New member
- Joined
- Sep 10, 2024
- Messages
- 1
Ithu kathai already padikalaiya neengaஅய்யோ இன்னும் என்ன பண்ண காத்துருக்கானோ காட்டு பய 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
Ithu kathai already padikalaiya neengaஅய்யோ இன்னும் என்ன பண்ண காத்துருக்கானோ காட்டு பய 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱
சரியான காட்டுமிராண்டி பய 🙎🙎🙎மறுநாள் காலையில் "ஏய் கிழவி.. சாப்பாடு போடு" என்று சமையலறை தரையில் அமர்ந்தவனை கன்னத்தில் கை வைத்து வினோதமாக பார்த்தாள் வடிவாம்பாள்..
"ஏன் ராசா.. உன் பொண்டாட்டி இன்னும் எழுந்துக்கலையா..!!"
நிமிர்ந்து அவரை பார்த்தவன் "எனக்கு தெரியாது.. சாப்பாடு போட சொன்னேன்.." என்றான் அடிக்குரலில்..
"அந்தப் புள்ளைய என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியலையே.." அங்கிருந்து நகரவும் முடியாமல் முழு மனதோடு பரிமாறவும் முடியாமல் பரிதவித்தாள் பாட்டி..
"கவனத்தை எங்க வச்சுட்டு சாம்பார் ஊத்துற.. இங்க பாத்து பரிமாறு.. மூஞ்சில தூக்கி அடிச்சிருவேன்.." நிச்சயம் அடுத்த முறை தவறினால் தட்டை வீசி எறிவது உறுதி என்பதால் "நீ சாப்பிடு ராசா" என்று பயபக்தியோடும் சிரத்தையோடும் பரிமாறினாள் பாட்டி.. உண்டு முடித்து அவன் எழுந்து சென்ற அடுத்த கணம் அவசரமாக ஓடிச் சென்று குருவின் அறைக் கதவை தயக்கத்தோடு தட்ட நினைத்தவள்.. பிறகு ஏதோ ஒரு உந்துதலில் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அடுத்தகணம் "அடப்பாவி" நெஞ்சை பிடித்துக் கொண்டு அதிர்ச்சியோடு உறைந்து நின்றார் .. கட்டிலின் கால் ஒரு பக்கம் உடைந்து கட்டில் புயலில் சேதாரமானதை போல் ஏடாகூடமாக சாய்ந்து நிற்க கீழே வெற்றுத் தரையில் படுத்திருந்தாள் அன்பரசி..
விட்டு விலகிய பின்னும் மீண்டும் ஒருமுறை வேண்டும் என்று முரட்டு தேகம் அனத்தியதில் உறங்கியவளை எழுப்பி ஆவேசமாக அவளை ஆண்டு கொண்டிருக்கையில் வேகம் தாங்காமல் கட்டில் உடைந்து இருவருமாக கீழே உருண்டு அப்போதும் அவளை விட்டு நகராமல் தேவையை தீர்த்துக்கொண்டு விலகி அவளருகிலேயே தரையில் படுத்து விட்டான் குரு.. மறுநாள் அலைபேசியின் ஒலியில் கண்விழித்தவன்.. தன் சேக்காளியோடு பேசிக்கொண்டே குளியலறையில் புகுந்து கொண்டான்.. காதுக்கும் தோள்பட்டைக்கும் இடையே ஃபோனை தாங்கி உடை மாற்றியபடி பேச்சை நிறுத்தாமல் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.. அன்று முடிக்க வேண்டிய பஞ்சாயத்துகள் தீர்க்கப்பட வேண்டிய வெட்டு குத்துகள் அனைத்தும் அச்சு பிசகாமல் மூளையில் பதிந்திருக்க தனக்கு திருமணம் ஆகிவிட்டது மனைவி என்று ஒருத்தி தன்னோடு அறையில் இருக்கிறாள் என்பது மட்டும் மறந்து போயிருந்ததோ என்னவோ..!!
பாட்டி கேட்டபோது கூட தெரியாது என்று சொன்னதற்கான அர்த்தம் இதுதான்.. கட்டில் உடைந்த நிலையும்.. அன்பரசியின் துவண்ட கோலமும் கண்டு நடந்ததை ஓரளவு யுகித்திருந்தாள் வடிவு..
"கண்ணு.. அம்மா.. எழுந்திருமா.." பாட்டி அவளை உலுக்கி எழுப்பினாள்.. கண்விழித்த போதிலும் எழுந்து அமர இயலவில்லை அவளால்.. ஆடைகள் துறந்து வெற்றுத் தேகமாக தழுவிக் கொண்டு கலவி செய்த கதை இங்கு இல்லையாதலால் வடிவாம்பாளை எதிர்கொள்ள அன்பரசியிடம் எந்த சங்கடமும் இருக்கவில்லை..
"முடியல பாட்டி.. நீங்க போங்க நான் அப்புறமா எழுந்துகறேன்.." முகத்தை சுருக்கினாள்..
"என்னம்மா ஆச்சு.. நேத்து எல்லாம் நல்லபடியா தானே நடந்துச்சு.." வடிவு சூசகமாக வினவினாள்..
அவள் பதில் சொல்லாமல் முகத்தை சுழித்து.. வயிற்றை அழுத்தி பிடித்துக் கொண்டு படுத்திருந்த கோலத்தில் தெரிந்து போனது ஏதோ தவறு என..
"முதல் முறை அப்படித்தான் கண்ணு இருக்கும்.. போகப் போக சரியாகிடும்..அப்புறம் இந்த அவஸ்தை இருக்காது" பாட்டி தலையை தடவிக் கொடுத்து தன் அனுபவத்தில் சூட்சமம் சொல்லிக் கொடுத்தாள்..
அனைத்து பெண்களும் முதல் முறை என்ற ஒன்றைக் கடந்து தானே வருகிறார்கள்.. வலிகளைத் தாண்டித்தான் பேரின்ப சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பதுதான் நியதி.. ஆனபோதிலும் கரை கடந்த மோகத்தில் இருவருமே இழைந்து கிறங்கி.. தேகத்தின் ஒவ்வொரு பகுதியும் இன்புறும் போதினில்.. கணவனின் கட்டுப்பாட்டுக்குள் அவன் மென்மையும் வன்மையுமான அணைப்பிற்குள் உருகும்போதும்.. பெண்மை மனமுவந்து தன்னையே அர்ப்பணிக்கும் போதும்.. உச்சத்தை கடந்த நிலையில் பேரின்ப சுகங்களே மிஞ்சி இருக்குமே அன்றி வலிகள் அல்ல.. இங்கு எல்லாமே தலை கீழ்..
வெறும் தேகத்தின் பிணைப்பு என்றாலும்.. காமத்திற்கான சுவடுகளாவது அங்கே தேங்கி நிற்க வேண்டுமே.. இங்கே வெறும் இரையை வேட்டையாடும் காட்டு மிருகத்தின் வன்முறை மட்டுமே..!!
"இந்தப் பாலை மட்டும் கொஞ்சம் குடிச்சிட்டு தூங்கும்மா.." பாட்டி வற்புறுத்தி கொடுத்ததை குடித்துவிட்டு மீண்டும் கண்ணயர்ந்தாள் அன்பரசி..
மதியம் தாண்டிய பிறகும் அவள் எழுந்திருக்க இயலாமல் அவஸ்தை படுவதை கண்டு ஆச்சார்யாவிடம் வந்தாள் வடிவு..
சிறியவர்களுக்கு தனிமை கொடுப்பதற்காக கோவிலுக்கு சென்று வரும் வழியில் நண்பன் ஒருவனை பார்த்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்பியிருந்தவர் ஓய்ந்து போனவராக ஊஞ்சல் அமரவும்
"அய்யா.." தயங்கி வந்து நின்றாள் முதியவள்..
"என்னம்மா.. சொல்லுங்க..!!"
"கொஞ்சம் டாக்டரை வர சொல்லுங்களேன்.. அந்த பொண்ணு எழுந்திருக்க முடியாம கஷ்டப்படுது..!!" மென்று விழுங்கி சொல்லி முடித்திருந்தார்..
லேசாக ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலை இரு பாதங்களையும் தரையில் ஊன்றி நிறுத்தியவர் "ஏன் என்னாச்சு.." என்றார் கண்களில் கலவரத்தோடு..
"என்ன பிரச்சனை என்று தெரிந்த போதிலும் வாய் திறந்து நேரடியாக சொல்ல இயலாமல் சங்கடமாக பார்த்தாள் அவள்..
அவர் பார்வையில் என்ன புரிந்ததோ..!! "சரிம்மா வர சொல்றேன்.." என்றவர் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு அழைத்து அலைபேசியை காதில் வைத்துக் கொண்டே "எங்க இவன்..? பொண்டாட்டி கூட இருக்காம காலங்காத்தால எங்க போயிட்டான்.." என்றார் திருமணம் செய்து வைத்தது இதற்குத்தானா..? என்ற அர்த்ததில் மகனின் மீதான கோபத்துடன்..
"தெரியலங்க..!! காலையில எழுந்து வந்து டிபன் சாப்பிட்டுட்டு எங்கேயோ கிளம்பி போயிட்டாரு.." வடிவாம்பாள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டிருக்க வேண்டும்..
"நான் ஆச்சார்யா பேசுறேன்.." எதிர்பக்கம் மரியாதையான பதில்..
"கொஞ்சம் வீட்டுக்கு வாமா..!! என் மருமகளுக்கு உடம்பு சரியில்ல.." அவர் சொன்னதை தொடர்ந்து எதிர்முனையில் என்ன பதில் வந்ததோ அழைப்பு துண்டிக்கப்பட்டது..
அடுத்த அரை மணி நேரத்தில் காரில் வந்து இறங்கினார் அந்த பெண் மருத்துவர்..
கிட்டத்தட்ட ஐம்பது வயதில் மஞ்சள் நிற காட்டன் சேலையும்.. தோளில் தொங்கவிடப்பட்ட வெள்ளை கோட்டும்.. கழுத்தை வளைத்திருந்த ஸ்டெதஸ்கோப்பும் கண்களில் ரிம்லஸ் கண்ணாடியுமாக உள்ளே வந்தார் மருத்துவர் விமலா..
"என்னாச்சு உங்க மருமகளுக்கு.. நேத்து மண்டபத்தில் உங்க பைய இழுத்துட்டு போன தோரணையிலேயே தெரிஞ்சது.. ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு..!! ரவுடிசத்துல மட்டும் பையனை வழிநடத்துனா போதாது.. ஒரு பெண் கிட்ட எப்படி நடக்கணும்னு முதல்ல சொல்லி கொடுங்க..!!" என்று முணுமுணுவென பேசியவர்.. "எங்க இருக்கா உங்க மருமக..?" என்று கண்களால் அறையை தேடியபடி பார்வையை வடிவாம்பாளிடம் முடித்தார்..
"இதோ.. அந்த அறை.." வடிவாம்பாள் கையை காண்பித்தபடி குருவின் அறைக்கு டாக்டரை அழைத்துச் சென்றார்..
மகன் குருக்ஷேத்ராவை அலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வர சொல்லிவிட்டு இனம் புரியாத கலவரத்தோடு ஊஞ்சலிலேயே அமர்ந்திருந்தார் ஆச்சார்யா.. தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி.. மகனை அமர வைத்து வரி வரியாக போதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.. தான் சொன்னால் கேட்பான் என்பது உண்மையே.. ஆனால் சொல்லும் அனைத்தையும் கேட்டு நடப்பான் என்று சொல்லி விட முடியாது.. சில விஷயங்களில் விதிவிலக்குகள் உண்டு.. மகனை முறையாக வழிநடத்த அடுத்து என்ன செய்ய வேண்டும் அவருக்குள் தீவிர யோசனை..
உள்ளே வந்த டாக்டர் திடுக்கென அதிர்ந்து ஸ்தம்பித்து விட்டார்..
"என்ன இது..? கட்டில் ஏன் இப்படி உடைஞ்சு கிடக்கு.. கிழிஞ்சது.!! கட்டிலுக்கே இந்த நிலைமைன்னா.. பாவம் இந்த பொண்ணு.." பேச்சு சத்தத்தில் கண்விழித்து அன்பரசி எழுந்து அமர முயல..
"பரவாயில்லை படு.. உனக்கு ஏன்மா இந்த தலையெழுத்து.. இந்த ரவுடி பயலைக் கட்டிக்கிட்டு நீ ஏன் கஷ்டப்படுற.." மருத்துவர் கொஞ்சம் வளவளவென பேசக்கூடியவர்.. லஷ்மிக்கு பிரசவம் பார்த்தது அவர்தான்.. என்பதால் நீண்ட கால நட்புறவில் இந்த வீட்டில் உரிமை அதிகம் உண்டு அவருக்கு.. ஆனாலும் தான் பார்த்து வளர்ந்த பிள்ளை குருவின் மீது கொஞ்சம் பயம்தான்..
"வடிவம்மா நீங்க கதவை மூடிட்டு வெளியே போங்க.. நீ காலை மடக்கி இப்படி வை.." என்று அவள் முழங்காலை மடக்கி வைத்து சம்பந்தப்பட்ட இடத்தை முழுதாக பரிசோதித்தவர்..
"ப்ச்.. ஒன்னும் இல்ல.. ரொம்ப இண்டிமேட்டா இருந்ததுனால இப்படி ஆகி இருக்கலாம்.. அவன் கிட்ட சொல்லி இப்பவே தலையில் தட்டி வை..!! இல்லைன்னா ரொம்ப கஷ்டம்.." என்று குளியலறை சென்று வாஷ்பேஷனில் கையை கழுவிக்கொண்டு வெளியே வந்த வேளையில்.. சடாரென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் குரு..
அவன் உள்ளே வந்ததை அறியாமல்.. "ச்சே.. இவன் என்ன மனுசனா மிருகமா.. காணாதது கண்டது மாதிரி காட்டுமிராண்டித் தனமா பாய்ஞ்சிருக்கான்.." ஆற்றாமை தாங்காமல் புலம்பிக்கொண்டே வந்த மருத்துவர் அவரை முறைத்தபடி நின்றிருந்த குருவை கண்டு எச்சில் விழுங்கி நின்றார்.. அடக்கடவுளே இவன் எப்ப வந்தான்.. சில கணங்கள் தடுமாற்றத்திற்கு பின் சுதாரித்து தன் மருத்துவ பெட்டியை திறந்து ஒரு களிம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து.. "யூரின் போய்ட்டு வந்த பிறகு இதை அப்ளை பண்ணு..!! ரணம் ஆறும் வரைக்கும் கொஞ்சம் ஹைஜீனிக்கா இருக்கணும்.. இந்த காட்டு பயலை பக்கத்துல விடாதே..!!"
என்றவர் கதவருகே சென்றுவிட்டு அவனை பார்த்தார்..
"ஒரு வாரத்துக்கு பொண்டாட்டி பக்கத்துல போக கூடாது நீ.. இந்த வெட்டு குத்து அருவா ரத்தம் இதையெல்லாம் வாசலோட விட்டுட்டு பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா உள்ள வரணும் புரியுதா.." குடும்ப நண்பராக கொஞ்சம் அதட்டலாகவே அறிவுரை சொல்ல.. அவனோ முறைப்போடு மீசையை முறுக்கிவிட்டு முழங்கை வரை சட்டையை மடக்கியதை கண்டு
"எப்பா சாமி.. அடிச்சிடாதே.. என் புருஷனுக்கு நான் ஒரே பொண்டாட்டி.. நல்லா வளர்த்திருக்காரு உங்கப்பா.. புண்ணியவதி அவ நிம்மதியா போய் சேர்ந்துட்டா..!!" புலம்பிக்கொண்டே வெளியேறி இருந்தார் விமலா..
"என்னாச்சு விமலா..!!" ஆச்சார்யா எழுந்து நின்று பதட்டத்தோடு விசாரித்தார்.. "ஹான்.. கிளியை வளர்த்து இந்த வைச்சுக்கோன்னு புலிகிட்டே கொடுத்த கதைதான்.. அந்தப் பிள்ளையை பிராண்டி வச்சிருக்கான் உங்க புள்ள.. அவனுக்கு பொண்டாட்டி கிட்ட எப்படி அன்பா நடக்கிறதுன்னு அறிவுரை சொல்லுங்க.."
"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. அவன் விரும்புற ஒரு செயலிலிருந்து இன்னொரு செயலுக்கு ஆர்வம் இடமாறும்போது.. அந்த இன்ட்ரஸ்ட் அடிக்ஷனா மாற வாய்ப்பு இருக்கு.."
"புரியலையே விமலா..!!"
"அடிதடி வெட்டு குத்துன்னு இருக்கிறவன் ஒன்ஸ் பிசிகல் ரிலேஷன்ஷிப்ல அனுபவிக்கிற பிளஷரோட பிளேவரை டேஸ்ட் பண்ணிட்டானா அப்புறம் அடிதடியை விட்டுட்டு இதுக்கு அடிமையாக வாய்ப்புண்டு.. அது நல்லதாகவும் முடியலாம் கெட்டதாகவும் முடியலாம்.. அந்த பொண்ணு தான் புத்திசாலித்தனமா அவனை சமாளிக்கணும்.. சைக்கியாட்ரிஸ்ட் தாமோதரன் இதைப் பற்றி சொன்னாரா..?" விமலா கேட்ட கேள்விக்கு..
"நீண்ட பெருமூச்சுடன்.. அவர் என்னென்னவோ சொன்னாரு எனக்கு எதுவும் புரியல..!! கல்யாணம் பண்ணி வைங்கன்னு ஒரு வார்த்தை சொன்னாரு. அது மட்டும் தான் புரிஞ்சது" என்றார் கவலையோடு..
"பேசாம இவனுக்கு கரண்ட் ஷாக் கொடுத்து மூளையில் இருக்கிற மொத்த நரம்பையும் கருக்கி விட்டிருக்கலாம்.. இந்த கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் என்னை பொருத்தவரைக்கும் ரொம்ப வொர்ஸ்ட் ஐடியா.. 50-50 சான்ஸ்தான் வொர்க் அவுட் ஆகும்.. பாவம் அந்த பொண்ணு.."
"நீயே இப்படி நம்பிக்கை இல்லாம பேசினா எப்படி மா.." ஆச்சார்யா தளர்ந்து போனார்..
"இந்த வீட்ல இழப்பு ஒரு லக்ஷ்மியோட போகட்டும்.. இந்த பொண்ணாவது நல்லா வாழனும்னு ஆசைப்படுறேன்.. அந்த ஆதங்கத்தில்தான் இப்படி பேசிகிட்டு இருக்கேன்.. உங்க மருமகளை நல்லபடியா பாத்துக்கோங்க.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மலையின் நிழல் தன் மீது படிந்தது போல் குரு அங்கே வந்து நிற்க..
"இங்க பாரு குரு.. நீ என்னை அடிச்சாலும் பரவாயில்ல சொல்ல வேண்டியதை சொல்லிட்டு போயிடறேன்.. பெண்கள் பூ மாதிரி மென்மையானவங்க.. இரும்பு கம்பி வளைச்சு பிடிக்கிற மாதிரி உன் முரட்டுத்தனத்தை அவகிட்ட காட்டாதே..!! கொஞ்சம் மென்மையா நடந்துக்க முயற்சி பண்ணு.. அவகிட்ட அன்பா இரு..!! அப்பதான் சந்தோஷம்ன்னா என்னன்னு அவ உனக்கு காட்டுவா..!! நீ இப்படி பயமுறுத்தினா அவ மிரண்டு அம்மா வீட்டுக்கு ஓடிடுவா.. புரிஞ்சு நடந்துக்க..!!" அவர் படபடவென பேசியதை தொடர்ந்து சிவப்பேறிய விழிகளுடன் ஆவேசமாக ஒரு அடி முன்னால் நகர்ந்தான் அவன்..
"அய்யோ சாமி.." விமலா அலறி ஆச்சார்யாவின் பின்னால் ஒளிந்து கொள்ள.. கையிலிருந்த பெட்டியை அவரிடம் நீட்டினான் குரு..
"அம்மாடி.. தப்பிச்சேன்" பெட்டியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார் மருத்துவர்..
"தம்பி.. டாக்டர் சொன்னதை கேட்ட இல்ல.. அந்த பொண்ண கஷ்டப்படுத்தாதேப்பா.. அவ மனசை புரிஞ்சு நடந்துக்க.." என்றவரை புரியாத விழிகளுடன் வினோதமாக பார்த்தான் அவன்..
மண்ணைத் தோண்டி மரக்கன்று நட சொன்னார்.. அது புரிந்தது.. மனதை புரிந்து கொள் என்றால் என்ன அர்த்தம்.. புரியவில்லையே..!! கஷ்டப்படுத்தக் கூடாது என்றால் என்ன பொருள்..!! புத்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவன் எப்படி கேட்டு நடப்பான்..
குரு மீண்டும் அறைக்குள் நுழைய.. திக்கென நெஞ்சம் நடுங்கி தன்னந்தனிமையில் அவனிடம் அகப்பட்டுக் கொண்டதாக எண்ணி.. படுக்கவும் வழி இல்லாமல் எழவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள் அன்பரசி..
அதே வெறி கொண்ட கண்களுடன் அவளை நெருங்கியவன் மீண்டும் முழங்காலிட்டு அமர்ந்தான் முந்தைய இரவு போல்.. உள்ளுக்குள் உயிர் கருகியது அவளுக்கு..
தொடரும்..