- Joined
- Jan 10, 2023
- Messages
- 58
- Thread Author
- #1
"முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்குமா" என்று கேட்டதும் துவாரகாவின் விழிகள் விரிய.. "ஒரு டாக்டர் கேக்குற கேள்வியா இது".. என்றாள் இதழ்கள் துடிக்க சிரிப்போடு..
அவள் கேலியில் முகம் சிவந்தவனோ.. "முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்காதுன்னு எனக்கும் தெரியும்.. தெரியாமலா படிச்சிட்டு வந்து இங்க டாக்டரா உக்காந்து இருக்கேன்.. ஆனா முத்தம் மட்டும் தானே கொடுத்தேன் குழந்தை எப்படி?".. என்று குழப்பத்துடன் இழுக்க..
"அப்பாடா.. இப்போவாச்சும் ஒத்துக்கிட்டீங்களே".. என்றாள் பெருமூச்சுவிட்டு..
"ஏய் என்னடி.. நான் எதையும் ஒத்துக்கல.. எனக்கும் இந்த குழந்தைக்கும் சம்பந்தமே இல்ல.. முத்தம் கொடுத்தேன்னு சொன்னேன்".. என்று பதறி பின் வாங்கினான் தமிழ் ..
"அதையேதான் நானும் சொல்றேன் முத்தம் கொடுத்தேன்னு ஒத்துக்கிட்டீங்கள்ல".. என்றாள் அவள் குறும்புப் பார்வையுடன்..
திருட்டு விழியோடு.. "ஆமாம் கொடுத்தேன்தான்.. ஆனா அது உனக்காக கொடுக்கல.. நான் தமன்னாவை நினைச்சு கனவு கண்டுட்டு இருக்கிறப்போ.. நீ கிட்ட வந்தே.. என் கனவுக் கன்னின்னு நினைச்சு உனக்கு கொடுத்துட்டேன்.. காலங்காத்தால நான் வேற மாதிரி மூட்ல இருப்பேன்.. என்கிட்ட வராதேன்னு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்".. என்று சமாளித்தான்..
"ஓஹோ".. இன்று நக்கலாக புருவம் உயர்த்தியவளோ.. "அப்போ அதுக்கு முந்தைய நாள் கொடுத்தது".. என்று கேட்க..
"அது அனுஷ்காவை நினைச்சு கொடுத்தேன்".. என்றான் தயார் செய்த பதிலோடு..
"அப்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி"..
"கீர்த்தி சுரேஷ்"..
"போன வாரம்"..
"ஆலியா பட்"..
"போன மாசம்"..
"எம்மா வாட்சன்"..
"சோ ஒரு நாள் கூட என்னை நினைக்கவே இல்லை.. அப்படித்தானே"..
"ஹாஹா.. உன்னையெல்லாம் மனுஷன் நினைப்பானா.. உன்னை நினைச்சா தூக்கம் வருமா.. துக்கம்தான் வரும்.. இப்ப எதுக்குடி இங்க வந்த.. உன்னை இந்த பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேனா.. இல்லையா?.. செக்யூரிட்டி கிட்ட கேட்டு இழுத்து பூட்ட சொன்னேனே அந்த ஆள் என்ன பண்றான்.. காலங்காத்தால டென்ஷன் பண்ணிட்டு.. மரியாதையா எழுந்து போடி" .. என்று எரிந்து விழுந்தான்..
"கோபப்படாதீங்க டாக்டரே.. பேஷண்ட்ட விட டாக்டருக்கு தான் ரொம்ப பேஷியன்ஸ் முக்கியம்.. நீங்க இப்படி கத்துனா எங்க நிலைமை என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க".. என்று அவனிடம் வம்பு வளர்க்க.. கடுப்புடன் நீண்ட பெருமூச்சு எடுத்துக் கொண்டவனோ.. "இப்ப என்னதான்டி வேணும் உனக்கு".. என்றான் அழுத்தமாக..
"இடுப்புல புதுசா ஒரு மச்சம் ரிலீஸ் ஆகி இருக்கு.. பாக்கறீங்களா"..
துவாரகா..
"ப்ச்.. பின்னே என்ன.. அதான் சொன்னேனே ப்ரெக்னன்ட்ன்னு".. என்றாள் மீண்டும்..
"வெளியே பேஷன் வெய்ட் பண்றாங்க.. கடுப்பேத்தாத துகி".. என்றான் சற்றே கடுமையான குரலில்..
"ஐயோ நான் சீரியஸா தான் சொல்றேன்.. பிரக்னண்டா".. என்று முடிக்குமுன்னே.. "வாய மூடுடி.. நான் எதுவுமே பண்ணாத போ நீ எப்படி பிரக்னென்ட் ஆக முடியும்".. என்று கோபத்தில் பற்களை கடித்தான்..
அச்சசோ விசுவாமித்திர முனிவர் வெளியில் வந்தாச்சு.. என்று சற்றே மனதுக்குள் மிரண்டாலும்.. "பார்றா.. நீங்க மட்டும் தான் உலகத்துல ஆம்பளையா".. என்று நக்கலாக கேட்டு வைக்க..
"இன்னொரு வார்த்தை பேசினே அறைஞ்சிடுவேன்".. என்று கோபத்துடன் மேஜையில் ஓங்கி தட்டியிருந்தான் தமிழ் .. சத்தம் கேட்டு வெளியில் இருந்து நர்ஸ் உள்ளே வந்து எட்டிப் பார்த்தாள்.. பயப்படும்படி எதுவும் இல்லை போனவாரம் பேப்பர்வெயிட் சுவற்றில் மோதியது.. அன்றும் துகி தான் வந்திருந்தாள்.. எப்போதும் இந்த துவாரகா வந்தால் ஏதாவது பொருட்கள் உடையும்.. இல்லையேல் யாராவது ஒருவருக்கு திட்டு விழும்..
செக்யூரிட்டி முதற்கொண்டு.. அனைவருமே டாக்டர் சொல்லாமல் துவாரகாவை உள்ளே விடமாட்டேன்.. என்று மறுத்திருக்க.. "ஐயோ வயிறு வலி தாங்க முடியல.. இப்பவே செத்துருவேன் போல இருக்கு" என்று ஸ்ட்ரெச்சரில் ஏறி படுத்துக் கொண்டு.. ஓவர் ஆக்டிங் போட்டு வந்து விட்டாள்..
துகியின் தலையை கண்டவுடன் முக்கியமான பொருட்களை எடுத்து ஓரமாக வைத்து விட்டாள் அந்த நர்ஸ்..
இப்போது எதுவும் உடையவில்லை என்ற நிம்மதியோடு "சார் எனி பிராப்ளம்".. சற்றே கலவரத்துடன் நர்ஸ் கேட்கவும்.. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை மூடி திறந்தவனோ "நத்திங் நீங்க போங்க".. என்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் கூறவே அங்கிருந்து வெளியேறி இருந்தாள் ரீட்டா..
மீண்டும் கண்களில் கோபத்தை தாங்கி.. அவள் பக்கம் திரும்பி இருந்தவன்.. "இங்க பாருடி என்னை டென்ஷன் பண்ணாதே.. மரியாதையா இங்கிருந்து கிளம்பு இது ஹாஸ்பிடல்.. நீ கலாட்டா பண்றதுக்கான இடம் இல்லை.. அதுக்கான ஆள் நானும் இல்லை.. இன்னொரு வாட்டி நான் உன்னை இங்கே பார்க்க கூடாது".. என்று மிச்சமிருந்த கொஞ்ச நெஞ்ச பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு கூறவும்.. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவன் கோபத்தை கூட ரசித்தவளோ
"பரவாயில்ல டாக்டரே .. பிரக்னென்ட்ன்னு சொன்னதும் உங்களுக்குள்ள ஒரு பொசசிவ்னஸ் வந்து அப்படியே துடிச்சீங்க பாத்தீங்களா.. அது புடிச்சிருக்கு.. நான் ஒண்ணுமே பண்ணாத போ, நீ எப்படி பிரக்னன்ட் ஆக முடியும்னு.. என் மேல அவ்ளோ நம்பிக்கையோட சொன்னீங்க பாத்தீங்களா அதுவும் புடிச்சிருக்கு.. வேற ஆளோட என்னை கனெக்ட் பண்ணி பேசினப்போ.. கண்ணெல்லாம் சிவந்து போய் கோபத்துல கத்துனீங்க பாத்தீங்களா அதுவும் புடிச்சிருக்கு.. இது.. இது.. இதுக்காகதாண்டா என் மனசு உன்னையே சுத்தி சுத்தி வருது.. லவ் யூ தமிழ் மாமா".. என்று பறக்கும் முத்தத்தை அவனை நோக்கி வீச.. சட்டென விழிகள் விரிய.. பெண்ணவளின் திடீர் தாக்குதலில்.. மீசைக்குள் ஒளிந்திருந்த வெட்கமும் புன்னகையும்.. துடிக்கும் இதழ் வழியே மெல்ல எட்டிப் பார்க்க முயல.. வெளிக்காட்டிக் கொள்ளாதவனாக "வெட்கமே இல்லையாடி உனக்கு.. முதல்ல இங்கிருந்து கிளம்பு".. என்றான் மேஜையில் முழங்கையை ஊன்றி.. நெற்றியில் கை வைத்து முகம் மொத்தத்தையும் மறைத்துக் கொண்டபடி..
விரலிடுக்கின் வழியே எட்டிப்பார்த்தவளுக்கோ அவன் இதழின் புன்னகை தெரிய.. "கிளம்பறேன் கிளம்பறேன்.. இப்படியே இன்னிக்கு நாள் ஃபுல்லா சிரிச்சுக்கிட்டே இருங்க.. அதுதான் உங்களுக்கும் அழகா இருக்கு.. அதை விட்டுட்டு எப்போ பாரு முறைச்சிகிட்டு.. எரிஞ்சு விழுந்துகிட்டு".. என்று மூக்கை சுருக்கவும்..
"ஏய் இப்ப நீ போறியா இல்லையா".. அவள் குரல் உயர.. "இதோ போய்ட்டேன்.. போய்ட்டேன்".. என்று எழுந்தவள்.. "Bye அழகா".. என்று விரல்களை அசைத்து விட்டு திரும்பி நடந்தவள்.. ஏதோ யோசித்தவாறு.. மீண்டும் அவனிடம் வந்து.. "முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்குமான்னு இன்னொரு வாட்டி டெஸ்ட் பண்ணி பாத்துடுவோமா டாக்டரே".. என்று புருவங்களை ஏற்றி இறக்க..
விழிகளை சுருக்கி முறைத்தவனோ.. "அடிங்".. என்று அவளை அடிக்க ஆயுதம் தேடவும்.. ஆள் எஸ்கேப்.. சரியான லூசு.. என்று திட்டிக் கொண்டவனோ அடுத்த பேஷண்டை அழைத்து இருந்தான்..
"டாக்டர் ஒரே கைவலி.. கையை தூக்கவே முடியல".. என்று அந்த நோயாளி நொந்து போய் கூறிக் கொண்டிருக்க.. துவாரகா இதழ் குவித்துக் கொடுத்த பறக்கும் முத்தத்தில் லயித்திருந்தவனோ..
ஹான்.. ஒருவேளை பிரக்னென்டா இருப்பீங்களோ.. என்றான் கவனத்தை நோயாளியின் மேல் பதிக்காமல்..
"எதேய்.. டாக்டர் நான் ஆம்பளை.. என்னை பாருங்க".. அவர் திடுக்கிட.. "ஓஹ்.. சாரி".. என்றான் அப்போதும் காதல் மயக்கம் தெளியாது..
"என்ன டாக்டர் நான் கை வலின்னு சொல்றேன்.. நீங்க சிரிக்கிறீங்களே".. என்று வந்த நபர் பாவமாக கேட்ட பிறகே.. தன்னிலை உணர்ந்து துவாரகாவின் நினைவிலிருந்து வெளிவந்தவன்.. "ஓ மை காட்.. சாரி.. நான் வேற எதையோ யோசிச்சிட்டு இருந்தேன்.. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டவன்..
அனுமதியின்ற இதயத்தினுள் புகுந்து ஆட்டுவிக்கும்.. துவாரகாவை.. "உள்ள உக்காந்துகிட்டு இம்சை பண்ணுது இந்த லூசு".. என்று செல்லமாக திட்டிக்கொண்டு.. தலையை உலுக்கி கொண்டவனோ.. அடுத்தடுத்த வேலைகளில் கண்ணும் கருத்துமாக மூழ்கிப் போனான்..
மாலை வேலைதனில் கல்லூரி முடிந்து வீட்டினுள் நுழைந்த ஆரா.. கை கால் முகம் அலம்பிக் கொண்டு.. நேரடியாக சமையலறையினுள் தான் நுழைந்தாள்.. (Foodie girl) தமிழில் சோத்து மூட்டை..
"அக்கா.. சாப்பிட என்ன இருக்கு" என்று கத்தியவாறே.. பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்க..
"இட்லி தான் இருக்கு.. இருடி உப்புமா பண்ணி தரேன்.. குழந்தைக்கு பால் கொடுத்துட்டு வரேன்".. என படுக்கை அறையிலிருந்து கத்தினாள் ஆருஷி..
"ஐயோ இட்லியா".. என முகத்தை சுழித்து பெரிதாக சலித்துக் கொண்டவளோ.. "ஒன்னும் வேணாம் நீயே தின்னு".. என்று வெளியே வர.. அதற்குள் உறங்கிய குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு.. கூடத்திற்கு வந்தவளோ.. "இருடி வெஜிடபிள் கிச்சடி செஞ்சு தாரேன்".. என்று பிரிந்திருந்த கூந்தலை கொண்டை போட்டுக்கொள்ள.. "ஐயோ அது அதைவிட மோசம்".. என்றவளோ.. செருப்பை போட்டுக் கொண்டு வெளியேறி இருந்தாள்..
தங்கை எங்கே போகிறாள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால்.. வாசல் வரை ஓடிவந்த ஆருஷி.. "அடியே தமிழ் வர்றதுக்குள்ள வந்துடு.. திரும்ப இன்னொரு பஞ்சாயத்தை தீர்க்க இங்கு தெம்பு இல்ல".. என்றுவிட்டு உள்ளே சென்றாள்..
வீட்டு வாசலில் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருந்தனர்.. குரு வேல்.. சஞ்சீவன் பிரகாஷ்.. ஆருஷியின் மூத்த இரட்டையர்கள்..
குழந்தைகளின் இந்த இரண்டு பெயர்களும் செந்தமிழ்ச்செல்வன் வைத்ததுதான்.. பெயர் நான்தான் செலக்ட் செய்வேன் என்று இந்த இரண்டு பெயர்களை சொன்ன போது அனைவரும் ஹாங் விழித்தனர்.. ஆனால் வாய் திறக்கவில்லை..
வீரபாண்டியன் மட்டுமே.. "ஏன்டி இது அந்த பக்கத்து வீட்டு பையன் பேரு தானே.. பொதுவா ஆம்பளைங்க எல்லோரும்.. தன் பிள்ளைகளுக்கு தான் அக்கா தங்கச்சி பிள்ளைங்களுக்கு லவ்வர் பேரை வைப்பாங்க.. இவன் என்னடி பரம எதிரி பெயரை வைக்கிறான்.. ஒருவேளை எதிரின்னு சொல்லிட்டு.. அந்தப் பையனை டீப்பா லவ் பண்றானா என்ன.. கன்றாவி".. என்று அவள் காதில் கிசுகிசுக்க.. "வாயை வச்சிக்கிட்டு சும்மா இருங்க.. நீங்க ஏதாவது கிண்டல் செய்ய போய்.. அவங்க எனக்கு எதிரிதான்னு காட்ட.. பெருசா ஏதாவது வம்பு வளர்த்து சண்டை போட்டுட்டு வருவான்.. நாங்கதான் நடுவுல உருளனும்".. என்று வீரபாண்டியனை அடக்கி விட்டாள்.. ஆனாலும்.. வீரபாண்டியன் சண்டை போட்டு.. "என் பிள்ளைகளுக்கு இந்த பெயர் நல்லா இல்ல.. சுடலைமாடன் காத்தவராயன்னுதான் பெயர் வைப்பேன்".. என்று அடம்பிடித்து ஆருஷி அவள் கணவனை வேறு மாதிரியாக சரிகட்டி சமாதானப்படுத்தியதெல்லாம்.. வேறு கதை..
"டேய் நானும் கொஞ்ச நேரம்.. டென் டைம்ஸ் மட்டும் ஆடிட்டு தரேன்.. என்று பிள்ளைகளோடு சண்டை போட்டு அவளும் சிறிது நேரம் ஊஞ்சல் ஆடிவிட்டு.. இல்ல டிவென்ட்டி டைம்ஸ்.. என்று அழிச்சாட்டியம் செய்து ஒரு வழியாக பிள்ளைகளை கதற வைத்து இறங்கியவளோ.. கேட் வழியாக செல்லாமல் சுவர் மீது எகிறி குதித்து பக்கத்து வீட்டினுள் நுழைந்திருந்தாள் ஆபர்ணா.. வாசலில் சிசிடிவி கேமரா உண்டு.. வழியே பக்கத்து வீட்டுக்கு சென்றால் வசமாக மாட்டிக் கொள்வாள்..
குரு வீட்டினுள் நுழைய வாசலில் அமர்ந்திருந்த ராக்கம்மா.. ஆராவை ஏற இறங்க பார்த்துவிட்டு "வாடி அப்பன் ஆத்தாளை முழுங்கினவளே.. இங்கே யாரை முழுங்க வந்திருக்க".. என்று குத்தலாக கேட்கவும்.. "ஹான்.. உன்னைய தான் முழுங்க வந்திருக்கேன்.. தள்ளி உட்காரு.. எப்ப பாரு வாசலை மறைச்சுகிட்டு பப்பரபான்னு உட்கார வேண்டியது" என்று ராக்கம்மாவை இடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தவளோ.. சோபாவில் அமர்ந்திருந்த குருவைப் பொருட்படுத்தாது நேரடியாக கிச்சன் பக்கம் தான் சென்றாள்..
"அம்மா சோத்துக்கு செத்தவ வந்துட்டா".. என்று குரு குரல் கொடுக்க.. மொட்டை மாடியிலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு கீழ் இறங்கி வந்து கொண்டிருந்த மீனாட்சி.. "ஏன்டி சாப்பிட ஒண்ணுமே இல்லையே.. ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல".. என்றதை காதில் வாங்காமல்..
பாத்திரங்களை உருட்டியவளுக்கு.. கொஞ்சம் சோறும் கடாயில் கொஞ்சம் குழம்பும் மட்டுமே மிச்சமிருக்க.. சோற்றை வழித்தெடுத்து கடாயில் போட்டு பிசைந்து கொண்டே ஹாலுக்கு வந்தவளோ.. கடாயோடு சோபாவில் வந்து அமர்ந்து கொண்டு டிவி ரிமோட்டை ஆன் செய்தாள்..
"ஓய்.. இது எங்க வீடா உங்க வீடா நீ பாட்டுக்கு.. உள்ள போறே.. சோத்தை போட்டுகிட்டு வெளியே வர்றே.. என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல".. என்று குரு அவளை சீண்டவே.. அலட்சியமாக ஒரு பார்வையை வீசிவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் கண் பதித்துக் கொள்ள .. மீனாட்சி இரண்டு அப்பளங்களை பொறித்து வந்து ஆராவின் கடாயில் போட்டாள்.. "ம்க்கும்.. வெளங்கிடும்".. என சலித்துக் கொண்டவனோ.. "எம்மா.. எல்லாம் நீ கொடுக்கிற இடம்".. என்று மீனாட்சியை கடிந்து கொள்ள.. "டேய்.. சும்மா இருடா".. என்று சமையலறையிலிருந்து வந்தது அவள் குரல்..
தீவிரமாக தொலைக்காட்சி பார்ப்பதில் கவனமாக இருந்தவளோ அடுத்த வாய் எடுக்க கடாயில் கை வைக்க சோறு காலி.. வெறும் கடாயை தடவிக் கொண்டிருந்தாள்.. இப்போதானே ஒரு வாய் சாப்பிட்டேன்.. அதுக்குள்ளே எப்படி காலி ஆச்சு.. என்று விழித்து குருவை பார்க்க..
கடாய் சோறு.. டேஸ்டி.. என்று சப்பு கொட்டினான் அவன்..
பசியோடு ஆசை ஆசையாக.. கடாயின் அடிமசாலாவில் சோற்றை போட்டு பிரட்டி எடுத்து வந்தவளுக்கு.. அதை உண்ண முடியாத ஏக்கம் கோபமாக எட்டிப் பார்க்க..
"சொந்த வீட்டிலேயே திருடி திங்கறான் பாரு பக்கி.. ஒரு ப்ரொபசர் பண்ற வேலையாடா இது".. என்று ஆக்ரோஷமாக அவன் மீது பாய..
"அய்யோ அம்மா.. கடிக்கிறா.. அம்மா.. சீக்கிரம் வா".. என்று மேலே விழுந்த பிராண்டிக் கொண்டிருந்தவளின் கையை பிடித்துக் கொண்டு கத்தினான் அவன்.. அதற்குள் அவன் புஜத்தில் கடித்து வைத்திருந்தாள்.. அரைக்கை டி ஷர்ட் வழியே.. பிதுங்கி நின்ற உருண்டு திரண்ட புஜத்தில்.. வட்டமாக பற்தடம்..
"என்னடா.. என்ன ஆச்சு".. வேகமாக கரண்டியுடன் ஓடி வந்தாள் மீனாட்சி.. பாவம் தினமும் இவர்களின் பஞ்சாயத்தை தீர்ப்பதே.. பெரும்பாடு..
"என் சோத்தை தின்னுட்டான்".. காலித் தட்டை காட்டினாள்.. பாவம் சோறு கிடைக்காத ஏமாற்றத்தில் கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டது..
"என்னை கடிச்சுட்டா".. கையில் பற்தடத்தைக் காட்டி.. அவனும் புகார் கடிதம் வாசித்தான்..
"ஏன்டி.. ஒரு வாய் சோத்துக்கா இந்த பாடு.. இரு வரேன்.. அதுவரை அமைதியா இருக்கனும்".. என்றவளோ.. சமையலறைக்குள் நுழைந்து இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து தான் வெளியே வந்தாள்.. அதுவரை இரண்டும் முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தன..
"இந்தா".. என்று அவள் கையில் வேறொரு தட்டை திணித்திருந்தவளோ.. ஆராவின் தாடையை இரு பக்கமும் பிடித்துக் கொண்டு.. "அதென்ன கடிக்கிற பழக்கம்.. ஹான்.. கடிப்பியா.. கடிப்பியா".. என்று பற்களை கடித்துக் கொண்டு அவள் வாயில் தன் கையை ஒற்றி ஒற்றி எடுக்க.. செல்லம் கொஞ்சும் பூனைக்குட்டி போல்.. தட்டிலிருந்த அதிர்சத்தை அசை போட்டவாறு.. வாயை காட்டிக் கொண்டிருந்தாள் அவள்..
"அடிச்சிட்டேன் கண்ணா.. இனிமே கடிக்க மாட்டா" என்று விட்டு மீனாட்சி உள்ளே செல்ல .. "அடிப்பாவி மம்மி.. இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல.. துரோகி".. என்று விழிகளை சுருக்கினான் குரு கோபத்தோடு.. இந்த பொய் அடிக்கு ஐந்து வயது பையன் கூட ஏமாற மாட்டானே.. இன்னும் குரு குழந்தை என்றே நினைப்பு அவன் தாய்க்கு..
"ஆ.. அச்சோ.. மீனம்மா.. நீங்க அடிச்சதுல என்னால முறுக்கை கூட கடிக்க முடியல".. என்று நீள்விருக்கையில் பக்கவாட்டாக திரும்பி அமர்ந்து கொண்டு.. குருவின் மடிமீது காலை போட்டுக் கொண்டவளோ.. காலாட்டியபடி.. அவனை வெறுப்பேற்றிக் கொண்டே முறுக்கை தின்றாள்.. நறுக்.. நறுக்கென்று பாதங்களில் அவன் கிள்ளிட.. ஸ்..ஆஆ.. என காலை கீழே தொங்க போட்டுக் கொண்டாள்..
குருவின் பார்வை.. அவள் ஸ்னாக்ஸ் தட்டின் மீது பதிய..
"அடேய்ய்.. மறுபடியும் அவளை வம்புக்கு இழுத்தேனா இந்த வாட்டி நான் தலையிட மாட்டேன்.. எப்படியோ கடி வாங்கி சாவுன்னு விட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. நீ போய்.. துவாரகாவை காலேஜ்ல இருந்து அழைச்சிட்டு வா.. வண்டி பஞ்சர்னு வீட்டிலேயே விட்டுட்டு போயிட்டா பாரு".. என்று மீண்டும் சமையற் கட்டிலிருந்து மீனாட்சி குரல் கொடுக்க.. "ஆமா இப்போ மட்டும் இவளை அப்படியே கண்டிச்சு கிழிச்சிட்டீங்க.. எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தான்".. என்று முனகியவனோ.. ஆராவை முறைத்து விட்டு வெளியே சென்றிருந்தான்..
வாசலில் அமர்ந்து அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ராக்கம்மாவின் போன்.. திடீரென தட்டி விடப் பட்டது..
"எவடி அவ".. ராக்கம்ஸ் கோபத்துடன் கத்த.. கையை தூசி தட்டியபடி எதிரே நின்றிருந்தாள் மீனாட்சி..
"அவ்வ்வ்வ்".. ராக்கம்ஸ் அடங்கி விட.. ஒரு முறைப்புடன் உள்ளே சென்று விட்டாள் அவள்..
மறுநாள் காலையில்..
"அய்யயோ.. இந்த கொலைகார குடும்பத்து கிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க".. ஸ்லொவ் மோஷனில் ஓடிக் கொண்டிருந்தாள் ராக்கம்மா..
குடும்பமே துரத்திக் கொண்டிருந்தது.. வேறெதற்கு? உச்சந்தலையில் சத்தியம் போடத்தான்.. மாடியில் நின்று வலை போட்டு ராக்கம்மா மீனை பிடித்திருந்தாள் மீனாட்சி..
தொடரும்..