- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
"என்னடி உன் அண்ணி வரலையா..?" கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் வழியில் நந்தினி கேட்க..
"இல்ல..டி.. அவங்களுக்கு உடம்புக்கு சுகமில்லை.. அண்ணி வரேன்னுதான் சொன்னாங்க.. நான் தான் வேண்டாம்.. உடம்பை வருத்திக்காதிங்க படுத்து உறங்குங்கன்னு சொல்லிட்டேன்.." என்றபடி அவளோடு மண் சரிவில் இறங்கினாள் வஞ்சி..
"ஆமா அப்படியே உன் அண்ணி உறங்கி ஓய்வெடுத்துட்டாலும்.. உங்க வீட்டு ஆடு மாடு ஏன் காவ காக்குற நாய் கூட சும்மா தான் கிடக்குது.. ஆனா அந்த வீட்ல 24 மணி நேரமும் செக்கு மாடாட்டம் ஓய்வு உழைச்சலில்லாம.. சுத்தி வர்றது உன் அண்ணி மட்டும்தான்.. அவங்கள பார்க்கவே பாவமா இருக்குது.. ஏன்டி நீ அந்த வீட்லதானே இருக்க.. உன் அண்ணி கஷ்டபடறது உன் கண்ணுக்கு தெரியுதா இல்லையா.. உன் அம்மா தான் வாயில்லா பூச்சி.. நீ உன் அண்ணன் கிட்ட எடுத்து சொல்லலாம் இல்ல..?"
வஞ்சிப் பெருமூச்சு விட்டாள்..
"என்னத்த சொல்ல..! நான் எது சொன்னாலும் சரி சரின்னு அண்ணன் மண்டையை மண்டைய ஆட்டும்.. அடுத்த நாள் அண்ணி அழுதுட்டே வருவாக.. எங்க விஷயத்துல நீ ஏன் தலையிடாத.. என் புருஷன் என்னய அடிப்பாரு திட்டுவாரு.. கொல்லுவாரு.. அதைக் கேட்க நீ யாரு.. அடிச்சாலும் புடிச்சாலும் என் புருஷன் கூட நான் கௌரவமா வாழுதேன்.. உன்ன மாதிரி புருஷனை விட்டு பிரிஞ்சு வந்து வாழா வெட்டியா நிக்கலையேன்னு.. நெஞ்சில கடப்பாறைய ஏறக்குற மாதிரி காரமா பேசுவாக.. எனக்கு சங்கடமா போவும்.." வஞ்சி முகம் கசங்கினாள்..
"என்னடி சொல்லுத உன் அண்ணியா இப்படி பேசுவாக..?"
"அட ஆமான்டி..!"
"நம்பவே முடியல.. ஆனாலும் உன் அண்ணிக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்திதான்.."
"அப்படியெல்லாம் சொல்லிட முடியாது.. பேசிட்டு அடுத்த நிமிசமே ஏதோ கோபத்துல பேசிட்டேன் எதையும் மனசுல வச்சுகாதேன்னு என் கைய புடிச்சு மன்னிப்பு கேப்பாக.."
"என்னவோ போடி உன் அண்ணிய புரிஞ்சுக்கவே முடியல.. உன்னையுந் தான்..!"
"ஏன்டி..? புரிஞ்சுக்க முடியாம அப்படி என்ன நடத்து புட்டேன்..!"
"ஏன் உனக்கு தெரியாதா..! சின்ன வயசுல இருந்து நாம ரெண்டு பேரும் ஒண்ணா தான் சுத்திட்டு கிடக்கோம்.. நீ எதுக்கு சிரிக்கிற எதுக்கு அழுவுற எல்லாம் எனக்கு தெரியும்.. ஆனா ஒரு விஷயத்துல மட்டும் உன்னைய என்னால புரிஞ்சுக்கவே முடியல..!"
"புதிர் போடாம விஷயத்தை சொல்லு.."
"ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொந்த உறவை எல்லாம் ஒதுக்கி தள்ளிட்டு புருஷன் தான் வேணும்னா அவர் கைய புடிச்சுகிட்டு போனவ இப்போ அவர் வேண்டாம்ன்னு சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு பொறந்த வீட்டுல வந்து உட்கார்ந்திருக்கியே.. இதுக்கு என்ன அர்த்தம்..!"
"ம்ம்.. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் உன் மண்டைய உடைப்பேன்னு அர்த்தம்.. பேசாம வாயை மூடிக்கிட்டு வா.."
"அப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்ட..?"
"இப்ப நீ அமைதியா வர்றியா..? இல்ல நான் திரும்பி போகட்டுமா.." காரமான குரலோடு வஞ்சி அப்படியே நின்றுவிட..
"அம்மா தாயே.. சிவராத்திரி அன்னைக்கு சாமி பார்க்க வந்தவளை திருப்பி அனுப்புன பாவம் எனக்கு வேண்டாம்.. இனி வாயே திறக்கல.. போதுமா..!" என்ற பிறகுதான் நந்தினியை முறைத்தபடி அவளோடு நடந்தாள் வஞ்சி..
கோவிலுக்கு சற்று தொலைவில் பள்ளிக்கூட மதில் சுவற்றின் மீது வஞ்சிக் கொடியை எதிர்பார்த்தபடி அமர்ந்திருந்தன இரு ஜீவன்கள்..
"ஏண்டா தேவரா.." புடவை தலைப்பால் தலையில் முக்காடு போட்டிருந்த அப்பத்தா அழைக்க..
"சொல்லு அப்பத்தா..?" என்றான் எதிர்திசையை பார்த்தவாறு..
"எள்ளு எண்ணெய்க்கு காயுது எலி புழுக்கை எதுக்குடா காயணும்.. நடுராத்திரி அசந்து தூங்கிட்டு இருந்தவ முகத்துல ஒரு பக்கெட் தண்ணிய ஊத்தி.. இழுத்துட்டு வந்து உயரமான இந்த மதில் சுவத்து மேல பேயாட்டம் உட்கார வச்சிருக்கியே.. இதெல்லாம் உனக்கே நியாயம்னு படுதா.. நீ உன் பொண்டாட்டி கூட டூசன் போக.."
"டியூசன் போகணுமா டூயட் பாடணும் அப்பத்தா.. உன் இங்கிலீஷ்ல தீயவைக்க.."
"என்னத்தையோ வச்சுட்டு போ.. இத்தனை வருஷத்துல இன்னைக்குதான் அதிசயமா உன் தாத்தா அவருக்கும் அந்த சரசுவுக்கும் என்ன உறவுன்னு சொல்ல வாயை திறந்தாப்ல.."
"என்ன உறவாம்..!" அழகி பக்கம் திரும்பினான் தேவா..
அழகி பேரனை முறைத்தார்..
"எங்கடா தொல்ல விட்ட.. அதுக்குள்ளாறதான் ஒரு பக்கெட் பச்ச தண்ணியை மூஞ்சில ஊத்தி சாமக் கோடாங்கி மாதிரி எழுப்பி விட்டுட்டியே.."
"சரி விடு அப்பத்தா.. மறுபடியும் வீட்டுக்கு போய் தூங்கு.. கனவு வரும்.. இந்த முறை தாத்தாவுக்கு சரசுவுக்கும் என்ன உறவு ன்னு கேளு.. விட்டுடாத..!"
"அட போடா..! இப்ப அதுதான் முக்கியம் பாரு.. பொண்டாட்டியோட ஜோடி போட்டு சுத்த சொன்னா.. வயசான காலத்துல ஏன் இடுப்புல எதுக்குடா ஏறி உக்காந்துக்குற கூறு கெட்டவனே..?"
"எனக்காக இது கூட செய்ய மாட்டியா நீயி..! நீயும் உன் பொண்டாட்டியும் ஒன்னா சேர நான் என்ன வேணா செய்வேன்னு உருகி உருகி கண்ணீர் விட்டு பேசுனியே அதெல்லாம் பொய்யா அழகி..?"
"சொன்னேன்டா ஆனா அதையெல்லாம் நடுசாமத்துல செய்வேன்னு சொல்லலையே..! பகல்ல எந்நேரமும் உன் கூட தானே சுத்தி வரேன்.. ராத்திரி கொஞ்ச நேரம் என் புருஷன் கூட மனசு விட்டு பேச விடறியா நீயி.."
"பேசக்கூடாது.. நானே என் பொண்டாட்டிய பிரிஞ்சு வேதனையில தவிக்கும்போது இந்த வயசுல நீ உன் புருஷனோட என்ன ரோமாஞ்சனம் வேண்டி கிடக்குது உனக்கு..!"
"ராமராஜன எதுக்குடா இதுல இழுக்கிற.. அவர் என்னைக்காவது ஒருமுறைதான் கனவில் வர்றாரு.. அதுவும் இப்ப சுத்தமா வர்றதில்ல தெரியுமா..?"
தேவரா வாயில் கை வைத்து அழகியை பார்த்தான்..
"பாத்து கிழவி.. நீ பேச்சு வாக்குல சரசுவ பத்தி விசாரிக்கிற நேரம் தாத்தா ராமராஜன் யாருன்னு கேட்டுட போறாப்புல.." தேவரா காலை ஆட்டியபடி சிரித்தான்..
"அட போடா கிறுக்கு பயலே.. அப்பத்தா சாலையின் பக்கம் பார்வையை திருப்பினார்..
"எங்கலே.. உன் பொண்டாட்டிய காணோம்..?"
பொண்டாட்டி என்றதும் அவன் முகம் விகசித்தது..
"வருவா வருவா.. ஆடி அசைஞ்சு அன்ன நடை போட்டு பொறுமையாத்தான் வருவா.." அவன் உதட்டோரம் சிறு ரசனையான புன்னகை..
"ஏன் வேகமா நடந்து வந்தா ஆகாதோ..?"
"ஆகாது.. வேகமாக நடந்து வந்தா பூ மாதிரி பாதம் நோகும் இல்ல.."
"அடேங்கப்பா பொண்டாட்டி மேல எம்புட்டு கரிசனம்.. அவ்வளவு அக்கறை இருக்கிறவன் போய் உன் பொஞ்சாதிய தோள்ல தூக்கி வைச்சு தூக்கியார வேண்டியதுதான..?"
கிருஷ்ணதேவராயனின் கண்கள் குறுகி சிரித்தன..
"எனக்கும் ஆசைதான்.. அவ ஒத்துக்கணுமே..!"
"உலகத்திலேயே பொண்டாட்டிய ஸ்டாக் மார்க்கெட் பண்ற ஒரே ஆளு நீதான்டா பேராண்டி.."
புருவங்கள் முடிச்சிட அப்பத்தாவின் பக்கம் திரும்பினான்..
"ஸ்டாக் மார்க்கெட்டா.. ஓஓஓ.. ஸ்டாக்கிங்கா..!"
"அந்த கிங்கு தான்.. அந்தா வந்துட்டா உன் பொண்டாட்டி.. தாலி கட்டுன புருஷனோட சண்டை போட்டு அவன தனியா தவிக்க விட்டு போட்டு வந்திருக்கோமேங்கற கவலை கொஞ்சம் இல்லாம என்னம்மா சிரிச்சு சிரிச்சு அரட்டை அடிச்சுகிட்டு உல்லாசமா வர்றா பாத்தியா..!"
"அழகிஇஇ..! என் பொண்டாட்டி சிரிக்கிறத பத்தி குறை சொன்ன வையி.. மூக்குல குத்தி புடுவேன் ஆமா..!"
"குத்துவாடா குத்துவ.. நடு ஜாமத்தில் இம்புட்டு உயரமான இடத்துல வவ்வா மாதிரி என்னைய தொங்க விட்டதுமில்லாம இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.. ஏலே உன் கிட்ட தான் பேசுறேன்.. அடேய் என்னய பாருடா..!"
"சும்மா இரு கிழவி.. நை நைன்னு தொந்தரவு பண்ணாதே.."
"ஆமாண்டா இப்ப நான் பேசறது உனக்கு தொந்தரவாத்தான் தெரியும்..! அவ அந்த பக்கம் போனப்பறம் அப்பத்தா அப்பத்தான்னு என்கிட்ட ஓடி வருவே இல்ல.. அப்ப வச்சிக்கிறேன்.."
அப்பத்தா பேசியதை தேவராயன் காதில் வாங்கியதாக தெரியவில்லை..
சற்று தொலைவிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த வஞ்சிக்கொடியின் மீது நிலைத்து பதிந்திருந்த அவன் பார்வை வேறெங்கிலும் நகர மறுத்து பிடிவாதமாக அவளுள் ஊடுருவி நின்றது..
"ஏய் வஞ்சி உன் புருஷன்டி.." நந்தினி தேவாராவை ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு தலை குனிந்தபடி அவளிடம் சொல்ல..
"தெரியுது" என்றாள் நேராக பார்த்து நடந்தபடி..
"உன்னைய தான்டி வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு.."
"வாய மூடிக்கிட்டு வா.." பற்களை கடித்துச் சொன்னபடி.. தன்னை விடாமல் பின் தொடர்ந்திருந்த அவன் பார்வையை அலட்சியப்படுத்திவிட்டு இருவரும் அமர்ந்திருந்த மதில் சுவரை கடந்து சென்றாள் வஞ்சி..
நடந்து சென்றவளையே விசிலடித்தபடி பார்த்து கொண்டிருந்தவன் மதில் சுவரிலிருந்து தொப்பென்று குதித்து அவள் பின்னால் சென்றான்..
"அய்யய்யோ பொண்டாட்டிய பார்த்ததும் அப்படியே அம்போன்னு விட்டுட்டு போறானே இந்த வளர்ந்து கெட்டவன்.. எலேய்.. தேவரா.. என்னைய கொஞ்சம் இறக்கி விடுடா.." அப்பத்தா காட்டு கத்தாக கத்தியது கேட்காத தூரத்திற்கு சென்றிருந்தான் அப்பத்தாவின் அன்பு பேரன்..
நந்தினியும் வஞ்சியும் கோவிலுக்குள் நுழைய தாடையை தேய்த்தபடி யோசனையாக கோவிலின் வாசலில் நின்றிருந்தவன்.. பிறகு செருப்பை கழட்டி போட்டுவிட்டு கோவிலுக்குள் நுழைந்தான்..
மகா சிவராத்திரியில் சிவபெருமானுக்கு இரண்டாம் கால பூஜை ஆரம்பமாகியிருந்தது.. கருவூல தெய்வத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகமும் ஆராதனையும் தொடங்கி இருக்க.. வழிபாட்டில் கலந்துகொண்டு.. இறைவனை மனதார பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள் வஞ்சி..
அவள் பக்கத்தில் வந்து நின்றான் தேவரா..
அவனின் நீண்ட பெருமூச்சு அத்தனை கூட்டத்தின் மத்தியிலும்.. வழிபாட்டு சத்தத்தின் இடையிலும் அவள் காதுகளில் தெளிவாக ஊடுருவி செல்ல.. கண்கள் சுருக்கி திரும்பிப் பார்த்தவள் பக்கத்தில் நின்றவனை முறைத்தாள்..
தேவரா அவளை கண்டுகொள்ளாமல்.. சிவபெருமானை நோக்கி கைகள் கூப்பியிருந்தான்..
"ஓம் நமசிவாய போற்றி.. என் பொண்டாட்டி தான் கொஞ்சம் கூட மனசு வைக்க மாட்டேங்கறா..! நீயாவது கொஞ்சம் இரக்கம் காட்ட கூடாதா..! ஒண்ணு என் உணர்ச்சிகளை அடக்கி ஆள வழிய சொல்லிக் கொடு.. இல்லன்னா என் பொண்டாட்டிய எங்கூட சேர்த்து வை..! இப்படி தனியா தவிக்கவிட்டு என்னய சாவடிக்காத.."
கணவனின் பிரார்த்தனையை காதில் வாங்கியவள் அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல்.. "வாடி போகலாம்" என்று நந்தினியை அழைத்துக் கொண்டு.. கோவில் வளாகத்தின் மரத்தடியின் ஒரு மூலையில் அமர்ந்தாள்..
அவளோடு சேர்ந்து அங்கே நிறைய பேர் தங்கள் குடும்பத்தோடு வந்து கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர்..
சற்று தள்ளி அவளுக்கு எதிர் புறமாக அமர்ந்து கொண்டான் தேவராயன்..
"தேவாண்ணன் உன்ன தாண்டி பாக்குது..!" நந்தினி மறுபடி காதுக்குள் கிசுகிசுக்க..
வஞ்சி எந்த உணர்வுகளையும் வெளி காட்டாத முகத்துடன் தலை தாழ்ந்து மௌனமாக அமர்ந்திருந்தாள்..
"உன்கிட்ட ஏதோ பேச நினைக்குது போல.. அண்ணன் தவிக்குது பாரு.. அந்த கண்ணுல எவ்வளவு ஏக்கம்..!"
"பாருடி இப்ப நீ வாய மூடல.. அப்புறம் நடக்கிறதே வேற சொல்லிப்புட்டேன்.."
"பாத்தா பாவமா இருக்குடி..!"
நிமிர்ந்து நந்தினியை முறைத்தாள் வஞ்சி..
"உன் புருஷனை பாக்கும்போது எனக்கே பொறாமையா இருக்குதுடி.. நீ எங்குட்டு போனாலும் காவக்காரன் கணக்கா உனக்கு முன்னாடி அங்க வந்து நிற்கிறாப்ல.. கொடுத்து வச்சவடி நீ.. எனக்கும் வந்து வாச்சிருக்கானே ஒருத்தன்..! இந்நேரம் நான் கோவிலுக்கு வந்தது கூட தெரியாது.. நல்லா மூஞ்சி வர இழுத்து போட்டுக்கிட்டு குறட்டை விட்டுட்டு தூங்கிட்டு கிடப்பான்.."
"ஆமாமா.. உன் அண்ணன் ரொம்ப நல்லவர் தான் நீ தான் மெச்சிக்கணும்..!" வஞ்சி உதட்டை சுழித்தாள்..
"தேவரா.." பக்கத்தில் குரல் கேட்ட போதும் கண்களை மனைவி மீது இருந்து நகர்த்தவில்லை அவன்..
"அப்பத்தா..!"
"ஒருவழியா எப்படியோ எகிறி குதிச்சு ஓடியாந்துட்டேன்.."
"குட்.. அப்படித்தான் இருக்கணும்.. அடுத்த பி டி உஷா நீதான்..!"
"இத்தனை வயசுக்கு மேலயா..? சரி நீ சொன்னா சரியாதான் இருக்கும்..! ஏண்டா அவ உன்ன ஒரு மனுசனா கூட மதிக்க மாட்டேங்குறா.. நீ என்னடான்னா வச்ச கண்ணு வாங்காம இப்படி கடிச்சு திங்கிற மாதிரி பாக்கறியே அவள.."
"அப்பத்தா.. என் பொண்டாட்டி எம்புட்டு அழகா இருக்கா பாத்தியா..!" கோவில் வாசனையின் மத்தியில் அவளை ஆத்மார்த்தமாக நுகர்ந்தான் தேவரா..
"தேவரா இது கோவில்டா..!"
"அதுக்கு..?"
"கோவிலுக்கு வந்தா சாமியை தான் பார்க்கோனும்.."
"நானும் சாமிய தான் பார்க்கறேன்.."
"சரிதேன்.. உனக்கு முத்திப் போச்சு.. இம்புட்டு லவ் பண்ணி என்ன பிரயோஜனம்.. புரிய வேண்டியவளுக்கு புரியலையே.." அழகியின் குரலில் வருத்தம்..
"அதெல்லாம் புரியாம இல்ல.. என் மனசு புரியாமதான் எனக்கு புடிச்ச பச்சை கலர் புடவை உடுத்திட்டு வந்துருக்காளாக்கும்..! அதெல்லாம் அவளுக்கு முன்னாடி நான் இங்க வந்து நிப்பேன்னு தெரியும்.."
"அப்படிங்கற..!"
"அப்படித்தான்..! ஆனாலும் நிமிந்து பாக்குறாளா பாரு.. உடம்பு முழுக்க அவ அண்ணன மாதிரியே திமிரு.. நேரம் வரட்டும்.. இவ திமிர எப்படி அடக்கறேன்னுபாரு..! அழகியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் தாடையை நீவியவனின் ஆழ்ந்த பார்வை முழுக்க மனைவியின் மீது..
தொலைவிலிருந்த போதும் தன்னை நோக்கி தோட்டாக்களாக பாய்ந்து வந்த அந்த பார்வையை சமாளிக்க முடியாமல்.. "நந்தினி போகலாம்.." என்றாள் வஞ்சி..
"என்னடி அதுக்குள்ளாறவா.. விடியுற பொழுதில் கிளம்பறதா தானே பேச்சு.."
"இல்ல இப்பவே போகலாம்.. நீ வரலைன்னா போ.. நான் போறேன்.." வஞ்சி எழுந்து நிற்க..
"இந்தாடி நில்லு.. நானும் வரேன்.." அவள் பின்னால் நடந்தாள் நந்தினி..
இருவரும் விருவிருவென நடந்து கோவிலை விட்டு வெளியேறி செல்ல.. "அழகி வா போகலாம்..!" என்று அப்பத்தாவை எழுப்பி நிற்க வைத்து கைப்பிடித்துக் கொண்டு ஓடினான் தேவரா..
மற்றவர்கள் கோவிலில் இருக்க.. தெருவிளக்கின் வெளிச்சத்தில் இருவரும் மட்டும் நடந்து கொண்டிருந்தனர்..
வஞ்சியின் கால் கொலுசின் சத்தத்தை காதில் வாங்கிக் கொண்டே நடந்தான் தேவரா..
"ஏ புள்ள நந்தினி.." தேவரா அழைக்க..
"அண்ணே..!" என்று திரும்பி பார்த்தவளை இழுத்துக் கொண்டு நடந்தாள் வஞ்சி..
"உன் புருஷன் கூட வரலையா..?"
"ம்கூம்.. எங்க..? அது இழுத்து போட்டுக்கிட்டு குறட்டை விட்டு தூங்குது.. எல்லாரும் எங்க தேவா அண்ணன் மாதிரி பொண்டாட்டி மேல அக்கறையா இருந்திட முடியுமா என்ன..!"
"அத பக்கத்துல இருக்கறவன் காதுல கேக்கற மாதிரி நல்லா உரக்க சொல்லு.." அலட்சியமாக கைகளை வீசியபடி சாய்ந்த நடையோடு.. சொன்னான் தேவரா..
"நீங்க சொன்னதே அவளுக்கு கேட்டிருக்கும்.." நந்தினி வஞ்சியை ஓரக்கண்ணால் பார்க்க.. அவள் தோளை இடித்து முறைத்தாள் வஞ்சி..
"நடையா இரு நடையா.." என்று தேவரா பாட..
"ஒரு நாடகமங்கு நடக்குது" என்று அப்பத்தா பாடினார்..
"இடையா இது இடையா?" என்று பாடியபடி வஞ்சியின் பின் இடுப்பை பார்த்தான் தேவரா..
"அது இல்லாதது போல் இருக்குது..!" அப்பத்தா பாடி முடிக்க அவர்கள் பக்கமாக வெடுக்கென திரும்பினாள் வஞ்சி..
"என்ன ரெண்டு பேரும் வம்பு பண்றீங்களா.. எங்க அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சது.. அவ்வளவுதான்.." இவள் கண்களை உருட்ட..
"என்னடி செய்வான் உன் நொண்ணன்.. வர சொல்லு அவன.. என்னத்த கிழிக்கிறான்னு நானும் பார்க்கறேன்.." பேண்ட் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு பேசியபடியே அவளை நெருங்கி வர.. திடுக்கிட்டவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்
"அடியே நந்தினி..! முருங்கைக்காய் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு சொல்லித் தரேன் வா.. உனக்கு கண்டிப்பா உபயோகப் படும்.." நந்தினியை இழுத்துக்கொண்டு அப்பத்தா முன்னே சென்றுவிட்டார்..
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ..
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன் வா வா வா..
என்றவனின் பார்வை அவள் தலையில் சூடியிருந்த மல்லிச்சரத்தில் பதிந்து பிறகு கீழிறங்கி நீண்ட கூந்தலின் நுனி இரு பக்கமும் முத்தமிட்டு நின்ற பின்னழகில் நிலை குத்தி விழுந்து மீள முடியாமல் திணறியது..
"ம்ம்.. எம்புட்டு நாளாச்சு.." என்று சீறலாக பெருமூச்சு விட்டவன்.. பிடரியை கோதிய படி பார்வையை நகர்த்தாமல் அவளை பின்தொடர்ந்து நடந்தான்..
அவன் பார்வை தன்னை ஊடுருவுவதில் சட்டென நின்று திரும்பி பார்த்தாள் வஞ்சி..
தாழ்ந்திருந்த கண்கள் அவள் நின்று திரும்பியது தடுமாறி.. பக்கவாட்டில் வேடிக்கை பார்ப்பது போல் திரும்பிக்கொண்டது..
அவனை முறைத்து விட்டு மீண்டும் நடையை தொடர்ந்தாள் வஞ்சி..
"பாத்து போடி.. தடுக்கி விழுந்து வைக்காதே..! உன் உடம்புல சின்ன கல்லு குத்தினாலும் மாமா மனசு தாங்காது தெரியுமில்ல..!" அவன் சொல்லிக்கொண்டே வர முகத்தை சுளித்தாள் வஞ்சி..
வேகமாக அடி எடுத்து வைத்தவள்.. அவன் சொன்னதை போல் கல் தடுக்கி விழப் போக தாங்கி பிடித்திருந்தான் தேவரா..
"சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு ஓடுனா என்னடி அர்த்தம்.." என்ற இடையோடு பற்றி இருந்தவளை தன் பக்கம் இழுத்தான்..
அவன் கரத்தை தட்டிவிட்டு தள்ளி நின்றாள் வஞ்சி..
"உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க.. நானும் பாத்துகிட்டே இருக்கேன்.. நான் எங்க போனாலும் பின்னாடி வர்றதும்.. பாட்டு பாடி வம்புக்கு இழுக்கிறதும் நல்லாவா இருக்கு.. நீங்க என்ன செஞ்சாலும் என் மனசு மாறாது.. எந்த காலத்திலும் நான் உங்களை மன்னிக்கவே மாட்டேன்.." மங்கிய தெரு விளக்கின் வெளிச்சத்திலும் அவள் மூக்கு நுனி சிவந்திருப்பதை தாபத்தோடு பார்த்தான் தேவரா..
"உன்னை யாரு மன்னிக்க சொன்னது.. நீ என் மேல கோவமாவே இரு.. நான் உன் மேல பாசமா இருக்கேன்.. ஆனா என்னைய பின்னாடி வரக்கூடாதுன்னு சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்ல.. நீ எங்கன இருக்கியோ நானும் அங்கனதான் இருப்பேன்..!" என்றவனை முறைத்து விட்டு திரும்பி நடக்கப் போனவளை கைப்பற்றி தன் பக்கம் இழுத்தான். தேவரா..
"ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு போ.. பச்சை கலர் சீலையும் இந்த மல்லிகை பூவும் யாருக்காக.. எனக்காக தான..? உள்ளுக்குள்ள எம்புட்டு ஆசைய வச்சுக்கிட்டு வெளியில எதுக்குடி வெறுக்கிற மாதிரி நடிக்கிற..!" கன்னத்தோடு கன்னம் உரசினான்..
"நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்.." விழிகளை அகல விரித்து அவனை முறைத்துக் கொண்டிருந்த போதிலும்.. கணவனின் அருகாமையில் அவன் ஸ்பரிசத்திற்கு உள்ளுக்குள் உஷ்ணம் பரவுவதை தடுக்க முடியவில்லை.. காலரை இழுத்து அவன் மார்பில் சாய்ந்து கொள்ள துடிதுடிப்பு..!
அவள் கண்களை பார்த்துக் கொண்டே முகத்தை நோக்கி குனிந்தவன் தோளில் வழிந்த மல்லிகை சரத்தை தொட்டு தன் பக்கம் இழுத்தான்..
"அம்முஊஊஊ.." அவன் அழைப்பில் கிறங்கி வஞ்சி கண்களை மூட.. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவள் உதட்டை சிறை பிடித்து அழுத்தமாக முத்தமிட்டிருந்தான் தேவரா..
தன் இதழ்களை அவனிடம் சுவைக்க தந்து விட்டு கண்கள் மூடி நின்று கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில்.. சுதாரித்து விலகினாள்..
உதட்டை அழுத்தமாக துடைத்துக் கொண்டு கண்களில் நீருடன் அவனை முறைக்க..
"இன்னும் எத்தனை நாளைக்கு என்னை சித்திரவதை செய்யப் போற வஞ்சி.. ஏன்..டி இப்படி முரண்டு பிடிக்கிற.. என்றவனின் பார்வையை சமாளிக்க வழியின்றி தலை தாழ்ந்தாள்..
வா.. நம்ம வூட்டுக்கு போவலாம்.. அவள் கைப்பற்றி இழுத்தான்.. அவனிடமிருந்து கரத்தை விடுவித்து கொள்ள முயன்ற நேரத்தில் அவர்கள் பக்கத்தில் வந்து நின்றது அந்த ஸ்கார்பியோ..
வஞ்சியின் கரத்தை இறுக்கி பிடித்தான் தேவரா..
"தயவு செஞ்சு கையை விடுங்க மாமா.." அவள் கண்ணீரும் அந்த மாமா என்ற அழைத்தலும் தேவராவை இளக்கியது..
வேகமாக தேவராவிடமிருந்து விலகியவள் அண்ணனுக்கும் தன் கணவனுக்கும் இடையே எதுவும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்ற பதட்டத்தோடு கார் கதவை திறந்து கொண்டு உள்ளே ஏறி இருந்தாள்.
அசராமல் அங்கேயே நின்று கண்ணபிரானை முறைத்துக் கொண்டிருந்தான் தேவரா..
"என்னமா ஏதாவது பிரச்சனை பண்றானா..?" கண்ணபிரான் கேட்க..
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைண்ணா போகலாம்.." என்றபடி கார்க கதவை மூடும் நேரத்தில் அவள் செருப்பு ஒன்று கீழே தரையில் விழுந்தது..
"என்னடா ஆச்சு..?"
செருப்பு விருந்திருச்சு அண்ணா..!
"இரு கண்ணு நான் எடுத்து தரேன்.." கண்ணபிரான் கதவை திறந்து கொண்டு கீழே இறங்க முயல..
"இருடி பொண்டாட்டி" என்று.. தரையிலிருந்த செருப்பை எடுத்து மனைவியின் அடிப்பாதத்தை மென்மையாக வருடிவிட்டு அந்த செருப்பை மாட்டி விட்டான் தேவரா..
கண்ணபிரான் இறுகிய முகத்துடன் கதவை அடித்து சாத்திவிட்டு வண்டியை எடுக்கும் நேரம்..
"போயிட்டு வாடி செல்லம்.." என்றவன்.. "என் முயல் குட்டிங்கள பத்திரமா பாத்துக்கோ.." என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தபடி இருக்கையோடு சேர்ந்திருந்த தன் கரத்தால் அவள் மார்பை அழுத்திவிட்டு தள்ளி நின்றான்.. கண்ணபிரான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்தாலும் இவனின் சில்மிஷங்கள் தெரிய வாய்ப்பில்லை..
தங்கையை பக்கத்தில் வைத்துக்கொண்டு தேவராவை கண்ணபிரானால் எதுவும் செய்ய முடியவில்லை.. பற்களை கடித்து ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன்.. காரைக் கிளப்பி அங்கிருந்து சென்றிருந்தான்..
தொடரும்..

Last edited: