Active member
- Joined
- Jul 31, 2024
- Messages
- 27
ஓஓஓஓஓஓஓஓ கவித கண்ணுல கஞ்சா பொடி காட்டன் கவுந்தேட்டே இருக்கான் கொஞ்சம் கொஞ்சமாக 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭"என்ன வழக்கம் போல தூக்கி வீசிட்டு போய்ட்டானா இந்த ரவுடிப் பைய.. என்ன அருமையா சமைச்சாலும் இவனுக்கு பிடிக்க மாட்டேங்குதே.. புது பொண்டாட்டியோட சமையல் ருசியை அனுபவிக்கத் தெரியாம நாக்கு செத்து போய் கிடக்கறானே பாவி.." வடிவு புலம்பிக் கொண்டே கீழே சிதறியிருந்த உணவு துணுக்குகளை சுத்தம் செய்தாள்.. அத்தனை கனவுகளும் நிராசையாகி போனதில் மிஞ்சிய ஏமாற்றத்துடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சமையலறையின் சுவற்றின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருந்தாள் அன்பரசி..
பாத்திரம் உடையும் சத்தம் கேட்டு வேகமாக வந்த ஆச்சார்யாவும் நடந்த கூத்துக்களை பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்த பாட்டியை "அமைதியாக இரு.." என்று கண்ணைக் காட்டி விட்டு அங்கிருந்து சென்றிருந்தார்.. மருமகளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை அவருக்கு..
அடுத்த ஒரு மணி நேரத்தில் சமையல் அறையை விட்டு வெளியே வந்த அன்பரசியை "அம்மா.. அன்பு.." கனிவோடு அழைத்து நிறுத்தியவரை வலுக்கட்டாயமாக புன்னகைத்து பார்த்தாள் அவள்..
"தன் மகனோட வாழ்க்கைக்காக உன் வாழ்க்கையின் நாசம் பண்ணிட்டதா என்னை தயவு செஞ்சு தப்பா நினைச்சுடாதம்மா.. அன்பே உருவான உன் பார்வை பட்டா கூட போதும்.. அவன் நிச்சயமா மாறிடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆரம்பம் எவ்வளவு கசப்பா இருந்தாலும்.. போகப்போக உங்க வாழ்க்கை இனிமையாக இருக்கும்.. அவன் சுட்ட மண்ணு இல்ல.. குழைஞ்ச மண்ணு.. உன்னோட அன்புக்கு அவன் கட்டுப்படுவான்னு தோணுது.. என் மகனை மீட்டுக் கொடுக்க வந்த தெய்வமா உன்னை நினைக்கிறேன்.. எப்படியாவது அவனை மாத்திடு தாயே..!! எக்காரணம் கொண்டும் அவனை பிரிஞ்சு மட்டும் போயிடாதே.. சத்தியமா உன் வாழ்க்கையை பாழாக்க நான் நினைக்கல.. அப்படி நான் செஞ்சதா நீ நினைச்சா என்னை மன்னிச்சிடும்மா.. உன் கால்ல விழறேன்" என்று ஊஞ்சலிலிருந்து ஆச்சார்யா குனிந்து அவள் காலை தொடப் போக நெஞ்சம் பதறி விலகினாள் அன்பரசி.. இதயத்துடிப்பு ஒரு கணம் நின்று போனது.. எத்தனை பெரிய மனிதர் தன் காலில் விழுவதா..?
"அய்யோ மாமா.. என்ன இது.. பெரியவங்க நீங்க என் கால்ல போய் விழுந்துக்கிட்டு.. முதல்ல எழுந்து கம்பீரமா உட்காருங்க.. நீங்க எந்த தப்பும் செய்யல.. முதல்ல இப்படி கண் கலங்கறதை நிறுத்துங்க..!! அவள் சொன்னதை கேட்டு விழிகளை துடைத்துக் கொண்டு இரு கைகளையும் ஊஞ்சலில் ஊன்றிய படி விழி தாழ்ந்து அமர்ந்திருந்தார் அவர்..
"உங்க மேல எனக்கு நிறைய மதிப்பு மரியாதையும் உண்டு.. கல்யாணத்துக்கு முன்னாடி எனக்குள்ள ஆயிரம் குழப்பங்கள் இருந்தது உண்மைதான்.. ஆனா கல்யாணத்துக்கு பிறகு இது என்னோட வீடு.. அவர் என்னோட புருஷன்.. அப்படிங்கிற எண்ணத்திலதான் என் வாழ்க்கையை தொடங்கி இருக்கேன்.. உண்மையை மறைச்சு யாரும் ஏமாற்றி ஒன்னும் என்னை கல்யாணம் பண்ணி வைக்கல.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் அவருக்கு பொண்டாட்டியா தாலி கட்டிக்கிட்டேன்.. நீங்க கவலைப்படாதீங்க.. முடிஞ்ச அளவு அவரை மாத்த முயற்சி செய்வேன்.. அப்புறம் கடவுள் விட்ட வழி.. நம்பிக்கையோடு இருங்க மாமா.." சொன்னவளை நன்றி பெருக்கோடு பார்த்தார் அவர்.. மருமகளிடம் பாவ மன்னிப்பு கேட்டதில் பாரம் ஓரளவு குறைந்து இனி மகன் பற்றி கவலை கொள்ள தேவையில்லை என்ற நிம்மதியோடு விழிகள் மூடித் திறந்தார் அவர்..
மதியம் பாட்டியோடு காய்கறிகள் வாங்க கடைத்தெருவுக்கு சென்றிருந்தாள் அன்பரசி.. காய்கறி மார்க்கெட்டின் பெரிய நுழைவாயிலில் தனது வாகனத்தின் மேல் புகை பிடித்தபடி அமர்ந்திருந்தான் குருக்ஷேத்ரா.. அவன் கூட்டாளிகள் சிலர் அழுக்கு சட்டையும் படியாத தலையுமாக அவனோடு நின்றிருந்தனர்..
ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தவனை கண்டு திக்கென இதயம் அதிர்ந்த போதிலும் "இங்க என்ன செய்யறார் இவரு.." விழிகளில் கேள்வியோடு அவனைப் பார்த்தபடியே பல கடைகளை கடந்து சென்று அந்த பெரிய காய்கறி கடையில் நின்றாள் அன்பரசி.. அவன் பார்வையும் அரைவட்டமாக அவள் சென்று திசையெல்லாம் தொடர்ந்து பெண்ணவள் நின்ற திசையில் நிலைத்தது..
"பாட்டி இவரு இங்க என்ன செய்றாரு..?" கிசுகிசுப்பான குரலில் வடிவு காதை கடித்தாள்..
"போலீஸ்காரங்க.. இல்லன்னா ரவுடி பயலுங்க யாராவது கடைக்காரங்க கிட்ட மாமுல் கேட்டு பிரச்சனை செய்வாங்க.. நம்ம தம்பியை வாசல்ல பார்த்துட்டா போதும் யாரும் இந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்டானுங்க.. மார்க்கெட் காரவுங்களுக்கு ஒரு பாதுகாப்பு.." பாட்டி பெருமையாக சொல்ல..
"என்னது போலீஸ்காரங்க கூட இவருக்கு பயப்படுவாங்களா.?" கண்களை விரித்தாள் அன்பரசி..
"பின்ன இல்லையா..? யாரு என்னன்னு ஆள் பார்த்து அடிக்கிறவனா உன் புருஷன்.. கண்ணு மண்ணு தெரியாம கை காலை உடைக்கிறவன்.. இருந்த இடத்திலேயே எல்லாத்தையும் கழிச்சிக்கிட்டு ஆறு மாசத்தை ஆஸ்பத்திரிக்கு தாரவாத்து கொடுக்க இங்க யாரும் தயாரா இல்ல.."
"போலீஸ்காரங்களை அடிச்சா ஜெயில்ல போட மாட்டாங்களா..!!"
"அடுத்த நிமிஷமே அய்யா வெளியே எடுத்துடுவாரு.. அவருக்கு தெரியாத ஆளுங்களே கிடையாது.."
"ம்ம்..அவர் கொடுக்கிற தைரியத்துல தான் இந்த மனுஷன் கேட்க ஆளில்லாம இப்படி ஆடுறாரு.. நாலு நாள் ஜெயில்ல போட்டு லாடம் கட்டியிருந்தா இந்நேரம் புத்தி வந்திருக்கும்.." பேசிக் கொண்டே பிஞ்சு கத்திரிக்காய்களாக பார்த்து பொறுக்கினாள் அன்பு..
"போட்டாங்களே..!! ஐயா அப்படியும் செஞ்சுதான் பார்த்தாரு.." வடிவு சொன்னதில்
"அச்சோ.. அப்புறம் என்ன ஆச்சு.." ஆர்வமும் அதிர்ச்சியும் அவள் கண்களில்..
"காவல்துறைக்கு புத்தி வந்திருச்சு.. சேதாரத்துக்கு பணத்தை ஐயா கிட்ட வாங்கிட்டு ராசாவை சகல மரியாதையோடு வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க.." வடிவு சொல்ல களுக்கென சிரித்தபடி ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி பார்க்க கழுகு போன்ற இரையை கொத்தி தின்னும் பார்வையுடன் வாய்வழியே புகைவிட்டபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் குருக்ஷேத்ரா.. இதயத்தில் திகிலடித்துப் போக சட்டென திரும்பி கொண்டாள் அன்பு..
காய்கறிகள் வாங்கி முடித்து கூடையோடு இருவருமாக பேசிக் கொண்டு நடக்க.. சுமோவின் பேனட்டிலிருந்து எகிறி குதித்தவன் அதிவேகத்தில் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்..
"ஐயோ பாட்டி இவர் ஏன் இவ்வளவு வேகமா வராரு.." வெலவெலத்துப் போனாள் அவள்..
"தெரியலையே கண்ணு..!!" பிசிறு தட்டிய பாட்டியின் குரல் மேலும் நடுங்கியது..
அதிவேகத்தில் பிரேக்கில்லாமல் வரும் வாகனம் போல் ரௌத்திர விழிகளோடு முழங்கை வரை சட்டையை ஏற்றிவிட்டு கொண்டு அவர்களை நெருங்கியீருக்க.. மோதி சட்னியாக விரும்பாமல் இருவரும் ஆளுக்கொரு திசையில் ஒதுங்கிவிட இருவரையும் கடந்து சென்றிருந்தான் அவன்..
"இதோ பாரு.. உனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அதுக்காக.. எனக்கு சேர வேண்டிய வட்டிய தராம இருந்தா அப்புறம் நடக்கிறதே வேற.. அப்புறம் காசி பொண்ண தூக்கிட்டான் பொண்டாட்டிய தூக்கிட்டான்னு வந்து புலம்பி நிக்க கூடாது.." எதிரே நின்றவன் அலட்சியமாக சொல்ல..
"அசலுக்கு மேல மூணு மடங்கா வட்டி கட்டியாச்சு..!! இன்னமும் வட்டியை கூட்டிகிட்டே போறது எந்த விதத்தில் நியாயம்.." என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் கடைக்காரர் ஒருவர்..
"நான் என்ன பண்ணட்டும் மருது.. அசலுக்கு போட்டியா வட்டியும் அசையாம அப்படியே நிக்குதே.. காலம் பூரா என்கிட்ட கடனை கட்டணும்னு உனக்கு விதி.. கொடுக்கும்போது பத்திரத்தை படிச்சு பாக்கணும்னு சொன்னேனே நீ தான் கேட்கல.." அவன் கழுத்தை சொறிந்தான்..
"எனக்கு எழுதப் படிக்க தெரியாதுங்களே..!!"
"அது உன் தப்பு.."
"இப்படி அநியாய வட்டி போட்டு ஏழைங்க ரத்தத்தை உறிஞ்சறியே..!! இதெல்லாம் உனக்கே அநியாயமா படலையா.. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. உனக்கெல்லாம் நல்ல சாவே வராது" சேர்த்து வைத்திருந்த ஒட்டுமொத்த கோபத்தை ஆங்காரமாக கொட்டி தீர்த்தார் மருது..
கோபத்தில் கன்ன சதைகள் ஆடியது காசிக்கு.. "ஆஹான்..நான் நல்லா இருக்க மாட்டேனா. சரிதான்.. வாங்கும்போது இனிக்குது.. கடனை திரும்ப கட்டும் போது வேப்பங்காயா கசக்குதா.. என்கிட்ட குரலை உயர்த்தி பேசிட்டு நீ உயிரோட இருந்துருவியா.." காய்கறி கூடைகளை பறக்கவிட்டு சுவற்றோடு ஒட்டிநின்ற மருதுவை அவன் நெருங்கும் முன் அவன் கழுத்தை பற்றி வெளியே இழுத்து போட்டிருந்தான் குரு..
"நம்ம ராசாவோட முரட்டுத்தனத்துக்கு இவனுங்க தான் சரியான தீனி.." வடிவு சிரித்துக் கொண்டே சொல்ல இவளுக்கு தான் அவன் தாக்குதலை பார்த்துவிட்டு அடிவயிறு கலங்கியது.. முரட்டுத்தனமாக பொன்னம்பலத்தை விட பல்க்காக இருந்த காசி சுருண்ட பாம்பாக எதிர்க்க இயலாமல் அத்தனை அடி வாங்கினான் நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்திலேயும் மூர்க்கத்தனம் ஊறிப் போன ஒருவனால்தான் இப்படி அடிக்க முடியும்.. மூளை பஞ்ச் டயலாக் சொன்னது.. காசியின் அடியாட்களும் நொறுக்குத் தீனியாக வாங்கி கட்டிக்கொண்டு தலை தெறிக்க ஓடிப் போயிருந்தனர்.. ஒவ்வொரு அடியிலும்.. முஷ்டியை மடக்கி ஓங்கி குத்தும்போதும் இவள் உடல் துள்ளியது.. வடிவு கைதட்டி விசிலடிக்காத குறை.. நியாயமான அடிதடி என்பதால் யாரும் அவனை தடுக்கவில்லை.. காசி அத்தனை பேர் ரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் பண முதலை என்பதால் அவன் அடிவாங்கியதில் ஆதாயமடைந்த பலர் டிக்கெட் வாங்காத குறையாக அக்காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.. சினிமாவில் தான் இது போன்ற சண்டை காட்சிகளை பார்த்து பழக்கம்.. நிஜத்தில் ஏடாகூடமாக முடியைப் பற்றி அசிங்கமாக அடித்துக் கொண்டு உருளுபவர்களைத்தான் பார்த்திருக்கிறாள்..
எதிராளி தாக்க முடியாதவாறு இப்படி நேர்த்தியாக சண்டையிட முடியுமா.. ரசிங்கிறாளா.. மிரளுகிறாளா அவளுக்கே தெரியவில்லை..!!
சரஸ்வதி சபதத்தில் கல்வியா செல்வமா வீரமா என்ற கேள்விக்கு விடை சொல்வதாக படம் நகரும்.. அதுபோல் கடவுள் இவனுக்கு கல்வி செல்வம் அன்பு அனைத்தையும் பற்றாக்குறையாக்கி.. அறிவு மழுங்கிப் போகும் அளவிற்கு வீரத்தை மட்டும் தலை முதல் கால் வரை நிறைத்து வைத்திருக்கிறார் என்றுதான் தோன்றியது அந்நேரம்..
காசியை இரண்டு பேர் கை தாங்கலாக அழைத்துச் செல்ல.. அந்த இரண்டு பேருக்கும் பின்பக்கம் மிதி.. அவன் உதைத்த வேகத்தில் மூன்று பேருமாக போட்டி போட்டு வேகமாக சென்று மண்ணை கவ்வினர்..
இக்காட்சியில் அங்கிருந்த அனைவரும் சத்தம் போட்டு சிரிக்க காசியின் மனதிற்குள் அவமானத்தின் வலியில் குரோதம் பெருங்கடலாக உருவெடுத்தது.. கண்கள் சிவந்து வன்மத்தை சத்தமில்லாமல் உள்தேக்கிக் கொண்டான் அவன்..
சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு அன்பரசியிடம் வந்தான் குரு..
"எல்லாம் வாங்கியாச்சா.."
"ஹ்ம்ம்.. ம்ம்.." தொண்டைக்குள் எச்சில் விழுங்கினாள் அன்பு..
அப்போதுதான் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தான் குரு.. மை தீட்டிய பெரிய விழிகள்.. குடை போல் அடர்த்தியான இமை முடிகள்.. வில் போல் வளைந்த புருவம்.. மருட்சியாக மூடித் திறந்த அந்த கண்களை பார்த்துக் கொண்டே இருக்க தோன்றியது..
முரட்டுத்தனமாக அவள் கன்னங்களைப் பற்றி தன் பக்கம் இழுத்தான் அவன்..
"என்ன.. என்ன ஆச்சு.." அங்கிருந்தவர்கள் பார்வை ஒரு சேர அவள் மேல் மொய்த்ததில் கூசி போனாள் அன்பரசி..
"கண்ணுக்குள்ள கஞ்சா பொடி தூவி இருக்கியா..!! யார்கிட்ட வாங்கின..!! அந்த பழனியா இல்ல சங்கரா..? உனக்கு இந்த பழக்கம் எல்லாம் வேற இருக்கா.." ஓநாய் போல உறுமி பற்களை கடிக்க பயந்து போனாள் அவள்..
என்ன பேசுகிறான் என்று புரிந்தால் தானே பதிலளிக்க முடியும்.. கண்ணுக்குள்ள யாராவது கஞ்சா பொடி தூவ முடியுமா.. என்ன கேள்வி இது.. பதில் சொல்லவும் வழியின்றி அவன் அழுத்தி பிடித்ததால் குவிந்த உதடுகளோடு போராடிக் கொண்டிருந்தாள் அன்பு.. அவள் மனம் புரியாமல் அன்பரசியின் கண்களுக்குள் ஊன்றி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் குரு..
"ராசா.. அந்தப் பிள்ளையை விட்டுடுங்க.. அவளுக்கு அந்த மாதிரி பழக்கமெல்லாம் கிடையாது.. ரொம்ப நல்ல பொண்ணு.. விட்டுடுங்க தம்பி பாவம்.." வடிவு அவன் கையைப் பற்றி கெஞ்சவும்.. யோசனையுடன் அவளை உதறி தள்ளினான் குரு.. "நேத்து அடிச்ச சரக்கு தான் என்னை சுழட்டி எடுக்குது போலிருக்கு.." கண்களை உருட்டி மீண்டும் ஒருமுறை உற்றுப் அவளை பார்த்தவன்.. "வா வீட்ல விட்டுடறேன்.." என்று முன்னால் நடக்க பெண்கள் இருவரும் அவன் பின்னே ஓடினர்..
குரு தன் சிகப்பு சுமோவில் ஏறி அமர்ந்து கொள்ள.. அவன் பக்கத்தில் அமர்ந்தாள் அன்பரசி.. பின்பக்கம் அமர்ந்து கொண்டாள் வடிவு..
இடப்பக்கம் அவன் நெற்றியின் ஓரம் கீற்றாக வடிந்த இரத்தத்தை அப்போதுதான் கவனித்தவளாக.. "அய்யோ.. ரத்தம்.." அவள் தன் சேலைத் தலைப்பை எடுத்து அவன் நெற்றியின் ஓரம் காயத்தில் ஒற்றினாள்..
"ஏய் தள்ளு.." அவள் கரத்தை தட்டி விட்டான் அவன்..
"ர.. ரத்தம்.." தவிப்பாக சொன்னவளை கடுமை குறையாத விழிகளுடன் ஒரு பார்வை பார்த்தவன் புறங்கையால் காயத்தை அழுத்தி துடைத்துக் கொள்ள.. ஸ்ஸ்ஸ்.. அவளுக்குத்தான் வலித்தது..
"உங்களுக்கு.. வலிக்கலையா..!!" மனம் தாளாமல் அவள் கேட்டு விட..
"வலியா.. அப்படின்னா..?" கண்கள் சுருக்கி தீவிர குரலோடு கேட்டவன்.. மீண்டும் அவள் கன்னம் பற்றி அந்த கண்களை சந்தேகத்தோடு பார்த்துவிட்டு ஒன்றும் புரியாதவனாய் சுமோவை கிளப்பி இருந்தான்..
தொடரும்..