• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 3

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
சிக்னலில் பச்சை விழுவற்காக காத்திருந்தான் குரு.. மிக நேர்த்தியான உடையுடன் காலை வெயிலை சமாளிக்க கூலர்சோடு தலையைக் கோதியபடி தன் பைக்கில் அமர்ந்திருந்தவன் அருகே வந்து ஸ்கூட்டியை நிறுத்திய ஒரு இளம் பெண் "குட்மார்னிங் சார்" என்றாள் பவ்யமாக.. குட் மார்னிங் சொல்வதற்காகவே லாரியின் அடியில் புகுந்து வந்திருக்கிறாள்.. குருவை பார்த்தால் எனர்ஜி டிரிங் குடித்த மாதிரி..

"குட் மார்னிங்" என்று சிறு தலையசைப்புடன் சொன்னவன் பச்சை விழுந்து வண்டியை எடுக்கும் நேரம்.. அவசரமாக ஓடி வந்து பைக்கில் ஏறிக் கொண்டாள் ஆரா..

பின்னால் திரும்பியும் பாராமல்.. அழிச்சாட்டியமாக பைக்கில் ஏறி அமர்ந்திருப்பவள் யார் என்பதை உணர்ந்து "ஏய் இறங்குடி.. இனிமே என் பைக்ல ஏறினே தொலைச்சுப்புடுவேன்.. இறங்கி நடந்து போ.. உங்க நொன்னன் பேசுற பேச்சுக்கு உன்னைய வேற தூக்கி சுமக்க முடியாது".. சாலை என்றும் பாராமல் எரிச்சலுடன் கத்தியவன் ..காலையில் தமிழ் உதாசீனப்படுத்திய கோபத்தை.. அவன் தங்கை ஆராவின் மீது காட்டியிருந்தான்.. தினமும் நடக்கும் கூத்து.. வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை ஆட்டோ.. அங்கிருந்து காலேஜிற்கு குருவோடு பயணம்.. இது ஆபர்ணாவின் தினசரி வேலைகளில் ஒன்று..

அவன் கோபத்திற்கு மதிப்பு கொடுக்காமல் "ஆமா.. இன்னைக்குதான் என்னை தூக்கி சுமக்கிற மாதிரி பெருசா சலிச்சுக்கறே.. ஸ்கூல் படிக்கும்போது சைக்கிள்ல முன்னாடி உக்காந்தேன்.. இப்போ பைக்ல பின்னாடி உக்காருரேன்.. அவ்ளோதானே.. காலங்காத்தால பொலம்பாம ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டு மேன்.. காலேஜ்க்கு டைம் ஆகுது. அசைன்மென்ட் சப்மீட் பண்ணனும்".. என்று துப்பட்டாவை எடுத்து வெயில் படாமல் இருக்க தலையோடும்.. வாயோடும் முகமூடி கொள்ளைக்காரி போல் கட்டிக் கொண்டாள்..

கண்ணாடி வழியே அவள் செயல்களை கண்டு கொண்டிருந்தவனோ "பெரிய ஐஸ்வர்யா ராய் கலரு இவ.. அப்படியே வெயில்ல உருகிட்டாலும் .. கருவாச்சி.. இன்னும் கொஞ்சம் கலரா பொறந்திருந்தா இவளையெல்லாம் கையிலேயே பிடிக்க முடியாதே".. என்று மிதவேகத்தில் சென்றுகொண்டே நக்கலடித்தான்.. ஆரா வீட்டில் ஆருஷி அன்னையை போல் மஞ்சள் நிறம்.. தமிழ்ச் செல்வன் மாநிறம்.. ஆபர்ணா தந்தையின் நிறத்தை கொண்டு பிறந்தவள்..

நிறத்தை பற்றி பேசவும்.. கோபம் பொங்கிவர.. "வெள்ளையா இருக்கோம்னு ஓவரா திமிர் காட்டாதே.. நான் ஒன்னும் கருப்பெல்லாம் இல்ல.. டஸ்கி ஸ்கின்.. அவ்ளோதான்.. டஸ்டு பட்டு பேஸ்ல அலர்ஜி ஆகுதேன்னு கவர் பண்ணி இருக்கேன்.. ரத்த சோகை புடிச்ச மாதிரி ஒரு கலரை வச்சுக்கிட்டு நீயெல்லாம் வாய் பேசக் கூடாது தம்பி.. இன்னொரு வாட்டி என் கலரை வச்சு கிண்டல் செஞ்சேனு வை.. மீனு கிட்ட சொல்லி சோத்துல விஷம் வைக்க சொல்லிவிடுவேன்".. என்று அவன் காதோரம் கடுப்புடன் கத்தினாள்..

"அடச்சீ அமைதியா பேசு.. காலேஜ் வந்துருச்சு.. கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு.. நான் ஒரு ப்ரொபசர்.. ஏதாவது ஏடாகூடம் பண்ணி என் இமேஜை காலி பண்ணிடாதே.. அப்புறம் நடக்கிறதே வேற".. என்று மிரட்டலாக சொல்லிவிட்டு அவளை கல்லூரி நுழைவாயிலுக்கு முன்பாகவே இறக்கிவிட்டு பைக்கோடு உள்ளே சென்று விட்டான் குரு பிரகாஷ்.. இயற்பியலில் பிஎச்டி முடித்துவிட்டு.. அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவன்..

சிரிக்க மறந்த சிடுசிடு முகம்.. கறார் பேர்வழி.. பார்வையில் நெருப்பை தாங்கி.. தன்னை நெருங்கும் மாணவிகளை சுட்டுப் பொசுக்கும் அனல் விழிகளுக்கு சொந்தக்காரன்.. அப்படியெல்லாம் இல்லை.. குரு பிரகாஷ் வித்தியாசமானவன்..

அதி புத்திசாலிகளுக்கு மட்டுமே புரியக்கூடிய இயற்பியல் பாடத்தையே அனைவருக்கும் எளிதில் புரியும்படி கற்பிக்க கூடியவன்.. கலகலக்கவும் செய்வான்.. கண்டிக்கவும் செய்வான்.. மாணவப் பருவத்தில் இல்லாத அட்டூழியங்கள் செய்து விட்டு தான் அவனும் பேராசிரியராக பணியேற்று இருக்கிறான்..

பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரியிலும் சரி.. மாணவர்கள் மத்தியில் அவர்கள் பேவரைட் என்று.. ஒரு ஆண் வாத்தியாரோ பேராசிரியரோ எப்போதும் மனதில் நிலைத்து நிற்பார் அல்லவா.. அந்த பெருமைக்கு சொந்தக்காரன் குரு பிரகாஷ் தான்.. மாணவர்களா மேனேஜ்மென்டா என்றால் பெரும்பாலும் மாணவர்களின் பக்கம் தான் நிற்பான்.. அவர்களின் பக்கம் நியாயமான காரணங்கள் இருந்தால்.. ஒருவேளை அவர்களது கோரிக்கைகளிலும் எண்ணங்களிளும் ஏதேனும் தவறு இருந்தால் எடுத்துச் சொல்லித் திருத்துவதும்.. மாணவர்களை வழிக்கு கொண்டு வருவதும் அவனால் மட்டுமே ஆகக்கூடிய விஷயம்.. தன் நன்னடத்தையால் நற்பெயரை சம்பாதித்து வைத்திருக்கும் அவனுக்கு கரும்புள்ளிகள் விழுவதெல்லாம் அவளால் மட்டுமே..

கொஞ்சம் கண்டிச்சு வைங்களேன்..

நீங்க குடுக்குற இடத்துல தான் அவ
ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறா..

பசங்களை கெடுக்கிறதே அவதான்..

நேத்து தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டு என்னை விரட்டி விரட்டி கடிக்க ட்ரெயினிங் கொடுத்து இருக்கா.. கத்து கொடுக்கிற வாத்தியார்ன்னு ஒரு மரியாதை இல்ல.. இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க மிஸ்டர் குரு பிரகாஷ்..

இங்க பாருங்க.. உங்க செல்லத் தோழி பிட் அடிச்சு மாட்டிக்கிட்டா..

என் வண்டி பிரேக் ஒயரை பிடுங்கி விட்டுட்டா..

கிளாஸ் எடுக்கும் போது தூங்குறா..

கிளாஸ்ல கொரியன் சீரிஸ் பார்க்கிறா..

ஐ லவ் யூ சொன்னதுக்கு மெயின் பாயிண்ட்ல அடிச்சிட்டா.. என மாணவர்களிடமிருந்தும் சரி.. ஆசிரியர்களிடமிருந்தும் சரி ஏகப்பட்ட புகார்கள் அவன் இரத்த அழுத்தத்தை எகிற வைக்க..

அனைத்து புகார் அம்புகளும் அவனை நோக்கி மட்டுமே வீசப்படும்.. காரணம் செல்ல தோழி நாய் குட்டி போல அவனே சுற்றி சுற்றி வருவதால் அவனுக்கு வரும் கேடு.. குரு அங்கே பணிபுரியும் காரணத்தால் மட்டுமே ஆரா தப்பித்துக் கொண்டிருக்கிறாள்.. இல்லையேல் தினம் தினம் தமிழ் கல்லூரிக்கு வந்து.. தங்கைக்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க நேரிடும்.. அப்படி ஒரு அராத்து ஆனந்தி..

"நான் பாத்துக்குறேன் சார்.. அவளை நான் கண்டிச்சு வைக்கிறேன்".. என்று சமாளித்து ஆராவை காப்பாற்றுவதிலேயே எழுபத்து ஐந்து சதவீத எனர்ஜியும் பறிபோகும்.. அதன் பிறகு காதை திருகி தலையில் கொட்டி.. தனது வகுப்புகளில் வெளியே நிற்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்து.. இன்டர்னல் மார்க்ஸ் குறைத்து.. அவன் கொடுக்கும் தண்டனைகள் அனைத்தும்.. விழலுக்கு இறைத்த நீராக வீணாகத்தான் போகும்.. தூசி தட்டி சென்றுவிடும் அந்த குட்டி பிசாசு.. இதெல்லாம் தமிழுக்கு தெரியுமா.. என்றால் தெரியாது..

அவனுக்கு தெரியுமா தெரியாதா என்று நமக்கு தெரியாது.. கண்டும் காணாமலும் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதி போல் அவன்..

ஏற்கனவே குரு காதல் வலையில் விழுந்து விட்டதால்.. மாணவிகளிடமிருந்து நேரடி ப்ரோபோசல்கள் வருவது குறைவுதான்.. அவன் அழகினையும் கம்பீரத்தையும் ரசித்துக் கொள்வதற்கு தடை ஏதுமில்லை.. அதையும் தாண்டி.. காதல் என்ற பெயரில் யாரேனும் அவனை நெருங்க முயற்சித்தால் கூடவே சுற்றிக் கொண்டிருக்கும் குட்டி சாத்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்வினை வைத்துவிடும்..

"ஆரா.. குரு எங்கே?".. பார்கவி வந்து அவள் முன்னே நின்றாள்.. இளங்கலை வகுப்புகளுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் விரிவுரையாளர் அவள்..

"ஒரு நிமிஷம்".. என்று அவசரமாக.. தன் புத்தகப் பையை.. ஒரு சிப் விடாமல் திறந்து ஆராய்ந்தவள்.. "அய்யோ.. சாரி மேடம்.. குரு சாரை இங்க தான் புடிச்சு வச்சிருந்தேன்.. எங்க போனார் தெரியலையே" என்று சீரியஸாக சொல்ல.. கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவள் கேலி செய்த விதம் பார்கவியின் கோபத்தை கிளர்ந்தெழ செய்திருந்தது..

"இடியட்.. பாடம் சொல்லிக் கொடுக்கிற லெக்சரர்கிட்டே எப்படி பேசணும்னு தெரியாதா.. உன்னை சொல்லி தப்பில்லை.. எல்லாம் அவர் கொடுக்குற இடம்.. வரட்டும் பேசிக்கிறேன்".. என்று பற்களை கடித்தாள்..

"பின்னே என்ன மேடம்.. சார்.. டிபார்ட்மெண்ட்ல இருப்பாரு.. இல்ல கிளாஸ்ல இருப்பார்.. அங்க போய் தேடாம எப்பவும் என்கிட்ட வந்து.. சார் எங்க? சார் எங்கன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது.. சொல்லுங்க".. என்று அப்பாவியாக கேட்டவளிடம் பதில் சொல்லாமல் ஆத்திரத்துடன் பற்களை கடித்தவளோ அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.. மாணவிகளிடம் இயல்பாக பழகுபவள் தான் பார்கவி.. ஆனால் என்னவோ இந்த அராத்து ஆராவை அவளுக்கு பிடிப்பதே இல்லை.. குருவிடம் அதிகப்படியான உரிமை எடுத்துக் கொள்வதால் இருக்கலாம்.. குரு தனக்கு பக்க பலமாக இருக்கும் தைரியத்தில்.. கல்லூரியே அவள் கட்டுப்பாட்டில் இருப்பதை போல் தேவையில்லாத வால்தனங்கள் செய்வதால் கூட இருக்கலாம்..

பாடம்.. எடுத்து முடித்திருந்தான் குரு.. எ"னி டவுட்ஸ்".. சாக்பீசை மேஜையில் வைத்துவிட்டு மார்பின் குறுக்கே கைகட்டி நின்று மாணவர்களை ஏறிட்டான்..

பாடம் புரிந்தால்தான் சந்தேகம் வரும்.."சார்.. சார்".. என ஆளாளுக்கு கரம் தூக்கவும்.. வரிசையாக ஒவ்வொருவராக கேட்டு அவர்கள் சந்தேகத்தை தீர்த்து விளக்கம் கொடுத்திருந்தான்..

ஒரு மாணவனின் கேள்விக்கு செவி சாய்த்திருந்தவனின் கவனம்... பின்னாலிருந்து வந்த குறட்டை சத்தத்தில் பதிய.. கூர் விழிகளுடன் எட்டிப்பார்த்தவனின் வெண்ணிற முகம் சிவந்து போனது..

"ஆபர்ணாஆஆ".. உச்சக் கட்ட ஸ்ருதியில் கோபத்துடன் கத்தியிருந்தான் குரு..

ம்ஹும்.. அவள் எழுந்திருக்க வில்லை.. நல்ல உறக்கம்.. பற்களை கடித்து மேஜையிலிருந்த டஸ்டரை தூக்கி அடிக்க.. அந்நேரம் "ஆரா எழுந்திரு".. என்று தோழி எழுப்பி விடவும் டஸ்டர் பறந்து வந்து அவள் நெற்றியை பதம்பார்க்க.. "அம்மாஆஆ".. என அலறி நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள் அவள்..

"ஷட்.. அப்.. இது என்ன கிளாஸ் ரூமா. உன் பெட்ரூமா.. இஷ்டத்துக்கு தூங்குறதுக்கு எதுக்கு காலேஜுக்கு வர்றே.. வீட்லயே உட்கார வேண்டியதுதானே"..

"சார்.. அது".. பாவமாக திக்கினாள்..

"இப்போ என்ன கிளாஸ் எடுத்தேன்னு .. எக்ஸ்பிளைன் பண்ணாம நீ வீட்டுக்கு போக முடியாது'.. என்று காட்டுகத்தாக கத்தினான்.. கோபம் வந்தால் துர்வாச முனிவர்தான்.. ஆரா அரோகராதான்..

டூ இட்.. கம்மான்.. அவன் கத்தியதில் ஸ்பீக்கர் அவுட்..

அடுத்த கணமே "காதல் கொண்டேன் தனுஷ் போல.. முகத்தில் பட்ட சாக்பீஸ் கரையுடன் எழுந்து கரும்பலகையை நெருங்கியிருந்தவளோ இயற்பியல் கைனடிக் தியரி.. என்று அவன் எழுதி போட்டிருந்த சூத்திரங்களின் கீழே..

(a+b)2= a2+abc+bts.. என்று.. உறக்கத்தில் ஜிமினுடன் டூயட் பாடிய தாக்கத்தில் எழுதியிருக்க..

"என்னது.. BTS" ஆஹ்.. மாணவி மாணவிகள் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தனர்..

இயற்பியல் வகுப்பில் பத்தாம் வகுப்பில் படித்த கணித பார்முலா.. அதுவும் தப்பும் தவறுமாக எழுதிவிட்டு.. சாக்பீசை அவனிடம் கொடுத்து.. அச்சு பிசகாமல் தனுஷ் கொடுத்த ரியாக்ஷனுடன் மீண்டும் மேஜையில் சென்று படுத்துக்கொண்டவளை கண்டு வகுப்பு மொத்தமும் குபீரென்று சிரித்து விட..

"சைலன்ஸ்" என்று கோபத்துடன்.. கத்தியவன்.. "ஆபர்ணா.. ஆப்டர்நூன் கிளாஸ் முடிஞ்சதும் என்னை வந்து மீட் பண்ணு".. என்று கடுமையான குரலில் சொல்லிவிட்டு வெளியேறி இருந்தான்..

அடுத்தடுத்து இரண்டு வகுப்புகளை தொடர்ந்து முடித்து விட்டு ஸ்டாப் ரூம் வந்து சேர்ந்தவனுக்காக காத்திருந்தாள் பார்கவி..

"ஹாய் குரு"..

களைத்துப் போய் இருக்கையில் சாய்ந்திருந்தவனோ.. பார்கவியின் குரலில் மெல்ல நிமிர்ந்து.. "ஹாய்" என்றான் புன்னகையுடன்.. இவ்வளவு நேரம் ஆராவின் மீது இழுத்து பிடித்து வைத்திருந்த கோபம் சென்ற இடம் தெரியவில்லை.. மனதுக்குள் பூச்சாரல் நீர் தெளிக்க.. "என்ன கவி.. உனக்கும் ஃபிரீ அவரா".. என்றான் சற்றே இலகுவாக.. இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்துக் கொண்டிருக்கின்றனர்.. விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கல்லூரி வளாகம் எங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது..

"உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்".. என்று தயக்கத்துடன் ஆரம்பித்தாள்..

"சொல்லு".. குருவின் விழிகள் இடுங்கின..

நல்ல வேலையாக அந்நேரத்தில்.. ஸ்டாஃப் ரூமில் யாருமில்லாத காரணத்தால்.. இப்போதே சொல்லி விடுவது நல்லது என்ற முடிவுடன் பேச்சை தொடங்கியிருந்தாள்..

அந்நேரம்.. "சார்ர்ர்ர்".. என்று வந்து நின்றாள் ஆரா...

"கரடி வந்துருச்சு" பற்களை கடித்தாள் பார்கவி..

ஆராவை பார்த்ததும் இதுவரை இல்லாத இறுக்கம் வந்து ஒட்டிக்கொள்ள.. முறைத்த விழிகளுடன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.. தங்களை தொல்லை செய்ததற்காக வந்த கோபம் இல்லை.. வகுப்பறையில் அவள் நடந்து கொண்ட முறைக்காக..

"உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும் சார்".. மரியாதையாக இழுத்தவளை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான்..

"குரு.. எனக்கும் முக்கியமான விஷயம் பேசணும்".. என்று சிடுசிடுப்புடன் கூறினாள் பார்கவி..

"சொல்லு கவி".. அவளிடம் மட்டும் குரல் குழைந்தது..

"இன்னைக்கு ஈவினிங் என்னை பொண்ணு பாக்க வராங்க.. நான் என்ன பதில் சொல்லட்டும்".. என்று நேரடியாகவே அவள் விஷயத்திற்கு வந்திருக்க.. புருவங்கள் சுருங்கியவன் யோசிப்பதற்கு முன்னே.. "சார்ர்ர்ர்".. என்று மீண்டும் அழைத்திருந்தாள் ஆரா..

"என்னடி".. என்றான் குரு.. எரிச்சலாக.. பெரும்பாலும் கல்லூரியில் ஆராவை டி போட்டு அழைப்பதில்லை.. ஆனால் என்னவோ இன்று ரொம்பவே பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறாள்..

"ஒரு விஷயம் சொல்லணும்"..

"சொல்லித் தொலை"..

"அது.. மீனம்மா.. உங்களுக்காக.. அருக்காணிபுரத்தில நல்ல பொண்ணா பாத்து வச்சுருக்குதாம்.. கண்ட பொண்ணை காதலிச்சு இவளைதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு வந்து நின்னா.. உத்திரத்துல தூக்கு மாட்டி தொங்கிருமாம்.. உங்க கிட்ட சொல்ல சொல்லிச்சு.. சொல்லிட்டேன்.. நான் வெளியே நிக்கிறேன்.. நீங்க பேசி முடிச்சுட்டு என்னை கூப்பிடுங்க".. என்று வந்த வேலையை முடித்துவிட்டு அவள் வெளியே சென்று விட.. குரு பார்கவியை பார்த்தான்..

"அக்னி குஞ்சொன்று கண்டேன்".. என்ற பாரதியார் பாடலுக்கேற்ப.. நின்றிருந்தாள் அவள்..

தொடரும்..
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

அடியே அராத்து ஆனந்தி பத்த வச்சுட்டயே பரட்ட 🤣🤣🤣
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
ஒவ்வொரு எபியும் ஒரே ரவுசா இருக்கே. ஆரா பத்த வச்சிட்டியே. பாவம் குரு. 🥺🥺🥺🥺🥺
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
75
🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷
 
Member
Joined
May 3, 2025
Messages
37
Haha 😂 யாருகிட்டா ஆரா கிட்டயேவ...
Physics class la maths formula... நம்ம ஒரே இனம் டா ஆரா...

all the best Guru அவர்களே...
 
Top