- Joined
- Jan 10, 2023
- Messages
- 45
- Thread Author
- #1
கிருஷ்ணதேவராயனின் குடும்பம் ஒன்றும் பூர்வீக சொத்து கொண்ட ஆதிகாலத்து வசதி படைத்த வம்சம் இல்லை..
வசதியும் வாய்ப்பும் அந்தஸ்தும் அதிகாரமும் சமீப காலங்களாகத்தான்.. அதுவும் கிருஷ்ணதேவராயனின் திறமையாலும் கடின உழைப்பாலும் உருவான கோட்டை இது..
அதற்கு முன்பு ஓட்டு வீட்டிலும் ஓலை குடிசையிலும் நடுத்தர வர்க்கமாக இதே ஊரில் வாழ்ந்த குடும்பம் தான் இவனுடையது..
கிருஷ்ணதேவராயனின் தந்தை பெரியசாமி கண்ணபிரானின் தந்தை கஜேந்திரனிடம் குமாஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்தார்..
பல வருடங்களாக தன் எஜமானருக்கு நன்றியோடு உழைத்த விசுவாசி.. ஆனால் கஜேந்திரனுக்கு நன்றி எல்லாம் ஒரு பொருட்டல்ல.. மனிதர்களை மதிக்க தெரியாத ஆதிக்கவாதி..
பல வருடங்களாக தன்னிடம் வேலை செய்து கொண்டிருக்கும் பெரியசாமிக்கு தன் சொத்து விவரம் கணக்கு வழக்கு எல்லாம் தெரியும் என்பதால்.. அவரை தன்னை விட்டு விலகாதபடிக்கு கிடுக்குப்பிடி போட்டு நிறுத்தி வைத்திருந்தார்..
ஊரின் செல்வாக்கான மனிதர்.. அந்த ஊரின் நிரந்தரச் சேர்மன் என்று பல பெருமைகளையும் தன்னகத்தே வைத்திருந்த போதும் ஒரே ஒரு பெரிய குறை கஜேந்திரனின் மகன் கண்ணபிரானுக்கு சுட்டு போட்டாலும் படிப்பு ஏறவில்லை..
தன்னை அடித்த வாத்தியார் மண்டையில் நங்கென குட்டி விட்டு.. "எலேய்.. என்னையவே அடிக்கிறியா நீயி.. எங்க அய்யாவ கூட்டியாந்து உன் சீட்ட கிழிக்கல நான் கண்ணபிரான் இல்ல.." என்று ஐயனார் போல் நாக்கை நீட்டி வாத்தியாரை மிரட்டி விட்டு வீட்டுக்கு ஓடி வந்தவன்.. அதன் பிறகு பள்ளிக்கு செல்லவே இல்லை..
தன்மகன் படிக்காத தற்குறியாகி வீணாகிப் போன வருத்தம் ஒரு புறமிருந்தாலும் பணம் கொட்டி கிடக்கையில படிப்பெதுக்கு என்று தன் மனதை தேற்றிக்கொண்டார் கஜேந்திரன்..
ஆனால் பெரியசாமியின் மகன் கிருஷ்ணதேவராயன் பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்ணோடு தேர்ச்சி அடைந்திருக்க..! ஊரே அவனை கொண்டாடி தீர்த்ததிலும்.. கலெக்டர் விருது வழங்கி பாராட்டியதிலும்.. கஜேந்திரனுக்குள் அமிழ்ந்து கிடந்த பொறாமைத் தீ மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது..
உதவித்தொகையோடு கிருஷ்ணதேவராயன் தனது மேற்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்க.. கண்ணபிரான் பணத்தையும் செல்வாக்கையும் பட்டாடையாக சூடிக் கொண்ட திமிரில் பொலியெருது காளையாக வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்..
"இங்க பாருல.. நீ இப்படியே பொறுப்பில்லாம ஊர் சுத்திக்கிட்டே இருந்தா அப்புறம் அந்த தேவராயன் ஊர் பெரிய மனுஷன் ஆனாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.. நான் சொல்றத சொல்லிபுட்டேன்.. அப்புறம் உன் விருப்பம்.. என்னைக்குமே அந்த பிச்சைக்கார பையல ஜெயிக்க விட்டுடக்கூடாது.. இந்த ஊரோட ராஜா நீயாத்தான் இருக்கணும்.. அதுக்காக என்ன வேணாலும் செய்.. நான் கண்டுக்கற மாட்டேன்.. காலங்காலத்துக்கும் எனக்கப்புறம் நான் இருந்த இடத்துல நீதான் இருக்கணும்.. எனக்கு அதுதான் வேணும்.." என்று கண்ணபிரானின் மனதில் கிருஷ்ணதேவராயன் பற்றிய பகையை கொஞ்சம் கொஞ்சமாக எரிபொருளிட்டு வளர்த்துக் கொண்டிருந்தார் கஜேந்திரன்..
இயல்பிலேயே தந்தையை போல் ஆணவமும் அதிகார போதையும் கொண்ட கண்ணபிரானுக்கு படிப்பால் புகழை தேடிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் கிருஷ்ணதேவராயன் மீது எப்போதும் ஒரு பொறாமை கண் உண்டு..
அதிலும் கிருஷ்ணதேவராயன் நெடுநெடுவென வயதுக்கு மீறிய உயரத்தோடு.. உழைப்பாளிகளுக்கேற்ற உடற்கட்டோடு திராவிட நிறத்தில்.. பெண்களின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் கிருஷ்ணனாக அந்த ஊரில் வலம் வந்தான்..
கண்ணபிரானும் பணச் செழுமையில் மினுமினுப்போடுதான் இருந்தான்.. ஆனாலும் அனைத்திலும் தன்னைவிட ஒரு படி கூடுதலாக கிருஷ்ணதேவராயன் உயர்ந்து நிற்பதை கண்ணபிரானால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை..
கஜேந்திரனால் பெரியசாமியின் மகன் மேற்கல்வி பயிலுவதை நேரடியாக தடுக்க முடியவில்லை..
"ஏன் பெரியசாமி..! சோத்துக்கு வழி இல்லாத குடும்பத்துக்கு படிப்பு ஒன்னுதான் கேடா..! உன் புள்ள ஒழுங்கா வந்து தோட்டத்துல வேலை பார்த்தா குடும்ப வருமானம் இரட்டிப்பா கிடைக்குமில்ல.. இவனுக்கடுத்து ஒரு பொம்பள பிள்ளை இருக்குதே.. கொஞ்சமாவது புத்தி கூர்மையா யோசிக்க வேண்டாமா..! கடன உடன வாங்கி படிப்புக்காக எல்லாத்தையும் இவனுக்கே செலவழிச்சுட்டா.. அடுத்து சமைஞ்சு நிக்கற பொம்பள புள்ளைய எப்படி கரையேத்த போற..?" கஜேந்திரன் பெரியசாமியிடம் நைச்சியமாக பேசி கிருஷ்ணதேவராயனின் படிப்புக்கு தடை போட எவ்வளவோ முயன்றார்..
"எம்புட்டு செலவானாலும் பரவாயில்லை.. புள்ள படிக்கட்டுங்கய்யா.. அவன் படிச்சு தலையெடுத்துட்டா என் வம்சமே முன்னேறுன மாதிரிதேன்.. கஷ்டப்பட்டு படிக்க வைச்சு கரையேத்தி விட்டுட்டா போதும்.. மத்ததெல்லாம் அவனே பாத்துக்குவான்.."
"எல்லாம் சரிதேன்.. ஆனா உன் புள்ள படிப்புக்காக வாங்கின கடன் உலக்கையாட்டம் அப்படியே நிக்குதே..! அவன் படிச்சு முடிச்ச கையோடா நீங்க எல்லாரும் டவுனுக்கு போறேன்னு அவன் கூட சேர்ந்து கம்பிய நீட்டிபுட்டா வாங்கின கடனையெல்லாம் யாருலே அடைக்கறது.."
"நாணயம் இல்லாதவன் இல்லைங்க இந்த பெரியசாமி.. உங்ககிட்ட வாங்கின கடனை வட்டியும் முதலுமா என் பையன் திருப்பி அடைப்பான்.." கடைசி வார்த்தைகள் மட்டும் வீராப்போடு உறுதியாக வந்தன..
அப்படி ஒன்றும் பெரிதாக கடன் வாங்கிவிடவில்லை பெரியசாமி.. தேவராயன் படித்ததெல்லாம் கல்வி உதவித் தொகையின் மூலம்தான்.. ஆனாலும் ஹாஸ்டல் செலவை உடை உணவு என மற்ற செலவுகளுக்கான சொற்பத் தொகையை கஜேந்திரனிடம் கடன் வாங்கி இருந்தார்.. தேவராயன் மீது கொண்ட வன்மத்தின் காரணமாக வட்டிக்கு வட்டி போட்டு தொகையை இரு மடங்காக்கி வைத்திருந்தார் கஜேந்திரன்..
இளங்கலை முடித்தவன் முதுகலை படிப்பிற்கு விண்ணப்பித்து கல்லூரியில் சேர்ந்து விட்டதில் கஜேந்திரனுக்கு மென்மேலும் புகைச்சல்.. பணம் படைத்தவனை விட கல்வியில் உயர்ந்தவனுக்கு இந்த சமுதாயத்தில் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அந்த வகையில் கண்ணபிரானை விட கிருஷ்ணதேவராயனுக்கு அந்த ஊரில் நல்ல செல்வாக்கு இருந்ததில் அப்பன் மகன் இருவருக்குமே பகையும் வெஞ்சினமும் அதிகரித்துக் கொண்டே சென்றது..
சேர்மன் சொன்னதை கண்மூடித் தனமாக நம்பிவிடாமல் படிச்ச பையன் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று ராயனிடம் வந்து ஆலோனை கேட்டால் தந்தை மகன் இருவருக்கும் கோபம் வரத்தானே செய்யும்..
மலையளவு பொறாமையை மனதில் வைத்துக்கொண்டு வேலையில் ஏதோ ஒரு சின்ன தவறை காரணங்காட்டி கேவலமாக பேசி பெரிய சாமியை நெஞ்சில் எட்டி உதைத்து விட்டார் கஜேந்திரன்..
விடுமுறைக்காக ஊருக்கு விஜயம் செய்திருந்த ராயன்.. முக்கிய வேலையாக தந்தையை காண கஜேந்திரன் வீட்டுக்கு வந்திருந்த போது இந்த காட்சியை பார்த்து விட்டான்..
"அப்பாஆஆ.." என்று அலறிக்கொண்டு வந்தவன்..
கட்டுக்கடங்காத கோபத்தில் கண்கள் சிவந்து வயது வித்தியாசமில்லாமல் தந்தையின் மார்பில் எட்டி உதைத்த முதலாளியின் சட்டையை பிடித்து ஓங்கி அடிக்கப் போக அதற்குள் பெரியசாமி வந்து தடுத்துவிட்டார்..
ஆனால் கண்ணபிரான் கிருஷ்ணதேவராயன் தன் அப்பாவின் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்கியதை பார்த்து விட்டான்..
"நாங்க போடுற எச்ச சொத்த தின்னுட்டு எங்க வீட்ல வேலை செய்ற பிச்சைக்கார நாயி.. என் ஐயன அடிக்க கையை ஓங்கறியா நீ.." என்று சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு மல்லுக்கு நிற்க.. இரண்டு பேருக்குள் கை கலப்பு..
எந்த இடத்திலும் அடங்கி போகக் கூடியவன் இல்லை இந்த கிருஷ்ணதேவராயன்..
முரட்டுத்தனம் பிடிவாதம் திமிர் அனைத்திலும் கண்ணபிரானுக்கு இணையாக ஈடு கொடுத்து நிற்பவன்..
தன்னிடம் வேலை செய்பவனின் மகன் தலைதாழ்ந்து தன் காலை எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளாமல்.. இப்படி எதிரும் புதிருமாக மல்லுக்கு நிற்பதால் தான் கண்ணபிரானுக்கு கிருஷ்ணதேவராயனை பிடிப்பதில்லை..
இந்த ஊரில் ஒரு நாயகன்தான் இருக்க வேண்டும். அது நானாகத்தான் இருக்க வேண்டும் என்ற ஆணவம்..
ஆனால் கிருஷ்ணதேவராயனோ இதற்கெல்லாம் அப்பாற்பட்டு தனித்து தெரிந்தான்..
"ஏண்டா தேவரா இப்படி பண்ற.. அவங்க நமக்கெல்லாம் சோறு போடுற முதலாளி வம்சமடா.. அவங்களை பகைச்சிக்கிட்டா நாம இந்த ஊரிலேயே நிம்மதியா வாழ முடியாது தெரியுமில்ல..! பெரிய சாமி அங்கலாய்த்தார்..
"அதுக்காக அடிமையாக வாழ முடியாதுப்பா.. என் கண் முன்னாடி உங்களை நெஞ்சுல எட்டி உதைக்கிறான் அந்த ஆளு.. பார்த்துகிட்டு சும்மா நிக்க சொல்றீகளா.. அப்படி மானங்கெட்டு அவங்களுக்கு கீழ வேலை செய்யணும்னு அவசியம் இல்ல.. இன்னும் ரெண்டு மாசத்துல என் படிப்பு முடிஞ்சுரும்..! படிப்புக்கேத்த வேலை கிடைச்சிருச்சுனா எல்லாருமா இந்த ஊரையே காலி பண்ணிட்டு பட்டணத்துக்கு போயிடலாம்.. இனி இந்த ஊர் பக்கமே தலை வைச்சு படுக்கக் கூடாது சொல்லிபுட்டேன்.. அங்கேயே வாழ்ந்துக்கனும்.."
"நீ எங்க வேணாலும் போய் வேல பாரு.. ஆனா பிறந்து வளர்ந்த ஊரை விட்டுட்டு நான் எங்கேயும் வர்றதா இல்ல.." பிடிவாதமாக முகத்தை திருப்பிக் கொண்டார் பெரியசாமி..
"ஆமா வர்றாட்டி போறான் விடு.. உன் கூட நான் வரேண்டா தேவரா.. வேலை கிடைச்சதும் ஊருக்கு வந்து டிக்கெட் போட்டு அப்பத்தாவை பிளேட்ல கூட்டிட்டு போவனும் சரிதான.." அழகி பேரனோடு இணைந்து கொள்ள..
"பிளேட் இல்ல அப்பத்தா பிளைட்.." என்று அந்த கோபத்திலும் அப்பத்தாவை திருத்தினான் தேவரா..
"இங்க என்ன ஓடிகிட்டு இருக்குது.. இந்த நேரத்துல இதுக ரெண்டுக்கும் இங்கிலீஷ் ஒன்னுதான் கேடு.." முகத்தை சுளித்தார் பெரியசாமி..
அந்த சம்பவத்திற்கு பிறகு பெரியசாமி கஜேந்திரனிடம் வேலைக்கு செல்லவில்லை.. ஆனால் அதற்கு பின் பெரியசாமி குடும்பத்திற்கு கஜேந்திரன் கண்ணபிரானால் தொல்லைகள் அதிகரித்தன.. ஊர் சேர்மன் அவரை பகைத்துக் கொள்ளவும் முடியவில்லை..
"வாங்கின கடனை வட்டியோட திருப்பி கொடுக்கணும் இல்லனா உன் புள்ளைய போலீஸ்ல புடிச்சு கொடுப்பேன்.. உன் குடும்பத்தை நடுரோட்டில் நிறுத்துவேன்" என்று தினம் தினம் வீட்டு வாசலில் ஆட்களை அனுப்பி தகராறு செய்தார் கஜேந்திரன்..
வெளியூரில் படித்துக் கொண்டிருந்த தன் மகனிடம் இது பற்றி வாய் திறக்கவில்லை பெரியசாமி.. பிரச்சனை என்று கேள்விப்பட்டால் ஊருக்கு வந்து வீட்டு முன் நிற்கும் அத்தனை பேரையும் அடித்து நொறுக்கி விடுவானே கோபக்கார மகன்..
விளைவுகளை யோசித்துப் பார்க்காத அவன் முரட்டுத்தனத்தால் இதுவரை வந்த பிரச்சனைகள் போதும் என்று அப்பத்தாவிடம் கூட எந்த விஷயத்தையும் அவனிடம் போனில் அழைத்தோ லெட்டரில் எழுதியோ சொல்லக்கூடாது என்று மிரட்டி கட்டுப்பாடு விதித்திருந்தார்..
இருந்த கொஞ்ச நஞ்ச நகைகளை விற்று பாதி வட்டி மட்டும் அடைத்திருந்தார்.. அதற்குள் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான் தேவரா..
அவன் வந்த நேரத்தில் கண்ணபிரான் அனுப்பிய ஆட்கள் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததோடு வீட்டு பெண்களையும் அவதூறாக பேச.. கொதித்துப் போன தேவரா அத்தனை பேரையும் அடித்து நொறுக்கி காற்றில் பறக்க விட்டான்..
"வெறும் கூழும் கஞ்சியும் தின்னுட்டு ஓட்ட கூரைக்கு கீழ படுத்து உறங்கற பயலுக்கு இம்புட்டு பலமா..!" கண்ணபிரான் மிரண்டு போனான்..
"வாங்குன கடன திரும்ப கொடுக்க வக்கில்லாத பயலுக்கு ரோஷம் ஒன்னு தான் கேடு.."! அவன் குரல் கர்ஜனையாக காற்றில் மிதந்து வந்து தேவராயனின் செவிகளை அடைந்தது..
"இன்னையிலிருந்து ஆறு மாசத்துக்குள்ள உன்கிட்ட வாங்கின கடனை மொத்தமா திருப்பி கொடுக்கல நான் கிருஷ்ணதேவராயன் இல்லடா.. அதுவரைக்கும் என் குடும்பத்தை தொந்தரவு செய்யணும்னு மனசுல நினைச்சா கூட உன்னை ஒன்னும் இல்லாம பண்ணிடுவேன்..!" எதிரில் நின்று சீற்றத்தோடு எச்சரித்தவனை வன்ம கண்களோடு பார்த்தான் கண்ணபிரான்..
இதுவரை அந்த ஊரில் அவனை யாரும் கை நீட்டி பேசியதில்லை.. இது போல் மிரட்டியதும் இல்லை.. அவன் குடும்பம் என்ன சொல்கிறதோ அதுதான் சட்டம்.. யாரும் அவர்கள் வைத்த சட்டத்தை மீறியதில்லை..
இந்த ஒருவன் தான் அதிகமாக துள்ளுகிறான்.. இவனை எப்படி கிள்ளி எறிவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..
வீரத்தால் அவனை ஜெயிக்க முடியவில்லை.. சூழ்ச்சி..? என்ன செய்து அவனை வீழ்த்தலாம் என்று கண்ணபிரான் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்.. புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தை செய்திருந்தான் ராயன்..
என் குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குக் காரணமானவர்கள் கஜேந்திரனும் கண்ணபிரானும் மட்டுமே.. சமீப காலமாக அவர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் உயிருக்கு பயந்து இந்த புகாரை எழுதுகிறேன்.. என்று அந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு வெளியூர் புறப்பட்டு வேலைக்கு சென்று விட்டான் கிருஷ்ணதேவராயன்..
"அவசரப்படாதீங்க கண்ணபிரான்.. பழிவாங்கறதா நினைச்சுட்டு அந்த குடும்பத்தையும் அவனையும் எதுவும் செஞ்சுறாதீங்க.. பய.. தெளிவா கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துட்டு போயிருக்கான்.. அதுவும் எங்ககிட்ட கொடுத்திருந்தா பரவாயில்லை.. கலெக்டர் மூலமா இந்த கம்ப்ளைன்ட் போலீஸ் ஸ்டேஷன் வந்து சேர்ந்திருக்கு.. ஏதாவது பிரச்சனைனா நீங்க தான் மாட்டுவீங்க.. கொஞ்ச நாள் அமைதியா இருங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.." வீட்டுக்கு வந்து அந்த ஊர் இன்ஸ்பெக்டர் கண்ணபிரானை சமாதானப்படுத்ததிவிட்டு சென்றார்..
தன் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு புத்திசாலியாகவும் பலசாலியாகவும் நின்ற கிருஷ்ணதேவராயனை அடியோடு அழிக்க சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தான் கண்ணபிரான்..
பட்டணத்திற்கு வேலைக்கு சென்ற ராயன்.. ஆறு மாதத்தில் சொன்னபடி கஜேந்திரனிடம் வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக அடைத்திருந்தான்.. மேற்கொண்டு ஆறு வருடங்கள் அங்கேயே வேலை செய்தவன் ஒரு பெரும் தொகையை சேமிப்பாக வைத்துக் கொண்டு ஊருக்கு திரும்பினான்..!
எதற்காக..
நான்கு வருடங்களாக காதலித்த வஞ்சிக்கொடியை கரம் பிடிக்கும் எண்ணத்தோடு..
ஆடுபகை.. குட்டி உறவாம்..
தந்தையும் மகனும் ஆகாதாம்..
மகள் மீது தீராத காதலாம்..
தொடரும்..

Last edited: