எண்ணம் கூட ஒருகணம் மின்னலாக தோன்றி மறைந்தது..

"என்ன சொல்றீங்க யார் எங்களை தப்பா நினைப்பாங்க.. அப்படி நினைச்சா தான் என்ன.. எங்களைப் பற்றி எங்களுக்கு தெரியும்.. யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை".. முகத்தில் அறைந்தாற் போல் பதில் கூறியிருந்தாலும் குழப்ப ரேகைகளை முகத்தில் தெளிவாக பிரதிபலித்தாள்.. பசி மரத்து போக சாப்பிடும் எண்ணமே போய்விட்டது..

"ஹாஹா.. உனக்கு கவலை இல்லாம இருக்கலாம்.. ஆனா எனக்கு அக்கறை உண்டு.. நான் கல்யாணம் பண்ணிக்க போறவரை இன்னொரு பொண்ணு கூட சேர்த்து வச்சு பேசுறது எனக்கு கஷ்டமா இருக்காதா.. அதோடு நீ அவர் மேல எடுத்துக்கிற அளவுக்கு மீறிய உரிமை.. எனக்கு மனக்கஷ்டத்தை கொடுக்குது.. கோபம் வருது.. குரு எனக்கே எனக்கானவரா மட்டுமே இருக்கணும்னு நான் நினைக்கிறேன்.. உன்னை அவரோட பேசி பழக கூடாதுன்னு சொல்லல.. உடனே எல்லாத்தையும் ஸ்டாப் பண்றது கஷ்டம்.. கொஞ்சம் கொஞ்சமா விலகிடு.. ஒருவேளை முடியாதுன்னு நீ சொன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது.. நான் விலகிக்கிறேன்.. ஆனா ஒரு விஷயம் நினைவில் வச்சுக்க.. நீ குருவோட வாழ்க்கையை வீணாக்கிட்டு இருக்க.. எந்த பொண்ணா இருந்தாலும்.. தான் கல்யாணம் பண்ணிக்க போறவருக்கு தோழியா தாயா தான் மட்டுமே இருக்கனும்னு எதிர்பார்ப்பா.. அப்படியே ஒரு தோழி இருந்தாலும் அவ லிமிட்ல இருக்கணும்னு தான் எதிர்பார்ப்பா.. நீ இதே மாதிரி ஒட்டி உரசி கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருந்தேனா குருவுக்கு எந்த ஜென்மத்திலும் கல்யாணம் நடக்காது".. என்று.. பார்கவி மூச்சை பிடித்துக் கொண்டு பேசிய விஷயங்கள் அனைத்துமே ஆராவிற்கு புதியது..

இருவரின் உறவு முறையை கொச்சைப்படுத்தியோ.. அல்லது இது தவறு.. குருவின் வாழ்க்கைக்கு பின்னாளில் பிரச்சனையாகும் என்றோ இதுவரை யாருமே சொன்னது இல்லை.. குருவோடு ஆரா அழகும் விஷயம் தமிழுக்கு பட்டுப் படாமலும் தெரிந்திருந்தாலும் பொதுவாக அந்த வீட்டோடு உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டித்திருக்கிறானே தவிர்த்து.. தனிப்பட்ட முறையில் குருவோடு இனி பழகக் கூடாது என்று சொன்னதே இல்லையே.. அப்படியானால் நான் குருவோடு பழகுவது தவறா என்று.. ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்திருந்தது அவள் குழந்தை மனம்.. வெற்றிகரமாக ஆராவை குழப்பியிருந்தாள் பார்கவி..

"அ.. அப்போ உங்க சந்தோஷத்துக்காக.. இனிமே நான் குரு கிட்டே பேசவே கூடாதுன்னு சொல்றீங்களா".. ஆராவின் குரலில் ஒரு தடுமாற்றம்.. தழுதழுப்பு

"நான் அப்படி சொல்ல வரல.. ஆண் பெண் நட்புக்கு எதிரானவள் இல்லை நான்.. உங்களோட நட்பு லிமிட்டை கிராஸ் பண்ணி போயிட்டு இருக்கு.. அவர் ஒரு ப்ரொபசர்.. உன் வீட்டு நாய்க்குட்டி இல்ல".. என்ற பார்கவியின் ஏளனத்தில் எதுவும் பேசாமல் சில கணங்கள் கருவிழிகள் உருள.. விழிகளை தாழ்த்தி யோசித்துக் கொண்டிருந்தவளின் எண்ண ஓட்டத்தை கலைக்கும் விதமாக.. மேலும் தொடர்ந்து "நீ பாட்டுக்கு அவர் சாப்பிட வேண்டியதை இங்கிதம் இல்லாம புடுங்கிட்டு வந்துட்ட.. தான் சாப்பிட வேண்டியதை உனக்கு குடுத்துட்டு அவர் என்ன சாப்பிடுவாருன்னு கொஞ்சமாவது யோசிச்சியா.. இப்படித்தான் இருக்கக் கூடாதுன்னு சொல்றேன்.. மேலே விழுந்து அவரை பிடுங்காதே.. அவர் பிரைவசிக்கு மரியாதை கொடு".. என்று நீண்ட விளக்க உரை கொடுக்கவும்.. மேலும் சோர்ந்து போனாள் ஆரா..

"ஓகே மேடம் ஐ ஆம் சாரி இனிமே இப்படி நடக்காது.. உங்க ரெண்டு பேருக்கு இடையில தேவையில்லாமல் நான் வரமாட்டேன்... என் லிமிட்ல இருந்துக்கிறேன்".. என்று முகத்தில் சோகச் சாயலுடன் சொன்னவளை கண்டு.. வெற்றி சிரிப்பை மறைத்துக் கொண்டு.. "புரிஞ்சா சரிதான்".. என்றாள் பார்கவி திமிர் குறையாத தொனியில்..

வாடிய பயிராய் அங்கிருந்த நகர்ந்த ஆரா.. அடுத்து நேரடியாக நுழைந்தது குருவின் அறைக்கே.. ஏதோ யோசனையாக அமர்ந்திருந்தவன்..
மேஜை மீது ஆறாவைத்த டிபன் பாக்ஸை ஒரு கணம் பார்த்துவிட்டு கேள்வியாக ஆரா வை நோக்கினான்..

"எனக்கு பசிக்கல குரு" என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு "சார்.. நீங்க சாப்டுருங்க.. ஃபுட் வேஸ்ட் பண்ணிடாதீங்க".. என்று ஒட்டாத தன்மையுடன் உரைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விட.. "என்னாச்சு இவளுக்கு".. யோசனையாக புருவம் சுருக்கினான் குரு..

ஆரா. சென்று விட்டாள்.. பசிக்கவில்லை என்று சொல்லும் ஆளா அவள்.. ஒரு நாளைக்கு ஐந்து வேளை சாப்பிடுபவள்.. எனக்கு பசிக்கலை என்ற வார்த்தை அவளை அகராதியிலேயே கிடையாது.. ஆனால் இன்று வினோதமாக நடந்து கொள்பவளை.. "ஹேய்.. ஆரா.. ஒரு நிமிஷம் இங்க வா" என்று அவன் அழைத்துக் கொண்டிருக்க.. அந்தக் குரல் காதில் விழாதது போல் விலகி சென்றவளை கண்டு.. குரு குழப்பத்துடன் நெற்றியை தேய்த்துக் கொண்டிருந்த வேளையில்..

"குரு வாங்களேன் சாப்பிட போவோம்.. ரொம்ப பசிக்குது" என்று வந்து நின்றாள் பார்கவி.. ஆரா எதுவும் சொல்லாமல் விலகி சென்றாலும்.. உணவைக் கொண்டு வந்து திரும்ப கொடுத்ததற்கு காரணம் பார்கவி என்று உணர முடியாத அளவிற்கு.. முட்டாள் இல்லையே குரு..

முகம் சடுதியில் நிறம் மாறி போக.. "நீ ஆராவை ஏதாவது சொன்னியா".. என்றான் பார்வையில் தீவிரம் கூட்டி..

"நான் எதுவும் சொல்லலையே" என்று பின் வாங்க விரும்பவில்லை அவள்.. அவன் பார்வையை எதிர்கொண்டு.. "ஆமாம் சொன்னேன்".. என்றாள் தைரியமாக..

அடுத்த கணம் கோபத்தின் அளவு கூடி போக.. மூக்கு நுனி சிவந்து போனவன் "அவகிட்டே என்ன சொன்னே" என்றான்.. இறுகிய குரலுடன்..

விழிகளை மூடி ஆழ்ந்த மூச்சிழுத்துக் கொண்டவள்.. அவன் கோபத்தை எதிர்கொள்ளும் விதமாக தன்னை திடப்படுத்திக் கொண்டு.. "நம்ம ரெண்டு பேருக்கும் இடையில வரக்கூடாதுன்னு சொன்னேன்.. இனிமே கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணிக்க சொன்னேன்.. இந்த மாதிரி மேல விழுந்து பழகக் கூடாதுன்னு சொன்னேன்.. நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு".. என்று பொறுமையாக கேட்ட நொடியில்..

"வாட் நான்சென்ஸ்".. என்று.. விருட்டென எழுந்தவன் மேஜையிலிருந்த பொருட்களை ஆத்திரத்தின் வெளிப்பாடாக வேகமாக தட்டி விட்டிருந்தான்.. பேனா ஸ்டான்டிலிருந்து பேனாக்க்கள் விழுந்து உருண்டு ஓடின.. லஞ்ச் டைம் என்பதால் நல்ல வேளையாக அந்த ஸ்டாப்ரூமில் அவர்கள் இருவரை தவிர வேறு யாருமே இருந்திருக்கவில்லை..

பார்கவி அவன் நடவடிக்கையில் ஒரு கணம் பின்வாங்கி ஸ்தம்பித்து நிற்க..

"முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் இடையில வர்றதுக்கு நீ யாரு.. பொறந்ததிலிருந்து அவளை நெஞ்சில சுமக்கிறேன்.. என்னோட குழந்தை அவ.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை இனிமே அவளை பத்தி நீ தப்பா பேச கூடாது.. விரல் நீட்டி கோபக்கனலை வாரியிறைத்தவன் இப்படித்தான் பேசுவான் என்பது அவள் எதிர்பார்த்ததே..

"இல்ல.. நான் தெரியாமத்தான் கேட்கிறேன்.. நீ இந்த காலேஜுக்கு படிக்க வந்ததிலிருந்து.. நாங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கோம்னு பாத்துட்டு தானே இருக்கே.. நீ பிஜி பைனலியர் படிக்கும்போது அவ இங்கே யூஜி ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினா.. அப்போ இருந்து எங்க ரெண்டு பேருக்கான பழக்கம் உனக்கு தெரியும் தானே.. நான் எதையாவது உன் கிட்ட மறைச்சிருக்கேனா.. இதெல்லாம் தெரிஞ்சுதானே காதலிக்கவே ஆரம்பிச்சே.. இப்போ என்ன திடீர்னு.. ஏன்.. எங்களை நீ சந்தேகப் படறியா".. என்று உச்சக்கட்ட கோபத்தில் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டிருந்தான்..

பார்கவி பதறிக்கொண்டு "இல்ல குரு நான் உங்களை சந்தேகப்படல".. என்று அவள் வார்த்தைகளை முடிக்கும் முன்.. "அப்புறம் என்ன.. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ.. என்னோட அம்மா அப்பா.. என் தங்கை.. யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுத்ததே இல்லை.. விலகி இருந்ததும் இல்ல.. எங்க உறவை புரிஞ்சுக்க முடிஞ்சா மட்டும்தான் உன்னால என் கூட வாழ முடியும்.. என்னை அப்படியே ஏத்துக்கனும்.. ஒருவேளை ஆராவை.. நான் தூக்கி கொண்டாடுவது உனக்கு தப்பா தெரிஞ்சா.. ஐ அம் சாரி இதோட நாம முடிச்சுக்கலாம்.. முடிவு உன்னுடையது".. என்று.. அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தவன்.. உணவு பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்..

கொதித்துப் போயிருந்தாள் பார்கவி.. உண்மைதான்.. காதலிக்க ஆரம்பித்த ஆரம்ப கட்டத்திலேயே.. ஒரு காதலியாக நீ ஆராவை காரணம் காட்டி எக்காலத்திலும் என்னிடம் வந்து நிற்கக்கூடாது என்று கூறியிருந்தான்.. இதென்ன புதுவிதமான மிரட்டல்.. உனக்கு சக்காளத்தி வருவாள் சண்டை போடக்கூடாது என்பதைப் போல்.. அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா?.. தனக்கானவன் தன்னுடன் மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது ஒரு பெண்ணின் இயல்பான விருப்பம் அல்லவா.. அதையும் தவறு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமாகும்.. குருவை என்னால் விட்டுக் கொடுக்கவே முடியாது.. அதே நேரத்தில் ஆராவையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. இருவரின் நெருக்கமும் அவள் நெஞ்சில் தகிப்பை உருவாக்க.. நகத்தை சதையிலிருந்து பிரித்தே ஆக வேண்டும் என்று வெறி கொண்டாள் பார்கவி..

தக்க பதிலடி வாங்கி ஆத்திரத்துடன்.. அங்கிருந்து வெளியேறி கேண்டீன் சென்றவள் எதையோ கண்டு இன்னும் அதிகமாக கொதிநிலைக்கு சென்றிருந்தாள்..

உணவகத்தின் நடுநாயகமான வட்டமேஜையை சுற்றியிருந்த இருக்கையில்.. ஆராவின் பக்கத்தில் அமர்ந்து.. சுட சுட பிரியாணி வாங்கி அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் குரு.. மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரின் பார்வையும் அடிக்கடி அவர்கள் மேல் விசித்திரமாக படிந்து மீண்டாலும் எதையும் கண்டுகொள்ளவில்லை அவன்.. ஆபர்ணாதான் தான் முதல் முறையாக ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள்.. பார்கவி சொன்னது போல் தான் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொண்டிருக்கிறோமோ.. அனைவரின் வினோத பார்வைக்கு காரணம்.. இந்த எங்கள் எல்லை மீறும் உறவு தானோ.. அப்படியானால் இனி விலகி இருக்கத்தான் வேண்டுமா? என குழம்பிக் கொண்டிருந்தாள் அவள் ..

தன்னிடம் கோபமாக பேசிவிட்டு இங்கே ஆராவிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கும் குருவை கண்ட பார்கவி.. இன்னும் மூர்க்கமாகி போயிருந்தாள்.. மூன்று வருட காதலை தியாகம் செய்துவிட்டு குருவிற்கு ஆராவிற்கும் இடையே உள்ள உறவு என்னவென்று ஆராய விரும்பவில்லை அவள்.. அது என்ன கன்றாவியாக வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும்.. தேவையில்லாத களையை வெட்டியெறிவது என்ற முடிவுக்கு வந்திருந்தவளின் மூளை.. வேறு விதமாக யோசிக்க ஆரம்பித்திருந்தது.. காதலியாக ஜெயிக்க நினைத்தவள் ஒரு ஆசிரியராக அங்கே தோற்றுப் போயிருந்தாள்..

தொடரும்..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
33
பார்கவி ஆராவை ரொம்ப கஷ்டப்படுத்திட்ட. அதெப்படி இவ்வளவு கேவலமா பேசுவ. ஆராகிட்ட அன்பா, தெளிவா எடுத்துச் சொன்னா புரிஞ்சு நடந்துக்குவா.
 
Member
Joined
May 3, 2025
Messages
35
அடிப்பாவி கவி நீ எல்லாம் ஆசிரியருனு வெளிய சொல்லாத... பாவம் பச்சை புள்ள கிட்ட ஏதேதோ சொல்லி கொலம்பி கஷ்டபடுத்தி....வெக்கமாவே இருக்காத உனக்கு...

நீ என்ன வேணா plan பண்ணு ஒரு ஆணியும் புடுங்க முடியாது... குரு இருக்கான் ஆரா வா காக்க...
 
Well-known member
Joined
Nov 20, 2024

ஏய் கவி உன் கன்னம் பழுக்கும் நாள் ரொம்ப தூரத்தில் இல்ல எங்க பாப்பா வை யா அழ வைக்கிற 🙎🙎🙎
 
Top