• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
அழகான சந்தியா காலப்பொழுது.. கலைத்துவிட்ட ரங்கோலியாக தனது ஆரஞ்சு வண்ணத்தை சிதறடித்திருந்த சூரியன் வெப்பத்தை தணித்துக் கொண்டு இரவு பொழுதுக்காக வழி விட்டிருந்தான்..

காலையில் சோர்வும் சலிப்புமாக புத்தகப்பையை முதுகில் சுமந்து கொண்டு பள்ளிக்கு சென்ற குழந்தைகள் இப்போது வெகு உற்சாகத்துடன் பள்ளியிலிருந்து துள்ளல் நடையோடு திரும்பிக் கொண்டிருந்தனர்..

பள்ளிக் கூட வாசலில் தினமும் கால் கடுக்க காத்துக் கொண்டிருந்தாலும் காலை பொழுதின் பரபரப்பு இல்லாத நிதானமான மாலைப் பொழுது அவளுக்கு மிகவும் பிடித்தமான தருணங்கள்.. எரிச்சலும் அலைச்சலுமின்றி நிறைய விஷயங்களை பொறுமையாக பார்த்து ரசிக்க முடிகிறது.

குழந்தைகளை அழைத்துச் செல்லும் தாய்மார்களின் முகங்களை அளவிடுகிறாள்.. சிலர் முகங்களில் சந்தோஷம் சிலர் முகங்களில் கோபம் பரபரப்பு.. எரிச்சல்.. களைப்பு. சோகம்.. கலக்கம்.. இன்னும் எத்தனை விதமான உணர்வுகள்.. என்னவோ சந்தோஷ முகங்களை கண்டு தானும் முறுவலிக்கிறாள்.. எரிச்சலாக குழந்தைகளிடம் கடுகடுத்து செல்பவர்களை கண்டு இவர்களாவது மகிழ்ச்சியோடு இருந்திருக்கலாமே என்று ஏங்கி பெருமூச்சு விடுகிறாள்..

சுற்றம் மறந்து துன்பம் மறந்து உல்லாச சுற்றுலா சென்றிருக்கும் பிரையாணி போல் அவள் தனக்காக செலவிடும் நிமிடங்கள் இந்த இதமான மாலை காலங்கள்.. கிறுக்குத் தனமாக ஏதேதோ யோசித்துக் கொண்டிருப்பாள்..

மஞ்ச கலர்ல ஆரஞ்சு பூ போட்ட மாதிரி புடவை யாராவது கட்டுவாங்களா.. என்ன டிசைனோ என்று யோசித்துக் கொண்டிருப்பாள்.. சங்கவி ஹோட்டல்.. இதுல வி எங்க போச்சு..
வெறும் சங்க ஹோட்டல்னு இருக்கு.. களுக்கென ஒரு சிரிப்பு.. சாலையில் செல்லும் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிவதை பார்த்து பரிதாபமாக உச் கொட்டுவாள்.. இன்னொரு பஸ்ல ஏறிக்கிட்டா போச்சு.. எதுக்காக இவ்வளவு அவசர அவசரமா பிதுங்கி வழியற கூட்டத்தில் தொங்கிக்கிட்டு போகணும்.. என்று தனக்குத்தானே புலம்பி கொள்வாள்..

பள்ளி மணி அடித்தவுடன் "சித்திஇஇஇ.." என உற்சாகக் குரலோடு கத்திக் கொண்டே ஓடி வந்தான் கிரீஷ்.. கணவனின் அண்ணன் மகன்.. நினைவலைகள் கலைந்து அவனைப் பார்த்து சிரித்தாள் மாதவி.. புத்தகப் பையை அவனிடமிருந்து வாங்கிக் கொள்ள இருவருமாக கைகோர்த்து நடந்தார்கள்.. தினமும் அவனை பள்ளியில் கொண்டு போய் விடுவதும், மாலையில் அழைத்து வருவதும் மாதவியின் என் தலையாய கடமைகளுள் ஒன்று..

பகிர்ந்து கொள்ள ஆளின்றி தனக்குள் வெந்து புழுங்கும் வெப்பமான குடும்ப சூழலில் உழலும் சராசரி இல்லத்தரசிதான் இந்த மாதவி..

திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன.. கணவன் ஹரிச்சந்திரா.. நல்லவனா கெட்டவனா இதுவரை தெரியாது.. நல்லபடியாக நாலு வார்த்தை பேசி பழக்கமில்லை.. இவளால் அவனுக்கு சந்தோஷம் இல்லையாம்..

கணவனை கைக்குள் போட்டுக் கொள்ள தெரியவில்லை.. கணவனே கண்டு கொள்ளாத பெண்ணை புகுந்த வீட்டார் மதித்து நடக்க வாய்ப்பில்லை.. என்பதால் இவள் குடும்ப அடிமை.. அந்த குடும்பத்துக்கு அடிமை ஆகி போனவள்.

அவள் கதை மிகப் பெரிய கதை.. சோக கதை.. மனதுக்குள் சோகத்தை போட்டு புதைத்துக் கொண்டு.. இன்னைக்கு சீரியல்ல சுந்தரி வந்தாளா.. என்று மதில் சுவர் எட்டிப் பார்த்து அடுத்த வீட்டு பெண்ணிடம் ஆர்வமாக கதை கேட்கும் பல நூறு பெண்களில் அவளும் ஒருத்தி..

பிஎஸ்சி தாவரவியல் படித்திருக்கிறாள்.. எதற்காக தாவரவியல் படித்தாள்.. பிடித்திருந்தது.. படித்தாள்.. ஓரளவுக்கு எழுபது சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருந்தாள்.. மேற்கொண்டு படிக்க வசதி இல்லை..

தாவரவியலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கம்பெனியில் ரிசப்ஷனிஸ்டாக பதினைந்தாயிரம் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தாள்.. அப்பா இல்லாத குடும்பம் மூத்த பெண்.. அவளுக்கு அடுத்ததாக இரண்டு தங்கைகள்.. என எந்த பக்கமும் நகர விடாமல் நிர்பந்தத்தில் நிற்க வைக்கும் இக்கட்டான குடும்ப சூழ்நிலை..

அஞ்சல் வழிக் கல்வியில் முதுகலை தாவரவியல் படிக்க ஆசைப்பட்டு.. பத்தாயிரம் ரூபாய் முன்பணம் கட்டி புத்தகங்கள் வாங்கி வைத்ததோடு சரி.. வேலை முடித்து வந்த களைப்பில் புத்தகங்களை பார்த்தவுடன் உறக்கம் தான் வந்தது..‌ பிராக்டிகல் வகுப்புகளில் கலந்து கொள்ள அலுவலகத்தில் லீவு கிடைக்கவில்லை.. பிராக்டிகல் வகுப்புகளை அட்டென்ட் செய்யாமல் பரீட்சை எழுத முடியாது என்பதால் ஹால் டிக்கெட் மறுக்கப் பட்டது.. நல்லவேளை வாங்கி வைத்த புத்தகத்தில் அவள் ஒரு பக்கம் கூட படிக்கவில்லை.. இல்லையேல் எழுதாத பரீட்சைக்காக அத்தனையும் வீணாக போயிருக்கும்.. இப்படித்தான் அல்பமாக சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியிருந்தது..‌

தங்கைகள் பவித்ராவும் ருத்ராவும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும் எட்டாம் வகுப்புமாய் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.. ரெண்டுங்கட்டான் வயசு.. மீசை முளைத்த பையன்கள் ஹலோ பவி என்று சொல்லும்போது மனம் துள்ளி குதிக்கிறது.. இலக்கைப் பார்த்து ஓடு பவித்ரா.. வாழ்க்கைக்கு படிப்பு தான் முக்கியம் ருத்ரா.. என்று தங்கைகளுக்கு அக்கா அடிக்கடி அறிவுரை சொல்லி உசுப்பி விட வேண்டியதாய் இருக்கிறது..

புடம் போட்ட தங்கமாய் மனதை கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் பெண்களாய் பட்டவர்கள் சில நேரங்களில் பல விஷயங்களை கடந்து வரத்தானே வேண்டியிருக்கிறது.. ஐ லவ் யூ என்று பூ கொடுக்கும் விடலைகளையும்.. பரிசுப் பொருள் நீட்டும் மீசை முளைத்த பையன்களையும் இந்த காலத்து பெண்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. அதிக பட்ச பாலியல் துன்புறுத்தல்கள் இல்லாமல் ஒரு பெண் ஐம்பது வயதை தாண்டிவிட்டால் அதுவே மகத்தான சாதனையாகி போகிறது இப்பூவுலகில்..

எவனாவது காதல் கீதல்னு வந்தா நாசூக்கா மறுத்துரு..‌ அவனுங்க பக்கம் தலை வச்சு கூட படுக்காதே.. ஏதாவது ஒரு வார்த்தை வேற மாதிரி பேசிட்டாலும் ஆசிட் ஊத்தவும் கழுத்தறுத்து போடவும் வெறி பிடிச்சு திரியறானுங்க.. டிவியில் ஓடிக் கொண்டிருந்த செய்தியை பார்த்து மிரட்சியோடு அம்மா அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பாள்.

பவித்ராவும் ருத்ராவும் பாதியை காதில் வாங்கிய படி.. மீதியை காற்றில் விட்டு ஆண்ட்ராய்டு போனுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கும்.. பள்ளிக் கால பட்டாம் பூச்சி வயதில் எல்லாமே வேடிக்கைதான்..

அம்மா கீதா லஷ்மி தையல் கடை வைத்திருக்கிறார்.. வாடகை வீடுதான்.. மாதவி.. கீதா இருவரின் வருமானங்களில் எப்படியோ ஜீவனம் ஓடுகிறது.. கவர்மெண்ட் பள்ளி அரசு சலுகைகள்.. விதவை பென்ஷன் தொகை.. என்று மாதவி படித்த காலம் வரை எப்படியோ ஓரளவு குடும்பத்தை சமாளித்தவர்கள் இப்போது மூத்த மகள் வேலைக்குப் போன பிறகு ஒரு படி முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்..

கஸ்டமர் கொடுக்கும் துணியில் ஆடை தைத்தது போக மிச்சம் வீணாவதை நேர்த்தியாக இணைத்து புது உடுப்பாக மாற்றி தன் பிள்ளைகளுக்கு உகந்த அளவில் தைத்துக் தருவதில் அம்மா கீதாலஷ்மி கெட்டிக்காரி.. அதனால் பிள்ளைகளுக்கு உடைகளுக்கு பஞ்சமில்லை.. மாதவி வளர்ந்த பிறகு அம்மாவின் கலையை கற்றுக்கொண்டு பழைய சேலைகளை நேர்த்தியாக கத்தரித்து அனார்கலி சுடிதார்களாக மாற்றி தைத்தெடுத்து கல்லூரிக்கு அணிந்து செல்வாள்..‌ மற்ற இரண்டு பிள்ளைகளும் சீருடை அணிந்து செல்வதால் வீட்டிற்கு வந்த பிறகு நைட்டியும் பாவாடை சட்டையுமாக.. புதுப்புது வெரைட்டி உடைகளுக்கு அவசியமில்லாமல் போனது..

இரண்டு தங்கைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து அவர்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு ஆளாக்கி விட வேண்டும்.. நெடுங்காலமாய் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஓட்ட உடைசல்கள் தகர டப்பாக்களை அப்புறப் படுத்திவிட்டு வீட்டிற்கு தேவையான புத்தம் புது பாத்திரங்களும் வீட்டு உபயோக பொருட்களும் வாங்கி போட வேண்டும்.. அவசர தேவைக்காக கொஞ்சமாக பணம் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.. இவ்வளவுதான் அவள் வருங்கால திட்டங்களாக இலக்குகளில் இருந்து வந்தன .. வீடு வாங்க வேண்டும் கார் வாங்க வேண்டுமென்ற.. பெரிதாக பேராசையெல்லாம் என்றுமே இருந்ததில்லை..

அவ்வப்போது ஆன்ட்டி ஹீரோ கதைகளை படித்து.. அல்பத்தனமாக அதில் வரும் கதாநாயகியோடு தன்னை ஒப்பிட்டு கற்பனை செய்து பார்த்துக் கொள்ளும் பழக்கம் உண்டு..

ஆன்ட்டி ஹீரோ நாவல்கள் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது.. கற்பனை செய்யும்போது கூட ஒரு மாதிரி சுகமாகத்தான் இருக்கிறது.. நாயகி நாயகனிடம் வசமாக சிக்கிக் கொள்வதும்.. பழி வாங்குவதும் துன்பப்படுவதும்.. பிறகு உண்மை உணர்ந்த பின் நாயகன் நாயகியை கொஞ்சுவதும்.. வேற மாதிரியான திரில்.. அதில் பணக்கார ஹீரோக்கள்.. ஏழை ஹீரோயின்களை தேடிக் கண்டுபிடித்து மணக்கும் போதும்.. அந்த நாயகியரை ராஜகுமாரி போல் அன்பாக அக்கறையாக பார்த்துக் கொள்ளும் போதும் காதலை அள்ளி வழங்கி பிரியம் சொட்டும் வசனங்களை படிக்கும் போதும்.. தன்னையும் இப்படி ஒரு ராஜகுமாரன் தேடி வருவானா..? என்று கனா கண்டு ஏங்கிய காலங்கள் உண்டு..

ஆனால் கதை நிதர்சனமாகிப் போகும் போதும் அதை சுயமாக அனுபவிக்கும் போதும்தான் இந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது என்று புரிகிறது.. கதைகள் இனிக்கிறது.. நிஜம் கசக்கிறதே.. அப்படியானால் என் கணவன் ஆன்டி ஹீரோவா..?

ஆன்ட்டி ஹீரோ கூட நாயகியை அடிக்கடி ஏதேனும் ஒரு சாக்கு சொல்லி தொந்தரவு செய்து கொண்டே இருப்பான்..

இவன் என்னை தொந்தரவு செய்கிறானா.. அல்லது துன்பப்படுத்துகிறானா..? மனதை காயப்படுத்துகிறானா..‌

என் கணவன்தான் உன்னை கண்டு கொள்வதே இல்லையே..!! அழகாக இருக்கிறான் என்று சலனப்பட்டு வீழ்ந்து போனதுதான் நான் செய்த முதல் குற்றம்.. வீழ வைத்த அந்த அழகு அவளுக்கு ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படவில்லை.. பொறுமையாக முப்பது வயதில் தன் மீது பிரேமை கொண்ட ஒருவனை தேடிப்பிடித்து திருமணம் செய்திருக்கலாம்.. அவசர அவசரமாக கழுத்தில் மாலையை சூட்டிக்கொண்டு வாழ்க்கையை தொலைத்ததுதான் மிச்சம்..

பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கை மத்தியில்.. அலுவலக தோழிகளோடு அரட்டை.. வீட்டில் தங்கைகளுடன் தொலைக்காட்சிக்காக சண்டை.. வீடு வந்ததும் அம்மா கொடுக்கும் சூடான காபி.. குடும்பத்தோடு கலகலத்துக் கொண்டே மொட்டை மாடியில் நிலவை ரசித்துக் கொண்டு சாப்பிடும் சூடான இரவு உணவு.. என வாழ்க்கை நல்லபடியாகத்தானே சென்று கொண்டிருந்தது.. அப்படியே தொடர்ந்திருக்கலாம்.. காலச்சக்கரத்தில் சுழற்றி அந்த ஒரு நிகழ்வை மட்டும் மாற்றிவிட்டால் போதும்.. எல்லாம் சரியாகிவிடும்.. முடியாதே..!! அதுதான் பிரச்சனை..

எல்லாம் சொந்தக்கார பரதேசி என்று வீட்டுக்கு ஒருவன் அடிக்கடி வந்து கொண்டிருந்தானே அவனால் வந்த வினை.. அம்மாவின் தூரத்து உறவாம்.. தம்பி முறை..‌ முக்கியமான விஷயத்தை கையில் பிடித்துக் கொண்டு தற்செயலான விஜயம் போல் அன்று தையல் கடையில் அம்மாவின் முன்பு அமர்ந்திருந்தான்..

"பெண்ணை இப்படியே வச்சிருக்கிறதா உத்தேசமா..!!"

"வேற என்ன செய்ய சொல்றே சபா.. இன்னும் ஒரு அஞ்சாறு வருஷமாவது அவ வேலைக்கு போனாத்தானே இதுங்களை படிக்க வைச்சு ஆளாக்க முடியும்.."

"சிறுசுகளை படிக்க வைக்க பெரியவளோட வாழ்க்கையை பாழாக்க போறீயா..? பொண்ணு இளசா இருக்கும்போதே கல்யாணம் பண்ணி வச்சிடனும் அக்கா.. முத்திப் போச்சுன்னா மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்.. நான் சொல்லி நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை.." தோரணக் கால் போட்டு தொடையை தட்டியபடி சொன்னான்..

"புரியுது சபாபதி.. இருந்தாலும் வீட்ல பொட்டு தங்கம் கிடையாது.. இனிதான் பெரியவளுக்கு நகை சேர்க்கணும்.. அதுக்காவது ஒரு அஞ்சு வருஷம் தேவைப்படும் இல்ல..‌" மிஷினை ஓட்டி ஜாக்கெட்டின் முன் பகுதியை பட்டியோடு இணைத்து கொண்டிருந்தாள் கீதா..‌

"நகையும் வேண்டாம் வரதட்சணையும் வேண்டாம்.. உங்க பொண்ண அப்படியே கொடுங்ன்னு கேக்கற மாப்பிள்ளை வந்தா கட்டி வைப்பியா..?" சபாபதியின் கேள்வியில் மெஷின் நிறுத்திவிட்டு அவன் முகம் பார்த்தாள்.. பிறகு ஒரு நமட்டுச் சிரிப்போடு மீண்டும் மெஷினை ஓட்டினாள்..

"அப்படியெல்லாம் மாப்பிள்ளை இருக்காங்களா என்ன.. அப்படியே இருந்தாலும் மாப்பிள்ளைக்கு ஏதாவது பெரிய குறை இருக்கணும்.. ஒண்ணு மாப்பிள்ளை ஜெயில்ல இருக்கணும்.. இல்ல கல்யாணம் பண்ணிக்க தகுதி இல்லாதவனா இருக்கணும்.. அப்படி ஒருத்தன் என் பொண்ணுக்கு வேண்டாம்..‌ கொஞ்ச நாள் போகட்டும்.. அவளுக்காக ஒருத்தன் வருவான்.."

"அட அக்கா.. மாப்பிள்ளை ராஜா மாதிரி இருப்பான்.. எங்க சொந்தக்கார பையன்தான்..‌ தங்கமான புள்ள.."

"யாரைப் பத்தி சொல்ற..?" புருவங்களை சுருக்கினாள் கீதா..

"என்னோட பெரியம்மா மகன்.. என் அண்ணன் சரவணன் வடிவேலு மகன் ஹரிச்சந்திரா..!!"

"ஓ அவங்களா..!! நல்ல குடும்பம்தான்.. ஆனா நமக்கு சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியலையே..!! வசதியான குடும்பமாச்சே.. அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரிதானே பொண்ணு பாப்பாங்க.." என்ற பெருமூச்சு.. சபாபதி சரியாக கொளுத்தி போட்டிருக்கிறான்..

கீதாவின் மனதிற்குள் அந்தப் பையனுக்கும் தன் மகளுக்கும் பொருந்தி விட்டால் நன்றாக இருக்கும் என்று சிறு சலனம் நினைவை கீறி முளைத்து விட்டது.. அரிச்சந்திராவை கீதா பார்த்திருக்கிறாள்.. நல்ல அழகான வாட்டசாட்டமான இளைஞன்..‌ ஹரிச்சந்திராவிற்கு மாதவிக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கும் என்ற ஆசை அவளுக்குள் துளிர்விட்டது..

"அக்கா.. பணத்தைவிட மனுஷங்களோட அருமை தெரிஞ்ச குடும்பம்.. அதனால பொண்ணு ஏழ்மையாய் இருந்தாலும் பரவாயில்லை குணமாயிருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க.. நிறைய இடத்துல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க..‌ எதுவும் சரி வரல.. நான்தான் நம்ம குடும்பத்தை பற்றி சொன்னேன்.. உன் விருப்பத்தையும் தெரிஞ்சுகிட்டா உடனே பொண்ணு பார்க்க வர சொல்லலாம்.."

"என்னடா இது திடுதிப்புன்னு இப்படி கேக்கற..!! ஒண்ணுமே புரியலையே.. திடீர்னு கல்யாணம்னு சொன்னா எப்படி.. டௌரி சீர்வரிசை எதுவும் கேட்கலைன்னாலும் நம்ம பங்குக்கு ஏதாவது செஞ்சாகணுமே.. அதுவும் இல்லாம கல்யாண செலவு சாப்பாடு அது இதுன்னு சாதாரணமா கணக்கு போட்டா கூட அஞ்சு லட்ச ரூபாய் தேவைப்படுமே..!!" கீதாவிற்கு விழி பிதுங்கியது.

"கல்யாணத்துக்காக ஒரு ரூபாய் செலவு பண்ண வேண்டாம்.. அவங்க பையனுக்கு இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிக்கணும்னு ஜோசியத்துல இருக்காம்.. அதனால எளிமையா கல்யாணம் முடிச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க.. சீர்வரிசை டௌரி எதுவும் தேவையில்லை.. இருக்கிற பாத்திரங்களை போட்டு வைக்கவே அவங்க வீட்ல இடமில்ல.. உன் பொண்ணு பொறுமைசாலி.. பெரிய குடும்பமா இருந்தாலும் அனுசரிச்சு போகக் கூடியவ.. அந்த வீட்டுக்கு அவ பொருந்தி வருவான்னு தோணுது.. அதனாலதான் உன்கிட்ட கேட்கறேன்.."

கீதா யோசித்தாள்.. "இது சரி வருமா சபாபதி..!!"

"எல்லாம் சரியா வரும்.. நான் அவங்க கிட்ட பேசிட்டு பொண்ணு பார்க்க வர சொல்றேன்.. வந்து பூ முடிச்சுட்டு கல்யாண தேடியே நிச்சயம் பண்ணிட்டு போகட்டும்.."

"என்னடா ரொம்ப வேகமா போற மாதிரி இருக்கே.. முதல்ல மாதவிகிட்ட பேசணும் அவ சம்மதிக்கணும்.. நீ என்னடான்னா பொண்ணு பாக்க வர்றது பூ முடிகிறதுன்னு என்னென்னவோ சொல்ற.."

"மாதவி கிட்ட பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு.. நல்ல இடத்தை மிஸ் பண்ணிட்டு அப்புறம் போயிடுச்சுன்னு கவலைப்பட்டு நிக்க கூடாது..‌ மூணு பொண்ணு வச்சிருக்க.. நல்ல இடம் வரும்போது தாமதிக்காம ஆக வேண்டிய காரியத்தை பாக்கறதுதான் புத்திசாலித்தனம்.. யோசிச்சு முடிவெடு.. மாதவி கிட்ட பேசிட்டு ரெண்டு நாள்ல உன் முடிவ சொல்லு.. இது மாப்பிள்ளையோட ஃபோட்டோ.." தையல் மெஷின் மீது வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் சபாபதி..

இரவு மாதவி வந்ததும் அவளிடம் இது பற்றி பேசினாள் கீதா..

போட்டோவை பார்த்தவுடன் மாதவிக்குள் ஒரு சபலம்.. அந்த வயதிற்கே உரிய கிளர்ச்சி.. பக்குவமாக யோசித்து கொஞ்சம் சுதாரித்திருக்கலாம்.. விதி யாரை விட்டது..

ஏகப்பட்ட கனவுகளோடு தனது காதல் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற வரையறைக்குள் அடங்கி இருந்தான் புகைப்படத்தில் இருந்த ஹரிச்சந்திரா..‌ ஆளுமையான தோற்றம் கண்டு அவளுக்குள்ளும் ஆசைகள் வாலிப கிளர்ச்சியோடு அரும்பு விட்டன.. மகிழ்ச்சியாக சிரித்தபடி நின்றிருந்தான் அந்த நிழற்படத்தில்.. அவன் கண்களும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதில் அவளுள் தேக சிலிர்ப்பு..

"கல்யாணம் பண்ணிக்கோ மாதவி.. எங்களைப் பற்றி கவலைப்படாதே..!! உனக்கு நடந்த மாதிரி உன் தங்கச்சிகளுக்கும் எல்லாமும் தானா நடக்கும்.. படிக்கிற பிள்ளைகள் தானே..‌ நல்ல மார்க் எடுத்துட்டா அவங்களுக்கும் டொனேஷன் கிடைக்கும்.. உன்னுடைய எதிர்காலத்தை பாருமா" அம்மா சொன்னதை நம்பினாள்..

பவித்ராவும் ருத்ராவும் கூட மாப்பிள்ளையின் போட்டோவை பார்த்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததில் மென்மேலும் மயக்கம்.. அக்கா கல்யாணம் பண்ணிக்கோ.. மாப்பிள்ளை சூப்பரா இருக்காரு..!! உற்சாகமாக சொல்ல.. கேலியும் கலாட்டாக்களுமாக அன்றைய இரவு மகிழ்ச்சியோடு கழிந்தது..

பெண் பார்க்க வந்த போதும் மாப்பிள்ளை வரவில்லை.. மாப்பிள்ளையின் அம்மா ஜெயந்தியும்.. அவன் தங்கை அக்ஷயா அண்ணி சரிதாவும் ஆளாளுக்கு அதிகாரத்தோடு கேள்வி கேட்டு.. தலையில் பூ வைத்து திருமணத்திற்கான தேதி குறித்து சென்றனர்.. மந்திரி ரோந்து வரும் நேரத்தில் சாலையை சீரமைப்பது போல் கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது.. இந்த வேகம் நல்லதற்காக கெட்டதற்கா என்று கூட புரியாத நிலை..

கல்யாண முகூர்த்தத்திற்கு முந்தைய இரவு எங்கேயோ குடித்துவிட்டு விழுந்து கிடந்த மாப்பிள்ளையை தூக்கி வந்து குளிப்பாட்டி.. ஆளாளுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பதாக காதுவாக்கில் செய்தி வந்த போது தான்.. அவசரப்பட்டு புதைகுழியில் விழப் போகிறோமோ என்ற பயம் வந்தது..

ஆனால் தெளிவாக.. நிலையாக ஒரு முடிவு எடுப்பதற்குள் அவள் கழுத்தில் ஹரிச்சந்திரா தாலி கட்டியிருந்தான்..

தொடரும்..
 
New member
Joined
Sep 10, 2024
Messages
17

பெண்ணுக்கு தான் எல்லா துயரமும் 🥲🥲🥲🥲🥲
 
New member
Joined
Mar 17, 2024
Messages
5
இந்த கதை அமேசான் கிண்டிலில் உள்ளது, எதிர்ப்பாராத நிறைய திருப்பங்களுடனுள்ள அருமையான கதை❤️ திருமண வாழ்க்கை வெறுத்துப்போன பெண்களுக்கு இவ்வாறு நல்லது நடந்தால் அது பேரதிர்ஷ்டம்😍🤩
 
Member
Joined
Jan 26, 2024
Messages
11
அருமையான பதிவு
 
Member
Joined
Nov 30, 2024
Messages
6
Already YouTube la story ketuten👍👍👍👍👍👍👍👍periya thiupam ullathu🤫🤫🤫🤫🤫🤫🤫
 
Joined
Jul 31, 2024
Messages
4

அடேய் சாவுகிராக்கி சபா யார்னா உன் கால்ல விழுந்து மாதுக்கு மாப்ள பாக்க சொன்னாங்களா பரதேசி அப்பாவி பொண்ணுங்க வாழ்க்கைய கெடுக்கவே வருவீங்களாட😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 பொறுக்கி பொறம்போக்கு குடிக்காரன் இவனுங்கள திருத்தவா பொண்ணுங்க பிறப்பெடுத்தாங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ பூ வைக்க வந்த புண்ணியவதிங்க வேற இருக்காங்க ஒன்ன சமாளிக்கறதே பெருசு இதுல முப்பெரும் மூதேவிங்க வேற பொண்ணுக்கு எதிரி இன்னொரு பொண்ணு தான் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
81
😍😍😍😍😍😍😍😍😍😍🤎💥💥💥🤎
 
Member
Joined
Jan 11, 2023
Messages
24

Mudhal epi pavama irukey sis
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
நடுத்தர வர்க்க பெண்களுக்கு தான் எல்லா பிரச்சனைகளும்.....
வெயிட் பண்ணி பார்ப்போம்
 
New member
Joined
Sep 18, 2024

🤨🤨
 
Top