- Joined
- Jan 10, 2023
- Messages
- 70
- Thread Author
- #1
"குழந்தைகளை திட்டினியா நீ..! மறுநாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாக வருண் இப்படி கேட்க திலோத்தமா திகைத்துப் போனாள்..
"நா.. நான் எதுக்காக பசங்கள திட்டனும்.. ரூமுக்குள்ள எட்டி பாக்கறது என்ன பழக்கம்.. அப்படி செய்யக்கூடாதுன்னு கண்டிச்சு சொன்னேன்.. இதுல என்ன தப்பு இருக்கு..! நல்லது கெட்டதை யாராவது ஒருத்தர் எடுத்து சொல்ல வேண்டாமா? எப்ப பாரு செல்லம் கொடுத்துக்கிட்டே இருந்தா எப்படி..!"
"அதையேதான் நானும் சொல்றேன்.. சொல்ற விதம்னு ஒன்னு இருக்கு.. நீ எந்த மாடுலேஷன்ல சொல்லியிருப்பேன்னு எனக்கும் தெரியும்.. நல்லவேளை குழந்தைகள் என்கிட்ட வந்து சொன்னாங்க.. இதே என் அக்கா கிட்ட போய் சொல்லி இருந்தா அவ நாலு நாளைக்கு தேவையான கன்டென்ட் ரெடி பண்ணியிருப்பா இதை வைச்சு..!"
"சொல்லட்டுமே.. உங்க அக்கா வந்து கேட்டாலும் நான் இதே பதிலை தான் சொல்லுவேன்.. அடடா தப்புன்னு எடுத்து சொன்னதுக்கு இவ்வளவு பெரிய பஞ்சாயத்தா.. ஆனா உங்களுக்கு உங்க அக்கா பரவாயில்ல..'
"அவ உன்ன கூப்பிட்ட நடு வீட்டுல வச்சு கேட்டுருக்கணும்.. அப்ப தெரிஞ்சிருக்கும் சேதி..! நீ ஒன்னும் குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணல.. உனக்கு அவங்கள பிடிக்காது.. என் அக்கா மேல உள்ள கோபத்தை அவங்ககிட்ட காட்டியிருக்க.. செய்யற வேலையை திருந்த செய்யணும்.. நீ வந்தது நடிக்கத்தான.. அதை ஒருநாளாவது ஒழுங்கா செஞ்சிருக்கியா.. உனக்கு எங்க பிள்ளைகளை பிடிக்கலன்னாலும் பரவாயில்லை.. கொஞ்சம் கனிவா சிரிக்கிற மாதிரி நடிக்கவாது செய்.." வருண் கோபமாக செல்ல திலோத்தமா முகம் கருத்து போனது..
"போட்டு குடுத்திருச்சுங்க சனியனுங்க.. இதுங்க குழந்தைகளாம் குட்டி சாத்தானுங்க.. ச்சே.." பல்லை கடித்தபடி கட்டிலில் அமர்ந்தாள்..
காலை நேர சிற்றுண்டிக்காக பரபரப்பாக டைனிங் டேபிளும் சமையல் அறையுமாக வேலையாட்களும் சாரதாவும் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்க.. மகனுக்கும் மகளுக்கும் உணவை எடுத்து வைத்து பரிமாறிக் கொண்டிருந்தாள் வெண்மதி.. வருணுக்கு உணவை பரிமாறுவதை போல் ஒரு நடிப்பை போட்டுவிட்டு.. தலை ரொம்ப வலிக்குது.. நான் உள்ள போறேன்" என்று நாசுக்காக நழுவி கொண்டாள் திலோத்தமா..
சாரதா ராஜேந்திரன் மட்டுமிருந்தால் அமைதியாக உண்டு விட்டு எழுந்து சென்று விடுவார்கள்.. குழந்தைகள் வெண்மதி வந்த பிறகு சத்தமும் கும்மாளமுமாக வீடு களைகட்டியது திலோத்தமாவிற்கு பிடிக்கவில்லை..
"உங்க அக்கா எப்ப கிளம்புவாங்க?" என்று கேட்டு அவனிடம் வேண்டிய அளவு வாங்கி கட்டிக் கொண்டாள் திலோத்தமா..!
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அலைபேசியில் அழைப்பு..
"ஏய் போன் அரை மணி நேரமா அடிக்குதுடா.. எடுத்து பேசு..!" என்றாள் வெண்மதி..
"சாப்பிடும் போது தட்டுல மட்டும்தான் கவனம் இருக்கணும்.. பயங்கர பசியில் சாப்பிடறேன்.. நீ கொஞ்சம் அமைதியா இரு.. என்று தமக்கையை அடக்கி விட்டு தட்டில் கவனமானான் வருண்..
"அடேய் திரும்பத் திரும்ப ஃபோன் அடிச்சுகிட்டே இருக்கு பாரு.. எடுத்து பேசுடா.. இரு நான் வேணா என்னன்னு கேக்கறேன்.." என்று வெண்மதி இருக்கையிலிருந்து எழுந்து ஃபோனை எடுக்க போக.. அதற்குள் அலைபேசியை கையில் எடுத்திருந்தான் வருண்..
ஒரு கணம் வாய் அசை போடுவதை நிறுத்தியிருக்க கண்கள் விரிந்து தொடுத்தரையை பார்த்துக் கொண்டிருந்தவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..
"சொல்லுமா..!"
"ம்ம்.. ம்ம்.. வரேன்..! இதோ வந்துட்டே இருக்கேன்.. நீ கொஞ்சம் ஃபோன வை.. அப்பதான் என்னால கிளம்ப முடியும்.." பாதி உணவிலேயே எழுந்தான்..!
"டேய் பசிக்குதுன்னு சொன்னியே.. சாப்பிட்டு போடா.." சமையலறை பக்கமிருந்து சாரதா சத்தம்..
"இல்லமா வேலை இருக்கு.. நான் சீக்கிரம் போகணும்..!"
"சாப்பிடும்போது முழு கவனமும் சாப்பாட்டுல மட்டும்தான் இருக்கனும்னு ஒரு மகான் சொல்லியிருக்கார்.. இப்படி அரைகுறையாக எழுந்து ஓடக்கூடாது.. மரியாதையா உக்காந்து தட்டை காலி பண்ணிட்டு போ.." வெண்மதியின் அதட்டலில்
உன்கூட டார்ச்சர் மதி.. பாவம் அந்த மனுஷன்.. என்றபடி மீண்டும் அமர்ந்து அவசர அவசரமாக உண்ண ஆரம்பித்தான்..! கோபத்தில் மட்டும் தமக்கையின் பேர் சொல்லி அழைப்பது அவன் வழக்கம்..
"இப்ப எதுக்குடா பாம்பு முட்டைய முழுங்கற மாதிரி அவசர அவசரமா அள்ளி போட்டுக்கற.. பொறுமையா சாப்பிடு டா..!"
"நீ கொஞ்சம் வாய மூடறியா.. ஏதாவது பேசுனா அள்ளி உன் வாயில திணிச்சிடுவேன்.. அதான் நேரம் இல்லைன்னு சொன்னேன்ல..! அப்புறம் ஏன் டார்ச்சர் பண்ற காந்திமதி.." தட்டை காலி செய்துவிட்டு ஓட்டமும் நடையுமாக வீட்டை விட்டு வெளியேறினான்..
"எவ்வளவு திமிர் பாத்தீங்களாப்பா அவனுக்கு.. என்னை காந்திமதின்னு சொல்லிட்டு போறான் பாருங்க.."
"காந்திமதியை விட வடிவுக்கரசி அழகா இருப்பா.. அந்தகாலத்துல கன்னி பருவத்திலே படத்துல.. ராஜேந்திரன் ஆரம்பிக்க.."
"அப்பாஆஆஆ.." என்றதும் தோசையை திணித்துக் கொண்டு மூடியது அவர் வாய்..
"என்ன இவன் இவ்வளவு அவசரமா எங்க போறான்..? இவனுக்காக தான் தோசை சுட்டு கொண்டு வந்தேன்.."
"அந்த தோசையை என் தட்டுல போடு..!" ராஜேந்திரன் சாரதா கொண்டு வந்த தோசையை இடமாற்றிக்கொள்ள..
"உன் பையன் என்னவோ சரி இல்லமா.. நானும் வந்ததுலருந்து பார்க்கறேன்.. ஆள் ஒரு மாதிரி நடந்துக்கறான்.. பாத்துக்க.." என்றாள் வெண்மதி..
இந்திரா காந்தி மகளிர் கல்லூரி வாயிலில் ஊர்ந்து கொண்டிருந்த வருணின் கார் தேம்பாவணியை கண்டதும் விசிலடிக்காத குறையாக அருகில் வந்து நின்றது..
காரிலிருந்து இறங்கினான் வருண்..
"ஹாய் தேம்ஸ்..!" அவன் புன்னகைக்க.. மறந்தும் கூட சிரிக்க மாட்டேன் என்று ரீதியில் நின்றிருந்தாள் அவள்..!
"மஞ்சள் நிற குர்த்தி.. சிகப்பு நிறா லெக்கின்ஸ்.. எந்த சிகையலங்காரமும் இல்லாமல் விரித்து விட்டிருந்த சில்க்கி கூந்தல் நல்ல பிள்ளையாய் அவளுக்கு கட்டுப்பட்டிருந்தது.. முகத்தில் அதீத குழந்தை தனம்.. கொஞ்சம் கோபம் கண்களில் குறும்பு.. இளமை சொட்டும் இதழ்கள்..! என சீரியஸ் மோட் ஜெனிலியா போல் இருந்தாள் தேம்பாவணி..!
"இங்கதான் நீ படிக்கறியா..!" கல்லூரி கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தவன் பாக்கெட்டில் கை நுழைத்துக் கொண்டு அவள் மீது பார்வையை பதித்தான்..
"சரி.. எதுக்காக வர சொன்ன..! அதுவும் காலேஜ்க்கு போற டைம்ல..! அப்படி என்ன அவசரம்.. கையில காயம் எப்படி இருக்கு..?"
"ஒரே நேரத்தில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது..!" என்றதும் பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்..
"சரி ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியா பதில் சொல்லு..!"
"நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.."
"ஓகே..?" என்று தலையசைத்தான்..
"ஆனா நான் கூப்பிட்டு வரக்கூடாது..!"
அவனுக்கு புரியவில்லை.. என்ன சொல்கிறாள் என்பது போல புருவங்களை உயர்த்தினான்..
"என் பப்லு நான் வேணுங்கும் போதெல்லாம் என் பக்கத்துல இருப்பான்.."
"பட் உனக்கு உதவி தேவைப்படும்போது நான் கண்டிப்பா உன் கூட இருப்பேன்.." என்றான் வருண்..
"எப்ப என்கூட இருந்தீங்க..?"
"ஏன் நேத்து ராத்திரி கூட நீ தூங்கற வரைக்கும் உன் கூடதானே நான் இருந்தேன்.."
"எங்கேயோ உக்காந்து ஃபோன்ல என்னை பாக்கறது என் கூட இருக்கிறதா அர்த்தமாகாது..! என் கூடவே இருக்கறதுன்னா என் பக்கத்திலேயே இருக்கணும்.." அவள் சொன்னதில் இந்தப் பெண் புரிந்துதான் பேசுகிறாளா என்ற ரீதியில் புருவங்களை நெறித்தான் வருண்..
"ஆனா நான் எப்படி 24 மணி நேரமும் உன் பக்கத்துலயே இருக்க முடியும்.. அது சாத்தியம் இல்லைன்னு உனக்கும் தெரியும்.."
இதுக்குதான் சொன்னேன்.. ஒரு மனுஷன் எனக்கு பிரண்டா இருக்க முடியாதுன்னு..!"
"வேணும்னா மார்ஸ்ல இருந்து ஏலியன் எதையாச்சும் கூட்டிட்டு வரவா.." இதழோரம் சிரிப்புடன் கேட்டான்..
"என்ன கிண்டலா.. என் தேவைகள் என்னன்னு உங்களுக்கு தெரியாது.. என்னை பற்றி முழுசா தெரிஞ்சா நீங்க தெறிச்சு ஓடிடுவீங்க..!"
"ஓட மாட்டேன்.. உன் தேவைகள் என்ன.. சொல்லு தெரிஞ்சுக்கறேன்.."
"ஐயோ சாமி வேண்டவே வேண்டாம்.. நீங்க என்னை பத்தி தெரிஞ்சுக்கிட்டதும் போதும் நான் அனுபவிச்சதும் போதும் இனி உங்களை நம்ப தயாரா இல்லை.." கையெடுத்து கும்பிட்டாள் தேம்பாவணி..
"வெயிட் வெயிட் அனுபவிச்சது மீன்ஸ் என்ன சொல்ல வர்ற..?" அவன் தேம்பா முகத்தை பார்வையால் ஊடுருவ அவளோ
தடுமாறினாள்..
"ஐ மீன் அனுபவிச்சதுன்னா அசிங்கப்பட்டதுன்னு சொல்ல வந்தேன்.. உங்களால நான் சத்யா கிட்ட அசிங்கப்பட்டதுதான் மிச்சம் அதைத்தான் அப்படி சொன்னேன்..!"
சந்தேகமாய் பார்த்தான் அவளை..
"சரி இப்ப என்ன பண்ணலாங்கற..! நான் வேணும்னா பெட்டி படுக்கையை கட்டிக்கிட்டு உன் வீட்டோட டாக்டரா வந்துரட்டுமா.."
"ஃப்ரண்டா இருப்பேன்னு சொன்னீங்க.. ஆனா டாக்டராத்தான் நடந்துக்கறீங்க..!"
"நான் எப்பவுமே உன் ஃபிரண்டு தான் தேம்பாவணி. அதனாலதான் நீ கூப்பிட்டதும் இங்க வந்து நிக்கறேன்..!"
"காலையில ஒருமுறை சாயந்திரம் ஒரு முறை என்னை வந்து மீட் பண்ணி ஒரு ஹலோ சொல்லுங்க எனக்கு அது போதும்..!"
"ஓகே இனிமே மீட் பண்ணலாம்.. ஆனா ஒரு கண்டிஷன் எந்த விஷயமா இருந்தாலும் நீ வெளிப்படையா என்கிட்ட சொல்லணும்.. ஏதாவது பிரச்சனைனா தயங்காம என்கிட்ட உதவி கேக்கணும்.."
"ம்ம்.. ட்ரை பண்றேன்..!"
"ஓகே வேற ஏதாவது பேசணுமா..?"
"வேற எதுவும் இல்ல ஃபிரண்டா இருப்பேன்னு சொன்னீங்களே அதை ஞாபகப்படுத்தத்தான் கூப்பிட்டேன்..!"
"நான் உன்னை ரீச் பண்ணிக்கிட்டேதான் இருக்கேன்.. நேத்து கூட நாலு வாட்டி கூப்பிட்டேன்.. நீதான் போன் எடுக்கல.."
"நினைச்ச நேரத்துக்கு போன் பண்றது நினைச்ச இடத்துக்கு வர்றது.. இதெல்லாம் என்னால முடியாது..! ஆனா எனக்கு தோணும்போது நீங்க என் பக்கத்துல இருக்கணும்.. அது உங்களால முடியாது..!"
அவன் கண்கள் தேம்பாவின் முகத்தை துளைத்தது..
"புதிரா இருக்கியே தேம்ஸ்..!" என்று நீண்ட மூச்செடுத்தவன் "சரி.. நான் கிளம்பறேன் ஏதாவதுன்னா கூப்பிடு.." என்று விட்டு காரை நோக்கி செல்ல..
"டாக்டர்..!" என அழைத்தாள் அவள்..
காரை திறக்க போனவன் நின்று அவளை பார்த்தான்..
"சாப்பிட்டியானு கேக்கவே இல்லையே..?"
"என்ன..?"
"பப்லு உங்கள மாதிரி இல்ல.. சாப்பிட்டியான்னு கேட்பான் சாப்பிடலைன்னா திட்டுவான்..! போய் சாப்பிட்டு வா.." ன்னு மண்டையில கொட்டுவான்.. நீங்க அவன மாதிரி இல்ல..!"
நெற்றியை தேய்த்துக் கொண்டான் வருண்..
"ஐ அம் சாரி. நீ சாப்பிட்டுருப்பேன்னு நினைச்சேன்.."
"நான் சாப்பிட்டுட்டுதான் வந்தேன்.. ஆனா நீங்க என்னை கேட்கணும் இல்லையா..! அதனாலதான் சொன்னேன்.. என் எதிர்பார்ப்புகளுக்கு ஏத்த மாதிரி உங்களால நடந்துக்க முடியாது.. இப்ப கூட உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க உங்க வழியில போகலாம்..!" என்றாள் முகத்தை சுருக்கி..
இதழ் குவித்து ஊதினான் வருண்.. காலை வெயில் அவன் முகத்தில் வேர்வை முத்துகளை உருள செய்திருந்தது..
"இப்ப என்ன..? சாப்பிட்டியானு கேக்கணும் அவ்வளவுதானே.."
"நான் சொல்லி நீங்க கேட்கக்கூடாது உங்களுக்கா தோணனும்..!"
வருணிற்கு தலைசுற்றியது..
மீண்டும் அவளிடம் வந்தான்..
"உண்மையிலேயே உன்னை சமாளிக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்.. பப்லு ரொம்ப பாவம்..!"
"பாவப்பட்டு யாரும் எனக்கு ஃபிரண்டா இருக்க வேண்டாம்.."
"அடடா இந்த சின்ன வயசுல உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது.. சரி நானாவே கேட்கறேன் சாப்டியா..? சாப்பிடலன்னா சொல்லு.. எங்கேயாவது வெளியே போய் சாப்பிடலாம்.."
"இல்ல நான் சாப்பிட்டுட்டேன்..!"
"கையில காயமே எப்படி இருக்கு? எங்க காட்டு..!"
"இப்ப கொஞ்சம் பரவாயில்லை.. வலி குறைஞ்சிருக்கு..!" என உள்ளங்கையை திருப்பிகாட்ட.. அவன் கன்னம் சில்லிட்ட உணர்வு..
"இதை பார்த்தால் அடிபட்ட மாதிரி தெரியல.. யாரோ அடிச்ச மாதிரி தெரியுது..!"
"யா..யார் என்னை அடிக்க போறாங்க.. சரி நேரமாச்சு நீங்க கிளம்புங்க..!"
"இந்த விஷயம் கேட்டா மட்டும் நீ ரொம்பவே ஜெர்க்காகறியே..! சரி இருக்கட்டும்..! நான் கிளம்பறேன்.."
"ஈவினிங் வருவீங்களா..!" தேம்பாவணி கத்தினாள்..
திரும்பிப் பார்த்தவன் "ட்ரை பண்றேன்.." என்றான்..
ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்க்க அவளோ அமைதியாக வருணை பார்த்தபடி நின்றிருந்தாள்..!
"ஓகே ஈவினிங் பார்க்கலாம்" அவனாகவே போய் சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டான்..!
சிரிக்காமல் கையை மட்டும் அசைத்து அவனை அனுப்பி வைத்தாள் தேம்பாவணி..!
வகுப்புகள் நடந்து கொண்டிருக்க கன்னத்தில் கை வைத்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள் தேம்பாவணி..
இரண்டாவது பெஞ்சில் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.. பக்கத்தில் ஆள் இருந்தாலும் அவள் ஒரு அகதி தான்..
அருகில் அமர்ந்திருக்கும் பெண் தேவைக்கு பேசுவாள்.. மற்றபடி பெரிதாக தோழியாக கலகலப்பதெல்லாம் கிடையாது.. காரணம் கேஷவ்தான்..! ஆரம்ப காலத்தில் கல்லூரிக்கு நேரடியாக வந்து இரண்டு மாணவிகளை வேண்டாத பழிகளை சுமத்தி சத்தம் போட்டு விட்டு செல்ல.. அந்த விஷயம் தீப்பொறியாய் கல்லூரி முழுக்க பரவி தேம்பாவணி ஒரு ப்ராப்ளம் கிரியேட்டர் என்ற பட்ட பெயரோடு மாணவிகள் அவளை பார்த்தாலே ஒதுங்கிச் செல்லும் அளவில் இருக்கிறது அவள் நிலை..
மதிய உணவுக்காக மாணவிகள் பிரிந்து சென்றனர்.. சிலர் மரத்தின் நிழலில் அமர்ந்து மதிய உணவு உண்டு கொண்டிருந்தனர்.. சிலர் வகுப்பறையிலேயே தன் தோழிகளுடன் அமர்ந்து அரட்டை அடித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..
தேம்பாவணி உணவு கொண்டு வரவில்லை..! நீ சாப்பிடலையா.. என்று யாரும் அவளை கேட்கவும் இல்லை.. சத்யா வீட்டிலிருந்தால் அவனுக்கு பயந்தாவது வேலைக்கார பெண் டப்பாவில் ஏதேனும் கிளறிய சாதத்தை அடைத்து டைனிங் டேபிளில் வைத்து விடுவாள்..!
சத்யாவிற்கு தேம்பாவணி சாப்பிட்டாலும் சாப்பிடாமல் செத்துப் போனாலும் எந்த கவலையும் இல்லை.. ஆனால் வெளி உலகத்திற்கு அவளை நன்றாக கவனித்துக் கொள்வதாக காட்டிக் கொள்ள வேண்டுமே அதற்காக மட்டும் இந்த விஷயங்களில் கொஞ்சம் சிரத்தை எடுப்பான்..!
அவன் விடியற்காலையிலேயே வெளியே சென்று விட்டதால் சமையல் செய்யும் பெண் மெத்தனமாக காலை உணவை மட்டும் செய்து வைத்துவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார்..
தேம்பாவணி மதிய உணவு வேண்டும் என்று கேட்டிருந்தால் அந்தப் பணிப் பெண் முகத்தை சுழித்துக் கொண்டாவது சமைத்துக் கொடுத்திருப்பாள்..! வாய்க்கு வந்ததை முணுமுணுத்துக் கொண்டு அந்த பெண் செய்து தரும் உணவு பொட்டலத்தை எடுத்துச் செல்ல தேம்பாவணிக்குத்தான் விருப்பமில்லை..!
இப்போது பசிக்கிறது.. கையில் கொஞ்சம் பணம் இருந்தது.. போதாக்குறைக்கு அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள வங்கி அட்டையும் இருந்தது..! பத்து ரூபாய்க்கு கூட கூகுள் பே செய்யுமளவிற்கு காலம் முன்னேறிவிட்ட நிலையில் தேம்பாவணி ஒரு ரூபாய் செலவு செய்தாலும் ஓராயிரம் கணக்கு சொல்ல வேண்டும்.. அத்தனையும் தண்ட செலவு என்ற ரீதியில் பேசுவான் சத்யா.. கேஷவ் கேட்கவே வேண்டாம்.. இந்த தலைவலிக்கு பயந்து அவள் தன் வெகுவாக செலவுகளை குறைத்துக் கொண்டிருந்தாள்..
மதிய நேரத்தில் டிரைவர் மர நிழலில் காரை நிறுத்தி உறங்கியிருப்பார்.. தன்னை தேட மாட்டார் என்ற தைரியத்தில் கேட்டை தாண்டி வெளியே வந்து ஒரு நல்ல ஹோட்டலாக அதே நேரத்தில் சாப்பாடு குறைந்த விலைக்கு கிடைக்கும் ஹோட்டலாக பார்த்து உள்ளே நுழைந்தாள் தேம்பாவணி..
வெளிப்புறம் பார்க்க எளிமையாகத்தான் இருந்தது அந்த உணவகம்.. ஆனால் உள்ளே நுழைந்த கணம் பரந்த புல்வெளியில் குடில் குடிலாக அமைக்கப்பட்டு உணவு மேஜைகள் போடப்பட்டிருக்க.. "ஐயோ ஆம்பியென்ட் செமையா இருக்குது.. தப்பா இடத்துக்கு வந்துட்டோம் போலிருக்கே.. ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலிருக்கு.. அப்படியே திரும்பி போயிடலாமா..! ச்சே.. திரும்பிப் போனா அசிங்கமா போகும்.. விலை குறைச்சலா ஏதாவது இல்லாமலா போயிடும்.. மெனு கார்டை பார்த்து டிசைட் பண்ணிக்கலாம்" யோசனையோடு ஒரு இருக்கையில் அமர்ந்து.. மெனு கார்டில் தேடி பட்டியலில் கடைசியாக இருந்த தயிர் சாதத்தின் விலையை சரிபார்த்துவிட்டு ஒரு பிளேட் கொண்டுவரச் சொன்னாள்..
சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டு சுதந்திர காற்றை சுவாசித்தபடி மெல்லிசையாய் கேட்டுக் கொண்டிருந்த பாடல் வரிகளை இரசித்து முணுமுணுத்தாள் தேம்பாவணி..
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா…
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீதானடா…
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இதுதானடா…
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீதானடா…!
பாடி கொண்டிருக்கும்போதே வருண் ஞாபகம் வர.. உள்ளூர சிரிப்பு..
"யாரு..? அந்த டாக்டர் வலியை தீர்க்க போறாராக்கும்.. சான்சே இல்ல.." தலையாட்டி சிரித்துக்கொண்டவள்.. "ஆனாலும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் பாப்போம்.." என்றும் சொல்லிக் கொண்டு தலையை முழுவதுமாக திருப்பி வெளிப்பக்கம் பார்க்க.. அங்கே ஒரு பத்து வயது சிறுவன் ஹோட்டலுக்குள் வர முயன்று கொண்டிருந்தான்.. வாசலின் சிப்பந்தி அவனை வரவிடாமல் விரட்டிக் கொண்டிருக்க அவரை முறைத்துவிட்டு நடைபாதையில் சென்று அமர்ந்து கொண்டான்..
தயிர் சாதம் தட்டில் கொண்டு வந்து வைக்கப்பட.. "இதை பார்சல் பண்ணிடுங்க.." என்றாள் தேம்பாவணி..
அந்த வெயிட்டர் அவளை யோசனையாக பார்த்துக் கொண்டே தட்டை எடுத்துச் சென்று உணவை பார்சல் செய்து கொண்டு வந்தார்..
கையில் உணவோடு அந்த ஓட்டலின் வாசல் வரை சென்றவள்.. உதட்டை குவித்து விசிலடிக்க.. தற்செயலாக திரும்பி பார்த்தான் அந்த சிறுவன்..
"இங்க வா..!" என்று கைகாட்டி அழைக்க அவர் திட்டுவார் என்று சிப்பந்தியை காண்பித்தான் அவன்..
"திட்ட மாட்டாரு நான் பாத்துக்கறேன் வா" சைகையில் சொன்னதும்.. தயங்கி பயந்த பார்வையுடன் வாசலில் வந்து நிற்க.. அவளும் வெளியே வந்து ஒரு படியிறங்கி உணவு பார்சலை அந்த சிறுவனிடம் தந்தாள்.. அவனது நன்றி நிறைந்த கண்களும் சிரித்த முகமும் தேம்பாவணிக்குள் அத்தனை சந்தோஷத்தை தந்தது..
சின்னவனிடம் வீரத்தை காட்டிய சிப்பந்தியால் தேம்பாவணியை எதுவும் சொல்ல முடியவில்லை..! அவள் நாகரிக உடையும் உயர்தட்டு மக்களுக்கான தோற்றமும் அவரை மரியாதையோடு நிற்க வைத்திருந்தது..
உணவை கொடுத்தாயிற்று.. மீண்டும் உள்ளே வந்தவளின் கையில் ஒரு பைசா கிடையாது..
"அடியே தேம்பாவணி.. தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்ன்னு சொல்லுவாங்களே.. நீயே பிச்சை எடுக்கற நிலைமையில இருக்க..! இந்த இலட்சணத்துல பெரிய இவளாட்டம் சாப்பாட்டை தூக்கி அந்த பையன்கிட்ட உன்னை யாருடி குடுக்க சொன்னது.. இப்ப என்ன பண்ண போற.. ஐயோ வயிறு வேற கப கபன்னு கத்துதே..! தத்தி மாதிரி நிக்காத.. ஏதாவது யோசி.." நகத்தை கடித்தபடி யோசித்திருந்தவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது..
பிள்ளைகளும் பெரியவர்களுமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பத்தில் காலியான இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள் தேம்பாவணி..
"ஹலோ அங்கிள்..!" என்றதும் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார் ராஜேந்திரன்..
"யாருமா நீ..! உன்னை யாருன்னு தெரியலையே" கண்ணாடியை இறக்கி தேம்பாவணியை உற்றுப் பார்த்தார்..
"எனக்கும் உங்களை யாருன்னு தெரியல.. ஆனா பாக்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க அங்கிள்.. அதான் சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்..!" என்றதும் உண்ணுவதை நிறுத்தி சாரதா தேம்பாவணியை முறைத்தார்..
அவர் பார்வை மாறியதில்.. "ஐயோ ஆண்ட்டி நீங்களும் செம க்யூட்டா இருக்கீங்க..! உங்க ரெண்டு பேரையும் பார்த்தா இராமனும் இலட்சுமணனும் மாதிரி..
இராமன்.. இலட்சுமண் மாதிரியா..?
இ.. இல்ல.. இராமனும் ஹனுமானும் மாதிரி..!
"ஏய் சாரதா.. இந்த பொண்ணு உன்னை குரங்குன்னு சொல்லுதடி.. உண்மையா இருந்தாலும் இப்படியா பட்டுன்னு போட்டு உடைக்கறது.." மனைவியின் காதுக்குள் அவர் இரகசியமாக சொன்னதை கேட்டுவிட்டாள் தேம்பா..
சாரதாவின் முறைப்பு தீவிரமாகியது..
"அய்யய்யோ இல்ல.. இல்ல.. இராம் சீதா..!"
"மேட் ஃபார் ஈச் அதர்..! அப்படி இருக்கீங்க. சொல்லனும்னு தோணுச்சு சொல்லிட்டேன்.." என்று விட்டு அசடு வழிந்தபடி அங்கேயே அமர்ந்திருக்க..
வருணை தவிர மதிய உணவுக்காக அந்த ஓட்டல் வந்திருந்த ஒட்டுமொத்த குடும்பமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது..
தொடரும்..

Last edited: