- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
வாசற்படி திண்ணையின் மீது கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் கண்ணகி..
"அண்ணி.." என்றபடி அவளருகே வந்து அமர்ந்து கொண்டாள் வஞ்சி..
"இப்ப காய்ச்சல் எப்படி இருக்கு" என்றபடி கண்ணகியின் கழுத்தில் கை வைத்து தொட்டுப் பார்த்தாள்..
"ம்ம்.. இப்ப கொஞ்சம் பரவாயில்லை," என்று சொன்னபோதும் வார்த்தைகள் சோர்வாக வந்து விழுந்தன..
"உங்களுக்கு தான் முடியலயே.. நீங்க போய் தூங்குங்க.. அண்ண வந்தா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.." வஞ்சி இப்படி சொல்லவும்.. வெறுமையாக சிரித்தாள் கண்ணகி..
"எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசலாமா..! இந்த மாதிரி நேரத்துல அவர்கிட்ட இருந்து வாங்கி கட்டிக்க என் உடம்புல சுத்தமா தெம்பு இல்லடிம்மா.."
வஞ்சியின் முகம் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது..
"அண்ணா நான் எது சொன்னாலும் கேட்கும்.. ஆனா சில விஷயங்கள்ல மட்டும் தன்னை மாத்திக்கவே மாட்டேங்குது.. என்ன செய்யறதுன்னே தெரியல.." என்றாள் கவலையாக..
கண்ணகியின் கண்கள் வஞ்சியின் முகத்தை நோக்கி கூர்ந்தன..
"ஏன் நீ கூட தான் சில விஷயத்தில உன்னை மாத்திக்கவே மாட்டேங்குற..?"
எதைப் பத்தி பேசுகிறீங்க.. என்பதாக வஞ்சியின் பார்வை..!
"உன் புருஷன் விஷயத்துல கொஞ்சம் கூட மனசு வெக்க மாட்டேங்கறியே..!" என்றதும் வஞ்சியின் முகம் மாறிப்போனது..
"விடுங்க அண்ணி அதை பத்தி பேசாதீங்க.. அது முடிஞ்சு போன கதை..!"
"என்ன முடிஞ்சு போச்சு.. நான் இந்த விஷயத்தை பத்தி உன்கிட்ட பேசறது உன் அண்ணனுக்கு தெரிஞ்சாலே போதும் என்னை வெட்டி பொலி போட்டுடுவார்.. ஆனாலும் என்னால வாய மூடிக்கிட்டு சும்மா இருக்க முடியல.. ஒரு பொண்ணு அவ புருஷன் வீட்டில் இருந்தால் தான் மரியாதை..!"
"ஏன் அண்ணி நான் இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா..?"
"இப்படி எல்லாம் பேசி என் மனச கஷ்டப்படுத்தாதே வஞ்சி..! நீ உன் புருஷன் வீட்ல போய் சந்தோஷமா வாழனும் நானும் அத்தையும் அதுக்காக தான் போராடறோம்.. காலம் முழுக்க உன் அண்ணன் உன்னை ராணியா வச்சு தாங்கலாம்.. ஆனாலும் இருக்க வேண்டிய எடத்துல இருந்தா தான் நீ நிம்மதியா சந்தோஷமா இருப்ப.."
"ஏன்.. நான் நிம்மதியாத்தான் இருக்கேன்..!" வஞ்சி பார்வையை திருப்பிக் கொண்டாள்..
"பொய் சொல்லாதே வஞ்சி.. நீ தூங்கி எத்தன நாளாச்சு..?"
வஞ்சி அமைதியாக இருந்தாள்..
"ஏன் உன் உடம்ப இப்படி கெடுத்துக்கற வஞ்சி.. நீ உன் அண்ணனை வேணா ஏமாத்தலாம்.. ஆனா என்னை ஏமாத்த முடியாது.. உன் உடம்பு மட்டும்தான் இங்க இருக்குது.. உயிர் உன் புருஷனதான சுத்தி சுத்தி வருது.. தேவா அண்ணனும் உன்ன மாதிரிதான்.. நீ இல்லாம வாழ்க்கையை வெறுத்து தவிச்சு போய் கிடக்காரு தெரியுமா..? உன் புருஷன பத்தி அழகி அப்பத்தா கதை கதையா சொல்லி அழுவுது" என்றவள் அவள் கையைப் பற்றிக் கொண்டாள்..
"இந்த வீண் பிடிவாதத்தை விட்டுட்டு அவர் கூட வாழற வழியை பாரு வஞ்சி..!"
"நடந்தெல்லாம் உங்களுக்கு தெரியும்தான அண்ணி.. நீங்களே இப்படி பேசலாமா..?"
"இப்போ உன் மனசுல கோபம் இருக்குது.. அதனால இப்படி பிடிவாதமா நிக்கற.. இந்த கோபம் குறைஞ்சு.. நீ உன் புருஷனை தேடும் போது காலம் கடந்து போயிருக்கும்.. உன் நல்லதுக்காகதான் சொல்லுறேன்.. அப்புறம் உன் இஷ்டம்.." கண்ணகி சொல்லி முடிக்க இருவருக்குமிடையில் அமைதி நிலவியது..
வஞ்சி வருத்தம் தோய்ந்த முகத்துடன் அமைதியாக அமர்ந்திருக்க..
"கோவிலுக்கு போகணுமே நீ கிளம்பலையா.." பேச்சை மாற்றி அந்த மவுன திரையை உடைத்தாள் கண்ணகி..
"ஆமா அண்ணி.. குளிச்சிட்டு புறப்படனும்.. நீங்க வரவேண்டாம்.. உங்களுக்கு தான் உடம்பு சரியில்லையே..!" வஞ்சியும் இயல்பாகி இருந்தாள்..
"இல்ல பரவாயில்ல நான் வரேனே..!"
"வேண்டாம்.. பேசாம வீட்ல ஓய்வெடுங்க.. ஒரு சிவராத்திரிக்கு கண் முழிக்கலைன்னா ஒன்னும் குடி முழுகி போய்டாது.."
"வீட்ல இருக்கறதை விட கோவிலுக்கு வந்தாலே எனக்கு ஓய்வும் நிம்மதியும் கிடைக்குமே வஞ்சி.." கண்ணகி வாய்க்குள் முனங்கிக் கொண்டாள் வெளிப்படையாக சொல்லவில்லை..
"அண்ணி..?"
"ஒன்னும் இல்லைம்மா.. நான் துணைக்கு வரலைன்னா நீ யார் கூட போவ..! அத்தையும் உடம்பு முடியாதவங்க.. நாலஞ்சு வருஷமா சிவராத்திரிக்கு கண்ணு முழிக்கிறது இல்லையே.."
"அதான் பக்கத்து வீட்டு நந்தினி இருக்காளே.. அவ கூட போய்க்குவேன்.. நம்ம இடம்தானே ஊரே ஜெகஜோதியா வெளிச்சமாய் இருக்குது.. என்ன பயம் அண்ணி.."
"சரிதான்.. பார்த்து போயிட்டு வா.. அப்பறம் உங்க அண்ணனுக்கு பதில் சொல்ல முடியாது..!"
"நான் பாத்துக்கறேன்.. வேலன் எங்க..? தூங்கிட்டானா..!"
"ஆமா.. எனக்கு தான் காய்ச்சல் அடிக்குதே..! அதனால அத்தை அவனை என்கிட்ட வரவே விடல.. அவங்களே சாப்பாடு ஊட்டி தூங்க வச்சுட்டாங்க.. வேலனோட அப்பா வந்ததும் அவனை போய் தூக்கிட்டு வரணும்.. புள்ளைய பாக்காம உன் அண்ணனுக்குதான் தூக்கம் வராதே!"
"சரி.. வாட காத்தடிக்குது.. உள்ள போங்களேன் அண்ணி.. உள்ளார உக்காந்து கூட உங்க புருஷனுக்காக காத்திருக்கலாம்.. ஏன் வாசல்ல நிக்கலன்னு ஒன்னும் கடிச்சு தின்னுட மாட்டாரு.."
அதற்கும் கண்ணகியிடமிருந்து ஒரு புன்னகை மட்டுமே.. பல விஷயங்கள் வஞ்சிக்கு தெரிவதில்லை.. கண்ணகி அதையெல்லாம் தெரியப்படுத்தவும் விரும்பவில்லை..
"எனக்கு பொழுது போகல.. நான் இங்கேயே உட்கார்ந்து இருக்கேன்.. நீ போய் குளிச்சிட்டு கோவிலுக்கு புறப்படு.." என்ற பிறகு அவளை முறைத்தபடி நீண்ட பெருமூச்சை விட்டெறிந்தவள்.. நீங்க மாறவே மாட்டீங்க என்றபடி எழுந்து வீட்டுக்குள் சென்றாள்..
குளித்து முடித்து மார்பில் பூத்துண்டை கட்டியபடி வெளியே வந்தாள் வஞ்சி..
மர பீரோவை திறந்து இளம் பச்சை நிற பட்டுப்புடவையை எடுத்தவள்.. அப்படியே நின்று ஆழ்ந்த யோசனைக்கு பிறகு அந்த புடவையை வைத்துவிட்டு.. நகத்தை கடித்த படி தன்னிடம் இருந்த புடவை ரகங்களை நோட்டமிட்டாள்.. விழிகள் விரிந்து வானின் நீல நிற பட்டு புடவை மீது பார்வை நிலைத்தது..
இதழ் கடையோரம் புன்னகையோடு புடவையை எடுத்தவள் ஆசையோடு அதை உடுத்திக்கொண்டு.. நெற்றி வகுட்டில் குங்குமம் இட்டு மல்லிச்சரத்தை தலையில் சூடிக்கொண்டவள்.. அர்ச்சனை கூடையோடு வீட்டை விட்டு வெளியேறி வாசலில் அமர்ந்திருந்த அண்ணியிடம் சொல்லிக் கொண்டு.. இரண்டாம் வீட்டிலிருந்து வந்த நந்தினியோடு சேர்ந்து பாதையில் நடந்தாள்..
கண்ணபிரான் தங்கை என்பதைவிட தேவராயனின் மனைவி மீது கை வைப்பதென்ன.. தவறாக பார்ப்பதற்கும் அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.. அதிலும் இன்று சிவராத்திரிக்கு ஊர்ப் பெண்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு சென்று கொண்டிருப்பதால் வஞ்சியின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளாமல் கணவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள் கண்ணகி..
கண்ணபிரான் வந்து சேரும் வரை வாசலில்தான் அமர்ந்திருக்க வேண்டும்.. கூடத்தில் சென்று அமர்ந்து கொண்டாலோ வாசலில் கண்ணகி இல்லாமல் போனாளோ.. காது கொடுத்து கேட்க முடியாத பேச்சுக்களால் அவளை வறுத்தெடுப்பான்..
"வாசல்ல வந்து பத்து நிமிஷம் எனக்காக காத்திருக்க முடியலையோ.. சொகுசு பழகிப்போச்சு.. வேலைக்காரிங்கறது மறந்து போச்சு.. அதான் பொண்டாட்டி அதிகாரம் தூள் பறக்குது.. தப்பாச்சே.." என்று சில வருடங்களுக்கு முன்பு அவள் கையை வளைத்து பிடித்து முறுக்கியதில் இரண்டு நாட்கள் கையை தூக்கவே முடியவில்லை.. பல நேரங்களில் மன காயங்களையும் உள் காயங்களையும் கண்ணகி வெளியே சொல்லுவதில்லை..
பொழுது போகாமல் திண்ணையில் பெயிண்டால் வரைந்திருந்த கம்பி கோலத்தின் இழைகள் செல்லும் திசையில் தன் விரல் வைத்து கோடு வரைந்து கொண்டிருக்க Scorpio உள்ளே வரும் சத்தம் கேட்டது..
ஆசிரியர் முன்பு எழுந்து நிற்கும் மாணவி போல் புடவை முந்தானையை கையில் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றாள் கண்ணகி..
கார்க் கதவை அடித்து சாத்திவிட்டு இறங்கியவன் அவளை ஒரு பொருட்டாக மதியாமல் அப்படி ஒரு ஜீவன் அங்கு நிற்பதை கூட கண்டுகொள்ளாமல் விருவிருவென நடந்து உள்ளே சென்று விட்டான்..
அறைக்குள் நுழைந்தவன் அவள் கட்டிலில் எடுத்து வைத்திருந்த பூ துண்டையும் மாற்று உடைகளையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தான்..
வீட்டில் ஓய்வு நேரங்களில் வேட்டி சட்டைதான் அவன் பிரதான உடை..
உணவு மேஜையில் அவனுக்கான உணவை சூடு படுத்தி தயாராக எடுத்து வைத்திருந்தாள் கண்ணகி..
"வேலன் எங்கே..!" என்றபடி இருக்கையில் அமர்ந்தான்..
"அத்தை கிட்ட இருக்கான்..!" சொல்லிக்கொண்டே உணவை பரிமாறி இருந்தவள்.. சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தாள்..
உண்டு முடித்து தட்டிலேயே கை கழுவியவன்.. "வரும்போது வேலனை தூக்கிட்டு வந்துடு.." என்று விட்டு அறைக்கு சென்று விட்டான்..
மணி பத்தை தாண்டியிருக்க கண்ணகி வயிற்றில் பெருங்குடலும் சிறுகுடலும் ஐயோ அம்மா என்று அலறிக் கூப்பாடு போட்டது..
வேகமாக தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சோற்றை போட்டு குழம்பை ஊற்றிக்கொண்டு.. நின்ற மேனிக்கு அவசர அவசரமாக கவளத்தை வாயில் திணித்துக் கொண்டாள்..
"ஏய்..!" அவன் குரலில் வாயில் உணவுடன் கண்கள் தெறித்து நிலை குத்தி அவனைப் பார்த்து நின்றது..
"சீக்கிரம் வா..!" கடிகாரத்தை பார்த்துவிட்டு உள்ளே சென்றான்..
அப்படியானால் அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் உள்ளே வந்து விட வேண்டும் என்று அர்த்தம்..
ஏன் இப்படி அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததை போல் அவதிப்பட வேண்டும்.. அவன் வருவதற்கு முன்பாகவே உணவருந்தி விடலாமே என்று கேட்டால் அதுதான் நடக்காது..
பசியில் இரு குடல்களும் ஒன்றை ஒன்று தின்று தீர்த்து விட்டாலும் அவனுக்கு முன்பாக தன் பசியாற்றிக் கொள்வதெல்லாம் நடவாத காரியம்..
அவன் வருவதற்குள் கண்ணகி உணவருந்தி முடித்து விட்டாளென்று அந்த வீட்டில் வேவு பார்க்கும் விசுவாசிகள் யாரேனும் கண்ணபிரானிடம் சொல்லிவிட்டால் அதன்பின் அவள் அனுபவிக்க வேண்டிய சித்திரவதைகள் மரணத்தை விட கொடுமையானது..
"தின்னுட்டு தின்னுட்டு திணவெடுத்து அலைய சொல்லுதா..! நீ எனக்கு மட்டும்தான் முந்தானை விரிக்கிறேங்கறது உண்மைன்னா நான் சொல்ற வரைக்கும் சோத்துல கை வைக்கக்கூடாது.." என்று அடிமைக்கு ஆணையிடுபவன் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அப்படி ஒரு வார்த்தை சொன்னதையே மறந்து போயிருப்பானோ அல்லது அவளை உயிர் வரை வதைக்க திட்டம் போட்டிருப்பானோ தெரியாது..
உயிர் கூட்டை விட்டு பிரியும் நிலை வந்தும் கூட பிடிவாதத்தோடு தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உண்ண மறுப்பவளிடம்..
"ஏன்டி இப்படி உடம்ப வருத்திக்கற.. ஒருவாய் கஞ்சியாவது குடிச்சு கொஞ்சம் பசியாத்திக்க கூடாதா.. நாங்க யாரும் உன் புருஷன் கிட்ட சொல்ல போறது இல்ல.. நான் சொல்றதை கேளுடி.. இப்படியே பட்டினி கடந்து உசுர விட்டுறாத..!" பாக்கியம் அழுது மன்றாடி கேட்டாலும் ஒரு பலனும் இருப்பதில்லை..
அவனாக பாவம் பார்த்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாலே அன்றி.. அவள் தொண்டையில் ஒரு பருக்கை சோறு இறங்காது..
இப்போதும் பசியில் உணவை அள்ளி விழுங்கி கொண்டிருந்தவளிடம் இரண்டே நிமிடத்தில் அறைக்குள் வந்து விட வேண்டும் என்று கூறிவிட்டு சென்றிருக்க..
தட்டில் போட்டு வைத்திருந்த சோற்றை பரிதாபமாக பார்த்தவள் வாயிலிருந்ததை மட்டும் விழுங்கிவிட்டு.. மிச்சத்தைக் கொண்டு போய் வீட்டின் பின்பக்கத்தில் கட்டி போட்டிருந்த நாயின் தட்டில் வழித்து போட்டுவிட்டு வந்தாள்..
நாய்க்கு கிடைக்கும் சலுகையும் உரிமையும் கூட அவளுக்கு இல்லை என்பதை நிஜம்..
பாத்திரங்களை அவசரமாக ஒழித்து மித்தத்தில் போட்டுவிட்டு காலையில் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று நினைப்போடு விளக்கை ஒவ்வொன்றாய் அணைத்துவிட்டு மாமியாரின் அறைக்குள் வந்தாள்..
பேரனை கட்டி அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தார் பாக்கியம்.. அவரை எழுப்பி தொந்தரவு செய்ய விரும்பாமல் மகனை மட்டும் அலுங்காமல் தூக்கிக்கொண்டு அறைக்குள் நடந்தாள்..
அத்தனை பெரிய அறையின் நீள அகலத்தை அளவெடுப்பவன் குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தான் கண்ணபிரான்..
தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வந்தவளை ஒரு பார்வை பார்த்தவன்..
"தூங்கிட்டானா..!" என்றபடி பிள்ளையை தன் கையில் வாங்கிக் கொண்டான்..
தந்தையின் ஸ்பரிசம் பட்டதும்..
"ப்பா.." என்று தூக்கத்திலேயே முனங்கிக் கொண்டு அவனை கட்டிக்கொண்டு தோளில் சாய்ந்து கொண்டான் பொய்கை வடிவேலன்..
மகனின் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையை தோளில் சாய்த்துக் கொண்டு முதுகை தட்டிக் கொடுத்தபடி அங்குமிங்கும் நடந்தவன்.. ஆழ்ந்து உறங்கியிருந்த பிள்ளையை தன்னோடு படுக்க வைத்துக் கொள்ளாமல் பக்கத்திலிருந்து சின்ன கட்டிலில் படுக்க வைக்கும் போதே தெரிந்து விட்டது அடுத்து அவன் நோக்கம் என்னவென்று..
உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையின் தலையை தடவி சிறிது நேரம் அவன் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டிருந்தவன் பிறகு எழுந்து சட்டை பட்டன்கள் ஒவ்வொன்றாய் கழட்டிக்கொண்டே கண்ணகியின் அருகே வந்தான்..
"இன்னைக்கு சிவராத்திரி.."
"அதனால..?"
"தூங்காம சாமிக்கு விரதம் இருக்கனும்..!"
"நாதியில்லாத உன்னை மாதிரி பிச்சைக் கார கழுதைக்கு வாழ்க்க கொடுத்த நான்தான்டி உனக்கு சாமி.. முதல்ல எனக்கு அபிஷேகம் பண்ணு.. அப்புறம் சாமிய பாக்கலாம்" என்றவன் அவள் மார்புச் சேலையை எடுத்துவிட்டு நெஞ்சில் கை வைத்து கட்டிலில் தள்ளினான்..
காய்ச்சலின் களைப்பு.. பசியின் சோர்வு கண்ணகியை படாதபாடுபடுத்தியது.. வழக்கம்போல் இன்பத்தை தனதாக்கி கொண்டு வேதனையை மட்டுமே அவளுக்கு தந்தவன்.. முழு முற்றாக அவளில் மூழ்கி முத்தெடுத்த பிறகுதான் விலகினான்..
கூடல் முடிந்த அடுத்த கணம் கட்டிலிலிருந்து எழுந்து விட வேண்டும்..
இல்லையேல்.. "பஞ்சு மெத்த படுக்க சுகம் கேட்குதா பரதேசி நாயே.. ச்சீ போடி.." அவன் எட்டி உதைப்பதில் உருண்டு வந்து கீழே விழுவாள்..
அவசரமாக எழுந்து கீழே சிதறி கிடந்த தனது உடைகளை எடுத்து அணிந்து கொண்டிருக்க.. படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி ஒரு கையை தலைக்கு தந்து அவளின் பின் இடுப்பு.. அதன் கீழ் வனப்பு என ஒவ்வொன்றையும் பார்வையால் விழுங்கி கொண்டிருந்தான்..
"இன்னைக்கு சிவராத்திரின்னா அப்ப வஞ்சியும் முழிச்சிருக்காளா..?" என்றான் சந்தேகமாக..
"ஆ.. ஆமா.. வஞ்சி கோவிலுக்கு போயிருக்கா.."
"எ.. என்ன..?" விருட்டென்று எழுந்து நின்றான்..
"அது பக்கத்து வீட்டு நந்தினியோட கோவிலுக்கு போயிருக்கா..! வேண்டுதல் இருக்குன்னு சொன்னா..!" என்று முடிப்பதற்குள் ஓங்கி அறைந்திருந்தான்..
"அறிவு இருக்காடி உனக்கு..! அவளை தனியாவா அனுப்புன.. நான் கேட்டாதான் சொல்லுவியா..! வந்தவுடனே சொல்றதுக்கு என்ன கேடு வந்துச்சு உனக்கு..? சட்டையை போட்டுக் கொண்டே பற்களை கடித்தபடி அவளை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தவன்.. வழியில் நின்றிருந்தவளை வேகமாக தள்ளிவிட்டு.. அவசரமாக வெளியேறி இருந்தான்..
தொடரும்..

Last edited: