- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
பணக்கார குடும்பத்தில் வாழ்க்கை பட வேண்டும் என்றோ செல்வந்தனுக்கு மனைவியாக வேண்டும் என்றோ அன்பரசி ஒரு நாளும் ஆசை கொண்டதில்லை.. கூடுதலோ குறையோ மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க ஆண்மகனுக்கு மனைவியாக வாழவும் ஆட்சேபனை ஒன்றும் இல்லை ..!!
ஆனால் அவள் எதிர்பார்ப்பதெல்லாம் அதீத காதல்.. அளவு கடந்த நேசம்.. யார் வம்பு தும்புக்கும் போகாத மென்மையான குணமுடைய ஆண்.. அவன் இதழ்கள் எந்நேரம் புன்னகைக்க பழகியிருக்க வேண்டும்.. அம்மு புஜ்ஜி என்ற கொஞ்சல்களும்.. செல்ல சிணுங்கல்ளோடு காதல் பேச்சுகளும்.. சின்ன சின்ன ஊடலும் உடலை துன்புறுத்தாத கூடலும் என நிறைய கனவுகள் உண்டு.. அவனுடனான தருணங்கள் இனிமையாக கழிய வேண்டும்.. முத்தங்களில் கூட பூவும் பூவும் மோதிக் கொள்ளும் மென்மை வேண்டும்.. என்ற அவள் ஆசைகள் அத்தனைக்கும் மாறுபட்டவன் இந்த குருக்ஷேத்ரா.. அவனைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அடி வயிறு கலங்குகிறது..
எத்தனையோ முறை நட்ட நடு சாலையில் ஈவு இரக்கமின்றி எவனோ ஒருவனை அடித்து துவைக்கும் போது பார்த்து உடல் நடுங்க அங்கிருந்து அலறியடித்து ஓடியிருக்கிறாள் அன்பரசி..
அடிதடி வெட்டு குத்துக்கும் அவளுக்கும் ஏக தூரம்.. இது மாதிரியான ரத்தம் தெறிக்கும் காட்சிகளை பார்த்து விட்டால் அன்று முழுவதும் மனம் பேதலித்தவள் போல் ஊண் உறக்கமின்றி தவிப்பாள் அன்பரசி.. நாளைக்கு பத்து பேரை புரட்டி எடுக்க விட்டால் அவனுக்கோ சோறு இறங்காது.. இருவரின் பொருத்தமும் இப்படி..
குணங்கள்தான் வெவ்வேறு மாதிரியானவை என்றால் பெயரிலும் பொருத்தம் இல்லை.. குருக்ஷேத்ரா- அன்பரசி.. போர்க்களத்தில் பூக்குவியல் போல் மென்மையும் வன்மையுமாக எதிரெதிர் திசை..
"ஏன்டி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு உன் தலையில நீயே மண்ணை வாரி போட்டுக்கிட்டியே..!! அவனோடு உன்னால வாழ முடியுமா.. அவன் நரகாசுரன் டி.. அவன் அப்பா எவ்வளவோ பரவாயில்லை.. நல்லது கெட்டது தெரிஞ்சவர்.. நியாயத்துக்காக போராடக் கூடியவர்.. ஆனா இவன்.. நீதிக்கும் அநீதிக்கும் பேதம் தெரியாதவன்.. கண் முன்னாடி நிக்கிறவன் நல்லவனா கெட்டவனான்னு யோசிக்கக்கூட மாட்டான்.. கோபம் வந்தா மூர்க்கத்தனமா எதிரே நிக்கிறவங்களை வெட்டி போடுவான்.."
"அன்னைக்கு ஒருநாள் நம்ம பக்கத்து தெரு காசியை அந்த ரவுடி பைய அடிச்சு காலை உடைச்சுட்டான்னு தட்டிக் கேட்க போன அவன் பொண்டாட்டியை என்ன செஞ்சான்னு உனக்கு தெரியும் தானே..!! பாவம் வயித்துல எட்டி உதைச்சு அந்த பொண்ணால ரெண்டு நாள் எழுந்துக்கவே முடியல.. நெஞ்சில ஈரமே இல்லாத அரக்கன்.. அவனை போய் கல்யாணம் செஞ்சுக்க உன் அப்பா கிட்ட சம்மதம் சொல்லி இருக்கியே..!! என் ஈரக்குலையெல்லாம் நடுங்குதுடி.." சொல்லும்போதே கீதாவின் குரல் தழுதழுத்தது..
"அம்மா எல்லாம் கை மீறி போயிடுச்சு.. இதுல நான் தடுக்க என்ன இருக்கு.." அன்பரசியின் ஸ்ருதியில்லாத பதில்..
"நான் ஒருதடவை உன் அப்பா கிட்ட பேசுறேன்டி.."
"வேண்டாம் இனி எனக்காக அப்பா கிட்ட பேசி நீ வாங்கி கட்டிக்க வேண்டாம்.. என் தலையெழுத்துபடி என்ன நடக்குதோ நடக்கட்டும்.. இத்தோட விட்டுடு.." அவள் முடித்துவிட்டாள்..
அன்று ஆச்சார்யா தன் மகன் குருஷேத்ராவோடு விநாயகத்தின் வீட்டிற்கு வந்திருந்தார்..
வேண்டா வெறுப்பாக புலம்பலோடு மகளை அலங்கரித்துக் கொண்டிருந்தாள் கீதா..
"எப்படியெல்லாம் என் மகளை வளர்த்தேன்.. இப்படி போய்.."
"அம்மா போதும்.. அன்னைக்கே சொல்லிட்டேன் இனி இதைப் பத்தி பேசி புலம்ப வேண்டாம்னு.. கொஞ்சம் வாயை மூடறியா..!!" மகளின் காட்டமான குரலில் மூக்கை உறிஞ்சிக் கொண்டு அதோடு பேச்சை நிறுத்தினாள் கீதா..
"கீதா.. மகளை அழைச்சிட்டு வா.." விநாயகம் வந்து குரல் கொடுத்து விட்டு செல்ல.. "ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.." முணுமுணுப்போடு இரண்டு தேநீர் கோப்பைகளை தட்டில் அடுக்கி.. அவளிடம் கொடுத்து வெளியே அழைத்து வந்தாள் கீதா..
அன்பரசி வெளியே வருவதை கண்டதும் முகம் மலர்ந்தார் ஆச்சார்யா.. அதற்கு எதிர்ப்பதமாக சோபாவின் பின்னால் சுவற்றில் சாய்ந்து இங்கு நடக்கும் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் ஜன்னலின் வழியே வெளி உலகை பார்த்தபடி நின்றிருந்தான் குருக்ஷேத்ரா..
"வாம்மா.. என் மருமகளே.." கணீர் குரலில் அன்போடு அழைக்கவும்.. சிரிக்க முயன்றவளாக தட்டை தன் கரங்களால் இறுக பிடித்தபடி அருகே வந்து தேநீர் கோப்பையை நீட்டினாள் அவள்.. அவர் எடுத்துக் கொண்ட பின்.. "மாப்பிள்ளைக்கும் கொடும்மா.." விநாயகத்தின் தேனில் தடவிய வார்த்தைகளை தொடர்ந்து குருவின் அருகே வந்த தேநீர் கோப்பையை நீட்டியபடி மெல்ல நிமிர்ந்தாள்..
இப்போதுதான் அவனை மிக அருகில் பார்க்கிறாள்.. இதுவரை எட்ட நின்று அவனை கண்டு அலறி அப்படியே ஓடித்தான் பழக்கம்.. அவனைக் கண்டு ஆயிரம் பேர் அலறி தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள்.. அதில் இவளையா அவன் பார்த்திருக்க போகிறான்..
கருநிற சட்டையும் ப்ளூ நிற ஜீன்ஸும் பரட்டை தலையும்.. லேசான தாடியும் கடுமையான சிவப்பேறிய விழிகளும்.. நிக்கோட்டின் உதடுகளும்.. சட்டை காலரை ஏற்றிவிட்டு அவன் நின்ற தோரணையும்.. என எந்த கோணத்தில் பார்த்தாலும் அவனை பிடிக்கவில்லையே..!!
சினிமாக்களில் கூட ஹீரோக்கள் தாதாக்களாக ரவுடிகளாக வரும் படங்களை பார்க்க விரும்ப மாட்டாள்.. நிஜ வாழ்க்கையில் தந்தை இப்படியா தனக்கொரு வரனை தேடித் தர வேண்டும்.. அவன் தோற்றத்தை கண்டு நொந்து போனாள் அன்பு..
தேநீர் கோப்பை நீட்டியவுடன்.. "வேண்டாம்.." நிமிர்ந்தும் கூட பார்க்காமல் ஒரு வார்த்தையோடு முடித்து விட்டான். .. தட்டிலிருந்த அந்த தேநீர் கோப்பையுடன் அவன் நேரடியாக பேசியதை போல் தோன்றியது..
"எடுத்துக்க தம்பி..!!" ஆச்சார்யா சொன்ன பிறகு தேநீர் கோப்பையை எடுத்தவன் அவள் நகர்வதற்குள் ஏதோ மதுக் கோப்பையை வாயில் சரித்துக் கொள்வது போல் தேநீரை மடமடவென வாயில் ஊற்றிக் கொண்டு வெறும் கோப்பையை அவள் தட்டில் டம்மென வைக்க.. நல்லவேளையாக அவன் வேகத்திற்கு தட்டை கீழே தவற விடப் போனவள் எப்படியோ சுதாரித்து அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.. கண்கள் அவனை திகிலோடு பார்க்க அவனோ கண்டுகொண்டான் இல்லை..
நகர்ந்து சென்று அன்னையின் அருகே நின்று கொண்டாள் அன்பரசி..
"தம்பி வந்து இங்க உட்காரு.." ஆச்சார்யா அழைத்த அடுத்த கணம் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான் அவன்..
குருக்ஷேத்ராவிற்கு இந்த சூழ்நிலை சற்றும் பொருத்தம் இல்லை என்பதை அவன் முக பாவனை தெளிவாக உணர்த்தியது..
தொடையில் முழங்கையை ஊன்றி இரு கைகளை கோர்த்தபடி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தவனை
"பொண்ணை நிமிர்ந்து பாருப்பா.." என்றார் ஆச்சார்யா..
நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தவன் மீண்டும் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டார்..
என்ன மாதிரியான பார்வை இது.. எவ்வளவு யோசித்தும் விளங்கவில்லை அவளுக்கு.. பார்வையில் ரசனையோ அல்லது காதலோ ததும்ப வேண்டுமென்ற அவசியமில்லைதான்.. எப்படிப்பட்ட ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணை பார்க்கையில் அவன் கண்களில் தெரியும் தடுமாற்றம்.. உடல் மொழியில் தோன்றும் மாற்றங்கள்.. குறைந்தபட்சம் மெலிதான புன்னகை.. எதையும் கண்டறிய முடியவில்லையே..
அப்பா பார்க்கச் சொன்னார் நான் பார்த்தேன் அவ்வளவுதான் என்பது போல் ஒரு பார்வை.. மரம் கூட காற்றில் அசையும்.. மனிதன் தானே இவன்..!! எரிச்சலாக வந்தது அவளுக்கு.. அவள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவனாய் இருந்தால் பரவாயில்லை.. எதிர்பாராததை செய்து அவளை ஸ்தம்பிக்க வைத்தான் இவன்..
"குரு உன் கழுத்துல இருக்குற செயினை கழட்டி என் மருமக கழுத்துல போடு.." ஆச்சாரியாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எழுந்தவன் தன் கழுத்திலிருந்த கனமான தங்கச் சங்கிலியை கழற்றி அவள் காதுகளை விரலால் அழுத்தமாக தேய்த்தபடி தங்கச்சங்கிலியை அணிவித்த வேகத்தில் மிரண்டு போனாள் அன்பரசி.. அவள் கழுத்தில் வேறு குருவின் விரல் மோதிரம் கீறியதில் "ஸ்ஸ்ம்ம்மா.." என்று லேசாக முனங்க.. விழிகளை நிமிர்த்தி பார்த்தவனிடம் எந்த மாற்றமும் இல்லை..
மென்மையின் அர்த்தம் அறியாதவனா இவன்.. சாதாரணமாக செயினை அணிவிப்பதில் கூட ஏன் இத்தனை மூர்க்கத்தனம்.. காயம் ஏற்பட்ட கழுத்தை விரலால் ஸ்பரிசித்தபடி வினோதமான பார்வையால் அவனை ஊடுருவியதை கண்டுகொள்ளாமல் ஆச்சார்யாவின் அருகே வந்து அமர்ந்தவன்.. "அப்பா போகலாம்" என்றான் நெருப்பில் அமர்ந்திருப்பது போல்..
"இரு தம்பி.. மத்த விஷயங்களையும் பேசி முடிச்சிடலாம்.. அதுக்குள்ள என்ன அவசரம்" என்றவர் விநாயகத்திடம் "கல்யாண தேதி முடிவு பண்ணிட்டு நீங்களே தகவல் சொல்லுங்க.. மண்டபம் பாக்கறது.. உங்க முறைப்படி கல்யாணத்தை நடத்துவது.. சொந்தக்காரங்களை அழைக்கிறது எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கலாம்.. கல்யாண செலவு மட்டும் எவ்வளவுன்னு சொல்லிடுங்க.. நான் பணம் கொடுத்துடறேன்.." என்று விநாயகத்திடம் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசிக்கொண்டிருக்க எதிலும் நாட்டமில்லாமல் எழுந்து மீண்டும் ஜன்னலருகே சென்று நின்றவன் சில கணங்களில் எதையோ கண்டு கண்களில் வெறியேறி அதி வேகமாக வாசலை கடந்து வெளியேறியதில் அனைவரின் பார்வையும் அவன் மீது பதட்டத்தோடு படிந்தது..
"குரு.. குரு.." ஆச்சார்யா குரல் எழுப்பிக் கொண்டே அவன் பின்னால் நடக்க.. அதற்குள் சாலைக்கு வந்தவனை கண்டு யாரோ ஒருவன் முகம் வெளிறி ஓட ஆரம்பித்திருந்தான்..
"குருக்ஷேத்ரா..!! வந்த இடத்தில் வேண்டாம்.." அப்பாவின் மிரட்டல் அவன் காதுகளில் ஏறவில்லை.. இரண்டே எட்டுக்களில் ஓடியவனை எட்டிப் பிடித்து.. ஓங்கி அவன் விட்ட குத்துக்களில் முகத்தின் வடிவம் மாறி குருதிபுனல் கமல்ஹாசன் போல் ரத்த கிளறியாகிப் போனது..
தலையில் கை வைத்து இதழ் குவித்து ஊதியப்படி நின்றிருந்தார் ஆச்சார்யா..
விநாயகம் சங்கடத்தோடு மனைவி மகளை பார்க்க.. கீதா நெஞ்சில் வைத்து கண்ணீரோடு அழுது கொண்டிருந்தாள்.. அன்பரசி ஸ்தம்பித்த பார்வையோடு உறைந்து நின்றிருந்தாள்..
குருவின் தாக்குதல் தாங்காமல் கீழே மயங்கி சரிந்தான் அடிவாங்கியவன்.. அப்போதும் விடாமல் ஆவேசத்துடன் ஓங்கி எட்டி உதைக்கப் பார்த்தவனை .. "நான் பாத்துக்கறேன்.. குரு நீ போ.." என்று அவனோடு வந்த ஆட்கள் தடுக்க முயன்று கொண்டிருக்க பெருங்கோபத்தோடு திமிறியவனை அடக்க முடியவில்லை..
"குரு..!! காற்றைக் கிழித்து கொண்டு வந்த அந்த ஒற்றை வார்த்தை அவனை சிலையாக நிற்க வைத்தது..
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு இறுகிய முகத்தோடு வேகமாக வந்தார் ஆச்சார்யா..
"போகலாம்" அவர் காரில் முன் இருக்கையில் ஏறிக்கொள்ள.. அடுத்த கணம் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து காரைக் கிளப்பியிருந்தான் அவன்..
இனி எதையும் மாற்ற இயலாது.. கழுத்தில் செயினை போட்டு நிச்சயதாம்பூலம் முடித்த பிறகும் இன்று குருஷேத்ரா நடந்து கொண்ட முறையில் அழுது ஒப்பாரி வைத்தாள் கீதா..
"போதும் நிறுத்துறியா.. அவன் ரவுடின்னு இன்னைக்கு தான் உனக்கு தெரியுமா..!! எல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே.. திரும்பத் திரும்ப அழுது ஒப்பாரி வைக்காதே..!! என் பொண்ணு சம்மதிச்சுட்டா இந்த கல்யாணம் நிச்சயம் நடக்கும்.. செயினை போட்டு திருமணத்தை உறுதி செஞ்சாச்சு.. இனி எதையும் மாற்ற முடியாது புரிஞ்சுதா.." விநாயகம் பலமாக குரல் உயர்த்தியதில் அவள் அழுகை அடங்கிப் போனது.. தன் அறையில் உறக்கமின்றி சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தாள் அன்பரசி..
கண்களில் வெறியோடு எதிரே நின்றவனை இரத்தம் சொட்ட சொட்ட முஷ்டியை மடக்கி தொடர்ந்து ஓங்கி குத்திய காட்சி கண் முன் வந்து போனது.. அது கரமா அல்லது இரும்பு உலக்கையா.. இத்தனை வலிமை இந்த மனிதனுக்கு தேவை தானா.. புலிக்கு பற்களையும் நகங்களையும் கொடுத்தது வேட்டையாடுவதற்காக.. சிறுத்தையின் வேகம் இறையை ஓடி பிடிப்பதற்காக.. பாழாய் போன இவனுக்கு இதற்காக இத்தனை வேகமும்.. பலமும்.. அதிலும் வலது கரத்தால் ஓங்கி அடிக்கும்போது புஜத்தில் சட்டை கிழிந்து அந்த நரம்புகள் முறுக்கேறி.. ரத்த துளிகள் அங்கே தெறித்து விழுந்ததை எண்ணி விழிகளை அழுத்தமாக மூடித் திறந்தாள் அன்பரசி.. "இனி என்னிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது.." இடுப்பில் கரம் வைத்து கடோர்கஜனாய் அவன் குரூரரமாய் சிரிப்பது போல் தோன்றியதில் மிரண்டு போர்வைக்குள் பதுங்கினாள் அன்பரசி..
மறுநாள் மாலையில் டெய்லரிடம் தைக்க கொடுத்த தன் சுடிதாரை வாங்குவதற்காக கடை தெருவுக்கு சென்றவளை தடுத்து நிறுத்தியது அவன் குரல்..
"அன்பு.." அவள் விரும்பும் மென்மையான அழைப்புதான்.. ஆனால் சலிப்பாகவே குரல் வந்த திசையில் திரும்பினாள்..
"இன்னும் என்ன வேணும் உனக்கு..?"
"நான் சொன்னதை இன்னொரு முறை நல்லா யோசிச்சு பாரு.." கெஞ்சலாகவே கேட்டான் முரளி.. அவளிடம் தன் காதலை விண்ணப்பித்து விட்டு விடை தெரிந்த பிறகும் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருப்பவன்.. அவன் மீது அன்பரசிக்கு பெரிதாக எந்த அபிப்ராயமும் கிடையாது.. ஏனோ அவன் மீது எந்த ஈர்ப்பும் வரவில்லை.. சொல்லப்போனால் அவன் காதலிக்கும்படி வற்புறுத்தி தன்னை தொல்லை செய்வதில் எரிச்சல் அடைந்திருந்தாள் அவள்..
"இங்க பாரு முரளி.. எனக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு.. கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆகப்போகுது..!! உன் நேரத்தை வீணாக்காதே..!!"
"ப்ளீஸ் நீ இல்லாம என்னால வாழ முடியாது அன்பு..!!"
"ப்ச்.. உன்கிட்ட பேசறதே வேஸ்ட்.." அவள் அங்கிருந்து நகர முற்பட.. "அன்பு.. எனக்கு பதில் சொல்லாம நீ இங்கிருந்து நகர முடியாது.."
அவள் கரத்தை இறுகப்பற்றி இருந்தான் முரளி.. கோபத்தில் முகம் சிவந்தாள் அன்பரசி..
"முரளி மரியாதையா என் கையை விடு.. அப்புறம் நடக்கிறதே வேற.." அவனிடம் இருந்து தன் கரத்தை உருவிக் கொள்ளப் போராடினாள்..
"முடியாது எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு போ.."
"நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே.. எனக்கு உன்னை பிடிக்கல.." அன்பரசி அவனோடு போராடிக் கொண்டிருக்க..
"யார் இவன்..?" கரடு முரடான குரலில் திடுக்கிட்டு குரல் வந்த திசையில் திரும்பினாள் அவள்.. இருவருமே நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் நின்றிருந்தான் குருக்ஷேத்ரா.. அவன் பார்வை முரளி இறுக பிடித்திருந்த அவள் கரத்தின் மீது..
"அது.. இவன்.." திக்கி திணறியவள் குருஷேத்ராவிடமிருந்து முரளி தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடு அவனை அப்புறப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்தாள்..
"முரளி இங்கிருந்து போ.." அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லி பற்களை கடித்தாள்..
"அந்தப் பொண்ணு உனக்கானவ குரு.. அவளை விட்டுடாதே..!!" ஆச்சார்யாவின் வார்த்தைகள் ஆழமாக அவன் நெஞ்சில் பதிந்திருக்க.. அவள் கைப்பற்றி நின்றிருந்தவனை தலை சாய்த்து பார்த்தான் அவன்..
கடைத்தெருவில் உள்ளவர்கள் தங்களை தான் பார்க்கிறார்களா என்று நெஞ்சம் படபடக்க அன்பரசி சுற்றும்முற்றும் பார்த்த வேளையில் "அம்மாஆஆஆ.. ஆஆஆஆ.." பெரும் அலறலில் உடல் குலுங்கி திரும்பினாற்..
அவன் கரத்தை முறுக்கி உடைத்திருந்தான் குரு.. ரப்பர் டியூப் போல் எலும்புகள் உடைபட்டு நொறுங்கிய நிலையில் அகோரமான அவன் கையின் நிலை கண்டு ஜீரணிக்க முடியாதவளாக கண்கள் இருட்டிக் கொண்டு வந்ததில் அன்பரசி மயங்கி அவன் மார்பின் மீது சரிய அவளை தோளில் தூக்கி போட்டுக் கொண்டு வழியில் வலியோடு முனகிய படி புரண்டு கொண்டிருந்த முரளியை எட்டி உதைத்து தூர தள்ளிவிட்டு தனது டாட்டா சுமோவை நோக்கி நடந்தான் குருக்ஷேத்ரா..
தொடரும்..

Last edited: