- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
மூன்று பேரும் மூட்டை சந்திலிருந்து தப்பித்து ஓடும் எலி போல் தமிழ் வீட்டிலிருந்து குடுகுடுவென்று இறங்கி தங்கள் வீட்டு வாசலை அடைந்திருக்க..
வாசலை வழிமறித்து ஐயனார் சாமியின் அவதாரம் போல் நின்றிருந்தார் வெற்றிவேல்.. ராக்கம்மா அம்மையார்..
ஆரா பிறந்தநாள் என்பதால் இந்த மூவரையும் கண்காணிப்பதற்காகவே அலாரம் வைத்து எழுந்து விட்டனர் போலும்.. நல்ல வேலையாக மீனாட்சி அன்ட் கோ.. கேக் வெட்டி கொண்டாடி முடித்து திரும்பி வரும்போது வேளையில் தான் அகப்பட்டுக் கொண்டனர்..
மூன்று பேருக்கும் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள.. மீனாட்சியின் பார்வையோ நிலை குத்தி வெற்றிவேலின் மேல் படிந்தது..
"எங்க போயிட்டு வரீங்கன்னு நீங்க சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை.. ஏன் போனீங்கன்னு தான் கேட்கிறேன்.. அப்ப என் வார்த்தைக்கு அவ்வளவுதான் மரியாதை இல்ல.. எங்க அம்மா தலையில அடிச்சு சத்தியம் செய்ததை மீறி இருக்கீங்கன்னா.. அப்போ அவங்களுக்கே எனக்கோ என்ன நடந்தாலும் உங்களுக்கு பரவாயில்லை.. அப்படித்தானே?" என்று பின்கைக் கட்டிக் கொண்டு ராஜ்கிரன் ஸ்டைலில் தீவிரமான குரல் தொணியில் கேட்டுக் கொண்டிருந்த வெற்றிவேலுக்கு பதில் சொல்லாமல்.. குரு துவாரகா இருவரும் விழித்துக் கொண்டிருக்க.. மீனாட்சியோ அதே அட்டென்ஷன் போஸில் நின்று கொண்டிருந்தார்..
"இது இன்னைக்கு மட்டும் நடந்த கதை இல்லடா.. தினமும் இதே கதை தான் ஓடுது.. எல்லாத்தையும் போட்டோ எடுத்து ப்ரூஃப் வச்சிருக்கேன் பாரு".. என்று அந்த நேரத்திலும் ராக்கம்மா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தன் போனை மகனிடம் கொடுக்கவும்.. வெற்றிவேல் வேறு வழியில்லாமல் அந்த போனை வாங்கி பார்த்தார்..
"மாட்னோம்".. குரு ஒரு பக்கம் பிடரியை வருடிக் கொண்டிருக்க.. துவாரகாவோ.. "மம்மி ஏதாவது பண்ணுங்க" என்று மீனாட்சியின் காதுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள்..
வெற்றிவேல் கேலரியை ஓப்பன் செய்ய.. முதல் போட்டோவில் இரண்டு தெரு நாய்கள் ஒன்றை ஒன்று லவ் லுக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் போஸ்..
நைட் மோடில் கண்ணு தெரியாமல் பாட்டி எதையெதையோ போட்டோ எடுத்து வைத்திருந்தது..
இரண்டாவது போட்டோ.. காதலர்களின் முத்தம்.. மூன்றாவது போட்டோவை பார்க்க முடியாமல்.. "அடச்சே என்னமா நீ.. கண்ட கண்றாவியை போட்டோ எடுத்து வச்சிருக்கே.. கொஞ்சம் கூட வயசுக்கு ஏத்த மாதிரியே நடந்துக்க மாட்டியா.. இதை பசங்க பாத்தா என்ன ஆகும்?".. என்று முகத்தை சுழித்து போனை அவர் கையிலேயே.. கொடுத்து விட்டார் வெற்றி..
"ஏன் மூஞ்சிய இப்படி வச்சுக்கிறான்" என்று.. யோசனையோடு ராக்கம்மா தனது கேலரியை திறந்து பார்க்க.. "அச்சோ.. கண்றாவி".. என்று ஷாக் அடித்தது போல் கையை உதறியதில்.. போன் கீழே விழுந்து இரண்டு துண்டாக உடைந்தது.. ஓ.. நோ.. ராக்கம்மா அலற..
"ஓ.. எஸ்".. குருவும் துவாரகாவும் புன்னகையுடன் வெற்றி குறி போட்டுக் கொண்டனர்..
ராக்கம்மா தெருவில் நடந்து போகும்போது அந்த இரண்டு ஜோடி நாய்களும் ஏன் அவரை பார்த்து கொலைவெறியுடன் குறைத்தன என்று இப்போது புரிந்தது அவருக்கு.. நாய்க்கு ஸ்பை வேலை பார்த்திருக்கிறார் ராக்கம்ஸ்..
ராக்கம்மாவை விடுத்து மீண்டும் அந்த தெருவில் நின்று கொண்டிருந்த அந்த மூவரின் பக்கம் திரும்பினார் வெற்றி.. "நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவே இல்லை.. எதுக்காக அந்த வீட்டுக்கு போனீங்க".. என்று மீனாட்சியிடம் சீரியஸ் மோடில் கேட்டிருந்தார் அவர்..
"எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கு".. ரோபோட் பொம்மை போல் பேசினாள் மீனாட்சி.. "ஆங்".. இரு பிள்ளைகளும் அவரையே பார்க்க..
"இதென்ன புது கதை".. வெற்றிவேலின் புருவங்கள் சுழிந்தன..
"உண்மையைத்தான் சொல்றேன்.. எனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி.. இப்பவும் தூக்கத்துல தான் நிக்கிறேன்".. என்றாள் அவள்..
"என்ன இது? புதுசா இருக்கு.. அப்புறம் எப்படி தெளிவா பேசுற".. வெற்றிவேல் சந்தேகத்துடன் கேட்டிருக்க.. "எனக்கு தூக்கத்துல பேசுற வியாதியும் இருக்கு" என்றாள் அவள்..
"டேய் மகனே பொய் சொல்றா நம்பாதே.. சரியா 12 மணிக்கு.. இவ மாடி எகிறி குதிச்சு போனதை நானே பார்த்தேன்".. ராக்கம்மா வேறு அவள் பங்குக்கு வற்றி வைக்க..
"எனக்கு தூக்கத்துல பறக்குற வியாதியும் இருக்கு".. என்றாள் மீனாட்சி.. வெற்றிவேல் ஒன்றும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டார்..
"என்ன பாத்துட்டே இருக்கீங்க எருமைகளா!!.. ஏதாவது சொல்லுங்க" என்று மீனாட்சி பிள்ளைகளுக்கு மட்டும் கேட்கும் படியாக பற்களை கடித்தாள்..
"ஆமா.. ஆமா.. அம்மாவுக்கு தூக்கத்துல பறக்கற வியாதி இருக்கு.. ஆகாயத்தில் பறந்துட்டு இருந்தவங்கள நாங்க தான் கீழே புடிச்சு இழுத்து கூட்டிட்டு வந்தோம்".. குருவும் தன் பங்குக்கு சேர்ந்து உலக மகா பொய்யை சர்வ சாதாரணமாக அவிழ்த்து விட..
"என்னது உங்க அம்மா தூக்கத்துல பறக்குறாளா.. என்னடா சொல்றீங்க".. ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர்..
"டேய் வெற்றி நான் சொல்றதை கேளுடா".. ராக்கம்மா வேறு இடையில் புக.. "நீ வேற.. கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா.. இருக்கிற பிரச்சினையில் நீ வேற எரிச்சலை கிளப்பாதே.. போய் ஓரமா ஒக்காந்து உன் டிஸ்கவரி சேனலை ஷூட் பண்ணு".. என்று கோபத்தில் இருந்து விழவும் ராக்கம்மா..
"உனக்கெல்லாம் பட்டாதான் புத்தி வரும்..
"இருங்கடி என்னைக்காவது ஒரு நாள் வசமா சிக்குவீங்க இல்ல அன்னைக்கு பார்த்துக்கிறேன்" என்று மகனில் ஆரம்பித்து வாசலில் நின்றிருந்த மூவரையும் பார்த்து முறைத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்..
வெற்றிவேல் அடுத்த கேள்வியை கேட்க வாயெடுக்கவும்.. இரு கைகளையும் வானை நோக்கி தூக்கிக்கொண்டு.. "அபிராமி.. இதோ வந்துட்டேன் என்னையும் உன்கூட கூட்டிட்டு போயிடு".. என்று கத்தினாள் மீனாட்சி..
திகிலில் உறைந்து போனார் வெற்றிவேல்.. அபிராமி தமிழின் அன்னை பெயர் அல்லவா.. இத்தனை வருடங்கள் கழித்து இறந்து போனவளை எதற்காக கூப்பிடுகிறாள் என்று புரியாமல் மூவரையும் பேயறைந்த முகத்துடன் பார்த்து வைத்தார்..
"இப்படிதாம்பா அடிக்கடி அம்மா.. அபிராமி அபிராமின்னு புலம்பிகிட்டே வானத்துல பறக்குறாங்க.. கேட்டா என்னோட தோழி என்னை கூப்பிடறா.. நானும் அவ கூட போறேன்னு சொல்றாங்க".. என்று துவாரகா பரிதாபமாக சொல்லவும்.. பதறிப் போனார் வெற்றிவேல்..
"அய்யோ.. கடவுளே.. செத்துப் போனவ எதுக்கு என் பொண்டாட்டியை கூப்பிடுறா.. டேய் குரு.. துகி இரண்டு பேரும் அம்மாவை பத்திரமா பாத்துக்கோங்க.. எனக்கு இருக்கிறது ஒரே பொண்டாட்டி.. அவளையும் பறிகொடுத்துட்டு நான் என்ன பண்ணுவேன்?".. என்று ஓடிவந்து மீனாட்சியை அணைத்துக் கொண்டு புலம்பினார் வெற்றி.. ஹாரர் மூடில் அறிவு வேலை செய்யவில்லை.. லாஜிக் மறந்து போனார்..
"சாரிப்பா அம்மா ரொம்ப தூரம் போயிட்டாங்க.. இனி திரும்பி வர முடியாது.. இன்னைக்கு ஜாக்கிரதையா இருந்தாலும் நாளைக்கு அவங்க தூக்கத்துல பறந்து போறதை நம்மை யாராலும் தடுக்க முடியாது" என்றான் குரு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு பிரபு வாய்சில்..
"அப்போ இதுக்கு தீர்வே இல்லையா".. வெற்றிவேல் வானத்தை வெறித்துக்கொண்டிருந்த மீனாட்சியை அணைத்தவாறே கேட்க..
"இருக்குப்பா இன்னைக்கு ராத்திரி துர்க்கை அம்மன் கோயில்ல திருவிழாவை முன்னிட்டு ஸ்பெஷல் பூஜை நடக்குது.. அங்கே அம்மாவை கூட்டிட்டு போனா சரியாகிடும்ன்னு நினைக்கிறேன்" என்று துவாரகா..
"அப்போ.. உடனே.. உடனே.. கூட்டிட்டு போவோம்.. இரு நான் வண்டி எடுத்துட்டு வரேன்" என்று வெற்றிவேல் புறப்பட தயாராக.. "சரிப்பா".. என்ற குருவின் காலில் ஓங்கி மிதித்தாள் மீனாட்சி..
"அய்யோஓஓ".. என்று ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு அலறியவன்.. "வேண்டாம்.. அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீங்க கூட வந்தாதான் அம்மா இன்னும் உக்கிரமா மாறிடுவாங்க.. பேசாம வீட்டிலேயே இருங்க.. நானும் அம்மாவும் கிளம்பறோம்.. துகி அப்பாவை கூட்டிட்டு போம்மா".. என்று.. பொம்மை போல் நடந்த அன்னையை தோள் மீது கை போட்டு அழைத்துக் கொண்டு.. பைக்கில் ஏறியவன்.. ஓவர் ஃபர்மான்மென்சில் இன்னும் கூட வானத்தை பார்த்து ஸ்டார் எண்ணிக் கொண்டிருந்த மீனாட்சியை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளோடு அங்கிருந்து கிளம்பி இருந்தான்..
"வாங்கப்பா போகலாம்.. மம்மி திரும்பி வரும்போது பழைய மம்மியா வருவாங்க கவலைப்படாதீங்க".. என்று துவாரகா வாசலை கவலையோடு பார்த்துக் கொண்டிருந்த வெற்றிவேலை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்..
"தூக்கத்துல பறக்குற வியாதியா?.. இன்னைக்கு உன் சுய ரூபத்தை வெளியே கொண்டு வரேன்டி".. என்று ஒட்ட வைத்த ஃபோனுடன் வெளியே வந்த ராக்கம்மாவை.. "ஒரு காதல் ஜோடியை நிம்மதியாக வாழ விட மாட்டீங்களாடா".. என்பதைப் போல அந்த ஜோடி புறாக்கள்.. சாரி ஜோடி நாய்கள்.. பற்களை நீட்டிக்கொண்டு உறுமவும் "ஆத்தாடி.. பேய்.. இல்ல நாய்".. என்று சென்ற வேகத்தில் கேட் ஏறிக் குதித்து மீண்டும் வீட்டுக்குள் ஓடி வந்து வந்து அடைந்து கொண்டார் ராக்கம்ஸ்..
இங்கே ஆராவோடு அமர்ந்து டிஸ்னி சேனல் பார்த்துக் கொண்டிருந்த.. தமிழின் விழிகள்.. அவள் கையிலிருந்த புது ஐ ஃபோனில் பதிந்தன..
"எக்ஸாம் நல்லபடியா எழுதி மார்க் வாங்கு.. நானே வாங்கி தரேன்" என்று தமிழ் வாக்குறுதி அளித்திருக்க.. அதற்கு முன்கூட்டியே ஃபோன் வாங்கி கொடுத்த குருவின் மேல் கோபம் வந்தது..
"என் தங்கச்சிக்கு எது வாங்கி கொடுக்கணும்னு எனக்கு தெரியாதா?.. செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கான்.. இருக்கட்டும் வைச்சிக்கிறேன்" என்று பற்களை கடித்தாலும்.. தன் அன்னை உயிரோடு இருந்திருந்தாலும் ஆராவிற்கு இப்படித்தானே செல்லம் கொடுத்திருப்பாள்.. ஒரு அண்ணனாக அக்காவாக.. நாங்கள் ஆராவின் மீது அளவு கடந்த அன்பு செலுத்துவது கடமை.. ஆனால் குருவின் எதிர்பார்ப்பில்லாத அன்பும் அக்கறையும் .. ஆரா குட்டியை குழந்தை போல் பாவிக்கும் விதமும் .. தமிழின் நெஞ்சை நெகிழச் செய்தன.. எதிர்பார்ப்பில்லாத இந்த தூய்மையான அன்பு.. அன்பாக மட்டுமே இருந்து விட வேண்டும்.. பைத்தியக்காரத்தனமாக அடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று விடக்கூடாது.. அப்படி செல்லவும் வாய்ப்பில்லை.. குரு என் தங்கையை குழந்தையாக மட்டுமே பார்க்கிறான்.. இனி வரும் காலங்களிலும் அப்படித்தான் பார்ப்பான்.. பார்க்க வேண்டும்.. எந்த விபரீத உறவு முறைகளுக்கும் இங்கே நிச்சயமாக அனுமதியில்லை.. முதலில் அவர்களின் உறவை கொச்சைப்படுத்தி நான் இப்படி நினைப்பதே தவறுதான்.. என்று தலையில் தட்டிக் கொண்டான்..
"அப்படியானால் அவன் தங்கையுடன் மட்டும் நீ எல்லை மீறி பழகலாமா".. என்று மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு..
நான் ஒன்னும் அவளை விரும்பலையே.. தவிர்க்கவே நினைக்கிறேன்.. அவளை திருமணம் செய்து கொள்வதெல்லாம் நடக்காத காரியம்.. ஒருவேளை.. உலக அதிசயங்களில் ஒன்றாக.. அடுத்த பேரிடராக அப்படி ஒரு சம்பவம் நடந்தாலும்.. அவன் தங்கையை நான் ஒன்றும் காயப்படுத்த போவதில்லையே.. அங்கு போல் இங்கும் அவள்தானே மகாராணியாக வலம் வரப் போகிறாள்..
ஆனால் என் குடும்பத்தை தரக்குறைவாக பேசிய.. அந்த வெற்றிவேல் வாழும் குடும்பத்தில்.. என் வீட்டுப் பெண்கள் காலடி எடுத்து வைக்கவே கூடாது.. நான் அனுமதிக்கவும் மாட்டேன்.. என்று ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தவன் தன்னை எண்ணங்களுக்கு கடிவாளம் போட்டு.. கார்ட்டூனில் கவனம் செலுத்த நினைத்திருந்த வேளையில் போன் அலறியது..
போனை எடுத்து திரையில் பார்த்தவன்.. "இந்த நேரத்தில ஏன் ஹாஸ்பிடலில் இருந்து ஃபோன் பண்றாங்க" என்ற யோசனையுடன்.. அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..
எதிர்பக்கத்தில் என்ன செய்தி சொல்லப்பட்டதோ "நான் இப்பவே கிளம்பி வரேன்".. என்று அவசரமாக உரைத்திருந்தவன்.. ஆராவிடம் "கதவை சாத்திக்கோ.. எனக்கு ஒரு எமர்ஜென்சி ஒர்க் இருக்கு.. சீக்கிரம் வந்துடுறேன்.. முடிஞ்சா துவாரகாவை துணைக்கு கூப்பிட்டுக்கோ".. என்று சொல்லிக்கொண்டு.. டி ஷர்ட் ட்ராக் பேன்ட்டுமாக இருந்தவன்.. உடைகளை கூட மாற்றிக் கொள்ளாது.. அங்கிருந்து கிளம்பி இருந்தான்..
இங்கு.. அம்மன் கோவிலில்.. ஆராவின் பெயர்.. நட்சத்திரம் ஐயரிடம் உரைத்து விட்டு.. பூஜைக்காக காத்திருந்தனர் மீனாட்சியும்.. குருவும்..
கோவில் திருவிழா காலம் என்பதால்.. இன்னும் நடை சாற்றப்படவில்லை.. விழிகள் மூடி அம்பாள் முன் ஆபர்ணாவுக்கான தன் வேண்டுதலை வைத்துக் கொண்டிருந்தனர் இருவரும்..
"ஆரா.. எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.. அவ மனசுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்குற குழப்பம் சுவடு தெரியாம மறைஞ்சு போயிடணும்.. ஏன் ஆரா குட்டி எப்பவும் போல என்கிட்ட.. சகஜமா பழகணும்" என்று மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தவனுக்கு..
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா குரு".. ஆரா கேட்ட கேள்வி.. சாமி சன்னிதியில் மின்னல் வெட்டியது போல் மனதினில் வந்து போக.. திடுக்கிட்டு விழிகளை திறந்தான் அவன்..
மீண்டும்.. "சும்மா விளையாட்டுக்கு" என்று அவள் கண்கள் சிமிட்டி சிரித்த காட்சியும் சங்கிலி தொடராக நினைவினில் வந்து போக.. "வருஷா வருஷம் பிறந்தநாள் வருது.. வயசு ஏறுது.. இந்த குரங்கு மட்டும் இன்னும் வளரவே இல்லை".. இடம் வலமாக தலையசைத்து சிரித்துக் கொண்டான்..
அர்ச்சனை முடித்துவிட்டு மீனாட்சியும் குருவும் வெளியே வந்த வேளையில்.. ஒரு கணம் நகராமல் அப்படியே நின்று விட்டான்.. இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து.. நெருங்கியவர் யாருக்கோ ஆபத்து என உணர்த்தியது உள்ளுணர்வு..
"அம்மா சீக்கிரம் வண்டியில ஏறு".. என்று மீனாட்சியை அவசரமாக ஏற்றிக் கொண்டு வீட்டில் சென்று விட்டவன்.. முதலில் அழைத்தது என்னவோ தமிழை தான்.. ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர அவன் அழைப்பை ஏற்கவே இல்லை..
ஆராவிற்கு அழைத்தான்.. "அண்ணா ஹாஸ்பிடல் போயிருக்கான்".. என்று சாதாரணமாக சொன்னவளை மேலும் பதட்டப்படுத்த விரும்பாமல்.. மருத்துவமனையை நோக்கி வண்டியை கிளப்பியிருந்தான் அவன்..
இங்கே.. மருத்துவமனையில்.. சுற்றி நின்றிருந்த பத்து பேரில் ஒருவன்.. தமிழ் அசந்த நேரம் பார்த்து அவன் தோளில் வெட்டி இருந்தான்..
"ஆஆஆஆ".. அவன் அலற..
"வந்துட்டேன் வந்துட்டேன் மச்சான்".. என்று குரு நெஞ்சை நீவிக் கொண்டு பைக்கை வேகமாக சீறிப் பாய விட்டவன்.. எதிரே மோதிய காற்றைக் கிழித்துக்கொண்டு படு வேகமாக மருத்துவமனையை அடைந்திருந்தான்...
வண்டியை கீழே போட்டுவிட்டு திக்கு திசை தெரியாமல்.. திக் திக் இதயத்துடன் தமிழைத் தேடி வேகமாக ஓடிக் கொண்டிருந்தான் குரு..
கண்களை அலையவிட்டவனுக்கு எங்கிருந்தோ நர்சும் வார்ட்பாய்களும் பதட்டத்தோடு வெளியே ஓடி வருவதை கண்டு கொண்டு அதற்கு எதிர் திசையில் சென்றவன்.. தாராவின் அறைக்கு பக்கத்தில்.. பத்து ரவுடிகள்.. தமிழை தாக்க முயன்று கொண்டிருப்பதை கண்டு இரத்தம் கொதித்துப் போனான்..
லாவகமாக அவர்களை கையாண்டு எதிர்த்து அடித்த தமிழோ.. தாராவின் அறைக்குள் அவர்களை நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்..
மூளையில் தோன்றிய அனிச்சை செயலாக.. பொங்கி எழுந்த கோபத்துடன்.. அக்கூட்டத்துக்குள் புகுந்தான் குரு.. "இவன் யாருடா புதுசா".. அடியாட்கள் சலித்துக் கொள்ள.. கைக்கு கிடைத்தவர்களை அடித்து விளாசினான் அவன்..
தமிழை தாக்குவதிலேயே குறியாக இருந்த ஆட்கள்.. அரிவாளை குறிபார்த்து அவன் மீது வீசியிருக்க.. மீண்டும் அவன் இடக்கரத்தில் காயம்..
"ஹக்".. துள்ளி எழுந்து அமர்ந்தாள் ஆருஷி.. அவளை கட்டியணைத்து உறங்கிக் கொண்டிருந்த வீரபாண்டியன்.. மனைவி தன்னிடமிருந்து விலகி எழுந்து அமர்ந்ததில்.. விழித்து அவனும் எழுந்து உட்கார்ந்தான்..
"என்னமா என்னமா ஆச்சு".. அவள் தாடையைப் பற்றி தன் பக்கம் திரும்பியவன்.. இரு கன்னங்களையும் அழுத்தி உலுக்க.. உறக்கத்திலிருந்தவளுக்கோ ஒன்றுமே சொல்ல தெரியவில்லை..
"தமிழ்.. தமிழு".. என்பதைத் தவிர வேறெதுவும் பேசத் தெரியாமல் விழித்தாள்..
"சரி.. சரிம்மா.. படுத்துக்கோ.. தூங்கு".. என்று மனைவியை படுக்க வைத்தவன்.. அவள் உறங்கும் வரை அருகிலேயே அணைத்து கொண்டு படுத்திருந்தான்..
மீண்டும் வெட்டுப்பட்டதில் "ஐயோ தமிழு".. என்று அலறிக் கொண்டு ஓடி வந்த குரு அவன் காயத்தை.. பரிதவிப்போடு ஆராய்ந்து.. காயத்திற்கு காரணமானவனை கழுத்தை பிடித்து தூக்கி இருந்தான் சிவப்பேறிய விழிகளுடன்.. மிச்சமிருந்தவர்களையும் அடித்து சாய்த்து.. வீசிவிட்டு இருவருமே ஓய்ந்து போயினர்..
"இவன் எதுக்கு இங்க வந்தானாம்".. என்று பக்கத்தில் வந்த கம்பவுண்டரை பார்த்து கேட்டிருந்தான் தமிழ்.. என் பிரச்சனை என்னோடு போகட்டும்.. உனக்கு ஏதாவது ஆகிப் போயிருந்தால்.. என்னால் தாங்க முடியுமா என்று கோபத்தில் வெளிப்பாடு அது..
பாவம் அது புரியாமல் அவர் விழிக்க..
"ஹான்.. இவன் உயிரோட இருக்கானா செத்து போயிட்டானான்னு பார்க்க வந்தேன்".. என்றவனோ.. தமிழின் சட்டை பட்டன்களை கழட்டி.. வெட்டுப்பட்ட காயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்..
"ப்ச்.. கையை எடுடா".. அவனை தள்ளி விட்டான் தமிழ்..
"ஆமா இவன் மேல கை வைக்க எனக்கு ரொம்ப ஆசை பாரு.. கொஞ்ச நேரம் அமைதியா இருடா.. அடிச்சிட போறேன்".. அவன் இரு கரங்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டு.. காயத்தின் ஆழத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் குரு..
"சார் நீங்க கொஞ்சம் அவர் மடியிலருந்து எழுந்தீங்கன்னா நாங்க அவருக்கு ஃபர்ஸ்ட் ஏட் பண்ணுவோம்".. நர்ஸ் முதலுதவி பெட்டியை வைத்துக்கொண்டு கெஞ்சியபிறகே தமிழின் மடியில் அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட குரு "ஒகே".. என்று தோளைக் குலுக்கிவிட்டு எழுந்தான்..
அருகே அமர்ந்து அவன் சட்டையை தலை வழியே கழட்டி விட்டான் தமிழின் பரம எதிரி..
பஞ்சால் துடைத்து மருந்து போட்டுக் கொண்டிருந்த நர்சிடம் "ரீட்டா இல்ல?".. என்று கேட்கவும் அவன் பக்கம் திரும்பி ஏகத்துக்கும் முறைத்தான் தமிழ்..
"இன்னா முறைப்பு? இங்கே இருக்கிறதுலேயே அந்த ஒரு நர்ஸ் தான் பாக்கற மாதிரி இருக்கும் அதான் கேட்டேன்".. எங்கோ பார்த்துக் கொண்ட பிடரியை வருடியபடியே சொன்னதும்.. மருந்து போட்டுக் கொண்டிருந்த நர்ஸ் அவனை முறைத்து வைத்தாள்..
பத்து நிமிடங்களில் மருந்து வைத்து கட்டு போட்டவள்.. தமிழுக்கு டிடி போட்டு விட.. "கருங்கல்லுல போடுறீங்க?.. உடைஞ்சிட போகுது.. ஊசி".. என்று நக்கலடித்தான் குரு..
இதற்கு மேல் குரு அங்கிருந்தால்.. நண்பன் என்ற முறையில்.. கட்டுப்பாட்டை மீறி எங்கே தனது பாசமும்.. அன்பும்.. தண்ணீரில் பொத்தி வைத்த பூப்பந்து போல் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்..
"சீனிவாசன் இவனை கிளம்ப சொல்லுங்க.. லேட் நைட்ல விசிட்டர்ஸ் யாரும் இங்கே அலவுட் கிடையாது".. என்று கம்பவுண்டரை அழைத்து குருவை வெளியேற்ற சொன்னான் தமிழ்..
"நான் ஒண்ணும் விசிட்டர் இல்ல".. குருவும் முறுக்கிக் கொண்டான்..
"அப்போ யாரு சார் நீங்க".. மருத்துவனின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குருவிடம் பவ்யமாக கேட்டான் கம்பவுண்டர் சீனிவாசன்..
"இதோ இவனோட ஜென்ம எதிரி".. என்று குரு அழுத்திச் சொல்லவும் அத்தனை பேருக்கும் மண்டை குழம்பியது..
தமிழ் அடுத்த வார்த்தை பேசும் முன் அவன் போன் ஒலிக்கவே எடுத்து காதில் வைத்திருந்தான்..
"அய்யா தமிழு".. என்று வீரபாண்டியன் பதட்டத்தோடு முந்தி கொண்டான்..
"யோவ் மாமா.. என்ன இந்த நேரத்துக்கு போன் பண்ணிருக்கீரு.. அக்கா அடிச்சிருச்சா".. அவன் இயல்பாக பேசவும்தான் வீரபாண்டியனுக்கு சுவாசம் சீரானது..
"இல்ல நீ.. பத்திரமா இருக்கே தானே!!".. அன்புருகும் குரலில் கேட்டிருந்தான் வீரபாண்டியன்..
"நான் பத்திரமாவும் இல்லை பாண்டு பேப்பராவும் இல்லை.. வீட்லதான் இருக்கேன்.. இப்ப எதுக்கு கால் பண்ணீரூ.. கெட்ட சொப்பனம் ஏதாவது கண்டீரா".. தமிழ் மாமனை மிரட்டினான்..
பேக் டூ ஃபார்ம்.. "நீயே என் வாழ்க்கையில வந்த கெட்ட சொப்பனம் தான்டா.. உனக்கு போய் ஃபோன போட்டேன் பாரு.. என்னைய சொல்லணும்.. வைடா போனை".. என்று கத்திக் கொண்டிருந்த வீர பாண்டியன்.. "உண்மையிலேயே பிரச்சனை ஒன்றும் இல்லையே".. என்று மீண்டும் கேட்டிருந்தான் அமைதியான குரலில்..
மாம்ஸ் அன்பில் திக்குமுக்காடிப் போனவன் சிறிய புன்முறுவலுடன் "ஃபோனை எங்க அக்கா கிட்ட குடுங்க பிரச்சனை என்னன்னு அவ கிட்ட சொல்றேன்".. என்றான் விஷமக் காரனாக..
"ஹலோ சரியா கேக்கல.. வச்சிடறேன்".. வீரபாண்டியன் பக்கமிருந்து அழைப்பு துண்டிக்கப்பட்டது..
தொடரும்..