- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
"ஐயோஓஓ.. அம்மா.. வேண்டாம்.. கிட்டே வராதீங்க.. எனக்கு பயமா இருக்கு".. என்று முகத்தை மூடிக் கொண்டு அழுத பெண்ணவள் நர்ஸ் வந்து டிரிப்சை மாற்ற முயன்றதில்.. துள்ளி குதித்து விழுந்து கட்டில் நுனிக்கு நகர்ந்து கொண்டாள் அச்சத்தில் நடுங்கி.. பெண் தாதியை கண்டே இத்தனை பயம்.. பதட்டம்.. என்றால் அவளை அடக்கவந்த வார்ட் பாய்களை கண்டு காது கிழியும் அளவிற்கு கத்தி கூச்சலிட்டாள் அவள்..
"அச்சோ.. தினமும் இந்த பொண்ணு கூட ஒரே இம்சையா போச்சு.. என்னம்மா நீ.. ஓவரா பண்ணிட்டு இருக்க.. நாங்க என்ன உன்னை கொல்லவா பார்க்கிறோம்.. காப்பாத்துறதுக்காக கூட சிகிச்சை பண்ண விட மாட்டியா.. உடம்பெல்லாம் புண்ணா இருக்கும்மா.. இப்படி அலட்டிக்காதே.. ஒரு இடத்துல படுக்காம இப்படி அங்கேயும் இங்கேயும் நகர்ந்துக்கிட்டே இருந்தா காயம் எப்படி ஆறும்".. என்று அதட்டியவாறே குத்த வந்த ஊசியை.. நடுக்கத்துடன் தட்டி விடவே.. அந்த ஊசியின் முனை நடுத்தர வயது நர்ஸ் பெண்மணியின் முகத்தை பதம் பார்த்து விட்டது ..
"அய்யோ.. அம்மா".. என்று வலியில் அலறிய அந்த நர்ஸ்.. இருந்த கொஞ்சநஞ்ச பொறுமையையும் காற்றில் பறக்க விட்டு ஆத்திரத்துடன் பற்களை கடித்தாள்.. "அம்மா.. செல்லம்..பட்டு.. என்று கொஞ்சி கெஞ்சி சிகிச்சை செய்ய இது ஒன்றும் தனியார் ஆஸ்பத்திரி அல்லவே.. அரசு பொது மருத்துவமனை சிகிச்சைகள் சற்று முரட்டுத்தனமாக தான் இருக்கும்.. ஆனால் மிரண்டு விழிக்கும் இந்த பெண்ணிற்கு தான்.. அவர்களின் சிகிச்சை முறை ஒத்துக்கொள்ளவில்லை போலும்..
"ஏய்.. போனா போகுது சின்ன பொண்ணாச்சேனு நாங்களும் பொறுமையா போனா.. ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கே நீ.. உன்னைய?".. என்று முகத்தில் காயம் பட்ட கோபத்தில் அவளை அடிக்க கை ஓங்கியிருந்தாள் அந்த நர்ஸ்..
மனிதர்களின் மெல்லிய சுவாசக் காற்று மோதியதற்கே பயந்து நடுங்கிய அந்த பெண் கண்களை உருட்டிக் கொண்டு கை ஓங்கி நிற்கும் அந்த கரடுமுரடான நர்சை கண்ட பிறகு.. அமைதியாக இருப்பாளா என்ன?.. பேயைக் கண்டது போல் கத்தி கூச்சலிட்டு..ஐ வி போடுவதற்காக கையில் பொருத்தப்பட்டிருந்த ஊசியை பிடுங்க முயன்று மருத்துவமனையை ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.. யாராலும் அடக்கவே முடியவில்லை..
"தாரு பேபி"..
அத்தனை இரைச்சலைத் தாண்டிய மென்மையான குரலில் அப்படியே ஸ்தம்பித்து உறைந்து போனாள் அவள்..தலை தாழ்ந்திருந்தாலும் விழிகளை மட்டும் உயர்த்தி குரலுக்கு சொந்தக்காரனை நோக்கினாள்.. வாசலைத் தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்தான் தமிழ்.. அச்சத்தில் மிரண்டிருந்த அப்பெண்ணின் விழிகள் தமிழிடம் மட்டும் உரிமையாக அரவணைப்பு தேடுவது.. அங்கிருந்த அனைவருக்கும் ஏற்கனவே பரிச்சயமான ஒன்றுதான் என்றாலும் மீண்டும் மீண்டும் வியப்புக்கு உள்ளாகினர்..
"என்னாச்சு தாரு பேபிக்கு.. ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.. ம்ம்?.. இங்கே எல்லாரும் உன்னை பாதுகாக்க தான் முயற்சி பண்றோம் நீ தான் புரிஞ்சிக்க மாட்டேங்கிற".. என்று குழந்தையை கொஞ்சுவது போல் நர்ஸ் கையிலிருந்து இன்ஜெக்ஷனை வாங்கிக் கொண்டு.. கண்களால் சைகை செய்து மற்றவர்களை வெளியே அனுப்பினான்..
இப்படி அமர்க்களம் பண்ணலாமா?.. நாங்க எல்லாம் பாவம் இல்லையா பேபி?".. என்று வேடிக்கையாக கேட்பது போல் புருவங்களை உயர்த்தி சிரிக்கவும் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த பெண்ணின் முகத்தில் சிறு தெளிவு ... அவள் பார்வை தன்னை விட்டு அகலாதபடிக்கு விழிகளால் லாக் செய்து.. கரத்தினில் ஊசியை போட்டு தேய்த்து விட்டான் தமிழ்..
சுருக்கென ஊசி குத்தியதில்.. ஒரு கணம் உடல் அதிர்ந்து.. வலியோடு உதட்டை பிதுக்க போனவளை.. "ஒண்ணும் இல்லைடா.. அவ்ளோதான்".. என்று.. அவளை தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டான் தமிழ்..
"இப்படியெல்லாம் கலாட்டா பண்ண கூடாது தாரும்மா.. நான் வர வரைக்கும் குட் கேர்ள்லா அமைதியா படுத்து ஓய்வு எடுக்கணும் சரியா".. நான் ஈவ்னிங் வந்து உன்னை பார்ப்பேனாம்".. என்று நிதானமாக உரைத்து அவள் தலையை வருடி கொடுக்க.. "சரி" என்று தலையசைத்தவள்.. "தூக்கம் வருது டாடி".. என்றாள் கண்கள் சொருகியவாறே..
"சரி.. படுத்துக்கோ" என்று அவளை படுக்க வைத்து.. பக்கத்திலேயே அமர்ந்து கொண்டவனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு.. அவன் விரல்களைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் அவள்..
வாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த துவாரகாவிற்கு ஒரு மாதிரியாகி போனது அந்தப் பெண்ணின் நிலையைக் கண்டு.. பார்க்க இருபது அல்லது இருபத்திரெண்டு வயது மிகாதவளை போல் தான் இருந்தாள்.. கிட்டத்தட்ட ஆராவின் வயது.. ஆனால் அவள் தமிழை டாடி என்று அழைத்த விதமும் புதிதாக பூமிக்கு வந்த குழந்தை போல்.. கொட்ட கொட்ட விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விதமும்.. அந்த சிறு பெண்ணின் மன நிலையில் ஏதோ ஒரு பிரச்சனை என்று உணர்த்த.. அவளையும் அறியாது அந்த பெண்ணின் மீது இரக்கம் சுரந்தது..
அந்தப் பெண் உறங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு.. அவள் தலையை நகர்த்தி தலையணையின் மேல் வைத்த தமிழ் வருத்தம் தோய்ந்த முகத்துடன் அந்த பெண்ணை பார்த்துக்கொண்டே ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு.. அங்கிருந்து வெளியேறினான்..
வாசலில் அவனுக்காக காத்திருந்தாள் துவாரகா.. வெளியே வந்த தமிழை கண்டதும் பெஞ்சில் அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து அவனோடு நடக்க..
அவளை அங்கே எதிர்பார்த்திராதவன் "ஹேய்.. நீ.. இன்னும் போகலையா".. என்று விழிகளை சுருக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு நிற்காமல் தனது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான்..
"மாமா அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு?.. ஏன் ஒரு மாதிரி இருக்கா.. யாரைப் பார்த்தாலும் பயப்படுற மாதிரி தெரியுது?.. ஆனா உங்க கிட்ட மட்டும் பூனைக்குட்டி மாதிரி.. அடங்கி போறா.. நீங்க சொல்றதெல்லாம் கேக்குறா.. என்ன நடக்குது மாமா.. கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்".. என்று.. ஓட்டமும் நடையுமாக அவன் பின்னால் சென்றவளை.. திரும்பி முறைத்தவனோ.. "இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம்.. நீ வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. தயவு செஞ்சு கிளம்பு".. என்றான் உணர்ச்சி இல்லாத குரலில்..
"என்ன தேவையில்லாத விஷயம்.. அந்தப் பொண்ணை பார்த்தா ஏதோ சரி இல்லைன்னு தோணுது.. என்னோட பிராப்பர்ட்டியை கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிறா.. மடியில படுத்துக்கிறா.. நானே இவ்வளவு உரிமை கொண்டாடினது இல்லையே.. என்ன விஷயம்னு நான் தெரிஞ்சுக்க கூடாதா".. என்று பேசி முடிக்கும் வேளையில் இருவரும்.. தமிழின் அறைக்கு வந்து சேர்ந்திருந்தனர்..
"என்ன? என்னை சந்தேகப்படுறியா".. ஏளன புன்னகையுடன் தனது இருக்கையில் வந்து அமர்ந்தான் தமிழ்.. வழக்கம்போல அவன் எதிர் இருக்கையில் அமர்ந்தவளோ.. "ஆஹா.. இதையே சாக்கா வச்சு என்னை கழட்டி விடலாம்னு பாக்குறீங்களா.. நடக்காது மாம்ஸ்.. உங்க கூட சம்பந்தப்பட்டவளைப் பத்தி தெரிஞ்சுக்கிற உரிமை எனக்கு இருக்கு.. இப்ப நீங்க சொல்றீங்களா.. இல்லையா?".. விரல் நீட்டி எச்சரித்தவளை..
"சொல்ல முடியாது என்னடி பண்ணுவ?".. என்று அலட்சிய பார்வையுடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் தமிழ்..
"ஓஹோ.. அப்படியா?.. இப்போ.. ஒன்னும் பண்ண மாட்டேன்.. ஹாஸ்பிடல்ல கிரவுடா இருக்கிற நேரத்துல.. எல்லாரும் முன்னாடியும் வச்சு உங்களை கட்டிபிடிச்சு நச்சுனு கிஸ் அடிச்சிடுவேன்.. எனக்கு பிரச்சனை இல்ல.. ஆனா நீங்க இங்க டாக்டர்.. எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு திரும்பி இங்கே வருவீங்க.. மருத்துவ முத்தம் வாங்கின மருத்துவர்னு.. ஆஸ்பத்தியியே கைகொட்டி சிரிக்கும்.. பரவாயில்லையா?".. என்று புருவங்களை ஏற்றி இறக்கி கிண்டலாக சிரித்தாள் துகி..
நிச்சயம் செய்வாள் அவள் என அறிவான் தமிழ்.. பற்களை கடித்து அவளை முறைத்தவன்.. "இம்சைடி நீ.. சரி.. சொல்லி தொலைக்கிறேன்" என்றான் கடுப்பாக..
"அப்படி வாங்க வழிக்கு".. வெற்றி புன்னகையுடன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து.. மார்பின் குறுக்கே கைகளை கட்டிக் கொண்டாள் துவாரகா..
ஆழ்ந்த மூச்செடுத்தவன்.. சில கணங்கள் மௌனத்திற்கு பின்.. "அந்தப் பொண்ணு ரேப் விக்டிம்"... என்றான்.. இடைவெளி விட்டு..
"வாட்?".. துவாரகாவின் முகம் அப்பட்டமான அதிர்ச்சியை பிரதிபலித்தது..
"ம்ம்.. கேங் ரேப்.. மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா.. என்ன நடந்தது எங்கே நடந்தது.. எதுவுமே சொல்ல தெரியல அவளுக்கு.. மயக்கம் தெளிஞ்சு எழுந்ததிலிருந்து டாடி டாடின்னு மட்டும் தான் சொனன்னாளாம்.. யாரையுமே கிட்ட நெருங்க விட மாட்டேங்குறா.. ஒருமுறை ரவுண்ட்ஸ் போகும்போது.. ஜெனரல் செக்கப் காக அவ வார்டுக்கு போயிருந்தேன்.. என்னவோ தெரியல.. எல்லாரையும் பாத்து கத்தி கலாட்டா பண்ணிட்டு இருந்தவ.. என்னைப் பார்த்ததும் டாடி.. டாடின்னு..அழுது என்னை கட்டிப்பிடிச்சு கிட்டா.. சம்திங் ஐ ஃபீலிங் எமோஷனல் துகி.. ஆரா நியாபகம் வந்துடுச்சு.. என்னும் போதே கண்கள் சிவந்து கலங்க தயாராகி விட்டிருந்தது..
"சின்ன பொண்ணு துவாரகா.. என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியல.. சம்பந்தப்பட்டவங்களை வெட்டி போடணும்ங்கிற அளவுக்கு வெறி வருது".. என்றான் கோபத்தில் முகம் இறுக..
"யாரு மாமா.. அவளோட இந்த நிலைமைக்கு காரணம்".. துவாரகா வேதனையுடன் கேட்க.. பெருமூச்சுடன் "தெரியல துகி.. போலிஸ் வந்து என்கொயரி செஞ்சாலும் ஸ்டேட்மெண்ட் கொடுக்குற நிலையில அவ இல்லை.. அவளோட இந்த நிலைமைக்கு காரணம் யாருன்னு அவளுக்கே தெரியல".. என்றான் தமிழ் இறுகிய முகத்துடன்..
"இவளோட அப்பா அம்மா சொந்தக்காரங்க யாராவது?"..
"அப்பா மட்டும்தான் அவரும்.. இவளை நாசம் பண்ணி அந்த மிருகங்கள் போட்டுட்டு போன இடத்துக்கு ஒரு பத்து கிலோமீட்டர் முன்னாடி.. அடிபட்டு இறந்து கிடந்தார்.. அவரோட கை பையில இருந்த ப்ரூஃப் வச்சு தான் இந்த பொண்ணு அவரோட மகள்னு போலீஸ் கண்டுபிடிச்சாங்க.. இதுல கொடுமை என்னன்னா அவளோட அப்பா இறந்த விஷயமே இந்த பொண்ணுக்கு தெரியல.. என்னைதான் டாடி டாடி ன்னு கூப்பிடுது.. மீடியால தகவல் கொடுத்தும்.. சொந்தக்காரங்க யாருமே வராததால.. அவரோட பாடியை மார்ச்வரில இருந்து வாங்கி நான்தான் கடைசி காரியங்கள் எல்லாம் செஞ்சு முடிச்சேன்"... என்று முகத்தில் வேதனை சாயலோடு முடித்திருந்தான் தமிழ்..
"அந்த பொண்ணோட பேரு என்ன மாமா".. துவாரகா கண்கள் கலங்கி போயிருந்தாள்.. தொலைக்காட்சியில் செய்தித்தாள்களில் இப்பேற்பட்ட செய்திகளை படித்திருந்தாலும் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டு ஜீரணிக்க முடியாமல் நெஞ்சம் கலங்கி போயிருந்தாள் அவள்..
"அந்த பொண்ணு பேரு தாரா" என்றான் தமிழ்..
சில கணங்கள் மௌன இடைவெளிக்கு பின் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள் துவாரகா..
"சரி நீ கிளம்பு எனக்கு வேலை இருக்கு.. இன்னைக்கு என்னுடைய எல்லா வேலையும் கெட்டுப் போச்சு உன்னால.. சீக்கிரம் போ" என்று கடுகடுத்தவன்.. பார்வையை அவளிடமிருந்து விலக்கி.. தனது கைக்கடிகாரத்தை சரி செய்வது போல் பாவனை செய்யவும்.. தாராவை பற்றி தெரிந்து கொண்டதில் தமிழை சீண்ட மனமில்லாது கனத்த மனதுடன் அங்கிருந்து எழுந்து நடந்தாள் துவாரகா..
இரண்டு அடிகள் வைத்து அறையை விட்டு வெளியேறும் முன் சட்டென ஒரு கரம் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள.. அந்நேரத்திற்கு தேவைப்பட்ட ஆறுதலில் அவன் நெஞ்சுக்குள் புதைந்து கொண்டாள் அவள்.. இப்படி ஒரு கொடூரத்தை கேட்ட தனக்கே.. சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்படுகின்றதே.. ஜீரணிக்க முடியாத அந்த வலிகளையும் வேதனையையும் அனுபவித்த அந்தப் பெண்ணின் மனநிலை என்னவாக இருக்கும்.. அதுவும் ஒரே துணையாக இருந்த அப்பாவும் இறந்த நிலையில்.. எப்படி அத்தனை கொடுமைகளையும் தாண்டி கடந்து வரப் போகிறாள்.. என்று யோசித்தவளுக்கு நெஞ்சம் நடுங்கி கண்ணீர் நிற்காமல் வழிந்தது..
துவாரகாவின் முகத்தை கையிலேந்தி.. தன்னை பார்க்க செய்திருந்தான் தமிழ்.. கலங்கிய அவளின் வழிகள் அவன் தீர்க்க விழிகளோடு கலந்திருக்க.. கனிவோடு.. "நடந்த விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது துகி.. நடக்கப் போற விஷயங்களை நல்லதா மாத்துவோம்.. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.. தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதே.. இதையே யோசிச்சுட்டு இருக்காதே.. சரியா" என்று அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவனை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் துவாரகா.. அவள் கண்ணீர் விடுவதையோ கலங்குவதையோ அவன் விரும்பவில்லை என்பதன் அழகான அர்த்தமே இந்த முத்தம்.. எத்தனையோ முறை முத்தமிட்டு இருக்கிறான் இதழில்.. கன்னத்தில்.. கழுத்து வளைவில்.. இடையில்.. என.. ஆனால் இந்த முத்தம் தாய்மையின் வெளிப்பாடு.. துவாரகாவிற்கு சொந்தமான அவன் ஆழ்மனதின் அன்பின் வெளிப்பாடு.. அவன் முரட்டுத்தனமான காதலை மட்டும் கண்டு கொண்டவளுக்கு இந்த அதீத மென்மையும் பிடிக்கத்தான் செய்தது..
"பாத்துப் போ".. சட்டையே முழங்கை வரை ஏற்றிவிட்டு கொண்டு.. மீண்டும் ஒரு முறை அவளை இழுத்து அணைத்து விடுவித்தவன் "போடிஇஇ".. என்று வாசல்வரை இழுத்துக் கொண்டு போய் விட்டு வந்தான்..
"இப்படி இருந்தா உன்னை யாருக்குதான் பிடிக்காதுடா?.. தமிழ் மாமா".. அவள் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே செல்ல.. "என்னடி முனகறே" என்றான் குரல் உயர்த்தி..
"அது.. கிட்ட வந்து சொல்லவா".. அவள் மீண்டும்.. இதழ் குறுகுறுக்க அருகே வர முயல.. பழைய ஃபார்முக்கு வந்து விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டு.. "வேண்டாம் வேண்டாம் அப்படியே கிளம்பு".. என்று தனது கரத்தால் போ என்பது போல் சைகை காட்டி விரட்டினான் அவன்.. உதட்டை சுழித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டாள் துவாரகா.. "ராங்கிஇஇ.. ராட்சசி".. இதழுக்குள் சிரிப்பை ஒளித்துக் கொண்டு.. வெளியே விரைப்பாக.. டேபிளில் ஓபி சீட்டுகளை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்த.. ரீட்டாவிடம் "அடுத்த பேஷண்டை அனுப்புங்க".. என்று கணீர் குரலில் உத்தரவிட்டு தன் அறைக்குள் சென்றிருந்தான் தமிழ்..
முதல் வகுப்பை எடுத்து முடித்துவிட்டு.. ஸ்டாஃப் ரூமிற்குள் அமர்ந்து அடுத்த வகுப்பிற்காக தயார் செய்து கொண்டிருந்தவனின் கவனம் பாடப்புத்தகத்துடன் ஒன்றவில்லை என்பதே உண்மை..
காலையிலிருந்து ஆரா நடந்து கொள்ளும் முறையே வித்தியாசமாக தோன்றியது.. "நான் அண்ணன் கூடவே வந்துக்கிறேன்" என்று தமிழோடு காரில் வந்து காலேஜில் இறங்கினாள்.. இத்தனை நாட்களாக அடித்து விரட்டினாலும்.. "நான் உன்கூடத்தான் வருவேன்".. என்று அவனோடு வந்து ஒட்டிக் கொள்பவள் இன்று திடீரென விலகிப் போக காரணம் என்னவென்று புரியவில்லையே.. ஒருவேளை பார்கவி ஏதாவது குட்டையை குழப்பி விட்டாளா என்று யோசித்தாலும்.. காலையில்தானே பார்கவி அவனிடம் வந்து.. "இனி உங்களுக்கும் ஆராவிற்கும் இடையே நான் வரவே மாட்டேன் குரு.. எனக்கான முக்கியத்துவத்தை மட்டும் கொடுங்கள்".. என்று மன்னிப்பு கேட்ட விதம் அவள் காரணமாக இருக்க மாட்டாள் என்று அடித்து சொல்லியது.. ஆராவின் திடீர் விலகல்.. அவன் தினசரி அலுவல்களை சரிவர செய்ய முடியாமல் மூளையை குறைந்தது..
அவனை அங்கே மூளையை கசக்கி.. குழம்ப வைத்து விட்டு இங்கே கேண்டினில் அமர்ந்து மிளகாய் பஜ்ஜியை புதினா சட்னியில் தோய்த்து வெட்டிக் கொண்டிருந்தாள் ஆரா.. கூடவே மூன்று தோழிகள் வேறு கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்தனர்..
"ஏய் உன் ஆளு அரவிந்த் டி".. கீர்த்தனா.. ஆராவிற்கு மட்டும் கேட்கும்படி கிசுகிசுத்தாள்..
"என்னது அரவிந்த் ஆஹ்".. வாய் நிறைய மிளகாய் பஜ்ஜியுடன்.. அவள் தலைக்கு மேலே எட்டிப் பார்த்தாள் ஆரா..
ஆராவின் கிரஷ் அவன்.. வாட்ட சாட்டமான அழகான இளைஞன்.. பணக்கார பார்ட்டி.. அழகான பெண்களுடன் மட்டுமே நட்பு வைத்துக் கொள்வான்.. நட்பு என்றால் வெறும் நட்பு மட்டும்தான்.. அதை தாண்டி எல்லை மீறாத நல்லவன்தான் அவனும்..
வெள்ளை வெளேரென.. ஜீரோ சைஸ் உடல் வாகுடன்.. அவனை தோளில் அடித்து இயல்பாக பழகும் அழகான இளம் பெண்களைப் பார்த்து அடிக்கடி ஏக்கம் கொள்வது தான் ஆராவின் தினசரி வேலை.. அவளின் இந்த நடவடிக்கையை கண்டு கண்டித்து தலையில் கொட்டுவதுதான் குருவின் வேலை..
கறுப்பழகியும்.. சப்பி கேர்ள்ளும் ஆன ஆராவை ஆணழகன் அரவிந்த் திரும்பி கூட பார்ப்பதில்லை.. அவள் தோழிகளிடம் கூட ஓரிரு வார்த்தைகள் பேசி இருக்கிறான்.. ஆனால் ஆராவை மட்டும் ஒரு வித ஏளன கண்ணோடு பார்ப்பது.. மனதில் வருத்தம் கொடுத்தாலும் பெரிதாக காட்டிக் கொள்வதில்லை அவள்..
இன்றும் அவளுக்கு எதிர்ப்புறமிருந்த இருக்கையில் அமர்ந்து.. நண்பர்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தவனை கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருந்தாள் ஆரா..
"ஒரே ஒரு வார்த்தை என்கிட்ட பேசினா போதும்.. அட்லீஸ்ட் குட் மார்னிங்.. அது போதும்".. ஆரா.. மிளகாய் பஜ்ஜியை மறந்து அவனை சைட் அடித்துக் கொண்டிருக்க..
"வாய்ப்பில்லை ராஜா.. அவன் உன்னை திரும்பி கூட பாக்க மாட்டேங்கிறான், அவனாவது உன்கிட்ட பேசுறதாவது.. ஹாஹா".. வெறுப்பேற்றினர் தோழிகள்.. இந்த தோழிகளின் மூக்கை உடைக்கவாவது அவனிடம் ஒரு வார்த்தை பேசி விட வேண்டும் என்ற வைராக்கியம் அவளுக்குள் வேர்விட்டு நின்றது.. ஆனால்.. ஹாய் என்று சிரித்துக் கொண்டே நெருங்கி சென்றாலும்.. அவன் பார்க்காதமாதிரி விலகி செல்வது தானே கடுப்பு..
"என்ன ஆனாலும் சரி.. இன்னைக்கு எப்படியாவது அவன் கிட்ட போய் பேசிடுவேன்" என்று.. மனதுக்குள் நினைத்தபடி.. கைகாலை நீட்டி வளைத்து வார்ம் அப் செய்து எழுந்தவளோ அவன் டேபிளை நோக்கி நகரவும்.. "ஆரா.. நில்லு".. என்று இடைபுகுந்து அவள் கையை பிடித்து நிறுத்தி இருந்தான் குரு..
"ஆஆஆ.. என்ன சார்".. சலித்தாள் ஆரா..
"என்ன ஆச்சு ஆரா.. காலையில் உங்க அண்ணன் ஏதாவது சொன்னானா.. எதுக்காக அவன் கூட வந்தே.. நேத்து வீட்டுக்கு கூட வரவே இல்ல.. என்னடி ஆச்சு உனக்கு".. என்று அரவிந்த் பக்கம் திரும்பியிருந்த அவள் முகத்தை தன் பக்கம் திரும்பியவன்..
"தலைக்கு குளிச்சா சரியா துடைக்க மாட்டியாடி.. பாரு ஈரம் அப்படியே இருக்கு".. என்று அவள் தோள்பட்டையின் ஈரத்தை தொட்டுக் காட்டவும்.. எதையும் உணரும் நிலையில் ஆரா இல்லை..
அங்கே இருந்தவர்கள் ஆராவின் கையை பிடித்துக் கொண்டு குரு ஏதோ கடுமையாக மிரட்டி கொண்டிருக்கிறான் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.. கல்லூரியில் அடிக்கடி அவளும் வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கம்தானே.. அவளோடு சேர்ந்து வந்த மாணவிகளும் குருவை கண்டு நைசாக நழுவி விட.. ப்ரொபசரை கண்டவுடன் அரவிந்த் கோஷ்டியும் அங்கிருந்து எழுந்து சென்று விட்டது..
டென்ஷனாகிவிட்டாள் ஆரா.. "ஐயோ ஏன் சார் இப்படி பண்றீங்க.. இன்னைக்கும் மிஸ் பண்ணிட்டேன்".. ஏமாற்றத்துடன் அவள் காலை தரையில் உதைத்து சலித்துக் கொண்டாள்..
"என்ன.. என்ன.. மிஸ் பண்ணிட்டே ஒன்னும் புரியலையே".. குரு விழித்தான்..
"அரவிந்த்.. அரவிந்தை மிஸ் பண்ணிட்டேன்.. உங்களாலதான்.. இன்னைக்கு தான் அவன்கிட்டே பேசுறதுக்கு தைரியம் வந்துச்சு.. நடுவுல வந்து கெடுத்துட்டீங்க சார்".. என்று கோபத்தோடு படபடக்கும் ஆரா அவனுக்கு புதிதல்லவே.. எப்போது அரவிந்தை கண்டாலும்.. லிட்டர் லிட்டராக ஜொள்ளு விடுவாள்.. என்பது அவன் அறிந்த விஷயம்தான் என்பதால் வழக்கம் போல விழிகளில் கடுமையை தேக்கி.. "தொலைச்சிடுவேன் ஆரா.. சோ மெனி டைம்ஸ் ஐ வார்ன்டு யூ.. இன்னொரு முறை இந்த மாதிரி பிஹேவ் செஞ்சேனா பிரின்ஸ்பல் ரூம்ல கொண்டு போய் நிக்க வச்சுடுவேன்.. மைண்ட் இட்.. கிளாசுக்கு போ".. என்றான் கடுமை மாறாமல்..
"ஆமா ஊர் உலகத்துல.. யாருமே சைட் அடிக்கிறது இல்ல பாரு.. வந்துட்டாரு என்னைய மட்டும் சீர்திருத்தறதுக்கு".. என்று முகத்தை சுருக்கி கொண்டு பார்வையால் அவன் மீது கோபத்தை காட்டி.. மின்னலாக ஓடி வகுப்பறைக்கு சென்றிருந்தாள் ஆரா..
அங்கேயே நின்று கொண்டு அவளை முறைத்திருந்தவனுக்கு வழக்கத்திற்கு மாறாக ஏதோ தவறாக தோன்றியது.. மிக நெருக்கமான பொருள் தன்னை விட்டு பிரிந்து செல்வது போல்..
தொடரும்..