- Joined
- Jan 10, 2023
- Messages
- 68
- Thread Author
- #1
"ஒருவாய் சோறு திங்க எம்புட்டு வேலை பாக்க வேண்டியதா இருக்குது.." தேம்பாவணிக்கு முழி பிதுங்கியது..
"அதுக்கென்ன அங்கிள் பே பண்ணிட்டா போச்சு..!" அசட்டுச் சிரிப்போடு அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே பில் வந்தது..
நான்காயிரம் ரூபாய்க்கு தின்று தீர்த்திருந்தது வருணின் குடும்பம்..
"ஆத்தாடி நான் தனியா சாப்பிட்டிருந்தா கூட நானூறு ரூபாய்க்கு மேல சாப்பிட்டு இருக்க மாட்டேனே..! வலிய வந்து இந்த டைனோசர் குடும்பத்துக்கிட்ட சிக்கிட்டியே தேம்பா.." உள்ளுக்குள் வேர்த்து கொட்டியது..
"ஒரு நிமிஷம் நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்..!" என்று தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு தனியாக வந்தாள்.
திரையின் அன்லாக்கை ஸ்வைப் செய்தவுடன் அவளுக்கு அழைப்பு வந்தது..
"ஓ மை குட்னெஸ் இந்த டாக்டருக்கு 100 இயர்ஸ்.." புன்சிரிப்போடு அழைப்பை ஏற்று..
"ஹலோ" என்று அவசரமாக முடிப்பதற்குள்..
"சாப்டாச்சா..?" என்று தொடங்கியிருந்தான் அவன்..
வார்த்தைகளை நிறுத்தியவளுக்குள் ஒரு இதமான உணர்வு.. உதட்டில் மெல்லிய சிரிப்பு.. அடுத்தகணம் சுதாரித்துக் கொண்டு..
"மிஸ்டர் சைக்.. நான் சொன்னதுக்காக நீங்க ஒன்னும் போன் பண்ணி கேட்க வேண்டாம் உங்களுக்கா என் மேல அக்கறை இருக்கணும்..!" என்றாள் பொய் கோபத்துடன்..
"யார் வற்புறுத்தலுக்காகவும் நான் எதையும் செய்யறது இல்ல..! எனக்கா ஒரு விஷயம் தோணினாத்தான் செய்வேன்.. இப்போ உனக்கு போன் பண்ணி பேசற வரைக்கும் எல்லாம் என் டெசிஷன் .. புரிஞ்சுதா..!" அவன் குரலில் இருந்த அழுத்தம் தேம்பாவுக்கு பிடித்திருந்தது..
"சரி இப்ப கேளுங்க..!"
"என்ன கேட்கணும்..?"
"சாப்பிட்டியான்னு..!"
"ஓ..! சாப்டாச்சா..?"
"சாப்பிட்டாச்சு.. ஆனா ஒரு சின்ன பிரச்சனை.." அவள் குரல் உள்ளிறங்கியது..!
"என்னமா ஆச்சு..?"
"ஹோட்டலுக்கு வந்தேன் சாப்பிட்டாச்சு ஆனா பர்சை வீட்டிலேயே மிஸ் பண்ணிட்டேன்.."
"வெளிய வரும்போது எல்லாம் இருக்கான்னு செக் பண்ணி பார்த்துக்கணும்.. சரி பரவால்ல போன் இருக்குல்ல.. அக்கவுண்ட்ல பைசா இல்லைனா சொல்லு ஜி பே பண்ணி விடறேன்..!"
"அ.. அது இந்த ஹோட்டல்ல ஜி பே.. போன் பே இதெல்லாம் கிடையாதாம்..! பில் பணமா கட்ட சொல்றாங்க.. நீங்க எனக்காக பணம் எடுத்துட்டு வாங்க.."
"வேலை இருக்குதும்மா.. பேஷன்ட்ஸ் வெய்ட் பண்றாங்க..!"
"பாவம் அவங்களையாவது விட்டுடுங்க.."
"என்னது..?"
"அப்ப நான் இந்த ஹோட்டல்ல அசிங்கப்பட்டா பரவாயில்லையா.. ஃப்ரெண்டுன்னு சொன்னீங்க.. ஆனா ஆபத்து நேரத்தில் உதவ மாட்டேங்கறீங்களே..?"
"உன் பப்லு இதையெல்லாம் கூட செய்வாரா என்ன..?" அவன் குரலில் நக்கல் தெறித்தது..
"பப்லு செய்ய மாட்டார்.. ஆனா ஐடியா ஏதாவது கொடுப்பார் இப்பதான் அவர் வர்றதில்லையே.. அப்ப நீங்கதான இதெல்லாம் செய்யணும்.. உங்களால முடியலன்னா சொல்லுங்க நான் வேற ஏதாவது பாத்துக்கறேன்..
"சரி புறப்பட்டு வரேன் இரு..!"
அழைப்பை துண்டித்துவிட்டான்..
குழைந்து வளவளவென்று பேச்சை இழுத்தடிக்காமல் நறுக்கு தெறித்தாற் போல் நான்கு வார்த்தைகளோடு முடித்துக் கொள்வதிலேயே அவள் அபிமானத்தில் ஐம்பது சதவீதத்தை பெற்றிருந்தான் வருண்..
இருக்கையில் வந்து அமர்ந்தாள் தேம்பாவணி..!
"போகலாமா.." ராஜேந்திரன் கேட்க "பில் பே பண்ணணுமே..! நீ.. நீங்க கிளம்புங்க எனக்கு ஒரு போன் பேச வேண்டியிருக்கு.. நா..ன் பேசி முடிச்சுட்டு பில் கட்டிட்டு கிளம்பி போய்க்கறேன்.. பை.. பை.." என்று எல்லாரையும் பார்த்து சுற்றி கையசைக்க..
"பில் பே பண்ணியாச்சு..!" என்றார் ராஜேந்திரன்..
"ஆங்..! பில் கட்டியாச்சா.." சுற்றியிருந்தவர்களை மாறி மாறி பார்த்தாள் தேம்பாவணி.
"ஆமா..! உனக்கும் சேர்த்து நாங்களே பே பண்ணிட்டோம்.." சாரதா சொல்ல..
உள்ளுக்குள் போன உணவு இப்போதுதான் செரிமான மண்டலத்தை அடைவது போல் ஒரு நிம்மதி..!
"பே பண்ணிட்டீங்களா..!" பெருமூச்சு விட்டு சிரிப்புடன் கேட்க..
"ஆமாடா" என்றார் ராஜேந்திரன்..
சற்று நேரத்திற்கு முன்பு அவள் தனியாக பிரிந்து சென்றபோது..
அந்த வெயிட்டர் மீண்டும் அங்கு வந்தார்..
"அந்த பொண்ணு சாப்பிட்டுட்டாங்களா சார்..?"
"சாப்பிட்டாச்சு ஏன் என்ன ஆச்சு..?" என்றாள் வெண்மதி..
"ஏற்கனவே ஒருமுறை தயிர் சாதம் ஆர்டர் பண்ணிட்டு சாப்பிடாம பார்சல் பண்ண சொன்னாங்க.. கடைசில அதை கொண்டு போய் வெளியே ஒரு பிச்சைக்கார பையனுக்கு கொடுத்தாங்களாம். செக்யூரிட்டி சொன்னார்.. அந்த மாதிரி இதையும் பார்சல் பண்ண சொல்லிடுவாங்களோன்னு பயந்துட்டேன்..! ஓகே சார் பில் பே பண்றீங்களா கேஷா கார்டா..?" என்றுவிட்டு வெயிட்டர் காத்திருக்க.. ராஜேந்திரன் சாரதாவின் முகம் கனிந்தது..
"நல்ல பொண்ணுதான் போலிருக்கு.. ஆனா பேச்சு தான் ஓவர்.. ஆமா அந்த பொண்ண போய் பில் கட்ட சொல்லியிருக்கீங்களே அவ ஒருத்தி சாப்பிட்டதுக்கு நாம காசு கொடுக்கலாம் இத்தனை பேருக்கும் சேர்த்து அந்த பொண்ணு எப்படி காசு கொடுக்கும்..! வேண்டாங்க.. நாமளே பில் பே பண்ணிடுவோம்.."
"உனக்கு தோனினது எனக்கு தோணாதா..! என்னமோ உலகத்திலேயே அவ அப்பா மட்டும்தான் தன் பொண்ண நல்லா பாத்துக்கிற மாதிரி என்ன பேச்சு பேசுது அந்த பொடிசு.. அதான் சும்மா கலாட்டா பண்ணலாம்னு அப்படி சொன்னேன்.. சொன்னவுடனே அந்த பொண்ணு முகம் போன போக்கை பார்க்கணுமே..! மத்தபடி அந்த சின்ன பொண்ண பில் கட்ட வைக்கணும்னு எனக்கெந்த எண்ணம் இல்ல.." என்ற படியே தனது டெபிட் கார்டை எடுத்து பில்லோடு சேர்த்து வைத்து வெயிட்டரிடம் தந்தார் ராஜேந்திரன்..
இங்கு நடந்த கதை தேம்பாவணிக்கு தெரியாதே..!
"ஏன் அங்கிள் நீங்க பே பண்ணீங்க..! நான்தான் வரேன்னு சொன்னேன்ல அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்..!" பொய் கோபத்தை முகத்தில் காட்டி முறுக்கிக் கொள்ள..
"அதனால என்னடா..! இன்னொரு முறை பார்க்கும் போது நீ எங்க எல்லாருக்கும் ட்ரீட் வச்சிடு அவ்வளவு தானே..!" ராஜேந்திரன் சிரித்தார்..
"ஓஹோ.. வச்சிட்டா போச்சு..!"
"இனிமே உங்கள பார்த்தா தானே..? உங்க திசைக்கே ஒரு கும்பிடு.." மைன்ட் வாய்சோடு தேம்பாவணி இஇஇ.. என்று சிரித்து வைத்த நேரத்தில் மறுபடி போன்..
"ஹலோ நான் கிளம்பிட்டேன் இன்னும் ஒரு 10 மினிட்ஸ்ல வந்துடுவேன் அங்கேயே நில்லு.." வருண் குரல்..
"வேண்டாம் வேண்டாம் நீங்க வர வேண்டாம்..! ப்ராப்ளம் சால்வ்ட்..! நான் கிளம்பிட்டேன்..!"
"நெஜமாத்தான் சொல்றியா ஒன்னும் பிரச்சனை இல்லையே..!"
"ஒன்னும் பிரச்சனை இல்ல..! நான் பாத்துக்கறேன்..! நீங்க நிம்மதியா வேலைய பாருங்க.." அழைப்பைத் துண்டித்திருந்தாள்..
"யாரு அப்பாவா..?" ராஜேந்திரன் ஆர்வமாக கேட்க..
"இல்ல என்னோட ஹஸ்பண்ட்.." தேம்பாவணி பெருமையாக சொன்னதில் அத்தனை பேரின் முகத்திலும் அதிர்ச்சி..
"என்னம்மா பாக்க சின்ன பொண்ணு மாதிரி தெரியறே..! காலேஜ் தானே படிக்கற அதுக்குள்ள என்ன கல்யாணம்.. உனக்கொரு பதினேழு இல்லைன்னா பதினெட்டு வயசு இருக்குமா..?" சாரதா மறைக்காமல் வெளிப்படையாகவே கேட்டுவிட..
"எனக்கு பத்தொன்பது வயசாகுது..!" காலரை பெருமையாக நிமிர்த்திவிட்டுக் கொண்டாள் தேம்பாவணி..
"அப்படிப் பார்த்தாலும் சின்ன வயசுதானே.. படிக்கற வயசுல கல்யாணம்னா லவ் மேரேஜா..? ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என்றாள் வெண்மதி சந்தேக பார்வையுடன்..
"ம்ம்.. லவ் தான்.. ஆனா அரேஞ்ச்டு மேரேஜ்.. சின்ன வயசுலருந்து காதல்.. எனக்கு தான் வயசு கம்மி ஆனா என் ஹஸ்பண்டுக்கு வயசு கொஞ்சம் ஜாஸ்தி.. அதனாலதான் காலத்தை தாழ்த்த வேண்டாம்னு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க..!"
"என்னமோ சொல்ற ஆனா ஒன்னும் புரியல சரி நாங்க கிளம்புறோம்..!" என்று எல்லாருமாக எழுந்து கொண்டார்கள்..
இரண்டு குட்டிகளும் அவளிடம் கைக்குலுக்கி கொண்டு பை சொன்னது..
கவுண்டரைத் தாண்டி வெளியே வரும்போது.. அவளை கையும் களவுமாக பிடித்துக் கொண்டாள் திலோத்தமா..
"ஏய்..! என்னது இது.. வெக்கமா இல்ல..! படிச்ச பொண்ணுதான நீ.. இப்படி ஒரு கேவலமான பழக்கம் வேற இருக்கா உனக்கு..? என்றதும் குடும்பம் மொத்தமும் அவர்களை சூழ்ந்து கொண்டது..
"என்னாச்சு திலோத்தமா ஏன் அந்த பொண்ண கத்திக்கிட்டு இருக்க.. அவள போகவிடு" என்றார் சாரதா..
"இவளை நிக்க வச்சு பேசிகிட்டு இருக்கேன்னா ஏதாவது காரணம் இருக்கும்னு யோசிக்க மாட்டீங்களா..? எதையோ திருடியிருக்கா இவ.. என்னன்னு கேளுங்க!"
"இல்ல இல்ல நான் எதையும் எடுக்கல" தேம்பாவணி அவசரமாக மறுத்தாள்..
"இல்ல சத்தியமா இவ யாருக்கும் தெரியாம ஏதோ ஒன்னை எடுத்ததை நான் பார்த்தேன்.. இவளை கொண்டு போய் ஹோட்டல் முதலாளி கிட்ட ஒப்படைப்போம்.. அவர் போலீஸ்ல பிடிச்சு கொடுக்கட்டும்.."
"திலோத்தமா என்ன இதெல்லாம்.. அந்த பொண்ண பாத்தா திருடி மாதிரியா தெரியுது..!" வெண்மதி தேம்பாவணிக்காக பரிந்து கொண்டு வந்தாள்..
"பின்ன திருட வந்தவ முகத்தில் திருடின்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிட்டா வருவா.. அனாவசியமா நம்ம கிட்ட வந்து பேச்சு கொடுக்கும்போதே சந்தேகப்பட்டேன்..! சம்திங் இஸ் ராங்.. எல்லாரும் அவங்கவங்க பொருட்களை செக் பண்ணிக்கோங்க.. போன் பர்ஸ் எல்லாம் இருக்கான்னு பாருங்க.. நம்மகிட்டருந்து எதையாவது உருவியிருக்க போறா.. அத்தை இந்த பொண்ணோட பேக்கை வாங்கி செக் பண்ணுங்க..!"
திலோத்தமா செய்த கலாட்டாவில் சாரதாவும் வெண்மதியும் தேம்பாவணியை பரிதாபமாக பார்த்தனர்.. ராஜேந்திரனுக்கும் கூட அவள் நடத்தையில் கோபம் வந்தது..
"திலோத்தமா கொஞ்சம் அமைதியா இரு.. ஏன் இப்படி கத்துற.. அந்த பொண்ணு பயப்படுது பாரு.." என்றார் சாரதா..
"இன்னுமா இவள நம்புறீங்க அவ பயப்படுற மாதிரி நடிக்கறா.. கண்டிப்பா ஓட்டல் முதலாளி ஏமாந்த நேரத்துல கல்லாவிலிருந்து பணத்தை சுருட்டி வச்சிருப்பா..! ஏய் எங்க உன் கைய காட்டு..!"
வலுக்கட்டாயமாக அவள் கையை பிடித்திழுத்து உள்ளங்கையை விரிக்க செய்தாள்.. நாணயம் அளவிலான ஒரு படிக்கக்கல் பிள்ளையார்..!
கையிலிருந்ததை கண்டதில் அனைவரின் வழிகளும் ஆச்சரியமாக விரிந்தன..
"நீ இதையா எடுத்த..!" திலோத்தமாவிற்கும் கூட இதை நம்ப முடியவில்லை..
"ஆ.. ஆமா..!" தேம்பாவணியின் கண்கள் கலங்கி போயிருந்தன.. அழுகையை அடக்க சிரமப்பட்டாள்..
"இதை போய் எதுக்குமா எடுத்து வச்சிருக்க..!" வெண்மதி அனுசரணையான வார்த்தைகளுடன் பக்கத்தில் வந்தாள்..
"எ.. எனக்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்கும் அதனால அவரைப் எங்க பார்த்தாலும் யாருக்கும் தெரியாமல் சுட்டுடுவேன்..! அதுலயும் சில கட்டுப்பாடுகள் வச்சிருக்கேன் இந்த மாதிரி பிளாஸ்டிக்.. மண்பொம்மை.. ரப்பர் பிள்ளையார் இந்த மாதிரி இருந்தாத்தான் ஆதரவு கொடுப்பேன்.. மத்தபடி காஸ்ட்லியான கணபதியை நான் தொட்டுக் கூட பாக்கறது இல்ல.."
"ஆஹா.. செய்யறது திருட்டு.. இதுல எத்திக்ஸ் ஒன்னுதான் கேடு.." திலோத்தமா எள்ளலாக சிரித்தாள்..
"திலோ என்ன இது..! ஏன் அந்த புள்ளைய அவமானப் படுத்தறதிலேயே குறியா இருக்க.. சின்ன பிள்ளையார் தானே.. போனா போகுது பக்தியிலதான் எடுத்திருப்பா.. இதுல என்ன இருக்கு விடு.."
"என்ன அத்தை நீங்க கூட திருடறத நியாயப்படுத்தறீங்க..!"
"ப்ச்.. அப்படி சொல்ல வரலம்மா..! நீ பெரிசு படுத்தற அளவு அவ ஒன்னும் நகை பணத்தை எடுக்கலயே..! ஆசைப்பட்டு இந்த பிள்ளையார் சிலையை எடுத்ததுல என்ன ஆகிட போகுது. ஏன் எல்லாத்தையும் பெருசு படுத்துற விடு..!"
"சின்ன பொருளையே எடுக்கறப்ப பெருசா எதையும் திருடி வச்சிருக்க மாட்டாளா என்ன? முதல்ல அவ பேக்கை செக் பண்ணுங்க..! சின்னதோ பெரிசோ.. திருட்டுக்கு உடைந்தையா இருக்கக் கூடாது..!"
"போதும் திலோத்தமா.. எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு அந்த பொண்ண போக விடு..! நீ போம்மா..!" வெண்மதிக்கு பொறுமை எல்லை மீறியது..
"நீங்க சொல்றது உண்மைதான்.. சின்னதா இருந்தாலும் திருட்டு தப்புதான்.. ஆனா என்ன செய்யறது.. இது ஒரு மாதிரி அப்சப்ஷன்.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. நான் இந்த மாதிரி குட்டி குட்டி பிள்ளையார் சிலையை எடுத்து வச்சிக்கிறதுனால யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்ததில்லை.. அப்படித்தான் இதுவரை நினைச்சிருந்தேன்.. நான் வேணும்னா இதை கொண்டு போய் உள்ள வச்சுடறேன்.." என்று நகர்ந்தவளை சாரதா தடுத்து நிறுத்தினாள்..
"வேண்டாம் நீ உள்ள போய் இதை வைக்கும் போது.. ஏதோ நிஜமாவே நீ தப்பு செஞ்ச மாதிரி உன்னை என்கொயரி பண்ணுவாங்க.. இதெல்லாம் சின்ன விஷயம்.. மனச போட்டு அலட்டிக்காம நீ இங்கிருந்து கிளம்பு..!" சாரதா அவள் முதுகை வருடி கொடுத்தபடி சொல்ல.. சிரிக்க முயன்று தோற்றுப் போனவளாய் அங்கிருந்து செல்லப் போனவள் மறுபடியும் நின்று..
"எப்பவும் நான் யார் கூட இருந்தாலும் அவங்களுக்கு அழகான ஸ்வீட் மெமரிசை தரணும்னு தான் ஆசைப்படுவேன்.. (ஆனா எல்லாரும் எனக்கு வேதனையை மட்டும்தான் திருப்பி தர்றீங்க) இந்த வார்த்தையை மட்டும் உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டு..
"அப்படித்தான் சந்தோஷமா இருக்கலாம்னுதான் உங்க பக்கத்துல வந்து உட்கார்ந்தேன்.. மத்தபடி உங்ககிட்டருந்து எதையும் திருடனும்னு நான் நினைக்கல..!நான் அப்படிபட்டவளும் இல்லை.. கையில காசு இல்ல.. அதான்.. இ.. இப்படி.. நான் உங்க மனச காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கங்க" என்று விட்டு சாலையில் வேகமாக ஓடி.. சிக்னலில் வாகனங்களுக்கு இடையே நுழைந்து மறைந்து போயிருந்தாள் தேம்பாவணி..
திலோத்தமா தவிர மற்ற மூவருக்கும் நெஞ்சுக்குள் ஏதோ கனத்து போனது..
தொடரும்..

Last edited: