• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 8

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
வெற்றிவேலின் தூரத்து அண்ணன் ஒருவன் விருந்தாளியாக வந்து டென்ட் போட்டிருந்த காலம் அது.. அந்நேரம் பழக்க தோஷத்தில் ஆரா குரு வீட்டிற்கு விளையாட சென்றிருந்தாள்..

அன்று சனிக்கிழமை..பதினோராம் வகுப்பு என்பதால் குருவிற்கு ஸ்பெஷல் கிளாஸ்.. தமிழும் பள்ளிக்கு தான் சென்றிருந்தான்.. துவாரகா ஆராவுடன் விளையாடிய மேனிக்கே தூங்கி விட்டாள்.. மதியம் தாண்டி விட்டதால்.. குழந்தைகள் அறைக்குள் தானே பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்ற நினைப்பில் மீனாட்சியும் சிறிது நேரம் கண்ணசந்து போனாள்.. அந்நேரத்தில்தான் தனது வேலையை காட்டியது சீனிவாசன் என்ற அந்த மிருகம்..

மிட்டாயும் பரிசும் தருகிறேன் என்று தனியே அழைத்துச் சென்று எட்டு வயது குழந்தையிடம் தகாத முறையில் நடக்க முயற்சிக்க.. குட் டச் பேட் டச் என்பதை அண்ணன்.. மீனாட்சி.. குரு சொல்லிக் கொடுத்திருந்த விதத்தில் நன்றாகவே அறிந்திருந்தவளோ.. "டோன்ட் டச் மீ.. நீங்க ரொம்ப மோசம்.. இருங்க நான் போய் எங்க அண்ணனை கூட்டிட்டு வரேன்".. என்று அங்கிருந்து ஓடிவிட்டாள்.. சீனிவாசனுக்கு பயத்தில் உடல் மொத்தமும் வேர்த்து கொட்டியது.. "ஐயோ அந்த சின்ன பெண் அவர்கள் வீட்டில் ஏதாவது புகார் சொன்னால் மொத்த மானமும் கப்பலேறி விடுமே.. மனைவி பிள்ளைகள் மதிக்க மாட்டார்களே.. வியாபாரத்திற்கு காசு கேட்க வந்த இடத்தில் கையை காலை வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டியது தானே.. இப்போது மொத்தமாக மாட்டிக் கொண்டாயே சீனிவாசா" என்று வம்பு வந்து சேருமே என்ற பயத்தில்தான் தன்னைத்தானே கடிந்து கொண்டானே தவிர தன் தவறை கிஞ்சித்துக்கும் உணரவில்லை அவன்..

தன் வீட்டிற்கு ஓடிச் சென்ற ஆரா தன் அக்கா ஆருஷியிடம் இது பற்றி சொல்லி சீனிவாசனை குற்றம் சாட்ட.. நெஞ்சம் பதறி திகைத்துப் போனவளோ.. பள்ளி முடிந்து வந்த தன் தம்பியிடம் தங்கை சொன்னதை அப்படியே சொல்லி இருந்தாள்..

சின்னஞ்சிறுவனாக இருந்த காலகட்டத்திலேயே அக்கா தங்கைக்கு ஒன்றென்றால் வீறு கொண்டெழும் சிறுத்தையான தமிழ் இப்போது அரும்பு மீசை முளைத்த வாட்ட சாட்டமான.. இளைஞனாக மாறியிருக்க.. தங்கைக்கு நடக்கவிருந்த அநீதி அவள் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டு விட்டாலும்.. அதை செய்யத் துணிந்த அந்த காமுகன் மீது கொலை வெறி கொண்டவனோ சற்றும் தாமதியாது குரு வீட்டிற்கு சென்று கால் மேல் கால் போட்டு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அந்த மிருகத்தை அடித்து விலாசிவிட்டான்..

அந்நேரம் தான் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து இளைப்பாறிக் கொண்டிருந்த வெற்றிவேல் அறையை விட்டு வெளியே வந்து.. தன் உறவினனை தமிழ் அடித்துக் கொண்டிருப்பதை கண்டு கொதித்தெழுந்து போனார்..

ஓடிவந்து அவனை பிரித்து விட முயற்சிக்க.. ஆங்காரம் கொண்டு சீனிவாசனை துவைத்துக் கொண்டிருந்தவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. ஏற்கனவே தமிழ் வீட்டு ஆட்களை பிடிக்காதவருக்கு இப்போது அவன் அத்துமீறி தன் சொந்தக்காரனை அடித்து புரட்டும் காட்சியை கண்டு ஆத்திரம் உச்சிக்கு ஏற..

"டேய்.. இப்ப நிறுத்துறியா இல்லையா" என்று பயங்கரமாக குரலை உயர்த்தி கத்தவும்..

தீவிழிகளுடன் அவர் பக்கம் திரும்பியவன்.. "ஓஹோ.. நான் நிறுத்தணுமா.. இந்த நாய் என்ன பண்ணுச்சுன்னு உங்களுக்கு தெரியுமா" என்றான் கட்டுக்கடங்காத கோபத்துடன்..

"ஏய்.. என்ன தைரியம்.. என் வீட்டுக்கே வந்து எங்க விருந்தாளியை நாய்னு சொல்லுவியா நீ.. வெளியே போடா அனாதை நாயே".. என்று ஆத்திரத்துடன் கத்த.. இதுவரை வெற்றிவேல் பேசிய எந்த வார்த்தைகளையும் மனதின் ஆழம் வரை கொண்டு செல்லாத தமிழுக்கு இந்த ஒரு வார்த்தை பெரும் காயமாக உள்ளே ரணம் கொடுத்தது..

"என்னங்க கொஞ்சம் அமைதியா இருங்க.. நம்ம தமிழ் தப்பு செய்யற ஆள் இல்ல.. நிதானமா பேசுவோம்.. அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீங்க" என்று மீனாட்சி வெற்றிவேலை சமாதானப்படுத்த முயல..

"ஓஹோ அப்போ இந்த தமிழ் நல்லவன்.. சீனிவாசன் கெட்டவனா.. எல்லாம் உன்னால வந்தது.. அனாதை பசங்களை உள்ளே கூப்பிட்டு உட்கார வச்சு சேவை செஞ்சா இதுதான் நடக்கும்.. இதுக்குதான் நான் அப்பவே தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் இந்த அனாதை நாய்களுக்கு இவ்வளவு இடம் கொடுக்காதேன்னு".. என்று கோபத்தில் அளவுக்கு அதிகமாகவே வார்த்தைகளை விட.. மீண்டும் மீண்டும் அனாதை என்ற வார்த்தையில் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டிருந்தான் தமிழ்..

"ஐயோ அப்படியெல்லாம் பேசாதீங்க.. குழந்தை மனசு கஷ்டப்படுவான்".. என்று தமிழ் உடைந்து போய் நிற்பதை கண்டு உள்ளுக்குள் துடித்து மீனாட்சி கதறவும்..

"என்னது இவன் உனக்கு குழந்தையா நீ தான் இவனை பெத்தியா.. இல்ல.. இவன் அப்பனுக்கும் உனக்கும் ஏதாவது?".. என்று புருவங்களை உயர்த்த..

"ஏய்ய்.. என்று கர்ஜனையுடன் பாய்ந்து வெற்றிவேலின் சட்டையை பிடித்திருந்தவனோ.."எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட அத்தையை தப்பா பேசுவீங்க".. அவர் சொன்ன வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியாது.. தன்னிலை மறந்து அவரை அடிக்கவும் செய்திருந்தான்.. அவனைப் பொறுத்தவரை மீனாட்சியோ அபிராமியோ இருவரும் ஒன்றுதான்.. அபிராமியை எந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறானோ.. அதே உயரத்தில் மீனாட்சியை நெஞ்சில் சுமக்கிறான்.. மீனாட்சி நெருப்பில் குதி என்று சொன்னாலும் கேள்வி கேட்காமல் விழுந்து விடுவான்.. அப்பேர்ப்பட்ட தெய்வத்தை.. வெற்றிவேல் மாசுபடுத்தவே கொதித்தெழுந்து கோபத்தில் சுயம் தொலைத்து அடித்து விட.. "ஐயோ என் பிள்ளையை அடிச்சுட்டானே.. கடவுளே என் வீட்டுக்குள்ள வந்து இப்படி அராஜகம் பண்றானுங்களே இதைக் கேட்க ஆளே இல்லையா?" என்று ராக்கம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.. அந்நேரம் தான் குரு வீட்டிற்குள் நுழைந்திருந்தான்..

தன்மகன் வயதை ஒத்த ஒரு சின்ன பையன் தன்னை அடித்ததில்.. மனதளவில் இடிந்து போய் திக் பிரமை பிடித்தது போல் நின்றிருந்தார் வெற்றிவேல்..

மீனாட்சியோ அனைத்தும் கை மீறி போன நிலையில் செய்வதறியாது அழுது கொண்டிருக்க.. இந்த விபரீத நிலையினை கண்டு எதுவும் புரியாதவனாய் குரு.. "என்ன.. என்ன ஆச்சு.. என்னடா தமிழ்.. ஏன் அப்பா இப்படி நிக்கிறாரு?.. அம்மா அழறாங்க என்ன ஆச்சு".. என்று நெஞ்சம் துடிக்க பதட்டத்துடன் கேட்க..

" உங்கப்பனை இவன் அடிச்சுட்டாண்டா".. என்று ராக்கம்மா அழுது புலம்ப உச்ச கட்ட அதிர்ச்சியோடு விழி விரித்தான் குரு..

"நேரா வந்து நம்ம சீனிவாசனை போட்டு புரட்டி எடுத்தான்.. தட்டி கேட்க வந்த என் மகன் வெற்றிவேலையும் அடிச்சுட்டான்.. எத்தனை வருஷமா தலைநிமிர்ந்து நின்னு கம்பீரமா வாழ்ந்த புள்ள.. எப்படி இடிஞ்சு போய் நிக்கிறான் பாரு".. என்று கிழவி அழுது ஒப்பாரி வைக்க.. தந்தையின் மீது அன்பும் மரியாதையும் கொண்ட குருவிற்கு.. தமிழ் அடித்து விட்டான் என்ற வார்த்தையே கோபத்தை கிளர்ந்தெழச் செய்ய.. அப்படி ஒரு விஷயம் நடந்திருக்கவே கூடாது என்ற நப்பாசையுடன் "அப்பாவை அடிச்சியா" என்றான்.. நேர்கொண்ட விழிகளுடன்..

எந்த சலனமும் இல்லாமல்.. தன் நண்பன் தன் தரப்பு நியாயத்தை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையுடன் "ஆமாம் அடிச்சேன் ஆனா இங்கே" என்று தமிழ் ஆரம்பித்த வேளைதனில்.. ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான் குரு..

தமிழ் கன்னத்தில் கை வைத்து ஸ்தம்பித்து நிற்க.. "அவர் என் அப்பாடா.. அவர் ஆயிரம் தப்பு செஞ்சிருக்கலாம். அவரை அடிக்கிறதுக்கான உரிமையை உனக்கு யாருடா கொடுத்தது? நீ யாருடா என் அப்பா மேல கை வைக்க".. என்று சீற்றத்துடன் பேசியதில் வெற்றிவேல் கர்வத்துடன் தமிழை ஒரு பார்வை பார்த்தார்.. தமிழ் மனதில் ஒரு வெறுமை நிலவ.. குருவை அடிபட்ட பார்வை பார்த்தான்..

"எப்ப நீ எங்க அப்பா மேலயே கை வைச்சிட்டியோ.. அப்பவே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. மரியாதையா இங்கிருந்து போயிடு உன் மூஞ்சிய பார்க்க கூட நான் விரும்பல".. என்று வெறுப்பை உமிழும் வார்த்தைகளில் இன்னும் காயப்பட்டு போனான் தமிழ்.. நெஞ்சில் வைராக்கியத்தை தாங்கிக்கொண்டு.. விழிகள் மூடித் திறந்தவன்.. குருவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அங்கிருந்து சென்றுவிட.. கனத்த மனதுடன் தமிழின் முதுகை வெறித்தவாறு நின்றிருந்தான் குரு..

தந்தையின் பக்கம் திரும்பி "இங்கே என்னதான் நடக்குது யாராவது சொல்றீங்களா இல்லையா" என்று பொறுமையிழந்து குரலுயர்த்த..

"அதை நான் சொல்றேன்".. இன்று ரத்தம் சொட்ட காயங்களுடன் குருவின் முன்னே வந்து நின்றான் சீனிவாசன்.. "அந்த குட்டி பாப்பா கீழ விழுந்துச்சா!!.. நான் போய் தூக்கி அவ டிரஸ் மேலிருந்த மண்ணை தட்டி விட்டேன்.. அந்த குட்டி சாத்தான் ஒன்னுக்கு ரெண்டா அவங்க அண்ணன் கிட்ட போய் போட்டு கொடுத்து அவன் என்னை அடிச்சு".. என்று முடிப்பதற்குள்.. "மீனாட்சிஇஇ".. என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சரிந்தார் வெற்றிவேல்..

"அப்பாஆஆஆஆ.. அய்யோ என்னங்க" என்று ஆளுக்கொரு திசையில் அலற.. அடுத்து பதறிக்கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் வெற்றிவேல்.. தந்தையின் இந்த நிலைக்கு தமிழ் தான் காரணம் என்று குருவிற்கு தமிழ் மீது கோபம்..

"அய்யோ அண்ணன் இப்ப எப்படி இருக்காரு" என்று உடல் காயங்களுக்கு கட்டு போட்டுக்கொண்டு மருத்துவமனை வராண்டாவில் நின்று போலி வேஷம் போட்ட சீனிவாசனின் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கியிருந்தான் குரு.. "என்ன நடிக்கிறியா.. உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. என் ஆரா குட்டி எப்பவுமே பொய் சொல்ல மாட்டா.. சாதாரணமா டச் பண்றதுக்கும் பேட் டச் பண்றதுக்கும் உள்ள வித்தியாசத்தை நாங்க அவளுக்கு நல்லாவே சொல்லிக் கொடுத்திருக்கோம்... அம்மா அப்பா இல்லாத குழந்தை.. கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சியா.. நான் இருக்கேன் டா என் அவளுக்கு.. அவளுக்கு உன்னால சின்ன நகக்கீறல் ஏற்பட்டிருந்தாலும்.. உன்னை உயிரோடு பெட்ரோல் ஊத்தி கொளுத்தி இருப்பேன்"..

"அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்ப மனசு கஷ்டப்படுவாரு.. மரியாதையா இந்த ஊரை விட்டு ஓடிப்போய்டு.. இனி உன் கால் இந்த ஊர் எல்லையில் படவே கூடாது".. என்று நரசிம்மனை போல் பற்களை கடித்து மிரட்டிய விதத்தில் பயந்து போனவனோ உண்மை அம்பலமானதில் நடுங்கி.. அன்றிரவே சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஊரை விட்டு ஓடி இருந்தான்..

என்னதான் தவறு தன் தந்தையின் மீது இருந்தாலும் எப்படி அவரை கைநீட்டி அடிக்கலாம்.. அந்த மன அழுத்தத்தின் விளைவால் தானே மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடி மீண்டு வந்தார்.. ஒருவேளை அவர் உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தால்!!.. என்று குருவிற்கு கோபம்..

அதெப்படி அவன் தன்னை நம்பாமல் போகலாம்.. நண்பன் என்று சொல்லிக் கொள்பவன் பக்கத்துணையாக நின்று எனக்காக பேசியிருக்க வேண்டாமா.. என்று தமிழுக்கு கோபம்.. இந்த இருவருக்குமிடையில் மாட்டிக்கொண்டு மீனாட்சி தான் பரிதவித்தாள்..

தேவைப்படும் நேரத்தில் உதவிகளை கேட்டு வந்த தமிழ் முற்றிலுமாக மீனாட்சியுடன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.. ஆருஷி ஆரா இருரையும் அவர்களுடன் பேசக்கூடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டான்.. வெற்றிவேலுக்கும் ராக்கம்மாவிற்கும் இதுவே பெருத்த நிம்மதியாகி போனது..

குருவிற்கு தமிழ் மீது கோபம் என்றாலும் ஆராவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.. குரு.. என்று கொஞ்சி வரும் சிறுமியவளை யாரும் அறியாமல் கடைக்கு அழைத்து சென்று தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து கொண்டு வந்து வீட்டில் விட்டு செல்லுவான்..

இந்நிலையில்.. தமிழ் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்று.. மருத்துவ படிப்பு மெரீட் சீட்டில் கிடைத்துவிட.. மீனாட்சி கண்ணீருடன் ஓடி வந்து அவனை ஆரத் தழுவிக் கொண்டாள்.. அவனுக்கும் கண்கள் கலங்கிப் போனாலும்.. அத்தை.. என்றழைத்து கட்டிக் கொள்ள மனம் துடித்தாலும்.. நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு தன்னை கட்டுப்படுத்தி இறுகிய சிலையாக நின்றிருந்தான்.. அவன் கல்மனம் மீனாட்சியை அதிகமாகவே வேதனைப்படுத்தியது.. ஆனாலும் தன்னால் இன்னும் இந்த குழந்தைகள் மன கஷ்டத்தை அனுபவிக்க கூடாது என்ற காரணத்தினால் விலகி இருந்தாள்..

துவாரகா.. அவள் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து ஒரு வாட்ச் வாங்கி தமிழுக்கு பரிசளித்து வாழ்த்துக்கள் சொல்ல.. அவளை திரும்பி கூட பார்க்கவில்லை அவன்.. குட்டி பெண் மனதளவில் காயப்பட்டு போனாள்.. அந்த வாட்ச்சை அங்கேயே வைத்துவிட்டு அழுது கொண்டே பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு ஓடிப் போனவளை ஜன்னல் வழியே வலி நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டே.. மேஜை மீதிருந்த கைகடிகாரத்தை தமிழ் நெஞ்சோடு அணைத்துக் கொண்டதெல்லாம் வேறு கதை..

குருவும் நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தான்.. ஒரு நல்ல கல்லூரியில் இளங்கலை இயற்பியல் வகுப்பில் சேர்ந்து விட்டான்.. ஆனாலும் இந்த தமிழ் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு அரசு பள்ளியில் படித்து இவ்வளவு மதிப்பெண்கள் வாங்குவதா? ஜீரணிக்கவே முடியவில்லை வெற்றி வேலால்..

படிக்கும் காலகட்டங்களிலேயே நியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தான் தமிழ்.. மறைமுகமாக அவனுக்கு தோள் கொடுத்தான் குரு.. அந்த தெருவில் கந்து வட்டியின் பொருட்டு ஒரு வீட்டில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள போனவர்களை தடுத்து.. தனது கல்லூரியின் மாணவ சக்தியின் மூலம் மீடியாக்கள்.. தொலைக்காட்சி என அந்த விஷயத்தை பெரியதாக்கி.. அந்த ஏரியா கலெக்டர் வரை விஷயத்தைக் கொண்டு சென்று.. பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்து நியாயம் வாங்கித் தந்தான்..

இதனால் கோபமுற்ற அந்த அரசியல்வாதி.. தமிழை அடிப்பதற்காக ஆள் அனுப்பி விட.. அத்தனை பேரையும்.. எதிர்க்க முடியாமல் தமிழ் திணறிய நேரத்தில்.. படங்களில் நாயகியை காப்பாற்ற சரியான நேரத்திற்கு வந்து குதிக்கும் நாயகனை போல் எங்கிருந்து வந்தானோ குரு.. இருவரும் சேர்ந்து அத்தனை பேரையும் அடித்து துவைத்து விட்டு.. பரம எதிரிகளைப் போல் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு எதிரெதிர் திசையில் சென்று விட்டனர்.. அன்றிலிருந்து அநியாயங்களை தட்டிக் கேட்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது..

தொடரும்..
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
34
எல்லாம் இந்த கிழவியால வந்தது. வெற்றிவேல் மண்டைய நல்லா குழப்பி விட்டதால வந்தவினை.

இருந்தாலும் வெற்றிவேல் தமிழை பேசிய வார்த்தைகள் ரொம்ப ஓவர். 😡😡😡😡😡😡மீனாட்சிம்மாவை தகாத வார்த்தை பேசினதால தான தமிழ் அடிச்சான். இதுல தப்பே இல்லை.
 
Member
Joined
Mar 13, 2025
Messages
19
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Member
Joined
May 3, 2025
Messages
35
தமிழ் கிட்ட என்ன நடந்ததுனு கேட்டிருக்கலாம் இந்த குரு...
எவ்ளோ ஓடஞ்சு போயிருப்பான்...

இந்த ராக்கம்ஸ் சும்மாவே இருக்க மாட்டேங்குது... ஒப்பாரி வெச்சே தமிழ் family ah முடிசுறும் போல...🫤🫤

நண்பேன்டா இந்த குரு...correct ah வந்துருவான்..😁

அப்பவும் இவருக்கு பொறாமை போகுதானு பாருங்க.... எப்படிதா நம்ம மீனாமா சமாளிக்குதோ...
 
Well-known member
Joined
Nov 20, 2024

என்னதான் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்காத மாதிரி நடந்துக்கிட்டாலும் மனசுக்குள்ள பாசம் நிறைஞ்சு கிடக்கு 🥹🥹🥹
 
Top