Active member
- Joined
- Jan 10, 2023
- Messages
- 38
Achooo
Yenna arundhadhi 😟😟😟😟
Yenna arundhadhi 😟😟😟😟
பாதிக்கபட்டவளின் வலி புரிந்தவள் ஆனால் இப்போது சொல்ல நேரமில்லை அதனால்சந்திரமதிக்கு பூப்புனித நீராட்டு விழா வெகு விமரிசையாக நடந்து முடிந்திருந்ததில் பெரும்பங்கு மகரிஷியை தான் சாரும்..
மூன்றாம் நாள் வருகை தந்து மதிக்கு தண்ணி ஊற்றிய பிறகு அக்கம் பக்கத்து வீடுகளில் கொஞ்சம் சகஜமாகிவிட்ட நிலையில்.. சடங்கு எப்படி நடத்த வேண்டும்.. என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும்.. என்று அருந்ததி அந்த தெருவின் அனுபவமிக்க பெண்களிடம் கேட்கத்தான் செய்தாள்..
ஆளாளுக்கு அவர்கள் வழிப்படி சம்பிரதாய முறைகளை சொல்லி அருந்ததியை நன்றாகவே குழப்பி விட்டிருந்தனர்..
"அவங்க சொல்றத சொல்லட்டுமே.. நமக்கு தெரிஞ்ச மாதிரி நாம செய்வோம்.." என்றவன் அருந்ததி சொல்ல மறந்து போய் லிஸ்டில் விட்டு போயிருந்த சந்தனகும்பா பன்னீர் கிண்ணம் முதல் கொண்டு அனைத்தையும் ஞாபகத்தில் வைத்து மிகச் சரியாக மகரிஷி வாங்கி வந்திருந்ததில் அருந்ததிக்கே அத்தனை வியப்பு..
ஒருவேளை மகரிஷி இல்லாமல் போயிருந்தால்..?
நிச்சயம் எதுவும் குடி முழுகி போயிருக்காது..
சமாளித்திருப்பாள்..
ஆம் சமாளித்திருக்க மட்டும்தான் முடியும்.. குழந்தை பிறந்து வளர்ந்து.. என அனைத்தையும் சமாளித்தவள் இந்த வைபவத்தையும் ஏனோ தானோ என எப்படியோ கடந்திருப்பாள்.. ஆனால் இது போன்றதொரு நிறைவான விழாவை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியுமா தெரியவில்லை..
வீட்டு விழாக்களில் ஒரு ஆணின் பங்கு எத்தனை இன்றியமையாதது என ரிஷி உணர்த்தியிருந்தான்..
"எத்தனை நாளைக்கு நான் இப்படி நன்றி கடன் பட்ட மாதிரி ஒரு பார்வை பார்ப்ப.. எனக்கு ரொம்ப தர்ம சங்கடமா இருக்குது..! சாதாரணமா இரு அருந்ததி.." என்று கூட சொல்லி விட்டான்..
இயல்பாக இருக்க முடியவில்லை அவளால்..
ஏதோ னந்த சயனத்திலிருந்து அந்த நாராயணனே எழுந்து வந்து தனக்கு வரம் தந்து நினைத்த காரியங்களை நிகழ்த்தி தருவதாக பரவசப் பட்டு போனாள்..
"சாதாரணமாக கடந்து போற மாதிரியா உதவி செஞ்சிருக்கீங்க..! வயசுக்கு வந்த குழந்தையை வச்சுக்கிட்டு அடுத்து என்ன செய்யப் போறோம்னு தவிச்ச தவிப்பும் அந்த பயமும் எனக்கு மட்டும்தான் தெரியும்.. மனசுக்குள்ள நிறைய ஆசை இருக்கு.. ஆனா எங்கிருந்து ஆரம்பிக்கணும் எப்படி முடிக்கணும்.. யாரை அழைக்கணும் என்ன செய்யணும் எதுவுமே புரியல.. நீங்க மட்டும் கூட இல்லைனா..!"
"வேற யாராவது உதவி செஞ்சிருப்பாங்க அருந்ததி..!"
"இந்த அளவு செஞ்சிருப்பாங்களா..? என் குழந்தைக்கு எல்லாம் செய்யணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனா நீங்க நான் நினைச்சதைவிட அமர்க்களமா நிறைவா எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டீங்க.. நன்றிங்கற ஒரு வார்த்தைக்குள்ள என் உணர்வுகளை அடக்க முடியாது ரிஷி.." அவள் நெகிழ்ந்தாள்..
"நன்றியை வெளிப்படுத்த வேற நிறைய வழிகள் உண்டு.." சொல்லிவிட்டு உதடு குவித்து சிரித்தான் அவன்..
அவன் பேச்சும்.. குறும்பு கொப்பளிக்கும் அந்த முகம் உணர்த்தும் காதலும் புரியாமல் இல்லை..
அருந்ததியின் முகம் மாறியது..! சின்னதாய் சிந்திய சோகம் காத்தாடி நூலாய் அவள் நெஞ்சை அறுத்தது..
இதற்கெல்லாம் நான் தகுதி இல்லாதவள் ரிஷி.. மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்..
"மொத்தமா நீங்க எவ்வளவு செலவு பண்ணியிருக்கீங்க.. நான் எதோ நோட் பண்ணி வச்சிருக்கேன் ஆனாலும் நீங்க சொன்னீங்கன்னா..?"
சிரித்துக் கொண்டிருந்தவனின் முகம் கோபத்தில் நிறம் மாறியது..
"போடி பிச்சி.. (பைத்தியம்)
அது என் கடமை இல்லையா.. நான் சொல்றது உனக்கு புரியுதா இல்ல புரியாத மாதிரியே நடிக்கிறியான்னு தெரியல..
சந்திரமதி யாரு..? மனசார என்னை தன் மகனாய் ஏத்துக்கிட்ட பெரிய மனுஷி.. நா அம்மா.. என் சந்திரம்மாவுக்கு நான் செய்யாம வேற யார் செய்வாங்க..!"
அருந்ததி அமைதியாக தலை தாழ்ந்த படி மூக்கை சுருக்கி உறிஞ்சி கொண்டாள்..
"அருந்ததி.. இறந்து போன அம்மா ஒரு மகனுக்கு திரும்ப எப்படி கிடைப்பாங்கன்னு நினைக்கற..?"
"அ..அது.. அந்த மகனுக்கே மகளா வந்து பிறப்பாங்க..!"
"எனக்கு மட்டும் பிறக்காத மகளா ஒரு தாய் கிடைச்சிருக்கா..! இதுக்கு மேல நான் என்ன சொல்லி உனக்கு புரிய வைக்க முடியும்.."
அருந்ததியின் கண்கள் நனைந்து போயின..
"எனக்காக நீங்க இருக்கீங்க.. உங்களுக்காக நான் வந்து நிக்கறதுல என்னடி பிரச்சனை உனக்கு.. எல்லாத்துக்கும் கணக்கு பாக்கற.." கோபம் தணலின் தீப் பொறிகளாக பறந்தன..
"சரி இனிமே பாக்கல.. உங்க சந்திராம்மாவுக்கு நீங்க என்ன வேணாலும் செய்யுங்க நான் தலையிடல.."
"அப்படி வா வழிக்கு..!".. மெல்ல மலையிறங்கினான்..
"நான் போய் சமைக்கறேன்.."
"என் முழு பெயரை நீ கண்டுபிடிக்கவே இல்லையே அருந்ததி.." அவன் வார்த்தைகளில் நின்று திரும்பினாள்.. சூழ்நிலை சகஜமாகியது.
"அதற்கான நேரமே கிடைக்கலையே..! இந்த ஒரு வாரத்துல கண்டுபிடிச்சிடுவேன்.."
"அப்படி கண்டுபிடிக்கலைன்னா..?"
"நீங்களே சொல்லிடுங்க..!"
"அப்படி என் பெயரை கண்டுபிடிக்கலைன்னா நீ எனக்கு அடிமை.. நான் என்ன சொன்னாலும் கேட்கணும்.."
"உங்க அன்புக்கும் உங்க நல்ல மனசுக்கும் அடிமையாகி எத்தனையோ நாளாச்சு.."
"என்ன யோசனை.. பதில் சொல்லுடி..!"
"இது என்ன விபரீதமான கண்டிஷனா இருக்கு..! ஐயோ இந்த விபரீத விளையாட்டுக்கு நான் வரல..!" வேகமாக தலையசைத்தாள்..
"பந்தயம்னா பந்தயம்தான்.. ரெண்டு நாள் தான் உனக்கு டைம்.. முழுசா என் பெயரை கண்டுபிடிக்கணும்.. இல்லைனா நான் என்ன சொன்னாலும் நீ கேக்கணும்.."
"ம்ம்.. பாக்கலாம்..!" அருந்ததி திரும்பி நடக்க.. உள்ளிருந்து வெளியே வந்த சந்திரமதி இருவரும் பேசிக் கொண்டிருந்த இந்த காட்சியை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள்..
ஆளான நாளிலிலிருந்து முழுதாக பதிமூன்று நாட்கள் முடிந்த பிறகு சந்திரமதி பள்ளி செல்ல துவங்கியிருந்தாள்..
பத்மா டீச்சர் அவளை மென்மையாக அணைத்து தலையை வருடி தந்தார்..
"வயசுக்கு வந்துட்டதனால குழந்தைத்தனத்திலிருந்து விடுபட்டு ரொம்ப முதிர்ச்சியா நடந்துக்கணும்னு இல்ல.. நீ எப்படி இருக்கியோ அப்படியே இரு.. சந்தோஷமா இரு.. ஆடலாம் பாடலாம் குதிக்கலாம் ஓடலாம் எதுவுமே தப்பில்லை.. ஆனா வீட்டை விட்டு வெளியே வந்துட்டா ரொம்ப கவனமா இருக்கணும் உன் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.. அப்புறம் ஹைஜினிக்கா இருக்கணும்.. பீரியட்ஸ் டைம்ல ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது பேட் மாத்தணும்.. உள்ளாடைகளை நல்லா சுத்தமா துவைச்சு போட்டுக்கணும்.. அம்மா கிட்ட சொல்லி பீரியட்ஸ் டைம்ல யூஸ் பண்ற இன்னர்ஸ் எல்லாத்தையும் கிருமி நாசினி போட்டு வாஷ் பண்ணி வெயில்ல நல்லா காய வச்சு எடுத்து மடிச்சு வைக்க சொல்லு.. நல்லா சாப்பிடணும்.. காய்கறி பழங்கள் கீரைன்னு எதையும் ஒதுக்க கூடாது புரியுதா..?" பொதுவான அறிவுரைகளோடு இருக்கையில் போய் அமர சொன்னாள்.. அதன் பிறகு வழக்கம் போல் வகுப்பு பாடங்கள் நடக்க துவங்கியது..
தோழிகள் ரகசியமாக அவளை நலம் விசாரித்து விட்டு டீச்சரின் அதட்டலில் பாடத்தை கவனிக்க துவங்கினர்..!
"எப்படி வயசுக்கு வந்த..? என்ன நடக்கும்..?" இதுபோன்ற அபத்தமான கேள்விகள் எதுவும் இல்லை..
அரசு ஆணைப்படி ஆறாம் வகுப்பிலிருந்து அனைத்து மாணவிகளுக்கும் மாதிரி படம் மூலம் கருமுட்டை கர்ப்பப்பை மாதவிடாய் என அனைத்து படிநிலைகளையும் விளக்கமாய் கற்பித்து சானிடரி பேட் உபயோகம் பற்றி சொல்லிக் கொடுத்து.. ஆளுக்கொரு நாப்கின் பாக்கெட்டுகளை விநியோகம் செய்திருந்தது. பள்ளி நிர்வாகம்..
அப்படியே சொல்லிக் கொடுக்காமல் போனாலும் இந்த காலத்து பெண் குழந்தைகள் இது பற்றிய விஷயங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்..!
அதனால்தான் அருந்ததிக்கு கூட தன் மகளிடம் இந்த பருவ மாற்றம் பற்றி பெரிதாக பில்டப் செய்து விளக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது..
"என் பேரு நீ கண்டுபிடிக்கவே இல்லையே அருந்ததி.. நான் சொன்ன ரெண்டு நாள் காலக்கெடு முடிஞ்சு போச்சு.." அடிப்பிடிக்காமல் அரிசி உடைத்த உப்புமாவை கிளறிக் கொண்டிருந்த அருந்ததியின் பின்னால் நின்றிருந்தான் அவன்..
"கண்டுபிடிச்சிட்டேனே..! உங்களுக்கு மட்டும் தான் சந்திரமதி கூகுளா..? நான் கேட்டா சொல்ல மாட்டாளா என்ன."
"அப்படியா எங்கே சொல்லு..?" முன்கை கட்டி நின்றான் அவன்..
இடப் பற்றாக்குறை மிக நெருக்கம்..
"அப்படியே கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணிட்டா என்ன.. அப்புறம் வேணும்னா ஒரு அடி கூட வாங்கிக்கலாம்.." சகட்டுமேனிக்கு யோசித்தது வாலிப மனது
அவன் தவிப்பு புரியாது அடுப்பை அணைத்துவிட்டு அவன் பக்கம் திரும்பினாள் அருந்ததி..
"துரோணா மகரிஷி.."
சொன்னதை செய்து காட்டி விட்ட மிடுக்கோடு தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளை இதழ்களுக்குள் புன்னகையோடு ரசித்தான் மகரிஷி..
"பாதி பெயர் தான் சொல்லி இருக்க..!"
"என்னது..?" அருந்ததியின் முகம் மாறியது..
"ஆமா..! என்னோட முழு பெயர் அது கிடையாது.."
"அ.. அப்ப ஒரு வாரம் டைம் கொடுங்களேன் கண்டுபிடிச்சு சொல்லுறேன்.."
"அதெல்லாம் கிடையாது நான் கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு நீ சவால்ல தோத்துட்ட.. அதனால நீ எனக்கு அடிமை.."
"அய்யோ..! நான் என்ன அடிமை சாசனமா எழுதி கொடுத்திருக்கேன்.."
"எழுதி கொடுக்கறியா..?"
"என்ன எழுதிக் கொடுக்கணும்.. அடிமை சாசனமா..?" தலை சாய்த்து அவனைப் பார்த்தாள்..
"எஸ் காலம் முழுக்க என் அன்புக்கு அடிமையாய் இருப்பேன்.. என்னை விட்டு போக மாட்டேன்னு சாசனம் எழுதிக் கொடுக்கறியா.." ஆழ்ந்த குரலில் கேட்டான் மகரிஷி..
பதில் சொல்ல தெரியாமல் நின்றிருந்தவளிடம் இன்னும் அருகில் வந்தான்..
"என்னை கல்யாணம் பண்ணிக்கறியா அருந்ததி.."
திகுதிகுவென பால்குடம் பொங்கியதைப் போல் நிறைந்த அதிர்ச்சிக்குள்ளானாள் அருந்ததி..
மகரிஷியின் ஆசை ததும்பி வழியும் கண்களை கண்டு.. முடியாது என்று சொல்லவேண்டிய தன் நிலையை வெறுத்து மனம் குன்றினாள்..
இப்படி ஒரு சம்பாஷனை தங்களுக்குள் என்றுமே வந்து விடக்கூடாதென்று உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்த அர்த்தமில்லாத வேண்டுதல்கள் யாவும் வீணாய் போயின..
பாவம் அவளை தனக்குள் தகித்து தினம் தினம் அணு அணுவாய் சோதித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு பெயர் வைக்க தெரியாமல் வற்றிய குளத்தில் கையளவு நீரில் உயிர் வாழும் ஒற்றை மீன்னாய் அவள் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு கேள்வியை கேட்டால்..?
திருமணம் என்பது மிக சாதாரணமான விஷயம்..
மற்றவர்களுக்கு..!
பதின் பருவ மகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அருந்ததியை பொறுத்தவரை அது அவுட் ஆஃப் சிலபஸ்.. இன்னொரு வாழ்க்கைக்கு தான் தகுதி இல்லாதவள் என்று நினைக்கிறாள்..
மகரிஷியை மறக்க முடியாது.. அவன் இல்லாத நிமிடங்களை நினைத்து கூட பார்க்க முடியாது.. ஆனால் கண்களிலும் மனதிலும் நிறைந்து நிற்கும் சந்திரமதிக்கு என்ன பதில் சொல்ல முடியும்..?
மகளின் எதிர்காலம் மிக முக்கியம்..
நிறைய தடுமாற்றம்.. மூச்சு முட்டும் திணறல்.. ஆசை அளவுக்கதிகமாக இருக்கிறது ஆனால் பதில் சொல்ல தெரியவில்லை.. மயங்கி அவன் பக்கம் சரிந்து விழுந்த மனதை இழுத்து செங்குத்தாக தூக்கி நிறுத்த அரும்பாடுபட்டாள்..!
"செப்பு அருந்ததி.. நீ நான் சந்திரமதி எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா வாழலாமா..?"
"இப்பவும் நாம எல்லாரும் ஒரே குடும்பமாக தானே இருக்கோம்.." மெல்லிய குரலோடு சிரிக்க முயன்றாள்..
மறுப்பை அவன் மனம் நோகாமல் சொல்லுகிறாளாம்..
இழுத்து மூச்சு விட்டான் மகரிஷி.. "ஓகே நான் வெளிப்படையாகவே பேசுறேன்.. எனக்கு உறவுன்னு உரிமையா கை போட்டு அணைச்சுக்க ஒருத்தி வேணும்.. அது நீயா இருக்கணும்.."
"நான் அதுக்கு தகுதியானவள் இல்லையே ரிஷி.. என்னை விட்டுடுங்க.. எனக்கு என் மகள் மட்டும் போதும்.."
அவள் மறுப்பை தாங்க முடியவில்லை வேதனையுடன் எச்சில் கூட்டி விழுங்கினான்..
"என்ன தகுதி..? அப்ப நான் வேண்டாமா..!"
கண்ணீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..
"காலம் முழுக்க நாம இப்படியே இருக்க முடியாது அருந்ததி.."
"ஒரு நல்ல நண்பர்களா..!"
அவள் முடிப்பதற்குள்..
"அப்படி ஒரு வட்டத்துக்குள்ள நான் இல்லையே.. உன் மேல எனக்கு நிறையவே ஆசை இருக்கு.. வெறும் ஃப்ரெண்ட்ஷிப்னு பொய் சொல்லி உன்னையும் என்னையும் ஊரையும் ஏமாத்த நான் விரும்பல.."
ஏ.. ஏன்..?
"இந்த நிமிஷம் உன்னை கிஸ் பண்ணனும்னு தோணுது.. இது வெறும் நட்பாடி.."
விதிர்த்து போனாள் அருந்ததி..
அழகான மனம் கவரும் பேச்சு.. ரசிக்கும் நிலையில் அவள் இல்லை.. இளமை தளிர்விட்டு கிறங்கும் மனதை தட்டி தட்டி எழுப்பினாள்..
"உங்களுக்கு புரியல ரிஷி.. சந்திரமதி என் மேல நிறையவே நம்பிக்கை வச்சிருக்கா..!" அவள் நம்பிக்கையை உடைச்சு உங்கள கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு இஷ்டம் இல்ல..
"சந்திராம்மா கிட்ட நான் பேசுறேன் பொம்மா..!"
"வேண்டாம்.. ஒரு பனிரென்டு வயசு குழந்தைக்கு அம்மாவோட இரண்டாங் கல்யாணத்தை ஏத்துக்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல.. அவ என்னை தப்பா நினைச்சிட கூடாது ரிஷி..! என்னால அதை தாங்கவே முடியாது.."
"சந்திராம்மா நம்மள புரிஞ்சுக்குவாங்க அருந்ததி..!"
"இப்பதான் மதி என்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சிருக்கா.. என்னை புரிஞ்சுகிட்டு பாசமா நிறைய விஷயங்களை என்னோட ஷேர் பண்ணிக்கிறா.. நீங்க எதையாவது சொல்லப் போய்.. அவ என்னை தப்பா நினைச்சு மறுபடியும் விலகிப் போயிட்டா.. என்னால அதை தாங்கவே முடியாது ரிஷி.."
"அரு..!" அவன் குரல் தழுதழுத்தது..
"எனக்கொரு அழகான குடும்பத்தை தர உனக்கு விருப்பமில்லையா அருந்ததி.."
கையெடுத்து கும்பிட்டாள் அருந்ததி..
"என அழ வைக்காதீங்க.. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க..! உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவ இப்ப ஒத்துக்கிட்டாலும்.. நாளைக்கு பின்னால நம்ம உறவை ஏத்துக்க முடியாம அவ என்னை விட்டு விலகிப் போயிட்டா..? ஒருவேளை என்னை வெறுத்துட்டா நான் என்ன செய்வேன்.. எனக்கு என் சந்தோஷத்தை விட என் மகளோட வாழ்க்கையும், அவன் எதிர்காலமும் ரொம்ப முக்கியம்.."
"உன் மனசுல நான் இல்லையா அருந்ததி.. இதுக்கு மட்டும் பதில் சொல்லு..!" ஏக்கவிழிகள் கண்ணீர் திரையிட்டன..
அருந்ததி அமைதியாக இருந்தாள்..
அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு கணத்தில் அங்கிருந்து நகர்ந்தான்..
சின்ன சின்ன குறும்பு பேச்சுகளுக்கும்.. பார்வை பரிமாற்றங்களுக்கும்.. சந்தோஷ அரட்டைகளுக்கும் விடுமுறை விட்டு இருவரும் சந்திரமதியோடு சேர்ந்திருந்த நேரங்களை மௌனமாகவே கழித்தனர்.. அவசியத்தை தவிர வேறெதற்கும் வாய் திறக்கவில்லை அவர்கள்..
சந்திரமதிக்கு தான் அவர்களின் அமைதி குழப்பத்தை தந்தது.. அம்மாவின் சோகத்தை ஆழ்ந்து கவனிக்க துவங்கினாள்..
சுற்றி சுற்றி வரும் மோத்தியை சோக விழிகளுடன் தன் தாய் வருடி தருவதை பார்த்தாள்..
தான் பேசிக் கொண்டிருக்கும்போது கவனமற்று எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் மகரிஷியின் பார்வையை புரிந்து கொள்ள முயன்றாள்..
இந்த நிலையில் தான் வக்கீல் தாமோதரன் மகரிஷியையும் சந்திரமதியையும் தன் இடத்திற்கு அழைத்திருந்தார்..
தனது வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அருந்ததி..
"என் பைக்ல போயிடலாம்..!" என்றவனை மௌனமாக நிமிர்ந்து பார்த்தாள்..
"ரெண்டு பேரும் ஒண்ணா பைக்ல போறதுனால நீ என்னை விரும்பறதா நான் நினைச்சுக்க மாட்டேன்.. சந்திரமதியும் உன்னை வெறுத்துட மாட்டா.. உலகமும் ஒரே நாள்ல மாறிடாது.. வண்டி ஏறு.." என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தாமோதரன் ஆபீசிற்கு சென்றான்..
இருவரையும் அமர வைத்து காபி வரவழைத்து பருக சொன்னார் தாமோதரன்..
"ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் கூப்பிட்டேன்.. உங்களோட முன்னாள் கணவர் மிஸ்டர் பிரபாகரன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காரு.."
"ஏனாம்?" உணர்வற்ற தலை தாழ்ந்திருந்த அவளின் விழிகள் மெல்ல நிமிர்ந்தன..
"ஏதோ தெருநாய் கடிச்சதுல ரேபிஸ் அட்டாக் ஆகியிருக்காம்.. ரொம்ப நாள் கவனிக்காம இருந்திருக்கார்.. இப்ப அது பெரிய பிரச்சினையில் கொண்டு வந்து விட்டுருக்கு.. நோய் முத்திப்போன நிலைமையில் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார்ன்னு சொல்ல முடியாதாம்..!"
மோத்தி என்று நினைத்து வேறு ஏதோ ஒரு தெரு நாயை அவன் அடித்து காயப்படுத்திய நேரத்தில் வலி தாங்காமல் அந்த நாய் அவனை கடித்திருக்க வேண்டும்.. அந்தக் கோபத்தில் நாயை அடித்து அவன் கொன்றிருக்க வேண்டும்.. அன்று மோத்தியை போல் வெள்ளையில் கருப்பு புள்ளியிட்ட நாய் ஒன்று இறந்து கிடந்ததன் காரணம் இப்போது புரிந்தது..
பிரபாகரன் பல இன்னல்களை தந்த கொடுங்கோலனாகவே இருந்த போதிலும்.. எதிராளியின் துன்பத்தில் இன்பம் காணும் மிருகத்தனமான மனம் படைத்தவள் இல்லையே அருந்ததி.. பிரபாகரன் இறந்து தன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று ஒருநாளும் அவள் எண்ணியது இல்லை.. தனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே அவள் நோக்கம்..
சக மனுஷியாக இந்த நிலையிலும் அவனுக்காக வருந்தவே செய்தாள்..
"கணவன் மனைவி ரெண்டு பேர்ல ஒருத்தர் நோய்வாய் பட்டு இருக்கும்போது அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் போது அவங்க கிட்ட அனுமதி வாங்காமலேயே விவாகரத்து எடுத்துக்கலாம்னு சட்டம் சொல்லுது..! அதனால உங்களுக்கு விவாகரத்து கிடைக்கிறதுல எந்தவித பிரச்சனையும் இருக்காது.."
வக்கீல் சொல்ல இழுத்து மூச்சுவிட்டாள் அருந்ததி..
அவன் இவ்வுலகத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொள்கிறான் என்னும்போது அவனிடமிருந்து கிடைக்கப் போகும் இந்த விடுதலை பத்திரத்தால் தனக்கு எந்த பலனும் இல்லையே..!
வக்கீலிடம் விடைபெற்று கொண்டு இருவரும் வெளியே வந்தனர்..
"என்ன யோசனை உனக்கு..?"
மகரிஷியின் முகம் இறுகிப் போயிருந்தது..
"இல்ல.. நம்ம மோத்தி தெரியாத்தனமா யாரையாவது கடிச்சா கூட இப்படித்தான் ரேபிஸ் அட்டாக் வருமா..?"
"மோத்திக்கு போட வேண்டிய தடுப்பூசியெல்லாம் கரெக்டா போட்டுட்டு வரேன்.. அவனால யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை.. உன் சந்தேகம் தீர்ந்ததா..?"
"ம்ம்..!"
"போகலாமா..? வண்டியில ஏறு..
பசிக்குது வழியில் ஏதாவது சாப்பிட்டு போகலாம்.." எல்லாம் வார்த்தைகளும் வில்லிலிருந்து விடப்பட்ட அம்பை போல் கடினமாகவே வந்தன..
என்னை வேண்டாம்னு சொல்லுவியா என்ற கோபம்..
நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க..
ஒரு கட்டத்தில் அருந்ததி தன் மகளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுவதென முடிவெடுத்தாள்..
அவள் முடிவை ஏற்றுக்கொண்டு சந்திரமதி மகரிஷியும் கூட சம்மதித்திருந்தனர்..
அப்படி என்னதான் நடந்தது..!
தொடரும்..
Niceசந்திரமதிக்கு பூப்புனித நீராட்டு விழா வெகு விமரிசையாக நடந்து முடிந்திருந்ததில் பெரும்பங்கு மகரிஷியை தான் சாரும்..