• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 34

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
58
சுற்றியிருந்த சமூகத்தில் வக்கிரம் பிடித்த ஆண்களைத் தவிர பெண்கள் நலம் விரும்பிகள் யாரும் உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! உனக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ஆசைகள்னு எதுவுமில்லையா என்று கேட்கவில்லையே.. ஒருவேளை அப்படி கேட்டிருந்தால் முழுதாக தன் மனதை படிக்க முயற்சி செய்திருப்பாளோ என்னவோ..

மகளுக்காக மெழுகுத் திரியாக உருகி வாழ வேண்டிய பொம்மையாக தன்னை சித்தரித்துக் கொண்டவளுக்கு
இப்போது காதல் ஆசை கனவு எல்லாம் பெருந்தவறாக தோன்றுகிறது..

திருமணம் என்பது வெறும் சடங்கு தான்.. அந்த சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் சந்திரமதியின் அனுமதி கிடைக்கலாம்.. ஆனால் அதற்குப்பின் வாழப்போகும் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல..! திருமணத்திற்கு பின்னும் சன்னியாசியாக வாழ இயலுமா.. வயது வந்த மகளுக்கு முன் சந்தோச தம்பதிகளாக வாழ்க்கையை அனுபவித்து உற்சாகம் கொள்ளுவதெல்லாம் சாத்தியமா..! அசிங்கம் இல்லையா..?

அயோக்கியனா இருந்தாலும் அந்த பிரபாகரன் தானே சந்திரமதியின் தகப்பன் அவனை விடுத்து இன்னொரு ஆடவனுடன் நான் வாழ்வதை சந்திரமதி ஏற்றுக் கொள்ளுவாளா.. இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒரு தாயினால் ஒரு பதின்பருவ மகள் மனதளவிலும் சமூகத்திலும் எத்தனை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..

அப்பா இல்லை என்ற குறையே சந்திரமதியின் நெஞ்சில் வலுவாக பதிந்து எத்தனை அவமானங்களை சந்தித்தாள்..‌ ஒருவேளை நான் ரிஷியே திருமணம் செய்து கொண்டால்..?

ஏய் சந்திரமதி அது உன்னோட இரண்டாவது அப்பாவா..

ஓ.. சித்தப்பா..

இல்லடி அவங்க அம்மாவோட இரண்டாவது புருஷன்..!

எல்லோரும் கைகொட்டி சிரிப்பதை போல் காதை பொத்திக் கொண்டாள் அருந்ததி..

ஏற்கனவே சமீப காலங்களாக தன்னிடம் தெரியும் வித்தியாசங்களை வினோதமாக பார்க்கிறாள் சந்திரமதி..

மல்லிகையை சூடிக் கொள்வதும் அலங்கரித்துக் கொள்வதும்.. ரிஷியை பார்த்து ரகசியமாக சிரிப்பதும்.. ச்சீ.. எத்தனை கேவலமாக நடந்து கொண்டிருக்கிறேன்..

எல்லோரும் சொல்வது போல் கட்டுப்படுத்த முடியாமல் அப்படி என்ன உல்லாசம் வேண்டியிருக்கிறது..

உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பால் என்னென்னவோ செய்து விட்டேனா..?

இதில் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக சுற்றி திரிந்தால் சந்திரமதியின் மனநிலை என்னவாக இருக்கும்.. என்னிடம் அவள் முக்கியத்துவம் குறைந்து போனதாக நினைப்பாளோ..?

படிக்கும் குழந்தையின் மனதில் சலனத்தை நானே புகுத்தலாமா..

அசிங்கத்தனமாக நடந்து..
ஐயோ..! தவறு தவறு..

மனதுக்குள் சுருண்டு போனாள் அருந்ததி..

ஒரே வீட்டில் மூன்று பேரும் ஒன்றாக இருந்த போதிலும் ரிஷியின் பார்வையை அவனுடனான அரட்டைப் பேச்சுக்களை அறவே தவிர்க்க ஆரம்பித்தாள்..

உடைந்து போனான் மகரிஷி.

கை கொடுத்து தூக்கிவிட ஆள் இருந்தும் வெட்டி வைத்த குழியிலிருந்து அவள் வெளியே வர தயாராக இல்லை எனும் போது அதையும் மீறி என்ன செய்ய முடியும்..!

அவனும் சோர்ந்து போய் ஜடமாகத்தான் இருந்தான்..

இதற்கிடையில் அருந்ததிக்கும் பிரபாகரனுக்கும் விவாகரத்தும் கிடைத்துவிட்டது..

பிரபாகரன் மோசமான நிலையில் இருந்ததால் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது..

வக்கீல் தாமோதரனுக்கு நன்றி சொல்லிவிட்டு கையில் காகிதங்களுடன் மகரிஷியோடு நடந்தபடி வெளியே வந்தாள் அருந்ததி

"பிரபாகரனோட அப்பா மருதமுத்து அவருக்கும் ஏதோ இன்பெக்ஷனாம்.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க..!" மகரிஷி நீதிமன்ற வாசலில் அவளோடு நடந்தபடியே சொல்ல கண்கள் சுருக்கி அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

"எப்படி..?"

"தெரியல.. இன்ஃபெக்ஷன் ஆனவங்களோட உமிழ் நீர் பட்டா கூட ஆபத்துன்னு சொல்லுவாங்க.. தண்ணி கூட குடிக்க முடியாத அளவுக்கு உடம்பெல்லாம் உதறுதுன்னு பேசிக்கிட்டாங்க.."

"உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?"

"இந்த டிவோர்ஸ் கேஸ் விஷயமா பிரபாகரன் பத்தி விசாரிக்கும் போது அவனோட அப்பா மருதமுத்து பத்தியும் உபரி தகவலா நியூஸ் கிடைச்சது.."

அருந்ததி அமைதியாக நடந்து வந்தாள்.. கேவலமான எண்ணம் படைத்த மருதமுத்துவிற்கு இது தேவைதான் என்று திருப்தி படவும் முடியவில்லை அதற்காக வருந்தவும் மனமில்லை..

"என் குடும்பத்தின் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டியேடி ****.. நல்லா வாழ்ந்திடுவோம்னு மட்டும் நினைச்சுடாத.. நீயெல்லாம் நாசமாத்தான் போவ.. மண்ணா போய்டுவ. உன் குடும்பம் உருப்படாது.. உன் மக வாழ மாட்டா..! பாத்துக்கிட்டே இரு.. தெருத் தெருவா ஆத்தாளும் மவளும் பிச்சைதான் எடுக்க போறீங்க.."

கோர்ட் வாசலில் நின்று மண்ணை வாரி தூத்தினாள் சங்கரி.. கர்மா திரும்புகிறது என்று கூட அறியாமல் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதை போல்..

பெருங்கோபத்துடன் முன்னேறி செல்லப் போனவனை கைப்பிடித்து தடுத்தாள் அருந்ததி..

"ஏற்கனவே நிறைய அடி வாங்கியாச்சு அந்த கோபம் தான் இப்படி பேச வைக்குது விட்டுடுங்க.. போகலாம்" என்று அவனோடு நடந்தாள்..

இருவரும் பைக் நிற்கும் இடத்திற்கு வந்தார்கள்..

"உன்னை சுத்தியிருந்த முள்வேலி எல்லாத்தையும் தகர்த்தாச்சு.. இனி நீ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத சுதந்திர பறவை.. உன் விருப்பப்படி எதுவானாலும் செய்யலாம் அருந்ததி.. உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.." என்றான் ரிஷி..

"சுத்தி இருக்கிற உலகம் என்னைத்தான் கூர்மையா கவனிச்சுட்டு இருக்கு.. நான் எது செஞ்சாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கு.."

"சுத்தி இருக்கிறவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு அருந்ததி.. உன்னை பார்த்து குறை சொல்றது மட்டும் அவங்க குறிக்கோள் இல்லை.. வாய்க்கு வந்ததை சொல்லிட்டு தன்னோட பொழப்ப பாக்க போயிடுவாங்க..‌ உன் வாழ்க்கையை நீ தான் வாழனும்."

வார்த்தைகள் பரிமாறி கொள்ளப்பட்டன.. ஆனால் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை..

"எனக்கு வாழனும்னு ஆசை இல்ல.. என் பொண்ண நல்லபடியா வளத்தா போதும்.."

இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பதாக நீண்ட பெருமூச்சு விட்டு வண்டியில் ஏறினான் மகரிஷி..

பிரபாகரனின் நிலை பற்றியும் அவனிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட விஷயத்தைப் பற்றியும் மேலோட்டமாக மகளிடம் சொல்லி வைத்திருந்தாள் அருந்ததி..

பெற்ற தந்தையின் நிலையை எண்ணி கலங்கவில்லை கதறவில்லை..!

"அவரோட முடிவை அவரே தேடிக்கிட்டாரு நாம என்னம்மா செய்ய முடியும்.. விடுங்க நீங்க இதையெல்லாம் நெனச்சு வருத்தப்படாதீங்க.." பெரிய மனுஷி போல ஆறுதல் சொன்ன மகளை வியப்பாக பார்த்தாள் அவள்..

இந்த நிலையில் தான் சந்திரமதி எதிர் வீட்டு கனகாவின் இளைய மகன் சஞ்சையை அடித்துவிட்டாள் என்று புதிதாக பஞ்சாயத்து ஒன்று வந்து சேர்ந்தது..

ஒருவரை ஒருவர் விளையாட்டாக கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் சஞ்சய் சந்திரமதியை ஜெயித்துவிடும் நோக்கத்தோடு..

"உங்க அம்மா கள்ளக்காதலனோட சுத்தறாங்களாம்.. அந்த ஆள வச்சுட்டு இருக்காங்களாம்.." எங்க அம்மா சொன்னாங்க.. அவன் குதித்து சிரிக்க பளாரென்று அறைந்துவிட்டாள் சந்திரமதி..

கன்னத்தில் கை வைத்தபடி அழுது கொண்டே கனகாவை அழைத்து வந்தான் சஞ்சய்..

"இப்ப எதுக்கு என் பையன அடிச்ச.. அவன் சொன்னதுல ஒன்னும் பொய் இல்லையே..‌ உங்க வீட்ல நடக்கிறதையெல்லாம் நீ பாத்துட்டு தானே இருக்க.. உங்க அம்மாவுக்கும் அந்த வாத்தியாருக்கும் இடையில தொடர்பு இருக்குன்னு உனக்கு தெரியுமா தெரியாதா..! நெருப்பில்லாமல் புகையாது..‌ இல்லாததை யாரும் இட்டு கட்டி சொல்ல மாட்டாங்க.."

அதற்குள் பக்கத்து வீட்டு பெண்மணி இன்னொருத்தியும் வந்து விட்டாள்..

"பொதுவா அம்மா தான் மகளுக்கு அட்வைஸ் பண்ணனும்.. ஆனா இந்த நிலைமையில் நீ தான் உன்னோட அம்மாவுக்கு அறிவுரை சொல்லி திருத்தணும்.. பொம்பளைங்க ஊருக்கு பயந்து தான் வாழனும்.. உனக்காக கூட உன் அம்மா யோசிக்கலையா.. இந்த சமுதாயத்தில் நீ தல நிமிர்ந்து நடக்கணும்னா உன் அம்மா ஒழுக்கமானவளா இருக்கணும் இல்லன்னா உன்னையும் சேர்த்து தப்பா பேசுவாங்க சந்திரமதி.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு நாளைக்கு உன்னையும் நாலு பேர் கையை புடிச்சு இழுப்பானுங்க இதெல்லாம் தேவையா உனக்கு..!"

"சந்திரமதி உன் மேல இருக்கிற அக்கறையில தான் நாங்க இப்ப பேசிட்டு இருக்கோம்.. ஒன்னு அந்த ஆள வீட்டை விட்டு போக சொல்லுங்க.. இல்லன்னா நீங்க ரெண்டு பேரும் தனியா எங்கேயாவது போய் சந்தோஷமா வாழுங்க..!"

"அத விட்டுட்டு நல்லது சொல்றவங்க எல்லாரையும் அடிச்சு திட்டி உங்க வாழ்க்கைய விட்டு அப்புறப்படுத்தனும்னு நினைச்சா கடைசில நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. சொல்றத சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம்.."

பதிமூன்றை தொட்ட சிறுமியிடம் பேசக்கூடாததையெல்லாம் பேசி அவள் மனதை கலைத்துவிட்டு மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் கனகாவும் இன்னொருத்தியும்..

அவர்களை சொல்லியும் குற்றமில்லை.. ஊர் உலகத்தை பொறுத்தவரை அது தான் நியாயம்..

மனைவி இறந்த இரண்டாவது மாதத்திலேயே துணையில்லாமல் ஒரு ஆணால் வாழ முடியாது என்று அவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் இதே சமூகம் தான் பெண்களை நெருப்பு பந்து போல் உணர்ச்சிகளை இறுகக் கட்டிக் கொண்டு தனியாக வாழ சொல்லுகிறது..!

AI தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்திருக்கும் அல்ட்ரா மாடன் யுகத்தில் கூட பெண்களுக்கான சில விதிகளும் கட்டுப்பாடுகளும் என்றும் மாறுவதில்லை..

வீட்டில் வந்து அன்னையிடம் அத்தனையும் சொல்லி அழுதாள் சந்திரமதி..

அருந்ததிக்கு என்ன ஆறுதல் சொல்லி மகளை தேற்றுவதென்று தெரியவில்லை..

"அ.. அம்மா..! நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு எனக்கு தெரியும் ஆனா ஏன் அவங்க அப்படி பேசணும்.. உங்களையும் ரிஷியையும் சேர்த்து வைச்சு தப்பு தப்பா என்கிட்டேயே சொல்றாங்களேம்மா.. அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு நீங்க வந்து சண்டை போடுங்க..‌" சந்திரமதி கைப்பற்றி இழுத்த போது அருந்ததிக்கு மனசாட்சி உறுத்தியது..

அவர்கள் சொல்வது போல் கள்ளக்காதல் இல்லை..

ஆனால் ஒரு அழகான ஆரோக்கியமான காதல் இருக்கத்தானே செய்கிறது.. இல்லை என்று எப்படி மறுக்க முடியும்..

உண்மையிலேயே ரிஷி மீது எனக்கு சொல்லப்படாத அபரிமிதமான ஒரு நேசம் உண்டு என சந்திரமதியிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா..!

விழிகளில் கண்ணீர் கோர்த்து நின்றது..

வார்த்தைக்கு வார்த்தை.. உன்னை நம்புகிறேன்.. எங்க அம்மா ரொம்ப நல்லவங்க என்று ஒரு உத்தம கோட்டுக்குள் நிறுத்தி வைப்பது தான் அருந்ததியே கொல்லாமல் கொல்லுகிறது..

ஊருக்கு அறிவுரை சொல்லும் உத்தம சிகாமணிகள் தன் பிள்ளைகளை கண்டிக்க தவறியதாலோ என்னவோ.. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து சந்திரமதி போகும் போதும் வரும் போதும் சத்தம் போட்டு அவளை கேலி செய்ய துவங்கினர்..

'இவங்க அம்மா கள்ளக்காதல் பண்றாங்களாம் டா..!"

"அப்படின்னா.."

"ரகசியமா வச்சிருக்காங்களாம்.."

"உனக்கு யாருடா சொன்னா.."

"எங்க அம்மா சொன்னாங்களே.."

கொள்ளென ஒரு சிரிப்பு..

"எங்க அம்மாவ பத்தி ஒரு வார்த்தை பேசினா அப்புறம் நடக்கிறதே வேற.." சந்திரமதி கல்லை தூக்கிக் கொண்டு நிற்க கூட்டம் கலைந்து ஓடும்..

வீட்டுக்கு வந்து அருந்ததியின் மடியில் படுத்து அழுவாள் சந்திரமதி..

ஊர் வாயை அடைக்க முடியாது..

இப்படியே யாரேனும் ஏதாவது சொல்லி சொல்லி மகளின் மனதை புண்படுத்திக் கொண்டே இருந்தால் ஒருநாள் அவள் நிச்சயம் தன்னை வெறுக்க கூடும் என்று பயந்தாள் அருந்ததி..

"வேணும்னா நாம இந்த வீட்டை விட்டு போயிடலாமா மதி..! புதுசா ஒரு இடத்துக்கு.. நம்மளை யாருமே குறை சொல்லாத நல்ல இடத்துக்கு.. போகலாமாடா.."

"அப்படி ஒரு இடம் இருக்குதாமா..?"

"எனக்கு தெரியலையே..?"

"அங்க யாரும் உன்னை தப்பா பேச மாட்டாங்களா.."

அருந்ததி பேச்சற்று அமைதியாக இருந்தாள்..

"போய்டலாம்மா..!"

"உன் ரிஷி அங்கிளை விட்டு நீ இருந்துக்குவியா.. அவர்கிட்ட இருந்து உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்ததா நீ என்னை வெறுத்திட மாட்டியே.."

"உன்னை விட யாருமே எனக்கு முக்கியமில்லைம்மா.. உன்னை எல்லாரும் தப்பா பேசுறது என்னால தாங்கவே முடியல.. யாரும் உன்னை புரிஞ்சுக்கல.. நம்ம வேற இடத்துக்கு போயிடலாம்.." விசித்து அழுதாள் மதி..

வெளிப்படையாக இருவரும் ஒருமனதோடு சொல்லிக் கொள்வதாக காட்டிக்கொண்ட போதிலும்.. இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டுமென்ற நினைப்பே அம்மா மகள் இருவரின் மனதுக்குள்ளும் அத்தனை அழுத்தத்தை தந்தது..

அதிலும் ரிஷி.. அவனை தனியே விட்டு எப்படி செல்வது..! யோசிக்க கூட முடியாத பரிதாப நிலையில் கட்டியணைத்துக் கொண்டு தாயும் மகளும் அழுது தீர்த்தனர்..

மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்த விஷயங்களை சொல்லி இங்கிருந்து செல்ல வேண்டியதற்கான தேவையையும் சந்திரமதியின் சம்மதத்தையும் ரிஷியிடம் எடுத்துச் சொன்னாள் அருந்ததி..

வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் சொல்லச் சொல்ல இறுகிப் போனான் மகரிஷி..

"சரி..! உங்க விருப்பம் அதுவா இருக்கும்போது நான் தடுக்க விரும்பல.. என் கூட இருக்கும்போது கிடைக்காத நிம்மதியும் சந்தோஷமும் உங்களுக்கு தனியா போன பிறகாவது கிடைக்கட்டும்.." அவன் ஒட்டாத பேச்சில் அருந்ததி வெறுமையாக சிரித்தாள்..

"என் தனிப்பட்ட சந்தோஷம் தான் என்னை இந்த நிலைமையில் கொண்டு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.. இனி என் மகளோட சந்தோசம் தான் என்னோட சந்தோஷம்.."

"ஆனா‌ என்னோட சந்தோஷம்..?"

அருந்ததி அழுகையை அடக்கிக் கொண்டு கண்களை மூடி திறந்தாள்..

"என்னோட சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் தான்.. நீங்களும் என்ன விட்டு போறேன்னு முடிவெடுத்த பிறகு இனி தனியா வாழ பழகணும்.."

"உங்களுக்கென்ன ரிஷி..! அழகும் குணமும் உள்ள உங்கள மாதிரி நல்லவரை எல்லாரும் விரும்புவாங்க.. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்கோங்க.. காலப்போக்குல எங்க ரெண்டு பேரையும் மறந்தே போயிடுவீங்க.." நனைந்த கண்களோடு சிரிக்க முயன்றாள்..

"அப்படியா..? நீ என்னை மறந்துடுவியா அருந்ததி.."

"ரிஷி..?"

"எனக்கு தெரியும்.. நான் தான் உன்னோட முதல் காதல்.."

அருந்ததி மறுக்க முடியாமல் திணறினாள்..

"அதே மாதிரி.. சாகற வரைக்கும் என்னோட கடைசி காதல் நீ மட்டும் தான்.. எப்படி மறக்க முடியும் சொல்லு.. உனக்கொரு விஷயம் தெரியுமா.. அம்மா இறந்த பிறகு தனிமையில் இந்த உலகத்தில் வாழ முடியாமல் சூசைட் வரைக்கும் போயிட்டேன்.."

"ஐயோ..!"

"பயப்படாத.. மறுபடி அந்த மாதிரி தப்பான முடிவெடுக்க மாட்டேன்.. நடைபிணமாவாச்சும் வாழ்ந்துதானே ஆகணும்.. எனக்குன்னு சில கடமைகள் இருக்குதே..!" கண்களை புறங்கையால் துடைத்துக்கொண்டு அவளை பார்த்தான் ரிஷி..

"என்னை விடு.. வீடு பாத்தாச்சா..?" கமரிய குரலை இயல்பாக்க முயற்சித்தான்..

"ம்ம்.. இந்த வாரம் வெள்ளிக்கிழமை புது வீட்டுல பால் காய்ச்சி குடி போகணும்.."

"சோ.. எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு வந்துதான் என்கிட்ட பேசற..?" கசப்பாக சிரித்தான் அவன்..

அருந்ததி அமைதியாக இருந்தாள்‌..

"போயிட்டு வா அருந்ததி.. சந்தோஷமா இரு.. நா ஜேஜம்மாவுக்கு எப்பவும் இந்த ரிஷி தொந்தரவா இருக்க மாட்டான்.."

"உங்க முழு பேர் என்னன்னு சொல்லவே இல்லையே.." அழுகையில் பலவீனமான அடி குரலில் கேட்டாள் அருந்ததி..

"என்னையே வேண்டாங்கும்போது என் பேரு மட்டும் தெரிஞ்சு என்ன பண்ண போற..!"

"உங்களுக்கும் எனக்கும் பிரியமான ஒரு ஜீவனுக்காகத்தான் இதை செய்யறோம்.. ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க ரிஷி..!"

"உன்னோட முடிவுகள் எல்லாத்துக்கும் நான் மதிப்பு தருவேன்.. அரு"

மவுனமான பார்வை பரிமாற்றம்..

"பொம்மா..!"

"நான் உன்னை வாடி போடின்னு கூப்பிட்டதெல்லாம் மரியாதையான வார்த்தை இல்லைடி.."

"அது எனக்கு எப்பவோ தெரியும்..!"

மகரிஷி நிலைத்து பார்த்தான்.. "அப்புறம் ஏன் தெரியாத மாதிரியே இருந்த..?"

"தெரிஞ்சுகிட்ட மாதிரி காட்டிக்கணும்னு தோணல.. பி.. பிடிச்சிருந்துச்சு.."

இதழுக்கும் தெரியாத விரக்தி சிரிப்பு அவனிடம்..

"கடைசியா ஒரு முறை என்னை கோங்ரா என்று கூப்பிடுவியா.."

"பிளீஸ்டி..!"

அருந்ததிக்கு வார்த்தைகளுக்கு முன் அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது.. அப்படியே நகர்ந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது..

"அருந்ததி.." மீண்டும் அழைத்தான் அவன்..

"கேன் ஐ ஹக் யூ.."

திரும்பி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

"ஒ.. ஒரே ஒருமுறை உ.. உன்னை கட்டிப்பிடிச்சுக்கட்டுமா..?" குழந்தை போல் இரண்டு கைகளை அவளை நோக்கி நீட்டினான்..

அருந்ததியால் அந்த சூழ்நிலையை தாங்க முடியவில்லை..

மறுக்கும் தனக்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடைக்காது.. ஆயினும்..

வேண்டாம் என தலையசைத்து விட்டு அறையைத் தாண்டி வெளியே சென்றிருந்தாள் அருந்ததி..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jul 19, 2024
Messages
26
சுற்றியிருந்த சமூகத்தில் வக்கிரம் பிடித்த ஆண்களைத் தவிர பெண்கள் நலம் விரும்பிகள் யாரும் உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! உனக்கென விருப்பு வெறுப்பு ஆசைகள் இல்லையா என்று கேட்கவில்லையே.. ஒருவேளை அப்படி கேட்டிருந்தால் முழுதாக தன் மனதை படிக்க முயற்சி செய்திருப்பாளோ என்னவோ..

மகளுக்காக மெழுகுத் திரியாக உருகி வாழ வேண்டிய பொம்மையாக தன்னை சித்தரித்துக் கொண்டவளுக்கு
இப்போது காதல் ஆசை கனவு எல்லாம் பெருந்தவறாக தோன்றுகிறது..

திருமணம் என்பது வெறும் சடங்கு தான்.. அந்த சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் சந்திரமதியின் அனுமதி கிடைக்கலாம்.. ஆனால் அதற்குப்பின் வாழப்போகும் வாழ்க்கை அத்தனை எளிதானது அல்ல..! திருமணத்திற்கு பின்னும் சன்னியாசியாக வாழ இயலுமா.. வயது வந்த மகளுக்கு முன் சந்தோச தம்பதிகளாக வாழ்க்கையை அனுபவித்து உற்சாகம் கொள்ளுவதெல்லாம் சாத்தியமா..! அசிங்கம் இல்லையா..?

அயோக்கியனா இருந்தாலும் அந்த பிரபாகரன் தானே சந்திரமதியின் தகப்பன் அவனை விடுத்து இன்னொரு ஆடவனுடன் நான் வாழ்வதை சந்திரமதி ஏற்றுக் கொள்ளுவாளா.. இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஒரு தாயினால் ஒரு பதின்பருவ மகள் மனதளவிலும் சமூகத்திலும் எத்தனை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்..

அப்பா இல்லை என்ற குறையே சந்திரமதியின் நெஞ்சில் வலுவாக பதிந்து எத்தனை அவமானங்களை சந்தித்தாள்..‌ ஒருவேளை நான் ரிஷியே திருமணம் செய்து கொண்டால்..?

ஏய் சந்திரமதி அது உன்னோட இரண்டாவது அப்பாவா..

ஓ.. சித்தப்பா..

இல்லடி அவங்க அம்மாவோட இரண்டாவது புருஷன்..!

எல்லோரும் கைகொட்டி சிரிப்பதை போல் காதை பொத்திக் கொண்டாள் அருந்ததி..

ஏற்கனவே சமீப காலங்களாக தன்னிடம் தெரியும் வித்தியாசங்களை வினோதமாக பார்க்கிறாள் சந்திரமதி..

மல்லிகையை சூடிக் கொள்வதும் அலங்கரித்துக் கொள்வதும்.. ரிஷியை பார்த்து ரகசியமாக சிரிப்பதும்.. ச்சீ.. எத்தனை கேவலமாக நடந்து கொண்டிருக்கிறேன்..

எல்லோரும் சொல்வது போல் கட்டுப்படுத்த முடியாமல் அப்படி என்ன உல்லாசம் வேண்டி இருக்கிறது..

உணர்ச்சிகளின் ஆர்ப்பரிப்பால் என்னென்னவோ செய்து விட்டேனா..?

இதில் திருமணம் செய்து கொண்டு ஜோடியாக சுற்றி திரிந்தால் சந்திரமதியின் மனநிலை என்னவாக இருக்கும்..

படிக்கும் குழந்தையின் மனதில் சலனத்தை நானே புகுத்தலாமா..

அசிங்கத்தனமாக நடந்து..
ஐயோ..! தவறு தவறு..

மனதுக்குள் சுருண்டு போனாள் அருந்ததி..

ஒரே வீட்டில் மூன்று பேரும் ஒன்றாக இருந்த போதிலும் ரிஷியின் பார்வையை அவனுடனான அரட்டைப் பேச்சுக்களை அறவே தவிர்க்க ஆரம்பித்தாள்..

உடைந்து போனான் மகரிஷி.

கை கொடுக்க ஆள் இருந்தும் வெட்டி வைத்த குழியிலிருந்து அவள் வெளியே வர தயாராக இல்லை எனும் போது அதையும் மீறி என்ன செய்ய முடியும்..!

அவனும் சோர்ந்து போய் ஜடமாகத்தான் இருந்தான்..

இதற்கிடையில் அருந்ததிக்கும் பிரபாகரனுக்கும் விவாகரத்தும் கிடைத்துவிட்டது..

பிரபாகரன் மோசமான நிலையில் இருந்ததால் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது..

வக்கீல் தாமோதரனுக்கு நன்றி சொல்லிவிட்டு கையில் காகிதங்களுடன் மகரிஷியோடு நடந்தபடி வெளியே வந்தாள் அருந்ததி

"பிரபாகரனோட அப்பா மருதமுத்து அவருக்கும் ஏதோ இன்பெக்ஷனாம்.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க..!" மகரிஷி நீதிமன்ற வாசலில் அவளோடு நடந்தபடியே சொல்ல கண்கள் சுருக்கி அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள் அருந்ததி..

"எப்படி..?"

"தெரியல.. இன்ஃபெக்ஷன் ஆனவங்களோட உமிழ் நீர் பட்டா கூட ஆபத்துன்னு சொல்லுவாங்க.. தண்ணி கூட குடிக்க முடியாத அளவுக்கு உடம்பெல்லாம் உதறுதுன்னு பேசிக்கிட்டாங்க.."

"உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்..?"

"இந்த டிவோர்ஸ் கேஸ் விஷயமா பிரபாகரன் பத்தி விசாரிக்கும் போது அவனோட அப்பா மருதமுத்து பத்தியும் உபரி தகவலா நியூஸ் கிடைச்சது.."

அருந்ததி அமைதியாக நடந்து வந்தாள்.. கேவலமான எண்ணம் படைத்த மருதமுத்துவிற்கு இது தேவைதான் என்று திருப்தி படவும் முடியவில்லை அதற்காக வருந்தவும் மனமில்லை..

"என் குடும்பத்தின் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டியேடி ****.. நல்லா வாழ்ந்திடுவோம்னு மட்டும் நினைச்சுடாத.. நீயெல்லாம் நாசமாத்தான் போவ.. மண்ணா போய்டுவ. உன் குடும்ப உருப்படாது.. உன் மக வாழ மாட்டா..! பாத்துக்கிட்டே இரு.. தெரு தெரு தெரு தெருவா ஆத்தாளும் மவளும் பிச்சைதான் எடுக்க போறீங்க.."

கோர்ட் வாசலில் நின்று மண்ணை வாரி தூத்தினாள் சங்கரி.. கர்மா திரும்புகிறது என்று கூட அறியாமல் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதை போல்..

பெருங்கோபத்துடன் முன்னேறி செல்லப் போனவனை கைப்பிடித்து தடுத்தாள் அருந்ததி..

"ஏற்கனவே நிறைய அடி வாங்கியாச்சு அந்த கோபம் தான் இப்படி பேச வைக்குது விட்டுடுங்க.. போகலாம்" என்று அவனோடு நடந்தாள்..

இருவரும் பைக் நிற்கும் இடத்திற்கு வந்தார்கள்..

"உன்னை சுத்தியிருந்த முள்வேலி எல்லாத்தையும் தகர்த்தாச்சு.. இனி நீ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத சுதந்திர பறவை.. உன் விருப்பப்படி எதுவானாலும் செய்யலாம் அருந்ததி.. உன்னை யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க.." என்றான் ரிஷி..

"சுத்தி இருக்கிற உலகம் என்னைத்தான் கூர்மையா கவனிச்சுட்டு இருக்கு.. நான் எது செஞ்சாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் காத்திருக்கு.."

"சுத்தி இருக்கிறவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு அருந்ததி.. உன்னை பார்த்து குறை சொல்றது மட்டும் அவங்க குறிக்கோள் இல்லை.. வாய்க்கு வந்ததை சொல்லிட்டு தன்னோட பொழப்ப பாக்க அவங்க போயிடுவாங்க..‌ உன் வாழ்க்கையை நீ தான் வாழனும்."

வார்த்தைகள் பரிமாறி கொள்ளப்பட்டன.. ஆனால் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை..

"எனக்கு வாழனும்னு ஆசை இல்ல என் பொண்ண நல்லபடியா வளத்தா போதும்.."

இதற்கு மேல் பேச எதுவுமில்லை என்பதாக நீண்ட பெருமூச்சு விட்டு வண்டியில் ஏறினான் மகரிஷி..

பிரபாகரனின் நிலை பற்றியும் அவனிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொண்ட விஷயத்தைப் பற்றியும் மேலோட்டமாக மகளிடம் சொல்லி வைத்திருந்தாள் அருந்ததி..

பெற்ற தந்தையின் நிலையை எண்ணி கலங்கவில்லை கதறவில்லை..!

"அவரோட முடிவை அவரே தேடிக்கிட்டாரு நாம என்னம்மா செய்ய முடியும்.. விடுங்க நீங்க இதையெல்லாம் நெனச்சு வருத்தப்படாதீங்க.." பெரிய மனுஷி போல ஆறுதல் சொன்ன மகளை வியப்பாக பார்த்தாள் அவள்..

இந்த நிலையில் தான் சந்திரமதி எதிர் வீட்டு கனகாவின் இளைய மகன் சஞ்சையை அடித்துவிட்டாள் என்று புதிதாக பஞ்சாயத்து ஒன்று வந்து சேர்ந்தது..

ஒருவரை ஒருவர் விளையாட்டாக கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்த நேரத்தில் சஞ்சய் சந்திரமதியை ஜெயித்துவிடும் நோக்கத்தோடு..

"உங்க அம்மா கள்ளக்காதலனோட சுத்தறாங்களாம்.. அந்த ஆள வச்சுட்டு இருக்காங்களாம்.." எங்க அம்மா சொன்னாங்க.. அவன் குதித்து சிரிக்க பளாரென்று அறைந்துவிட்டாள் சந்திரமதி..

கன்னத்தில் கை வைத்தபடி அழுது கொண்டே கனகாவை அழைத்து வந்தான் சஞ்சய்..

"இப்ப எதுக்கு என் பையன அடிச்ச.. அவன் சொன்னதுல ஒன்னும் பொய் இல்லையே..‌ உங்க வீட்ல நடக்கிறதையெல்லாம் நீ பாத்துட்டு தானே இருக்க.. உங்க அம்மாவுக்கும் அந்த வாத்தியாருக்கும் இடையில தொடர்பு இருக்குன்னு உனக்கு தெரியுமா தெரியாதா..! நெருப்பில்லாமல் புகையாது..‌ இல்லாததை யாரும் இட்டு கட்டி சொல்ல மாட்டாங்க.."

அதற்குள் பக்கத்து வீட்டு பெண்மணி இன்னொருத்தியும் வந்து விட்டாள்..

"பொதுவா அம்மா தான் மகளுக்கு அட்வைஸ் பண்ணனும்.. ஆனா இந்த நிலைமையில் நீ தான் உன்னோட அம்மாவுக்கு அறிவுரை சொல்லி திருத்தணும்.. பொம்பளைங்க ஊருக்கு பயந்து தான் வாழனும்.. உனக்காக கூட உன் அம்மா யோசிக்கலையா.. இந்த சமுதாயத்தில் நீ தல நிமிர்ந்து நடக்கணும்னா உன் அம்மா ஒழுக்கமானவளா இருக்கணும் இல்லன்னா உன்னையும் சேர்த்து தப்பா பேசுவாங்க சந்திரமதி.. தாயைப் போல பிள்ளை நூலை போல சேலைன்னு நாளைக்கு உன்னையும் நாலு பேர் கையை புடிச்சு இழுப்பானுங்க இதெல்லாம் தேவையா உனக்கு..!"

"சந்திரமதி உன் மேல இருக்கிற அக்கறையில தான் நாங்க இப்ப பேசிட்டு இருக்கோம்.. ஒன்னு அந்த ஆள வீட்டை விட்டு போக சொல்லுங்க.. இல்லன்னா நீங்க ரெண்டு பேரும் தனியா எங்கேயாவது போய் சந்தோஷமா வாழுங்க..!"

"அத விட்டுட்டு நல்லது சொல்றவங்க எல்லாரையும் அடிச்சு திட்டி உங்க வாழ்க்கைய விட்டு அப்புறப்படுத்தனும்னு நினைச்சா கடைசில நீங்க தான் கஷ்டப்படுவீங்க.. சொல்றத சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம்.."

பதிமூன்றை தொட்ட சிறுமியிடம் பேசக்கூடாததையெல்லாம் பேசி அவள் மனதை கலைத்துவிட்டு மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் கனகாவும் இன்னொருத்தியும்..

அவர்களை சொல்லியும் குற்றமில்லை.. ஊர் உலகத்தை பொறுத்தவரை அது தான் நியாயம்..

மனைவி இறந்த இரண்டாவது மாதத்திலேயே துணையில்லாமல் ஒரு ஆணால் வாழ முடியாது என்று அவனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கும் இதே சமூகம் தான் பெண்களை நெருப்பு பந்து போல் உணர்ச்சிகளை இறுகக் கட்டிக் கொண்டு தனியாக வாழ சொல்லுகிறது..!

AI தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்திருக்கும் அல்ட்ரா மாடன் யுகத்தில் கூட பெண்களுக்கான சில விதிகளும் கட்டுப்பாடுகளும் என்றும் மாறுவதில்லை..

வீட்டில் வந்து அன்னையிடம் அத்தனையும் சொல்லி அழுதாள் சந்திரமதி..

அருந்ததிக்கு என்ன ஆறுதல் சொல்லி மகளை தேற்றுவதென்று தெரியவில்லை..

"அ.. அம்மா..! நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு எனக்கு தெரியும் ஆனா ஏன் அவங்க அப்படி பேசணும்.. உங்களையும் ரிஷியையும் சேர்த்து வைச்சு தப்பு தப்பா என்கிட்டேயே சொல்றாங்களேம்மா.. அப்படியெல்லாம் எதுவும் இல்லைன்னு நீங்க வந்து சண்டை போடுங்க..‌" சந்திரமதி கைப்பற்றி இழுத்த போது அருந்ததிக்கு மனசாட்சி உறுத்தியது..

அவர்கள் சொல்வது போல் கள்ளக்காதல் இல்லை..

ஆனால் ஒரு அழகான ஆரோக்கியமான காதல் இருக்கத்தானே செய்கிறது.. இல்லை என்று எப்படி மறுக்க முடியும்..

உண்மையிலேயே ரிஷி மீது எனக்கு சொல்லப்படாத அபரிமிதமான ஒரு நேசம் உண்டு என சந்திரமதியிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா..!

விழிகளில் கண்ணீர் கோர்த்து நின்றது..

வார்த்தைக்கு வார்த்தை.. உன்னை நம்புகிறேன்.. எங்க அம்மா ரொம்ப நல்லவங்க என்று ஒரு உத்தம கோட்டுக்குள் நிறுத்தி வைப்பது தான் அருந்ததியே கொல்லாமல் கொல்லுகிறது..

ஊருக்கு அறிவுரை சொல்லும் உத்தம சிகாமணிகள் தன் பிள்ளைகளை கண்டிக்க தவறியதாலோ என்னவோ.. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்து சந்திரமதி போகும் போதும் வரும் போதும் சத்தம் போட்டு அவளை கேலி செய்ய துவங்கினர்..

'இவங்க அம்மா கள்ளக்காதல் பண்றாங்களாம் டா..!"

"அப்படின்னா.."

"ரகசியமா வச்சிருக்காங்களாம்.."

"உனக்கு யாருடா சொன்னா.."

"எங்க அம்மா சொன்னாங்களே.."

கொள்ளென ஒரு சிரிப்பு..

"எங்க அம்மாவ பத்தி ஒரு வார்த்தை பேசினா அப்புறம் நடக்கிறதே வேற.." சந்திரமதி கல்லை தூக்கிக் கொண்டு நிற்க கூட்டம் கலைந்து ஓடும்..

வீட்டுக்கு வந்து அருந்ததியின் மடியில் படுத்து அழுவாள் சந்திரமதி..

ஊர் வாயை அடைக்க முடியாது..

இப்படியே யாரேனும் ஏதாவது சொல்லி சொல்லி மகளின் மனதை புண்படுத்திக் கொண்டே இருந்தால் ஒருநாள் அவள் நிச்சயம் தன்னை வெறுக்க கூடும் என்று பயந்தாள் அருந்ததி..

"வேணும்னா நாம இந்த வீட்டை விட்டு போயிடலாமா மதி..! புதுசா ஒரு இடத்துக்கு.. நம்மளை யாருமே குறை சொல்லாத நல்ல இடத்துக்கு.. போகலாமாடா.."

"அப்படி ஒரு இடம் இருக்குதாமா..?"

"எனக்கு தெரியலையே..?"

"அங்க யாரும் உன்னை தப்பா பேச மாட்டாங்களா.."

அருந்ததி பேச்சற்று அமைதியாக இருந்தாள்..

"போய்டலாம்மா..!"

"உன் ரிஷி அங்கிளை விட்டு நீ இருந்துருவியா.. அவர்கிட்ட இருந்து உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்ததா நீ என்னை வெறுத்திட மாட்டியே.."

"உன்னை விட யாருமே எனக்கு முக்கியமில்லைம்மா.. உன்னை எல்லாரும் தப்பா பேசுறது என்னால தாங்கவே முடியல.. யாரும் உன்னை புரிஞ்சுக்கல.. நம்ம வேற இடத்துக்கு போயிடலாம்.." விசித்து அழுதாள் மதி..

வெளிப்படையாக இருவரும் ஒருமனதோடு சொல்லிக் கொள்வதாக காட்டிக்கொண்ட போதிலும்.. இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டுமென்ற நினைப்பே அம்மா மகள் இருவரின் மனதுக்குள்ளும் அத்தனை அழுத்தத்தை தந்தது..

அதிலும் ரிஷி.. அவனை தனியே விட்டு எப்படி செல்வது..! யோசிக்க கூட முடியாத பரிதாப நிலையில் கட்டியணைத்துக் கொண்டு தாயும் மகளும் அழுது தீர்த்தனர்..

மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்த விஷயங்களை சொல்லி இங்கிருந்து செல்ல வேண்டியதற்கான தேவையையும் சந்திரமதியின் சம்மதத்தையும் ரிஷியிடம் எடுத்துச் சொன்னாள் அருந்ததி..

வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் சொல்லச் சொல்ல இறுகிப் போனான் மகரிஷி..

"சரி..! உங்க விருப்பம் அதுவா இருக்கும்போது நான் தடுக்க விரும்பல.. என் கூட இருக்கும்போது கிடைக்காத நிம்மதியும் சந்தோஷமும் உங்களுக்கு தனியா போன பிறகாவது கிடைக்கட்டும்.." அவன் ஒட்டாத பேச்சில் அருந்ததி வெறுமையாக சிரித்தாள்..

"என் தனிப்பட்ட சந்தோஷம் தான் என்னை இந்த நிலைமையில் கொண்டு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.. இனி என் மகளோட சந்தோசம் தான் என்னோட சந்தோஷம்.."

"ஆனா‌ என்னோட சந்தோஷம்..?"

அருந்ததி அழுகையை அடக்கிக் கொண்டு கண்களை மூடி திறந்தாள்..

"என்னோட சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் தான்.. நீங்களும் என்ன விட்டு போறேன்னு முடிவெடுத்த பிறகு இனி தனியா வாழ பழகணும்.."

"உங்களுக்கென்ன ரிஷி..! அழகும் குணமும் உள்ள உங்கள மாதிரி நல்லவரை எல்லாரும் விரும்புவாங்க.. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்கோங்க.. காலப்போக்குல எங்க ரெண்டு பேரையும் மறந்தே போயிடுவீங்க.." நனைந்த கண்களோடு சிரிக்க முயன்றாள்..

"அப்படியா..? நீ என்னை மறந்துடுவியா அருந்ததி.."

"ரிஷி..?"

"எனக்கு தெரியும்.. நான் தான் உன்னோட முதல் காதல்.."

அருந்ததி மறுக்க முடியாமல் திணறினாள்..

"அதே மாதிரி.. சாகற வரைக்கும் என்னோட கடைசி காதல் நீ மட்டும் தான்.. எப்படி மறக்க முடியும் சொல்லு.. உனக்கொரு விஷயம் தெரியுமா.. அம்மா இறந்த பிறகு தனிமையில் இந்த உலகத்தில் வாழ முடியாமல் சூசைட் வரைக்கும் போயிட்டேன்.."

"ஐயோ..!"

"பயப்படாத.. மறுபடி அந்த மாதிரி தப்பான முடிவெடுக்க மாட்டேன்.. நடைபிணமாவாச்சும் வாழ்ந்துதானே ஆகணும்.. எனக்குன்னு சில கடமைகள் இருக்குதே..!" கண்களை புறங்கையால் துடைத்துக்கொண்டு அவளை பார்த்தான் ரிஷி..

"என்னை விடு.. வீடு பாத்தாச்சா..?" கமரிய குரலை இயல்பாக முயற்சித்தான்..

"ம்ம்.. இந்த வாரம் வெள்ளிக்கிழமை புது வீட்டுல பால் காய்ச்சி குடி போகணும்.."

"சோ.. எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு வந்துதான் என்கிட்ட பேசற..?" கசப்பாக சிரித்தான் அவன்..

அருந்ததி அமைதியாக இருந்தாள்‌..

"போயிட்டு வா அருந்ததி.. சந்தோஷமா இரு.. நா ஜேஜம்மாவுக்கு எப்பவும் இந்த ரிஷி தொந்தரவா இருக்க மாட்டான்.."

"உங்க முழு பேர் என்னன்னு சொல்லவே இல்லையே.." அழுகையில் பலவீனமான அடி குரலில் கேட்டாள் அருந்ததி..

"என்னையே வேண்டாங்கும்போது என் பேரு மட்டும் தெரிஞ்சு என்ன பண்ண போற..!"

"உங்களுக்கும் எனக்கும் பிரியமான ஒரு ஜீவனுக்காகத்தான் இதை செய்யறோம்.. ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காதீங்க ரிஷி..!"

"உன்னோட முடிவுகள் எல்லாத்துக்கும் நான் மதிப்பு தருவேன்.. அரு"

மவுனமான பார்வை பரிமாற்றம்..

"பொம்மா..!"

"நான் உன்னை வாடி போடின்னு கூப்பிட்டதெல்லாம் மரியாதையான வார்த்தை இல்லைடி.."

"அது எனக்கு எப்பவோ தெரியும்..!"

மகரிஷி நிலைத்து பார்த்தான்.. "அப்புறம் ஏன் தெரியாத மாதிரியே இருந்த..?"

"தெரிஞ்சுகிட்ட மாதிரி காட்டிக்கணும்னு தோணல.. பி.. பிடிச்சிருந்துச்சு.."

இதழுக்கும் தெரியாத விரக்தி சிரிப்பு அவனிடம்..

"கடைசியா ஒரு முறை என்னை கோங்ரா என்று கூப்பிடுவியா.."

"பிளீஸ்டி..!"

அருந்ததிக்கு வார்த்தைகளுக்கு முன் அழுகைதான் முட்டிக்கொண்டு வந்தது.. அப்படியே நகர்ந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது..

"அருந்ததி.." மீண்டும் அழைத்தான் அவன்..

"கேன் ஐ ஹக் யூ.."

திரும்பி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்..

"ஒ.. ஒரே ஒருமுறை உ.. உன்னை கட்டிப்பிடிச்சுக்கட்டுமா..?" குழந்தை போல் இரண்டு கைகளை அவளை நோக்கி நீட்டினான்..

அருந்ததியால் அந்த சூழ்நிலையை தாங்க முடியவில்லை..

மறுக்கும் தனக்கு எக்காலத்திலும் மன்னிப்பே கிடைக்காது.. ஆயினும்..

வேண்டாம் என தலையசைத்து விட்டு அறையைத் தாண்டி வெளியே சென்றிருந்தாள் அருந்ததி..

தொடரும்..
Ayyayo yenaku aluvaiya ah varuthu
Veta vitu pogathinga aruuu pls
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
41
சுற்றியிருந்த சமூகத்தில் வக்கிரம் பிடித்த ஆண்களைத் தவிர பெண்கள் நலம் விரும்பிகள் யாரும் உனக்குனு ஒரு வாழ்க்கை வேண்டாமா..! உனக்குன்னு விருப்பு வெறுப்பு ஆசைகள் இல்லையா என்று கேட்கவில்லையே.. ஒருவேளை அப்படி கேட்டிருந்தால் முழுதாக தன் மனதை படிக்க முயற்சி செய்திருப்பாளோ என்னவோ..

அரு மா மனசு, மதிக்கு புரியும்.. அப்போ மதியே வந்து ரிஷி கிட்ட பேசிடுவா.
 
Active member
Joined
Sep 14, 2023
Messages
123
சொல்ல வார்த்தைகள் வரவில்லை......😔😔😔😔😔😔😔
அப்போ ரீஷியும் அரும்மா வும் சேர்வது நம்ம மதி கையில் தான் உள்ளதா?,😔😔😔😔😔😔😔😔
Sisy waiting for next move....
 
Active member
Joined
Jan 10, 2023
Messages
37
Mudiyala 😭😭😭😭😭😭 yenn rishi and arundhadhi indha hurting
 
Member
Joined
Mar 13, 2025
Messages
34
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
New member
Joined
Apr 30, 2025
Messages
18

So sad.... Aruma... Thapa mudhivhu edughura....... Rishi good soul......... Vittutu pogathe..........
 
Joined
Mar 14, 2023
Messages
28

Super super
 
Active member
Joined
Sep 10, 2024
Messages
27
தாங்கவே முடியல்ல இந்த எமோசனல் அட்டாக்....
மனச கல்லாகிட்டு சம்மதிச்சுடு அரு மா... கோங்ராவைக் கல்யாணம் பண்ணிக்கோ....
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
39

மதி மா இனி நீ தான் உன்னோட அம்மா அப்புறம் ரிஷி ஐ புரிஞ்சு கிட்டு ஒரு நல்ல முடிவா எடுக்க வேண்டும் 😔😔😔
கோங்குரா ஜேஜம்மா வை இப்படி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால தாங்க முடியல 😭😭😭
 
Top