• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 4

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
70
தீவிர முகபாவனையுடன் சதுரங்க கட்டங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த ஆட்ட காய்களை பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

நகத்தை கடித்துக் கொண்டிருந்தவள் குதிரையை முன்னோக்கி நகர்த்தி வைக்க எதிரே அமர்ந்திருந்த ரிதன்யா ஒரு படை வீரனை முன்னுக்கு நகர்த்தினாள்..

தேம்பாவணியின் முகத்தில் புன்னகை..! யானையை நீளவாக்கில் நகர்த்தி கொண்டு சென்று ராஜாவிற்கு செக் வைத்திருந்தாள்..

செக் என்ற சொல்லும்போது அவள் முகத்தில் ஜெயித்த புன்னகை..!

ஓஓ ஷிட்.. தோற்றுவிட்ட கடுப்பில் முகத்தை சுழித்தாள் ரிதன்யா..

கல்லூரிக்குப் போகும் போதும் வரும் போதும் போடப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவளுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஓட்டுநரின் கண்களில் மண்ணை தூவி விட்டு இங்கே தன் தோழியோடு அவள் வீட்டில் சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தி இதோ ஜெயித்தும் விட்டாள் தேம்பாவணி..

"ஏய் ரிதன்யா.. தோத்துட்டா நம்ம பெட் என்னன்னு ஞாபகம் இருக்கு இல்ல..!"

"என்ன பெட் எனக்கு மறந்து போச்சே..?" அவள் தலையை சொரிந்தாள்..

"செஸ் விளையாட்டுல தோத்துப் போயிட்டா உன்னோட அம்மாவை எனக்கு நீ ஒரு நாள் கடன் கொடுக்கணும்.. இன்னைக்கு ஃபுல்லா அவங்க உனக்கு அம்மா இல்ல.. எனக்கு மட்டும்தான் அம்மா..! என்னடி உன் அம்மாவ என்கிட்ட குடுக்க ரெடியா..?"

"அம்மா ஆஆஆ..!" ரிதன்யா அழைக்கவும் உள்ளிருந்து புடவை முந்தானையில் கையை துடைத்தபடியே வந்தாள் அவள் தாய் துர்கா..

"என்னடி..!"

"அம்மா இவ என்னமோ சொல்றா என்னன்னு கேளு..!"

"என்னவாம்.."

"நான் ஆட்டத்துல தோத்துட்டேனாம் அதனால ஒரு நாளைக்கு உன்னை அம்மாவா அவ வச்சுக்க போறாளாம்.."

"இது என்னடி விளையாட்டு சூதாட்டத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் திரௌபதிய வச்சு விளையாடின மாதிரி நீங்க ரெண்டு பேரும் என்னைய பணயமா வச்சு செஸ் விளையாடுனீங்களா என்ன..?

"ஆன்ட்டி உங்க பொண்ணு வாக்கு கொடுத்துட்டா.. நான் ஜெயிச்சுட்டேன். இந்த நிமிஷத்திலிருந்து 24 மணி நேரத்துக்கு நீங்க தான் என்னோட அம்மா..!" தேம்பாவணி புருவங்களை ஏற்றி ஏற்றி இறக்கினாள்..

"சரிதான்.." என்றவரின் முகத்தில் எரிச்சல்தான் தெரிந்தது..

"முக்கியமான கண்டிஷன் உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கறதையே நீங்க மறந்திடனும்.. இந்த நிமிஷத்திலிருந்து நான் மட்டும் தான் உங்களுக்கு பொண்ணு..!"

"அட போங்கடி சும்மா எதையாவது உளறிக்கிட்டு.. எனக்கு அடுப்படியில வேலை இருக்குது.. உங்க விளையாட்டு உங்களோடு வச்சுக்கோங்க.."

"ஆன்ட்டி இதெல்லாம் சரியே இல்லை..!"

"ஏன்டி நான் பெத்த பொண்ண மறந்துட்டு உன்னை எப்படி மகளா ஏத்துக்க முடியும்.. வேணும்னா என் மகளோட ஃப்ரெண்ட்டா ஒரு விருந்தாளியா உன்னை நல்லா கவனிச்சுக்க சொன்னா ஓகே.. அதுக்காக நீ என் பெண்ணாகிட முடியுமா..?"

"அம்மா..!" ரிதன்யா தன் தாயை அடக்க முயன்றாள்..

"இதென்னடி விபரீத விளையாட்டு.. உன்னை முழுக்க மறந்திட்டு இவளை பொண்ணா ஏத்துக்கணுமாமே.. அதெப்படி சாத்தியம்.. நான் பெத்த மகள என்னால மறக்க முடியுமா..! இல்ல உன்ன பக்கத்துல வச்சுக்கிட்டு உன்னைய கவனிக்காம இவளுக்கு மட்டும் சேவை செய்ய முடியுமா..?"

தேம்பாவணியின் கண்கள் கலங்க துடித்தன..

வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு "நான் வரேன் ஆன்ட்டி.." தன் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்..

"அம்மா.. அவ பாவம்.. எதுக்காக தேவையில்லாம அவளை ஹர்ட் பண்றீங்க..! தேம்பா என்னோட கிளாஸ்மேட் நாளைக்கு அவ முகத்துல எப்படி முழிப்பேன்..?"

"முழிக்காத.. அந்த லூசோட சேர்ந்து நீயும் முழு லூசாகிட்ட.. பந்தயத்துக்கு வைக்கற பொருளை பாரு.. அம்மாவா இருக்கணும் ஆட்டுக்குட்டியா இருக்கணும்னு..! போ போய் உருப்படியா வேற ஏதாவது வேலையிருந்தா பாரு.. அடுப்புல குழம்ப கூட்டிவிட்டுட்டு வந்தேன்.. தீஞ்சு போச்சானு தெரியல.. அய்யோ வாசனை வருதே!" என்றபடியே அவசரமாக உள்ளே ஓடினாள் துர்கா..

விஷயத்தை சொல்லி முடித்துவிட்டு கண்ணோரம் பளபளத்த ஈரத்தை துடைத்துக் கொண்டாள் தேம்பா..

"பப்லு நீ எங்கடா போயிட்ட.. நீ என் கூட இருந்திருந்தா இந்நேரம் என்னை திட்டியிருப்ப..! ஆமா எப்படி திட்டுவ தெரியுமா..?"

"இந்த மாதிரி பண்ணாதன்னு உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்.. எத்தனை முறை அவமானப்பட்டாலும் உனக்கு புத்தி வராதா.. வேத்து மனுஷங்களால எப்படி ஒரு உண்மையான அம்மாவா இருக்கவே முடியும்.. நீ எத்தனை ஆட்டத்தில் ஜெயிச்சாலும்.. உன்னோட எத்தனை தோழிகளோட அம்மாவை கடன் வாங்கிக்கிட்டாலும் அவங்களால முழுசா ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து உன்னை பாத்துக்கவே முடியாது.. கடைசில நீ தான் காயப்படுவ.. இனிமே இப்படி பண்றதை நிறுத்து.." என்று தடிமனான குரலில் அவளாகவே பேசிக்கொண்டவள் மீண்டும் சோர்ந்து போனாள்..

"நீ என் கூட இருந்திருந்தா இப்படித்தான் என்னை திட்டியிருப்ப.. ப்ச்.. ஆமா அதுவும் உண்மைதான்.. யாராலயும் எனக்கு 100% உண்மையான அம்மாவா இருக்கவே முடியல.. அன்னைக்கு ப்ரீத்தியோட அம்மா கூட.. ஏதோ ஒரு ஆர்வத்துல எனக்கு தாயா இருக்க சம்மதிச்சாங்க.."

"ரெண்டு மணி நேரம் அவங்க ப்ரீத்தி கண்டுக்கவே இல்ல.. என் கூட உட்கார்ந்து டிவி பார்த்தாங்க எனக்கு அல்வா செஞ்சு கொடுத்தாங்க..‌ ஆனா ரெண்டே மணி நேரம் தான்..‌ அதுக்கு மேல அவங்களுக்கு இந்த தேம்பா போரடிச்சுட்டேன்.. நான் சலிச்சு போய்ட்டேன்.."

"ப்ரீத்தி என் செல்லம்.. வெறும் வயிறா இருக்கியேடா கண்ணா.. ஏதாவது சாப்பிடறியான்னு ப்ரீத்தி பக்கம் போயிட்டாங்க..! அப்போ பிரீத்தி என்னை ஒரு பார்வை பாத்தா பாரு.. இவங்க என்னோட அம்மான்னு அந்த கண்ல அவ்ளோ கர்வம்.." தேம்பாவின் விழிகள் எதிர்பக்க சுவற்றை வெறித்து கொண்டிருந்தன..

"என்னை யாராலயும் என்ன ஒரு ரெண்டு மணி நேரம் கூட சகிச்சுக்க முடியல இல்ல.."

"நான் ஏன் இப்படியெல்லாம் பண்றேன் பப்லு.. என் பிரண்ட்ஸ் வீட்டுக்கு போய் வெறித்தனமா ஆட்டத்துல ஜெயிச்சு அவங்க அம்மாவை பந்தய பொருளா வச்சு ஒரு நாள் அவங்கள எனக்கு வேணும்னு ஏன் நிபந்தனை விதிக்கறேன்.. என்ன பாத்தா உனக்கு கூட பைத்தியக்காரி மாதிரி தோணுது இல்ல.." மூக்கை உறிஞ்சினாள் தேம்பா..

"நான் எனக்காக ஒரு அம்மாவை தேடுறேன்..! இந்த உலகத்துல எத்தனை பேர் இருக்காங்க.. எனக்கே எனக்காய் ஏன் ஒரு அம்மா கிடைக்கலை.. வாழ்க்கை முழுக்க வேண்டாம்.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் போதும்.. அன்னைக்கு மட்டும் அவங்க எனக்காக வாழட்டுமே..!" ஒற்றை கோடாய் வலக் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது..

சட்டென அந்த விழி நீரை துடைத்துக் கொண்டாள்..

"ஆனா பரவாயில்ல ஆட்டத்துல மட்டுமில்ல இவங்களால என்னை பந்தயத்தில் கூட தோக்கடிக்க முடியல.. யாராலயும் எனக்கு ஒரு ஆத்மார்த்தமான அம்மாவா இருக்க முடியல.. எல்லாரும் தோத்து போய்ட்டாங்க பப்லு.." தேம்பாவணி சிரித்தாள்.. ஒவ்வொரு முறையும் நான் தான் ஜெயிக்கிறேன்..! அந்த வகையில ஏதோ ஒரு சந்தோஷம்.."

"ஆனா ஒரே ஒருமுறை அன்பால தோத்துப் போகணும்னு ஆசைப்படறேன்..! நடக்குமா பப்லு..?"

"ஏன் பப்லு பேசவே மாட்டேங்கற.. நான் மட்டுமே தனியா பேசிகிட்டு இருக்கிற மாதிரி ஃபீல் ஆகுது..! ப்ச்.. ஆனா பாரேன் ரிதன்யா வீட்டுக்கு போனதுல எனக்கு இன்னொரு லாபமும் உண்டு.. உனக்கு புரியலைல.. இரு காட்டுறேன்.." என்றபடியே கட்டிலிலிருந்து இறங்கி அந்த மர டிராயரை திறந்தாள்..

"இங்க பாத்தியா" என்று உள்ளிருந்த பொருளை எடுத்து அந்த அறை முழுக்க சுற்றி காண்பித்தாள்..

கலர் கலராய் வர்ணங்கள் தீட்டப்பட்டிருந்த ரப்பர் பிள்ளையார்.. அவள் உள்ளங்கை அளவில் இருந்தது..

"சுட்டுட்டேன்.." கண் சிமிட்டி சிரித்து தோள்களை ஏற்றி இறக்கினாள்..

சட்டென கதவு திறக்கும் ஓசையில் அவசரமாக பிள்ளையாரை டிராயரில் ஒளித்து வைத்துவிட்டு வேகமாக வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி..

உள்ளே வந்தவன் சத்யா..

"ஹேய்.. என்ன தனியா பேசிகிட்டு இருக்க..?"

"இ.. இல்லையே நான் எதுக்கு தனியா பேச போறேன்.."

"நான்தான் உன் குரலை கேட்டனே..!"

"இல்ல அது வந்து.. ஹான்.. படிச்சிக்கிட்டு இருந்தேன்.."

"புக்ஸ் எதுவுமே பக்கத்துல காணும்." கட்டிலை ஆராய்ந்தான் சத்யா..

"இல்ல ப்ரோபஸர் எடுத்த சாப்டர்.. மண்டையில பதிஞ்சிருக்கே.. அதை ஒரு முறை ரீகால் பண்ணி பாத்துக்கிட்டேன்.."

"என்னவோ சொல்ற.. சரி அரவிந்த் வந்துருக்கான்.. நாங்க தூங்க போறோம் நீ பத்திரமா இரு குட் நைட்" என்றான் சத்யா..

"சத்யா..!" என்றதும் அவன் திரும்பி நிற்க..

"தனியா படுத்துக்க பயமா இருக்கு.." என்றாள் இறங்கிய குரலில்..

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..?" அலட்சியமாய் கேட்டான் அவன்..

"ப்ளீஸ் நீ அந்த சோபாவுல படுத்துக்கோயேன் எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.."

"இப்பதானே சொன்னேன் உன் காதுல விழல.. அரவிந்த் வந்திருக்கான் அன்ட் வி நீட் சம் பிரைவசி.. எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுதானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.. இப்ப வந்து கூட படுன்னா என்ன அர்த்தம்.. பேசாம லைட் ஆஃப் பண்ணிட்டு தூங்கு." நகர்ந்து சென்றவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..

உண்மைதான் சத்யா ஓரினச்சேர்க்கையாளன்.. சரி தவறு என்ற தர்க்கத்தை தாண்டி சமுதாய எதிர்ப்புகளுக்காக தன்னுடைய அந்தரங்கத்தை ரகசியமாகவே வைத்திருக்கிறான்..

அவன் அந்தரங்க ரகசியங்கள் பற்றி தெரிந்து கொண்ட கேசவ் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு.. தான் என்ன சொன்னாலும் கேட்கக்கூடிய அடிமையாக மாற்றி தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்..!

விளக்கை அணைக்கவில்லை தேம்பாவணி..! இருட்டின் கருமை அதிகரித்து இரவின் நீளம் கூட கூட மனதுக்குள் என்னென்னவோ பயங்கள்..

கையில் வைத்திருந்த டெடி பேர் பொம்மை கூட பூதமாக மாறி அவள் பயமுறுத்தியது.. டேபிளில் வைத்திருந்த வாட்டர் பாட்டில்.. போன் சார்ஜர்.. ஆங்கரில் தொங்கவிடப்பட்டிருந்த அவள் உடை அனைத்தும் கோர உருவங்களாக மாறி அவளை நெருங்குவது போல் ஒரு பிரமை..

கண்களை இறுக மூடிக் கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்து தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் அமானுஷ்ய சத்தத்தால் ஒவ்வொரு முறையும் துள்ளி விழுந்தாள்..

"ஆஆ..‌ ஆஆ.." அவள் அழுகையும் அலறலும் அறையை தாண்டி வெளியே கேட்கவில்லை.. கட்டிலுக்கு அடியில் பதுங்கி முகத்தை மூடிக்கொண்ட போதும் பயம் போகவில்லை.. எப்போது உறங்கிப் போனாளோ..! விடிய விடிய எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கிற்கே வெளிச்சம்..

காலையில் படுக்கையில் தான் படுத்திருந்தாள்.. இன்று அவள் கெட்ட நேரமோ என்னவோ எழுந்து அமர்வதற்கு முன் வேலைக்காரி தேநீர் கோப்பையோடு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து விட்டாள்..

"அம்மா காபி வச்சிருக்கேன்.." என்றவள் படுக்கை ஈரமாக இருப்பதை தேம்பாவணியிடமே சொல்லி இருக்கலாம்..

என்ன செய்ய..? முதலாளி விசுவாசம்..! அங்கிருந்து வெளியேறி சத்யாவிடம் இந்த விஷயத்தை சொல்ல.. பல்லை கடித்தபடி உள்ளே வந்தான் அவன்..

"ஏய்.. வனி.. ஏய்.. எழுந்திரு.." கடுமையான குரலோடு அவளை முரட்டுத்தனமாக தட்டி எழுப்ப.. ஏற்கனவே விடியலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் உறங்கவே ஆரம்பித்திருந்தவளுக்கு கண்கள் கயிறு போட்டு கட்டியதைப் போல் திறக்கவே முடியவில்லை..

"இப்ப எழுந்துக்கறியா இல்லையா..?" ஓங்கி ஒலித்த அவன் குரலில் எழுந்து அமர்ந்து "குட் மார்னிங் சத்யா.." என்றாள் தூக்க கலக்கத்துடன்..

"ஓங்கி அறைஞ்சேன்னா பாரு..! குட் மார்னிங் ஒன்னு தான் குறைச்சல்.. என்ன பண்ணி வச்சிருக்க வனி..!" என்ற பிறகுதான் தான் அமர்ந்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்தவள் தர்ம சங்கடத்தோடு சத்யாவை பார்த்தாள்..

எப்போதும் யாரும் பார்ப்பதற்கு முன்னே ஈரம் செய்திருந்த படுக்கை விரிப்புகளை எடுத்து சுத்தம் செய்து அலசி காய போட்டு விடுவாள்.. இன்று சற்று அயர்ந்து தூங்கி விட்டதால் இந்த கோலத்தில் சத்யாவின் கண்களில் பட வேண்டியதாய் போனது..

"மாடு மாதிரி வளந்துருக்கியே.. கொஞ்சம் கூட அறிவில்ல.. இந்த வயசுல யாராவது பெட்டை வெட் பண்ணுவாங்களா.. எத்தனை வாட்டி சொல்றது.. வேலைக்காரி வந்து சிரிச்சுக்கிட்டே சொல்றா.. உன்னால என் மானமே போகுது.. உங்க அப்பாவுக்கு போன் பண்றேன்.." ஃபோனை எடுத்தான் அவன்..

"சத்யா சத்யா ப்ளீஸ் வேண்டாம் அப்பாவுக்கு மட்டும் போன் பண்ணாத.. சத்தியமா இனிமே இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்.. ப்ளீஸ் ப்ளீஸ்.." கெஞ்சலோடு அவள் கையை தொடவும்..

"ஏய்.. ச்சீ.. கையை எடு டிஸ்கஸ்டிங் ஃபெல்லோ.. யூ நோ ஒன்திங் உன்ன மாதிரி ஒரு அருவருப்பான பிறவியை நான் பார்த்ததே இல்லை.. போ.. எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு குளிச்சு காலேஜுக்கு தயாராகு..!" என்றதும் சோர்ந்த முகத்தோடு கட்டிலை விட்டு இறங்கினாள் தேம்பாவணி.. சத்யா அங்கிருந்து சென்று விட்டிருந்தான்..

இப்படி அடிக்கடி படுக்கையை ஈரமாக்குவது அவளுக்கு அருவருப்பாகவும் அவமானமாகவும் தான் இருக்கிறது.. ஆனாலும் வேண்டுமென்று தெரிந்தா செய்கிறாள்.. உறக்க கலக்கத்தில் என்ன நடக்கிறதென்று அவளுக்கே புரிவதில்லை.. இந்த வயதில் இப்படி படுக்கையில் சிறுநீர் கழிப்பது மனரீதியான கோளாறுக்கான அடையாளம் என்று புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை சத்யாவும் கேஷவ் குமாரும்..

அப்படியே புரிந்தாலும்.. அதைப் பற்றி அவர்களுக்கென்ன கவலை.. அவள் இருந்தால் என்ன செத்தால் என்ன.. என்ற ரீதியில்தான் இருக்கிறது அவர்களின் அக்கறை..!

ஆனால் சத்யா பரவாயில்லை.. ஒருவேளை கேஷவ் கண்ணில் தேம்பாவணி இந்த கோலத்தில் பட்டிருந்தால் நிலைமை இன்னும் ரண கொடூரமாய் போயிருக்கும்..

படுக்கை விரிப்புகளை எடுத்து அலசி துவைத்து காய போட்டுவிட்டு குளித்துவிட்டு தயாராகி கல்லூரிக்கு புறப்பட்டாள் தேம்பாவணி..!

சத்யா அரவிந்தனோடு தோளில் கை போட்டுக்கொண்டு காரில் ஏறி எங்கேயோ புறப்பட்டு சென்றான்..

வா.. உட்கார்ந்து சாப்பிடு என்றழைக்க வீட்டில் ஆள் இல்லை..! உணவு மேஜை வேறு காலியாக இருக்க தோளில் மாட்டிய பையுடன் வாசலை தாண்டி சென்று அவளுக்காக நியமிக்கப்பட்டிருந்த காரில் ஏறிக்கொண்டாள்..!

"சும்மா சும்மா என்னை ஏமாத்திட்டு எங்கேயாவது ஓடிப் போகாதீங்க அம்மணி..! சார் கிட்ட என்னால திட்டு வாங்க முடியல.." சென்றபடியே காரை எடுத்தான் டிரைவர் சீனிவாசன்..

"டாக்டர்.. போன மாசம் தான் என் பாய் ஃப்ரெண்ட் என்னோட பிரேக்அப் பண்ணிட்டு போனான்.. என்னால இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியல.. எப்படியெல்லாம் இருந்தோம் தெரியுமா.. திடீர்னு அலட்சியமா உதறி தள்ளிட்டு வேண்டாம்னு சொல்லிட்டு போக முடியுது அவனால.. ஈஸியா இன்னொரு பொண்ணு கூட போய்ட்டான். ஆனா நான்தான் நிம்மதி இல்லாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. தூக்கம் வரமாட்டேங்குது.. அவனை நினைச்சு நினைச்சு அழறேன்.."

"இன்னும் நல்லா அழுங்க.." இயல்பாக சொன்னான் வரூண்..

"டாக்டர்..!"

"இயல்பான உணர்ச்சிகளை அடக்க வேண்டாம்.. ஒரேடியா அழுது முடிச்சு உங்க பாய் பிரண்ட் சாப்டர க்ளோஸ் பண்ணிடுங்க.."

"ஐயோ கொலை பண்ண சொல்றீங்களா..!"

"அட நீ வேற ஏம்மா..! ஒரேடியா அழுது முடிச்சு உங்க மனசுலருந்து உங்க எக்ஸ் பாய் பிரண்ட தூக்கி போட்டுடுங்கன்னு சொன்னேன்.. வாழ்க்கை இத்தோட முடிஞ்சு போகல..! மறக்க முடியாது.. ஏத்துக்க முடியாது அப்படின்னெல்லாம் உலகத்துல ஒண்ணுமே கிடையாது.. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்.. உங்க பாய் பிரண்டோட நினைவுகளுக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்களே அதை தடுத்து நிறுத்திடுங்க.. தனியா இருந்தா மனசு எதையெதையோ யோசிக்கும்.. குடும்பத்தோட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க.. உண்மையிலேயே சந்தோஷமா இருங்க.. போட்டோஸ் வீடியோஸ் எல்லாத்தையும் சோசியல் மீடியால அப்லோட் பண்ணுங்க.. நம்மள ரொம்பவே நோகடிக்கிறவங்களுக்கு திரும்ப நாம கொடுக்கிற ஒரே தண்டனை அவங்கள இக்னோர் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ந்து காட்டறது மட்டும்தான்..! உங்க பாய் பிரண்ட் மூலமா உங்களுக்கு ஒரு பாடம் கிடைச்சிருக்கு.. அதுக்காக சந்தோஷப்பட்டு அடுத்த வேலையை பாருங்க..! சில விஷயங்களை ஏத்துக்க முடியாமல் போறதுனால தான் அதை விட்டு விலகி ஓடனும்னு நினைச்சு நிம்மதியில்லாம தவிக்கிறோம்.. சூழ்நிலையை ஏத்துக்கிட்டோம்னா வாழ்க்கையை கடக்கிறது அவ்வளவு கஷ்டமா இருக்காது.."

"ஆனா டாக்டர்..!"

"டிப்ரசனுக்கு டேப்லெட் எழுதி இருக்கேன் யோகா கிளாஸ் போங்க..! உங்களை பிஸியா வச்சுக்கோங்க.. மேக்ஸிமம் நெகட்டிவ் வைப்ஸ் தரக் கூடிய மனிதர்கள் பொருட்கள் சூழ்நிலையிலிருந்து விலகி இருங்க..!"

"தேங்க்யூ டாக்டர்.."

நான் சொன்னதையெல்லாம் ரெகுலரா ஃபாலோ பண்ணுங்க.. நெக்ஸ்ட் சிட்டிங் வாங்க.. அப்பவும் இந்த மாதிரி பிரச்சனை இருந்தா அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிப்போம்.."

அந்தப் பெண் விடைபெற்று கொண்டு சென்றாள்..

இருக்கையில் ஆசுவாசமாக சாய்ந்து அமர்ந்தபடி தனது போனை எடுத்து கிருஷ்ணமூர்த்தி என்ற எண்ணுக்கு அழைத்திருந்தான் வருண்..

"ஹலோ டாக்டர்.. வருண் ஸ்பீக்கிங்.."

"ஹான் சார்..‌ஐம் குட்.. எவ்ரிதிங் கோயிங் ஃபைன்.. இல்ல ஒரு டீடைல் பத்தி கேக்கறதுக்காக தான் உங்களை கூப்பிட்டேன்.."

"அது.. தேம்பாவணின்னு ஒரு பொண்ணு உங்ககிட்ட ட்ரீட்மென்ட்காக அனுப்பி இருந்தேன்..! யாராவது அந்த பேர்ல வந்தாங்களா டாக்டர்.."

"ஓ.. வரலையா..! இல்ல நத்திங் டாக்டர்.. ஒரு சின்ன வெரிஃபிகேஷன்.. ஒருவேளை அந்த பொண்ணு உங்ககிட்ட வந்தா அவளுக்கு என்ன பிராப்ளம்ன்னு செக் பண்ணிட்டு ப்ளீஸ் லெட் மி நோ.. தேங்க்யூ டாக்டர்.." போனை துண்டித்து நீண்ட மூச்சுடன் ஒற்றைப் புருவத்தை நீவியபடி அவன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அடுத்த அழைப்பு..

திலோத்தமா..

"சொல்லுமா.."

"என்ன ஃபோன் எங்கேஜ்டா இருந்ததே..!"

"அந்த டீடைல் உனக்கு அவசியம் தானா..!" அவன் குரலில் ஒரு சிறு கடுகடுப்பு..

"சும்மாதான் கேட்டேன்.. எப்ப வருவீங்க வருண்..!"

"அம்மாவும் அப்பாவும் பக்கத்துல இருக்காங்களா..?"

"இல்ல நான் தனியாத்தான் இருக்கேன்.."

"அப்புறம் எதுக்கு இந்த தேவை இல்லாத அக்கறை.. அம்மா அப்பா முன்னாடி நடிச்சா மட்டும் போதும்.."

"ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? சாதாரணமா கூட உங்க கிட்ட அக்கறையா பேசக்கூடாதா..!"

"வேண்டாமே திலோத்தமா.. ஊருக்கு தான் நாம கணவன் மனைவி..‌ தனிப்பட்ட முறையில் கொஞ்சம் தள்ளி இருந்துக்குவோமே.. அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது... வேற ஏதாவது விஷயம் உண்டா..?"

எதிர்முனையில் மௌனம்..

அழைப்பை துண்டித்து விட்டான் வருண்..

மீண்டும் யோசனையாக சாய்ந்து அமர்ந்தபடி பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டிருந்தவன் இன்டர் காமில் மாலினியை அழைத்தான்..

"மாலினி அந்த பொண்ணு போன் நம்பர் ஏதாவது கொடுத்துட்டு போனாளா..!"

"என்ன பொண்ணு சார்..?"

"அதான் தேம்பாவணின்னு ஒரு பொண்ணு வந்தாளே..! அவளோட பர்சனல் டீடைல்ஸ் போன் நம்பர் ஏதாவது வாங்கி வச்சியா..!"

"இல்ல சார்.. நான் கேட்ட எந்த தகவலையும் அந்த பொண்ணு தரல.. நான் எது கேட்டாலும் டாக்டரை பாக்கணும்னு மட்டும் தான் சொல்லிட்டு இருந்தா..!"

"நீ சமோசா சாப்பிடுறதுல மட்டும் குறியா இரு.. வேற எதுக்கும் லாயக்கில்லை.. வை ஃபோனை..!" என்றவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளினிக்கை விட்டு புறப்பட்டு..
முந்தைய நாள் தேம்பாவணியை இறக்கி விட்ட அந்த இடத்தில் காரில் அமர்ந்து அவள் எங்காவது தென்படுகிறாளா என்று தேடிக் கொண்டிருந்தான்..

நீண்ட நேரமாகியும் தேம்பாவணி அவன் கண்ணில் அகப்படாமல் போகவே ஸ்டீயரிங்கில் எரிச்சலோடு ஓங்கி தட்டிக் கொண்டான்..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Apr 30, 2025
Messages
23

So sad..... Uhunagula evvalo kastam..... Don't worry varun is coming.... Ud 👌👌👌👌... Sana sis💜💜💜
 
Member
Joined
Mar 13, 2025
Messages
6
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Active member
Joined
Jul 25, 2023
Messages
26
அம்மா எவ்வளவு உன்னதமான ஒரு வார்த்தை. சிலருக்கு கிடைப்பதில்லை சிலருக்கு கிடைத்தும் பலன் இல்லை. ஆனால் இருவரின் நிலைமையும் ரொம்பவே கொடுமை தான். இந்த சின்ன வயதிலேயே அவளுக்கு இருக்கும் அனுபவிக்கும் துயரங்கள் ரொம்பவே அதிகம் தான். தேம்பாதே தேம்பாவனி

அவளுடன் பழகிய அந்த குறைந்த நேரத்திலேயே அவளுக்கு ஏதோ பெரிய அளவில் துயரம் உள்ளதென யூகித்த மனநல மருத்துவர் பாராட்டுக்குரியவரே ஆனால் அதை தீர்க்கவும் அவன் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்
 
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
50

இந்தா ஆரம்பித்து விட்டது இல்ல ஆட்டம் வரூண் தன் தேடலை துவங்கி விட்டான் இனி எல்லாம் சரியா போகும் 😍😍😍❤️❤️
அடேய் விளங்காதவனே சத்யா நீ தான்டா disgusting animal எறுமைமாடு தடிப்பயலே சீச்சீ.. நீ பன்றது கேவலமான வேலை இதுல ஏன்டா அந்த குழந்தையை திட்ற 😡😡😡
தேனு பட்டு அழாத டா தங்கம் உன் துணை உன்ன தேட ஆரம்பிச்சுட்டான் உன்னோட தாய் க்கான தேடலை அவனே தீர்த்து வைப்பான் 🥹🥹🥹
 
Member
Joined
Jan 26, 2024
Messages
48
அருமையான பதிவு
 
Active member
Joined
May 3, 2025
Messages
45
ஒரு பேச்சுக்கு கூடவா அவளுக்கு அம்மாவா இருக்க கூடாது...
பாவம் நம்ம தேனு...

Babblu கேளுபா அவ பிரச்சனையா... பயப்படாரா பாரு நம்ம தேனு...

சத்யமா இந்த சத்யா இப்படி இருப்பானு எதிர்பார்க்கல... அதுவும் இப்படி ஒரு twist இங்க...
இப்படி எல்லாரும் போட்டு
படுத்துனா அவ என்ன ஆவ... இப்படி தான் depression la போவா...

பெத்தாவன் இப்படி கட்னவன் அப்படி...
இருங்க டா எங்க வருண் வந்து ஆட்டத்த
ஆரம்பிப்பான்...

தேனு u don't worry... வருண் on the way...
இனி வருண் பாத்துக்குவாரு உன்ன அம்மா வா...
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
33

Ipove theda aarambichuttar doctor..
 
Member
Joined
Feb 15, 2025
Messages
40
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Lee

New member
Joined
Jun 24, 2025
Messages
14
Super super super super super super 💞 💞 💞 💞 unga novel plot ellam unique ah iruku
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
109
Varun amma evalukku..amma padatha kammipanga.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
 
Member
Joined
Mar 17, 2024
Messages
4
இந்த வருணுக்கு என்ன இப்படி ஒரு கோவம்😌 இவனுக்கு வயசு 38 அவளுக்கு 19-20 இருக்குமா... இவ்ளோ வயசு வித்தியாசதத்துல ஒரு ஜோடியா🤔 லாஜிக் ரொம்ப இடிக்கிதே சனா சிஸ்
 
Top