- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
"கண்ணு.. நம்ம ஸ்கூல்ல பொம்பள புள்ளைகளுக்கு இந்த தற்காப்பு கலை.. அப்புறம் குட் டச்.. பேட் டச்.. இதெல்லாம் சொல்லித் தர ஆளு வந்திருக்குது..! நீ என்ன பண்ற.. நம்ம சார்புல எல்லாத்தையும் போன்ல போட்டோ எடுத்துடு.. எலக்ஷன் டைம்ல உபயோகப்படும்..!" கண்ணபிரான் வஞ்சியை அழைத்து சொல்ல அவளும் சரி என்று சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டாள்..
"ஒரு நிமிஷம் கண்ணு..! பிரச்சனை ஏதாவதுன்னா உடனே எனக்கு போன் போட்டு சொல்லு.. அடுத்த நிமிஷம் அங்க வந்து நிப்பேன்.." இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இறுக்கமான குரலில் அவன் சொன்னது யாரை என்று வஞ்சிக்கு தெளிவாக புரியவே.. சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டாள்..
பொய்கை வடிவேலனை குளிக்க வைத்து உடை மாற்றிய படியே இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த கண்ணகிக்கு வேதனையோடு சிரிப்புதான் வந்தது..!
தற்காப்பு கலைகளும் குட் டச் பேட் டச் இதையெல்லாம் தெரிந்து கொண்டால் மட்டும் என்ன பலன்..
திருமணத்திற்கு பின் உறவுகளின் பிடியில் அடிமையாக சிக்கி தவிக்கும் பெண்ணிற்கு இந்த கலை.. ஞானம் எதுவுமே கை கொடுப்பதில்லை..!
"ம்மா..!" தூணில் சாய்ந்த அமர்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தவளின் மடியில் அமர்ந்திருந்த பொய்கை வடிவேலன் அவள் தாடையை தொட்டு திருப்பினான்..
"என்ன செல்லக்குட்டி..!"
"எங்க ஸ்கூல்ல ஒரு பையன் இருக்கான்.. அவன் சூப்பரா படிக்கிறான்னு எங்க மிஸ் பாராட்டிக்கிட்டே இருப்பாங்களா..! ஆனா அவன் கொஞ்சம் நொண்டி நொண்டி நடப்பான்.."
"இப்படி.. இப்படி.." என்று எழுந்து சென்று அவனைப் போலவே நடந்து காண்பித்து விட்டு மீண்டும் ஓடி வந்து அன்னையின் மடியில் வந்து அமர்ந்து கொண்டான் பொய்கை வடிவேலன்..
"அதனால எல்லாரும் அவன சப்பானி.. சப்பானின்னு சொல்லி கிண்டல் பண்றாங்க..!" என்ற குழந்தை விவரம் அறியாது அவனும் சிரிக்க..
"சரி..? சாரி என்ன செஞ்சீங்க?" என்று புருவங்களை உயர்த்தி கேட்டாள் கண்ணகி..
"நா.. நான்..! நானும் சிரிச்சேன்.."
"தப்பு வடிவேலா.. அப்படி செய்யக்கூடாது.." சற்று கடுமையாக கண்டித்தாள் கண்ணகி..
"ஏன்மா..! அவன் நடக்கும்போது எனக்கு சிரிப்பு வருதே..!"
"உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கறது.. இந்த உலகத்தில் மனுஷங்க ரெண்டு வகை தான்.. ஒண்ணு கூட்டமா நின்னு கைகட்டி ஏளனமா ஒருத்தனை பார்த்து சிரிக்கிறவங்க.."
"இன்னொரு வகை.. அந்த சிரிப்பையெல்லாம் பொருட்படுத்தாம தன்னம்பிக்கையோட தன்னுடைய இலக்கை நோக்கி நடக்கக்கூடியவங்க..!"
"நீ என்ன செய்யப் போற.. கூட்டத்துல ஒருத்தனா நின்னு
கை கொட்டி ஏளனமாக சிரிக்க போறியா..? இல்ல அந்த ஒத்த ஆளா எதையும் பொருட்படுத்தாம முன்னேறி பெரிய ஆளா வரப் போறியா..?"
"நான் முன்னேறி பெரிய ஆளா வருவேன் மா.." கையை உயர்த்தி காண்பித்தான் வடிவேலன்..
"சூப்பர்.. இப்படித்தான் இருக்கணும்.. இனிமே அந்த பையனை பார்த்து நீ சிரிக்க கூடாது சரியா..!" என்று குட்டியின் பிஞ்சு கன்னத்தை கிள்ளினாள்..
"நிச்சயமா சிரிக்க மாட்டேன்" என்று அம்மாவின் கழுத்தை பாசத்தோடு கட்டிக் கொண்டான் அவள் செல்ல மகன்..
"ம்கூம்.." தொண்டையை கனைக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பாராமலேயே யாரென புரிந்து அடித்து பதறி எழுந்தாள் கண்ணகி..
தந்தையை பார்த்ததும் புத்தக பையை எடுத்துக்கொண்டு அவனிடம் ஓடி வந்தான் பொய்கை வடிவேலன்..
'அப்பா நான் தயாராகிட்டேன் ஸ்கூலுக்கு போகலாமா..!" இரண்டே புத்தகங்களும் ஒரு சிலேட்டும் கொண்ட குட்டி பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டு பெயருக்கேற்றார் போல் நெற்றியில் கீற்றாக திருநீறு வைத்து இமைமுடி அடர்ந்து அழகு விழிகளோடு கள்ளங்கபடமில்லாமல் சிரித்தவனை மலர்ச்சியோடு நோக்கினான் கண்ணபிரான்..
"ஓ போகலாமே..!" என்று குழந்தையை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவன்.. "நீ போய் வண்டியில உட்காரு.. அப்பா சீக்கிரமே வந்துருவேனாம்.." என்று பிள்ளையை இறக்கிவிட அது உற்சாகமாக ஸ்கார்பியோவை நோக்கி ஓடியது..
தன் கட்சி அலுவலகத்திற்கு செல்ல போகிறான் போலிருக்கிறது.. வெண்ணிற சட்டையும் பிளாக் பேண்ட்டும் அணிந்திருந்தான்..
அவன் பார்த்த பார்வையில் கண்ணகிக்கு காது மடல் சூடேறியது..!
"நிறைய பேசுறியே..! அது சரி அரசியல்வாதி பொண்டாட்டியாச்சே.. தானவே பேச்சு வரத்தான் செய்யும்.."
"ஆமா..! ஆனா நீ இவ்வளவு பேசக்கூடாதே..! மனசுல பெரிய புத்திசாலின்னு நினைப்போ.. என் புள்ளைக்கு அறிவுரை சொல்லுதே.. ஏய்.. இங்க பாரு.." சொடக்கு போட்டு தலை தாழ்ந்திருந்தவளை தன் பக்கம் திருப்பினான்..
"என் புள்ள அவன் இஷ்டப்படிதான் இருப்பான்..! நீ சொல்ற மாதிரி உலகத்துல ரெண்டு வகையான ஆளுங்க மட்டும் இல்ல.. மூணாவது வகை ஒன்னு இருக்குது.. தெரியுமா உனக்கு..?" என்று கேட்க கண்ணகி ஒன்றும் புரியாமல் விழித்தாள்..
"ஏளனம் செய்யறவன் முன்னேறி மேல போறவன்.. மூணாவது ஆளு.. காலம் முழுக்க போடுற சோத்த தின்னுட்டு அடிமையா வாழற வேலைக்கார ஜாதி..
நீ அந்த மூணாவது ரகம்.." என்று உதடுவளைக்க கண்ணகியின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது..
"சரி செருப்புல தூசி பட்டிருக்கு உன் சீலையால அத தொடச்சி வுடு..! வெளியே போவனும்" என்று பிடரியை வருடியபடி அலட்சியமாக சொல்ல.. சுற்றும் முற்றும் பார்த்தாள் கண்ணகி.. அங்குமிங்குமாக வேலையாட்கள் போவதும் வருவதுமாக இருந்தனர்..
"பாருடா மகாராணிக்கு தன்மானம் பொங்குதோ..! புருஷனோட செருப்பை தொடைக்க முடியல அப்படித்தானே.."
"அதெல்லாம் ஒன்னும் இல்லங்க.." என்றவள் முழங்காலிட்டு கீழே அமர்ந்து தன் புடவை முந்தானையால் தூசி படர்ந்திருந்த அவன் செருப்பை துடைத்துவிட்டு எழுந்திருக்க முயலும் போது அடுத்த கால் செருப்பையும் அவளிடம் நீட்டினான்.. நிமிர்ந்து பார்த்தவள் அந்த அந்த கால் செருப்பையும் துடைத்துவிட்டு எழுந்தாள்..
அதாகப்பட்டது நீ என்னதான் அறிவுபூர்வமாக பேசினாலும் உன் நிலை இதுதான் என்று மட்டந்தட்டி புரிய வைக்க முயற்சிக்கிறானாம்.. "மதியம் கோழிக்கறி குழம்பு ஆக்கிவை வீட்டுக்கு வருவேன்.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட.. சுற்றியிருந்தவர்கள் தன்னையே இளக்காரமாய் பார்ப்பது போன்ற உணர்வில் கூனிக்குறுகி அங்கிருந்து நகர்ந்தாள் கண்ணகி..
கணவன் மனைவி அன்பிலும் அன்னோனியத்திலும் ஒருவருக்கொருவர் தலைவணங்கி கடமையாற்றுவது வேறு..! அடிமைத்தனம் வேறல்லவா.. வேலைக்காரர்களில் ஒருவராக நடத்தப்படும் இந்த இழிநிலைதான் அவளை அடித்து நொறுக்குகிறது..
அவள் ஒன்றும் செல்வ சீமாட்டியல்ல.. ஆடம்பரம் வசதியை அவள் என்றுமே எதிர்பார்த்ததில்லை.. ஒரு மனைவிக்கான அங்கீகாரம் மரியாதை அதைத்தானே எதிர்பார்க்கிறாள்..
பருவ வயதில் அவள் கண்ட கனவுகளுக்கு எதிர் மாறாக உடம்பு நோக வீட்டு வேலைகளும் அவமானங்களும் மட்டுமே நிறைந்திருக்கும் இந்த திருமண
வாழ்க்கையும் சரி கண்ணபிரானும் சரி அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை..
வெளியிலிருந்து வந்திருந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியும் பெண் மருத்துவரும் அந்த கூடத்தில் அமர்ந்திருக்க.. பெண் பிள்ளைகள் அவர்களுக்காக போடப்பட்டிருந்த இருக்கையில் வரிசையாக அமர்ந்திருந்தனர்..
குட் டச் பேட் டச் பற்றிய விழிப்புணர்வு.. அதைத்தொடர்ந்து மாதவிடாய் வந்தால் ஒரு பெண்ணின் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழும்.. சானிடரி நாப்கினை சுகாதாரமாக எப்படி பயன்படுத்துவது என்பதை பெண் மருத்துவர் தெளிவாக விவரித்து முடித்திருந்தார்..
வயதுக்கு வராத பிள்ளைகள் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டனர்.. மற்ற பிள்ளைகள் ஆர்வமாக தெளிவாக கேட்டுக்கொண்டனர்..
அந்த அதிகாரி ஒரு பெண் இக்கட்டில் மாட்டிக்கொண்டால் எப்படி தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஆணை வைத்து செயல்முறை விளக்கம் தந்து கொண்டிருந்தார்..
வஞ்சிக்கொடி ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக தனது அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தாள்..
அந்த ஹாலின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு குள்ள உருவம் ஓடிக் கொண்டிருக்க வஞ்சிக்கொடி கண்கள் சுருக்கி அந்த இடத்தை உற்றுப் பார்த்தாள்..
"வாம்மா மின்னலு..!" எனும் விதமாக அழகிதான் அங்கும் இங்குமாக வாசலை கடந்து ஓடிக் கொண்டிருந்தார்..
"இந்த கிழவி ஏன் இங்கன சுத்துது" என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த பெரிய கூட்டத்தில் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் தேவரா..
"ஏய்.. தேவராண்ணன்.." வயது பிள்ளைகள் கூச்சல் போட "சைலன்ஸ்.. அமைதியா இருங்க பிள்ளைங்களா..!" என்று அடக்கினார் டீச்சர் ஒருவர்..
வந்திருந்த பெண் அதிகாரி தேவராவுடன் சினேகமாக கைகுலுக்கி புன்னகை பூத்தார்..
"பாருடா கூட்டிட்டு வந்தது என்னோட அண்ணன்.. ஆனா கைகுலுக்கி சிரிக்கிறது இவர்கிட்டயா..!" வஞ்சி உதடு சுழித்தாள்..
"இனி அடுத்த மூவ்ஸ்.. எல்லாத்தையுமே இந்த அண்ணா உங்களுக்கு சொல்லித் தருவார்..
எனக்கு முக்கியமான வேலை இருக்கிறதால நான் இப்போ இங்கிருந்து புறப்படறேன்.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி செல்ல.. இந்தப் பெண் அதிகாரி தான் இவனை வரவழைத்திருக்கிறார் என்று புரிந்து கொண்டாள் வஞ்சி..
"அட அடடா.. இந்த சின்ன பொண்ணுங்க கூச்சல் என்ன.. அந்த அம்மாவோட குழைசல் என்ன.. இவங்க வேற எதுக்காக வாத்தியார் மாதிரி இவ்வளவு அழகா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்காங்க.." நெஞ்சுக்குள் புகைச்சல் தாங்க முடியவில்லை..
அவள் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்க தவறவில்லை தேவராயன்..
"ஓஹோ பெரிய பெரிய இடங்கள்ல ஐயாவுக்கு நட்பு இருக்குது போலிருக்கே.. பின்ன பெரிய செல்வாக்குள்ள தொழிலதிபர் ஆச்சே.. இல்லாம போகுமா..!" புருவங்களை உயர்த்தி ஒரு மாதிரியாக உதட்டை பிதுக்கினாள்..
"அண்ணா அழகா சிரிக்கிறீங்க.." கூட்டத்தில் ஒரு வாண்டு..
"ஓஓஓஓ.." என்ற சத்தம்..
ஷூ.. என்று அதட்டியவன் காரியத்தில் கண்ணானான்..
அடுத்தடுத்து இரண்டு மூன்று தற்காப்பு கலையின் அம்சங்களை உதவிக்கு வைத்திருந்த ஆணின் மூலம் அங்கிருந்த பெண்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் தேவரா..
அவன் முரட்டு உடற்கட்டும் அடித்து வீழ்த்தும் பாங்கும்.. அந்தக் கூடத்தை நிசப்தமாக்கி பெண்களை மிரள செய்திருந்தது.. வஞ்சியும் ஆடிப் போனாள்..
பொய்யாகத்தான் அடிக்கிறான்.. ஆனாலும் அவன் முகம் போன போக்கு.. அந்த கோபம்.. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரௌத்திரமாய் விழிகளை கூட நிறம் மாற்றி சொல்லிக் கொடுக்கிறான்..
"அதெல்லாம் சரிதான் அண்ணா.. உங்ககிட்ட அடிவாங்குற அண்ணா குட்டியா இருக்காரு.. அதனால ஈஸியா தூக்கிப்போட்டு கழுத்துலயும் கையிலயும் அடிக்கிறீங்க.. உங்கள மாதிரி இவ்வளவு உயரமா.. கர்லா கட்ட கையோட ஒரு ஆள் வந்தா நாங்க என்ன செய்யறதாம்.." ஒரு குட்டி பெண் கேள்வி கேட்க..
இடுப்பில் கை வைத்து கண்கள் சுருக்கி அந்தப் பெண் சொன்னதை கூர்மையாக கேட்டவன் நல்ல கேள்வி என்றபடியே..
"வாடி என் வசந்த முல்ல..!" வாய்க்குள் முணுமுணுத்து குறும்பு கண்களோடு வஞ்சிக் கொடியை பார்த்தான்..
"நீங்க இங்க கொஞ்சம் வாங்களேன்.." என்று தேவரா அழைக்கவும் வஞ்சிக்கொடி விழித்தாள்..
தனிப்பட்ட குடும்ப விவகாரங்களின் மனஸ்தாபங்களையோ கோபத்தையோ இங்கு காட்ட முடியாதே..
இன்னொருவரிடம் போனை கொடுத்துவிட்டு அவனருகில் வந்து நிற்க.. "இப்போ நான் என்ன செஞ்சேன்னு நீங்க பாத்தீங்க தானே.. நான் எப்படி அடிச்சேனோ அதே மாதிரி என்னை நீங்க அடிங்க..!" என்று பின்பக்கம் வந்து அவளை இறுக்கி பிடித்துக் கொள்ள.. வஞ்சிக் கொடி திணறினாள்..
"தயங்காதே வஞ்சி.. நீ மனசுக்குள்ள தேக்கி வைச்சிருக்கிற ஒட்டுமொத்த கோபத்தையும் ஒண்ணு சேர்த்து என்னை அடிச்சிடு..!" பற்களை கடித்துக் கொண்டு அவள் காதுக்குள் சொல்ல உதடுகள் நடுங்க விழிகளை மெல்ல மூடி திறந்தாள் வஞ்சி..
"மனசுல அம்புட்டு கோபம் இருக்க போய்தானே என் கூட வாழ வர மாட்டேன்னு சொல்லுத.. அப்படின்னா கண்டமேனிக்கு என்னை அடிச்சு உன் கோபத்தை தீர்த்துக்கடி..!" அவன் சொன்ன பிறகும் கணவனை அடிக்க கை வரவில்லை அவளுக்கு..
அடி வாங்க அவன் தயாராகத்தான் இருந்தான்..! அவளுக்குத்தான் கரங்கள் நடுங்கியது.. அவனை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியிருந்தாள்..
"டேய் எனக்கு ஒரு சாக்லேட் தாடா..!" அழகி அப்பத்தா ஒரு சின்ன பையனிடம் குழந்தையாக மாறி கெஞ்சி கொண்டிருக்க..
"உன் பேரன் கிட்ட போய் கேளு..!" என்றான் அவன் எகத்தாளமாக..
"சுகர் 400 தொட்டுடுச்சாம்.. போய் இனிப்பு கேட்டா மூக்குல குத்துவான்.. நீதான் கையில இத்தனை வச்சிருக்கியே ஒன்னே ஒன்னு கூட குறைஞ்சா போயிடுவ.."
"பதிலுக்கு நீ என்ன தருவ.."
"ஒரு முத்தம் தரவா.."
"அழகின்னு பேர் வச்சா நீ என்ன உலக அழகின்னு நினைப்பா..!"
"சின்ன பையன் மாதிரி பேசுடா.."
"வேற என்னதான் வச்சிருக்க.."
"ரெண்டு கொட்டைப்பாக்கும் மூணு வெத்தலையும் வச்சிருக்கேன்.."
"இத வச்சு நான் என்னத்த செய்யறது.. மென்னு தின்ன எனக்கு கடவா பல்லு கூட கிடையாது.."
"யூ மீன் பூத்.."
"பூத் இல்ல டீத்து.. நேத்துதான் நடுவுல பல்லு விழுந்துச்சு.." சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிறுவனின் சாக்லேட்டை பிடுங்கிக் கொண்டு ஓடியிருந்தார் அழகி..
பள்ளிக்கூடத்தை கடந்து வெகு தூரம் வந்திருந்த வஞ்சி வெட்ட வெளியின் பாறை மேட்டு பக்கம் வேகமாக நடந்து சென்றிருந்தாள்..
"ஏய் வஞ்சி..! நில்லுடி.." பைக்கில் பின் தொடர்ந்து வந்ததால் விரைவாக அவளை அடைந்திருந்தான் தேவரா..
"ஏய் நில்லடி..! எதுக்கு இவ்வளவு வேகமா நடந்து வர்ற.. அதுவும் செருப்பில்லாம.. வெயில் பட்டு காலெல்லாம் கொப்பளிச்சு போச்சு பாரு.." முழங்காலிட்டு அமர்ந்தவன் அவள் பாதத்தை தூக்கி தன் தொடையில் வைக்க..
"ப்ச்..!" என்று காலை வெடுக்கென இழுத்துக் கொண்டு மீண்டும் நடந்தாள்..
அடுத்த கணம் அவன் முகம் இறுகிப்போக வேகமாக வந்து அவள் கைப் பிடித்து இழுத்தான் தேவரா..
"என்னடி பிரச்சனை உனக்கு..! என்ன பாத்தாலே ஏதோ சிங்கத்தை பார்த்த மாதிரி பயந்து ஓடுற.. என் கூட தானே அத்தனை வருஷம் வாழ்ந்த.. இப்ப மட்டும் நான் ஆகாதவனா போயிட்டேனா.." அத்தனை கேள்விகளுக்கும் மூச்சு வாங்கியபடி அவள் நிலைத்த பார்வை தந்த பதிலில் தடுமாறி போனவன் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்..
தலையை கோதியபடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மீண்டும் அவளை பார்த்தான்..
"சரி.. எனக்கு இன்னொரு வாய்ப்பு குடு.. எல்லாத்தையும் சரி செய்வோம்.. சந்தோஷமா வாழுவோம்.. என் கூட வந்துடு அம்மு.. நீ இல்லாம வீடு வீடா இல்ல.. நான் நானா இல்ல.. உன்னால மட்டும் எப்படிடி சிரிச்சு சந்தோஷமா இருக்க முடியுது.." பிரிவின் வேதனையில் அவன் பற்களை கடித்தான்..
"உன் கூட வரணுமா..!" வஞ்சி பொறுமையிழந்து கேட்ட கேள்வியில் அவன் அப்படியே நிற்க.. "சரி வரேன்.. ஆனா என் குழந்தையை திருப்பி கொடு" என்று மூர்க்கத்தனமாக பதில் சொன்னாள் வஞ்சி..
"அம்மு..!"
"செத்துப் போன என் குழந்தையை திருப்பி தாடா.. என் குழந்தை எனக்கு வேணும்.. நான் வயித்துல சுமந்து கலைஞ்சு போன என் குழந்தை எனக்கு வேணும்.. உன்னாலதானே.. நீதானே.. கொலைகார பாவி..!" ஆக்ரோஷத்துடன் கன்னம் கன்னமாய் அவனை அறைந்தவள் அப்படியே அழுது கதறிக்கொண்டு முழங்காலிட்டு தரையில் அமர்ந்தாள்..
'வ.. வஞ்சி.. வஞ்சிம்மா.." அவனும் அவளைப் போலவே அமர்ந்தவன் கரகரத்த குரலில் வஞ்சியை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் கரத்தை தொட முயன்றான்..
"ஆஆஆஆ.." பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள் வஞ்சி.. தேவரா கண்களில் நீர் நிறைத்து இயலாமையோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..
அவளை தொடவும் முடியவில்லை அள்ளி அணைத்துக் கொள்ளவும் வழி இல்லை.. நெஞ்சம் துடித்த நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த நொடி அது..
அழுது அழுது ஓய்ந்து போனவள் விம்மலும் நடுக்கமுமாக மெல்ல எழுந்து ஒற்றையாய் வழிந்த முந்தானையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு தள்ளாட்டமும் தடுமாற்றமுமாக அவனுக்கு முதுகு காட்டி நடந்து சென்று கொண்டிருந்தாள்..
கீழுதட்டை கடித்து ஈரம் நிறைந்த விழியோடு அவளை வெறித்துக் கொண்டிருந்தான் தேவரா..
தொடரும்..

Last edited: