- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
சகலகலா டாக்டர் டாக்டர்.. ஜகஜாலம் அறிந்த டாக்டர் என்று வருணை கிண்டல் செய்தபடியே பாடிக்கொண்டு கேட்டை திறந்து தேம்பாவணி வீட்டுக்குள் நுழைந்த நேரத்தில் அவள் தந்தையும் சத்யாவும் எதிரெதிரே சோபாவில் அமர்ந்திருந்தனர்..
அவர்களை பார்த்ததும் சுவிட்சை தட்டினார் போல் பாட்டு நின்று போனது.. புன்னகையும் மறைந்து போனது..
அப்பா..! புத்தகப்பையை சோபாவில் வைத்துவிட்டு அப்படியே நிற்க எழுந்து அருகே வந்தார் தேம்பாவணியின் தந்தை கேஷவ் குமார்..
எங்க போய் ஊர் சுத்திட்டு வர்ற..! அவர் கேள்வியின் கடுமையில் தேம்பாவணிக்கு உடல் நடுங்கியது.
"காலேஜ்க்கு தான்பா போயிட்டு வரேன்" என்றபடி சத்யாவை பார்த்தாள் அவள்.. தனக்காக பரிந்து கொண்டு வரமாட்டானா என ஒரு சின்ன நப்பாசை.. புகார் செய்தவனே அவன் தானே.. அந்த விஷயமும் அவளுக்கு தெரியாமல் இல்லை.. காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் கூத்துதானே இது..
சத்யா.. சோபாவில் அமர்ந்தபடி இரு கைகளை கோர்த்து விரல்கள் ஒவ்வொன்றாய் தொட்டு தொட்டு விளையாடிக் கொண்டிருந்தவன் தேம்பாவணியை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
"காலேஜ் போயிட்டு திரும்பி வர்றதுக்கு இவ்வளவு நேரமா..? எதுக்காக டிரைவரை திருப்பி அனுப்பின..!" கேசவ்வின் வார்த்தைகள் சிகரெட் சாம்பலாய் அவளை பொசுக்கியது..
அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தேம்பாவணி தலை குனிந்து நின்றிருக்க..
"உன் அம்மாவை போல நீயும் ஓடிப் போகலாம்னு பாக்கறியா.." அடுத்த விஷ அம்பு அவளைப் பதம் பார்த்தது.
அமைதியாக நின்றாள் தேம்பாவணி. இன்று நேற்றல்ல.. விவரம் தெரிந்த நாளிலிருந்து இதுபோன்ற விஷ அம்புகள் உடலை தோய்த்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனாலும் மனம் மரத்துப்போகாமல் வலிக்கத்தான் செய்கிறது.
"காலேஜ் கட் அடிச்சுட்டு எவன் கூட ஊர் சுத்திட்டு வர்ற.."
"இல்லப்பா நான் யார் கூடயும் போகல காலேஜுக்கு தான் போயிட்டு வரேன்.. அவள் முடிக்கும் முன்னே பளாரென்று கன்னத்தில் அறை விழுந்தது..
கன்னத்தைப் பிடித்துக் கொண்டு முகம் கருத்து சத்யாவை பார்த்தாள் தேம்பா..
இப்போதுதான் உயிர் பெற்ற சிலையாக சவகாசமாக எழுந்து வந்தான் அவன்.
"அங்கிள் ப்ளீஸ் அடிக்காதீங்க எதுவானாலும் வாயில பேசுங்க.." அவர் கரத்தை பற்றி சற்று நகர்த்தி நிற்க வைத்தான்.
"அவ எங்க போயிட்டு வர்றான்னு கேளு சத்யா..! எவன் கூடயாவது ஊர் மேய்ஞ்சு குடும்ப மானத்தை ரோட்டுக்கு இழுத்து என் தலையில மண்ணள்ளி போட்டுடுவானுதான இவ்ளோ அவசரமா கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனால் இவ கொழுப்பு அடங்கலையே..!" கைநீட்டி அடித்தும் கூட கேஷவ்வின் சீற்றம் தணியவில்லை.
"இருங்க.. இருங்க அங்கிள் நான் என்னன்னு விசாரிக்கிறேன்.." அவரை தடுத்து விட்டு தேம்பாவணியின் அருகே வந்தான் சத்யா..
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் தேம்பா..
"வனி.. இவ்வளவு நேரமா எங்க போயிட்டு வர்றே.. காலேஜ் நாலு மணிக்கெல்லாம் முடிஞ்சிடுது. ஒருவேளை காரை அனுப்பிட்டு நீ பஸ்ல வந்தா கூட அரை மணி நேரத்துல வீடு வந்து சேர்ந்துடலாமே.. ஏன்மா இவ்வளவு லேட்டு. டிரைவரை ஏமாத்திட்டு எங்களுக்கு தெரியாம எங்க போயிட்டு வர்ற..! ஹான்..?"
"ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வரேன் சத்யா..!" குரல் மெதுவாய் வந்தது.
"எந்த பிரண்ட்.. ஆம்பளையா பொம்பளையா.. அவன மயக்கத்தான் காலேஜ் முடிஞ்ச கையோட புறப்பட்டு போனியா. இல்ல காலேஜ் கட் அடிச்சுகிட்டு அவனோட சினிமா பீச்சு பார்க்குன்னு சுத்திட்டு வந்தியா..? பதில் சொல்லு நாயே..!" அவள் முடியை பிடித்து உலுக்கினார் கேஷவ்..
தேம்பாவணி இறுகி போய் நின்றிருந்தாள்.. துடிக்கவில்லை.. அழவில்லை..
"அங்கிள் நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. நான்தான் கேட்டுட்டு இருக்கேனே.." சத்யா அவரை அடக்கினான். தேம்பாவணி அவமானத்தில் மரவட்டையாய் சுருண்டாள்.
"உனக்கு தெரியாது சத்யா இவளோட அம்மா மாதிரியே இதுவும் கொழுப்பெடுத்த நாய். அடக்கி வைக்கலனா இதுவும் அவ ஆத்தா மாதிரி ஊர் மேய போயிடும்."
"அட.. அப்படியெல்லாம் போகமாட்டா அங்கிள் தேம்பாவணி ரொம்ப தெளிவான பொண்ணு. கல்யாணமான பிறகு எப்படி நடந்துக்கணும்.. எங்கே போகனும் வரனும்னு அவளுக்கு தெரியாதா என்ன? நீங்க அவளை தப்பாவே நினைக்காதீங்க இப்படி வந்து உட்காருங்க." கேஷவ் குமாரை இருக்கையில் அமர வைத்து விட்டு தேம்பாவணியை பார்த்து "நீ உள்ள போ வனி." என்றான் அதட்டல் குரலில்.
அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்கவில்லை அவளுக்கு.. புத்தகப் பையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென அறைக்கு சென்று விட்டாள். அங்கிருந்து நகரும்வரை ஒரு துளி கண்ணீர் எட்டி பார்க்கவில்லை.. எப்போதும் எட்டி பார்ப்பதும் இல்லை.. மனமும் உணர்ச்சிகளும் இறுகி விட்டது.. அழுது கண்ணீர்விட்டு அவர்களை சந்தோஷ படுத்த விரும்பவில்லை அவள்..
அவள் தலை மறைந்ததும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார் கேஷவ் குமார்.
"என்ன அங்கிள்.. பொறுமையான நிதானமா அவ கிட்ட விசாரிப்பீங்கன்னு பார்த்தா இப்படி பட்டுன்னு அடிச்சிட்டீங்களே..! அங்கிள் டிரை டூ அன்டஸ்டான்ட்.. முன்ன மாதிரி இல்ல.. இப்ப அவ என்னோட வைஃப்.. ஏதாவது பிரச்சனைனா முதல்ல ஸஃபர் ஆக போறது நான்தான்.. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.. நம்ம டார்ச்சர் தாங்க முடியாம நிஜமாவே ஓடி போயிட்டானா அப்புறம் என்ன பண்றது.. மொத்தமா இரண்டு பேரும் நாக்கு வழிக்க வேண்டியதூதான்.." என்றவனை கடுப்போடு பார்த்தார் கேஷவ்குமார்.
"இந்த சனியனை பார்த்தாலே எரிச்சலா வருது சத்யா. எங்கப்பன் இருக்கானே.. எல்லாம் அந்த பா**ட் னால வந்தது. சொத்தை எல்லாம் பேத்தி பேருக்கு எழுதி வச்சிட்டு செத்துப்போயிட்டான். அதுலயும் அவ கல்யாணம் பண்ணிக்கிறவனோட பொறுப்புல தான் அத்தனை சொத்தும் போய் சேருமாம். நான் வெறும் கார்டியன் மட்டும் தானாம்.. அப்ப அந்தாளுக்கு வாரிசா நான் எதுக்கு.. நாக்கு வழிக்கவா.. சொத்துக்காக தான் இந்த வேஸ்ட் ப்ராடக்ட இவ்வளவு நாள் வீட்டுக்குள்ளயே வச்சி பொத்தி பாதுகாக்க வேண்டியதா போச்சு.. இல்லைனா இவ ஆத்தா வீட்ட விட்டு ஓடுன அடுத்த நிமிஷமே இத கொண்டு போய் ஏதாவது அனாதை ஆசிரமத்தில் குப்பைய மாதிரி தூக்கி போட்டுட்டு வந்திருப்பேன்.."
"ஆனா அங்கிள் சொத்தெல்லாம் என் கைக்கு இடம் மாறின பிறகு நான் உங்களை கழட்டி விட்டுட்டா என்ன பண்ணுவீங்க.." நக்கல் சிரிப்போடு கேட்டவனை கேஷவ் நிமிர்ந்து பார்த்த பார்வையில் அத்தனை வில்லத்தனம் தெரிந்தது.
"என்ன சத்தியா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்குது. உன்னோட எல்லா ரகசியமும் எனக்கு தெரியும்ங்கறத மறந்துட்ட போலிருக்கே.. நான் சொல்றபடி நீ கேக்கலைன்னா உன் பேரன்ட்ஸ் உன் பிரெண்ட்ஸ் முன்னாடி நீ அசிங்கப்பட வேண்டியதாயிருக்கும்.. உன்னை பத்தின ரகசியங்களை நான் வெளியே சொல்ல வேண்டிய நிலை வரும் இது தேவைதானா உனக்கு..!"
சத்யா விதிர்த்து போனான்.. வியாபார உலகில் அவன் கொடி கட்டி பறக்கவும் இலாபங்களை குவிக்கவும் இந்த கவுரவமும் சில வரைமுறைகளும் முக்கியமாயிற்றே.. திரைமறைவில் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம்.. ஆனால் சமுதாயத்தில் சில விதிகளுக்கு கட்டுபட்டு தன்னை மதிப்புள்ளவனாக காண்பித்து கொள்ள வேண்டுமே..!
"ஐயோ அங்கிள்.. நான் அப்படி மீன் பண்ணல.. விளையாட்டுக்கு தான் கேட்டேன்.. மத்தபடி உங்களுக்கு துரோகம் செய்யணுங்கற எண்ணம் எனக்கு என்னைக்குமே வந்ததில்ல.. என்னை பொறுத்த வரைக்கும் என் இஷ்டப்படி வாழறதுக்கான சுதந்திரம் வேணும். அதுக்கு இந்த கல்யாண ஒரு லைசென்ஸ் அவ்வளவுதான்..! மத்தபடி வனி எப்பவுமே உங்க பொண்ணுதான்.." என்றான் நைச்சியமாக..
"அவளை என் பொண்ணுன்னு சொல்லாத.. இவளோட ஆத்தா இந்த நாயை எவனுக்கோ பெத்து என் தலையில கட்டிட்டு போயிட்டா.. என் அப்பன் சம்பாதிச்ச சொத்தையெல்லாம் எவனோ பெத்த பொண்ணுக்கு போக விட்ருவேனா நான்.. அந்த ஒரு பாயிண்ட் காக தான் இந்த கழுதயை இத்தனை நாள் பாதுகாத்து வளர்க்க வேண்டியதா போச்சு..! " கண்களில் வெறுப்பை கக்கினார் கேஷவ்..
"புரியுது அங்கிள் டென்ஷன் ஆகாதீங்க.. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்.. தேம்பாவணி இனி என்னோட பொறுப்பு." பற்ற வைத்த சிகரெட்டிலிருந்து புகையை இழுத்து விட்டு இருக்கையில் சாய்ந்தான் சத்யா..
காரில் சென்று கொண்டிருந்தனர் திலோத்தமாவும் வருணும்..
வீட்டிலிருந்தபோது திலோத்தமாவிடம் மிச்சமில்லாமல் கொட்டி தீர்த்த அன்பும் பாசமும் வற்றி பொய் கண்கள் உணர்வற்றுக்கு கிடந்தன..
"குழந்தை குழந்தைன்னு இத்தனை நாளா வந்த நச்சரிப்புக்கு மொத்தமா ஒரு முடிவு கட்டிடீங்க போலிருக்கு.." அவள் உதட்டில் நக்கல் சிரிப்பு..
பதிலேதும் சொல்லவில்லை வருண்..
"ஆனாலும் அவங்க பாவம்.."
"அதுக்காக உண்மையிலேயே குழந்தை பெத்துக்க சொல்றியா..?" எரிச்சலானான் வருண்..
"பேசாம உண்மைய சொல்லிடுங்க வருண்.."
"ப்ச்.. அவங்க ரொம்ப மனசு கஷ்டப்படுவாங்க..! மறுபடி பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு ஆரம்பிப்பாங்க.. இதெல்லாம் எனக்கு தேவையா.. இந்த சிக்கலுக்கு இது மட்டும்தான் தீர்வு..
"எனக்கு ஒரு விஷயம் புரியல.. உங்களுக்கு தான் குறை.. குழந்தை பிறக்காதுன்னு இப்ப சொல்ற பொய்யை இந்த கல்யாண நாடகத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு மெனக்கடல் தேவையில்லாம போயிருக்குமே..! உங்களுக்கும் தினம் நடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவங்களுக்கும் எந்த எதிர்பார்ப்பும் இருந்திருக்காது."
"எனக்கு குறை இருக்கு.. குழந்தை பிறக்காதுன்னு முன்னாடியே சொல்லியிருந்தா.. என்னோட அம்மா அப்பா நிச்சயமா நம்பியிருக்கவே மாட்டாங்க.. பரிகாரம் பூஜைன்னு கோவில் கோவிலா போய் அவங்களுக்கேத்த மாதிரி ஏதாவது ஒரு பொண்ண என் தலையில கட்டணும்னு பார்ப்பாங்க.. என்ன சொன்னாலும் அவங்களை தடுத்து நிறுத்தியிருக்கவே முடியாது. வேற வழியில்லாம தான் இப்படி ஒரு முடிவெடுத்தேன். இவ்வளவு நாள் கல்யாணம் கல்யாணம்னு என் உயிரை வாங்குனாங்க இப்போ குழந்தை குழந்தைன்னு நச்சரிக்கறாங்க.. அதான் வேற வழி இல்லாம பொய்க்கு மேல பொய்யா சொல்ல வேண்டியதா போச்சு..
"என்னைக்காச்சும் ஒருநாள் மாட்ட போறீங்க வருண்.."
இழுத்து மூச்சு விட்டான் வருண்.. "நாய் வேஷம் போட்டாச்சு.. கடைசிவரை குரைச்சுதான் ஆகணும்."
"ஆனா என்னால குரைக்க முடியாது.. USல செட்டில் ஆகனுங்கறது என் கனவு.. என் ஆசையை நிறைவேத்தி வைக்கறதா சொல்லி இருக்கீங்க.. நியாபகம் இருககா.?
"அப்கோர்ஸ் அதுக்கான வேலைகளை பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். விசா இன்னும் வரலையே. ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடியட்டும்.. அங்க என் ஃபிரண்டு கம்பெனியில ஜாப் உனக்காக தயாரா காத்திருக்கு.. அப்புறம் நீ இங்க இருக்க வேண்டிய அவசியமே இல்ல.. உன் வழிய பார்த்துகிட்டு போயிட்டே இருக்கலாம்."
"உங்க வீட்ல என்ன சொல்லுவீங்க வருண்..?"
"ம்ம்.. என்கிட்ட குறை இருக்கிறதுனால உனக்கு என்னை பிடிக்கல.. இந்த வாழ்க்கை சலிச்சு போச்சு. வேற ஒரு நல்ல வாழ்க்கையை தேடி ஃபாரின் போயிட்டதா சொல்லிக்கறேன் போதுமா.."
"பாவம் ரொம்ப கஷ்டப்படறீங்க இதுக்கு பேசாம நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணி இருக்கலாம்."
"அது என் பிரச்சனை நீ ஃபீல் பண்ணாம உன் வேலைய பாரு.." முகத்திலடித்தார் பதில் வந்தது..
"கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க வருண்.. ரொம்ப ஹாண்ட்ஸாமா இருக்கீங்க.. உங்களுக்கு எத்தனையோ ப்ரொப்போசல் வந்திருக்கும்.. ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு இப்படி அடம் பிடிக்கிறீங்க.. ஏதாவது லவ் ஃபெயிலியரா..?"
வருண் சிரித்தான்..
"லவ் பண்ணினா தானே ஃபெயிலியர் ஆகறதுக்கு..!"
"அப்புறம் என்னதான் பிரச்சனை ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறீங்க..!"
வருண் பதில் சொல்லவில்லை..!
அதற்கு மேல் வருணிடம் பேசி விஷயத்தை வாங்குவது கடினமென திலோத்தமாவிற்கு தெரியும்.. கலகலப்பாக பழகுபவன்தான்.. ஆனாலும் ஒரு எல்லை தாண்டி அவனை நெருங்க முடியாது.. வருணின் இன்னொரு முகம் சுட்டெரிக்கும்..
கார் பெரிய இரும்பு கேட் போட்டிருந்த அந்த போர்டிங் ஸ்கூல்லை அடைந்திருந்தது.
அமரேஷ்.. பெயரைச் சொல்லிவிட்டு ஹாஸ்டல் வரவேற்பில் காத்திருக்க.. ஏழு வயது சிறுவன் ஒருவன் ஓட்டமும் நடையுமாய் திலோத்தமாவை நோக்கி பாய்ந்து வந்தான் என்று தான் சொல்ல வேண்டும்..
"அம்மாஆஆ..!"
முகம் தாய்மையில் மலர அதே வேகத்தோடு சென்று தன் மகனை அணைத்துக் கொண்டாள் திலோத்தமா..
புன்னகைத்த மகனின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தங்களாய் தந்து.. "எப்படி இருக்க அமர்..? நல்லா படிக்கறியா.. ஒழுங்கா சாப்பிடறியா..?" என்று வாஞ்சையோடு அவன் உடம்பை தடவி தந்து அன்போடு விசாரித்தாள்..
"நல்லா படிக்கிறேன்மா நீங்க எப்படி இருக்கீங்க..!" பெரிய பள்ளியில் படிப்பதற்கேற்ற நேர்த்தியுடன் அளந்து மிகக் குறைவான வார்த்தைகள் தான் பேசுகிறான்..
"நல்லா இருக்கேன் செல்லம்" எனும் போதே.. பக்கத்தில் வந்து அவன் கன்னத்தை தட்டி "எப்படி இருக்க அமரேஷ்?" என்றான் வருண் புன்னகையோடு..
"ஐ அம் ஃபைன் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க" அதே கேள்வியை புன்னகையோடு அவனிடமும் கேட்டான்..
"நல்லா இருக்கேன் கண்ணா..!" என்றவன் பாக்கெட்டிலிருந்து ஒரு பெரிய சாக்லேட்டை எடுத்து அவன் கையில் கொடுக்க ஆசையுடன் வாங்கிக் கொண்டான் அமரேஷ்.. தாங்கள் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களையும் வேறு சில அத்தியாவசிய உபயோக பொருட்களையும் அவனிடம் தந்துவிட்டு மரத்தடியில் அமர்ந்து சில மணி நேரங்கள் தன் மகனோடு ஆசை தீர பேசி.. கொண்டு வந்திருந்த உணவை அவனுக்கு ஊட்டி விட்டு.. கண்கலங்கி மகனிடமிருந்து விடை பெற்றுக் கொண்ட திலோத்தமாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டான் வருண்..
இருள் மகளின் வான நெற்றியில் வைத்த ஒற்றை பொட்டாய் ஒளி வீசிக்கொண்டிருந்தான் சந்திரன்..
ஜன்னல் வழியே தெரிந்த அழகான நிலவையும் சிதறி கிடந்த நட்சத்திர புள்ளிகளையும் ரசிக்க முடியாமல் அவசரமாய் வந்து கதவை சாத்தி ஸ்கிரீனை இழுத்துவிட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள் தேம்பாவணி..
பகலில் ஆசையோடு அவளை அரவணைக்கும் இதே அறைதான் இரவில் பேயாய் மாறி பயமுறுத்துகிறது..
தனிமை தனிமை பொல்லாத தனிமை..
கரடி பொம்மையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
"பப்லு..! எங்க இருக்க.. என்கிட்ட பேச மாட்டியா.. அப்படி நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்.." காற்றை கண்களால் துழாவி தனது நண்பனை தேடினாள்..
குரலும் வரவில்லை ஆளும் கண்ணுக்கு தெரியவில்லை..
"ஏன் என் மேல இவ்வளவு கோபம்.. உனக்கும் என்னை பிடிக்கலையா.. நீயும் என்னை விட்டு போயிட்டியா.. சின்ன வயசுலருந்து நீ தானே என் கூட இருந்த.. அடிச்சாலும் வலிச்சாலும் உன்கிட்ட தான வந்து அழுவேன்.. இப்ப நீயும் இல்லனா நான் எங்க போறது..!"
தழுதழுத்த குரலும் அவள் வேதனையும் கற்பனைத் தோழனை காற்றில் உருவாக்கவில்லை..
"பரவாயில்லை.. உனக்கு என்னை பிடிக்கலைனாலும்.. நீ என் கண் முன்னாடி வரலைன்னாலும் நான் உன்கிட்ட பேசுவேன் கேட்டா கேளு கேட்காட்டி போ..!" தலை சாய்த்து சொன்னவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு அழுகையோடு பேச ஆரம்பித்தாள்..
"போன வாரம் நடந்த விஷயத்தை நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே.. கேக்கறியா.." என்று தன் சோக கதையின் ஒரு பாகத்தை சொல்ல ஆரம்பித்திருந்தாள் தேம்பாவணி..
தொடரும்..

Last edited: