- Joined
- Jan 10, 2023
- Messages
- 53
- Thread Author
- #1
செந்தமிழ் செல்வன் கல்லூரியில் சேர்ந்த பிறகு.. இதுவரை தமிழ் மீடியத்தில் படித்தாலும் தான் முயன்று கற்றுக் கொண்ட ஆங்கில புலமையின் காரணமாக கால் சென்டரில் வேலைக்கு சேர்ந்ததில் ஓரளவு வருமானம் கிடைக்கவே.. விரும்பியதை திருப்தியாக சமைத்து சாப்பிடும் அளவிற்கு குடும்ப பொருளாதார முன்னேறி இருந்தது..
தமிழ் கல்லூரியில் சேரும் பொழுது ஆரா ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.. ஆருஷி.. பக்கத்திலிருந்த தையலகத்தில் சேர்ந்து தையல் கற்றுக்கொண்டு அம்மாவின் புடவைகளை வீணாக்காது அதில் தனக்கு சுடிதார்.. தங்கைக்கு ஃபிரில் வைத்த ஃபிராக் பாவாடை சட்டை என தைத்து கொடுத்து கடையில் உடை வாங்கும் செலவை மிச்சப் படுத்தியிருந்தாள்.. தமிழ் உடைகளில் அந்த அளவு கவனம் செலுத்துவதில்லை.. கல்லூரிக்கு வேலைக்கு செல்வதற்காக ஒரு ஐந்து ஆறு சட்டை பேன்ட் வைத்திருப்பான்.. அது கிழிந்து நைந்து போகும் வேலையில்தான் அடுத்த சட்டை வாங்குவான்.. ஆனாலும் கந்தலானாலும் கசக்கி கட்டு என்பதை போல் துவைத்து நேர்த்தியாக அவன் அணிந்து வரும் விதத்தில்.. அனைவருக்குமே தன்னிச்சையாக ஒரு நன்மதிப்பு உண்டாகும் அவன்மேல்..
விளையாட்டு பிராயத்தில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சிகளை இழந்தவன்.. விடலை பருவத்தில்.. ஒரு வட்டத்துக்குள் நின்று கொண்டு.. கலகலத்து தன்னிடம் பேச வரும் பெண்களை பார்வையால் தள்ளி நிறுத்தினான்.. காதல் கன்றாவி என்று ஏதேனும் ஒரு பெண் உளறிக்கொட்டி.. அதன் மூலம் உருவாகும் பிரச்சனைகளை ஏற்க தயாராக இல்லை அவன்.. அவனைப் பொறுத்தவரை அவன் முழு உலகமும் ஆருஷி.. ஆபர்ணா மட்டுமே..
இரண்டு ரூபாய் சேமித்தாலும்.. அக்காவிற்கு புடவை வாங்கலாமா.. பாப்பாவிற்கு.. பொட்டு நகை வாங்கலாமா என்றுதான் அவன் இதயம் யோசிக்கும்..
அவன் தினசரி பணிகள்.. விடியற்காலை நான்கு மணிக்கு வேலை முடித்து வந்தவுடன் அக்காவின் கையால் ஒரு டம்ளர் பூஸ்ட் குடித்துவிட்டு.. படுத்து உறங்கிப் போவான்.. அந்த நேரத்தில் தூக்கம் கலைந்து.. தள்ளாட்டத்துடன் நடந்து வந்து அவன் மடியில் அமரும் ஆரா குட்டிக்கும் குட்டி டம்ளரில் பூஸ்ட் கிடைக்கும்.. பிறகு எட்டு மணிக்கு எழுந்து அவன் கிளம்பும் நேரத்தில் காலை உணவு மதிய உணவும் ஆரூஷியின் கைப்பக்குவத்தில் தயாராக இருக்கும்.. உணவு பையை எடுத்துக் கொண்டவன் ஆராவை அவளது பள்ளியில் விட்டு விட்டு.. ஓட்டமும் நடையுமாக விரைந்து சென்று அரசு பேருந்தில் ஏறி கல்லூரியை அடைவான்.. மீண்டும் மாலை வந்ததும்.. வீடு வந்து ஆராவுடன் சற்று நேரம் விளையாடிவிட்டு.. உறங்கிப் போவான்.. இரவு ஒன்பது மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி உணவருந்தி வேலைக்கு செல்வான்..ஆபர்ணா இரவு ஏழு மணிக்கெல்லாம் உணவருந்தினாலும் அண்ணனுடன் சேர்ந்து ஒருமுறை சாப்பிடுவாள்.. அக்காவுடன் சேர்ந்து ஒருமுறை சாப்பிடுவாள்.. யார் உணவருந்தினாலும் இரண்டு மூன்று வாய் வாங்கி ஊட்டிக் கொள்வது அவள் வழக்கம்.. திருட்டுத்தனமாய் மீனாட்சி வீட்டிற்கு சென்றாலும் சரி.. குரு பிரகாஷ்.. மீனாட்சியிடம் கூட ஊட்டிக் கொள்வாள்.. அல்லது அவளே எடுத்து போட்டு சாப்பிடுவாள்..
ராக்கம்மா ஆராவை சின்ன பிள்ளை என்று பார்க்காமல் கரித்துக் கொட்டி வெற்றிவேலிடம் போட்டுக் கொடுக்க.. அதன் பிறகு ஆரம்பித்தது தான் இந்த சத்திய பிரமாணங்கள்..
மாடியில் நின்று கொண்டு ஜாடை மாடையாக வெற்றிவேல் கத்தியதில்.. தமிழ் கூட காமெடி பீஸ் போல் அக்கா தங்கையிடம் சத்தியம் வாங்கியது தான் உச்சகட்ட கொடுமை.. ஆனால் தமிழ் குருவை தவிர.. இந்த வீட்டு பெண்களும் சரி அந்த வீட்டுப் பெண்களும் சரி(ராக்கம்மாவை தவிர) சத்தியத்தை கடைபிடிப்பதை விட மீறுவதிலேயே குறியாக இருந்த விஷயம் இருவருக்கும் பட்டும் படாமலும் தெரிந்தாலும்.. தெரியாததை போலவே நடந்து கொண்டனர்..
தமிழ் படிப்பில் கெட்டி.. படிப்பில் அவன் காட்டிய துறுதுறுப்பும்.. பெண்களிடம் அவன் காட்டிய கண்ணியமும்.. பொறுப்புணர்வும்.. வசதி படைத்த பெண்கள் முதற்கொண்டு அனைவரையும் மையல் கொள்ள வைத்து.. காதலை உரைக்கச் செய்திருந்தாலும்.. எத்தனை உருக்கமான காதலாக இருந்தாலும்.. நோ மீன்ஸ் நோ தான்.. என்று விலகி தள்ளி நடந்தான் தமிழ்..
"டோன்ட் வொரி தமிழ்.. எங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை மேற்படிப்புக்காக ஃபாரின் அனுப்பி எங்களோட ஹாஸ்பிடலுக்கு உன்னை முதலாளி ஆக்குறேன்".. என்று எம் பியின் மகள் ஆஃபர் கொடுத்ததில் அலட்சிய பார்வையொன்றை வீசிவிட்டு அவன் நடந்து சென்ற தோரணையில் கடைசி வருடம் வரை அவன் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்தாள் அந்த மாடர்ன் மங்கை..
குரு பிரகாஷ் தமிழ் அளவிற்கு இறுக்கமானவன் கிடையாது என்றாலும்.. பெண்களிடம் வெகு இயல்பில் பழகக் கூடியவனும் இல்லை.. ஆனால் ஒரு மாணவனாக.. கல்லூரி வாழ்க்கையை முழுக்க முழுக்க அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தான்.. கல்லூரியில் ஆயிரம் நண்பர்கள் கிடைத்தாலும் ஈடு இணையில்லாத உயிர் நண்பன் தமிழ் மட்டுமே.. அவனுக்கும் அப்படிதானே..
தமிழ் கடைசி வருடத்தில் ஹவுஸ் சர்ஜனாக பயிற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் வீரபாண்டியனை சந்தித்தான்..
குடல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள் வீர பாண்டியனின் தாய் அங்கம்மா.. டியூட்டி டாக்டராக தினமும் வந்து அவர் உடல் நலனை பரிசோதிக்கும் பொறுப்பு தமிழினுடையது..
வீரபாண்டியனுக்கும் தமிழுக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு உருவானது.. கர்வத்துடன் ஆங்கிலத்திலேயே உரையாடும் மருத்துவர்கள் மத்தியில் எளிமையாக.. சகஜமாக பேசிய தமிழை வீரபாண்டியனுக்கு மிகவும் பிடித்துப் போனது..
கிராமத்திலிருந்து பட்டணத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த இருவருக்கும்.. அருகிலிருந்த உணவகங்களிலிருந்து சரியான உணவு கிடைக்கவில்லை.. குடல்வால் அறுவை சிகிச்சை செய்திருந்த காரணத்தால்.. நீராகாரம்.. பத்திய உணவு கொடுக்க வேண்டிய கட்டாயம்.. ஆனால் இங்கே ஆரோக்கிய உணவு கிடைப்பதே பெரும்பாடாகி போக.. அவர்கள் நிலை உணர்ந்து.. ஆருஷியிடம் சமைக்க சொல்லி தினமும்.. தமிழ் உணவு கொண்டு வந்து இருவருக்கும் கொடுக்க.. நன்றி பெருக்குடன் மனம் நெகிழ்ந்து போயினர் இருவரும்..
"டாக்டர் தம்பி.. சாப்பாட்டுக்கு எவ்வளவு பணம் செலவாகுதுன்னு சொன்னீங்கன்னா".. என்று இழுக்க "அய்யய்யோ.. என்ன சார் நீங்க.. ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டவங்க நாங்க.. சாப்பிடற உணவுக்கு காசு வாங்குற கேவலமான பிறவிகள் இல்ல.. தயவுசெஞ்சு இப்படி கேட்டு என்னை அசிங்கப்படுத்தாதீங்க" என்று.. பணிவாக பேசி கம்பீரமாக உயர்ந்து நின்றான் தமிழ்..
வெளி உலகம் அறியாத அக்காவிற்கு கல்லூரியில் நடக்கும் அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் சொல்பவன்.. வீரபாண்டியனை பற்றியும் அவன்தாயைப் பற்றியும் சொல்லி இருந்தான்.. ஏனோ அவள் நெஞ்சினில் வீரா மீது இனம் புரியாத ஈர்ப்பு.. "என்னையும் ஒரு வாட்டி கூட்டிட்டு போயேன் நானும் அவங்களை பார்க்கணும்" என்று வாய் விட்டே கேட்டு விட.. வீரபாண்டியன் அங்கம்மாவை காண ஆருஷியை அழைத்துச் சென்றான்..
"இவங்கதான் என்னோட அக்கா உங்களை பாக்கணும்னு சொன்னாங்க.. கூட்டிக்கிட்டு வந்தேன்" என்று வீரபாண்டியனிடம் ஆருஷியை அறிமுகப்படுத்த.. அன்னமிட்ட தேவதை.. வீர பாண்டியனின் இருதயத்தில் பச்சக் என ஒட்டிக் கொண்டாள்.. அக்கா என்றதும்.. வயது கூடியவளாக.. இளமைப் பருவத்தை தாண்டியவளாக இருப்பாள் என்று வீரா கற்பனை செய்திருக்க.. அதற்கு நேர்மாறாக சாந்தமான முகத்துடன் நின்றிருந்த அழகு இளங்குயிலால் மனம் ஈர்க்கப்பட்டான் அவன்..
ஆனாலும் டாக்டரின் அக்கா.. நாகரீகமான படித்த பட்டணத்து பெண் போல் தெரிகிறாளே.. தான் படிக்காத தற்குறி.. விவசாயி.. தன்னை ஏற்றுக் கொள்வார்களா.. என்று தாழ்வு மனப்பான்மையுடன் யோசித்தவனுக்கு விழிகளில் ஏக்கமே மிஞ்சியது.. திருமணமே வேண்டாம் என்று.. தான் கைகாட்டிய அனைத்து பெண்களையுமே புறக்கணித்து தன்னை வெறுப்பின் உச்சத்திற்கு இட்டுச் சென்ற மகன்.. இன்று தமிழின் அக்காளை வெவ்வேறு கோணங்களில் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அங்கம்மா.. வீராவின் எண்ணப் போக்கு உணர்ந்தவளாக..
"உன்னோட அக்காவை என் பிள்ளைக்கு கட்டிக் கொடுங்களேன் டாக்டர்".. மனதில் பட்டதை வெளிப்படையாக தமிழிடம் கேட்டிருக்க.. ஆருஷியும் வீரபாண்டியனும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் கண்டு திகைத்து விழித்தனர்..
ஒரு வாரமாக பேசி பழகியதில் வீரபாண்டியனின் குணம் பிடித்திருந்தாலும்.. யார் அவர்கள்.. எப்படிப்பட்டவர்கள்.. என்று எதுவும் தெரியாமல்.. வாக்கு கொடுப்பது எப்படி? என்று குழம்பினான் தமிழ்.. எந்த சந்தோஷங்களையும் அனுபவித்திராத ஆருஷிக்கு நல்ல துணைவனை தேர்ந்தெடுத்து கொடுப்பதுதான் தமிழின் தற்போதைய குறிக்கோள்.. அதில் எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் அவன்..
வீரா தமிழின் எண்ணப்போக்கு புரிந்து கொண்டவனாக "தம்பி நீங்க விசனப்பட வேண்டாம்.. ஒரு ரெண்டு நாள் என்னோட ஊர்ல வந்து தங்குங்க. நான் எப்படிப்பட்டவன் எங்க குடும்ப கௌரவம் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டு விருப்பப்பட்டா உங்க பொண்ணை கொடுங்க" என்று வீரபாண்டியன் நேரடியாக அவன் சந்தேகத்திற்கும் தயக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க.. மலர்ச்சியுடன் சம்மதித்தான் தமிழ்..
அதன்படி.. இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து அந்ந ஊருக்கு சென்று வீரபாண்டியனை பற்றி விசாரித்த அனைத்து தகவல்களும்.. திருப்திகரமாகவே இருந்தன.. அத்தோடு ஊருக்காக ஓடி ஓடி உழைக்கும் வீரபாண்டியனின் நல்ல குணம்.. ஊர் மக்கள் அவனுக்கு கொடுக்கும் மரியாதை அவன் அயராத உழைப்பு..என்று தனிப்பட்ட விதத்திலும்.. மரியாதை பெருகி கிராமத்து நாயகனின் ஃபேன் ஆகிப் போன தமிழ்
அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்..
தன் அக்கா உலக நடப்பு தெரியாதவள்.. கள்ளம் கபடம் அறியாத வெகுளி.. அவளுடைய மொத்த உலகமும் தன்னை சுற்றியும் தன் தங்கை ஆபர்ணாவை சுற்றியும் மட்டுமே.. என்று அன்னையும் தந்தையும் இறந்த பிறகு தங்கள் இருவரது வாழ்க்கைக்காக.. கல்வியை.. தன் வாழ்க்கையை தியாகம் செய்த தமக்கையைப் பற்றி வீரபாண்டியனிடம் சுருக்கமாக சொல்லி இருந்தான் தமிழ்..
அதுவரை ஆருஷியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே மேலோங்கியிருந்த வீரா நெஞ்சினில்.. தம்பி தங்கைக்காக அவள் செய்த தியாகங்களையும்.. பாசப்பிணைப்பினைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு.. ஆருஷி மீது மலையளவு காதலும் நேசமும் பெருகி வழிந்தது.. பொட்டு தங்கம் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுத்தா போதும்.. கல்யாண செலவு கூட நானே பாத்துக்குறேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டான்..
வீரபாண்டியன் வீட்டில் பெண் பிள்ளை கிடையாது அவனும் அவன் தம்பியும் மட்டும் தான்.. அன்னைக்கு அடுத்து அவன் நேசத்தை பாசத்தை மொத்தமாக தேக்கி வைக்கப்போகும் தங்க குங்கும சிமிழ் ஆருஷிதான்.. அவளை கைக்குள் வைத்து பொத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் திருமணத்திற்கு முன்பே பல கனவுகளுடன் காத்திருந்தான் வீரபாண்டியன்..
"தமிழு.. இங்க கிராமத்துல மாப்பிள்ளை நல்லவரா எப்படிப்பட்டவர்ன்னு விசாரிச்சுக்கிட்டு ஒரு பையன் சுத்திட்டு கிடக்கான்.. பாக்க வாட்ட சாட்டமா பணக்கார வீட்டு பிள்ளை மாதிரி தெரியுது.. உனக்கு தெரிஞ்சவனான்னு சொல்லு!! இல்லனா நாலு காட்டு காட்டி அனுப்பி விடணும்".. என்று வீரபாண்டியன் மீசையை முறுக்கிக் கொண்டு இங்கிருந்து போன் போட்டு தமிழுக்கு சொல்ல "போட்டோ அனுப்புங்க" என்றான் அவன்.. வாட்ஸ் அப்பில் வந்த போட்டோ குருவினுடையது.. அதனோடு ஒரு வீடியோவும் கூட..
"ஆமா பொண்ணு உங்களுக்கு என்ன வேண்டும்".. என்று அந்த ஊர்க்காரர் கேட்க
"பொண்ணு என்னோட அக்கா.. மாப்பிள்ளை எப்படி?.. குணம் தங்கம் தானே.. சோம்பேறி இல்லையே குடிப்பழக்கம் இருக்கா.. சிகரெட் பொம்பள பழக்கம் இருந்தா இப்பவே சொல்லிடுங்க.. எங்க அக்காவுக்கு உலகம் தெரியாது.. அவ கண்ணுல ஒரு துளி கண்ணீர் வந்தாலும் என்னால தாங்க முடியாது".. என்று உணர்ச்சிகரமாக வீடியோவில் பேசிக் கொண்டிருந்த குருவை கண்டு தமிழின் கண்கள் குளம் கட்டி நிறைந்து போயின.. தவிப்புடன் மாப்பிள்ளை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தவனை விழிகள் கலங்க சிரிப்புடன் நோக்கிக் கொண்டிருந்தவனின் விரல்கள் வீடியோவில் தெரிந்தவனை வாஞ்சையுடன் வருடி கொடுத்தது..
அஷ்டலஷ்மி கோவிலுக்கு வந்திருந்த மீனாட்சியின் முன்பு வந்து நின்றான் தமிழ்.. அதிசயத்திலும் அதிசயமாக தன்முன்னே வந்து நிற்பவனை கண்டு மீனு வியந்து விழிவிரிக்க..
"வர்ற வைகாசி மாசம் பத்தாம் தேதி அக்காவுக்கு கல்யாணம்.. பத்திரிகை கொடுத்து அழைக்கிற அளவுக்கு நீ ஒன்னும் மூணாம் மனுஷி இல்ல.. சொல்லப்போனா இப்படி நான் வந்து கூப்பிடுறதே தப்பு.. ஏன்னா இது உன் வீட்டு கல்யாணம்.. உன் பிள்ளையை பொண்ணை அழைச்சிக்கிட்டு வந்து சேரு".. என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு பின் கை கட்டியபடி..
"ஏன் துரை.. வீட்டுக்கு வந்து பத்திரிகை வைச்சு அழைக்க மாட்டீங்களோ.. அவ்வளவு வேண்டாதவளா போயிட்டேனா நானு!! பொது இடத்தில் வைச்சு சொல்லிட்டு இதில் சப்ப கட்டு வேற".. என்று முறைத்தபடி பேசிய மீனாட்சியின் கண்கள் கலங்கி போயின..
"இங்க பாரு அத்தை.. கோயில்ல வச்சி அழுதுட்டு கெடக்காத.. மனசு ஒரு மாதிரி பிசையுது.. அவ்வளவு அவமானப்பட்ட பிறகும் அந்த வீட்டு வாசப்படியை நான் மிதிப்பேன்னு நீ எப்படி நினைச்சே.. பத்திரிகை இன்னும் அடிச்சு வரல.. என்னை பத்திரிகையா நினைச்சுக்க".. என்று அடுத்த வினாடி அவர் காலினில் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தான் தமிழ்..
திடீரென இப்படி காலில் விழுவான் என எதிர்பாராதவளோ பதறிக் கொண்டு.. "அடேய்.. கோயில்ல சாமி தான்டா எல்லாம்.. மனுஷங்க கால்ல விழக்கூடாது எழுந்திரு".. என்று தவிப்புடன் அவனை எழுப்ப முயல.. "என் சாமி என் கண்முன்னாடிதான் நிக்குது.. சாமி கும்பிட்டாச்சு.. வந்த வேலை முடிஞ்சு போச்சு".. என்றவனோ எழுந்துநின்று சட்டையை சரி செய்து கொண்டு மீனாட்சியை திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட.. அழத் துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு சேலை தலைப்பால் வாயை பொத்தியபடி நின்றிருந்தாள் அவள்..
வீரபாண்டியன் ஊரினில்.. வீரா ஆருஷி திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. ஏனோ முறுக்கு மீசையுடன் வாட்டசாட்டமாக நடிகன் நெப்போலியன் உடற்கட்டில் அக்காவின் பக்கத்தில் அமர்ந்திருந்த மாமாவை ஆராவுக்கு கொஞ்சமும் பிடிக்க வில்லை.. நான்கைந்து முறை பந்து விளையாடுகிறேன் என்று வீரா மண்டையை உடைக்கப் பார்க்க அவன் நேக்காக கேட்ச் பிடித்து தன் தலையை பாதுகாத்துக் கொண்டான்..
ஆனால் அவனுக்கு அந்த குட்டியை மிகவும் பிடித்து போனது.. ஆருஷிக்கு திருமணம் ஆகும்போது ஆராவிற்கு பதினான்கு வயது.. வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல்.. நெய்யும் பாலுமாக உண்டு குட்டி டெடி பியர் போன்ற காட்சியளித்த ஆரா மீது அனைவருக்குமே பிரியம்.. ஆருஷி போல் அல்லாமல் உணவின் ஊட்டத்தில் பதிமூன்று வயதிலேயே பருவமடைந்திருந்தாள் ஆரா..
ஒன்று விட்ட அண்ணன் மகனுக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டை போட வேண்டும் என்று பொய் சொல்லிவிட்டு மீனாட்சியும் குருவும் துவாரகாவும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர்.. மணமேடையிலிருந்து கழுத்தில் மாலையுடன் ஓடி வந்து மீனாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள் ஆருஷி..
குரு தமிழின் பார்வைகள் அடிக்கடி சந்தித்துக் கொண்டாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.. கல்யாண வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்தான் குரு.. பந்தி பரிமாறுவது.. எச்சில் இலை எடுப்பது என எதற்கும் கௌரவம் பார்க்கவில்லை அவன்.. ஆருஷி மணமேடையில் உட்கார்ந்து ஒட்டுமொத்த குடும்ப சண்டையை பொறுமையாக வீராவிடம் விளக்கிக் கொண்டிருக்க.. "அப்புறம் பேசிக்கோங்க முதல்ல மந்திரம் சொல்லுங்க".. என்று ஐயர் அவர்களது கவனத்தை டைவர்ட் செய்தார்.. கெட்டி மேளம் முழங்க.. மனப்பூர்வமாக தங்கத் தாலியை அவள் கழுத்தில் கட்டி தன் சரிபாதியாத மாற்றிக் கொண்டான் வீரபாண்டியன்.. தம்பி தங்கையின் சோகத்தில் வாடி முதலிரவு மூணு மாதம் கழிந்து நடந்த கதையெல்லாம் சொன்னால் வீரபாண்டியனுக்கு தனி அத்தியாயம் எழுத வேண்டி இருக்கும்..
அதன் பிறகு.. வீடு வந்த தமிழ் காய்ச்சல் கண்டதும்.. அடுத்த ரயிலேறி ஆருஷி சென்னை வந்து குதித்ததும்.. வீரபாண்டியன் மனைவி காய்ச்சல் கண்டதும் நாம் அறிந்த விஷயங்களே..
சரி பிளாஷ்பேக் முடிஞ்சு போச்சு.. எங்கே ராக்காம்ஸ்??..
தூணில் கட்டி வைக்கப்பட்டிருந்தாள் அவள்..
"இருந்தாலும் எங்க அம்மாவை படாத பாடு படுத்துறீங்க".. என்று வெற்றிவேல் நொந்து கொண்டே "ஆரம்பிக்கட்டும்.. டும்".. என்று கட்டளையிட.. மீனாட்சி கையில் எச்சில் துப்பி ஓங்கி தலையில் அடித்து சத்தியம் செய்யும் வேளையில்..
"ஏய்ய்ய்".. என்று பாட்டி ஒரு மாதிரியாக உடல் மொழியில் மாடுலேஷன் மாற்றியது..
"அய்யோ அம்மா என்னாச்சு".. வெற்றிவேல் பதற..
"ஆத்தா வந்துருக்கேன்டா கட்டையெல்லாம் அவுத்து விடுங்க" என்று.. தலையை சுழற்றிக் கொண்டே பேசியது பாட்டி..
"அய்யோ.. ஆத்தா".. என்று பணிவாக வெற்றிவேல் கட்டுக்களை அவிழ்த்து விட.. இந்தக் கட்டுக்கதையை கேட்க விரும்பாத குருவும்.. துவாரகாவும் "எங்களுக்கு காலேஜ்க்கு நேரமாச்சு.. நாங்க கிளம்புறோம் நீங்க என்னவோ பண்ணிக்கோங்க".. என்று அங்கிருந்து நைசாக நழுவிக் கொண்டனர்..
"அய்யோ ஆத்தா.. என்ன திடீர்னு வந்து இருக்கீங்க உங்களுக்கு என்ன குறை வச்சோம்" மீனாட்சி கையெடுத்துக் கும்பிட..
"ஏண்டி குலதெய்வம் மேல சத்தியம் போட சொன்னா.. இந்த அப்பாவி கிழவி மேல சத்தியம் போட்டு சாமியை ஏமாத்துறிங்களா" என்று உறுமியது பாட்டி..
"ஐயோ அப்படியெல்லாம் இல்ல ஆத்தா.. என் மாமியார்தான் எனக்கு குலதெய்வம்" என்று ஒரே போடாக போட்டாள் மீனாட்சி..
"நடிக்காதீங்கடி இந்த பக்கம் சத்தியம் போட்டுட்டு அந்த பக்கம் அந்த குடும்பத்தோட உறவாடுறது எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா.. ஹா ஹா" என்று பாட்டி சத்தமாக சிரிக்க.. வெற்றிவேல் அதிர்ந்து மீனாட்சியை முறைத்தார்..
"அச்சோ ஆத்தா அப்படியெல்லாம் இல்ல.. பொய் சொல்லாத".. என்றார் வெற்றிவேலை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே..
"சாமி பொய் சொல்லுமாடி"..
மீனாட்சி அசராமல் "அதெல்லாம் சொல்லும்.. நீ உண்மைதான் சொல்றேங்கிறதுக்கு என்ன ஆதாரம்.. இந்தா இந்த சூடத்தை முழுங்கி நிருபிச்சு காட்டு".. என்று உள்ளங்கையில் பெரிய கற்பூரத்தை ஏற்றி ராக்கம்மா வாய்க்கு நேரே தூக்கி வீச..
"ஆஆ.. ஆத்தா.. மலையேறிட்டேன்.". என ஜஸ்ட் மிஸ்சில் சோபாவில் விழுந்தாள் அப்பத்தா.. போட்ட பந்தை எல்லாம் எல்லாம்.. இல்லை பந்தாக்கி(No ball) திருப்தியுடன் உள்ளே சென்றாள் மீனாட்சி..
தொடரும்..