• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
பார்கவி எண்ணெயில் போட்ட கடுகாய் பொரிவதற்கு முன்னே குரு பிரகாஷ் முந்திக் கொண்டான்..

"அவ ஏதோ சொல்லிட்டான்னு அதை சீரியஸா எடுத்துக்கிட்டு.. என்கிட்ட சண்டைக்கு வராதே கவி.. அவ உன்னை கோபப்படுத்துறதுக்காகவே சொல்லிட்டு போறா.. சோ ப்ளீஸ்.. டேக் இட் ஈஸி ஆர் லிவ் இட்".. என்று அழுத்தமான குரலில் உரைத்திருக்க..

மார்பின் குறுக்கே கைகட்டி நின்றவளோ ஆத்திரத்துடன்.. "ஓகே ஐ வில் டேக் இட் ஈசி.. பட் வொய் குரு.. எதுக்காக இவ கூட இப்படி ஒரு நெருக்கம்.. அப்படி என்ன செஞ்சுட்டா இவ.. ஃப்ரெண்ட்ஷிப் ரிலேஷன்ஷிப் எல்லாத்துக்குமே ஒரு லிமிட் இருக்கு.. அந்த லிமிட்டை க்ராஸ் பண்ணி போயிட்டு இருக்கா.. உங்களுக்கு தெரியுதா இல்லையா".. என்று கோபமாக கேட்டவளை ஏறிட்டு பார்த்தவனோ பதிலேதும் கூறவில்லை..

"ஒரு மெச்சூடான ஆள்.. இப்படி ஒரு லூசு கூட.. பிரண்ட்ஷிப் வச்சிருக்கிறதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. இவளால உங்க இமேஜ் எல்லா இடத்திலும் ஸ்பாயில் ஆகுது.. அதைப் பத்தின கவலை உங்களுக்கு இல்லையா.. நீங்க ஒரு ப்ரொபசர்.. அவ ஒரு ஸ்டுடென்ட்.. அப்பா மகளே ஆனாலும் காலேஜ்ல.. ப்ரொபசர் ஸ்டூடண்டா இருக்கும் போது.. அந்தந்த இடத்துக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும்.. இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.. நேத்து முளைச்ச காளானை தலையில தூக்கி வைச்சு ஆடுறது.. உங்கள மாதிரி கம்பீரமான ஒரு புரொபசருக்கு அழகில்ல".. என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க.. கடுப்பாகி விட்டான் குரு..

"ஸ்டாப் இட் கவி.. அவ ஒன்னும் நேத்து முளைச்ச காளான் இல்லை.. பிறந்த குழந்தையா என் கையில தவழ்ந்தவ.. என் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமானவ.. அஃப்கோர்ஸ் எனக்கும் கூடத்தான்.. இன்னொரு வாட்டி அவளைப் பற்றி தேவையில்லாம பேசுறதை கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டேன்.. அவ கூட பழகுறதுனால என் இமேஜ் டேமேஜ் ஆகுதுன்னா தட்ஸ் ஓகே.. நோ ப்ராப்ளம் அதை நான் மேனேஜ் பண்ணிக்கிறேன் நீ கவலைப்படாதே".. என்று முகத்திலடித்தார் போல் பேசவும்.. முகம் கன்றி போனாள் கவி...

"ஓகே அவ எவ்வளவு முக்கியம்னு.. என் மனசை உடைச்சு சொல்லிட்டீங்க".. என்றதும் மேஜை மீது விரல்களால் தாளம் தட்டியபடியே.. விழிகளை உயர்த்தி அதே கோபத்துடன் அவளை பார்த்திருந்தான் குரு..

"பட் அப்படி என்ன அவ முக்கியம்னு நான் தெரிஞ்சுக்கலாமா".. என்று நிதானமான குரலில் கேட்டிருக்கவும்.. சரியான வார்த்தைகளை தேடுவதற்காக யோசித்துக் கொண்டிருந்தான் அவன்..

"உங்க தங்கச்சியா".. ஆமாம் என்று சொல்ல மாட்டானா என்று அவள் விழிகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க.. "சேச்சே இருக்கிற ஒரு தங்கச்சியே போதும்".. என்றவனின் முகத்தினில் வேறு எந்த உணர்வுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதாவது தங்கச்சி என்றதும் முகம் சுழிக்கவும் இல்லை.. பெரிதாக ரியாக்ட் செய்யவும் இல்லை.. "அப்போ ஃப்ரெண்டா".. என்று கேட்க.. "என்ன விட எட்டு வயசு சின்னவ.. அந்த குட்டி சாத்தான் எனக்கு ஃப்ரெண்டா".. என்றான் கேலியாக..

"அப்போ அவ உங்களுக்கு யாரு.. உங்க காதலியா எதிர்கால மனைவியா உங்க உறவு முறையை பற்றி நல்லா புரிஞ்சுக்க வேண்டியது அவசியம்னு தோணுது.. வேறு எந்த தப்பான எண்ணத்திலயும் கேட்கல.. என்றவளுக்கு சரியான விளக்கம் கொடுக்க நினைத்து யோசனையாக புருவம் சுருங்கியவன்..

"என்ன சொல்றது.. எல்லாம் கலந்த மாதிரியான ஒரு ரிலேஷன்ஷிப் அப்படின்னு வச்சுக்கலாம்.. அம்மா அப்பா அண்ணன் தம்பி.. அக்கா தங்கச்சி நண்பன் எதிரி.. என்னென்ன உறவு முறை இருக்கோ எல்லாத்தையும் போட்டுக்கோ.. நடுவே மானே தேனே பொன்மானே ஹான்".. என்று புன்னகைக்க எப்பொழுதும் அவளை கட்டி இழுக்கும் அந்த காந்த புன்னகை இப்போது அவ்வளவு உவப்பை தரவில்லை..

"இங்க பாரு கவி.. அவ இல்லைன்னா எனக்கு நாள் ஓடாது.. நான் இல்லைனா அவளுக்கு ஒரு நிமிஷம் கூட ஓடாது.. எங்களுக்குள்ள அவ்வளவு பாண்டிங்.. சொல்லி புரிய வைக்க முடியாது".. என்று அவன் சொன்ன முறையில் "அப்போ அவளையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.. முதலிரவு அறைக்குள்ளேயும் அவ இருந்தாகனுமோ".. என்று மனதிற்குள் தோன்றிய ஆயிரம் கேள்விகளை.. வெளிப்படுத்த முடியாமல் அப்படியே உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டவள்..

"சரி ஒருவேளை நானா அவளான்னு முடிவெடுக்க வேண்டி வந்தா.. என்ன செய்வீங்க.. குரு".. என்று கேட்டிருந்தாள்..

யோசிக்காமல்.. "ஆரா தான் வேணும்னு சொல்லுவேன்.. என்னைக்குமே அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீ என்னை புரிஞ்சுகிட்டா மட்டும் தான் என் கூட வாழ முடியும் பார்கவி" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி முடித்திருக்க ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்து போனது.. எப்பேற்பட்ட பெருந்தன்மையான காதலியும் இதை தாங்கிக் கொள்ள மாட்டாள் அல்லவா.. கடுகளவும் தனக்கு முக்கியத்துவம் இல்லையா.. என்ற ஆற்றாமையில் விழிகள் கலங்கி கண்ணீர் துளி.. விழுந்து விடுவேன் என்பது போல.. எட்டிப் பார்க்க.. அதை பார்த்தபடி அமர்ந்திருந்தவனுக்கோ மனம் ஒரு மாதிரியாகி போனது.. அவன் கொண்ட காதலும் பொய் அல்லவே..

"ஹேய் கவி ஏன் இப்ப அழற.". என்றவனின் குரலில் அதீத மென்மை எட்டிப் பார்க்க.. பார்கவி சற்று இளகித்தான் போனாள்.. அவளின் ஒரு கரம்.. விழிகளில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க.. மேஜை மீதிருந்த மறுகரத்தை அழுத்தி பிடித்துக் கொண்டவன்.. "இங்கப் பாரு கவி.. அவ எங்க வீட்டு பொண்ணு.. தாயில்லா பிள்ளை.. அப்போ எனக்கு எட்டு வயசு.. என் தங்கச்சிக்கு நாலு வயசு.. என்னோட அம்மா அவளை என் கையில கொடுத்துட்டு.. அம்மா அப்பா இல்லாத குழந்தை.. இவளுக்கு நாம தான் அன்பு காட்டணும்.. அப்படின்னு சொன்னாங்க.. நான் இல்ல.. என் தங்கச்சி கிட்ட போய் கேட்டாலும் அவளும் இதையேதான் சொல்லுவா.. எந்த இடத்திலும் யாருக்காகவும் அவளை எங்களால் ஒதுக்கி வைக்கவே முடியாது".. என்று அவள் வடித்த கண்ணீரின் காரணமாக.. புரியும் படியாக நிதானமாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான் குரு.. சாதாரணமாக யாருக்கும் விளக்கம் கொடுக்கும் ஆளில்லை அவன்.. அதுவும் ஆரா விஷயத்தில் யார் என்ன கேட்டாலும்.. ஒன்று கை நீளும்.. இல்லையேல் "ஆமா அப்படித்தான்.. இப்ப என்ன அதுக்கு?" என்று திமிராக வார்த்தைகள் தடித்து போகும்.. முதன் முறையாக அமைதியாக விளக்கம் கேட்டுக் கொண்டிருப்பவள் பார்கவி மட்டுமே.. ஆனால் அவன் கொடுத்த விளக்கம்.. அவளுக்கு சலிப்பை மட்டுமே கொடுத்தது.. "டிவி சீரியல்ல கூட இதை விட அழகா பிளாஷ் பேக் சொல்லுவாங்க".. என்று மனதில் நினைத்துக் கொண்டவளோ.. வெளியே அமைதியாகவே நின்றாள்..

அவசரப்பட்டால் காதல் காற்றோடு பறந்து விடுமே.. இந்த கல்லூரியில் முதுகலை படிக்க வந்த மாணவி அவள்.. கல்லூரி பேராசிரியர் மீது காதல்.. அந்த நேரத்தில் அவன் கண்டிப்பிலும்.. கனல் விழியிலும் பயந்து வெளிப்படுத்த முடியாமல்.. தனக்குள்ளே காதலைப் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தவளோ.. முதுகலை முடித்து.. அங்கேயே கெஸ்ட் லெக்சரராக சேர்ந்திருந்தாள் அவனுக்காக மட்டுமே.. இதோ கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிறது.. வந்த இரண்டு மாதங்களில் தன் காதலை சொல்லியிருக்க.. வெளிப்படையாக மறுத்து ஒதுக்கம் காட்டியவன்.. ஒரு கட்டத்தில் தொடர் தாக்குதலில் அவள் காதலின் ஆழம் உணர்ந்து அவனுக்குள் கூத்தாடிய இளமை உணர்வுகளின் தூண்டுதலில்.. உள்ளம் குறுகுறுத்து.. அவள் காதலை ஏற்றுக் கொண்டான்.. அரும்பாடு பட்டு கைகூடி வந்த காதல் அவசரப்பட்டு காரியத்தையே கெடுத்துக் கொள்ள வேண்டுமா.. இந்த குட்டிச் சாத்தான் மூன்று வருடங்களாக ஒட்டுண்ணியாக அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதே.. இன்று நேற்றா பார்க்கிறோம்.. மெது மெதுவாகத்தான் தேவையில்லாத இந்த களையை பிடுங்கி தூக்கியெறிய வேண்டும்.. பொறு மனமே பொறு என்று தனக்குள் கூறிக் கொண்டவள்.. ஆராவை பற்றி மேற்கொண்டு பேச விரும்பாமல்

"சரி.. அதையெல்லாம் விடுங்க.. சாயங்காலம் பொண்ணு பாக்க வராங்க.. நான் என்ன பண்ணட்டும்".. என்று கேட்டிருக்கவும்.. நெற்றிப் புருவம் சுருங்க ஒரு கணம் புரியாது பார்த்தவனோ.. "என்னை கேட்டா? பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லைனா மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லு" என்று எகத்தாளமாக உரைத்திருக்க..

"குரு ப்ளீஸ்" என்றாள் எரிச்சலாக..

"பின்ன.. என்ன கேள்வி இது.. வீட்ல விஷயத்தை ஓபன் பண்ணிடு.. இந்த பொண்ணு பாக்குற ஃபார்மாலிட்டியை கேன்சல் பண்ணிடு.. இதையெல்லாம் ஏற்கனவே நீ செஞ்சு இருக்கணும்.. ஆனா நேத்து பிறந்த பான் பேபி மாதிரி.. என்கிட்ட வந்து சஜஷன் கேட்டுட்டு நிக்கிறே".. என்று சலித்துக் கொள்ளவும்.. "சரி.. நான் வீட்ல சொல்றேன்.. இன்னிக்கி என் அப்பா அம்மா கிட்ட பேசிடறேன்.. நிச்சயம் அவங்க சம்மதிப்பாங்க.. அழகும் அறிவும் சேர்ந்த புரபசரை வேண்டாம்னு சொல்லக் கூட மனசு வருமா என்ன?.. என்று ரசனையான பார்வையுடன் கூறியிருந்தவள்.. "நீங்க எப்போ உங்க வீட்ல பேச போறீங்க".. என்று பந்தை அவன் பக்கமே திருப்பி போட.. அவனுக்கோ தலையை சுற்றி விட்டில் பூச்சிகள் பறப்பதை போன்ற உணர்வு..

"இங்கே பாரு குரு.. அம்மா கை காட்டற பொண்ணைதான் நீ கண்ணை மூடிகிட்டு கல்யாணம் பண்ணிக்கணும்.. நீ பாட்டுக்கு எவளையாவது கூட்டிட்டு வந்து இவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு என் முன்னாடி நிக்க வெச்சேன்னு வை.. எலிபாஷாணத்தை முழுங்கிட்டு செத்து போயிடுவேன்".. என்று குளோசப்பில் தன் பெரிய முகத்தை காட்டி.. மீனாட்சி மிரட்டிய நினைவு வந்து போக.. தன்னிச்சையாக எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்.. உண்மைதான்.. ஆரா ஒன்றும் பொய் சொல்லவில்லை..

மீனாட்சியின் பயங்கரவாத மிரட்டல்கள்.. "வீட்டை விட்டு போயிடுவேன்.. லாரி முன்னாடி விழுந்துருவேன்".. என்று டிசைன் டிசைனாக ஆரம்பித்து.. "இப்போது உத்தரத்தில் தொங்கிடுவேன்".. என்பதில் வந்து நிற்கிறது.. விஷயத்தை வீட்டில் சொன்னால் கலவரம் வெடிப்பது உறுதி.. அதற்காக எத்தனை நாட்கள் தள்ளி போட முடியும்.. எத்தனை நாட்கள் பானி பூரி.. பேல் பூரி.. மசாலா பூரி.. தஹி பூரி.. என லஞ்சம் கொடுத்து.. ஆராவின் வாயை அடைக்க முடியும்..

ஒருமுறை மீனாட்சியின் பேச்சை மீறி குண்டூசி வாங்க கடைக்கு சென்றதற்கே.. "போடா போ என் பொணத்தை தாண்டி போ".. என்ற நடுஹாலில் பஜன்லால் சேட் போல் உருண்டு கொண்டிருந்த நிகழ்வெல்லாம் கண்முன் வந்து போகுமா இல்லையா.. அவர் பேச்சை மீறி கவியை திருமணம் செய்வதெல்லாம் நடக்காத காரியம்.. அப்புறம் எதுக்குடா காதலிச்சு தொலச்சே என்றெல்லாம் கேட்கக்கூடாது.. அதெல்லாம் வேற டிபார்ட்மெண்ட்.. அருவாளை தூக்கிக் கொண்டு வீதி வீதியாக ஓடும் குடும்பங்களில் கூட இந்த காதலை தவிர்க்கவே முடிவதில்லை.. இந்த விஷயத்தில் அவன் மலையாக நம்பியிருக்கும் ஒரே ஜீவன் ஆபர்ணா.. ஹிஹி பாவம் குரு..

திடீரென அவன் முகத்தில் மாறுதலாக வந்து போன உணர்வுகளில் குழம்பிப் போனவளோ "என்னாச்சு குரு.. உங்க வீட்ல என்னை அக்செப்ட் பண்ணுவாங்க தானே.. உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும் தானே".. என்று ஆர்வமாக கேட்டு வைக்க.. "ஓஹ்.. ஓஹோ".. என்று பலமாக தலையை ஆட்டி வைத்தான்.. குதூகலமாக உணர்ந்தவளோ.. "ஓகே நான் லஞ்சுக்கு போறேன்.. நீங்களும் வாங்களேன்" என்று அழைக்க.. "இல்லம்மா.. எனக்கு பசிக்கல நீ போ".. என்று விட்டான்.. பெரும்பாலும் கல்லூரியில்.. அதிகமாக ஐந்து நிமிடங்கள் பேசுவதை கூட விரும்ப மாட்டான் குரு.. இதில் எங்கிருந்து சேர்ந்து சாப்பிட வரப் போகிறான்.. என்று பெருமூச்சு விட்டு உள்ளுக்குள் கடுப்போடு அங்கிருந்து கிளம்பியிருந்தாள் பார்கவி..

அடுத்து உள்ளே நுழைந்ததோ ஆரா..

"சார்".. என்று மீண்டும் அழைக்க.. இறுகிய முகத்துடன் யோசனையாக நெற்றியை தேய்த்தபடி அமர்ந்திருந்தவனோ "போய்டு".. என்றான் ஒற்றை வார்த்தையாக..

இன்று அவள் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமில்லையே.. ஒரு விஷயத்துக்காக கண்டிக்க நினைத்திருக்க.. அதை மறக்குமளவு இன்னொரு விஷயம்..

"பசிக்குது குரு.. மீனு என்ன கொடுத்து விட்டுருக்கு".. என்று அப்பாவிப் பிள்ளையாக கேட்க.. விழிகளை அழுத்தமாக மூடி திறந்தவனோ.. தனது லஞ்ச் பாக்ஸை எடுத்து.. மேஜை மீது வைத்திருந்தான்.. எடுத்துக் கொண்டு கிளம்பி விடு என்னும் அனல் பார்வையுடன்..

கண்களில் ஸ்டார் மின்னல் வெட்ட.. அவசர அவசரமாக டிபன் பாக்ஸை திறந்து பார்த்தவளோ.. "ஹை.. சப்பாத்தி வைட் குருமா".. என்று மூக்கை இழுத்து மோப்பம் பிடித்தவள்.. "இந்தா.. அக்கா சமைச்ச வத்த குழம்பு.. இதை நீயே தின்னு".. என்று அவள் பையிலிருந்த டிபன் பாக்ஸை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு ஓடியிருந்தாள் ..

மீனாட்சியை சரி கட்ட என்ன செய்வது.. எப்படி விஷயத்தை போட்டு உடைப்பது என்று வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவனுக்கோ பசிக் கோளாறில் தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.. இயற்பியலின் தியரிகளையும்.. கணக்கு சூத்திரங்களையும் தெளிவாக விளக்கி தீர்ப்பவனுக்கு பெற்ற அன்னையின் பிரச்சினையை எப்படி தீர்க்க என்று தெரியவில்லை..

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டவன்.. மேஜை மீதிருந்த எவர்சில்வர் டிபன் பாக்ஸை திறந்து.. நல்லெண்ணெயில் வதக்கிய மணத்தக்காளி வத்தல் குழம்பையும்.. தேங்காய் துருவி போட்ட பீன்ஸ் பொரியலையும் கண்டு பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.. என்ற ரீதியல் இதழோரம் மெலிதாக புன்னகைத்திருந்தவன் ருசித்து உண்டு ஆரம்பித்திருந்தான்..
"அக்கா கைமணம் எப்பவுமே வேற லெவல் தான்". என்று புகழாரத்துடன்..

அரசு மருத்துவமனை..
ஸ்டெதஸ்கோப் கழுத்தில் தொங்க.. வெள்ளை கோட்டை தோளில் போட்டபடி.. மருத்துவமனை வளாகத்திலிருந்து கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் தமிழ்.. வசீகரிக்கும் தோற்றமும் கனிந்த பார்வையும் கொண்டவனை கண்டதும் உள்ளத்தில் உற்சாகம் தொற்றிக் கொள்ள.. அனைவரின் இதழிலும் தன்னிச்சையாக மலர்ந்தது புன்னகை..

தன்னறையில் வந்து.. இருக்கையில் அமர்ந்து.. "பேஷன்ஸ் எத்தனை பேர் இருக்காங்க".. என்று முன் நெற்றியில் புரளும் கேசத்தை ஸ்டைலாக கோதிவிட்டபடி.. கேட்டவனை ஒரு கணம் தன்னை மறந்து ரசித்திருந்தாள் நர்ஸ் தீபா..

"தீபா".. அழுத்தமாக அழைத்தான்..

"ஹான் சார்?"..

"பேஷண்ட்ஸ் எத்தனை பேர் இருக்காங்கன்னு கேட்டேன்".. என்றான் சற்றே காரசாரமான குரலில்..

"அஞ்சு பேர் வெயிட் பண்றாங்க சார்"..

"ஓகே.. ஒவ்வொருத்தரா உள்ளே அனுப்புங்க".. என்று தன் கைக்கடிகாரத்தை பார்த்தவனோ "10:30 க்கு நான் ரவுண்ட்ஸ் போகணும்.. அதுக்குள்ள இருக்கிறவங்களை பார்த்து முடிச்சிடலாம்".. என்று நிமிர்ந்தும் பார்க்காது தன் மேஜையிலிருந்த பொருட்களை ஒழுங்குபடுத்திய படியே கூறினான்..

"சார்".. என்று ஒருத்தி வாயிலில் நின்று உள்ளே வருவதற்கு அனுமதி கேட்க..

"ஒரு பைலில் கையெழுத்துட்டு கொண்டே "வாங்க" என்றவன்.. "உக்காருங்க.. என்று விட்டு.. "என்ன பிரச்சினை".. என்றான்.. நிமிராமல்..

"ப்ரெக்னன்ட்".. என்றது அந்த பழக்கப்பட்ட குரல்..

"கைனகாலஜிஸ்ட் இன்னும் வரலையே.. தட்ஸ் ஓகே.. எத்தனை மாசம்"..

"மூணு"..

"ஓஹோ.. உங்க கணவர் பெயர்?" என்று பிரிஸ்கிரிப்ஷனை எடுத்து வைத்துக்கொள்ள.. "செந்தமிழ்ச்செல்வன்".. என்று அழுத்தமாக உரைத்திருந்தாள் அவள்..

இன்றைய தேதியை எழுதிக் கொண்டிருந்தவனின் கரம் அப்படியே நின்று விட்டன..

"வாட்".. என்றவன் நிமிர்ந்து பார்க்க.. எதிரே துவாரகா..

"என்னடி சொல்றே".. தன்னையறியாமல் அவன் முகம் அதிர்ச்சியை வெளிப்படுத்த..

"காது கேக்கலையா டாக்டரே.. பிரக்னன்ட்னு சொன்னேன்".. என்றாள் மீண்டும்..

தொண்டை குழிக்குள் அவன் எச்சில் கூட்டி விழுங்குவதை சிரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்தவள்.. மீண்டும் சீரியசாக முகத்தை வைத்துக்கொள்ள..

"எப்படி ஆச்சு" என்றான் இன்னும் அதிர்ச்சி விலகாமல்..

"என்ன கேட்டா உங்களுக்கே தெரியலைனா எனக்கு எப்படி தெரியும்".. என்று அப்பாவியாக உதட்டை பிதுக்க.. அவன் மூளை தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருந்தது..

முத்தம்தானே கொடுத்தேன்.. அதுவும் ஒரு.. நாலஞ்சு.. இல்ல.. பத்து.. இல்ல.. இல்ல.. ஒரு இருபத்தஞ்சு வாட்டி இருக்குமா.. "முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்குமா என்ன?".. என்று வெளிப்படையாகவே கேட்டிருந்தான் Mbbs.md முடித்து மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன்..

தொடரும்..
 
Member
Joined
Jan 26, 2024
Messages
40
அருமையான பதிவு
 
Well-known member
Joined
Nov 20, 2024

குட்டி பிசாசு ஆரா கிடையாது நீதாண்டி பெரிய பிசாசு பார்கவி 🙎🙎🙎
அடேய் உனக்கு மக்கு டாக்டர் ன்னு பெயர் வச்சது தப்பே இல்ல 😂😂😂
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
தமிழு நீ எல்லாம் ஒரு டாக்டராடா. முத்தம் கொடுத்தா கர்ப்பம் ஆகுமான்னு யோசிக்கிற. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 🤣🤣🤣🤣🤣🤣

துவாரகா இவன கட்டிகிட்டு எப்படி பொழப்புத்தனம் பண்ணுவியோ. இந்த இலட்சணத்தில இருக்கிற நீங்கல்லாம் எதுக்குடா சத்தியம் பண்ணறீங்க.
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
May 3, 2025
Messages
37
மீனு kita விஷயம் pochu செத்தான் நம்ம குரு...

ஆரா மேல இவளோ கோபம் ஆகாது கவி உனக்கு...

தமிழ் உன்னையே confuse பண்ணி டா பாரு...ஹாஹா என்னடா இது doctor ku வந்த நிலமை...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
75
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🍉💯🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷
 
Top