- Joined
- Jan 10, 2023
- Messages
- 54
- Thread Author
- #1
கிருஷ்ணதேவராயன் வேலைக்கு சென்ற பின் சம்பாதித்து ஊருக்கு அனுப்பிய பணத்தை சேமித்து வைத்து ஒரு மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்திருந்தார் பெரியசாமி..
விடுமுறைக்கு ஊருக்கு வரும் நாட்களில் அந்த மாந்தோப்புக்குள் தான் சுற்றிக் கொண்டிருப்பான் கிருஷ்ணதேவராயன்..
"ஏய் வஞ்சி.. அந்த மாங்கா.. அதுடி.. இந்த அந்த கிளையில.. கொஞ்சம் தள்ளி வாடி.. அங்கதான்.. மூணு மாங்காய் இருக்குது பாரு.."
"இருங்கடி.. பொறுமையா ஒன்னு ஒன்னா சொல்லுங்க மொத்த மாங்காயும்பறிச்சு மரத்த மொட்டை அடிச்சிட்டுதான் வூட்டுக்கு போறோம்.."
"அடிங்க.. யார் வீட்டு மரத்தை யார் வந்து மொட்டை அடிக்கறது.. இறங்குடி கீழே..!" கிருஷ்ணதேவராயனின் கணீர் குரலில் தோழிகள் கல்லெறிந்த சிட்டுக்குருவி கூட்டம் போல் ஆளுக்கொரு பக்கமாய் சிதறி ஓடி விட..
"ஆத்திஇஇ.." என்ற குரலோடு மரத்தின் பச்சை மாவிலைகளுக்கு மத்தியில் அவள் இமைகள் உயர வேல் விழிகள் இரண்டும் இன்னும் பெரியதாக தெரிந்தன..
"இப்ப நீ ஏன் இறங்கி வர்றியா.. நான் மேல ஏறி வரட்டுமா..!"
"இல்ல நானே கீழ இறங்கி வரேன் முதல்ல கண்ண மூடிக்கங்க.."
"என்னத்துக்காம்.."
"ஆன்.. பாவாடை கட்டி இருக்கேன்.. கீழ இறங்கி வரும்போது ஏடாகூடமா நீங்க எதையும் பார்த்துடக்கூடாது இல்ல.."
"அவ்வளவு அறிவு இருக்கிறவ மரத்து மேல ஏறி இருக்க கூடாது.. இப்ப இறங்குறியா இல்லையா.."
"மாட்டேன்.."
"நீ சரிப்பட்டு வரமாட்ட.. இரு நானே மேலே ஏறி வரேன்.."
கிருஷ்ணதேவராயன் மரத்தின் மீது கால் வைக்க..
"இல்ல வேண்டாம் நானே இறங்கறேன்" என்று மரத்திலிருந்து தொப்பென குதித்தாள் வஞ்சிக்கொடி..
திருட்டு விழியோடு தலை குனிந்து நின்றவளை குறுகுறுவென்று பார்த்தான் தேவரா..
மார்பில் கிடந்த பின்னலை பின்னால் சுழற்றி போட்டு அவனை நிமிர்ந்து பார்க்க தேவராவின் பார்வை அங்குலம் அங்குலமாக அவளை விழுங்கிக் கொண்டிருந்தது..
"என்ன இப்படி பாக்கறீக..?"
"எதுக்குடி எந்தோப்புல மாங்காய் திருடுன..?"
"அய்யே.. நான் ஒன்னும் திருடல.. எங்கப்பா நினைச்சா இந்த மாதிரி ஆயிரம் தோப்ப விலைக்கு வாங்கி போடுவாரு தெரியுமில்ல.."
"தெரியாம என்ன..? அப்புறம் என்ன மயித்துக்கு எந்தோப்புல வந்து மாங்காய் திருடுறியாம்..?"
"அது.. இந்த தோப்பு மாங்காதான் குண்டு குண்டா கண்ண உருத்துது பார்க்கும்போதே நாக்குல எச்சி ஊறுது.."
"எனக்கும்தான் கண்ணு கூசுது.. எச்சி ஊறுது..! நானும் கை வச்சு குண்டு மாங்காவ பறிச்சுக்கவா.."
"அய்யே.. உங்க பார்வை பேச்சு எதுவும் சரி இல்ல.. நான் போறேன்.." அவள் திரும்பி நடக்க..
"நீ போ.. உங்கப்பன்கிட்ட நான் பேசிக்கறேன்.." அவள் முதுகின் பின்னால் உரக்க சொன்னான் தேவராயன்..
வஞ்சி திடுக்கிட்டு விழிகளை உயர்த்தினாள்..
வேகமாக அவனிடம் வந்தவள் "எங்க அப்பா கிட்ட என்ன பேச போறீக.. ஏற்கனவே உங்களுக்கும் அவங்களுக்கும் பிரச்சினையாச்சே.." படபடப்போடு கேட்க..
"அதனால என்ன.. எத்தன தலை உருண்டாலும் பரவாயில்ல.. உங்க வீட்டுக்கு வந்து நீ என் தோப்புல மாங்காய் திருடுனத பத்தி நியாயம் கேட்காம வுடமாட்டேன்.." என்றான் அவன்..
"இல்ல.. வேண்டாம்.. அப்பா கிட்ட சொல்லிடாதீக.."
"அப்ப பறிச்ச மாங்காயை திரும்பி குடு.."
"அய்யோ.. பறிச்சு போட்ட மாங்காயெல்லாம் பொறுக்கி எடுத்துப்புட்டு என்ன மட்டும் அம்போன்னு விட்டுட்டு போயிட்டாளுகளே.." வஞ்சி கையை உதறினாள்..
"அதெல்லாம் எனக்கு தெரியாது என் மாங்காய் எனக்கு வேணும்.."
"என்கிட்ட இல்லங்கறேன்.."
"பொய் சொல்லாதடி..! அதான் ஒரு ஜோடி மாங்காவ ஒளிச்சு வச்சுருக்கியே.."
"ச்சீ இப்படியெல்லாம் பேசினா எனக்கு கோபம் வரும் ஆமா.."
"ஆமா சும்மாவே அந்த மூக்கு நுனியும் உதடும் சிவந்துதான் கிடக்குது.. இதுல கோபம் வேற வந்துட்டா.. அம்மாடியோவ்.. கன்னமும் சிவக்குமில்ல.." என்று கீழ் உதட்டை நாவால் ஈரப்படுத்தினான் தேவரா..
"இப்ப நான் என்ன செய்யணும்ங்கறீங்க.."
"என்ன செய்ய.. திருடுன மாங்காக்கு நஷ்ட ஈடா இரண்டு முத்தம் குடு.."
"ஆத்தி..! இதெல்லாம் ரொம்ப தப்பு.."
"என்னடி தப்பு.. வாங்குன கடனுக்கு வட்டி போட்டு உங்க அப்பன் நிக்க வச்சு பணத்தை வாங்கல..? நான் மட்டும் போனா போகுதுன்னு விட்டுக் கொடுக்கணுமாக்கும்.."
"அப்பா கிட்ட வாங்கின கடன பத்தி என்கிட்ட ஏன் பேசுறீக..?"
"நீ திருன மங்காவை பத்தி தான் பேசிகிட்டு இருக்கேன் முத்தம் குடுக்குறியா இல்ல.. உன் அப்பாவுக்கு போன் பண்ணட்டுமா..! சேர்மன் இப்போ ஆளுங்களோட ஆபீஸ்லதானே இருப்பாரு.." அவன் போனை எடுக்க அவசரமாக தேவராவின் கீழ் உதட்டை கவ்வி பிடித்தாள் வஞ்சி..
கண்கள் நிறம் மாறி.. சிலையாக அப்படியே நின்றிருந்தான் தேவரா..
சில நொடிகளுக்கு பின் மெல்ல விலகி.. "நீங்க கேட்டத தந்துட்டேன் அப்பாகிட்ட சொல்லிறாதீக.." என்று கண்கள் படபடத்து அப்பாவியாய் நிற்க..
"மொத்தம் 28 மாங்கா.."
"அதுக்கு..?" வஞ்சி முழி பிதுங்கியது..
"ஒரு மங்காவுக்கு ரெண்டு முத்தம் மொத்தம் 56 முத்தம் தரனும்.."
"இதெல்லாம் அநியாயம்.. ஒரு மாங்காய் கூட நான் டேஸ்ட் பார்க்கல தெரியுமா.."
"அதான் இப்ப என் உதட்ட கடிச்சு டேஸ்ட் பார்த்தியே அப்புறம் என்ன.." ஆழ்ந்த பார்வையோடு மீண்டும் கீழுதட்டை நாவால் நனைத்தான்..
"ச்சீ..!"
"ச்சியா.. இருடி உங்க அப்பனுக்கு.."
மீண்டும் அவன் இரு உதடுகளையும் சேர்த்து சிறை பிடித்தாள் வஞ்சி.. அவன் வாயை திறக்க முடியாதபடிக்கு தன் பற்களால் தேவராவின் உதடுகளை அழுத்தி பிடிக்க.. அந்த ஈரமான இதழ்களின் கிடுக்குபிடியில் சித்தம் கலங்கி போனான் கிருஷ்ண தேவராயன்..
இரு கைகளால் அவளை சேர்த்து அணைத்துக் கொண்டவன் அப்படியே தூக்கிக் கொண்டு மரத்தின் மறைவுக்குள் சென்றான்..
"என்ன.. என்ன?" அவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்க்க..
"ம்ம்..நீ என் உதட்ட டேஸ்ட் பண்ண மாதிரி நானும்.." என்றவன் அவள் அதற்கு மேல் பேச பொறுமை இல்லாதவனாய் அவள் மோவாயை பற்றி இதழ்களை கவ்விக்கொண்டான்..
ஆழ்ந்த முத்தம்..
"போதும்.. போதும் வலிக்குது..!" அவனிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு உதட்டை துடைத்தபடி மூச்சு வாங்கினாள் வஞ்சிக்கொடி..
"நல்லா வலிக்கட்டும்.. நான் ஊருக்கு வந்து முழுசா 1 1/2 நாள் ஆச்சு.. என் கண்ணுல படாம டிமிக்கி குடுக்குற நீயி.. ஞாயிற்றுக்கிழமை லீவுல கூட தவறாம ஊருக்கு வர்றது உன்ன பாக்க தான தெரியாதா உனக்கு..?" அவன் கண்களில் உரிமை கோபம்..
"ஏன் தெரியாம..! வீட்ல இருக்குறவங்கள ஏமாத்திட்டு வெளியே வர வேண்டாமா.. யாராவது பார்த்து வீட்ல சொல்லிட்டாங்கன்னா அப்புறம் எல்லாம் பாழா போயிடுமே.."
"என்ன பாழா போகும்.. நீ எனக்கானவ.. பிரச்சனை வந்தா வரட்டும்.. யாரு சம்மதிக்கலைன்னாலும் உன்னைய தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன் தெரியும் இல்ல.."
"எல்லாம் தெரியும்..!"
"ஏன்டி மாங்கா திருட வெளியே வர முடியுது.. மாமன பாக்க வர முடியலையோ..!" மரத்தோடு சேர்த்து அவளை நெருக்கினான்..
"மாங்காய் திருட வந்ததே மாமன பாக்கத்தானே..!" அவள் பதிலில் தேவராயனின் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டன..
"வர வர ரொம்ப அழகாயிட்டே போறீக.." வஞ்சி அவன் மீசையை முறுக்கி விட்டாள்..
"அப்படிங்கற.. அதனாலதான் டவுன் பொண்ணுங்க என்னை வெச்ச கண்ணு வாங்காம பாக்குதுகளோ.." கண்களை குறுக்கி குறும்பாக சிரித்தான்..
கோபத்தில் மூக்கு நுனி சிவந்து போக வேகமாக அவன் தலைமுடியை கலைத்துவிட்டு புஜத்தில் பட்டு பட்டென்று அடித்தாள் வஞ்சி.. அவள் இரண்டு கரத்தையும் பற்றிக்கொண்டு வஞ்சியின் நெஞ்சோடு சாய்ந்தான் தேவரா..
"ஏய்ய்..ய் மாடு முட்டி.. அடிக்காதடி.. எத்தனை பேர் பார்த்தா என்ன.. என் கண்ணு உன்ன தாண்டி வேற எங்கேயும் அலை பாயாது..!"
"அப்ப எங்கிட்ட..?"
"கண்டமேனிக்கு எல்லை மீறும்..!" என்று கண் சிமிட்டினான்..
"ரொம்ப மோசம் மாமா நீங்க..!"
"ஆமா.. எனக்கே தெரியுது.. உன்னய பக்கத்துல வைச்சிக்கிட்டு காமம் முத்தி போய் கண்டபடி மனசு அலைபாயுது.. என்ன செய்ய..? என் வயசு அப்படி.." பெருமூச்சு விட்டான்
"அப்ப என் மேல காதல் இல்ல..! காமம் மட்டுந்தானா?" கோபத்தில் மூக்கை சுருக்கினாள்.
இரண்டு கைகளால் சேர்த்து அவளை அணைத்துக் கொண்டான்..
"காதல் காமம் எல்லா கழுதையும் ஒன்னுதான்டி.. எதுவாயிருந்தாலும் உன்கிட்ட மட்டும்தான தோணுது.. பொறவு என்னத்துக்கு பிரிச்சு பார்த்துகிட்டு.."
"இப்படி வாரத்துல ஒரு நாள் மட்டும் சந்திக்கிறது எனக்கு பத்தல மாமா..?" வருத்தம் படர்ந்தது அவள் கண்களில்..
"எனக்குந்தான் சுத்தமா பத்தல.. யான வாயில சோளப்பொரி மாதிரி.. நீ கொடுக்கிற முத்தம் நாக்கு நுனியில கூட சேர மாட்டேங்குது.. மனசுக்குள்ள இறங்கி நிறைஞ்சு வழியற மாதிரி என்னைக்குடி முத்தங் கொடுப்ப..?"
"என் கழுத்துல தாலிய கட்டுங்க.. உச்சந் தலையில் இருந்து கால் வரைக்கும் நிறைஞ்சு வழியற மாதிரி முத்த மழையா பொழிஞ்சு புடுதேன்.." வஞ்சி கண் சிமிட்டி சிரிக்க மையலோடு ரசித்து அவள் உதட்டில் முத்தமிட்டான் தேவராயன்..
"எப்ப மாமா என்னைய கல்யாணம் கட்டிக்க போறீக.."
"ரெண்டு மூணு வருஷம் பொறுடி.. உன்னைய சந்தோஷமா வைச்சு காப்பாத்தற அளவுக்கு தேவையான பணத்தை சேர்த்துக்கிட்டு.. என் மகா ராணிய என் கிட்ட கொடுத்துடுங்கன்னு உன் வீடு தேடி வந்து உன் அப்பாரு கிட்ட பொண்ணு கேக்கறேன்.."
"ஆமா.. இந்தா மகாராணியை தூக்கிட்டு போன்னு அப்படியே குடுத்துட்டுதா மறுவேல.." வஞ்சி உதட்டை சுளித்தாள்..
"அவங்க தரலைன்னனா என்னடி.. என் கைய பிடிச்சுகிட்டு என் கூட வர நீ தயாராக இருக்கியா..?"
"ஆமாம்" என்ற தலையசைத்தாள் வஞ்சி..
"அது போதும்.. எப்பவும் இதே உறுதியோடு இரு.. சீக்கிரம் உன்னை தேடி வருவேன்.."
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் வஞ்சிக்கொடி..
"அம்மு.."
"ம்ம்.."
"அடுத்த வாரம் ஞாயித்துக்கிழமை கூட லீவு இல்லடி.."
"ஆத்தாடி.."
"ரெண்டு வாரம் உன்னைய பார்க்க முடியாது.."
"போ மாமா.." சிணுங்கி அவன் நெஞ்சில் குத்தினாள்..
"அதனால ரெண்டு வாரம் தாங்கற மாதிரி நினைச்சு நினைச்சு சந்தோஷப்படுற மாதிரி மாமனுக்கு ஏதாவது தர்றது..?" ஒற்றை புருவம் உயர்த்தி விஷம பார்வையோடு கேட்டான்..
"என்ன தரனுமாம்.." என்று கேட்டவளை ஆழ்ந்த கண்களால் மயக்கத்தோடு பார்த்தவன்.. அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு பக்கத்திலிருந்த சின்ன குடிசைக்குள் நுழைந்தான்..
சில நிமிடங்களுக்கு பிறகு மாராப்பில் விலகியிருந்த தாவணியை சரி செய்தபடி உதட்டை துடைத்துக் கொண்டு.. "போடா.. நீ ரொம்ப மோசம் இனிமே உன்னை பார்க்க வரவே மாட்டேன்.." என்றபடி அங்கிருந்து ஓடிருந்தாள் வஞ்சி..
"இந்தா வஞ்சி.. நில்லுடி..!" என்று அவளை துரத்தியபடி வெளியே ஓடி வந்தவன்.. தூரத்தில் தெரிந்தவளை பார்த்துக்கொண்டே சிரித்தபடி தலையை கோதினான்..
இப்படித்தான் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் வருவதும்.. சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் வஞ்சியின் இதழ்களை வீங்க வைப்பதும்.. முரட்டு தீண்டல்களால் அவள் தேகத்தில் ஆங்காங்கே சிவக்க வைத்து நினைவு சின்னங்களை ஏற்படுத்துவதுமாய் தன் நெஞ்சையும் கண்களையும் நிரப்பி கொண்டு ஊருக்கு புறப்படுவான்..
வாரம் ஒரு முறை.. வஞ்சியை சந்திக்கும்போது ஆவேசமாக அவன் அளிக்கும் முத்தங்கள்.. அவன் ஏற்படுத்தும் காயங்களும் பெண்ணுக்கு வலிக்கத்தான் செய்யும்..
தேவராவின் அதீத காதலும் பல நாட்களுக்கு பிறகு தன்னை காணும் காதலனின் தாகமும் அவளுக்கு புரிகிறது.. சில சமயங்களில் வரம்பு மீறி தொடும் போதும் அவன் விருப்பங்களுக்கு வளைந்து கொடுத்து சிரமங்களை பொறுத்துக் கொள்வாள்..
ஆனால் அந்த வரம்பு மீறுதலும் ஒரு எல்லையோடு நின்று போகும்.. அதையும் தாண்டி தேவரா முன்னேறினால் வஞ்சியின் ஆசை முத்தங்களும் அவள் கொஞ்சல்களும் தேவராவின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்..
இப்படித்தான் நான்கு நான்கு வருடங்களாக மாந்தோப்பிலும் வயல்.. வாய்க்கா வரப்பிலும் கழனியிலும் பழைய மண்டபத்திலும் கோவிலிலும் ரகசியமாக இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்..
தேவராவிற்கு எந்த பயமும் இல்லை.. சொல்லப்போனால் வீட்டில் கூட அவன் காதல் விவகாரம் பெற்றவர்களுக்கும் அப்பத்தாவுக்கும் நன்றாகவே தெரியும்..
"பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாம் தேவரா.. பிரச்சனை வந்து சேரும்" என்ற பெற்றவர்களின் அறிவுரையை அவன் காது கொடுத்து கேட்கவில்லையே..! ஆனால் அப்பத்தா அவன் காதலுக்கு முழு சப்போர்ட்..
காதலனைத்தான் ரகசியமாக சந்திக்க வேண்டி இருக்கிறது என்றால் காதலனின் அப்பத்தாவையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய நிலை வஞ்சிக்கு..
அப்பத்தாவை அழைத்துச் சென்று சாக்லேட் வாங்கி கொடுப்பதும்.. பேத்தியின் கையால் தின்பண்டங்கள் வாங்கி தின்பதும் அவ்வப்போது நடக்கும் காதல் தூது கூத்துகள்..
எல்லாம் சரிதான் அவர்கள் காதல் எங்கிருந்து ஆரம்பித்தது..
கிருஷ்ணதேவராயன் வஞ்சியை சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்..
மஞ்சள் நிற தோல் பையை மாட்டிக் கொண்டு அவன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த காலகட்டங்களில்.. பாவாடை சட்டையோடு ரெட்டை ஜடையோடு ஓடி வந்து அவன் முதுகில் தலையால் முட்டி விட்டு முன்புறமாக ஓடிச் செல்லும் போது..
"ஏய் மாடு முட்டி.. என்னைக்காச்சும் ஒரு நாள் முட்டுற தலையிலிருந்து குடுமியை வெட்டி எடுக்கல நான் கிருஷ்ணதேவராயன் இல்லடி..!" என்று ஓடிக் கொண்டிருப்பவளின் முதுகை துரத்திச் செல்லும் அவன் சத்தத்தைத் தொடர்ந்து இதழில் புன்னகை ஒன்று அரும்பி நிற்கும்..
இப்படி மாடு போல் ரெட்டை ஜடை ரிப்பனை கொம்பு போல் சீவிக் கொண்டு அவன் முதுகிலும் வயிற்றிலும் முட்டுவதும் நறுக்கென கையில் கிள்ளிவிட்டு ஓடுவதுமாக குறும்போடுதான் கழிந்தன பள்ளி நாட்கள்..
சின்னஞ்சிறு வயதில் காதல் ஈர்ப்பு மண்ணாங்கட்டி எல்லாம் ஒன்றுமில்லை.. விளையாட்டிலும் படிப்பிலும் முதல் மாணவன் என்பதால் அந்த பத்தாம் வகுப்பு வரையிலிருந்த அரசு பள்ளியில் அவனை தெரியாத மாணவ மாணவிகள் இல்லை..
அவனோடு நட்பு பாராட்ட விரும்புபவர்களின் மத்தியில்.. இப்படி சீண்டி வம்பிழுத்து அவன் கவனத்தை தன் பக்கம் திசை திருப்ப முயலும் ஒரு சின்ன வேடிக்கை விளையாட்டு இவளுடையது..
"இந்தாரு.. சும்மா சும்மா என் வம்புக்கு வந்தா அப்புறம் ஜாக்கிரத..! " என்று எச்சரித்தாலும் வஞ்சி அடங்குவதில்லை..
வஞ்சிக்கும் அவனுக்கும் ஆறு வயது வித்தியாசம்.. கிட்டத்தட்ட அவன் தங்கை அற்புதாவின் வயது..
அவன் பத்தாம் வகுப்பில் இருக்கையில் இவள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை சின்ன குட்டியை அதற்கு மேல் என்ன சொல்லி மிரட்ட முடியும்.. அந்த வயதில் வஞ்சிக்கு அவன் சட்டையை பிடித்து இழுத்து விட்டு தேவராயன் திரும்பி பார்ப்பதற்குள் குடுகுடுவென்று ஓடி விடுவதில் அலாதி இன்பம்..
சொந்த ஊர் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்ததால் பதினோராம் வகுப்பிற்காக பக்கத்து ஊர் வரை சென்று படிக்க வேண்டி இருந்தது..
அந்த காலகட்டத்தில் பள்ளி செல்ல பேருந்துக்காக காத்திருக்கும் போதும்.. விடுமுறை நாட்களில் கழனியில் தோழர்களுடன் விளையாடும் போதும் புத்தகப் பையை தோளுக்கு பின்னால் பிடித்தபடி அவனை பார்க்கும்போது கண்சிமிட்டி சிரித்துவிட்டு செல்லுவாள் வஞ்சி.. சில நேரங்களில் அம்மா பாக்கியத்தின் கையைப் பற்றிக் கொண்டு துள்ளி துள்ளி அந்த பக்கமாக நடந்து செல்லும் போது பார்த்திருக்கிறான்..
அருமை மீசை முளைத்திருந்த காலங்களில் பாவாடை சட்டையோடு இரட்டை ஜடையை நெஞ்சுக்கு கீழ் தொங்கவிட்டு குட்டி உருவமாய் தன்னை சுற்றி சுற்றி வரும் பெண்ணை பார்த்து ஒரு சிநேகித எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை..
"என்ன மாடுமுட்டி.. பாத்துட்டு பாக்காத மாதிரி போற..?"
"மாடு முட்டின்னு சொன்னா அப்புறம் எங்க அப்பா கிட்ட போய் சொல்லிடுவேன்.. என் பேரு வஞ்சிக்கொடி.."
"அதெல்லாம் கிடையாது.. நீ மாடு முட்டி தான்..! மாடு மாதிரி கால மண்ணுல தேச்சுக்கிட்டு ரிப்பன கொம்பு மாதிரி நீட்டிக்கிட்டு.. ஓடி வந்து முட்டி முட்டி என் குறுக்கெலும்ப ஒடச்சதெல்லாம் மறந்து போச்சா உனக்கு..!" ராயன் சொல்ல உடனிருக்கும் நண்பர்கள் சத்தமாக சிரிப்பார்கள்.. அந்த கோபத்தில் புசுபுசுவென மூச்சு வாங்கி கீழே கிடக்கும் நெல்லிக்காய் அளவு கல்லை தூக்கி அவன் மீது அடித்து விட்டு ஓடுவாள் வஞ்சி..
வஞ்சி வயதுக்கு வந்த பிறகு அவனுடனான பேச்சு வெகுவாக குறைந்து போனது.. தேவராயன் பட்டணத்திற்கு படிக்க சென்றுவிட அவனை பார்க்கும் தருணம் கூட வைக்கவில்லை..
தேவரா எப்போதாவது பெரியசாமியை பார்ப்பதற்காக சேர்மன் வீட்டிற்கு வரும்போது.. உள்ளுக்குள்ளிருந்து சாய்ந்த வாக்கில் இரு பெரிய கண்கள் மட்டும் எட்டி பார்த்து பட்டாம்பூச்சி போல் படபடக்கும்..
"அடேங்கப்பா என்ன கண்ணு!" என்று உள்ளுக்குள் பிரமித்து போவான் தேவரா..
"கண்ணே இப்படின்னா அப்ப முகம் எம்புட்டு அழகா இருக்கும்..?" அவளை பார்க்க நெஞ்சுக்குள் ஆர்வம் படபடக்கும்.. ஆனால் பட்டாம்பூச்சிகள் சில நொடிகள் அவன் கண்முன்னால் பறந்து விட்டு மீண்டும் கூட்டுக்குள் சென்று அடங்கிக் கொள்கிறதே..!
"சேர்மன் பொண்ணு அம்புட்டு அழகுடா" என்று அவன் தோழன் முத்தரசன் சொல்ல கேட்டிருக்கிறான்.. "அப்படி என்ன அவ உலக அழகியா..?" அலட்சியமாக உதடு வளைத்தாலும்.. வஞ்சி கொடியின் அழகான கண்களை பார்த்தவனுக்கு அவள் முழு உருவத்தையும் காண அத்தனை ஆவல்..
பெரும்பாலும் வஞ்சிக்கொடி வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை.. கிருஷ்ணதேவராயனும் வெளியூரில் தங்கி படித்து வந்ததால் நல்ல நாள் கிழமைகளில் கூட வீடு வந்து தங்க முடியாத சூழ்நிலை.. அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை.. கிருஷ்ணதேவராயனும் அதற்காக பெரிதாக மெனக்கெடவில்லை.. அந்தப் பெரிய கண்களை பார்க்கும்போது மட்டும் அவள் முகத்தை காண ஆவல் உண்டாகும்.. அந்த கணத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் அவளை பற்றி யோசித்து மருகியதோ உருகியதோ கிடையாது.. அப்படி ஒன்றும் வஞ்சி தேவராயனின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை.. அழகான பட்டாம்பூச்சி பறந்து செல்லும்போது பார்த்து ரசிப்பதை போல் பார்க்கும் தருணங்களில் மட்டும் அந்த கண்களை ரசிப்பான் அவ்வளவுதான்.. படிப்பில் கவனமாய் இருந்தவனுக்கு மற்ற எதிலும் நாட்டம் செல்லவில்லை..
கஜேந்திரன் பெரிய சாமியிடம் தகராறு செய்த பின்.. இரண்டு குடும்பங்களுக்கும் இடையே பகை என்றான பிறகு கஜேந்திரன் கண்ணபிரான் குடும்ப சம்பந்தப்பட்ட அனைத்தையும் அறவே வெறுத்தான் தேவராயன்..
நல்ல வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து கஜேந்திரனின் கடனை அடைக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவன் முழு கவனமும் இருக்க வஞ்சிக்கொடி என்பவளின் அழகான கண்கள் கிருஷ்ணதேவராயன் சிந்தையை விட்டு தொலைந்து போயிருந்தது..
கஜேந்திரனின் கடனை அடைத்து பொருளாதார ரீதியாக தன் குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த காலம் அது.. அப்போதுதான் வஞ்சி கொடியை மீண்டும் பார்க்க நேர்ந்தது..
தொடர்ச்சியான மூன்று நாட்கள் விடுமுறையில் ஊர் வந்து சேர்ந்திருந்தான்..
கிணற்றில் குளித்து.. தன் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடி.. பைக்கில் ஊர் சுற்றி.. கோவிலுக்கு செல்லும் இளஞ்சோட்டு பெண்களை கேலி கிண்டல் செய்து என விடுமுறை அருமையாகத்தான் கழிந்தது அவளைப் பார்க்கும் வரையில்..
தழைய தழைய மஞ்சள் நிற பட்டு பாவாடையும் அதற்குப் பொருத்தமாக மஞ்சள் நிற பார்டர் வைத்த ஜாக்கெட்டும் அரக்கு நிற தாவணியும் அணிந்து.. கனத்த தங்க கொலுசு சத்தத்தோடு இரட்டை ஜடை பாம்பு போல் நீண்டு.. மார்பைத் தொட்ட மாங்காய் செயின் நடைக்கேற்ப ஊஞ்சலாடும்படி தன்னை கடந்து சென்றவளை பார்த்து மூச்சு விட மறந்தான் கிருஷ்ணதேவராயன்..
"இவ..?"
"என்ன தெரியாத மாதிரி கேக்குற.. சேர்மன் பொண்ணு வஞ்சிக்கொடி.." முத்தரசன் சொல்ல அவன் கண்கள் விரிந்தன..
"வஞ்சிகொடியா..?"
"ஆமாலே.."
"நம்ம வஞ்சி கொடியா..?"
"எது.. நம்ம வஞ்சி கொடியா.. சேர்மன் காதில் விழனும்.. உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவாப்ல.. ஏற்கனவே உங்க வீட்டுக்கும் அவங்களுக்கும் வாய்க்கா தகராறு.. இதுல பொம்பள தகராறு வேறயா..! லீவுக்கு வந்தியா.. சந்தோசமா இருந்தியா புறப்பட்டு போனியான்னு இரு..! அத வுட்டு போட்டு தேவையில்லாத வேலை பார்த்து வம்ப விலை கொடுத்து வாங்காத தேவரா.. அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்.." நண்பனின் எச்சரிக்கை மொழிகள் எதுவும் அவன் காதுகளில் விழவில்லை..
தோழிகளோடு சென்று கொண்டிருந்த வஞ்சிக்கொடியை பின்தொடர்ந்து நடந்தான்..
"இந்தா பாருடி தேவராண்ண.. நம்ம பின்னாடியே வருது.." தோழிகள் சொன்னதில் அவளும் திரும்பி பார்த்தாள்..
ஆழி போல் ஆழமான அகண்ட கண்கள் அவனை கட்டி இழுத்தது.. வஞ்சிக்கொடி அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள்..
தற்செயலோ.. இருவருக்கேற்ப சூழ்நிலை அமைகிறதோ அல்லது அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார்களா தெரியவில்லை..
அடிக்கடி இருவரின் விழிகளும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன..
திருவிழா.. ஊருக்குள் புதிதாக துவங்கப்பட்டிருந்த பொருட்காட்சி.. மார்க்கெட்.. கடைத்தெரு எங்கு சென்றாலும் யார் யாரை சுற்றி வருகிறார்கள் என்று தெரியாமலேயே அடிக்கடி சந்தித்துக் கொள்ள வேண்டியதாய் போயிற்று..
அந்தக் கூட்டத்தில் எங்கேயோ ஒரு மூலையில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருப்பவன் சட்டென்று காணாமல் போனாலும் வஞ்சியின் விழிகள் தவிப்போடு அவனைத் தேடுவதை கண்டுகொண்டு மறைவில் நின்று புன்னகையோடு இதழ் கடிப்பான் கிருஷ்ணதேவராயன்..
"புடிச்சிருக்கு சைட் அடிக்கறேன்.. அவ யார் மவளா இருந்தா எனக்கென்ன..! அழகா இருக்கா பார்க்கறேன்.. அவ்வளவுதான்.." நண்பன் முத்தரசுவிடம் தத்துவம் பேசுவான்..
விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்காக டவுனுக்கு புறப்பட்டவன் அங்கேயே விட்டு செல்ல முயன்ற போதிலும் அவள் நினைவுகள் கிருஷ்ணதேவராயனை துணையாக துரத்தி பின் தொடர்ந்தன.. கனவுகளில் கூட அவனை இம்சித்தாள் வஞ்சிக்கொடி..
அதன்பிறகு ஊருக்கு வரும்போதெல்லாம் அவளை துரத்தி பிடித்து பின் தொடர்வதும்.. வஞ்சிக்கொடியும் சூரியனை கண்டதும் மலரும் தாமரைப் போல் அவன் நிற்கும் இடங்களில் எல்லாம் விழிகளை திருப்புவதுமாக சத்தம் இல்லாமல் ஒரு காதல் வளர்ந்து கொண்டே இருந்தது..
ஓரிரு வார்த்தைகளில் ஆரம்பித்து.. ஆங்காங்கே நின்று மௌனமாக கண்களால் காதலித்து.. பிறகு கைத்தொட்டு பேசி.. வாய்மொழியாய் காதலில் உருகி.. முத்தமிட்டு கட்டியணைத்து.. இதோ இப்போது நீ இன்றி நான் இல்லை என்ற ரீதியில் வந்து நின்றது அவர்கள் காதல்..
அடுத்து திருமணம்.. எப்படி..?
கண்ணபிரான் வாழ்க்கையில் கண்ணகி எப்படி வந்தாள்..
தொடரும்..

Last edited: