- Joined
- Jan 10, 2023
- Messages
- 79
- Thread Author
- #1
காலையில் பூஜை அறையில் குடும்பம் மொத்தமும் நின்றிருந்தது வருணை தவிர..!
தீபாராதனை முடிந்து அனைவரும் தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்ட பிறகு.. வழக்கம்போல் குட்டி கணபதி காணாமல் போக.. இந்த அழகான திருட்டை ராஜேந்திரன் பார்த்துவிட்டார்..
"ஏம்மா தேம்பாவணி ..!" என்பதற்குள் அவசரமாக அவள் அந்தக் கூட்டத்திலிருந்து நழுவிக் கொள்ள.. பின் தொடர போனவரை வெண்மதிதான் கைப்பற்றி நிறுத்தினாள்..
அப்பாவிடம் கண்காட்டி.. "சத்தம் போடாதீர்கள்.." என்று சைகை செய்ய அவரும் அமைதியாக இருந்து கொண்டார்..
தனியாக வந்த பிறகு.. "என்னப்பா உங்களுக்கு பிரச்சனை..! எதுக்காக அவளை கூப்பிடுறீங்க..?" என்றாள் காரசாரமான குரலில்..
"அந்த பொண்ணு என்னமோ கொண்டு போச்சுடா.. அன்னைக்கே அந்த ஹோட்டல்ல திலோத்தமா ஒரு குட்டி பிள்ளையார் சிலைக்கு பெருசா பிரச்சனை பண்ணிட்டா.. இன்னைக்கு இதையும் பார்த்து வச்சு அந்த பிள்ளையை அசிங்கப்படுத்திடக் கூடாதே..!
"அதனால அத்தனை பேர் முன்னாடி அவளை கூப்பிட்டு உன் கையில குட்டி கணபதி சிலை இருக்குன்னு சொல்ல போனீங்களா..? நல்ல வேலை பார்க்க போனிங்க.. நான் மட்டும் தடுத்திருக்கலைனா அந்த பொண்ண எல்லார் முன்னாடியும் மாட்டி விட்டுருப்பீங்க.. உங்க மருமகளுக்கும் வாய்க்கு வந்தபடி பேச வசதியா போயிருக்கும்.. அவ ஏதோ சின்ன புள்ள விளையாட்டுத்தனமா எதையோ எடுத்து வைக்கறா.. இதையெல்லாம் பெருசு படுத்தாம போய் வேலையை பாருங்க டாடி..!"
"இல்லடா அது வந்து.." அவர் ஏதோ சொல்வதற்குள்
"நீ மட்டும் ரொம்ப யோக்கியமா..?" என்றபடி அங்கு வந்திருந்தான் வருண்..
இருவருமாக சேர்ந்து திருட்டு முழி முழிக்க.. "அக்கா நீ என்ன செய்றன்னு தெரிஞ்சுதான் செய்யறியா..?" என்றான் சற்று கடுமையான குரலில்..
"இப்ப என்ன பண்ணிட்டேன்.. ஏன் இப்படி கத்தற..!" வெண்மதியும் குரல் உயர்த்த அக்காவும் தம்பியும் என்னவோ பண்ணுங்க.. என்றபடியே அங்கிருந்து நழுவிக்கொண்டார் ராஜேந்திரன்..
"நானும் பாத்துட்டுதான் இருக்கேன்.. அவ தினமும் ஒரு பிள்ளையார் சிலையை எடுத்துக்கறதும் நீ மறுநாள் கொண்டு போய் புதுசா ஒன்னும் வைக்கறதும்.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல ஆமா..!"
"ஐயோ நீ பார்த்துட்டியா..! ஆனா நல்லா இருக்குல டா.. அவ எடுக்க.. நான் வைக்க.. நான் வைக்க அவ எடுக்க.. ஒரே ஜாலியா இருக்கு.." வெண்மதி தோள்களை குலுக்கி சிரிக்க..
"போதும் நிறுத்து..! நானே அவளோட இந்த பழக்கத்தை எப்படி நிறுத்துறதுன்னு படாதபாடு பட்டுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா புதுசு புதுசா புள்ளையார் சிலையை அங்கங்க வச்சு அவளோட ஆர்வத்துக்கு தீனி போடுற. இதெல்லாம் சரி இல்லக்கா..!" கோபமாக விழிகளை உருட்டினான் வருண்..
"சும்மா கத்தாதடா..! குழந்தைகளுக்கு வீட்டிலேயே வயிறு நிறைய சோறு ஊட்டி அழைச்சிட்டு போய்ட்டா.. விருந்தாளிங்க வீட்டுக்கு போகும்போது அங்க போய் அது வேணும் இது வேணும்னு அலையாது.. அந்த மாதிரி தான் இதுவும்.. எந்த பழக்கமா இருந்தாலும் உடனே நிறுத்த முயற்சி பண்ண கூடாது.. கொஞ்சம் கொஞ்சமா தான் அந்த பழக்கத்தை குறைத்து முழுசா நிப்பாட்டனும்..! அந்த மாதிரி தான் இதுவும்.."
வருண் கண்களை சுருக்கி அக்காவை பார்த்தான்..
"வீட்டுக்குள்ளேயே இந்த மாதிரி பொருளை பார்த்த உடனே எடுக்கணும்ங்கற அவளோட உந்துதலுக்கு நாம தீனி போட்டுட்டா வெளியில அதிகமா இந்த பழக்கம் தோணாது..! போகப் போக குறைஞ்சு போயிடும்.. அப்படின்னு நினைச்சுதான் நான் இதை செஞ்சேன்.. மத்தபடி அந்த பொண்ணுக்கு நான் எதுவும் கெட்டது நினைக்கல.."
"ஐயோ வெண்மதி.. நீ அவளுக்கு கெட்டதுன்னு நினைக்கறேன்னு சொல்லல.."
"நீ எதுவும் சொல்ல வேண்டாம்..! அப்படி ஒன்னும் இது மோசமான பழக்கம் இல்லை.. குட்டி குட்டி பிள்ளையார் பொம்மையை திருடி வச்சுக்கிறது ஒன்னும் பெரிய பாவம் இல்லை.. கொஞ்சம் முயற்சி பண்ணினா ஈஸியா மாத்திடலாம்.. உன் மாத்திரை மருந்து எதுவும் அவளுக்கு தேவையில்லை அவளை என் பொறுப்புல விடு.."
"என்ன ஆளாளுக்கு அவளை என் பொறுப்பில் விடு.. நான் பாத்துக்கறேன்னு இழுக்கறீங்க.. உங்களையெல்லாம் நம்பித்தான் தேம்பாவணிய நான் இங்க கூட்டிட்டு வந்தேனா..!" குரல் உயர்ந்த கோபத்தில் வெண்மதி விழித்தாள்..
அவனுக்குள் என்னவோ ஒரு கோபம்.. முந்தைய நாள் இரவிலிருந்து முளைத்த அந்த கோபம் தன்னை விட்டு இன்னொருவரை அபயம் தேடி போனதாலோ என்னவோ..!
"பின்ன யாரை நம்பி அவள கூட்டிட்டு வந்த..! அந்த பொண்ணோட அப்பா ஊர்ல இல்ல.. நாங்க எல்லாரும் அவளை நல்லா பாத்துக்குவோம்னு எங்கள நம்பி தானே அந்த பொண்ண கூட்டிட்டு வந்து இங்க தங்க வச்சிருக்க..?"
சட்டென வருண் சுதாரித்தான்..
"ஆ.. ஆமா..! அது உண்மைதான்.. பட் அஸ் எ டாக்டரா அவளோட ஒரு சில பிரச்சினைகளை நான்தான் ஹேண்டில் பண்ணனும்..! அ.. அதைத்தான் சொல்ல வந்தேன்.. பட் நீ அவ மேல வச்சிருக்கற அந்த கேர்.. தட்ஸ் குட்.." என்றபடி அங்கிருந்து சென்றவனையே யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மதி..
"இன்னைக்கு காலையில பார்க்கும்போது அந்த பொண்ணு தேம்பாவணி உங்க ரூம்லருந்து வெளியே வந்தா..? ஏன்..? என்ன ஆச்சு? அத்திமீறி உள்ள நுழைஞ்சிட்டாளா.. இல்ல நீங்க தான் கூப்பிட்டு உள்ள வச்சு கொஞ்சிக்கிட்டு இருந்தீங்களா..?" திலோத்தமா சமையலறைக்குள் புகுந்து நேரடியாக வந்து கேட்ட கேள்வியில் கொஞ்சம் திடுக்கிட்டு போனாள் சாரதா..
"என்னமா இப்படியெல்லாம் பேசற..! ராத்திரி பொழுது போகலை.. தூக்கம் வரலைன்னு எங்க ரூம்ல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தா..! அப்படியே என் பக்கத்துல படுத்து தூங்கிட்டா.. அத்துமீறி அறைக்குள்ள நுழையற அளவுக்கு அநாகரீகமான பொண்ணு இல்லம்மா அவ..! அதுமட்டுமில்லாம பொம்மை மாதிரி அழகா இருக்கறவளை கொஞ்சனும்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னு நினைக்கற..! சாதாரணமாக பதில் சொல்லி சிரிப்பதைப் போல் சாரதா காய்கறிகளை கழுவிக் கொண்டிருக்க..
"இருந்தாலும் அவளுக்கு ரொம்பதான் இடம் கொடுக்கறீங்க..! இதெல்லாம் எனக்கு சரியா படல.. யாரும் என் பேச்சை காது கொடுத்து கேட்கிறதில்லை.. பெருசா தப்பு நடந்த பிறகு எல்லாருமே உட்கார்ந்து அழ போறீங்க.. அப்ப தெரியும் திலோத்தமாவோட அருமை..!" அவள் அங்கிருந்து நகரப் போக சாரதா திலோத்தமாவை பிடித்து நிறுத்தினாள்..
"இப்ப என்ன உன் அருமை தெரியல.. இந்த வீட்ல உனக்கென்ன குறை.. யாராவது உன்னை மட்டமா நடத்தினாங்களா..?"
"யாரும் என்னை மட்டமா நடத்துறீங்கன்னு சொல்லல.. ஆனா அந்த பொண்ண தலையில தூக்கி வெச்சிட்டு ஆடறீங்க.. மருமகளா மாங்கு மாங்குன்னு வேலை செய்யணும்.. ஆனா அவளுக்கு மட்டும் ராஜ உபச்சாரமா..?"
"அவ இந்த வீட்டு விருந்தாளி திலோத்தமா..! இன்னும் எத்தனை நாளைக்கு அவங்க இருக்க போறா சொல்லு.. நீ அப்படியா..? இது உன் வீடு உன் குடும்பம்.."
என்றதும் எச்சில் விழுங்கினாள் திலோத்தமா..
"அந்த மஞ்சப்பொடி டப்பாவை எடு.."
ஆமா இதுக்கு மட்டும் நான் வேணும்.. மேல் அலமாரியிலிருந்து மஞ்சள் பொடி டப்பாவை எடுத்து நங்கென்று வைத்துவிட்டு.. அடுத்து வேறெதுவும் வேலை சொல்லி விடக்கூடாதென மெல்ல நழுவிக்கொண்டாள்..
"என்னவாம் உன் மருமகளுக்கு..?" என்றபடியே வெண்மதி அங்கு வந்து சேர..
"ஒன்னும் இல்ல..! இன்னைக்கு என்ன சமையல்னு விசாரிச்சுட்டு போறா..!"
"வந்து ஒரு ஒத்தாசையும் பண்றதில்ல.. வேளா வேளைக்கு என்ன சமையல்.. என்ன மெனுன்னு கேட்கறதுல ஒன்னும் குறைச்சல் இல்லை.." வெண்மதி முகத்தை சுழித்துக்கொள்ள..
"அவளை வம்புக்கு இழுக்கலைனா உனக்கு தூக்கம் வராதே..! பிரிட்ஜிலருந்து மாவு எடுத்து மட மடன்னு தோசை ஊத்தி ஹாட் பாக்ஸ்ல அடுக்கி வை.. சாம்பார் பத்து நிமிஷத்துல ஆகிடும்.. நிவேதா எங்க.. அவ வந்தா இந்த புதினாவை அலசி கிள்ளி வச்சி அப்படியே கொஞ்சம் தேங்காய்வையும் துருவி தரச் சொல்லலாம்னு நினைச்சேன்.."
"பொண்ண குளிக்க வச்சுட்டு இருக்கா..! புதினா சட்னி அரைக்க போறீங்களா..?"
"ம்ம்..! ஆமா.."
"சரி எடுத்து வைங்க.. நான் பாத்துக்கறேன்.."
"முதல்ல குழந்தைங்களை சாப்பிட வச்சுட்டு அப்புறமா பெரியவங்களுக்கு பரிமாறலாம்.." என்றபடியே அரக்க பறக்க வேலைகளை முடித்துக் கொண்டிருந்தாள் சாரதா..
சிறியவர்கள் உண்டு முடித்து விளையாட சென்று விட.. பெரியவர்கள் உண்பதற்காக அமர்ந்தனர்..
"ஹலோ மேடம்..! என்ன நேத்து நைட்டு நிம்மதியா தூங்குனீங்களா..?"
வருண் தேம்பாவணியின் பக்கம் தலை சாய்த்து ரகசியமான குரலில் கேட்க.. ம்ம்..! என்றவளின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை.. கண்களில் லேசான கோபம்..
"யாரோ சொன்னாங்கப்பா.. நான் இல்லாம தூங்க மாட்டேன்.. தூங்கறதுக்கு முன்னாடி என் முகத்தை பார்க்கலைன்னா அன்னைக்கு பொழுதே முடியாதுன்னு.. கடைசில அம்மா ரூம்ல படுத்து நிம்மதியா குறட்டை விட்டு தூங்கினாப்ல தெரியுது.." கேலி சிரிப்போடு உணவை எடுத்து மென்று விழுங்கினான்..
"ஆமா நீங்க இல்லைனா தூக்கம் வராது..! உங்க முகத்தை பார்க்கலைன்னா அன்னைக்கு நாள் கம்ப்ளீட் ஆகாது.. ஆனா அதுக்காக தனி அறையில் உட்கார்ந்து பயத்தோட என்னால அழுதுட்டு இருக்க முடியாது..! மறுபடி கண்ணு முன்னாடி ராட்சஸ உயரமெடுக்கற அந்த பயங்கரமான உருவங்களை என்னால ஃபேஸ் பண்ண முடியாது.. உங்களுக்கு என் மேல அக்கறை இல்லை..! நேத்து நீங்க ஒரு ஃபிரெண்டாவும் நடந்துக்கல.. ஒரு டாக்டராவும் நடந்துக்கல.. என்னை முழுசா கை விட்டுட்டீங்க.. ஆனா உங்க அம்மா என்னை அன்போடு அரவணைச்சுக்கிட்டாங்க.. தூங்க வச்சாங்க..! I love that cuddling.." கண்கள் மூடி மெய் மறந்து சொன்னவள்.. "நேத்து ராத்திரி ரொம்ப பாதுகாப்பா இருந்த மாதிரி ஃபீல் ஆச்சு.." என்றாள் சந்தோஷமாக..
"ஏன் நான் உன் பக்கத்துல இருந்தபோது அதே பாதுகாப்பை நிம்மதியை நீ ஃபீல் பண்ணலையா..?" அவசியமில்லாத கேள்வியை அவசரமாக கேட்டிருந்தான்..
"எஸ் ஃபீல் பண்ணி இருக்கேன்.. ஆனா இது அதையும் விட ரொம்ப நெருக்கமான ஏதோ ஒரு உணர்வு.. அப்பாவோட பாசம் கெடைச்சா எப்படி இருக்கும்னு நெறைய முறை யோசிச்சிருக்கேன்.. ஆனா நான் கேட்காமலேயே கிடைச்ச இந்த அரவணைப்பு.. அன்பு எனக்கு ரொம்ப பிடிச்சது..!" அவள் முகம் விகசித்தது..
அவன் முகமோ அதற்கு நேர்மாறாக சுருங்கி போயிருந்தது.. ஏதோ ஒரு ஏமாற்றம் சின்னதாய் பொறாமை உணர்வு..
தன் அம்மா அவளுக்கு காட்டி தந்த அன்பை விட அதிகப்படியான சந்தோஷத்தை பாதுகாப்பு உணர்வை அவளுக்கு தரவேண்டுமென்ற துடிப்பு..!
"வருண் இன்னைக்கு என்னை ஹாஸ்டல் கூட்டிட்டு போறதா சொன்னீங்க..!" அவன் காதோரமாய் கிசுகிசுப்பாய் சொன்னாள் திலோத்தமா..
*ஓகே போகலாம்" என்பதோடு முடித்துக் கொண்டான்..
"ஏய் நிவேதா கவனிச்சியா..?" வெண்மதியின் மெல்லிய குரலுக்கு
"என்ன கவனிக்கணும்.. புதினா சட்னியில கொஞ்சம் உப்பு கம்மி அதை மட்டும்தான் நான் கவனிச்சேன்.." என்றாள் நிவேதா..
"போடி தீனி பண்டாரம்..! அங்க பாரு முதல்ல.. வருண் தேம்பாவணி கிட்ட ரகசியமா கிசுகிசுன்னு ஏதோ பேசினானே அதை கவனிச்சியா..!"
"பார்த்தேனே..!"
"இப்போ திலோத்தமா கூடவும் அப்படித்தான் ரகசியமா பேசறான்.. ஆனா ரெண்டுத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உன்னால உணர முடியுதா..?"
"நல்லாவே தெரியுது.. தேம்பாவணி கிட்ட வலிய வலிய போய் பேசினாப்ல தெரிஞ்சுது.. திலோத்தமா கிட்ட ஒரு வார்த்தையோட முடிச்சுகிட்டார்.."
"இதிலிருந்து நீ என்ன நினைக்கற..?"
"நான் நினைக்க என்ன இருக்கு.. பொண்டாட்டினா அப்படித்தான்.. போகப் போக சலிச்சு போயிடும்.. வார்த்தைகளை கத்திரிச்சி விட்டாப்ல பேசுறது வழக்கமாகிடும்.. அதுதான் இங்கேயும் நடக்குது.."
"போடி உனக்கொன்னும் தெரியல..! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு..!" வெண்மதி பெரிதாக சலித்துக் கொண்டாள்..
"நானும் வருணும் இன்னைக்கு வெளியே போறோம்.. நீ ஏதாவது ஆட்டோ புடிச்சு போயிடேன்..!" திலோத்தமா வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்து கொண்டு சொல்ல.. தேம்பாவணி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் "என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்றபடி கார் கதவை திறந்தான் வருண்..
"இல்ல நாம ஒரு முக்கியமான வேலையா வெளியில போறோம்.. இவளை வேற எதுக்காக மடியில கட்டிக்கிட்டு போவானேன்.. அதான் ஆட்டோ பிடிச்சு போயிடுனு சொன்னேன்.."
"இவளை நீயோ இல்ல நானோ ஒன்னும் மடியில கட்டிக்க போறதில்ல.. கார் சுமக்க போகுது.. போற வழியில அவளை காலேஜ்ல இறக்கி விட்டுட்டு போக போறோம்.. உனக்கென்ன கஷ்டம் இதுல.. திலோத்தமாவிடம் அழுத்தமான பார்வையோடு முடித்துக் கொண்டு நீ கார்ல ஏறு.. தேம்பாவணியிடம் உத்தரவாக சொன்னான்..
தேம்பாவணி கார் கதவை திறந்து பின்னால் ஏறிக்கொள்ள திலோத்தமாவின் முகம் கருத்து போனது..
கார் கண்ணாடி வழியே பின்னால் அமர்ந்திருந்த தேம்பாவணியை பார்த்தான் வருண்..
அவள் கோபமாக முகத்தை திருப்பிக் கொள்ள..
ப்ளே சிஸ்டத்தை உயிர்பித்து..
பொன்மானே கோபம் ஏனோ
பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது..
தேடியெடுத்து அந்த பாடலை வைத்திருந்தான்..
"ஓஹோ.. கோவமா இருக்கற பொண்டாட்டிக்காக இந்த பாட்டு வச்சிருக்காரு போலிருக்கு.. கூடவே பாடுறத வேற பாரு.." தேம்பாவணிக்குள் எரிச்சல்..
திலோத்தமா அந்த பாட்டுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவள் போல் அமர்ந்திருந்தாள்..
கல்லூரியில் தேம்பாவணியை இறக்கிவிட அவளோ திரும்பியும் பாராது.. வேகமாக நடந்து சென்றுவிட.. நீண்ட பெருமூச்சுடன் அப்படியே அமர்ந்திருந்தான் வருண்..
"பார்த்தது போதும்.. காரை எடுங்க.. என் புள்ள அங்க எனக்காக காத்திருப்பான்.." திலோத்தமாவின் படபட குரலில்.. எரிச்சலாய் காரை கிளப்பினான்..
"காலையிலிருந்து ஒரு மாதிரி தலைவலியா இருக்கு.. டேப்லெட் ஏதாவது இருக்கா..?" திலோத்தமா கேட்கவும்
"டாஷ்போர்டுல இருக்கும் பாரு!" என்றான் அவன்..
டேஷ்போர்டை திறந்தவள் அதிலிருந்த பொருளைக் கண்டு ஆச்சரியத்துடன் கண்களை விரித்து.. "வாவ் லிப்ஸ்டிக்..! ரொம்ப நாளா வாங்கணும்னு நினைச்ச பிராண்ட்.. எனக்கு பிடிச்ச பிங்க் கலர்.. இதை நான் எடுத்துக்கறேன்.." என்றபடி லிப்ஸ்டிக்கை திறந்து தன் உதட்டில் பூச போகும் முன் வேகமாக அவள் கரத்தைப் பிடித்து..
"ஏய்ய்ய்..!" என்று தடுத்திருந்தவன்.. அவசரமாக வண்டியை ஓரங் கட்டினான்..
லிப்ஸ்டிக்கை அவள் கையிலிருந்து கிட்டத்தட்ட பிடுங்கியிருந்தான் வருண்..
"என்ன ஆச்சு..! ஏன் இப்படி பண்றீங்க.. யூ ஆர் பீயிங் ரூட் வருண்.."
"ஐ அம் சாரி.." என்று தன்னை சமன்படுத்திக் கொண்டவன்.. "இது உனக்கானது இல்லை.. உனக்கு சொந்தமில்லாத பொருளை இப்படி எடுத்து யூஸ் பண்ண நினைக்கறது அநாகரீகம்.. have some manners..!" என்றான் சற்று கனத்த குரலில்..
"வேற யாருக்காக வாங்கி வைச்சிருக்கீங்க..? உங்க அக்காவுக்கா இல்லை தங்கைக்கா..?"
"அது உனக்கு தேவையில்லாத விஷயம்..! Better stay in your limits.." என்றவன் அவள் கைபட்ட தடம் கூட மறைவதற்காக தன் சட்டையில் துடைத்துக் கொண்டு அந்த லிப்ஸ்டிக்கை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள.. அவன் செயல்களை வினோதமாக பார்த்தபடி பற்களை கடித்து முகத்தை திருப்பிக் கொண்டாள் திலோத்தமா.
தொடரும்.

Last edited: