- Joined
- Jan 10, 2023
- Messages
- 81
- Thread Author
- #1
வஞ்சிக்கொடி அவசரமாக படியேறி சென்றாள்.. கட்டிலில் அமர்ந்து தொடைக்கு மேல் இரு கைகளை கோர்த்து தரையை பார்த்திருந்தான் கிருஷ்ணதேவராயன்..
வஞ்சியின் கொலுசு சத்தத்தின் ஒவ்வொரு அதிர்விலும் அவன் கருவிழிகள் அங்குமிங்குமாக உருண்ட வண்ணம் கொண்டிருந்தன..
அவன் எதிரே வந்து நின்றாள் வஞ்சி.. அவள் கண்களிலிருந்து சொத் சொத்தென விழுந்து நிலத்தை முத்தமிட்ட கண்ணீரை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணதேவராயன்..
கணவனின் காலடியின் கீழ் மண்டியிட்டுஅமந்தவள் இரு கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அவன் முழங்காலில் சாய்ந்து கொண்டாள்..
கிருஷ்ணதேவராயன் அசையவில்லை..! இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவுமில்லை..
கணவன் மனைவிக்குள் வாய் திறந்து மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து ஒருவருக்கொருவர் பேசி புரிந்து கொண்டு அனைத்தையும் முறைப்படி செய்ய இது ஒன்றும் ஒப்பந்த வியாபாரம் இல்லையே..!
ஒருதுளி கண்ணீர் போதும்.. ஒரு பார்வை.. ஒரு ஸ்பரிசம் போதாதா.. உறங்கி கிடக்கும் அழகிய உணர்வுகளை விழித்தெழ செய்ய..!
வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொண்டாயிற்று.. இனி வாழ வேண்டியதுதான் பாக்கி..
கணவனின் உடல்நலம் வஞ்சியை அச்சுறுத்தியது.. கணவன் எந்த அளவுக்கு தன்னை தேடுகிறான் என்று அவளுக்கு புரியாமல் இல்லை.. ஏதோ கோபம்.. பயம் பிள்ளையை இழந்த மன உளைச்சல் இப்படி முரண்டு பிடிக்க வைத்து விட்டது..
அவன் முழங்காலில் கன்னத்தையும் உதட்டையும் தேய்த்தபடி அமர்ந்திருந்தாள் வஞ்சி.. கண்களின் ஈரம் அவன் பேன்ட்டில் ஒட்டியிருந்தது..
தன் மடி சாய்ந்திருந்த வஞ்சியின் தலையை வருடி கொடுப்பதற்காக மேலோங்கிய அவன் கரம் தன்னிச்சையாக கீழே இறங்கிக்கொண்டது..!
வஞ்சி..! வெளியிலிருந்து சஞ்சனா அழைக்கும் குரல்.. கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து ஓடினாள் வஞ்சி..
வாசலிலேயே நின்றிருந்தாள் சஞ்சனா..
"இது தேவராவுக்கு கொடுக்க வேண்டிய மெடிசன்ஸ்.. இது அவருக்கான சாப்பாடு..! எப்படியாவது சாப்பிட வச்சுட்டு அப்புறமா மெடிசன்ஸ் கொடு.. பாவம் அவரால் ஒரு வாய் கூட சாப்பிட முடியல.. வாயெல்லாம் கொமட்டுது கசக்குதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டார்.. உன் புருஷனை கொஞ்சமாவது சாப்பிட வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு.." சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் சஞ்சனா..
உணவு மருந்துகளோடு உள்ளே வந்தாள் வஞ்சி..
தேவராயன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை..
மருந்துகளை மேஜையின் மீது வைத்து விட்டு உணவு தட்டோடு அவன் பக்கத்தில் அமர்ந்தாள்..
உப்புச் சப்பில்லாத இட்லியும் காரமில்லாத சட்டினியும்..!
பிறந்ததிலிருந்து எப்பேர்ப்பட்ட உடலை அழுத்தி போடும் காய்ச்சலோ தலைவலியோ.. நல்லெண்ணெய் மிதக்கும் அசைவ உணவு சாப்பிட்டு தான் பழக்கம் அவனுக்கு..
அதிலும் அப்பத்தா உணவையே மருந்தாக மாற்றி கோழி சூப்.. ஆட்டு ரத்தம்.. நண்டு ரசம்.. மீன் வகையறாக்கள் என்று நோய்க்கேற்றபடி பிரத்தியேகமாக சமைத்துக் கொடுப்பாள்..
ஆனால் இப்போது உணவு தட்டை பார்த்தாலே அலர்ஜியாகிவிட்டது.. உயிர் வாழ வேறு வழியில்லாமல் சாப்பிட வேண்டிய நிலை.. அப்போதும் ஒருவாய் உள்ளே தள்ளுவது பிரம்ம பிரயத்தனமாகி போகிறது..
சஞ்சனாவுக்கு கூட சில சமயங்களில் ஆச்சரியம் தோன்றும்.. ஒரு நாள் முழுக்க அன்னந்தண்ணி செல்லாத போதும் எப்படி இரும்பு தூணாக இந்த மனிதனால் வலிமையாக நிற்க முடிகிறது.. சுறுசுறுப்பாக நடக்க முடிகிறது.. மெய்யாகவே இவனை நோய் பீடிதிருக்கிறதா..! அறிகுறிகள் அப்படித்தானே சொல்கிறது.. தனக்குள் குழம்பி போவாள்..
உணவுதான் உள்ளே செல்லவில்லை.. மன உறுதியையோ காதல் வலிமையோ ஏதோ ஒன்று அவனுக்குள் ஆரோக்கியத்தை கொஞ்சமாக தக்க வைத்திருக்கிறது..
இட்லியை விள்ளல் எடுத்து அவன் வாய்க்கு நேரே கொண்டு சென்றாள் வஞ்சி..
முகத்தை திருப்பிக் கொண்டான்.. அந்த பக்கம் வந்து அமர்ந்தாள்.. எழுந்து நின்றான்.. அவன் கைப்பற்றிக் கொண்டு எழுந்து நின்று உணவை ஊட்டினாள்.. அங்கிருந்து நகர்ந்தான்..
பெருமூச்சுவிட்டு.. இப்படியெல்லாம் கெஞ்சிக் கொண்டிருந்தால் வேலைக்காக்காது என்று நினைத்தாளோ என்னவோ..
நகர்ந்தவனின் முன்னே வந்து நின்று அவன் மீது விழுந்தாள்.. திடீரென வஞ்சி தன் மீது சாய்ந்ததில் நிலை தடுமாறி கட்டிலில் விழுந்தான் தேவரா..
வாயில் வைத்திருந்த உணவை உதட்டோடு உதடு அழுத்தி அவன் வாய்க்கு இடம் மாற்றியிருந்தாள்..
வெகு நாட்களுக்கு பின்பான மனைவியின் உதட்டு ருசியில் கண்களை மூடியிருந்தவனுக்கு இப்போதுதான் உணவு உமிழ்நீரில் கரைந்து தன் தொண்டைக்குள் விழுங்கப்படுவது தெரிகிறது..
ஒரு துளியாக தன் உதட்டோடு ஒட்டியிருந்த இட்லி துண்டை நாவால் எடுத்து விழுங்கியபடி ஆழ்ந்த கண்களால் அவனைப் பார்த்தாள் வஞ்சி..
அடுத்த வாய் உணவும் தாய் பறவை குஞ்சுகளுக்கு இரையை ஊட்டுவது போல் அதே முறையில் அவன் வாய்க்கு இடமாற்றம் செய்யப்பட்டது..
மூன்றாவது வாய் உணவுக்காக வாயை பிளந்து இணைய தேடும் குஞ்சு பறவை போல் அவள் உதட்டை நோக்கி தலையை நகரத்தினான் தேவரா..
"ஆஆன்.. ஆசைதான்.. முதல்ல எழுந்து உட்காருங்க.." தட்டை வைத்துக் கொண்டு எழுந்து நின்றாள் வஞ்சி..!
"போடி..!" பிடரியை வருடியபடி அலட்சியமாக உதடு சுழித்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்..
"சாப்பிட போறீங்களா இல்லையா..?"
"முடியாது எனக்கு வேண்டாம்.."
முடிப்பதற்குள் அவன் வாய்க்குள் அடுத்த வாய் உணவை திணித்திருந்தாள்..
எப்போதும் குமட்டுவது போல் ஓங்கரிப்பவன் இப்போது அமைதியாக உணவை விழுங்குவதை பார்த்திருந்தால் சஞ்சனா தலை சுற்றி கீழே விழுந்திருப்பாள்..
"என் மேல இருக்கிற கோவத்துக்காக உங்களை நீங்களே வருத்திக்காதீங்க.. அந்த கோபத்தை வைராக்கியமா மாத்தி.. என்னை திட்டவும் அடிக்கவும் வேண்டிய தெம்புக்காகவாது கொஞ்சமா சாப்பிடுங்க..!" என்றபடி உணவை அவனுக்கு ஊட்டினாள்..
பிஞ்சு விரல்களை நறுக்கென கடித்த படி அவளை முறைத்தவாறு உணவை வாங்கிக் கொண்டான் அவன்..
ஒவ்வொரு வாய் ஊட்டும் போதும் தேவரா இப்படி கடித்து வைப்பது வலிக்கத்தான் செய்தது.. ஆனாலும் பொறுத்துக் கொண்டு மிச்சமில்லாமல் உணவை ஊட்டி முடித்தவள் அவன் பருக தண்ணீர் தந்தாள்..
தட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் வேளையில் இடுப்போடு சேர்த்து அவளை இறுக அணைத்துக் கொண்டான் தேவரா..
வஞ்சி சிலையாக நின்றாள்..
கண்களை மூடி அவள் வயிற்றில் முகத்தை தேய்த்து வாசம் இழுத்தான்..
அவன் தலையை தன் வயிற்றோடு அழுத்திக் கொண்டாள் வஞ்சி..
கோபத்தில் விஸ்வரூபமெடுத்து பெரிதாக தெரிந்த விரிசல்களும்.. மனஸ்தாபங்களும் இறுக்கமான அந்த அணைப்புக்குள் கரைந்து.. பாதரசத்தில் மூழ்கிய தங்கமாக உருகி காணாமல் போயிருந்தது..
கண்ணபிரான் எழுத வேண்டியிருந்த கடைசி சம்பவம்..
பசுபதியை கண்ணகி சந்தித்ததும் அதை கணவனிடம் மறைத்ததும்.. பசுபதி கண்ணபிரான ஏளனம் செய்ததும்.. அந்தக் கோபத்தை கண்ணபிரான் கண்ணகியிடம் கீழ்த்தரமாக வெளிப்படுத்தியதும்..
வரிக்கு வரி கண்ணகியாக உருகியிருந்தான் கண்ணபிரான்..
படங்களில் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடிக்கும் ஆண் கலைஞர்கள்.. அதே வழக்கத்தில் பெண்மையின் சாயலாக அன்றாட வாழ்க்கையிலும் அபிநயங்கள் பிடிப்பதுண்டு..
அப்படித்தான் கண்ண பிரான் கண்ணகியின் நிலையிலிருந்து யோசித்து.. கிட்டத்தட்ட கண்ணகியாகவே மாறிப் போயிருந்தான்.. அவள் அழுகை அவமானம் துக்கம் துயரம்.. அனைத்தும் அவனையும் விடாமல் தொற்றிக் கொண்டது..
பாலா படங்களை பார்க்கும்போது இரண்டு நாட்களான பின்னும் அந்த தாக்கம் நெஞ்சுக்குள் நீங்காமல் இடம் பிடித்திருப்பதை போல் இவன் நெஞ்சுக்குள்ளும்.. இரத்தமும் சதையுமாக பிரித்தெடுக்க முடியாத உணர்வு பிரவாகம்
துள்ளத் துடிக்க அவனை நெருப்பிலிட்டு கொளுத்துகிறது..
ஏதோ ஒரு நாட்டில் பிரசவ வலியை தானும் அனுபவித்து பார்க்க ஒவ்வொரு டெல் யூனிட்டாக வலியை அதிகரித்து அந்த அவஸ்தையை உணர்ந்து பார்த்தார்களாம் சில ஆண்கள்.. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் அந்த வலியை தாங்கவே முடியவில்லையாம்.. அப்படித்தான் கண்ணபிரானின் நிலை..
உடல் ரீதியாக அனுபவிக்கும் வேதனையை விட பல மடங்கு கொடியது இந்த மன ரீதியான அவஸ்தை.. தாள முடியவில்லை.. நூதன புது தண்டனை..
எழுதி முடித்து அவள் வலியை அனுபவித்து விட்டான்..
ஆனால் இப்படி ஒரு வேதனையை அவள் எப்படி தாங்கினாள்.. என்று அறிந்து கொள்ள துடிப்பு..
மாணவன் எழுதிய வீட்டு பாடத்தை சரி பார்க்கும் ஆசிரியர் போல்.. அவன் எழுதியதை ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள் கண்ணகி..
"உன்கிட்ட ஒன்னு கேட்கணும்..!"
கண்ணகி நிமிர்ந்து பார்த்தாள்..
"அன்னிக்கு செய்யாத தப்புக்காக நான் உன்னை அடிச்சு.."
"எப்பவுமே செய்யாத தப்புக்காக தான் உங்ககிட்ட அடி வாங்கி பழக்கம்.. எனக்கு தெரிஞ்சு நான் எந்த தப்பையும் செஞ்சதா ஞாபகம் இல்ல.." திருத்தினாள் கண்ணகி.. விழிகளை மூடி திறந்தான் கண்ணபிரான்..
"சரி.. அன்னைக்கு நான் உன்னைய அடிச்சு.. பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசி அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தி கையை உடைச்சு.. உன்னைய என் கூட அறைக்குள்ள வர சொன்னேன்.. உன் மனசு எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கும்முன்னு எனக்கு தெரியுது.. ஆனா அந்த சூழ்நிலையை நீ எப்படி தாங்கிக்கிட்ட..?"
கண்ணகி சிரித்தாள்..
"யாரு தாங்கிக்கிட்டது..! என்னால அந்த அவமானத்தை தாங்கவே முடியல.. கோபம் விரக்தி.. சுய பச்சாதாபம் எல்லாம் சேர்ந்து என்னை ஒரு மாதிரி பைத்தியக்கார நிலைமைக்கு கொண்டு போயிடுச்சு.." மூச்சை இழுத்தாள் கண்ணகி..
"அப்புறம்..!" கொஞ்சம் பதட்டம் அவனிடம்..
"தற்கொலை பண்ணிக்கலாமுன்னு போயிட்டேன்.."
விதிர்த்து நிமர்ந்தான் கண்ணபிரான்..
"கண்ணகி..!"
"என் மகனுக்காக உயிரை கையில பிடிச்சுகிட்டு திரும்பி வந்துட்டேன்.."
கண்ணபிரான் விரக்தியாக சிரித்தான்.. "நான் கேட்க போற கேள்வி ரொம்ப முட்டாள்தனமானது.. உன் மனசுல ஏதாவது ஒரு மூலையில நான் இருக்கேனா கண்ணகி.." விழிகள் மட்டும் மேல்நோக்கி நிமிர்ந்தன..
"நரகாசுரனை கிருஷ்ணன் அழிச்சதனாலதான் தீபாவளி கொண்டாடுறோம்.. தீபாவளியில நரகாசுரனுடைய பங்கு இருக்குங்குறதுக்காக.. பண்டிகை கொண்டாடும் போது அரக்கனை யாரும் மனசுல நினைச்சுக்கிறது இல்ல.."
சொல்லிவிட்டு வெளியேறி இருந்தாள்..
எதிர்பார்த்த பதில்தான்.. என்ன ஒரு வித்தியாசம்.. உவமையோடு வருகிறது.. நீண்ட மூச்செடுத்து சிரித்துக் கொண்டான் கண்ணபிரான்..
அடுத்த சில நாட்களில் முக்கிய சங்கதி பேசும் தோரணையோடு மீண்டும் அவன் முன்பு வந்து நின்றாள் கண்ணகி..
"நீ சொன்னதை நான் சரியா செஞ்சுட்டேனா கண்ணகி.. எனக்கான மருந்தை நீ தரவே இல்லையே..!" கண்ணபிரான் புன்னகைத்தான்.. அந்த சிரிப்பில் பயம் பதட்டம் எதுவுமில்லை.. ஒரு துறவியின் சிரிப்பை போல் நிர்மலமான இதழ் விரிப்பு..
"உங்களுக்கு நான் விஷமே தரலையே..! அப்புறம் மாத்து மருந்து மட்டும் எப்படி தர முடியும்..?"
"உங்களுக்கு ஒரு கதை தெரியுமா..? ஒருத்தர் தன்னோட விடுமுறையில சொந்த ஊருக்கு போய் நாலு நாள் தங்கிட்டு மறுபடி வேலையில வந்து சேர்ந்துட்டாராம்.. ஆறு மாசம் இப்படியே போயிடுச்சாம்.. ஒரு நாள் டீக்கடையில் நின்னு தன்னோட நண்பன் கிட்ட பேசிட்டு இருக்கும்போது அவர் கால்ல தெரிஞ்ச தடத்தை பாத்துட்டு.. என்னப்பா இது வித்தியாசமா இருக்குது.. அப்படின்னு கேட்டாராம் அந்த நண்பர்.."
"தெரியல ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்குது.. நானும் பெருசா கவனிக்கலன்னு இவரும் சொன்னாராம்.."
"பாத்துப்பா பாம்பு ஏதாவது கடிச்சிருக்க போகுது.. ஒழுங்கா போய் டாக்டரை பாருன்னு நண்பர் சொன்னாராம்.."
"சொன்ன அடுத்த நிமிஷம் மாரடைப்பு வந்து ஆள் போய் சேர்ந்தாச்சு.."
"இப்போ பாம்பு கடிச்சதுனாலயா அவருக்கு மரணம் வந்துச்சு.. இல்லையே.. பயம் தான் அந்த மனுஷனை உயிரோட கொன்னுடுச்சு.."
"சோத்துல விஷம் கலந்ததா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்.. வெளியே வீரமா தைரியமா உங்களை நீங்களே தேத்திக்கிட்டாலும் உள்ளூர ஒரு பயம்.. அந்த பயம் தான் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைச்சிடுச்சு.."
"விஷம் கலந்ததா சொன்னதுக்கு முன்னாடி நாள் வரைக்கும் நீங்க செஞ்ச தீவிர உடற்பயிற்சி.. அலைச்சல்.. மன உளைச்சல் எல்லாம் சேர்ந்து உங்களுக்கு சிறுநீர் தொற்று வந்திருக்கு.. அதனாலதான் சிறுநீரில் ரத்தம் வந்துச்சு.."
"சரியான தூக்கம் இல்ல அதனால கண்ணுல கருவளையம்.."
"பயம் உங்க உடம்போட செயல்பாட்டையே மாத்திடுச்சு.. அதனாலதான் சரியா பசி எடுக்கல.. சாப்பாடு செரிக்கல.. வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது இதனாலதான்..!"
"விஷம் கலந்ததா உங்களை நம்ப வைச்சிட்டா போதும்.. மத்ததெல்லாம் தானா நடந்திடும்னு நினைச்சேன்.. நடந்திடுச்சு.."
"மத்தபடி உங்களுக்கு எந்த குறையும் இல்ல.. நீங்க ஆரோக்கியமா தான் இருக்கீங்க.. என்னோட வலியை நீங்க உணரணும்னு நினைச்சேன்.. உணர வச்சிட்டேன்.. உடம்பாலயும் மனசாலயும் உங்களுக்கு அந்த வேதனையை தந்துட்டேன்.. எனக்கு அது போதும்..!"
கண்ணகி சொன்னது அனைத்தையும் சலனமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த கண்ணபிரான் இப்போதும் சிரித்தான்..
"நீ எந்த விஷத்தையும் தரலைன்னு எனக்கு தான் தெரியுமே..!"
கண்ணகி கேள்வியாக பார்த்தாள்..!
"உன் நிலையை உள்வாங்கி எழுத ஆரம்பிச்ச பிறகு உன் உணர்வுகள் மட்டுமில்ல.. உன் குணமும் மனசும் எனக்கு புரிஞ்சு போச்சுது.. விஷத்தை தந்து உயிரை கொல்லுற அளவுக்கு நீ இரக்கம் இல்லாதவ இல்லை கண்ணகி.. நீ ரொம்ப அற்புதமானவ.. உன் பெயருக்கான அர்த்தத்தை தாண்டி கோபுரமா உயர்ந்து நிக்கிறவ.. உனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லாதவன் நான்.. ஆரம்பத்துல பயத்தினால சிதைஞ்சு போன என்னோட உடம்பு மீண்டு வர ரொம்பவே தடுமாறிடுச்சு.. அதனாலதான் இந்த உபாதைகள்..!"
"நான் மருந்து வேணும்னு கேட்டது உன்னோட மன்னிப்பை மட்டும்தான்.. அதையும் நீ முழு மனசோட தரணும் இல்லனா வேண்டாம்.."
"தண்டனையை நீ வேணும்னா தராம போயிருக்கலாம்.. ஆனா எனக்கான தண்டனையை நானே எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.."
கண்ணகியின் முகத்தில் இப்போது பதட்ட கோடுகள் பரவியது..
"புரியல..!"
"கண்ணகியோட வலிகளுக்கெல்லாம் இது மட்டும்தான் தீர்வு.."
"நீ தர மறுத்த விஷத்தை.. முழு மனசோட நானே குடிச்சிட்டேன்.."
என்று கட்டிலுக்கு அடியிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து காண்பித்தான்..
"அய்யோ..! என்ன இப்படி பண்ணிட்டீங்க.." கண்களில் கண்ணீரோடு கதறினாள் கண்ணகி..
"இந்த கண்ணீர் எனக்கானதுதான..! அப்போ உன் மனசுல ஏதோ ஒரு மூலையில இந்த நரகாசுரனும் வாழ்ந்துட்டுதான் இருக்கேன்.." வாயில் கீற்றாக ரத்தக்கொடு படிய சிரித்தான் அவன்..
"முடிஞ்சா என்னை மன்னிச்சிடு கண்ணகி..!"
கடைசி வார்த்தையை அதிகாரமும் ஆளுமையோடும் இதழில் புன்னகையோடும் சொல்லி முடித்து கட்டிலில் சரிந்தவனின் தலை தொங்கி போனது..
தொடரும்..

Last edited: