- Joined
- Jan 10, 2023
- Messages
- 59
- Thread Author
- #1
குரு சாப்பிட அமர்ந்தான்.. அவனுக்கு தட்டை வைத்து உணவுகளை கடை பரப்பி.. ஒவ்வொன்றாக பரிமாறினாள் வடிவாம்பாள்.. வெகு நாட்களாக இங்கே தான் சமையல்காரம்மாவாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.. அறுபது வயது நிரம்பிய அவரை பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் ஆச்சாரியா தான் பராமரித்து வருகிறார்..
உணவைப் பிசைந்து ஒரு வாய் உண்டவன் முகத்தை சுழித்தான்..
"என்ன ராசா.." தனது கரத்தை கண்களுக்கு மேல் குடை போல் வைத்து விழிகளை சுருக்கி பார்க்க.. பாட்டியை முறைத்தவன் தட்டை தூர வீசி எறிந்திருந்தான்.. வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.. உணவில் உப்பு காரம் சுவை குறைவு என்றால் இப்படித்தான் வீசி எறிவான்.. எத்தனை காலங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறார் வடிவாம்பாள்..
பல நேரங்களில் அவனுடன் பாசமாக பேச முயன்று தோற்றுப் போயிருக்கிறார்.. "ராசா என் கண்ணு" எனும்போது ஒரு பார்வை தான் பார்ப்பான்.. பாட்டிக்கு விழி பிதுங்கும்..
இன்று உணவோடு தட்டை வீசியெறிந்து விட்டு அவன் எழுந்து சென்றுவிட .. "போடா போ" இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சண்டித்தனம்னு பார்க்கறேன்.. பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா.. உப்பில்லாத தண்ணி சோறும் சக்கரையா சப்புகொட்டி சாப்பிடறதை பார்க்கத்தானே போறேன்.." ஆற்றாமை தாங்காமல் பாட்டி புலம்பி தள்ளினாள்..
வீட்டில் குளிர் ஜுரம் கண்டு படுத்திருந்தாள் அன்பு.. கண்களுக்குள் முரளியின் கையை அவன் உடைத்த நிகழ்வு ரிப்பீட்டட் மோடில் வந்து போனது..
உலகையே சுடுகாடாக்கிவிட்டு பிரம்ம ராட்சசனாய் பிணங்களின் நடுவே நின்று அவன் கொக்கரித்து சிரிப்பதைப் போல் நெஞ்சை பிழியும் கனவொன்று வந்ததில்..
"அம்மாஆஆஆஆ.." தலையணையில் முகம் புதைத்து முனகினாள்.. கீதா பதறி அவளை எழுப்பினாள்..
"என் செல்லமே.. இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல உயிரை வெறுத்து இந்த கல்யாணத்தை பண்ணிக்கணும்னு என்னடி அவசியம்.. உன் அப்பா கிட்ட கூட ஒரு மாற்றம் தெரியுது.. இப்ப நான் அவர்கிட்ட போய் பேசினா கல்யாணத்தை நிறுத்துறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு.. போய் பேசட்டுமா தங்கம்.." மகளின் தலையை தடவி கொடுத்து அனுமதி வேண்டி நின்றாள் கீதா..
தன் கரம் பற்றியவனுக்கே அந்த நிலை என்றால் நிச்சயம் முடிந்து கல்யாணத்தை நிறுத்த முயற்சித்தால் தன் தாய் தந்தைக்கு என்ன கதி நேரும் என்ற நிகழ்வு கண்முன் காட்சியாக வந்து போனதில் தேகம் நடுங்கி "ஆஆஆஆ.. அம்மா.." என அலறினாள் அவள்..
"அய்யோ.. அன்பு.. என்னடா என்ன ஆச்சு.." தாய் உள்ளம் பதறியது.. அன்னையின் பதட்டத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு..
"ஒ.. ஒன்னும் இல்ல.. நீ எதையும் தடுக்க வேண்டாம் இந்த கல்யாணம் நடக்கட்டும்.. இப்படியே விட்டுடுங்க.. அப்ப சொன்னது தான் இப்பவும்.." என்றாள் அவள் சுதாரித்துக் கொண்டு..
"அன்பு.."
"எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு.. நான் ஓய்வெடுத்துக்கிறேன்.."
அவள் திரும்பி படுத்துக் கொள்ள..
"இனி மகளின் மனதை மாற்ற முடியாது" என்ற ஏமாற்றத்தோடு பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் கீதா..
தன் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய பிரளயமாக அன்பரசி தள்ளிப் போட விரும்பிய திருமண நாளும் வந்து சேர்ந்திருந்தது..
மணமேடையில் இறுகிய கற் சிலையாக அமர்ந்திருந்தான் குரு.. "சார் கொஞ்சம் சிரிங்க" என்று போட்டோவிற்கு போஸ் குடுக்க சொன்னவன் குரு காட்டிய பாவனையில் வெலவெலத்து போனான்..
முகத்தில் ஒளியிழந்த போதும் அழகரசியாக பட்டுடுத்தி அருகே வந்து அமர்ந்தவளை அவன் பார்த்த பார்வையில் ஒரு பொருளும் இல்லை..
"பொண்ணு ரொம்ப அழகா இருக்கே.. இந்த ரவுடிப் பயலுக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா..!! விநாயகம் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.. கிளியை வளர்த்து பூனை கையில் கொடுத்தா பரவாயில்லை.. வெறி பிடிச்ச புலிக்கிட்டே ஒப்படைக்கிறானே..!!" கூட்டத்தின் நடுவே வயிற்றெரிச்சலோடு சலசலப்பு..
ஓரக்கண்ணால் அவனை ஏறெடுத்து பார்த்தாள் அன்பரசி.. பெரிதாக எந்த மாற்றமும் இல்லை.. கரடு முரடான முகத்தில் சிரைக்காத தாடி.. திருத்தப்படாத மீசை.. எப்போதும் ஜ்வாலையை கக்கும் சிவந்த வழிகள்.. கருப்பு சட்டைக்கு பதிலாக வெண்ணிற சட்டையும் பட்டு வேட்டியும் அணிந்திருந்தான். அவ்வளவுதான் மாற்றம்..
"ஏய்.. இன்னும் எவ்வளவு நேரம் இந்த புகை மூட்டத்தில் உட்கார்ந்து இருக்கணும்.. சீக்கிரம் மந்திரம் சொல்லு.." வெட்டருவாளை விழுங்கிய குரலில் வந்த மிரட்டலில் ஐயருக்கு வேர்த்து போனது..
தாலி கட்டுகிறேன் என்று புஜத்தால் வளைத்து அவள் கழுத்தை நெறித்தான்.. "இப்படி கட்டுங்கோ அம்பி.." என்று ஐயர் செயல்முறை விளக்கம் காட்ட.. "ஏன் நீயே கட்டிடேன்.." தாலியை அவரிடம் கொடுத்து கண்களால் கொத்து பரோட்டா போட்டதில் நகர்ந்து அமர்ந்து கொண்டார் அவர்.. மஞ்சள் கயிறை அவள் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சிட்டான் குரு..
அக்னியை வலம் வருவதற்கு அவள் கையை இறுக பற்றிக்கொள்ள.. "வலிக்குது.. வலிக்குது.." என்று கண்கள் கலங்கியவளின் குரல் அக்னியில் கருகிப் போனது..
திருமண பந்தம் ஆரம்பிப்பதற்கு முன் திருமண வைபவமே வலியில்தான் துவங்கியது..
"அவங்க கால் விரலில் மெட்டி போட்டு விடுங்க.." என்று சொன்னதை தொடர்ந்து "இவ காலை நான் தொடனுமா.." குரு அவளைப் பார்த்த பார்வையில் அன்பரசிக்கு முதுகு தண்டு சில்லிட்டு போனது..
"தம்பி அவர் சொன்னதை செய்ப்பா.." ஆச்சார்யா சொன்ன பிறகு அவள் காலை படக்கென இழுத்தான்..
"அம்மா.." கீழே விழுவது போல் தடுமாறி குனிந்து அவன் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.. மிஞ்சியை அவள் விரல்களில் அணிவிக்க.. அன்பரசிக்கு உயிர் போய் உயிர் வந்தது..
"எல்லாம் முடிஞ்சது இல்ல..?" மாலையை கழட்டி போட்டு விட்டு வெள்ளை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டு கொண்டு வேட்டியை மடித்து கட்டியவன் மண்டபத்தை விட்டு வெளியேற முயன்றான்..
"குரு.. பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ.." ஆச்சார்யாவின் வார்த்தைகளை மதிக்காதவனாக இறுகிய முகத்துடன் அப்படியே நின்றான்.. சில கட்டளைகளை கடவுளை விதித்தாலும் அவன் கேட்பதில்லை..
நீண்ட பெருமூச்சோடு "சரி உன் பொண்டாட்டி கை பிடிச்சு கூட்டிட்டு போப்பா.." இது கேட்கும்படியான வார்த்தைகள் என்பதால் விடைபெற்றுக் கொள்வதற்காக அன்னை தந்தையிடம் நகரப் போனவளின் கரத்தைப் பற்றியவன் கசாப்பு கடை ஆட்டை இழுத்துச் செல்வது போல் தரதரவென அவளை இழுத்துச் சென்றான் என்று தான் சொல்ல வேண்டும்.. அவன் வேகத்திற்கு அன்பரசியால் நடக்க முடியவில்லை.. கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக சென்ற போதிலும் கால்கள் இடறி நடை தடுமாறியது..
"மெதுவா போங்க என்னால நடக்க முடியல.." குரல் அவள் காதுகளுக்கே கேட்கவில்லை..
"ஐயோ பாவம் அந்த பெண்ணை எப்படி இழுத்துட்டு போறான் பாரேன்.. இவன் கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடுபட போறாளோ.." மக்கள் கூட்டத்தின் அனுதாப அலைகள் அவளை சுற்றி சுற்றி தாக்கியது..
"ஏறு.." காரின் முன்பக்கம் தள்ளினான் அவளை.. மோதாமலிருக்க கார் கண்ணாடியில் கைகளை பதித்து நின்றாள் அவள்.. கரங்களை கார் கண்ணாடியில் வைத்த வேகத்திற்கு உள்ளங்கை சிவந்து போயிருந்தது..
டாட்டா சுமோவின் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர்ந்து கொள்ள.. பின்பக்க கதவை திறந்தவளுக்கு "முன்னாடி வா..!!" என்ற ஆக்ரோஷ குரல் தேகத்தை அதிர வைத்தது.. முன்பக்கம் ஏறி அமர்ந்தாள் அன்பரசி..
அங்கு நடப்பவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆச்சார்யா.. கவலையோடு நீண்ட பெருமூச்செடுத்து அன்பரசியின் பெற்றவர்களை பார்க்க அவர்களோ முகத்தில் கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்..
விநாயகத்தின் கரம் பற்றினார் ஆச்சார்யா..
"கவலைப்படாதே விநாயகம்.. ஆரம்பத்துல அப்படித்தான் இருப்பான்.. உன் மகள் கிட்ட அன்பா நடந்துக்கணும்னு நான் அவனுக்கு புத்தி சொல்றேன்.. நிச்சயமா மாறிடுவான்.." ஆறுதல் வார்த்தைகளில் இருவருக்குமே நம்பிக்கை விட்டுப் போயிருந்தது..
"மகளை ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன்.. நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டுதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கா.. உங்களை நம்பித்தான் என் மகளை கொடுத்தேன்.. பத்திரமா பாத்துக்கோங்க அய்யா.." விநாயகம் கண்கலங்கினார்.. வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை..
சுமோவை வீட்டினருகில் நிறுத்திய குரு இறங்கி அவள் கரம் பற்றி கொண்டு வேகமாக நடந்தான்..
"குரு ஆரத்தி எடுத்த பிறகு தான் உள்ளே போகணுமாம்.." அவன் சகா ஒருவன் வந்து வழிமறித்தான்..
"போடா மயி*" மனைவியை இழுத்துக் கொண்டு உள்ளே செல்லப் போனவன்.. "அப்பா சொல்லி இருக்காரு" என்ற வார்த்தையில் வாசலோடு நின்றான்..
பாட்டி ஆரத்தி சுற்றி இருவரையும் உள்ளே அழைத்துக் கொண்டாள்.. அன்பரசியின் கரத்தை விடவே இல்லை அவன்..
"ராசா ரெண்டு பேருமா உன் ஊஞ்சலில் உட்கார்ந்து பால் பழம் சாப்பிடுங்களேன்.." என்ற பாட்டியை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து சென்றவன் "உன் அப்பா சொல்ல சொன்னாரு.." என்ற வார்த்தையில் நின்று பாட்டியை முறைத்தான்.. கோபத்தில் அன்பரசியை பற்றியிருந்த கரம் இறுகியது..
இருவருமாக ஊஞ்சலில் அமர.. பால் பழம் கொடுக்கப்பட்டது.. அவன் கடித்த மீதி பழத்தை உண்ணவோ.. மிச்ச பாலை அருந்தவோ கொஞ்சமும் பிடிக்கவில்லை.. "குடி கண்ணு.. சாப்பிடு கண்ணு.." என்ற பாட்டியை தயக்கத்தோடு பார்த்திருக்க.. திரும்பி அவன் பார்த்த பார்வையில் பாலும் பழமும் அவள் வயிற்றை நேரடியாக சரணடைந்திருந்தது..
அந்நேரம் ஆச்சார்யாவும் வீடு வந்து சேர்ந்திருந்தார்..
"நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடும்மா.. வடிவம்மா பிள்ளையை கூட்டிட்டு போங்க.. பாட்டிக்கு உத்தரவிட்டவர் தம்பி நீ என் கூடவா..!!" என்று குருவை தனியே அழைத்துச் சென்றார்..
பின் பக்கம் கொல்லைப்புறத்தில்.. வேப்ப மரத்தடியில் போட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் அவனோடு சென்று அமர்ந்தவர்.. சில கணங்கள் மௌனமாக தான் இருந்தார்.. அவனும் என்ன ஏதென்று கேட்க வில்லை..
"தம்பி.."
"அப்பா.."
"அந்தப் பிள்ளையை உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சது நீயும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமா வாழ்வதை பார்க்கத்தான்.. சீக்கிரம் உன் அப்பனை தாத்தனாக்கிடு.."
"சரிப்பா.."
"குழந்தைன்னு ஒன்னு வந்துட்டா மனசுக்குள்ள நிறைய மாற்றங்கள் வரும்.. குழந்தைக்காக ஏதாவது செய்யணும்னு தோணும்.." குரு பதில் பேசவில்லை.. இவ்வளவுதான் ஆச்சார்யாவின் அதிகபட்ச அறிவுரை..
தாம்பத்தியம் என்பது இருவரின் புரிதலோடு மட்டுமே நிகழும் என்று நினைத்து விட்டார் போலும்.. மகனைப் பற்றி புரிந்தவர் மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று இன்னும் ஆழமாக அறிவுரை சொல்லி இருக்கலாம்.. ஆனால் குடும்பம் குழந்தை.. என்ற இரு வார்த்தைகளில் அவன் சம்சாரியாகிவிட்டால் சகல பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு விடுவான் என்று நினைத்துதான் அபத்தம்.. லஷ்மியிடம் தான் மென்மையாக நடந்து கொண்டது போல் தன் மகனும் மருமகளிடம் அன்பாக நடந்து கொள்வான் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்..
இதே அவர் இடத்தில் லஷ்மி இருந்திருந்தால் அன்பரசியின் பக்கத்திலிருந்து யோசித்து மேலும் நிறைய அறிவுரைகளை கொடுத்திருப்பாரோ என்னவோ..
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எழுந்தான் அவன்..
"எங்க குரு போற.."
"முக்கியமான பஞ்சாயத்துப்பா.. முடிச்சுட்டு வந்துடுறேன்.."
"இன்னைக்குதான் தம்பி உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு.. ஒரு நாள் இதுக்கெல்லாம் லீவு விடலாமே..!!"
"என்னால முடியாதுப்பா.. செய்ய வேண்டிய வேலையை அப்படியே போட்டுட்டு வந்தா எனக்கு தூக்கம் வராது.. வெறி பிடிக்கும்.."
"சரிப்பா போயிட்டு வா.. ரொம்ப வன்முறையை காட்ட வேண்டாம்.. யாராயிருந்தாலும் சும்மா வாயால மிரட்டிட்டு விட்டுடு.."
"முயற்சி பண்றேன்.."
"இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதே தம்பி.. உனக்காக ஒரு பொண்ணு காத்திருப்பா.. நினைவிருக்கட்டும்.."
"சரிப்பா.." என்ற வார்த்தையோடு வெளியேறினான்..
"எங்க பையன் ரொம்ப முரடன் தான்.. நானும் அய்யாவும் அவனை திருத்த எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டோம்.. முடியல.. ஆனால் அவர் அப்பாவால என்னால சாதிக்க முடியாததை உன்னால் நடத்திக் காட்ட முடியும்.. தலையணை மந்திரத்துக்கு கட்டுப்படாத ஆம்பளைங்களே இந்த உலகத்தில் கிடையாது.. ராவுல உன் சாமர்த்தியத்தை காட்டி அவனை மடக்கி போட்டுடு.. இனி அவன் அடிதடி பக்கமே போகக்கூடாது.. உன்கிட்டயே மயங்கி கிடக்கணும் புரிஞ்சுதா.. அவன் என்ன செஞ்சாலும் மறுப்பு சொல்லாதே.. அவன் சொன்னபடி கேளு.." பாட்டியின் அறிவுரையில் அன்பரசிக்கு மயக்கம் வராத குறை.. இரவு நெருங்க நெருங்க நெஞ்சம் படபடவென வேகமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.. இப்படியே வீட்டுக்கு ஓடி விடலாமா என்றொரு எண்ணம்.. இரவு முழுக்க அவனோடு தான் இருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க பார்க்க தேகத்திற்குள் குளிர் பரவியது..
"பயந்தால் எப்படி அன்பரசி..? இனி இதுதான் உன் வாழ்க்கை.. என்னை தினம் தினம் அவனை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் அவன் தான் உன் கணவன்.. பழகிக் கொள்.." முயன்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்..
அறை மொத்தமும் மலர்களால் ஜோடிக்கப்பட்டிருந்தது.. எளிமையான காட்டன் சில்க் புடவையும்.. லேசான ஒப்பனையும் மல்லிகை சரமும் சூடி படுக்கையில் அமர்ந்திருந்தாள் அன்பரசி..
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன் அன்பரசியை தேடி கண்டு கொண்டான்.. எச்சில் விழுங்கியபடி அவனை பார்த்தவளுக்கு இதயம் ஒரு கணம் நின்று துடித்தது..
அவன் வெள்ளை சட்டை முழுக்க ரத்தக்கறை.. உயிருக்குள் அச்சம் பரவ.. அவள் தலை கிறுகிறுவென சுற்றியது..
சட்டை பட்டன்களை கழட்டியபடியே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் அவன்..
சட்டையில் ரத்த கறையோடு அவனை பார்த்து கோலத்தை எண்ணி பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி அமர்ந்திருந்தாள் அன்பரசி..
வெற்று மேனியும் ட்ராக் பேண்ட்டுமாக வெளியே வந்தான் அவன்..
கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள் அன்பரசி..
"அப்பா.. நம்ம இரண்டு பேரையும் குழந்தை பெத்துக்க சொல்லி இருக்காங்க.. படு.." என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவனிடமிருந்து இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்..
"ப்ச்.. உன்னை படுக்க சொன்னேன்.." அவள் நெஞ்சில் கை வைத்து தள்ள படுக்கையில் விழுந்திருந்தாள் அன்பரசி..
பதறிக்கொண்டு அவள் எழுந்து கொள்ள முயன்ற வேளையில் அவள் தொடையில் ஏறி அமர்ந்திருந்தான் அவன்.. கட்டியிருந்த சேலையும் பாவாடையும் இடுப்பிற்கு மேல் ஏறியிருந்ததில்
என்ன நடக்கப் போகிறது என்று அவள் உணர்வதற்கு முன் நேரடியாக தாக்குதலில் இறங்கியிருந்தான் அவன்..
பெண் தேகத்தின் மீது ஈடுபாடு இல்லை.. மனைவி மீது ரசனை இல்லை.. குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு கடமையாக நினைத்து.. சலிப்போடு அவளுள் உட்புகுந்தான்..
இப்படி செய்தால் அவளுக்கு வலிக்கும் என்று கூட அவனுக்கு தெரியவில்லை.. வாய்விட்டு அலறினால் எங்கே அடித்து விடுவானோ என்ற பயத்தோடு பற்களை இறுக கடித்து வலியை பொறுத்துக் கொண்டு தலையணையில் முகம் புதைத்தாள் அன்பரசி.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவளை விட்டு விலகினான் அவன்..
மூச்சு வாங்கிய படி கண்கள் உருள படுத்திருந்தவன் என்ன நினைத்தானோ.. மீண்டும் நெருங்கி அவளை ஆட்கொண்டான் அதே வழியில் அவள் வலியோடு.. அன்பரசியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்ததை அவன் விழிகள் பார்க்க தவறியிருந்தது.. அன்பரசி துவண்டு போயிருந்தாள்.. அவள் வெளித்தோற்றதில் எந்தவித மாற்றமும் இல்லை.. வஸ்திரங்கள் விடுதலையாகவில்லை விலகி இருந்தது அவ்வளவே.. ஆனால் உட்புறம் சேதாரம் அதிகம்..
இரு தேகங்களும் பின்னி கொள்ளவில்லை.. இதழில் முத்தமிட்டு கொள்ளவில்லை.. பார்வையால் துகிலுரித்து அவளை ரசிக்கவில்லை.. ஆனால் தாம்பத்தியம் கசப்பாய் அரங்கேறியிருந்தது அங்கே..!!
வாயை பிளந்த நிலையில் கண்ணீரோடு உறங்கிப் போயிருந்தாள் அவள்..
தொடரும்..

Last edited: