"என்னங்க என்ன ஆச்சு.. ஆபீஸ் போகாம இங்கே என்ன பண்றீங்க".. ஹாலில் அமர்ந்து போனை நொண்டிக் கொண்டிருந்த அர்ஜுனிடம் கேட்டாள் ஹிருதயா..
"இன்னிக்கு புது நர்ஸ் வேலையில ஜாயின் பண்ண வர சொல்லியிருக்கேன்.. அதான் வெயிட் பண்றேன்".. நிமிர்ந்து பாராமலே பதில் சொல்ல ஹிருதயா முகம் கருத்துப் போனது.. "அத்தைக்கு உதவி செய்யப் போற சம்பளம் வாங்குற சாதாரண நர்சை வரவேற்க நீங்க வெயிட் பண்ணனுமா".. அவள் பேச்சில் அனல் தெறித்தது..இதற்கு முன் வந்த நால்வரையும் பார்த்தபிறகுதான் பிடிக்கவில்லை.. வரப்போகிறவளை பார்க்கும் முன்னே கருவினாள்.. அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறானே அர்ஜுன்.. பற்றிக் கொண்டு வந்தது.. மற்றவர்களிடம் மிளிரும் கர்வமும் மிடுக்கும் எங்கே போனது இப்போது..
"அதென்ன சாதாரண நர்ஸ்.. அந்த சாதாரண நர்ஸ் இல்லாமதான் எங்கம்மாவோட ஹெல்த் பாழாப் போச்சு.. இங்கே யாருக்கும் டாக்டர் கொடுக்கிற ஒரு சாதாரண ப்ரிஸ்கிரிப்ஷன் ரீட் பண்ணி வேளாவேளைக்கு மருந்து கொடுக்கத் தெரியல.. அவங்களோட தேவைகளை பூர்த்தி பண்ணத் தெரியல"..
அவன் சூடாகிப் போக..
"அர்ஜூன்.. நான் அத்தையை நல்லாத்தான் கவனிச்சிக்கிறேன்".. ஹிருதயா இடைமறித்தாள்.. இவ்விடத்தில் தன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியமாய்ப் பட்டது.. ஆனால் அவள் ஒன்றும் கிழிப்பதில்லை என்பது வேறு விஷயம்..
"அவங்களுக்கு அடிக்கடி bp செக் பண்ணனும்.. IV அண்ட் இனஜெக்ஷன் போடணும்.. பிளட் சாம்பில்ஸ் எடுக்கணும்.. இதெல்லாம் உன்னால பண்ண முடியுமா தயா".. கேள்வியால் தாக்க மவுனமாக தலை குனிந்தாள்.. "முடியாதுல.. எல்லா வேலைகளையும் நாம பண்ண முடியாது.. அந்தந்த ஃபீல்ட்ல இருக்குறவங்கதான் பண்ணனும்.. சம்பளம் வாங்கினாலும் அவங்க பண்றது சேவைதான்.. சேவைக்கு எப்பவும் மரியாதை கொடுக்கனும்.. இனியும் இந்த மாதிரி ஓவர் கான்பீடன்ட்ல பேசறதை நிறுத்து.. வர்றவங்களையும் நீ வாசலோட விரட்டி விட்டுடக் கூடாதுன்னுதான் நான் வெயிட் பண்றேன்".. என்றான் கோபம் குறையாமல்.
"என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.. என்னை பார்த்தா ராட்சசி மாதிரி தெரியுதா".. கோபத்தில் சீறினாள் ஹிருதயா..
"இவ்ளோ நேரம் அப்படி நினைக்கல.. ஆனா இப்போ கத்துறதை பாத்தா நீ சொன்னது உண்மையா இருக்குமோன்னு எனக்கு தோணுது".. அவன் அவ்வாறு சொல்லவும் சட்டென தான் உணர்ச்சி வசப்பட்டதை உணர்ந்தவள்.. கோபத்தை கட்டுக்குள் கொண்டுவந்து நிதானித்தாள்.. "அவசரப் படாதே ஹிருதயா.. வெண்ணெய் பொங்கி வரும் நேரம் தாழியை உடைச்சிடாதே".. அவள் மனம் எச்சரித்தது..
"அய்யோ.. அர்ஜுன் நான் அப்படி சொல்லவரல.. இப்போ யாரையும் நம்ப முடியல.. முன்னபின்னே தெரியாத பெண்ணை வேலைக்கு வச்சு அவளால அத்தைக்கு ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா.. அதைதான் சொன்னேன்.. உங்களுக்கு தொழில் எதிரிகள் வேற அதிகமில்லையா".. என்று சமாளித்தாள்..
"ஹாஸ்பிடல் என்விரோன்மெண்ட் அம்மாவுக்கு செட் ஆகல.. உனக்கு தெரியும்தானே.. இல்ல தேவையில்லாத தகவல்ன்னு மறந்துட்டியா".. கேலியாய் புருவம் வளைத்தான்.. அவளிடம் பதிலில்லை.. ஒரு முழம் ஏறினால் முக்கால் முழம் சறுக்குகிறதே.. அமைதியாக உள்ளே சென்று விட்டாள்..
"என்னப்பா.. புது நர்ஸ் வந்தாச்சா".. கேட்டுக் கொண்டே வந்தார் சுந்தரம்..
"இன்னும் இல்லைப்பா.. இப்போ வந்துருவாங்க.. வந்தததும் பொதுவான சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துட்டு நான் கிளம்பிடறேன்".. கோபத்தை மறைத்து இயல்பாகப் பேசினான் அர்ஜுன்..
"அதுக்கு ஏன்ப்பா நீ இவ்ளோ மெனக்கிடனும்.. நீ போ.. நான் பாத்துகிறேன்".. மகனுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் அவனை சிரமப் படுத்த வேண்டாமே என யோசித்தார்..
"இல்லைப்பா.. வர்றவங்க யாருமே மூணு நாலு நாளுக்கு மேல தாக்குப் பிடிக்கறது இல்ல.. அதனால சில விஷயங்களை ஸ்ட்ரிக்ட்டா பேசி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்".. என்று பதில் கொடுக்க.. சுந்தரமும் அதை ஆமோதித்தார்..
மற்ற பணிவிடைகளை கூட அவர் பார்த்துக் கொள்வார்.. ஆனால் மருத்துவ ரீதியான சில விஷயங்களை மருத்துவமனையிலிருந்து அனுப்பபடும் தாதி செய்வதே சரியாக இருக்கும்.. பாவம் அவரும் மனைவி படுத்த படுக்கையான வாட்டத்தில் மிகவும் மெலிந்து போயிருந்தார்.. சும்மாவா சொன்னார்கள் சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்று.. எங்கே மனைவி தன்னைவிட்டு சென்று விடுவாளோ என்ற பயம்.. அர்ஜுன் உடைந்து போயிருக்கும் அப்பாவைக் கண்டு மிகவும் கவலைப் பட்டான்.. முடிந்தவரை ஆறுதலாகதான் இருந்தான்.. அலுவலகத்தையும் பார்த்துக் கொண்டு அம்மாவின் தேவைகளை அவ்வப்போது கவனித்து மனவலிமை இழந்த தந்தையை கொஞ்சம் தேற்றியெடுத்து.. அப்பப்பா.. கண்ணை கட்டியது.. இளைப்பாறுதல் வேண்டி மடி கேட்டது மனம்.. கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டே இருக்கிறான்.. இதற்கிடையில் ஹிருதயாவின் தொந்தரவுகள்.. உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருக்கும் பேயாய் துடிக்கும் காமம்.. அதை மீறிய காதல்.. அது யாருக்கு சொந்தம் என தெரியாத நிலை.. பைத்தியம் மட்டும்தான் பிடிக்க வில்லை.. ஒருபக்க அர்ஜுன் நல்லவன்.. மருந்துகளின் வீரியத்தில் மாற்றப்பட்ட இன்னொரு அர்ஜுன் எப்போது வெடித்து வெளி வருவானோ..
வெளியில் ஆட்டோ சத்தம் கேட்டது.. கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.. சரியான நேரத்திற்கு வந்துவிட்டாள்.. மனதுக்குள் குறித்துக் கொண்டான்.. இதழே தேடும் அளவு ஒரு சிரிப்பு.. தெருவில் நிற்கும் ஆட்டோவின் சத்ததை அவ்வளவு கூர்மையாகக் கேட்டு அதீத ஆர்வத்துடன் அவளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் என்ன.. ஓவர்டோசா போகுதே.. அவனுக்கே நெருடல்தான்.. உன் இயல்பு இது இல்லை.. மனதோரம் ஒரு உறுத்தல்.. அம்மாவுக்காகதான்.. என தன்னை தேற்றிக் கொண்டான்..
முதலில் வேலையாள் வந்து அனுமதி கேட்டான்.. அவன் பின்னால் வந்தாள் பெண்ணவள்.. கையில் ஆறுமாத ஆண் குழந்தையுடன்.. மனம் படபடத்தது.. பட்டாம்பூச்சி பறந்தது..
கண்கள் சுருக்கி யோசனையாக குழந்தையைப் பார்த்தான் அர்ஜூன்.. அவளோ இருக்கையில் ராஜ கம்பீரத்துடன் அமர்ந்திருந்த ஆணவனைக் கண்டு ஒரு நொடி சலனம் கொண்டாள்.. பிறகு சுதாரித்தாள்.. பின்பு திடுக்கிட்டாள்.. என்ன அபத்தம் இது? என தன்னையே கடிந்து கொண்டாள்..
"குட் மார்னிங் சார்".. வார்த்தைகள் தடுமாறியது அவன் ஆண்மையின் அழகில்..
"குட் மார்னிங்.. உட்காருங்க" என விழிகளை அசைத்து இருக்கையைக் காட்டினான் அவன்.. பார்வையோ அந்த குழந்தையின் மீது.. அம்மாவின் கைகளில் அடங்காமல் துறுதுறுவென கைகால்களை அசைத்துக் கொண்டிருந்த குழந்தையை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை.. பால் வடியும் பாலகன்.. எச்சில் ஒழுக சிரித்துக் கொண்டிருந்தான்.. அத்தனை மென்மை.. தாயிடமா.. மகனிடமா.. சந்தேகம் தோன்றியது.. எண்ணங்களை கொள்ளையிடும் பாலகனிடமிருந்து பார்வையைத் திருப்பியவன் சகுந்தலாவின் மேல் விழிகளைப் பதித்து நிமிர்ந்து அமர்ந்தான்..
"நீங்க வேலையில் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி சில விஷயங்களை பேசி முடிச்சிடலாம்.. இதுக்கு முன்னாடி கோயம்புத்தூர் PH ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணியிருக்கீங்க.. உங்க ரெகார்ட்ஸ் எல்லாம் நல்லவிதமாதான் இருக்கு.. அங்க விசாரிச்ச வரை டாக்டர்சும் உங்களைப் பற்றி நல்லவிதமாதான் சொன்னாங்க.. குழந்தையும் அங்கேதான் பிறந்ததாமே".. என்று கேட்க ஆமாம் என்று தலையாட்டினாள்.. அதற்குள் தகவல்களை சேகரித்து விட்டானே.. எல்லாம் பணம் செய்யும் வேலை.. கொஞ்சம் மலைப்புதான்.. "ஓகே ஃபைன்.. இந்த அக்ரீமன்ட்ல ஸைன் பண்ணிடுங்க".. என்று டீபாயின் மீதிருந்த அக்ரிமெண்ட்டை அவள் பக்கம் திருப்பி வைத்தான்.. என்னது இது? புருவம் சுருக்கினாள்.. "ஒன் இயர்க்கான அக்ரீமன்ட்.. "அதுக்கு முன்னாடி நீங்க இங்கேருந்து போனா எங்களுக்கு நஷ்ட ஈடு தரணும்".. என்று சாதாரணமாய் சொல்ல இதென்ன விபரீதம் என்று எழுந்து விட்டாள்..
"இது வேலைக்கு சேர்க்கிற எல்லா இடத்துலயும் சொல்லபடற விதிமுறைகள்ல ஒண்ணுதான்.. இதுக்கு நீங்க இவ்ளோ டென்ஷன் ஆகவேண்டிய அவசியம் இல்ல.. இந்த ஒரு வருஷமும் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப் போறது நான்தான்.. மூணு மாசமோ இல்ல.. மூணு நாளோ வேலை செஞ்சிட்டு நீங்க இங்கேருந்து போய்ட்டா.. ஒருவேளை காஸ்ட்லி திங்க்ஸ் எதையாவது திருடிட்டு போய்ட்டா?" அவன் புருவம் உயர்த்த.. நெருப்பாக சிவந்தாள் அவள்.. "நான் அப்படிபட்ட பொண்ணு இல்ல".. பட்டென பதில் வந்தது.. அவள் கோபம் கூட அழகு.. சுவாரஸ்யம் கூடியது..
"உங்களுக்கு நீங்களே சர்டிபிகேட் கொடுத்துக்கிறது ஒண்ணும் அதிசயம் இல்ல.. இந்த பேப்பர்ல ஸைன் பண்ணா நீங்க இங்கே வேலை செய்யலாம்.. இல்ல வந்த வழியே திரும்பிப் போய்ட்டே இருக்கலாம்".. அவன் தோளைக் குலுக்கி மார்பின் குறுக்கே கைகட்டி அழுத்தமாய் அவளை பார்க்க.. குழந்தை கீழே விழாமல் தோளோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு தீவிரமாக யோசித்தாள் அவள்..
திரும்பிப் போக முடியாது.. அவள் எமகாதக கணவனிடமிருந்து தப்பிக்க இப்போதைக்கு பாதுகாப்பாக ஒரு இடம் வேண்டும்.. முன்பு வேலை செய்த மருத்துவமனையில் தான் எங்கே செல்லப்போகிறேன் யாரிடம் வேலை செய்யப்போகிறேன் என்பதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.. இங்கிருந்து வேறு எங்கு போனாலும் அவள் கணவன் சத்யனிடம் மாட்டி சீரழிவது உறுதி.. இப்போதைக்கு இதை விட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் கிடையாதே.. கோயம்புத்தூரில் ஒரு சத்யன்தான்.. இங்கே ஓராயிரம் சத்யன்களை சமாளிக்க வேண்டுமே.. அவள் புருவமுடிச்சுகள் யோசனையின் தீவிரத்தை உறுதிப் படுத்த.. அதனை உணர்ந்து கொண்டவன் "ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல.. இங்கே உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது.. நம்பி கையெழுத்து போடுங்க" என்றான் அவளுக்கு சாதகமான குரலில்.. ஆழ்ந்த பெருமூச்செடுத்தவளுக்கு "இனி யோசிப்பதற்கு ஒன்றுமில்லை.. தயங்காமல் கையெழுத்து போடு" என மூளை எடுத்துரைக்க குனிந்து கையெழுத்து போட சிரமம் கொண்டாள்.. "குழந்தையை கொடுங்க".. அவன் கையை நீட்ட.. ஒருகணம் தயங்கியவள் அடுத்த நொடி அவனிடம் குழந்தையை கொடுத்தாள்..
"ஒஹ்.. அர்ஜுன் மகனா நீ".. என்று குழந்தையிடம் கேட்க.. அவள் சட்டென திடுக்கிடலுடன் நிமிர்ந்தாள்.. தான் என்ன சொன்னோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான் அவன்.. தான் வேலை செய்யப்போகும் முதலாளியின் பெயர் அர்ஜுன் தீட்சண்யன் என்று அவள்தான் அறிவாளே.. அவள் பார்வை அவனையே கூர்மையாய் துளைக்க "இல்ல.. மகாபாராதத்துல அர்ஜுனன் மகன் பெயர் அபிமன்யுதானே அதைத்தான் சொன்னேன்" என்றான்.. உண்மையும் அதுதான்.. அந்த அர்த்ததில் மட்டுமே அவன் கூறினான்.. சகுந்தலா எதுவும் பேசவில்லை.. பொறுமையாக அந்த ஒப்புதல் பத்திரத்தை படித்து கையெழுத்திட்டிருந்தாள்..
"குட்.. தேங்க் யூ".. என பத்திரத்தை எடுத்து ட்ராவினுள் வைத்துப் பூட்டியவன் "வாங்க அம்மாவைப் பார்க்க போகலாம்".. என்று எழுந்தான்.. அவள் குழந்தையை வாங்க கையை நீட்ட "என்கிட்டவே இருக்கட்டும்" என்றான் அழுத்தமாக.. மறுக்க முடியவில்லை அவளால்..
அன்னையிடம் அழைத்துச் சென்றான்.. "அம்மா".. என்று அவளிடம் காட்ட மெல்லிய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள் சகுந்தலா.. பதிலுக்கு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்த சைலஜா.. சகுந்தலாவையும் அர்ஜூன் தோள் மீது கிடந்த கிள்ளையையும் மாறி மாறிப் பார்த்தாள்.. இப்படி இயல்பாக பழகுபவனில்லை அர்ஜூன்.. உறவினர்கள் குழந்தையை கூட தூக்க மாட்டான்.. அது எவ்வளவு அழகாக இருந்தாலும் சரிதான்.. "தெரிஞ்ச பொண்ணா அர்ஜூன்".. சட்டென உதித்த சந்தேகத்தை கேட்டு விட்டாள்..
அம்மா ஏன் இப்படி கேட்கிறாள் என புரியவில்லை.. "இல்லையேம்மா.. நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்த ஹாஸ்பிடல்ல இவங்களை ரெக்கமண்ட் பண்ணினாங்க".. என்று குழந்தையை கொஞ்சிக் கொண்டே சொல்லவும் ஏதோ வித்தியாசமாக பட்டது அவளுக்கு..
மேஜை மீதிருந்த டைரியை எடுத்து அவளிடம் கொடுத்தவன் "இதுல என்ன பண்ணணும்னு எழுதியிருக்கு.. பாத்துகோங்க.. டாக்டர்கிட்டே ஃபோன் பண்ணி தரேன்.. ஒருவாட்டி பேசிக்கோங்க" என்று சொல்ல சரி என்று தலையசைத்தாள்..
இருவரும் வெளியே வர எதிரே வந்தார் சுந்தரம்.. "இவர் என் அப்பா" என்று அறிமுகப் படுத்திட.. அர்ஜுன் கையிலிருந்த குழந்தையையும் சகுந்தலாவையும் ஒருநொடி பார்த்து கலக்கமுற்றவர்.. பின் சுதாரித்து மெல்லிய புன்னகையொன்றை சிந்தினார்.. வணக்கம் என சிரித்தாள் அவளும்..
"அர்ஜுன்".. அழுத்தமான குரலில் மூவரும் திரும்பினர்.. மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள் ஹிருதயா.. என்ன விழிகள்.. அடேங்கப்பா.. கொஞ்சம் உதறலெடுத்தது சகுந்தலாவிற்கு.. ஹிருதயாவின் பார்வை அர்ஜுன் கையிலிருந்த குழந்தை மேல் வெஞ்சினத்துடன் படிந்தது..
"அர்ஜுன் சார் பொண்டாட்டி ஒரு ராட்சசி.. பாத்து நடந்துக்கோ".. அர்ஜுன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் சொன்னது நினைவில் வந்து போக உள்ளுக்குள் ஒரு கலக்கம் உருவானது சகுந்தலாவிற்கு..