- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
"ஏன்யா.. ஏன்.. அவர் கேட்டாராம்.. இவர் சரின்னு சொன்னாராம்.. பொண்ணோட வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லையா உனக்கு.. கீதா கண்ணீரும் ஆத்திரமுமாக வெடித்து கத்திக் கொண்டிருந்தாள்..
மர இருக்கையில் அமர்ந்து மனைவி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் தலை கவிழ்ந்திருந்தார் விநாயகம்..
"யோவ் உன்னைத்தான் கேட்கிறேன்.. பதில் சொல்லு.. உன் விசுவாசத்தை காட்ட என் பொண்ணை அடகு வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா..!!" விரிந்த கூந்தலை கொண்டையாக சுருட்டி கொண்டு எழுந்து வந்தாள் கீதா..
கவலையோடு நிமிர்ந்து மனைவியை ஏறிட்டார் அவர்.. "என்னை என்னடி செய்ய சொல்ற.. நமக்கு படியளக்கற எஜமான் கேட்கும் போது என்னால் மறுக்க முடியல.." என்றார் இயலாமையுடன்..
"இங்கே யாரும் சும்மா ஒன்னும் படியளக்கல.. வாங்கற சம்பளத்துக்கு மாடா உழைக்கிறியே அது பத்தலையா..!! என் மகளை அந்த காட்டுமிராண்டிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து தான் உன் எஜமான விசுவாசத்தை நிரூபிக்கணுமா..!!" அன்னையும் தந்தையும் தனக்காக மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வதை உள்பக்க அறையில் சுவற்றில் சாய்ந்து கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தாள் அன்பரசி..
"சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதே..!! சம்பளம் மட்டும் தான் கொடுத்தாரா.. மனசாட்சியோடு யோசிச்சு பாரு.. நெஞ்சுவலின்னு போய் ஹாஸ்பிடல்ல படுத்து கிடந்தியே.. மருத்துவ செலவுக்கு சுளையா பதினைஞ்சு லட்ச ரூபா.. அவர்தானடி கொடுத்தாரு..!! உன் பொண்ணோட படிப்பு செலவுக்கு இரண்டு லட்ச ரூபா எங்கிருந்து வந்தது.. வானத்திலிருந்து காசு மழை கொட்டுச்சா என்ன.. இந்த வீடு ஜப்தியாக இருந்த நிலையில லட்சக்கணக்கில் காசு கொடுத்து மீட்டெடுக்க உதவி செஞ்சவரு அந்த பெரிய மனுஷன் தான்..!! கொஞ்சமாவது நன்றியோடு பேசுடி.."
"என் நன்றி உணர்வை காட்ட அவர் காலுக்கு செருப்பா தேயறேன்.. அவர் கொடுத்த உயிரை அவரே திருப்பி எடுத்துக்கட்டும்.. ஆனா என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ண ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்.." சேலை தலைப்பால் வாய்ப்பொத்தி அழுதாள் கீதா..
"இப்ப என்ன உன்னோட பொண்ணு வாழ்க்கை நாசமாகிடுச்சு.. ஐயா ரொம்ப நல்லவரு.. கல்யாண செலவு மொத்தத்தையும் தானே ஏத்துக்கிறதா சொல்லிட்டாரு.. பெரிய இடம்.. பணக்கார வாழ்க்கை.. உனக்கும் பொண்ணுக்கும் கசக்குதா என்ன..!!"
விரக்தியாக சிரித்தாள் கீதா.. "தங்க ஊசிங்கிறதுக்காக எடுத்து கண்ணுல குத்திக்க முடியாது.. உன் ஐயா நல்லவரா இருக்கலாம்.. ஆனா அவரோட பையன்..?"
"ஏன் அவருக்கு என்ன..!! அப்பனுக்கு புள்ள சளைச்சவர் இல்லை.. சிங்கம் மாதிரி இந்த சுற்று வட்டாரத்தை ஆளறாரே அது போதாதா..!!"
"அதான் அவர் ஒரு மிருகம்னு உன் வாயால சொல்லிட்டியே..!! ஒரு காட்டுமிராண்டியை கட்டிக்கிட்டு என் பொண்ணோட வாழ்க்கை சீரழியனுமா..!! அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லையே!!"
"பொம்பளை விஷயத்துல நல்லவன்டி அவன்.. அதுபோதாதா?"
"அந்த ஒரு தகுதி போதுமா.. குடி கஞ்சா.. அடிதடி.. அவன் ஒரு அரக்க அவதாரம்னு எல்லாரும் பேசிக்கிறாங்களே..!!"
"என்னடி உன் வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்க.. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்..!! நானே கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படி இருந்தவன்தானே.. இப்ப ஒழுங்கா இல்லையா.. அவ்வளவு ஏன்.. எங்க ஆச்சார்யா ஐயாவே கல்யாணத்துக்கு முன்னாடி நீ சொன்ன மாதிரி காட்டுமிராண்டியா இருந்தவருதான்.. பொண்டாட்டின்னு ஒருத்தி வந்த பிறகு திருந்தி வாழலையா.. அந்த மாதிரி என் மகளை கட்டிக் கொடுத்தா சின்னவரும் திருந்திட்டு போறாரு..!!"
"ஊர்ல இருக்கிறவனை திருத்தறதுதான் என் பொண்ணோட வேலையா.."
"இங்க பாரு நீ என்ன சொன்னாலும் சரி.. என் பொண்ணு மேல இருந்த நம்பிக்கையில் நான் வாக்கு குடுத்துட்டு வந்துட்டேன்.. இதுக்கு மேல நீயும் உன் மகளும் ஏதாவது செய்யறதா இருந்தா என் பொணத்தை தாண்டிப் போய் செய்யுங்க..!!" அவர் தீர்க்கமாக சொல்லிவிட "ஐயோஓஓ" என்று வாய்விட்டு கதறினாள் கீதா..
"அப்பா.." மென்மையாக அழைத்துக் கொண்டே வெளியே வந்தாள் அன்பரசி.. என்னதான் திடமான குரலில் மனைவியோடு வாதம் செய்து நியாயங்களை எடுத்து வைத்த போதும் மகளின் குரலில் குற்ற குன்றலுடன் நிமிர்ந்து பார்த்தார் அவர்..
"நீங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கப்பா..!!" அவள் சொன்னதை தொடர்ந்து கீதா அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க.. கரம் நீட்டி மகளை அழைத்தார் அவர்..
கண்களை துடைத்துக் கொண்டு தந்தையின் அருகே வந்து முழங்காலிட்டு அமர்ந்தாள் அவள்..
"அப்பா வாக்கு கொடுத்து வந்துட்டேன் அன்பு.. நான் உன் வாழ்க்கையை பாழாக்க நினைப்பேனா..!! நிச்சயம் நீ அங்க போய் நல்லா இருப்ப.." அவர் முடிப்பதற்குள்
"இருக்கட்டும்ப்பா.. எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்.. நீங்க எது சொன்னாலும் நான் கேட்பேன்.. என்னால உங்களுக்கு தலை குனிவு வரக்கூடாது.. மனச போட்டு குழப்பிக்காம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கப்பா..!!" கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு பொய்யாக சிரித்தாள் அன்பரசி..
"அப்பா மேல உனக்கு கோபம் இல்லையே அன்பு..!!"
"கோபமெல்லாம் இல்லை.. வருத்தம் மட்டும்தான் பா.. பரவாயில்லை கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும்.. நீங்க என்னை நினைத்து கலங்க வேண்டாம்.." என்ற மகளை வேதனையுடன் பார்த்தார் அவர்..
முடியாது என்று மறுக்க சில நிமிடங்கள் போதும்.. ஆனால் எப்பேர்ப்பட்ட மனிதன் "உன் மகளை என் பையனுக்கு கட்டிக் கொடுக்கிறியா" என்று கோரிக்கை வைக்கும்போது மறுக்க தோன்றவில்லை..!!
தடுமாற்றத்துடன் அவர் விழித்துக் கொண்டிருந்த வேளையில்.. காது மடலை தேய்த்துக் கொண்டே.. "இப்படி கேக்கறது தப்புதான்.. என் மகன் கொஞ்சம் முரடன்.. அடிதடி சண்டையில் காலத்தை கழிக்கிறவன்.. ஆனா தப்பானவன் இல்லையே விநாயகம்.. அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா..!! உன் மக இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா நிச்சயம் எல்லாம் மாறிடும்னு தோணுது..!! நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.. என் மகன் அவளை பத்திரமா பாத்துக்குவான்.." என்றார் ஆச்சார்யா
"ஆனா அய்யா..!!"
"இல்லைன்னு மறுக்க போறீயா விநாயகம்.."
"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க..!!" விநாயகம் பதறினார்..
"நம்பி உன் மகளை கொடு.. அவளுக்கு ஒரு குறையும் வராது.. இனி அவ என்னோட மகள்.." என்று சொன்ன பிறகும் கூட சில கணங்கள் யோசித்திருந்தவர் கடந்த காலங்களில் அவர் தனக்காக செய்த பெரும் உதவிகளை கருத்தில் கொண்டு.. முதலாளி விசுவாசத்தோடு அவர் வேண்டுகோளை மறுக்க இயலாமல் "சரிங்க ஐயா.. நான் சம்மதிக்கிறேன்.." என்று தலையசைத்திருந்தார்..
நன்மையோ தீமையோ நம்மிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்பது போல் அன்பரசியிடம் தோண்ட தோண்ட சுரக்கும் ஊற்றுத் தண்ணீர் போல் சலசலவென பெரு வெள்ளமாய் இயல்பிலேயே அவள் கொண்ட அன்புள்ளமும் இரக்க குணமும் தான்.. அவள் வாழ்க்கை இந்த புள்ளியில் வந்து நிற்க காரணம்..
கோவிலுக்கு வரும் பழக்கம் இல்லை ஆச்சார்யாவிற்கு.. ஆனால் அவ்வப்போது "என் கூட கோவிலுக்கு வாங்களேன்.. கடவுள் கிட்ட மனமுருகி நம்ம வேண்டுதலை வச்சா கண்டிப்பா நடக்கும்.." உயிரோடு இருந்த காலங்களில் லட்சுமி கூறியதை கேலி செய்து புறக்கணித்ததுண்டு..
"கோவிலுக்கு போயிட்டு வாங்களேன்.. கடவுள் நம்ம மகனோட பிரச்சனையை தீர்த்து வைப்பார்..!!" லக்ஷ்மி காதோரம் பேசுவது போல் ரீங்காரமிட்டு ஒலித்த குரலில் அன்று அதிசயமாக கோவிலுக்கு சென்றிருந்தார் ஆச்சார்யா.. அதுதான் முதல் முறையும் கூட..
முருகன் கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்து அடுத்த கணம்.. இதுவரை அவர் அனுபவித்திராத மன அமைதியை உணர்ந்ததில் தேகம் சிலிர்த்துப் போனார்.. நுரையீரலை அடைத்துக் கொண்டிருந்த கசடுகள் நீங்கியதுபோல் ஆழ்ந்த மூச்சோடு உள்ளே நடந்து சென்றார் ஆச்சார்யா..
கர்ப்ப கிரகத்தில் வேலும் மயிலுமாய் சர்வ அலங்காரத்தோடு நின்று கொண்டிருந்த முருகனை கண்டவருக்கு சேவிக்க தோன்றவில்லை.. கொட்ட கொட்ட விழித்து பார்த்தபடி.. "உன்கிட்ட என்ன பேசறது என்ன கேக்கறதுன்னு எனக்கு தெரியல..!! நடக்கிறதை அப்படியே ஏத்துக்கணும்னு நினைக்கிறவன் நான்.. ஆனா ஒரு தகப்பனா என் மகன் விஷயத்துல அப்படி அலட்சியமா என்னால இருக்க முடியல..!! நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு.. அதுதான் நம்மை வழிநடத்துதுன்னு லஷ்மி அடிக்கடி சொல்வா.. இப்போ நானும் அதை உணர்றேன்.. உனக்கு என் மேல ஏதாவது கோபம் இருந்தா இந்த பாவியை தண்டிச்சிரு.. என் மகனுக்கு ஒரு நல்ல வழி காட்டு.. தயவு செஞ்சு ஏதாவது பார்த்து பண்ணு..!! உனக்கு தெரியாதது இல்ல.." கை கூப்பி விடைபெறுகிறேன் என்ற தலையசைத்து விட்டு வெளியே வந்து கோவில் வளாகத்தில் அமர்ந்தார்.. மனம் லேசாகிய உணர்வு.. தினமும் கோவிலுக்கு வரணும்.. என்ற எண்ணத்துடன் வளாகத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க.. "ஐயா.." என்றொரு குயில் அழைத்தது அருகே..!!
கண்கள் சுருக்கி திரும்பி பார்க்க அவர் அருகே அமந்திருந்தாள் அன்பரசி..
மஞ்சள் வண்ண சுடிதாரில் அளவான அழகுடன்.. நீளமான கூந்தலை பின்னலிட்டு முன்பக்கம் போட்டுக்கொண்டு.. வட்ட முகத்தில் பெரிய விழிகளின் மேல் வில்லாக வளைந்த புருவங்களோடு நடு நெற்றியில் குட்டி பொட்டும் விபூதி குங்குமம் என கீற்றாக தீட்டி.. முத்து பற்கள் தெரிய பளிச்சென்று சிரித்தவளை ஆச்சரியமாக பார்த்தார் அவர்..
"யாரம்மா நீ..?"
"என்னை தெரியலையா.. உங்ககிட்ட வேலை செய்றாரே விநாயகம் அவரோட பொண்ணு நான்..!!"
"அடடா..!!" வியப்போடு புருவங்களை உயர்த்தினார்.. "சின்ன வயசுல பார்த்தது..!! நல்லா வளந்துட்டே.. அதான் அடையாளம் தெரியல.." வாஞ்சையோடு பேசினார்.. தனக்கொரு மகள் இல்லையே என்ற ஏக்கம் எப்போதும் அவருக்கு உண்டு..
அவர் பேச்சில் இன்னும் அதிகமாக புன்னகைத்தாள் அன்பரசி.. "நீங்க சாமிகிட்ட வேண்டிக்கிட்டதை நான் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்.. கவலைப்படாதீங்க ஐயா.. கடவுள் நீ எப்பவும் நல்லவங்களை கைவிடமாட்டார்.. நடக்கிற எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லைன்னு அப்பா சொல்லி இருக்கார்.. அப்படிப்பட்ட நீங்க கோவிலுக்கு வந்தது கூட கடவுளோடு செயல்தானே... கடவுள் எதையோ உங்களுக்கு புரிய வைக்க நினைக்கிறார்.. அவர் நிச்சயம் உங்க வேண்டுதலை நிறைவேற்றுவார்.. மனசு கஷ்டப்படாம நம்பிக்கையோடு இருங்க.." அவள் தேறுதலான வார்த்தைகளில் நெஞ்சம் நெகிழ்ந்தார் ஆச்சார்யா..
"பரவாயில்லை மா.. உன்னோட அப்பா உன்னை ரொம்ப நல்லாவே வளர்த்திருக்கார்..!! எவ்வளவு அன்பா அனுசரனையா பேசுற.. நீ வாழ போற குடும்பம் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்..!!" அடி மனதிலிருந்து வந்தன வார்த்தைகள்..
"கோவிலுக்கு வந்துட்டு விபூதி குங்குமம் வைக்காம போனா எப்படி.. எடுத்துக்கோங்க..!!"
என்று தன் கையிலிருந்த குங்குமத்தை அவரிடம் நீட்ட விரலில் தொட்டு நெற்றியில் இட்டுக்கொண்டார் அவர்..
"அப்போ நான் வரேங்க.. ஐயா.." அவள் விடைபெற்று சென்றுவிட.. கோவிலுக்கு வந்த மன நிம்மதியோடு.. ஒரு நல்ல பெண்ணிடம் பேசிய இனிமையான தருணமும் சேர்ந்து கொண்டதில் தன் வேண்டுதல் கடவுளின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தார் ஆச்சார்யா ..
மருத்துவர் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லியபோது உடனடியாக அவர் நினைவலைகளில் தோன்றிய பெண் அன்பரசி தான்..
"என்னைக்குமே கோவிலுக்கு வராத நீங்க.. அதிசயமா இன்னைக்கு கடவுளை தேடி வந்ததுக்கு ஒரு காரணம் உண்டு.." அவள் சொன்னதன் அர்த்தம் இப்போது விளங்கியது..
தான் ஆறுதலாய் சொன்ன வார்த்தைகள் தன் தலையிலேயே இடியாக வந்து விழும் என்று தெரிந்திருந்தால் அன்பரசி அவர் பக்கம் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டாள்.. காலச்சக்கரத்தை மாற்றவா முடியும்..
அன்பான மென்மையான பிரியமான கணவனை எதிர்பார்த்த அவள் கனவுகளில் தீ வைக்கும் விதமாக முரட்டு தோற்றத்தோடு குருஷேத்ரா வந்து நின்றான்..
அன்பரசி அன்பே உருவானவள்.. மென்மையானவள்..
அதற்கு முற்றிலும் எதிர்மறையான குணங்களைக் கொண்டவன் குருக்ஷேத்ரா.. மூர்க்க குணம் கொண்டவன்.. அன்பின் அர்த்தம் அறியாதவன்.. இதயங்களின் பாஷை புரியாதவன்..
எதிரெதிர் காந்த முனைகள் ஈர்க்கப்படும் அறிவியல் தத்துவம் வாழ்க்கைக்கு சரிப்பட்டு வருமா..?
தொடரும்..

Last edited: