• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 20

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
"தம்பின்னு ஒருத்தன் இங்க கிடந்து தவிப்பானே.. அவனுக்கு ஃபோனை போட்டு.. எப்படி இருக்கான்.. சாப்டானா இல்லையான்னு கேப்போம்.. ஏதாவது அக்கறை இருக்கா.. உனக்கும் உன் புருஷனுக்கும்.. நீ பாட்டுக்கு ஜாலியா அங்கே போய் உக்காந்துகிட்ட.. இங்கே நாங்க ரெண்டு பேரும் காஞ்ச ரொட்டியும்.. கான்ப்ளக்சுமா தின்னுகிட்டு கிடக்கோம்"..

கொஞ்சம் காரம் சாரமாக பேசுவது போலிருந்தாலும்.. தமிழ்செல்வனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவதை கண்டு கொண்ட ரீட்டா.. போனில் வீடியோ காலில் வந்தது.. தமக்கையாகவோ அல்லது தங்கையாகவோ இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்..

"அடேய் நீ வேற ஏண்டா வயித்தெரிச்சலை கிளப்புற.. எத்தனை நாளா நானும் போன் போட்டுட்டே இருக்கேன் தெரியுமா.. போன் போகவே மாட்டேங்குது.. கடைசில பார்த்தா இந்த வீணா போன மனுஷன்.. அந்த ஏரோபிளேன் பறக்கிற பட்டனை அழுத்தி வச்சிருக்காரு.. அத அழுத்திட்டா ஃபோன் போகாதாம்.. போனும் வராதாமே.. எனக்கு சொல்லி கொடுத்தீங்களாடா நீங்க.. வேணும்னே பண்ணிட்டு தெரியாம கை பட்டுருச்சுன்னு சாதிச்சுட்டாருடா இந்த மீசைக்காரன்.. நானும் ஊர் எல்லை வரைக்கும் போயி சிக்னல் கிடைக்குதான்னு பாத்துட்டு வந்துட்டேன்.. கடைசில பக்கத்து வீட்டுப்பையன்தான் சொன்னான்.. ஃபோன் ஏரோபிளேன் மோட்ல கிடக்குதாம்.. எம்புட்டு பெரிய துரோகம் பண்ணிபுட்டாரு இந்த ஆளு".. என்று ஆருஷி மூக்கை சிந்த தமிழ் பற்களை கடித்தான்..

குளிப்பாட்டி விட்ட குருவேல்.. சஞ்சீவன் பிரகாஷ் இரண்டு பெரிய பிள்ளைகளை துடைத்து விட்டுக் கொண்டே அவள் புலம்பிக் கொண்டிருந்தாள்..

ஜட்டி போடாத பிள்ளைகள் இரண்டும் கிங்கிணி மணி போல் கத்திக் கொண்டே வந்து சரியாக ஃபோன் கேமரா முன்னே நின்று வியூவை மறைக்க.. "அடேய் காலங்காத்தால என்னடா.. ஃபிரி ஷோ காட்டறீங்க.. தள்ளிப் போங்கடா".. என்று இதழோரம் குறுகுறுத்த சிரிப்புடன் கத்திக் கொண்டிருந்தவனை திரும்பிப் பார்த்தாள் ரீட்டு..

எண்ணெயில் போட்ட கடுகு போல் இத்தனை நாட்களாக எரிந்து விழுந்து கொண்டிருந்தவன் முகம் அம்மாவை கண்ட பால்வாடிப் பிள்ளை போல் பளீச்சிட்டதை கவனித்துக் கொண்டே அவன் கேட்ட நோயாளியின் ரிப்போர்ட் ஃபைலைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தாள் அவள்.. இன்று நேற்றா நடக்கிறது.. ஆறு வருடங்களாக அடிக்கடி இது போன்ற மலர்ச்சி.. வாட்டம்.. சிடுசிடுப்பு.. வெட்கம்.. என அடிக்கடி வந்து போகும் உணர்வுகளின் காரணங்களை யூகித்து புறணி பேசிக் கொண்டிருப்பதுதான் அவளோடு சேர்ந்த மற்ற ஊழியர்களின் வேலை..

"ஃபோனை ஏரோப்பிளேன் மோட்ல போட்டு பிறந்த வீட்டோட பேச விடாம பண்றதெல்லாம் சட்டப்படி குற்றம் அக்கா.. இதுவும் ஒரு வகையில டொமஸ்டிக் வயலன்ஸ் தான்".. தமிழ் வேறு அவன் பங்குக்கு ஏற்றி விட..

"டமஸ்டிக் அனிமல் இல்ல தம்பி.. இவரு.. வைல்ட் அனிமல்.. சரியான காட்டான்.. இந்த ஆள் கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது.. என்று இரண்டு பிள்ளைகளுக்கும் ஜட்டியும் சட்டையும் போட்டு விட்டுக் கொண்டிருந்தாள்..

"ஐயோ.. டொமஸ்டிக் அனிமல் இல்ல அக்கா.. அது டொமஸ்டிக் வயலன்ஸ் குடும்ப வன்முறை.. மாம்ஸ் உன்னைய துன்புறுத்துதுன்னு சொன்னேன்.. என்றான் அவன்..

மீசையை முறுக்கிகிட்டு மதுரை வீரன் கணக்காக நிக்க வேண்டியது.. முறைக்கிறாரா.. கொஞ்சறாரா எனக்கே தெரிய மாட்டேங்குது.. பயந்து வருது தெரியுமா".. என்று சொன்னது கடவுளுக்கே அடுக்காது.. இவளுக்கு வீராவைக் கண்டு பயமாம்..

இதெல்லாம் எவ்வளவு பெரிய துன்புறுத்தல் தெரியுமா.. இன்னும் தூண்டி விட்டான் அவன்..

"யாருடா துன்புறுத்துறது".. என்று ஓங்கி ஒலித்த குரலுக்கு சொந்தகாரனாக குளிக்க வைத்த அடுத்த இரண்டு குழந்தைகளை அவன் சட்டையில் ஈரம் ஓட்டி நனைந்து போக நெஞ்சோடு அணைத்துத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான் வீரபாண்டியன்..

"நீ தாண்டா என்னைய துன்புறுத்துற.. உன் தொல்லை தாங்க முடியாம தான் போனை ஏரோபிளேன் மோட்ல போட்டேன்.. உங்க அக்கா நான் கண்ணசந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு பரமசிவம் புள்ளை கிட்ட போனை கொடுத்து அதை எடுத்து விட்டுட்டா".. என்று பாயை விரித்து குழந்தைகளை கடத்தி.. ஒரு பெரிய துண்டால் இருவரையும் துடைத்தவரை சீறிக் கொண்டிருந்தான் வீரபாண்டியன்..

"என்ன வீரபாண்டியரே எங்க அக்காவ என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறீரோ".. தமிழ் ஃபோன் திரையில் முகம் சுருக்கினான்..

"வேற என்னத்த செய்யறது.. உங்களை பிரிக்கலைன்னா நான் வாழ முடியாதே... ஏண்டா ஹாஸ்பிடல் போனா வேலைய பாக்காம இங்க என்னடா உங்க அக்கா கூட அரட்டை அடிச்சிட்டு கிடக்க.. ஏன் பேஷண்ட் வராமல் ஈ ஒட்டிக்கிட்டு கிடக்கியா.. இல்ல நீ போலி டாக்டர்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?".. என்று குழந்தைகளுக்கு மணக்க மணக்க பவுடர் போட்டுக் கொண்டே.. தமிழை வாரினான் வீரா..

"அதெல்லாம் வெளியில பேசண்ட்ஸ் காத்துகிட்டுதான் இருக்காங்க.. நான்தான் எங்க அக்கா கிட்ட பேசுறதுக்காக போனை போட்டேன் நீரு ஏம்யா நடுவில் வரீறு.. பொண்டாட்டிய கூட்டிட்டு போனதும் திமிர்ல எகத்தாளம் கூடி போய்தான் கிடக்குது.. எக்கா.. உன் புருஷனை அமைதியா இருக்க சொல்லு.. தேவையில்லாம பேசிட்டு கிடக்காரு.. நேர்ல வந்தேன்னா அப்புறம் நடக்கிறதே வேற".. தமிழ் கோபத்தில் படபடத்தான்..

"என்னடா பண்ணுவ.. இல்லாததையும் பொல்லாததையும் உங்க அக்கா கிட்ட சொல்லி அவளை என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போவ.. போடா.. சகுனி பயலே".. வீரபாண்டியன் தமிழை முறைத்துக் கொண்டே.. இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு அங்கமாவிடம் சென்றான்.. மற்ற இரண்டு பிள்ளைகளும் அவன் பின்னே ஓடி விட..

"அவரை விடுடா.. அக்கா உன் தம்பியா நாலு வார்த்த சந்தோசமா சிரிச்சு பேசிட்டாலே இவருக்கு பிடிக்காது.. சரி நீ சொல்லு ஆரா எப்படி இருக்கா.. டேய் அதான் ரெண்டு பேருக்கும் சமைக்க சொல்லி கொடுத்துட்டு தானே வந்தேன்.. நான் இல்லாத போது ஒழுங்கா தானே சமைச்சு சாப்பிட்டீங்க.. இப்ப திடீர்னு என்ன வந்துச்சு.. கஷ்டத்தை பாக்காம ஏதாவது.. உடம்புக்கு ஆரோக்கியமாக சமைச்சு சாப்பிடுங்கடா.. ஆரா பசி தாங்க மாட்டா.. சமைக்க சோம்பேறித்தனப் பட்டுகிட்டு அடிக்கடி ஓட்டலில் இருந்து வாங்கி கொடுக்காதே.. உடம்புக்கு சேராது".. என்று ஆருஷி அன்பு மழை பொழிந்து கொண்டிருந்த வேளையில்..

"என்னை இருந்தாலும் நீ சமைச்சு போடுற மாதிரி வருமா.. ஆரா பிறந்தநாள் வேற வருது.. பாப்பா வேற ஒரே டல்லா இருக்கா.. சரியா சாப்பிடவே மாட்டேங்குறா.. என்னன்னே தெரியலையே" தமிழ் கவலை பட்டுக்கொள்ள "என்னது.. ஆரா சோகமா இருக்காளா.. என்னடா ஆச்சு அவளுக்கு?" என்று பதை பதைத்தாள் ஆருஷி..

"ஆரா மட்டுமில்ல.. நானும் சோகமா தான் இருக்கேன்".. வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான் தமிழ்..

"ஐயோ தமிழு.. என் தம்பி.. கலங்காதடா கண்ணா!!".. கண்கள் நனைந்து இதழ்கள் துடிக்க உருகினாள் ஆருஷி..

அந்நேரம் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு.. போன் கேமராவின் முன்னே வந்து நின்று எதையோ தேடிக் கொண்டிருந்தான் வீரபாண்டியன்..

"யோவ் மாமா.. அங்க என்னய்யா பண்ற.. பேசிகிட்டு இருக்கோம் இல்ல".. தமிழ்.. ஆருஷி.. ரெண்டு பேரும் கடுப்போடு கோரசாக கத்தினர்..

"அட இருடி.. பிள்ளைங்களுக்கு மை வைக்கணுமாம்.. அம்மை எடுத்துட்டு வர சொல்லுச்சு.. அதை தான் தேடிக்கிட்டு இருக்கேன்".. வீரபாண்டியனின் சட்டை மட்டுமே தெரிந்தது அந்த மொபைல் திரையில்..

"அதான்.. எனக்கு மை வச்சுப்புட்டியே.. அப்புறம் என் புள்ளைங்களுக்கு வேற வைக்கணுமா யோவ் தள்ளுயா".. இது ஆருஷி..

"எக்கா"..

"தம்பி"..

"இந்தாளு ஏதோ சதி வேலை பண்றாருக்கா"..

"டேய்.. போய் நோயாளிகளை பாருடா கிறுக்கு டாக்டரு".. வீரபாண்டியனின் குரல் மட்டும் கேட்டது.. நகரவே மாட்டேன் என்பது போல் தூணாக நின்று கொண்டிருந்தான் அவன்..

"யோவ்.. அதெல்லாம் எனக்கு தெரியும்.. தள்ளி போய்யா".. எப்போதும் போல் தமிழிடமிருந்து மரியாதை இல்லாத உரிமையான பேச்சு..

திடீரென போன் கீழே விழுந்து விட்டதா என்னவென்று தெரியவில்லை.. சாணி போட்டு மொழுகிய தரை மட்டுமே தெரிய.. அப்படியே ஸ்ட்ரக் ஆகி நின்றுவிட்டது போலும்..

"ஹலோ ஹலோ" என்று தமிழ் இங்கே கத்திக் கொண்டிருப்பது அவர்களுக்கு கேட்கவில்லை.. ஆனால் அவர்கள் பேசிக் கொண்டிருந்தது தெள்ளத் தெளிவாக அவன் காதுகளில் விழுந்தது.. கால் ஹோல்டில் போய்விட்டது போலும்..

"யோவ்.. மாமா.. என்னைய்யா பண்ணி தொலைச்சே.. ஃபோன உடைச்சிட்டியா எதுவுமே வரமாட்டேங்குது".. ஆருஷி கத்தினாள்..

"நான் ஒன்னும் பண்ணல டி.. தெரியாம கை பட்டு உடைஞ்சு போச்சு.. சரி விடு.. மாமா உனக்கு புது போன் வாங்கி தரேன்"..

"எப்போ"..

"ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ள?"..

ஆருஷி கோபத்துடன் போனில் பெருமூச்சு விடும் சத்தம் தமிழுக்கு தெளிவாக கேட்டது.. "ஹை.. கிளம்பி வாக்கா.. உனக்கு நான் ஃபோன் வாங்கி தரேன்.. இங்கேருந்து வீடியோ கால் போட்டு நாம ரெண்டு பேரும் அந்த ஆளை வெறுப்பேத்துவோம்".. என்ற தமிழின் குரல் தான் பாவம் அவளுக்கு கேட்கவில்லை

"எனக்கு தெரியும் நானும் என் தம்பியும் பேசினாலே.. உமக்கு பொறுக்காதே.. பொறாமை புடிச்ச மனுஷன்... வேணும்னே போனை தட்டி விட்டுட்டு.. பொய் சொல்லுறிகளா!!.. அதான் பேச்சைக் கேட்டு உங்க கூடவே மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் மாதிரி.. என் தம்பி என் தங்கச்சியை விட்டுட்டு வந்துட்டேனே.. ஒரு ஃபோன் பேசக்கூட இந்த வீட்ல சுதந்திரம் இல்லையே.. இதை நான் எங்க போய் சொல்லுவேன்".. என்று ஆருஷி எட்டுக்கட்டை ஸ்ருதியில் புலம்பி கொண்டு நடு நடுவே மூக்கை சிந்தும் சத்தம்.. அதனை தொடர்ந்து இருவருக்கிடையேயான பேச்சு வார்த்தைகளும் விவாதங்களும் ஒரு கட்டத்தில் அடங்கி போயின..

"அடேய்ய்.. மாமா.. என்னோட அக்காவை என்ன செஞ்சே".. தமிழ் இந்த பக்கமிருந்து கத்திக் கொண்டிருந்தது அங்கே கேட்கவில்லையே..

""ஒருவேளை இந்த மாமா அடிச்சி என் அக்கா வாய ஒடச்சிட்டாரோ.. பேச்சு வரலையே.. எண்ட குருவாயூரப்பா".. தமிழ் கவலையுடன் புலம்பிக் கொண்டிருந்தான்..

"இச்.. இச்.. இச்".. அந்த பக்கம் சத்தம்..

அய்யோ மாமா வீட்டு பல்லி வேற கத்துதே.. அப்ப நான் நினைச்சது சரிதான் போலிருக்கு.. ஆத்தாடி..

அய்யோ என்னை விட்டுடுங்க மாமா.. இனிமே உங்க கிட்ட வாயை கொடுக்கவே மாட்டேன்.. அதை தொடர்ந்து அவள் குரல்..

"அச்சோ அக்கா.. கதறுறாளே!! இவன் நெஜமாவே எங்க அக்கா வாய ஒடச்சிட்டான்.. நான் இப்பவே கிளம்புறேன்" என்று எழுந்தவனை "அடச்சே.. உக்காருய்யா.. அக்கா மேல இருக்கிற கண்ணு மண்ணு தெரியாத பாசத்துல எதையுமே யோசிக்க மாட்டியா".. பழக்கப்பட்ட குரலில் கண்களை விரித்து வாசலை பார்த்தான் தமிழ்

"போனுக்கு நேரா வந்து பல்லி கத்துதாக்கும்.. அவங்க சந்தோசமா இருக்காங்க.. தொந்தரவு பண்ணாம போனை ஆஃப் பண்ணுங்க".. என்று உள்ளே வந்தாள் துவாரகா..

அப்போதுதான் விஷயமே புரிய.. வெட்கப்பட்டு கொண்டு சிறிதாக புன்னகைத்தான் தமிழ்.. சட்டென போனை அணைத்து விட்டவன்.. அடுத்த கணமே துவாரகா தன் எதிரே நிற்பதை பார்த்து ஜெர்க் ஆகி.. சடுதியில் முகம் மாற.. "ஏய் நீ எதுக்குடி இங்க வந்தே? உன்னை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா.. இல்லையா.. முதல்ல இங்கிருந்து கிளம்பு ரீட்டா.. இவளை எதுக்கு உள்ள விட்டீங்க".. என்று அதே கோபத்துடன் ரீட்டாவின் பக்கம் திரும்பினான்..

"இல்ல டாக்டர் இன்னும் பேஷண்ட்ஸ் வரல.. இவங்க மட்டும் தான் இருந்தாங்க.. அத்தோடு நாய் கடிச்சிருச்சுன்னு வேற சொன்னாங்க.. பாக்க பாவமா இருந்துச்சு.. மறுக்க முடியல.. ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ணி அனுப்பி விடுங்க.. டாக்டர் ப்ளீஸ்" என்றாள் ரீட்டா கெஞ்சலாக..

"என்னது நாய் கடிச்சிடுச்சா".. தமிழ் விழிகளை விரித்து திகைப்புடன் துவாரகாவை பார்க்க..

"ஆமா.. கொஞ்சம் பெரிய சைஸ் புல்டாக்.. ஈவு இரக்கமில்லாம கடிச்சு வச்சுருச்சு".. என்றாள் அவள் உதட்டை பிதுக்கி அப்பாவியாக..

அடுத்த வினாடியே அவள் யாரைச் சொல்கிறாள் என்று புரிந்து விட.. "எல்லை மீறி போயிட்டோமோ" என்று மனதின் ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி குறுகுறுத்தாலும்.. மறுபக்கமோ "நாய்ன்னா சொல்ற.. கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு அப்படியே முழுசா விட்டு வைச்சேன்ல.. தப்புதான்.. இனிமே நீ இந்த பக்கமே வராத அளவுக்கு.. பெரிய மாட்டு ஊசியா போட்டு உன்னை கதற விடுறேன்டி".. என்று பற்களை கடித்தவாறு மனதுக்குள் எண்ணிக்கொண்டு அவளை முறைத்தவன்..

"சரி எங்கே காட்டுங்க பாக்கலாம்" என்றான் ப்ரொபஷனல் டாக்டராக..

"அது டாக்டர் இங்கே".. என்று அவள் சுடிதார் டாப்பை தூக்க.. "வேண்டாம் வேண்டாம்.. ரீட்டா இவங்களை கூட்டிட்டு போய் செக் பண்ணி கூட்டிட்டு வாங்க".. என்றான் நர்சிடம்..

"கடிக்கிற நாய் கிட்ட நீ ஏன்மா போற?".. ரீட்டா அவளை எழுப்பி அழைத்துச் சென்றவாறே அக்கறையாக கேட்டிருந்தாள்..

"பழக்கப்பட்ட நாய் மேடம்.. இவ்வளவு நாள் கொஞ்சிக்கிட்டு இருந்துச்சு.. நேத்து என்னவோ தெரியல கடிச்சு வச்சுருச்சு".. என்றாள் அவள் கள்ளப் புன்னகை இதழில் உறைய தமிழை பார்த்துக் கொண்டே..

"அடிங்".. தமிழ் கோபத்துடன்.. எழுந்து வர முற்பட.. சட்டென அங்கிருந்து ஓடி விட்டாள் துகி..

அவளை பரிசோதித்து விட்டு வெளியே வந்த ரீட்டா.. முகத்தில் ஒரு தீவிரம்..

"என்ன ரீட்டா செக் பண்ணிட்டீங்களா" என்று தனது கணினியில் எதையோ தேடிக் கொண்டிருந்தவன் மெல்ல விழிகளை உயர்த்தினான்..

"சார் இது கொஞ்சம் சீரியஸ் கேஸ் தான் நினைக்கிறேன்.. நாய் கடிக்கல.. ஏதோ ஒரு மனுஷன் கடிச்சு வச்சிருக்கான்".. என்று ரகசியம் போல காதோரம் கூறினாள் ரீட்டா..

"ஹான்?" என்று விழித்தான் அவன்..

"அது.. அவங்க உங்க கேர்ள் ஃப்ரெண்ட்.. உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு மறைக்கிறாங்க போலிருக்கு.. கண்டிப்பா இது ரேப் அட்டெப்ட் நினைக்கிறேன் சார்"..

"ஏதேய்ய் ரேப்பா.. தமிழுக்கு நெஞ்சு வலி வராத குறை"..

"ஆமா சார்.. ஏதோ காஞ்ச மாடு".. என்று முடிக்கும்முன்..

"போதும்.. போதும்".. தமிழ் டென்ஷனாக தலையை கோதினான்..

"உங்க வேதனை எனக்கு புரியுது சார்.. ஆனா நீங்க இதை ஃபேஸ் பண்ணி தானே ஆகணும்.. அந்த பொண்ணு கிட்ட பேசுங்க சார்".. என்று பெருமூச்சு விட்டு பீல் பண்ணியவளோ அங்கிருந்து வெளியேறி இருந்தாள்..

"இது வேறயா".. சலித்தான் தமிழ்.. எல்லாம் அன்னைக்கு பாவாடை தாவணியால வந்த வினை.. தன்னையே நொந்து கொண்டான்..

உடைகளை சரி செய்து கொண்டு வெளியே வந்த துவாரகாவை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான் அவன்..

"ஏதாவது மருந்து எழுதி தாங்க டாக்டர்.. விஷம் உடம்புக்குள்ள ஏறி ஏதாவது பிரச்சனையாகிட போகுது" என்றாள் துவாரகா குறுகுறுவென தமிழை பார்த்தபடி சிரிப்பை இதழுக்குள் அடக்கிக் கொண்டு..

"மருந்து இல்லடி விஷ ஊசி போட்டு உன்னை கொல்லப் போறேன்".. எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. என் ரூமுக்குள்ள வராதே என் கட்டில்ல படுக்காதேன்னு.. செய்றதெல்லாம் நீ செஞ்சிட்டு என் மேல பழியை போட்டா எப்படி.. ரீட்டா வேற என்ன காம கொடூரன் அளவுக்கு சித்தரிச்சு பேசிட்டு போறா.. நான் என்ன உன்கிட்ட அவ்வளவு வைலன்ட்டாவா நடந்துகிட்டேன்".. என்று தமிழ் சீறிக் கொண்டு வர...

"ஹான்.. என்ன?.. என்ன?".. துவாரகா புருவத்தை உயர்த்தி அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தாள்..

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய்.. தடுமாற்றத்துடன்.. தன் முகத்தின் பாவனையை மாற்றிக் கொண்டு "சரி.. அன்னைக்கு கொஞ்சம் எமோஷனலா இருந்தேன்.. அதனால எசகு பிசகா அப்படி ஆகிடுச்சு.. அது.. நீ அன்னிக்கு தாவணி பாவாடை கட்டிட்டு வந்திருக்க கூடாது.. அத்துமீறி நுழைஞ்சு ஒரு ஆம்பளையோட மனசை கெடுத்துட்டு.. அப்புறம் எல்லாத்துக்கும் அவனையே குத்தம் சொன்னா எப்படி".. குற்ற உணர்ச்சி தாளாமல் அவன் வள வளவென பேசிக் கொண்டிருந்த அழகை கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருந்தாள் துவாரகா..

ஒரு கட்டத்தில் அவள் பார்வையின் கோணத்தை கண்டு கொண்டவன் கீழுதட்டை பற்களால் கடித்து "ஏய் நீ எதுக்காக வந்திருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும்.. மரியாதையா இங்கிருந்து கிளம்பு.. ஆயிரம் முறை சொல்லிட்டேன் இங்கே வரக்கூடாதுன்னு.. இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னாவது முறை ஸ்ட்ராங்கா சொல்றேன்.. இனிமே நீங்க வரவே கூடாது".. என்றான் சற்றே கடுமையாக..

அதற்கெல்லாம் அசருபவளா அவள்.."ஹலோ.. உங்ககிட்ட தேவை இல்லாத கதை பேசுறதுக்காக வரல டாக்டரே.. ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக தான் வந்தேன்".. அவளும் முறுக்கிக் கொண்டாள்..

"நான் வாலன்டியரா ஒர்க் பண்ற அன்னை இந்திரா காந்தி முதியோர் இல்லத்துல.. மெடிக்கல் கேம்ப் ஆர்கனைஸ் பண்ண போறோம்.. இவ்வளவு நாளா சர்விஸ் பண்ண டாக்டர் லாஸ்ட் இயர் தான் ஹார்ட் அட்டாக் இறந்து போனாரு.. சோ உங்களால எங்களுக்கு ஏதாவது ஃபேவர் பண்ண முடியுமான்னு கேக்க தான் வந்தேன்".. பார்வையில் வேறுவிதமான மிடுக்கை கொண்டு வந்திருந்தாள் துவாரகா..

துவாரகாவின் இந்த பரிமாணத்தில்.. விழிகளில் ஒரு மலர்ச்சியுடன் .. "ஓஹ் அதுக்கென்ன.. தாராளமா பண்ணிடுவோம்.. எப்ப ஆர்கனைஸ் பண்ணனும்".. என்று கேட்டிருந்தான்.. தமிழை துவாரகா ஈர்த்த விதங்களில் இதுவும் ஒன்று.. அவள் சேவை மனப்பான்மை..

"ம்ம்.. உங்க கன்வினியன்ஸ் பார்த்துட்டு ஷெட்யூல் ஃபிக்ஸ் பண்ணிட்டு.. எங்களுக்கு இன்பார்ம் பண்ணுங்க டாக்டர்"..

"ஓகே மேடம்".. அவனும் தலை சாய்த்து புன்னகைத்தான்..

"அப்போ.. நான் கிளம்பட்டுமா".. அவள் குறும்பு சிரிப்புடன் கேட்க.. "தயவு செஞ்சு கிளம்பு" என்று தலைக்கு மேலே கும்பிடு போட்டான்..

சட்டென மூக்கு சுருங்க கோபப்பட்டவளோ அங்கிருந்து வேகமாக எழுந்து வெளியேற முற்பட.. நகரமுடியவில்லையே.. அவள் வலக்கரத்தினை அழுத்தமாக பற்றி இருந்தான் தமிழ்..

"என்ன?".. என்பதைப் போல் அவள் பார்வை கோபமாக வெளிப்பட.. "வலிக்குதா".. அவன் பார்வையிலோ கனிவும் குறும்பும்..

கரைந்த பனிக்குமிழாய் கோபம் எங்கே மறைந்து போனதோ முகத்தில் வெட்கப் பூச்சுடன் தலை தாழ்ந்து கொள்ள.. "இல்லை" என தலையசைத்தாள்..

"சாரி.. இனிமே அப்படி நடக்காது".. என்றான் நாணத்தோடு சிவந்திருந்த முகத்தில் தன் விழிகளை பதித்தபடியே.. வெட்கமும்.. இதழ் குவிந்த புன்னகையும் அவனை படாத பாடு படுத்தியது.. பெண்ணின் உடல்பாகங்கள்.. செயல்பாடுகள் ஹார்மோன் மாற்றங்கள்.. ஆண் பெண் உறவு.. குழந்தை பிறப்பு என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் படித்து... வாழ்வியல் பாடம் என்று எளிதாக கடந்து வந்த மருத்துவனால்.. துவாரகாவிடம் மட்டும் இயல்பாகவே இருக்க முடிவதில்லை.. அவள் நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகள் கூட அவனை சலனப்படுத்திக் கொண்டிருக்கிறது..

"கோபம் போய்டுச்சா?".. என்றான் கண்களால் அவளை மெஸ்மரிசம் செய்து கொண்டே.. "கோபமா.. எதுக்கு?".. எதிர் கேள்வி கேட்டு அவனையே மலைக்கச் செய்தாள் அவள்..

உண்மையில் அவன் அன்று.. காதலின் சுவடுகளை ஆழமாகவும் சற்று முரட்டுத் தனமாகவும் பதித்திருந்த விதத்தில் மீண்டும் தன் பக்கமே வர மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தான்..

அனைத்தையும் காதலின் அச்சாரமாக ஏற்றுக் கொண்டு.. மான் குட்டி போல் தன்னையே தேடி ஓடிவரும் அவள் நேச மழைதனில் திக்கு முக்காடி போகின்றான் தமிழ்..

அவன் பற்றியிருந்த கரத்தினை மெல்ல இழுத்து முத்தமிடும் வேளையில்.. "டாக்டர் கொஞ்சம் சீக்கிரம் வாங்க.. மறுபடியும் அந்த பொண்ணு.. ரொம்ப ஆக்ரோஷமா பிஹேவ் பண்றா. எங்களால கண்ட்ரோல் பண்ணவே முடியல".. பதட்டத்தோடு ரீட்டா வந்து அழைக்கவும்.. துவாரகாவின் கரத்தினை உதறிவிட்டு தன்னை மறந்து அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தான் தமிழ்..

"என்னாச்சு.. ஏதோ நிலைமை சரியில்லை" என்று அவன் பின்னே அவளும் ஓட.. வேகமாக ஓடி சென்றவனோ அந்த தனி வார்டினுள் நுழைந்திருந்தான்..

"ஆஆஆஆ". வென.. ஒரு பெண்ணின் அலறலில் சற்று உடல் தூக்கி வாரி போட.. திடுக்கிட்டு போனாள் துவாரகா.. தமிழைத் தொடர்ந்து அவளும் அந்த அறைக்குள் முன்னேறி சென்று ஒரு ஓரமாய் நின்று எட்டி பார்க்க.. பச்சை நிற திரைகள் சுற்றிலும் மறைக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை வயிற்றோடு கட்டியணைத்துக் கொண்டு அவன் நின்றிருந்த கோலம் கண்டு உறைந்து போனாள் துவாரகா..

தொடரும்..
 
Member
Joined
May 3, 2025
Messages
35
அடப்பாவி தமிழு பாண்டியன கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விட மாட்டயாடா .... கொஞ்ச gap கிடைச்ச கூட கூட்டிட்டு வந்துருவான் போலயே....
ஏய் தேனு நீ வீராவா பார்த்து பயந்த...இத புல்ல பூச்சி கூட நம்பாது....

வெயிட் and watch thuki...don't think too much...
 
Well-known member
Joined
Nov 20, 2024

அடேய் கிருக்கு டாக்டர் நீ மட்டும் விதவிதமா எங்க துகி பாப்பா கூட ரொமான்ஸ் பண்ற ஆனா எங்க மாம்ஸ் மட்டும் சந்தோஷமா இருக்க விடமாட்ற 🤣🤣🤣
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
34
தமிழ் உன் அலம்பலுக்கு அளவில்லையாடா. நீ கல்யாணம் செய்யாமயே துகி கூட பல்லி சத்தம் போடுற வேலை பணணற.

வீரா மாம்ஸ் ஏதாவது செய்ய விடுறியா. குறுக்கால பூந்து ஆட்டைய கலைக்கவே திரியற மக்கு டாக்டர்.
 
Top