• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 7

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
கை காலை சுட்டுக்கொண்டு ஏனோதானோ என சமைத்து வைப்பாள் ஆருஷி.. பத்து வயதில் அடுப்பு திண்டு கூட எட்டாதே..

வேலை பார்த்துவிட்டு உள்ளங்கால் உள்ளங்கை சிவந்த நிலையில்.. உறங்கவே முடியாது புரண்டு புரண்டு படுக்கும் தம்பிக்கு கை கால் அழுத்தி விட்டு அழுது கொண்டே அமர்ந்திருப்பாள்.. தவழ்ந்த நிலையில் வந்து அவள் மடியில் அமர்ந்து கொண்டு.. இருவருக்கும் துணையாக இருப்பாள் ஆரா குட்டி.. அக்காவின் அழுகைக்கான காரணம் புரியாமல் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு கன்னத்தில் முத்தமிடுவாள்..

அரை வயிறும் கால் வயிறுமாக.. உணவை பகிர்ந்து உண்டு வாழ்ந்திருந்த வேளையில்தான்.. அரசுப் பள்ளியில் மதிய உணவு திட்டம் என்ற ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டான் தமிழ்..

"அத்தை.. என்னை கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்த்து விடுறீங்களா.. அம்மா ஏற்கனவே ரெண்டு வருஷத்துக்கும் சேர்த்து பீஸ் கட்டிட்டாங்க.. இன்னும் இந்த வருஷத்துக்கான படிப்பு பாக்கி இருக்கு இல்ல.. அந்த பணத்தை திரும்பி வாங்க முடியுமா" என்று.. பத்து வயது சிறுவன் பொறுப்பாக கேட்ட கேள்வியில் மனதளவில் நொறுங்கிப் போனாள் மீனாட்சி..

"நீ ஏண்டா கண்ணா அரசு பள்ளி கூடத்தில் படிக்கணும்.. உனக்கு நான் பீஸ் கட்டுறேன்.. நீ வேணும்னா படிச்சு பெரிய ஆள் ஆன பிறகு அதை என்கிட்ட திரும்பி கொடுத்திடு".. இன்று பதமாக எடுத்து சொல்லியும் கேட்டுக் கொள்ளும் நிலையில் அவன் இல்லை.." அத்தை நீங்க என்னை கொண்டு போய் சேர்த்து விடுறீங்களா இல்ல.. ஞானவேல் அங்கிளை போய் உதவி கேட்கவா".. என்று அந்த வயதில் கூட பிடிவாதமாக நின்ற தமிழைக் கண்டு வியந்து போனாள்.. அந்த ஃபீஸ்.. இந்த ஃபீஸ்.. எல்லாம் கழிந்து விட்டது என்று சொற்பத்தொகையை அவர்கள் கையில் மீதமாக கொடுத்தனர் தனியார் பள்ளி நிறுவனத்தார்..

மீனாட்சி அவன் சொன்னபடி அரசு பள்ளி கூடத்தில் அட்மிஷன் போட்டு சேர்த்து விட்டு வர.. குருவும் தன்னை அங்கேயே சேர்க்கச் சொல்லி அழுது அடம் பிடித்தான்.. "அதுதான் தறுதல.. கேட்க ஆளில்லாம கெட்டுப் போக வழி பாக்குதுன்னா.. உனக்கென்னடா.. அப்பன்னு நான் இருக்கேன்.. அந்த கவர்மெண்ட் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் சேர்த்துவிட என்னை கையாலாகாதவன்னு நினைச்சுட்டியா".. என்று வெற்றிவேல் அடி பின்னியெடுக்க அவனுக்கு உரைத்தால்தானே.. "நல்லா போடு.. கூடாத சேர்க்கை.. வைச்சு வாங்குனாதான் இதெல்லாம் வழிக்கு வரும்".. வாசலில் அமர்ந்து கொண்டு ரன்னிங் கமென்ட்ரி கொடுத்தாள் ராக்கம்ஸ்..

"டேய் தமிழு.. நீ என்னடா திடீர்னு ஸ்கூல் மாறிட்ட".. என்று குரு ஓடி வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு கேட்க.. மெதுவாக கையை விலக்கிக் கொண்டு பள்ளி பையை மாட்டிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான் தமிழ்.. "டேய் எங்கப்பாவும் அப்பத்தாவும் உன்னை திட்டினா அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்.. என் கூட ஏன்டா பேச மாட்டேங்குற" என்று அவன் கோபப்பட.. அதற்கும் தமிழ் சரியான பதில் கூறவில்லை..

வலிய வலிய வந்து பேசுவதையே வழக்கமாக வைத்திருந்தான் குரு அதற்கும் சேர்த்தே அப்பனிடம் அடி வாங்கினான்..

மதிய வேலைகளில் கேட் எகிறி குதித்து.. அரசு பள்ளிக்கு நண்பனை காணச் செல்வான்.. அம்மா கொடுத்த காசில் சாப்பிட ஏதாவது வாங்கி செல்வான்.. அனைத்தையும் புறக்கணித்தான் தமிழ்..

குருவின் பள்ளி ஆசிரியை இதை கவனித்து அவள் தந்தையிடம் போட்டுக் கொடுத்து விட.. பெல்டால் விளாசி எடுத்து விட்டார் வெற்றிவேல்.. மகனை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினார் மீனாட்சி.. அவளுக்கும் அடி விழுந்தது.. குழந்தை துவாரகா குறுக்கே புகுந்து தடுத்துவிட்டாள்..

அன்று உடலெங்கும் காயங்களுடன் முனங்கிக்கொண்டே படுத்து கிடந்த குருவை.. ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்து கண்ணீர் விட்டு அழுத தமிழை.. குரு முதற்கொண்டு யாருமே அறியவில்லை..

"எதுக்குடா வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல என்கிட்டேயே வர்றே.. அப்படி என்னடா பாசம்.. இந்த மாதிரி நீ அடி வாங்க கூடாதுன்னு தானே விலகி விலகி போறேன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே குரு".. என்று ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு புலம்பி தீர்த்த கதை இரவின் இருளுக்குள்ளேயே புதைந்து போனது..

"நீ கொண்டு போய் கொடுத்தா தானே அவன் வாங்க மாட்டேங்கிறான் இனிமேல் மதிய சாப்பாடு நானே கொண்டு போய் கொடுக்கிறேன்".. என்று வீராப்பாக தமிழுக்காக மதிய உணவு எடுத்துச் சென்ற மீனாட்சி.. போனது போலவே உணவு கூடையுடன் திரும்பி வந்தார்.. "ஆத்தாள மாதிரியே அம்புட்டு ரோஷம்.. என்கிட்டே அப்படி என்ன திமிரு வேண்டி கிடக்கு.. இருக்கட்டும் பாத்துக்கிறேன்" என திட்டிக்கொண்டே மூலைக்கொரு திசையில் செருப்பை வீசிவிட்டு வீட்டுக்குள் நுழைந்திருந்தாள்..

ஆனாலும்.. அவனுக்கு தேவையான பேனா நோட்டு புத்தகம்.. என்னென்ன வேண்டுமோ அத்தனையும் அவன் வகுப்பு ஆசிரியையிடம் லிஸ்ட் எழுதி வாங்கிக்கொண்டு.. ஒன்றுவிடாமல் வாங்கி வந்து அவரிடமே கொடுத்து.. "அவன் நல்லா படிக்கிறதுனால பாராட்டி நீங்களே வாங்கி கொடுத்ததா கொடுத்துடுங்க" என்று யாருக்கு தெரியாமல் மீனாட்சி கொடுத்துவிட்டு செல்லும் சங்கதியெல்லாம் அவனுக்கு தெரியாமல் போகுமா என்ன.. எவ்வளவுதான் மறுக்க முடியும்.. மீனாட்சியின் குருவின் அன்பை புறக்கணிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனும்தான் உள்ளுக்குள் துடித்து போகிறான்..

இதற்கிடையே.. தமிழுக்கு முன் மாலை நேரத்தில் அவசர அவசரமாக குரு வீட்டிற்கு வந்தவுடன்.. திருட்டுத்தனமாக அப்பத்தா கண்ணில் மண்ணை தூவி விட்டு துவாரகாவுடன் பக்கத்து வீட்டிற்கு வந்து ஆரா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.. துவாராகாவை விட குருவின் அன்பையும் கனிவையும் அதிகமாக பெற்றவள் ஆபர்ணாதான்..

சத்துணவு வாங்கி பள்ளியிலேயே உண்டு விடுவதால் பாப்பாவிற்கும்.. ஆருஷிக்கும் வீட்டில் போதுமான அளவு உணவு கிடைத்தது.. தினமும் கிடைக்கும் முட்டையை ஒரு குட்டி எவர்சில்வர் டிபன் பாக்சில் போட்டு மூடி கொண்டு வந்து அக்காவிடம் கொடுத்து விட்டுப் போவான்.. அரை மைல் தூரத்தில் தான் பள்ளி என்பதால்.. பெரிதாக கஷ்டம் ஒன்றும் இல்லையே..

மீனாட்சி கூட சில சமயங்களில் மளிகை சாமான் வாங்க உதவியதை தெரிந்து கொண்டு "அக்கா என் மேல சத்தியம்.. இனிமே அந்த வீட்லருந்து எதையும் நீ வாங்கி சாப்பிடக்கூடாது".. என்று அதற்கும் தடை போட்டான் தமிழ்.. இரவு நேரங்களில் ஒரே ஒரு பத்து ரூநாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கி இருவரும் பாலில் நனைத்து உண்டுவிட்டு படுத்த கதையெல்லாம் உண்டு.. அப்போதும் ஆரா பாப்பா.. பசியில் ஆ.. ஆ.. எனக்கு குருவிக் குஞ்சைப் போல் வாயை திறக்க.. குழந்தைக்கு அதையும் ஊட்டிவிட்டு வெறும் வயிறோடு படுத்துக் கொள்வான் தமிழ்..

அபர்ணாவிற்கு இரண்டு மூன்று வயதான பிறகு.. மீனாட்சி திருட்டுத்தனமாக வந்து பாப்பாவை தூக்கி சென்று வயிறு நிரம்ப பருப்பு சாதத்தை ஊட்டி விட்டு.. "அண்ணனும் அக்காவும் சாப்பிடட்டும்.. பாப்பா வயிறு ஃபுல்லா சாப்பிட்டுருச்சு இல்ல.. இனிமே அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது.. அப்புறம் முக்கியமான விஷயம் அண்ணா பக்கத்து வீட்ல சாப்பிட்டியான்னு கேட்டா இல்லைன்னு சொல்லணும் சரியா" என்று சொல்லிதான் அனுப்புவாள்..

ஆருஷி உண்மை தெரிந்தாலும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள்.. குழந்தையாவது வயிறு நிரம்ப சாப்பிட்டு விட்டு போகட்டும் என்று கண்டும் காணாமலும் விட்டு விடுவாள்.. ஆனால் சதா பசி பசி என தொந்தரவு செய்யும் குழந்தை மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பதில் சந்தேகப்பட்டு குட்டி தமிழ்.. "என்ன பாப்பா.. பக்கத்து வீட்டு அத்தை ஏதாவது உனக்கு ஊட்டினாங்களா".. என்று கேட்டதும் அவசரமாக இல்லையே என்று மறுத்து தலை ஆட்டும் பாப்பாவின் மேல் புன்னகையில் மாற்றம் கண்டு.. அவள் வாயின் அருகே மூக்கை கொண்டு சென்று நுகர்ந்து பார்ப்பான் அவன்..

சில நேரங்களில் நெய் பருப்பு சாதத்தின் வாசம்.. பால் சாதம்.. தயிர் சாதம்.. என மாறி மாறி பாப்பாவின் வாய் மணக்கும்..

"அங்கே வாங்கி சாப்பிடக்கூடாது பாப்பா" கண்டித்து சொன்னாலும் குழந்தைக்கு என்ன தெரியுமாம்.. பசியின் முன்னே.. எந்த சட்ட திட்டங்களும் சத்தியங்களும் செல்லுபடி ஆகாதே.. அபர்ணாவிற்கு ஐந்து வயதாகும் போது தான் ஆருஷி தனது பதினைந்தாம் வயதில் பூப்பெய்தினாள்..

தம்பியிடம் கொடுத்த வாக்குறுதி படி.. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில்.. வயது வந்த பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய நாட்டு முட்டை.. உளுந்தங்களி அனைத்தையும் மீனாட்சி சமைத்து கொண்டு வரும் எதையும் வாங்க மறுத்து விட்டாள் ஆருஷி.. அந்தப் பிள்ளைகளின் உதாசீனத்தில் அழுகையே வந்து விட்டது அவளுக்கு..

"டேய் நீ ஆம்பள புள்ள.. எக்கேடும் கெட்டு போடா.. அவ பொம்பள பிள்ளை.. இந்த நேரத்துல சாப்பிடுற சத்தான உணவுதான் காலாகாலத்துக்கும் அவள் எலும்புக்கு பலம் கொடுக்கும்.. இன்னும் எவ்வளவோ பார்க்கணும்டா அவ.. உன் வீம்புக்காக.. அவளுக்கு தண்டனை கொடுக்காதே.. என்னோட கடமையை என் பிள்ளைக்கும் செய்ய விடுடா.. இதுக்கு மேலயும் என்னை கெஞ்ச வைக்காதீங்க".. என்று ஓவென்று கதற.. தன்னலம் பாராமல் தங்களுக்காக கடமையை செய்ய வேண்டி கதறியழும் நல்ல உள்ளத்தை கண்டு இரு பிள்ளைகளும் நெகிழ்ந்துதான் போயினர்..

அதன் பிறகு தமிழ் தடுக்கவில்லை.. ஆருஷியும் மீனாட்சியின் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டாள்.. எளிமையான முறையில் தண்ணீர் ஊற்றி.. தான் வாங்கி வந்த விலை உயர்ந்த தாவணி பாவாடையை அணிவித்து.. பூ வைத்து அலங்கரித்து ஆருஷியை அழகு பார்த்தாள் மீனாட்சி..

வயது வந்த ஒரு பெண்ணையும் குட்டி பாப்பாவையும் வைத்துக்கொண்டு தமிழ் படாத பாடு பட்டான்.. மீனாட்சி தன் அண்ணன் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் துவாரகாவோடு ஒரு வாரம் வெளியூர் சென்றுவிட.. வெற்றிவேல் வகுப்பின் காரணமாக குருவை மட்டும் தன்னோடு நிறுத்திக் கொண்டார்..

தென்றல் நகர் இப்போதுதான் தமிழ் மற்றும் குருவின் கண்காணிப்பில்.. எந்தவித குற்றங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகின்றது.. ஆனால் முன்பெல்லாம் அப்படி இல்லையே.. யார் யாரோ வந்து இரவில் கதவை தட்டும் ஓசை மூன்று பிள்ளைகளுக்கும் அச்சத்தை கொடுத்தது.. பக்கத்து வீடு என்றால் வெற்றிவேல் மற்றும் தமிழ் வீடுதான்.. மற்ற வீடுகள் அனைத்தும் சற்று தொலைவில் உள்ளதால் உதவிக்கு யாரையும் அழைக்க இயலாது.. என தெரிந்து கொண்டே வயது பெண் வீட்டினுள் இருப்பதால் வவேறு ஏரியவை சேர்ந்த கண்ட குடிகாரர்களும் அந்த கதவைத் தட்ட.. விடிய விடிய மிரள மிரள விழித்துக் கொண்டிருப்பதில் இரவு தூக்கமும் போனது..

இனி பயந்தால் வேலைக்காகாது.. வயதுக்கும் தைரியத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. தன் அக்காவை தங்கையை காப்பாற்ற.. வலிமை பொருந்தியவனாக தைரியம் உள்ளவனாக தன்னையே மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை.. பாறையாக இறுகினான் தமிழ்..

அன்றும் விடாது கதவு தட்டப்பட.. அக்கா தங்கையை பத்திரமாக உள்ளே இருக்க சொல்லிவிட்டு.. பின்பக்கம் இளநீர் வெட்ட வைத்திருந்த அருவாளை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன்.. "எவன்டா.. அவன்.. தைரியம் இருந்தா முன்னே வாங்கடா".. என்று சிங்கமென கர்ஜிக்க.. "பாருடா.. குட்டி சிங்கம் சத்தம் போடுது" என்று லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு இருவர் கலாட்டா செய்ய அவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.. அவர்களை வெட்டி போடும் வெறியோடுதான் தமிழ் நின்றிருந்தான்.. ஆனால் எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு கருங்கற்கள்.. சரியாக அவர்கள் நெற்றியை தாக்கி.. குருதியை வெளிக்கொண்டு வர.. அந்த இரண்டு குடிகாரர்களும் சுதாரிக்கும் முன்.. சராமாரியாக அடுத்தடுத்து எரியப்பட்டன கற்கள்.. தமிழ் வேறு கண்களில் வெறியுடன் அருவாளை தூக்கிக்கொண்டு ஓட.. திணறி போய் வந்த வழியே திரும்பி ஓடியிருந்தனர் அவர்கள்..

யாருடைய வேலை என்று சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான் தமிழ்.. எதிர்நாராத வேளையில் தோள் மீது கை போட்டவன் குரு.. "நீ கவலைப்படாதடா.. நான் இருக்கேன்.. நீ போய் நிம்மதியா தூங்கு, நான் பாத்துக்குறேன்".. என்று தைரியம் சொன்னவனை கண்டு கண்கள் கலங்கி போனது.. கதவை பூட்டிவிட்டு அந்த வாசலிலேயே இருவரும் ஒரு அமர்ந்திருந்த நாட்களில் கூட தமிழ் குருவிடம் பேசவே இல்லை.. குருதான் பேசுவான்.. பேச சொல்லுவான்.. அதிகபட்சமாக "நீ உன் வீட்டுக்கு போ உங்க அப்பா தேடப் போறாரு".. என்ற வார்த்தைகள் தான் வெளிவரும் தமிழ் வாயிலிருந்து.. சிங்கக் குட்டிகள் போல் இரு பிள்ளைகள் காவல் காத்து நின்றதை அறிந்து கொண்டு அதன்பிறகோ எவருகக்குமே அந்த வீட்டு கதவை தட்ட தைரியம் பிறக்கவில்லை..

தங்கைக்கு ஐந்து வயதானதும், நான் படிக்கும் பள்ளியிலேயே மீனாட்சியின் உதவியுடன் முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டு அவளையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான் தமிழ்.. துவாரகா குருவின் பள்ளியிலேயே படித்து வந்தாள்.. தமிழ்செல்வன் பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்று.. அனைவரின் பாராட்டுக்களோடு பதினோராம் வகுப்பு சயின்ஸ் குரூப் எடுத்திருந்தான்.. குருவும் நல்ல மதிப்பெண்களோடு அதையே தேர்வு செய்திருந்தான்.. மீனாட்சிக்கு குருவை விட தமிழ்செல்வன் அதிக மதிப்பெண்கள் வாங்கியதில் பெருமை பிடிபடவில்லை.. வெற்றிவேலுக்கோ வாழவே வழியில்லாத பையன் தன் மகனைவிட இவ்வளவு மார்க் அதிகமாக வாங்குவதா என்ற பொறாமை..

அதுவரை மீனாட்சி செய்து வந்த உதவிகளை கண்டும் காணாமலும் அனுமதி தெரிந்த வெற்றிவேல்.. அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகுதான் பெரும் பகையாளியாக மாறிப் போனார்.. தமிழ் குடும்பத்தை அறவே வெறுத்தார்.. அப்போது ஆபர்ணாவின் வயது எட்டு..

தொடரும்..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
36
வெற்றிவேல் நீ எல்லாம் மனுஷனா. இந்த நிலைமையிலும் அந்த குழந்தைகள் தைரியமா போராடி வாழறாங்கன்னு பெருமை படாம சில்லறைதனமா யோசிக்கிற. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ 😡😡😡😡😡😡😡.

தமிழ், குரு இருவரின் பாசப்பிணைப்பும் அருமை.
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
May 3, 2025
Messages
37
என்ன மனுசன் பா நீங்க... பாராட்டலனா கூட பரவலா இப்படியா இருப்பீங்க...

இதெலாம் உனக்கே அடுக்குமா ராக்கம்ஸ்...பேரன் அடிவாங்கிரன் ne enjoy பன்னி running commentary ah குடுக்குற....

Guru ne Great da... எவ்ளோ love friendship இருந்திருந்தா avoid பண்ணும் போது அந்த age la கூட எவ்ளோ strong ah இருந்திருக்க...sema

ஆருஷி மாரி யாரு இருப்பா...அம்மா இல்லன எவ்ளோ கஷ்டம்....
தமிழ் நீதாண்டா ரியல் ஹீரோ.... என்ன கடமை உணர்வு...
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
40

தமிழ் உன்ன மாதிரி வீட்டுக்கு ஒரு புள்ள இருந்தா போதும் டா கண்ணா 🥰🥰🥰❤️
 
Top