- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
கண்ணபிரானுக்கு முக்கியமான கட்சி மீட்டிங் இருந்ததால் தன் வேலையாள் ஒருவனோடு தங்கையையும் தாயையும் தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தான்..
மருத்துவமனையில் அரசு மருத்துவருக்காக தாயோடு காத்திருந்தாள் வஞ்சி.. அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த பாக்கியத்திற்கு மனம் தாளவில்லை..
"ஏண்டி உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..! உன்னோட புருஷன் இந்த விளங்காதவன நாலு சாத்து சாத்தியிருந்தா கூட எனக்கு கொஞ்சம் மனசு ஆறியிருக்கும்.. குறுக்கால புகுந்து எல்லாத்தையும் கெடுத்துட்டு உன் நொண்ணன காப்பாத்தற அளவுக்கு அவன் என்ன அம்புட்டு நல்லவனா..? எத்தனை தலைமுறைய பார்த்தவங்க அந்தம்மா.. தெய்வம் மாதிரி இருக்குறவங்கள கையை நீட்டி அடிச்சு புட்டானே அந்த ராட்சசன்..! இந்த பாவத்தை எங்க போய் தொலைக்கறது.. என் வயித்துலதானா இப்படி ஒருத்தன் வந்து பிறக்கனும்.. அவன் தான் அவசரப்பட்டு முரட்டுத்தனமாக கையை நீட்டிப்புட்டான்னா நீ என்னடி செஞ்ச.. பாத்துகிட்டு சும்மா நின்னியாக்கும்..!" பாக்கியம் பரிதவித்து புலம்பினாள்..
"நான் கேட்காம இருப்பேனா..! அப்பத்தாவை அண்ணன் அடிக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.. ஒரு நிமிஷத்துல எனக்கு உயிரே போயிடுச்சு.. நீ எல்லாம் மனுஷனே இல்லைன்னு நாக்க புடுங்குற மாதிரி கேட்டேனே.. என்னிக்கு அண்ணன் நம்ம பேச்சையெல்லாம் மதிச்சு கேட்டிருக்கு..!" வஞ்சியால் பேசவே முடியவில்லை.. காய்ச்சல் அவளை வாட்டி எடுத்தது..
"சரிடி அவன் கிட்ட தான் பேச முடியல.. உன் புருஷனாவது அவர் பாணியில உன் அண்ணன அடிச்சு திருத்தட்டும்னு விட வேண்டியதுதான..! பாசமலர் போய் அண்ணனை காப்பாத்தி விட்டுட்டு.. இப்படி அடியையும் காய்ச்சலையும் வாங்கி கட்டிட்டு வந்து நிக்கறா கூறு கெட்டவ.." என்றாள் பாக்கியம் கோபத்துடன்..
"அம்மா..! நானா போய் தடுக்கல.. அப்பத்தாதான் போன் பண்ணி என் பேரன் வெட்டருவாளோட கோபமா அங்க புறப்பட்டு வந்துட்டு இருக்கான். எப்படியாவது அவனை தடுத்திடு.. இல்லன்னா பிரச்சினை பெருசாகிடும்..! உன் புருஷன் நல்லா வாழணுமா.. இல்ல ஜெயிலுக்கு போகணுமான்னு நீயே யோசிச்சுக்கனு சொல்லுச்சு.. மாமா அருவாள வீசிக்கிட்டு வந்த கோபத்துக்கு நான் மட்டும் தடுக்காம போயிருந்தா கண்டிப்பா அண்ணனோட தல ரெண்டு துண்டாகி போயிருக்கும்.. அவர் கோபத்தை பத்தி உங்களுக்கு தெரியாது.. என் புருஷன் எதையும் செஞ்சிட்ட பிறகுதான் யோசிப்பாரு.. இத்தனைக்கும் அப்பத்தா கண்ணபிரான் தெரியாம தள்ளி விட்டதாலதான் கீழே விழுந்தேன்னு சொல்லியும் அருவாள தூக்கிட்டு வந்திருக்காருன்னா அவர் முன்கோபத்தை பற்றி யோசிச்சு பாரு.. வேண்டாத விபரீதங்களை தடுக்க தான் அப்படி செஞ்சேன் நான் செஞ்சது தப்பா..?" என்றாள் பரிதாபமாக..
"இல்லடி தங்கம் நீ செஞ்சது தப்பே இல்ல.. ஆனா கோபத்துல உன் புருஷன் இப்படி கன்னங் கன்னமா அறையுற அளவுக்கு அப்படி என்னதான் பேசிட்டு வந்த.. !" என்றாள் சிவந்து வீங்கியிருந்த கன்னத்தை கவலையோடு வருடி விட்டபடி..
"விடுமா அவரை தடுத்து நிறுத்துறதுக்கு பதட்டத்துல ஒன்னு ரெண்டு வார்த்தைகளை விட்டுருப்பேன்.. பரவாயில்லை அவர் கோபத்தை என்கிட்ட தானே காட்டினாரு.. எனக்கொன்னும் வருத்தம் இல்ல.." என்றபடி கண்களை துடைத்துக் கொண்டாள் வஞ்சி.. கணவனிடம் அடி வாங்கிய வருத்தம் கண்ணீராக பொங்கி வருகிறது என்று பாக்கியம் அறியாமல் இல்லை.. மகள் கண்கலங்கி.. ஒன்னும் இல்லமா உடம்பு சூட்டுல கண்ணுலருந்து தண்ணி வருது.." என்று கண்ணீரை மறைத்துக் கொள்வது பாக்கியத்திற்கு வேதனையாய் இருந்தது..!
மருத்துவர் அழைக்க இருவருமாக உள்ளே சென்றனர்..!
வஞ்சியை பரிசோதித்து விட்டு ஊசி போட்டு மருந்து எழுதி கொடுத்தார் மருத்துவர்..!
படு வேகமாக வந்து அந்த சுகாதார மையத்தின் வாயிலை கடந்து உள்ளே நுழைந்தது கிருஷ்ணதேவராயனின் பைக்..
பைக்கை நிறுத்தக்கூட நேரமில்லாதவன் போல் அவன் வண்டியை சாய்க்க அப்பத்தா கீழே விழாத குறை..!
நல்லவேளை தகுந்த நேரத்தில் கீழே குதித்து விட்டார்..
எங்கிருந்து வந்து எப்போது தொற்றிக் கொண்டார் என்று தெரியவில்லை.. வரப்பு வழி சாலையில் வளைந்து நெளிந்து அவன் வண்டி ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது குறுக்கால் வந்து நின்று பைக்கை நிறுத்தி அவரும் ஏறிக்கொண்டார்.. பிரச்சனை ஏதேனும் வந்துவிடுமோ என்று பயந்திருக்கலாம்.
பேரனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்து வந்தாள் அழகி..
மகளை அங்கிருந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு அலைபேசியை எடுத்து காரை எடுத்து வந்த வேலையாளுக்கு அழைத்தாள் பாக்கியம்..
கார் வரும் வரை காத்திருக்க தான் வேண்டும்.. சற்று தள்ளி வந்து அந்த நுழைவு வாசல் வளைவோடு ஒட்டிய தூணில் சாய்ந்தபடி காரை எதிர்பார்த்து காத்தாட நின்று கொண்டிருந்தாள்..
அந்த நேரத்தில் விறுவிறுவென படியேறி வந்தவன்..
"அத்தை..!" என்ற மூச்சு வாங்கி ஒரு கணம் நின்று தவிப்பும் பரபரப்புமாக தன் துணையை தேடினான்..
பாக்கியம் அவன் பேசட்டும் என்று காத்திருந்தாள்..
"வஞ்சி எங்க..? அவளுக்கு இப்ப காய்ச்சல் எப்படி இருக்கு.. டாக்டர பாத்துட்டீங்களா..?" கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவன் ஒரு கணம் நிறுத்தி உதட்டை குவித்து தலையை இறக்கி கீழ்நோக்கி வேர்த்திருந்த தன் சட்டை பட்டன் திறந்திருந்த சுருள் முடி நெஞ்சில் உஃப் என ஊதினான்..!
"வஞ்சிக்கு ஒன்னும் இல்ல மாப்ள.. சாதாரண காய்ச்சல்தான்.. நீங்க அடிச்சதுனால பிள்ளை கொஞ்சம் பயந்துட்டா அவ்வளவுதான்.." என்னும்போதே அவன் விழிகள் குற்ற உணர்ச்சியோடு வேறு பக்கம் திரும்பிக் கொண்டன..
"உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.. நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..! அண்ணன் மேல உள்ள பாசத்துனால மட்டும் வஞ்சி ஓடிவந்து உங்களை தடுக்கல.. நீங்க ஏதாவது அவசரத்துல ஒன்னு கிடக்க ஒண்ணு விபரீதமா செஞ்சு புட்டீங்கன்னா உங்களுடைய எதிர்காலமும் பாழாகிடும்ங்கற பயத்தில தான் அப்படி செஞ்சிருக்கா..! அதை புரிஞ்சுக்காம தகாததை பேசி அவளை அடிச்சு புட்டிங்களே தம்பி..!" என்றாள் வேதனை சாயலோடு..
"என்னத்த பேசுறீங்க.. என் அப்பத்தாவ நான் உயிருக்கும் மேலா மதிக்கறேன்.. அவங்க மேல கைய வச்சா எனக்கு கோபம் வராதா..!" என்று தேவரா அப்பத்தாவை அணைத்துக் கொள்ள அவள் விழியிலும் ஈரம்..
"உங்க பொண்ணு சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் உங்க மகன உயிரோட விட்டேன்..! அதையும் மீறி என்ன பேச்சு பேசுறா அவ.. நானும் மனுஷன்தான் அத்த.. என்னாலையும் ஒரளவுதான் சகிச்சுக்க முடியும்.. என்றான் அனல் தெறிக்கும் பார்வையோடு..
"எனக்கு உங்க கோபம் புரியுது மாப்ள.. ஆனா படிச்சவங்க நீங்க அவசரப்பட்டு அவள கை நீட்டி அடித்தது தப்பு தானே.. ஏற்கனவே வயித்துல இருந்த புள்ளையை பறி கொடுத்துட்டு நிராதரவா நிக்கறா.." சொல்லி முடிக்கும் முன்..
"ஏன் புள்ளைய பறிகொடுத்த வேதனை அவளுக்கு மட்டும்தானா? எனக்கு இல்லையா.." நான் இல்லாமதான் அந்த புள்ள வந்துச்சா.. தெரியாம செஞ்ச தப்பு..! இந்தப் பாவம் என் தலையில விழனும்னு இருக்கு.. அனுபவிக்கிறேன்.. செஞ்ச தப்புக்காக எத்தனை முறை உங்க பொண்ணு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பேன்.."
"இல்ல தெரியாம தான் கேட்கறேன்.. நீங்க பெரியவங்கதானே.. உங்க மகளுக்கு புத்திமதி சொல்லி புருஷன் கூட போய் வாழுன்னு அனுப்பி வைக்காம வீட்ல வச்சிருக்கிறதும் இல்லாம இப்பவும் அவ செஞ்சது சரின்னு சொல்லுறீயளே..! உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. உங்க மகளை நான் என்னைக்காவது அடிச்சு கொடுமைப்படுத்தி இருக்கேனா.. இல்ல அவ மனசு நோகற மாதிரி ஒத்த வார்த்த பேசி இருப்பேனா..! நான் கோவக்காரன்தான் ஒத்துக்கறேன்.. ஆனா அவ மேல உயிரையே வச்சிருக்கேன் அது ஏன் அந்த மடச்சிக்கு புரிய மாட்டேங்குது.." கிருஷ்ணதேவராயன் கொதித்து வார்த்தைகளில் படபடக்க பாக்கியம் அவன் மனநிலை புரிந்து அமைதியாக நின்றிருந்தாள்..
அப்பத்தா பேரன் பேசுவதிலிருந்த நியாயத்தை புரிந்து கொண்டு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்..
தூணுக்கு பின்னால் அத்தனையும் கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் வஞ்சி..
அந்நேரம் கார் வந்து அங்கு நின்றது..
"அம்மா போகலாம்..!" என்று சோர்ந்தபடி நடந்து வந்த வஞ்சியை பார்த்ததும் ராயன் நெஞ்சில் வேதனை கொண்டான்..
"வஞ்சி..!" என்று அவள் பின்னால் இறங்கிச் செல்ல.. அவனை கண்டுகொள்ளாமல் நடந்தாள் வஞ்சி..!
காரில் ஏறும் நேரம் மிக நெருக்கமாக அவளை வளைத்து பிடித்திருந்தான் ராயன்..
"ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுடி..!"
"எதையும் கேட்க வேண்டாம் அதான் நல்லா வலிக்கிற மாதிரி அடிச்சு சொல்லிட்டீங்களே..!
மூச்சு வாங்கியபடி விழிகளை மூடி திறந்தாள் வஞ்சி..!
காரின் மீது வஞ்சி சாய்ந்திருக்க காரின் மேல் பக்கத்தில் கையை ஊன்றி அவளை வழி மறுத்தவாறு நின்றிருந்த ராயன் பின்னால் திரும்பி..
"அத்தை உங்க பொண்ணு கிட்ட நான் கொஞ்சம் பேசணும்..! ஒரு அஞ்சு நிமிஷம்" என்று கண்கள் குறுக்கி சொல்லவும்.. முதலில் தயங்கிய பாக்கியம் பிறகு அழகியோடு தள்ளி நடந்தாள்..
"என் மவன் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு..அவனுக்காக நான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்.. " என்று காலில் விழப்போன பாக்கியத்தை பதறி தடுத்தாள் அப்பத்தா..
"அட என்னடி இது.. நீ வேற சும்மா இரு.. அதையெல்லாம் நான் அப்பவே மறந்துட்டேன்.. அவன் ஒரு முரட்டுமுட்டாள்ன்னு எனக்கு தெரியுமே..! ரெண்டும் ஒண்ணுத்துக்கு ஒண்ணு சளைச்சது இல்ல..! என் பேரன் என்னய விளையாட்டுக்கு அடிப்பான்.. இந்த பேரன் கொஞ்சம் சீரியஸா அடிச்சுப்புட்டான்.. ஆக மொத்தம் ரெண்டு பேரும் என் பேரனுங்கதான.. நான் எதையும் பெருசா எடுத்துக்கல.. நீ எதையும் ராயன் கிட்ட உளறிப்புடாதே.. இதை இப்படியே விட்டுடுவோம்.." அப்பத்தா சொல்லவும் பாக்கியம் அழகியின் பெரிய மனதை எண்ணி கண்கலங்கி நெகிழ்வோடு சரி என்று தலையசைத்தாள்..
இங்கே "முதல்ல உள்ளே ஏறு..!" என்று காரின் பின் பக்கத்தை திறந்து அவளை உள்ளே அனுப்பிய ராயன் தானும் ஏறிக்கொண்டான்..
"எ.. என்ன பண்றீங்க..!" அவள் பதட்டத்தோடு கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுனரிடம்..
"அண்ணா ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய நிக்கிறீகளா.. நான் என் பொண்டாட்டி கிட்ட தனியா பேசனும்!" என்று வெளிப்படையாகவே சொல்ல..
"போறேன் தம்பி.. ஆனா சீக்கிரமா பிரச்சனையை பேசி முடிச்சு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்..! அதுதான் எனக்கும் வேணும்.." என்று காரை விட்டு இறங்கி தள்ளி நின்றார் அந்த ஓட்டுனர்..
அவர் அதே ஊர்க்காரர் கண்ணபிரானிடம் வேலை செய்தாலும் கிருஷ்ண தேவராயனுக்கும் வேண்டப்பட்டவர் என்பதால் அவனுக்கு இந்நேரத்தில் பேரூபகாரம் செய்திருந்தார்..
"என்ன பேசணும் உங்களுக்கு..! எதுவானாலும் சீக்கிரம் சொல்லுங்க நேரமாச்சு..!" அவசரப்படுத்தினாள் வஞ்சி..
"என்னடி காய்ச்சல் அடிக்குதா..?" அவளைத் தொட்டுப் பார்க்க கையை தட்டி விட்டாள்..
"ஊசி போட்டாங்களா..! எங்கடி.. வலிக்குதா தேய்ச்சு விடட்டுமா..?"
"யோவ்.. கையை எடு.. உனக்கெல்லாம் வெக்கமே இல்லையா..!" என்று கேட்க..
"இல்லையே..!" என்று இளித்துக் கொண்டு வேகமாக தலையசைத்தான் அவன்..
கலைந்த கேசத்தோடு அவன் குழந்தைத்தனமான சேஷ்டையில் வஞ்சியின் மனம் அசைந்தது..
"நேத்து தான் இல்லாத பேச்சு பேசி என் மனச நோகடிச்சு கேவலப்படுத்திட்டு போன.. இப்ப எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு திரும்பி வந்த..!" வஞ்சியின் கோபம் எந்த விதத்திலும் அவனை ஆத்திரப்படுத்தவில்லை..
"இதுக்காக வேற மூஞ்சிய வாங்கி ஒட்ட வச்சுக்கிட்டா வர முடியும்.. இதே மூஞ்சி தான்.." என்றவனை வெறிகொண்டு முறைத்தாள்..
"கோவிச்சுக்காதடி.. நேத்து ஏதோ ஒரு கோவத்துல அப்படி சொல்லிட்டேன்.. மாமா தானே மன்னிச்சிடு..!" என்று அவள் சிவந்த கன்னத்தை வருடினான்..
என் மாமா.. என் மாமான்னு எத்தனையோ விஷயங்களை விட்டுக் கொடுத்து போனதும் போதும்.. உங்ககிட்ட அனுபவிச்சதும் போதும்.. பொம்பள மயிரா நானு.. உனக்கு அவ்வளவு கேவலமா போயிட்டேனா..!" வஞ்சி அழுதாள்..
"நான் அந்த அர்த்தத்துல சொல்லலடி.. என் மனசுக்குள்ள புகுந்து என்னய ஆட்டி வைக்கற மோகினி பிசாசு நீதான.. அந்த அர்த்தத்துல சொன்னேன்டி.. கோவத்துல வார்த்தை வேற மாதிரி வந்துருச்சு..! நீ கூடதான்.. நான் உன்கிட்ட வர்றதே உன் உடம்புக்காகதான்னு எத்தன முறை சொல்லி இருக்கவ.. நான் காயப்பட்டு போகலையா..?"
"நான் ஒன்னும் பொய் சொல்லலையே.. பார்க்கும்போதெல்லாம் கட்டிப்பிடிக்கறது. முத்தங் கொடுக்கிறது.. எப்படா சான்ஸ் கிடைக்கும்னு காத்திருக்கிறது.. இப்ப கூட உங்க கை எங்க இருக்குன்னு பாருங்க.. அன்னைக்கு ஒரு நாள் தோப்பு வழியான தனியா வந்தபோது நீங்க என்ன செஞ்சீங்க..?"
"என்ன செஞ்ச ஞாபகம் இல்லையே..!"
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க அவன் சுவாரஸ்யமாக காத்திருந்தான்.. அந்த நிகழ்வின் தாக்கத்தில் நெஞ்சில் சாரல் வீசியது..
"வேண்டாம் விட்டுடுங்க.. நான் ஏதாவது பேச போய் தப்பாகிடும்.. உங்ககிட்ட அடி வாங்க எனக்கு தெம்பே இல்லை.."
"மன்னிச்சிடு அம்மு.. சரி இப்ப சொல்லுதேன் கேட்டுக்க.. நீ சொல்றது சரிதான்.. எனக்கு உன் உடம்பு மேல அம்புட்டு ஆசை.. ஏன் தெரியுமா.. ஏன்னா இது என் வஞ்சியோட உடம்பாச்சே..! உன் மேல எனக்கு இருக்கிற ஆசையை கட்டிப்பிடிச்சு முத்தக்குடுத்து அங்க தொட்டு இங்க தொட்டுதான காட்ட முடியும்.. என்னோட ஏக்கத்த வேற விதமா புரிய வைக்கறேன்.. ஆமான்டி உன் உடம்புக்கு நான் பேயா அலையறேன்னே வச்சுக்கோயேன்.. அது உன்மேல வச்சிருக்கற ஆசை மட்டுமில்ல அன்பும்தான்.. அதை ஏன்டி புரிஞ்சிக்க மாட்டேங்க..!" என்றான் நிதானமாக.. ஆனால் குரலில் அழுத்தம் இருந்தது..
"எனக்கு எதையும் புரிஞ்சிக்க வேண்டாம்.. முதல்ல இங்கிருந்து போங்க..!" முகத்தை திருப்பிக் கொண்டாள் வஞ்சிக்கொடி..
"அப்படியெல்லாம் போக முடியாது.." என்றவன் அவளை இழுத்து திமிற திமிற உதட்டில் அழுத்தமாய் முத்தமிட்டிருந்தான்..
"நானே காய்ச்சல்ல கிடக்கேன்.. ஏன் இப்படி வாய் வழியா என் சத்தையெல்லாம் உறிஞ்சு திங்கறீங்க..!" வீஞ்சி வீஞ்சி அழ ஆரம்பித்தாள் வஞ்சி..
"காய்ச்சலுக்கு தான்டி மாமா மருந்து கொடுத்துருக்கேன்.. இப்ப பாரு பத்தே நிமிஷத்துல காய்ச்சல் வுட்டு சூடு குறைஞ்சிடும்.." என்றவன்
"அப்புறம் நான் சொன்னத நல்லா யோசி.. தப்பு என் பேர்ல இருக்கறதுனால மட்டும்தான் உன் கோபத்துக்கு மதிப்பு தந்து நீயா வரணும்னு மாமா உனக்காக காத்திருக்கேன்.. இல்லன்னு வச்சுக்க.. இவ்வளவு பொறுமையா பேசிட்டு நிக்கற தேவராயனை நீ பார்க்கவே முடியாது.. தெரிஞ்சிக்க.. என்னால ரொம்ப நாள் காத்திருக்கவும் முடியாது.. சீக்கிரம் யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு.." என்றான் கடைசி வாக்கியத்தில் முகம் இறுகி..
"என்ன மிரட்டறரீகளா?"
"ஆமா மிரட்டல்தான்.. ஒரு குழந்தை போச்சுன்னு கலங்கறத விட்டுட்டு என்னோட வாழவாடி.. ஒன்னுக்கு பத்தா திருப்பி தரேன்.." அவன் சொல்லி முடிக்கும் முன்..
"எத்தனை குழந்தை தந்தாலும் நான் இழந்நந பொக்கிஷத்துக்கு ஈடாகுமாடா.. என் சந்தோஷம் திருப்பி வருமா.. என் வேதனை போகுமா.." என்று அவனை சராமாரியாக அடித்தவளை தனக்குள்ள அடக்கி அணைத்து அவள் கோபம் தீரும் வரை நீண்ட முத்தமிட்டு
"வரேன்டி வஞ்சி..!" என்றவன் கிடுக்கென தொடக்கூடாத இடத்தில் கிள்ளி அவளை துள்ள வைத்துவிட்டுதான் கீழே இறங்கினான்..
"பொறுக்கி.. கோபத்தை இழுத்து பிடிக்க முடியுதா இவன்கிட்ட.. ஏதாவது பண்ணி என்ன கிறங்க வச்சிடறானே..!" வீராப்பாக அவனை உதறித் தள்ளி நிற்க முடியாத ஆத்திரத்தில் ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள் வஞ்சி..
பாக்கியம் கதவை திறந்து உள்ளே ஏறுவதற்குள் அவசர அவசரமாக எச்சில் வடிந்த ஈர இதழை துடைத்துக் கொண்டே மறுபக்கம் திரும்பினாள்....
ஓட்டுனரும் ஏறிக்கொள்ள கார் அங்கிருந்து புறப்பட்டது..
வஞ்சி கார் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க.. பைக்கில் ஏறி கிக்கரை உதைத்து கொண்டிருந்த தேவரா அவளை நிமிர்ந்து பார்த்து கண்சிமிட்டினான்.. சட்டென தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள் வஞ்சி..!
அவர்கள் கார் மெதுவாக சென்று கொண்டிருக்க
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காஞ்ச இலை போலே
உணர்ந்தேன் காஞ்ச இலை போலே..
தேவராப் பின்னால் அமர்ந்திருந்த அழகி அவன் தோள்மேல் கைபோட்டு சத்தமாக பாடியபடி வஞ்சியை வெறுப்பேற்ற..
"ஏய் கிழவி அது காஞ்ச இலை இல்ல.. காட்சிப் பிழை..!" என்று திருத்தினான் தேவரா..
"என் வாயில என்ன வருதோ அதைத்தான் நான் பாட முடியும்..! நீ போடா.. ரெண்டு பேரும் எசப்பாட்டு பாட்டிகிட்டே ஜாலியா போவோம்..! ம்ம்.. எனக்குதான் குடுத்து வைச்சிருக்கு.." என்று பெருமூச்சுவிட்டு..
பார்த்த முதல் நாளே
காஞ்ச இலை போலே..
கமலினி முகர்ஜி போல் அப்பத்தா பைக்கின் பின்னால் சாய்ந்து ஒரே ரகளை..!
முன்னால் சென்று கொண்டிருந்த பைக்கில் அழகி அடித்த லூட்டியை பார்த்து முதலில் முறைத்து கடுப்பான வஞ்சி பிறகு பெரிதாக வாய் விட்டு சிரிக்க துவங்கினாள்..
சில நாட்களுக்குப் பிறகு..!
ஆள் ஆர்வமில்லாத பொட்டல் காட்டின் தரைக் கிணறு..
வெறி பிடித்தவள் போல் ஓடி வந்த பெண்ணொருத்தி.. கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு நொடியும் தாமதிக்காமல் அந்த கிணத்திற்குள் விழுந்திருந்தாள்.. விழுந்த வேகத்தில் கீழ்ப்பகுதியை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டாள்..
அவள் கண்ணகி..
தொடரும்..

Last edited: