• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 6

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
இவங்க மாங்கு மாங்குன்னு சத்தியம் போடறதுக்காகான காரணம் என்னன்னு கொஞ்சம் பாத்துட்டு வந்துருவோமா..

தமிழின் தாய் அபிராமியும் மீனாட்சியும் உற்ற தோழிகளாக வாழ்ந்த காலம் அது.. வெற்றிவேல் பெரிதாக யாருடனும் நெருங்கி பழக மாட்டார்.. அவருடைய தாய் ராக்கம்மா சொல்லவே வேண்டாம்.. அக்கம் பக்கத்து மனிதர்களை சண்டைக்கு இழுப்பதும்.. வருவோர் போவோரிடம் மருமகளை பற்றி குறை சொல்வதையுமே வழக்கமாகக் கொண்டிருந்தார்.. மீனாட்சி வெற்றிவேலின் மூத்த மகன் குரு பிரகாஷிற்கு அப்போது வயது ஏழு.. இளையவள் துவாரகாவின் வயது மூன்று..

அபிராமியின் கணவர் சங்கர வேல் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்திருந்தவர்.. இடையில் விடுமுறையில் இரண்டு வார காலங்கள் வந்து தங்கிவிட்டு குழந்தைகளுடனும் மனைவியுடனும் நேரம் செலவழித்து பின் ஊருக்கு சென்றிருந்தார்.. அப்போது நிகழ்ந்த அழகான தாம்பத்தியத்தின் விளைவாக.. அபிராமியின் வயிற்றில் உருவானவள்தான் ஆபர்ணா.. அந்த நேரத்தில் ஆருஷி ஒன்பது வயது சிறுமி.. செந்தமிழ்ச்செல்வன் ஏழு வயது சிறுவன்.. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து வந்த குரு பிரகாஷ் செந்தமிழ் செல்வன் இருவருமே இணைபிரியாத நல்ல நண்பர்கள்..

இதுதான் என் வீடு இது உன் வீடு என்ற பேதமையெல்லாம் கிடையாது .. குரு.. தமிழ் யாராக இருந்தாலும்.. எந்த வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்களோ அங்கேயே உணவு பரிமாறப்படும்.. சில நேரங்களில் குரு.. தமிழ் வீட்டிலும் தமிழ்.. குரு வீட்டிலும் கூட உறங்குவது வழக்கம்.. ஆனால் இந்த இரு குடும்பங்களின் நட்பு ராக்கம்மாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை.. "நீ உழைச்சு சம்பாதிச்சு கொண்டு வர பணமெல்லாம் சாப்பாடா பொருளா அந்த வீட்டுக்கு தான்டா போகுது.. அவ புருஷன் சம்பாதிக்கிறது எல்லாம் பேங்க் லாக்கர்ல போய் சேருது".. என்று மகனிடம் ஏற்றி விடுவார்.. ஆனால் வெளிநாட்டிலிருந்து சங்கரவேல் வாங்கி வந்த விலையுயர்ந்த பொருட்களை கணக்கே பாராது இந்த வீட்டிற்கு அள்ளி கொடுத்திருந்த விஷயம் எல்லாம் ராக்கமாவிற்கு தெரியாது போலும் ..

வெற்றிவேல் பெரிதாக தாயின் பேச்சை மூளையில் ஏற்றிக் கொள்ள மாட்டார் என்றாலும் திரும்பத் திரும்ப வலுக்கட்டாயமாக புகுத்தப்படும் சில விஷயங்கள்.. அவரையும் அறியாமல் அந்த குடும்பத்தின் மீது ஒரு வெறுப்பினை உண்டாக்கி இருந்தது..

அபிராமியின் மசக்கை காலங்களில் மீனாட்சிதான் பக்க துணையாக இருந்து அவளை கவனித்துக் கொண்டார்.. பெரும்பாலும் அவரே சமைத்துக் கொடுத்து விடுவார்.. ஆருஷிக்கு தலைவாரி இரட்டை பின்னலிட்டு.. துருவனோடு சேர்ந்து தமிழையும் கிளப்பி விட்டு.. காலை உணவு மதிய உணவை மூவருக்கும் சேர்த்து கொடுத்தனுப்புவார்.. பக்கத்து வீட்டு பிள்ளைகளுக்கும் தன் மருமகள் கடமையாற்றுவதை ராக்கம்மாவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.. குருவோ.. ஆருஷியோ வீட்டுக்கு வந்தாலே.. "டேய் எங்கடா வரீங்க உங்க வீட்டுக்கு போடா.. வந்துட்டானுங்க ஓசி சோறு தின்றதுக்கு".. என்று வாசலிலேயே உட்கார்ந்து விரட்டியடிப்பாள்.. குழந்தை பிராயத்தில் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை தமிழ்.. ஆருஷி மட்டும் ராக்கம்மா.. தங்களை அடிக்கடி விரட்டுவதை அன்னையிடம் சொல்லிவிட.. அபிராமிக்கு ராக்கம்மாவின் குணம் தெரியும் என்பதால்.. அந்த விஷயத்தை மனதளவில் போட்டு வருத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டாள்.. ஒருவேளை ராக்கம்மா திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு குழந்தைகளை அங்கே அனுப்பாமல் போனால்.. அதனால் மனம் வேதனைப்பட போவது என்னவோ மீனாட்சிதான்.. சில நேரங்களில் ராக்கம்மாவின் குத்தல் பேச்சுக்களை தாங்க இயலாமல்.. அபிராமி தன் குழந்தைகளோடு ஒதுங்கிக் கொண்டாலும்.. மீனாட்சி வீட்டிற்கே வந்து கையைப் பிடித்துக் கொண்டு அழுது.. "அப்போ உனக்கு நான் முக்கியமில்லை.. அந்த கிழவி சொன்னதுதான் முக்கியம்.. அப்படித்தானே.. அவங்களுக்காக பாக்குறியே.. என்னை நினைச்சு பாத்தியா.. என் மனசு எவ்வளவு கஷ்டப்படும் நீ யோசிச்சியா.. அது பாட்டுக்கு என்னமோ சொல்லிட்டு போகுதுன்னு குழந்தைகளை அனுப்பாம.. இப்படி மூணாம் மனுஷி மாதிரி ஒதுங்கி நின்னா என்ன அர்த்தமாம்".. என்று சண்டை போட்டு வலுக்கட்டாயமாக.. பிள்ளைகளை அழைத்துச் சென்று தன்னோடு தங்க வைத்துக் கொண்டு மாமியாரின் மூக்குடைப்பதற்காகவே அன்றைய இரவு தன் பிள்ளைகளை அபிராமி வீட்டில் துணைக்கு விட்டு விட்டு வருவாள்.. வெற்றிவேலுக்கு மனைவியின் நடவடிக்கைகளும்.. அபிராமியின் மீதும் அவள் பிள்ளைகளின் மீதும் கொண்ட பாசமமும்.. பிடித்தமில்லை என்றாலும்.. மனைவி மீது கொண்ட நேசத்தின் காரணமாக.. அவளுக்காக அந்தப் பிள்ளைகளை பொறுத்துக் கொண்டார்.. துவாரகா எப்போதும் ராக்கம்மாவின் கைவளைவிலேயே இருந்ததால் தமிழால் அவளோடு விளையாட முடியாமல் போனது.. அப்போதும் ராக்கம்மா அசந்த நேரத்தில் துவாரகாவை தன் வீட்டிற்கு தூக்கிக்கொண்டு போய் விளையாடுவான்.. அதற்கும் ஒரு சண்டை வரும்.. சிறுபிள்ளை என்றும் பாராது தேவையில்லாத பேச்சுக்கள்.. "இனிமே துகி பாப்பாவை தூக்கக்கூடாது.. அவங்க பாட்டிக்கு கோபம் வருதுல்ல.. வளர்ந்த பிறகு அவளே உன் கூட விளையாட வருவா" என்று அம்மா சொன்னபிறகு அவள் பக்கமே செல்லுவதில்லை தமிழ்..

அபிராமியின் வயிற்றில் வளர்ந்த குழந்தை ஒன்பது மாதத்தை நெருங்கி விட்டிருந்த வேளையில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது..

இத்தோடு அங்கு வேலை பார்த்தது போதும்.. இருக்கும் சேமிப்பை வைத்துக்கொண்டு தனக்கு தகுந்தார் போல் ஒரு வேலையை பார்த்துக் கொண்டு.. மனைவி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நினைத்து .. ஊருக்கு திரும்ப வந்து கொண்டிருந்த சங்கர் வேல் பயணிகள் விமானம் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் அகால மரணமடைந்திருந்தார்.. தற்காலிக பிரிவை தாங்க இயலாது குடும்பத்தோடு இணைய நினைத்திருந்தவர்.. நிரந்தரமாக அவர்களை விட்டு பிரிந்து திரும்பி வர முடியாத தூரத்திற்கு சென்றிருந்தார்.. அன்பு கணவனின் மறைவில்.. நிலைகுலைந்து போனாள் அபிராமி.. வயிற்றில் பிள்ளையுடன் அழுது கதறியவளை தேற்றவே முடியவில்லை.. சங்கர் வேல் இறப்பின் துயரம்.. அவள் மனநிலையோடு உடல்நிலையையும் சேர்ந்து பாதிக்க.. பிரசவத்தில் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.. மூன்று பிள்ளைகளையும் தனியே விட்டு கணவனோடு கைகோர்த்து விண்ணுலகம் சென்றிருந்தாள் அபிராமி.. இழப்பை பற்றி உணர முடியாத வயதல்லவா அது.. அம்மாஆஆ.. அம்மாஆஆ.. என்று அழுது கதறிய பிள்ளைகளை கண்டு இதயம் வெடிப்பது போல் உணர்ந்தாள் மீனாட்சி..

தாயும் இல்லை தகப்பனும் இல்லாத பிள்ளைகளுக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்று அந்த வீட்டில் டென்ட் போட்டு அமர்ந்து விட்ட உறவினர் கூட்டம்.. "ஆளுக்கு ஒரு பிள்ளையா பிரிச்சுக்கலாம்.. நான் பெரியவளை கூட்டிட்டு போறேன்.. நீ சின்னவனை கூட்டிட்டு போ.. வீட்டை சரிபாதியா பங்கு போட்டுக்கலாம்".. என்று சங்கர வேலின் சொந்தக்காரர்கள்.. சொத்துக்களை பிரிப்பதில் மும்முரமாக இருந்தனரே தவிர்த்து கதறிக் கொண்டிருந்த பச்சிளங் குழந்தையின் அழுகையை நிறுத்த வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லை.. அன்னையின் கதகதப்பு தேடிய குழந்தையை மீனாட்சி தான் தூக்கி சென்று.. பசும் பால் கொடுத்து.. உறங்க வைத்தார்..

"மீனாட்சி இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை.. மரியாதையா குழந்தையை கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுடு.. அம்மா இல்லாத பச்சக் குழந்தை.. நாளைக்கு ஏதாவது ஒன்னு கிடைக்க ஒன்னு ஆச்சுன்னா.. நம்ம தலை தான் உருளும்.. அவங்க சொந்தக்காரங்க வேற ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு தினுசா இருக்கானுங்க.. ஏதாவது பிரச்சனை வந்துச்சு அப்புறம் ஒன்னையும் உங்கம்மா வீட்டுக்கு அடிச்சு விரட்டி விட்டுடுவேன்" என்று கணவனின் புதுமுகத்தில்.. சற்றே தடுமாறியவள்.. குழந்தையை ஆருஷிடம் கொடுத்து.. எப்படி பிடிக்க வேண்டும்? எப்படி மடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.. எப்படி பாலூட்ட வேண்டும் என்று கற்றுக் கொடுத்து பிஞ்சு குழந்தையை அந்த பச்சை பிள்ளைகளிடம் ஒப்படைத்திருந்தாள்..

வீடு முழுக்க உறவினர்கள் இருந்தாலும்.. இரண்டு பிள்ளைகளுக்கும் சாப்பாடு கொடுக்க ஆள் இல்லை அங்கே.. திருட்டுத்தனமாக அவ்வப்போது வந்து மீனாட்சிதான் இரு பிள்ளைகளையும் வீட்டின் பின்பக்கம் அழைத்து அமர வைத்து சோறு ஊட்டுவாள்.. இல்லையேல் குரு பிரகாஷிடம் உணவு கொடுத்தனுப்புவாள்.. ஆனால் ஏனோ ஏகப்பட்ட உறவினர்கள் அபிராமியின் வீட்டில் குழுமியிருப்பதை அசவுகர்யமாக உணர்ந்து கொண்ட வெற்றிவேல்.. அங்கே போகவே கூடாது என்று குருவை அடித்து விலாசிவிட்டார்..

அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்து தன் கதகதப்பை கொடுத்து.. தாயைப் போல பராமரித்துக் கொண்டதெல்லாம் ஆருஷி தான்.. சில நேரங்களில் செந்தமிழ்ச்செல்வன்... குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருப்பான்..

"அட.. என்ன இந்த சனியன் விடிய விடிய நை.. நைன்னு கத்திக்கிட்டே கிடக்குது".. என்ற நொந்து கொள்ள மட்டும் அந்த வீட்டில் உறவினர்கள் குழுமி இருந்தனர் போலும்..

நாளாக ஆக உறவினர்கள் கிளம்புவதாக தெரியவில்லை.. ஆளுக்கு ஒரு குழந்தையாக எடுத்து வளர்த்துக்கொண்டு.. சொத்தை அபகரிப்பதிலேயே குறியாக இருந்தனர்.. புதிதாக பிறந்த பிஞ்சு மலரின் மீது யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கவில்லை.. தமிழ் ஆருஷி மீதும் எந்த அன்பும் பாசமும் இல்லை..

சங்கர வேல்.. வெளிநாடு சென்று உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த வீடு கட்டியது.. மேற்கொண்டு எந்த நகைகளோ சேமிப்போ கிடையாது.. மீதமிருந்த சொற்ப சேமிப்பும் குழந்தைகளின் படிப்பு வீட்டு செலவு என்று கரைந்து போனதில்.. இப்போது குழந்தைகளின் சொத்தாக அந்த வீடு மட்டுமே மிச்சம்.. நகரத்தின் மையப் பகுதியில் விசாலமான அந்த வீட்டிற்காகதான் நாக்கை தொங்க போட்டு அமர்ந்திருக்கின்றனர் அனைவரும்.. இதில் வேறு.. வந்த இடத்தில் அதிகாரம் தூள் பறக்கும்.. ஆரூஷியை.. தமிழை எடுபிடி வேலைகள் செய்ய வைத்து.. சாப்பாடும் சரியாக கொடுக்காமல்.. இதையெல்லாம் தாண்டி உச்சகட்ட கொடுமையாக.. அவர்கள் தீட்டிய மிகப்பெரிய திட்டம்தான்.. தமிழை அடித்து பதறி அன்றிரவே மீனாட்சி வீட்டுக்கு செல்ல உந்தித் தள்ளியது..

"என்னடா தமிழ்.. வேர்க்க விறுவிறுக்க இந்த ராத்திரியில் ஓடி வந்திருக்க ஏதாவது பிரச்சனையா".. என்று மீனாட்சி பதைபதைப்புடன் கேட்க..

"அத்த.. அத்த.. என்ன என்னவோ பேசிக்கிறாங்க.. பாப்பாவை.. கொல்லப் போறாங்களாம்.. எங்க பாப்பா தேவையில்லாத சனியனாம்.. அவளுக்கு ஒரு முடிவு கட்டிட்டு.. இந்த வீட்டை விலை பேசி வித்துட்டு எங்க ரெண்டு பேரையும் ஊருக்கு கூட்டிட்டு போக போறாங்களாம்".. என்று ஏழு வயது பாலகன் தேம்பி தேம்பி அழவும்.. தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.. சொந்தம் என்றாலே வில்லங்கம் என்று தெரியும்.. ஆனால் பச்சிளங் குழந்தையை கொலை செய்யுமளவிற்கு மாபாதக கூட்டம் என்று இதுநாள் வரை அறியாது போயிருந்தாள்..

அந்நேரத்தில் ஆருஷியும் அவர்களுக்கு தெரியாது குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட.. வேறு வழியில்லாமல் வெற்றிவேலின் உதவியை நாடினாள் மீனாட்சி..

பிரச்சனையை தெளிவாக கேட்டுக் கொண்ட வெற்றிவேல் "நான் கண்டிப்பா உதவி செய்றேன். ஆனா அதுக்கு அப்புறம் உங்க வீட்டு பக்கம் போறதே இருக்கக் கூடாது.. இதுக்கு ஒத்துக்கிட்டா.. என்ன பிரச்சனைகளை தலையிடுவேன்.. இல்லைனா.. அவங்க எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டு நான் பாட்டுக்கு என் வேலையை பாக்கறேன்".. என்று சொல்லவும்.. அந்த நேரத்தில் தலையாட்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவளுக்கு.. வெற்றிவேல் பேசியதை எல்லாம் ஆருஷியும் தமிழ்செல்வனும் கேட்டுக் கொண்டுதான் இருந்தனர்.. "நம்மள பிடிக்காதவங்க கிட்டேருந்து விலகி இருக்கணும் கண்ணா" என்று அன்னை சொன்னதை நினைவு கூர்ந்தான் தமிழ்..

வெற்றி சொன்னது போல் தனக்குத் தெரிந்த காவல் அதிகாரியை வரவழைத்து.. மூன்று பேரையும் காப்பாற்றி.. பெண் குழந்தையை கொல்லப் பார்த்த குற்றத்திற்காக மொத்த குடும்பத்தையும் கைது செய்யப் போவதாக மிரட்டல் விடுத்திருக்க.. பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தன அத்தனை சொந்த பந்தங்களும்.. "உங்க மூணு பேரையும் ஹோமில் சேர்த்து விடட்டுமா" என்று அதிகாரி கேட்கவும்.. மீனாட்சியின் அறிவுரைப்படி திட்டவட்டமாக மறுத்திருந்தனர் குழந்தைகள்.. வெற்றிவேல் இல்லாத சமயத்தில் பக்கத்தில் வைத்தாவது பார்த்துக் கொள்ளலாம்.. தெரியாத இடத்தில் எங்கே சென்று எப்படி வளர்வார்களோ.. வாழ்வார்களோ! என்ற கவலை அவளுக்கு..

"அம்மா அப்பா இல்லாத பிள்ளைங்க.. அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க பத்திரமா பாத்துக்கோங்க" என்று அண்மை வீடுகளில் வேண்டுகோள் விடுத்து அங்கிருந்து சென்றிருந்தார் காவல்துறை அதிகாரி..

யாரும் இல்லாத வீட்டில் தனித்து விடப்பட்டனர் குழந்தைகள்.. வெற்றிவேல் இல்லாத சமயத்தில் மீனாட்சியை கண்காணிப்பதே முதன்மையான வேலையாகி போனது ராக்கம்மாவிற்கு.. "இங்க பாரு அப்பா ஆத்தாள முழுங்கின குழந்தையை இங்கே தூக்கிட்டு வந்து.. என் புள்ளைக்கும் கேடு வர வச்சுடாதே.. அந்தப் பிள்ளைங்க யாரும் இந்த வீட்டு வாசலை மிதிக்கவே கூடாது".. என்று சுடுச் சொற்களை வீச.. பிள்ளைகளுக்கு தேவையானதை தூர நின்று கவனித்துக் கொண்டாள் மீனாட்சி.. அருகே வந்தால் ஏற்கனவே தந்தை தாயை இழந்த அந்த பிள்ளைகளும் காயப்படக்கூடுமே..

ஆருஷி எப்போதுமே பொறுப்பானவள்.. செந்தமிழ்ச்செல்வன்.. அப்பா அம்மாவின் மறைவுக்கு பின்.. விளையாட்டுத்தனம் மாறி வயதுக்கு மீறிய பக்குவமடைந்திருந்தான்.. தேவையில்லாமல் மீனாட்சி வீட்டிற்கு செல்வதில்லை.. முடிந்தவரை தங்கள் வேலைகளை தாங்களாகவே செய்து கொள்ள கற்றுக் கொண்டனர்.. அப்போதும் குரு பிரகாஷ்.. செந்தமிழ்செல்வனின் பால்ய நட்பு எப்போதும் போல.. எந்த பூசல்களுமின்றி நல்ல விதமாகவே சென்று கொண்டிருந்தது.. ராக்கம்மாவின் குத்தல் பேச்சுகள் எப்போது மனதில் அழுத்தமாக பதிந்திருந்தாலும்.. குரு பிரகாஷிடம் மீனாட்சியிடம் எப்போதும் போலவே ஒட்டி உறவாடினான் செந்தமிழ்ச்செல்வன்.. ஆருஷியும் அப்படித்தான்..

குரு பிரகாஷிற்கு கரு நிறத்தில் முல்லைப் பூவென கண்களை திறந்து கொட்ட கொட்ட விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் குட்டி பாப்பாவை அவ்வளவு பிடித்தது.. துருதுருவென கை கால்களை அசைத்து பொக்கை வாய் திறந்து சிரிக்கும் பிள்ளையை காண்பது தினசரி வழக்கங்களில் ஒன்று..

"அம்மா.. அப்பா இல்லாம.. இப்படி தனியாக கிடந்து அல்லாடுறியே கண்ணு".. என்று அன்றொரு நாள் மீனாட்சி அழுது.. குழந்தையை தன் கையில் தூக்கி கொடுத்ததிலிருந்து.. ஏனோ அவன்தான் அந்தப் பிஞ்சு மலரின் முழு பொறுப்பானதாக உணர்வு.. அவன்தான் ஆபர்ணா என்று பெயர் சூட்டி இருந்தான்.. குருவுக்கு பிடித்த மேக்ஸ் டீச்சரின் பெயர் அது..

அன்பும் பாசமும் நட்புறவும் நீடித்திருந்தாலும்.. மீனாட்சியும் குருவும் அறியாத வண்ணம் அவர்கள் வீட்டிற்கு சென்று விளையாடுவதை அடிக்கடி உணவு வாங்கிக் கொள்வதை அறவே நிறுத்திக் கொண்டனர் இருவரும்..

இப்போது பிரச்சினை.. இருவருமே பள்ளி சென்று விட்டால் குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்பதில்தான்.. மீனாட்சி கைக்குழந்தையை பார்த்துக்கொள்ள தயாராக தான் இருந்தாள்.. ஆனால் அவள் வீட்டில் ஏகப்பட்ட கெடுபிடி.. அக்கம் பக்கத்து வீடுகளிலும் விட்டு செல்ல முடியவில்லை.. பாதுகாப்பு இல்லை.. பிள்ளையை பள்ளி அழைத்துச் செல்லவும் அனுமதி இல்லை..

ஒருவர் பள்ளி சென்று வரும் நிலையில் இன்னொருவர் வீட்டிலிருந்து குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை.. அந்த நேரத்தில் ஆருஷி விட்டுக் கொடுத்தாள்.. பத்து வயதில் ஆபர்ணாவின் தாயானாள்.. தன் படிப்பை அவளுக்காக தியாகம் செய்தாள்.. மீனாட்சியின் கண்காணிப்பில் தான் குழந்தைகள் வளர்ந்தார்கள் என்றாலும்.. நேரடியாக அவர்களை கவனித்துக் கொள்ள முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டாள் அவள்..

கொஞ்சநஞ்சமிருந்த சேமிப்பும் கரைந்து போன நிலையில் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை.. அம்மா அப்பா சொல்லிக் கொடுத்த தன்மானம் சுயமரியாதையின் காரணமாக.. மீனாட்சி கொடுத்த பணத்தை.. குரு கொண்டு வந்த உணவை வாங்க மறுத்து விட்டான் தமிழ்.. அதோடு நில்லாமல் பள்ளி முடிந்து வந்ததும்.. அடுத்த தெருவிலிருந்த காபி பொடி தயாரிக்கும் தொழிற்சாலையில்.. குட்டி குட்டி பாக்கெட்டுகளில் பத்து.. பத்து கிராமாக காப்பி பொடியை பேக் செய்யும் வேலைக்கு பகுதி நேரமாக சேர்ந்திருந்தான்.. இந்நிலை கண்டு தன் கையாலாகத் தனத்தினால் ரத்தக்கண்ணீர் வடித்தாள் மீனாட்சி..

தொடரும்..
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

உண்மையில் மீனாட்சி மா நீங்க கிரேட் தான் 🥰🥰🥰🙋❤️
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
மீனாட்சிம்மா சொல்ல வார்த்தை இல்லை உங்களின் பாசம். எவ்வளவு அன்பு மூன்று பிள்ளைகளிடமும்.

இந்த ராக்கம்மா கிழவி அப்ப இருந்தே ராங்கா தான் இருந்திருக்கு. 😡😡😡😡😡😡
 
Last edited:
Member
Joined
May 3, 2025
Messages
37
மீனாட்சி மாரி இருக்கவங்க ரொம்ப rare...
நீங்க தா best example for humanity...

இதெல்லாம் ஓவர் ராக்கம்ஸ்...உனக்கு இருக்கு...

வெற்றிவேல் மாரி ஆளுங்க இருக்கத்தான் செய்றாங்க...
 
Top