• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
57
திருவிழான்னாலே அது நம்ம எஸ் வி கே ஸ்டோரோடதாங்க..

"சந்தோஷமா வாங்க அள்ளிக்கிட்டு போங்க..!"

குண்டூசியிலிருந்து குத்து விளக்கு வரை உங்க வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே..

ரகர ரகமாய் துணிமணிகள்.. விதவிதமாய் வைர தங்க ஆபரணங்கள்.. வீட்டு உபயோக பொருட்கள்..

அனைத்தும் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய நியாயமான விலையில் உங்கள் எஸ் வி கே ஸ்டோர்ஸ்..!

வெண்ணையில் கடைந்தெடுத்து.. கொஞ்சமாய் குங்குமப்பூ தட்டி போட்டு செய்த சிலையாக சினிமா நடிகை ஒருத்தி அந்த பெரிய ஸ்கிரீனில் தழைய தழைய புடவையும் லெஹங்காவும் அணிந்து அந்த அரண்மனை போன்ற ஸ்டுடியோ செட்டை சுற்றி சுற்றி வந்து பேசிக் கொண்டிருந்தாள்..

"ஏய்.. அனு.. ஏய்.." பக்கத்திலிருந்தவள் உலுக்கிய பிறகுதான் அந்த வண்ணமயமான மாய லோலகத்திலிருந்து பிரிந்து வந்தாள் அனு.. அனுபமா..

"ஏய் லூசு..! கஸ்டமர் வந்திருக்காங்க பாரு.. நீ பாட்டுக்கு ஸ்கிரீன பார்த்துகிட்டு மத்தி மாதிரி நிக்கற.. ஒரு நாளைக்கு ஆயிரம் வாட்டி அந்த விளம்பரம் வருது.. ஒவ்வொரு வாட்டியும் புதுசா பாக்கற கணக்கா அதுல அப்படி என்னத்த தான் கண்டியோ தெரியல..!" இவளைப் போலவே சந்தன நிற புடவையும் ஆரஞ்சு நிற போர்ட் நெக் ரவிக்கையும் அணிந்திருந்த ராதிகா சலித்துக் கொண்டாள்..

அவள் பேச்சை காதில் வாங்கிக் கொண்டாலும் அந்நேரத்தில் பதில் சொல்ல இயலாதவளாய் எதிரே நின்றிருந்த பெண்ணை கண்டு.. சொடக்கு போடும் நொடியில் இதழ்களில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு..

"சொல்லுங்க மேடம் என்ன பாக்கறீங்க..?" என்றாள் சிநேகம் பூசிய குரலில்..

"ஜிமிக்கி பாக்கணும்..!"

"எத்தனை பவுன்ல பாக்கணும்..?"

"ரொம்ப வெயிட்டா வேண்டாம்..! ஒரு பவுனுக்குள்ள காட்டுங்க ஆனா தக்கையா இருக்கட்டும்..!"

"அப்படிங்களா..!" என்றபடியே கண்ணாடி பெட்டிக்கு மறுபக்கம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த தங்க ஜிமிக்கி பலகைகளை நோட்டமிட்டவள்.. கொஞ்சமாய் நகர்ந்து ஏழெட்டு ஜிமிக்கி செட் அடங்கிய அந்த பலகையை எடுக்கும் நேரம்.. எதையோ கண்ட அந்த பெண்ணின் முகம் சுணங்கியது..

"ஏம்மா வேற யாராவது நகை காட்டுங்களேன்..!"

எதிரிலிருந்தவளை தாண்டி அந்த பெண்ணின் பார்வை இன்னொருத்தியை எட்டி போட..

"ஏன் மேடம்..! நான்தான் எடுத்து காட்டிட்டு இருக்கேனே..!" அனு புரியாமல் விழித்தபடி புன்னகைக்க முயன்றாள்..

"அந்தப் பெண்ணோ தர்ம சங்கடமாக தான் சொல்ல வந்ததை மென்று விழுங்கியபடி இல்லம்மா வேற யாரையாவது காட்ட சொல்லேன்..!" என்று தன்மையாக சொல்ல..

முகம் மாறி போனவளாக நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு பக்கத்திலிருந்த ராதிகாவிடம் "நீயே காட்டு.." என்றபடி காலை ஊன்றி தத்தி தத்தி நடந்து போக..

அனு தள்ளி செல்லும் வரையிலும் காத்திருந்த அந்த பெண்.. "இதுக்காகத்தான் வேண்டாம்னு சொன்னேன்.. கர்ப்பிணி பொண்ணு சீமந்தத்துக்காக ஜிமிக்கி எடுக்க வந்தோம்.. நல்ல காரியத்துக்காக நகை எடுக்க வந்திருக்கையில ஊனமான பொண்ணோட கை தொட்டு கொடுக்கற நகையால வயித்து பிள்ளைக்கு எதுவும் பாதிப்பு வந்திடக் கூடாதே..! அதனாலதான்.. நீ பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்க..! நீயே நல்ல டிசைனா பார்த்து எடுத்துக் கொடேன்.." என்ற அந்தப் பெண்ணின் ஐஸ் தடவிய வார்த்தைகள் எந்த வகையிலும் ராதிகாவை மகிழ்விக்கவில்லை..!

"இந்த காலத்திலேயும் ஆளுங்க இப்படி குறுகிய மனப்பான்மையோடு இருக்காங்க..!" மனதுக்குள்தான் புலம்பிக்கொள்ள முடிந்தது.. வெளிப்படையாக நாக்கு மேல் பல் போட்டு கஸ்டமரிடம் எதுவும் கேட்டு விட முடியாது.. நேரடியாக விஷயம் நிர்வாகத்திடம் போகும்.. வேலை காலியாகும்.. எதிரே இருப்பவர் மிளகாய் தூளை அள்ளி முகத்திலடித்தாலும் சிரித்தபடியே நிற்க வேண்டும் அதுதான் இந்த வேலையில் நீடிப்பதற்கான முதல் விதி..

சின்ன சின்னதாய் கழுத்து செயினை எடுத்து வைத்துக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் பக்கத்தில் சென்று அனு நின்றபோதிலும்.. கஸ்டமர் பேசிய வார்த்தைகள் ஒன்றும் பாதியுமாய் அவள் காதில் விழுந்து தொலைக்க.. மனம் வேதனையில் நசுங்கியது..

படபடவென இமைகளை அடித்து வெளிவர துடித்த கண்ணீர் துளிகளை உள்ளே இழுத்துக் கொண்டாள்..

"என்னடி நீ காட்டறியா.. இன்னொரு கஸ்டமர் வந்திருக்காங்க நான் போய் அங்க பாக்கறேன்.." பக்கத்திலிருந்தவள் அனுபமாவின் காதில் முணுமுணுக்க.. அவளோ தயக்கமாக எதிரே நின்றிருந்த கஸ்டமரை பார்த்தாள்..

இந்தப் பெண்ணின் முகத்தில் அனுபமாவை கண்டு எந்த அசௌகரியமும் முக சுளிப்பும் தென்பட்டதாக தெரியவில்லை.. கஸ்டமரின் முகம் புன்னகையில் விகசிக்க அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு.. "நீ போ..! நான் பாத்துக்கறேன்.." என்று அந்தப் பணிப்பெண்ணை வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டு..

ஒரு பவுன்.. ஒன்றரை.. இரண்டு.. என குட்டி குட்டியாய் வைக்கப்பட்டிருந்த அந்த மெல்லிய சங்கிலிகளை விலைப்பட்டியலோடு அந்த பெண்ணிடம் காண்பித்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க இங்க பாருங்களேன்.. அரை பவுன்ல கூட செயின் இருக்குது..! இதை எடுத்துக்கலாமா..?" மிக மெல்லியதாய் ஒரு தங்க பெண்டன்ட் வைத்திருந்த செயினை எடுத்து தன் கணவனிடம் காண்பித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்..

இது போன்ற அரை பவுன் செயினும் ஒரு பவுன் நெக்லஸும் கால் பவுன் கம்மலும் தான்.. எங்களைப் போன்ற ஏழைகளுக்கான தங்க நகை வாங்கும் ஆசையை தீர்த்துக் கொள்ளும் ஒரே வடிகால்..

வசதி குறைந்தவர்கள் தேடி தேடி சலித்தெடுத்து வாங்கிக் கொள்ளும் சொற்ப நகைகளில் இது போன்ற அரை பவுன் ஒரு பவுன் இரண்டு பவுன்களில் பெரிதான வேலைபாடுகளுடன் நிறைவாய் காட்சிதரும் டிசைன்களும் உண்டு..

இதன் மீது ஏனம்மா உனக்கு கண்.. இந்த மிகப்பெரிய நகை கடலில் வேறு டிசைன்களா கிடைக்கவில்லை.. இந்த ஒரு சில சொற்ப நகைகளாவது இல்லாதவர்களுக்காக இருந்து விட்டு போகட்டுமே..! மனதோடு பேசிக் கொண்டாள் அனுபமா..

"இதோ இந்த தடிமனான முறுக்கு செயின்.. கோதுமை செயின்..‌ பூ பூவாய் கோர்த்தது போல் இந்த சங்கிலி" என வேறு வேறு டிசைன்களை அந்த எடுத்துக்காட்டியும் கூட அந்த கஸ்டமருக்கு மெல்லிய சங்கிலியை தாண்டி வேறெங்கும் பார்வை செல்லவில்லை..

"இது ரொம்ப அழகா இருக்கு.. நான் இதையே எடுத்துக்கறேன் இதெல்லாம் வேண்டாம்..! பில் போடுங்க.." இறுதி முடிவாக சொல்லிவிட பெருமூச்சுவிட்டு புன்னகைத்தபடி.. அந்த நகையை எடுத்துக்கொண்டு கவுண்டருக்கு சென்றாள் அனு..

பில் போட்டு முடித்து.. இலவச இணைப்பாக ஒரு மணி பர்சையும் சேர்த்து சுவாமி படத்தின் முன்பு வைத்து இரண்டு சாமந்திப்‌பூ இதழ்களை அந்த சின்ன பெட்டிக்குள் போட்டு மூடி வைத்து.. நகை வாங்கிய பெண்ணிடம்.. "இன்னும் நிறைய நிறைய தங்கம் வாங்கணும்" என்று புன்னகையோடு தந்ததும் பில் கவுண்டரிலிருந்த பெண்ணை தாண்டி கஸ்டமரின் பார்வை அனுவிடம் நின்றது..

"தேங்க்யூ மா.." என்று விடைபெற்றுக்கொள்ள.. அந்த நடுத்தர வயது பெண் தந்த காயத்திற்கு இந்த பெண் புன்னகையால் மருந்து போட்டு சென்ற உணர்வு..!

மீண்டும் தன் இடத்திற்கு வந்து ஒரு சின்ன ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்..

"அனு போன் அடிக்குது பாரு.." ராதிகா சொல்லவும் டிராயரை திறந்து தனது அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்..

"சொல்லுங்க அண்ணி..!"

"பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செஞ்சியா அனு..!"

சில நொடிகள் மௌனத்திற்கு பின்பு..

"பண்ணிட்டேன் அண்ணி..! நீங்க கவலைப்படாதீங்க இன்னைக்கு சாயந்திரம் கொடுத்துடலாம்.."

"அன்னைக்கு அந்த ஆள் பேசின பேச்சு சரியில்ல.. உன்னையும் என்னையும் ஏதாவது சொல்லியிருந்தா கூட பரவாயில்லை.. பச்ச குழந்தைன்னு கூட பாக்காம நம்ம பவி குட்டியையும்..!" அதற்கு மேல் சொல்ல முடியாமல் எதிர்முனை விசித்து அழ ஆரம்பிக்க..

"அண்ணி.. அழாதீங்க.. நான்தான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொன்னேனே..! வாங்கின பணத்தை வட்டியோட அவன் முகத்தில் விசிறியடிச்சிட்டா போதும்.. இனிமே நம்ம வீட்டு பக்கமே அவன் வரமாட்டான்..‌ நீங்க கவலைப்படாம இருங்க.. நான் சாயந்திரம் பர்மிஷன் கேட்டு சீக்கிரமா வந்துடறேன்..!" இணைப்பை துண்டித்து விட்டு தலை குனிந்து அமர்ந்திருக்க பக்கத்தில் இருந்த ராதிகா ஆதரவை தோளை தொட்டாள்..

"என்னடி ஆச்சு..?"

"அண்ணன் வாங்கி வச்ச கடன்.. அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான்.. இப்ப கடங்காரன் வீட்டு வாசல்ல நின்னு அசிங்கமா கத்திட்டு போறான்.. பொம்பளைங்கன்னு கூட பாக்காம என்னையும் அண்ணியையும் கேவலமா பேசிட்டான் அந்த நாய்.."

"கடன வாங்கி வச்சுட்டு உன் அண்ணன். அவன் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டான்.. நீங்க ரெண்டு பேரும் கிணத்துல போட்ட கல்லாட்டம் அப்படியே இருந்தா என்ன அர்த்தம்.. என் பணத்துக்கும் வட்டிக்கும் என்னதான் வழி.. ரெண்டு நாள்தான் உங்களுக்கு டைம்.. அதுக்குள்ள பணத்தை வட்டியோட கட்ட பாருங்க இல்லனா பொம்பளைங்க ரெண்டு பேரையும் கொண்டுபோய் பாம்பேல வித்துட்டு என் பணத்தை புரோக்கர் கிட்ட வட்டியோட வசூல் பண்ணிக்குவேன் அதுலயும் அந்த சின்ன குட்டி இருக்குதே..‌!"

"அண்ணா ப்ளீஸ்.. ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க.. ஏற்கனவே நாங்க ரொம்ப நொந்து போயிருக்கோம்..‌! என்னை உங்க கூட பிறக்காத தங்கச்சியா நெனச்சு.."

"தங்கச்சியாவது மயிராவது.. பணம் திரும்பி வரலைனா உன்னை இழுத்துட்டு போய் குடும்பம் நடத்தவும் தயங்க மாட்டேன்..! கோழி நொண்டியா இருந்தாலும் குழம்பு ருசியாந்தானே இருக்கும்.." கண்களில் நீர் வழிய நின்றவளை தலை முதல் கால் வரை விரசமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் அந்த வட்டிக்காரன்..

"ஏய் அனு..! என்னடி யோசிக்கற..?" என்ற பிறகு அந்த கோரமான காட்சியிலிருந்து வெளியே வந்தவள்..‌

"ஒன்னுமில்ல..! ஒரு குடும்பத்தில் ஆம்பள இல்லாம போனா எவ்வளவு கஷ்டம்.. கேட்க நாதி கிடையாது.. போறவன் வர்றவனெல்லாம் கை வச்சு பார்க்கணும்னு நினைக்கற அளவுக்கு எங்க நிலமை இளக்காரமா போயிடுச்சு..! துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..

"ஏய் என்னடி பேசுற.. அதான் உங்க வீட்டோட ஒருத்தன் இருந்தானே..‌ உன் பாடிகார்ட் காளி..! அவன் எங்கடி போனான்..?"

"ப்ச்..! அவன் எங்கே போனான்னே தெரியல.. ஆள் ஒரு வாரமா காணும்.. அப்படியே போய் தொலையட்டும்.." சொன்னவளின் முகத்தில் அத்தனை வெறுப்பு..

"ஏன்டி இப்படி பேசற.. இந்நேரம் அவன் இருந்திருந்தா கண்ட நாயெல்லாம் நாக்கு மேல பல்ல போட்டு ஒரு வார்த்தை பேச முடியுமா.. கண்டமேனிக்கு பேசுற அந்த நாக்கை வெட்டி வீசி எரிஞ்சிருப்பான்.."

"அது.. அதுதான் பிரச்சினையே..! எங்களுக்கு நல்லது செய்யறேன் பேர்வழின்னு அவனால தேவையில்லாத வம்புதான் வந்து சேருது.. யோசிக்காம மூர்க்கத்தனமா இவன் கை நீட்டி வச்சிடுவான்.. பின்னாடியே வாலு மாதிரி பிரச்சனை ஒன்னு முளைச்சு வரும்.. அதை தீர்க்கறதுக்குள்ள எங்களுக்கு தாவு தீர்ந்து போயிடுது.. இனி அவன் வந்தாலும் வீட்டுக்குள்ள சேர்க்கறதா இல்ல..!"

"அட பாவமே அவன் ரொம்ப நல்லவன்டி..!"

"அப்படியா.. உனக்கு பிடிச்சிருந்தா உன் வீட்ல சேர்த்து வைச்சு சோறு போடு.. தண்டசோறு.."

"என்னது என் வீட்ல சேர்த்து வச்சுக்கணுமா.. அந்த முரட்டுக்காளை உனக்கு மட்டும்தானே அடங்கும்.." ராதிகா அனுபமாவின் தோளை இடித்து ஒரு மார்க்கமாய் சொல்ல..

"இங்க பாரு ராதிகா தேவையில்லாம அவனை என் கூட சேர்த்து வச்சு பேசாதே..! எனக்கு பயங்கரமா டென்ஷனாகுது..! அவனுக்கும் அன்னைக்கு வீட்டுக்கு வந்து கேவலமா பேசிட்டு போன வட்டிக்கடைக்காரனுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை.. என்ன பொறுத்த வரைக்கும் இரண்டு பேரோட பார்வையும் ஒன்னு தான்.. அப்படியே உரிச்சு பாக்கற பார்வை.. ச்சீ.." அருவருப்போடு இதழ்கள் சுழிந்தன..!

ராதிகாவிற்கு அவள் பேச்சு ஆச்சரியமாக இருந்தது..!

எத்தனையோ நாள் அனுபமா வேலைக்கு வரும்போது பைக்கை உருட்டிக் கொண்டே பின்னால் வருவான்.. சில நேரங்களில் மாலை வரைக்கும் பைக்கில் ஏறி அமர்ந்தபடி அவளுக்காக காத்திருப்பான்..

கடையில் வேலை செய்யும் பெண்கள்.. கடைக்கு வரும் நாகரீக மேல் தட்டு இளம் பெண்கள்..! என எத்தனை பேர் அவனை கடந்து போனாலும் ஏறிட்டு பார்த்ததாய் சரித்திரமே இல்லை..!

அனுபமாவின் உருவத்தை கண்டால் மட்டும்தான் உடலை உதறிக் கொண்டு எழுந்து நிற்பான் கண்களில் மின்னல் வெட்டும்.. சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு ஆரம்ப புள்ளியிலிருந்து அவள் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருப்பான்..

ஏன் இங்கு வேலை செய்யும் பெண்களில் கூட சில பேருக்கு அவன் மீது சின்னதான ஒரு கிரஷ் உண்டு.. தாங்கி தாங்கி நடக்கும் அனுபமாவை விட எந்த விதத்தில் தாங்கள் குறைந்து போய் விட்டோம்.. என்ற கர்வத்தில் பளிச்சென்ற ஒப்பனையுடன் அவன் முன்னால் நடந்து சென்று அட்டென்ஷன் சீக்கராய் பார்வையை கவர முயன்றதுண்டு..

செடி கொடி சிட்டுக்குருவி மரத்திலிருந்து அவன் தோள் மீது விழுந்து தாவிச் செல்லும் பூனை என அனைத்தையும் புது மாதிரியாக பார்ப்பவனின் பார்வை அந்த பெண்களின் நிழலையும் கூட தீண்டியதில்லை..!

இவ்வளவு ஏன்..? ஒரு வாரமாய் அவன் முகம் பாராமல் ராதிகாவிற்கு கூட என்னவோ போல்தான் இருக்கிறது.. ஆனால் அனுபமா கொஞ்சமும் சட்டை செய்யவில்லை..!

அடங்காத கேசம்.. ட்ரிம் செய்த தாடி.. எப்போதும் முறைக்கும் கண்கள்.. பெரிய மூக்கு.. அடர்த்தியான மீசை அழுத்தமான இதழ்கள் இறுகிய தாடை.. எந்நேரமும் பற்களை கடித்துக் கொண்டு கோபத்திலே இருப்பானா என்பது போல் ஒரு தோற்றம்..

அவன் பெயர் காளி.. காளீஸ்வரன்.. ஒரு முரட்டு பீஸ்..!

பொதுவாக இளம் பெண்களுக்கு தன் மணவாளனாக வரப்போகிறவன் ஒரு முரட்டு குழந்தையாக தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக்கூடியவனாக.. கொஞ்சம் வசீகரிக்கும் தோற்றத்தோடு என்னென்ன தகுதிகளுடன் இருக்க வேண்டுமென்ற கனவு இருக்குமல்லவா..

அந்த கனவுகளின் எழுபது சதவீதத்திற்கும் சொந்தக்காரன்..!

என்ன ஒன்று.. அதிகமாக பேச மாட்டான்.. அதிகமாக என்ன.. பேசவே மாட்டான்..! ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை வாயிலிருந்து உதிர்வதே கஷ்டம்..‌ அவன் செயல்கள் நிறைய பேசும்..!

உதாரணத்திற்கு ..

பேருந்தில் ஏற முடியாமல் சிரமப்பட்ட அனுபமாவை.. அலேக்காக தூக்கி வந்து வண்டியில் அமர வைத்து அழைத்துப் போன கதை..

இரண்டு நாட்களுக்கு அந்த கடையின் தூசு துரும்பு முதற்கொண்டு அத்தனை பேரும் இந்த கதையை பேசி சிரித்து வெட்கப்பட்டு கனவு கண்டு ஏங்கி தவித்து.. என பல மாதிரியான உணர்வுகள்..

"கொடுத்து வச்சவடி நீ..!" யாரோ ஒருத்தி வெளிப்படையாக சொல்லும் போது..

"தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமையாத்தான் இருக்கும்.. பக்கத்துல நின்னு பார்க்கும்போதுதான் உள்ள மறைஞ்சிருக்கற விஷமும் ஆபத்தும் தெரியும்..! அனுபமா சொன்னதின் உள்ளர்த்தங்களை எல்லாம் ராதிகாவால் புரிந்து கொள்ள முடியவில்லை..

அரசு மருத்துவமனை..!

வட்டி கடைக்காரன் வேலாயுதம் கை கால் உடைந்து கட்டு போட்டு காலை விரித்தபடி படுக்கையில் கிடந்தான்..

அவன் முன்னால் சப் இன்ஸ்பெக்டர் முரளி முத்து நின்றிருந்தார்..

"அடிச்சது யாருன்னு தெரியுமாய்யா..?"

"மூஞ்சில துணி கட்டியிருந்தானே..! எடுத்தவுடனே இரண்டு கையாலேயே முகத்துல வச்சான் ஒரு குத்து..‌ கண்ணெல்லாம் கலங்கி போச்சு.. அதுக்கப்புறம் எதுவுமே தெரியலையே..!"

"இந்த மாதிரி சொன்னா ஆளை எப்படி பிடிக்க முடியும்..‌ சுத்தி இருந்தவனுங்களும் பயந்துகிட்டு ஒருத்தனும் சாட்சி சொல்ல மாட்டேங்றான்..!"

"எனக்கு தெரியும் அது அவன் தான்..!"

"அவன்னா.. எவன்..?"

"அந்த நொண்டி சிறுக்கி ஆசைக்கும் அடிதடிக்குமா வீட்டோட ஒருத்தனை சேர்த்து வச்சிருக்காளே..! அவனேதான்..! பணத்த பைசல் பண்ண சொன்னதுக்கு ஆள வச்சு அடிச்சுப்புட்டா.."

"ஓ அந்த காளி பயலா..! அவன் தான் ஒரு வாரமா ஊரிலேயே இல்லையாமே..! சந்தேக கேஸ்ல கூட அரெஸ்ட் பண்ண முடியாது.. இங்க பாரு வேலாயுதம் போற இடத்துல எல்லாம் வம்பு வளர்த்து ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதிச்சு வச்சிருக்க..! இத்தனை நாள் உள்ளுக்குள்ள பொறுமிகிட்டு இருந்த எவனோ ஒருத்தன் வச்சு செஞ்சுட்டான்.. யார் என்னன்னு சரியா கண்டுபிடிச்சு கேஸ் குடு.. நான் விசாரிக்கறேன்.. இப்ப கிளம்பறேன்.. உடம்ப பாத்துக்கோ.." தொப்பியை மாட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் சப் இன்ஸ்பெக்டர் முரளி..

இரவு ஏழு மணியை தொட்டுவிட பதட்டத்தோடு அலைபேசியில் அனுபமாவை அழைக்க முயன்றாள் அவள் அண்ணி நதியா..

கம்ப்யூட்டர் பெண் அனுபமாவின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கவலை இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்க.. "ஐயோ இந்த நேரம் பார்த்து அந்த காளி பைய எங்கே போனான்..!"

நெஞ்சில் தடக் தடக் என்று வேகமாக துடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்..

"ஏய்.. மரியாதையா சொல்லு நகையை எங்க வச்சிருக்க.. நேத்து நீதான் அந்த செக்ஷன்ல இருந்த.. அஞ்சு பவுன் ஆரம் யாருக்கும் தெரியாம கால் முளைச்சு குதிச்சு ஓடி போச்சுதா.. நீ யாருக்கும் தெரியாம அதை எடுத்து உன் கழுத்துல போட்டு பார்த்ததை சிசிடிவி கேமராவில் பாத்தாச்சு..! ஒழுங்கா சொல்றியா.. இல்ல ஒட்டு துணி இல்லாம மொத்தமா உருவி செக் பண்ணி பார்க்கணுமா..?"

"இ.. இல்ல சத்தியமா நான் அதை எடுக்கல..! தயவுசெஞ்சு நம்புங்க சார்.." விம்மி விசித்து அழுகையுடன் திணறினாள் அனு..

"டேய் முதல்ல அவளை முட்டி போட சொல்லுடா..! முட்டி போடுடி.."

அந்தக் குரலில் அதிருந்து முழங்காலிட முயன்றவாள் பாதம் ஒத்துழைக்காமல் போனதில் கீழே விழுந்து அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்..

"ஓ.. நொண்டி..! இப்ப புரியுது உன்ன மாதிரி நொண்டி கழுதையை கல்யாணம் பண்ணிக்க ஆள் கிடைக்க மாட்டான்னு வரதட்சணைக்காக திருடி பணம் சேக்கறியாக்கும்.. டேய் போன் ஆன் பண்ணி வீடியோ எடுடா..! இந்த திருட்டு மு**யோட முகத்தை சோசியல் மீடியா முழுக்க காட்டணும்.. அப்பதான் இன்னொருத்தி இந்த மாதிரி திருடனும்னு யோசிக்க கூட பயப்படுவா.. போலீஸ்க்கு போன் செஞ்சியா..!"

"வேணா வேணா ப்ளீஸ் வீடியோ எடுக்காதீங்க.. சத்தியமா நான் திருடல.. அந்த நகை எங்க போச்சுன்னு எனக்கு தெரியாது..! கடைசியா நான்தான் செக் பண்ணி டிஸ்ப்ளேல வச்சேன்.. ஆனா எப்படி காணாம போச்சுன்னு எனக்கும் தெரியல.." அழுகையினூடே அவள் சொன்னதை பொருட்படுத்தாமல்.. மேஜை மீது அமர்ந்திருந்தவன் அனுபமாவின் கைப்பையை பரிசோதிக்க.. அதில் கட்டு கட்டாய் பணம்..

தொடரும்..
 
Last edited:
Well-known member
Joined
Nov 20, 2024
Messages
41
திருவிழான்னாலே அது நம்ம எஸ் வி கே ஸ்டோரோடதாங்க..

"சந்தோஷமா வாங்க அள்ளிக்கிட்டு போங்க..!"

குண்டூசியிலிருந்து குத்து விளக்கு வரை உங்க வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே..

ரகர ரகமாய் துணிமணிகள்.. விதவிதமாய் வைர தங்க ஆபரணங்கள்.. வீட்டு உபயோக பொருட்கள்..

அனைத்தும் நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய நியாயமான விலையில் உங்கள் எஸ் வி கே ஸ்டோர்ஸ்..!

வெண்ணையில் கடைந்தெடுத்து.. கொஞ்சமாய் குங்குமப்பூ தட்டி போட்டு செய்த சிலையாக சினிமா நடிகை ஒருத்தி அந்த பெரிய ஸ்கிரீனில் தழைய தழைய புடவையும் லெஹங்காவும் அணிந்து அந்த அரண்மனை ஸ்டுடியோ செட்டை சுற்றி சுற்றி வந்து பேசிக் கொண்டிருந்தாள்..

"ஏய்.. அனு.. ஏய்.." பக்கத்திலிருந்தவள் உலுக்கிய பிறகுதான் அந்த வண்ணமயமான மாய லோலகத்திலிருந்து பிரிந்து வந்தாள் அனு.. அனுபமா..

"ஏய் லூசு..! கஸ்டமர் வந்திருக்காங்க பாரு.. நீ பாட்டுக்கு ஸ்கிரீன பார்த்துகிட்டு மத்தி மாதிரி நிக்கற.. ஒரு நாளைக்கு ஆயிரம் வாட்டி அந்த விளம்பரம் வருது.. ஒவ்வொரு வாட்டியும் புதுசா பாக்கற அளவுக்கு அதுல அப்படி என்னத்த தான் கண்டியோ தெரியல..!" இவளைப் போலவே சந்தன நிற புடவையும் ஆரஞ்சு நிற போர்ட் நெக் ரவிக்கையும் அணிந்திருந்த ராதிகா சலித்துக் கொண்டாள்..

அவள் பேச்சை காதில் வாங்கிக் கொண்டாலும் அந்நேரத்தில் பதில் சொல்ல இயலாதவளாய் எதிரே நின்றிருந்த பெண்ணை கண்டு.. சொடக்கு போடும் நொடியில் இதழ்களில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு..

"சொல்லுங்க மேம் என்ன பாக்கறீங்க..?" என்றாள் சிநேகம் பூசிய குரலில்..

"ஜிமிக்கி பாக்கணும்..!"

"எத்தனை பவுன்ல பாக்கணும்..?"

"ரொம்ப வெயிட்டா வேண்டாம்..! ஒரு பவுனுக்குள்ள காட்டுங்க ஆனா தக்கையா இருக்கட்டும்..!"

"அப்படிங்களா..!" என்றபடியே கண்ணாடி பெட்டிக்கு மறுபக்கம் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த தங்க ஜிமிக்கி பலகைகளை நோட்டமிட்டவள்.. கொஞ்சமாய் நகர்ந்து ஏழெட்டு ஜிமிக்கி செட் அடங்கிய அந்த பலகையை எடுக்கும் நேரம்.. எதையோ கண்ட அந்த பெண்ணின் முகம் சுணங்கியது..

"ஏம்மா வேற யாராவது நகை காட்டுங்களேன்..!"

எதிரிலிருந்தவளை தாண்டி அந்த பெண்ணின் பார்வை இன்னொருத்தியை எட்டி போட..

"ஏன் மேடம்..! நான்தான் எடுத்து காட்டிட்டு இருக்கேனே..!" அனு புரியாமல் விழித்தபடி புன்னகைக்க முயன்றாள்..

"அந்தப் பெண்ணோ தர்ம சங்கடமாக தான் சொல்ல வந்ததை மென்று விழுங்கியபடி இல்லம்மா வேற யாரையாவது காட்ட சொல்லேன்..!" என்று தன்மையாக சொல்ல..

முகம் மாறி போனவளாக நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டு பக்கத்திலிருந்த ராதிகாவிடம் "நீயே காட்டு.." என்றபடி காலை ஊன்றி தத்தி தத்தி நடந்து போக..

அனு தள்ளி செல்லும் வரையிலும் காத்திருந்த அந்த பெண்.. "இதுக்காகத்தான் சொன்னேன்.. கர்ப்பிணி பொண்ணு சீமந்தத்துக்காக ஜிமிக்கி எடுக்க வந்தோம்.. நல்ல காரியத்துக்காக நகை எடுக்க வந்திருக்கையில ஊனமான பொண்ணோட கை தொட்டு கொடுக்கற நகையால என் பிள்ளைக்கு எதுவும் பாதிப்பு வந்திடக் கூடாதே..! அதனாலதான்.. நீ பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்க..! நீயே நல்ல டிசைனா பார்த்து எடுத்துக் கொடேன்.." என்ற அந்தப் பெண்ணின் ஐஸ் தடவிய வார்த்தைகள் எந்த வகையிலும் ராதிகாவை மகிழ்விக்கவில்லை..!

"இந்த காலத்திலேயும் ஆளுங்க இப்படி குறுகிய மனப்பான்மையோடு இருக்காங்க..!" மனதுக்குள்தான் புலம்பிக்கொள்ள முடிந்தது.. வெளிப்படையாக நாக்கு மேல் பல் போட்டு கஸ்டமரிடம் எதுவும் கேட்டு விட முடியாது.. நேரடியாக விஷயம் நிர்வாகத்திடம் போகும்.. வேலை காலியாகும்.. எதிரே இருப்பவர் மிளகாய் தூளை அள்ளி முகத்திலடித்தாலும் சிரித்தபடியே நிற்க வேண்டும் அதுதான் இந்த வேலையில் நீடிப்பதற்கான முதல் விதி..

சின்ன சின்னதாய் கழுத்து செயினை எடுத்து வைத்துக் கொண்டிருந்த இன்னொரு பெண்ணின் பக்கத்தில் சென்று அனு நின்றபோதிலும்.. கஸ்டமர் பேசிய வார்த்தைகள் ஒன்றும் பாதியுமாய் அவள் காதில் விழுந்து தொலைக்க.. மனம் வேதனையில் நசுங்கியது..

படபடவென இமைகளை அடித்து வெளிவர துடித்த கண்ணீர் துளிகளை உள்ளே இழுத்துக் கொண்டாள்..

"என்னடி நீ காட்டறியா.. இன்னொரு கஸ்டமர் வந்திருக்காங்க நான் போய் அங்க பாக்கறேன்.." பக்கத்திலிருந்தவள் அனுபமாவின் காதில் முணுமுணுக்க.. அவளோ தயக்கமாக எதிரே நின்றிருந்த கஸ்டமரை பார்த்தாள்..

இந்தப் பெண்ணின் முகத்தில் அனுபமாவை கண்டு எந்த அசௌகரியமும் முக சுளிப்பும் தென்பட்டதாக தெரியவில்லை.. கஸ்டமரின் முகம் புன்னகையில் விகசிக்க அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு.. "நீ போ..! நான் பாத்துக்கறேன்.." என்று அந்தப் பணிப்பெண்ணை வேறு இடத்திற்கு அனுப்பிவிட்டு..

ஒரு பவுன்.. ஒன்றரை.. இரண்டு.. என குட்டி குட்டியாய் வைக்கப்பட்டிருந்த அந்த மெல்லிய சங்கிலிகளை விலைப்பட்டியலோடு அந்த பெண்ணிடம் காண்பித்துக் கொண்டிருந்தாள்..

"என்னங்க இங்க பாருங்களேன்.. அரை பவுன்ல கூட செயின் இருக்குது..! இதை எடுத்துக்கலாமா..?" மிக மெல்லியதாய் ஒரு தங்க பெண்டன்ட் வைத்திருந்த செயினை எடுத்து தன் கணவனிடம் காண்பித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்..

இது போன்ற அரை பவுன் செயினும் ஒரு பவுன் நெக்லஸும் கால் பவுன் கம்மலும் தான்.. எங்களைப் போன்ற ஏழைகளுக்கான தங்க நகை வாங்கும் ஆசையை தீர்த்துக் கொள்ளும் ஒரே வழி..

வசதி குறைந்தவர்கள் தேடி தேடி சலித்தெடுத்து வாங்கிக் கொள்ளும் சொற்ப நகைகளில் இது போன்ற அரை பவுன் ஒரு பவுன் இரண்டு பவுன்களில் பெரிதான வேலைபாடுகளுடன் நிறைவாய் காட்சிதரும் டிசைன்களும் உண்டு..

இதன் மீது ஏனம்மா உனக்கு கண்.. இந்த மிகப்பெரிய நகை கடலில் வேறு டிசைன்களா கிடைக்கவில்லை.. இந்த ஒரு சில சொற்ப நகைகளாவது இல்லாதவர்களுக்காக இருந்து விட்டு போகட்டுமே..! மனதோடு பேசிக் கொண்டாள் அனுபமா..

"இதோ இந்த தடிமனான முறுக்கு செயின்.. கோதுமை செயின்..‌ பூ பூவாய் கோர்த்தது போல் இந்த சங்கிலி" என வேறு வேறு டிசைன்களை அந்த எடுத்துக்காட்டியும் கூட அந்த கஸ்டமருக்கு மெல்லிய சங்கிலியை தாண்டி வேறெங்கும் பார்வை செல்லவில்லை..

"இது ரொம்ப அழகா இருக்கு.. நான் இதையே எடுத்துக்கறேன் இதெல்லாம் வேண்டாம்..! பில் போடுங்க.." இறுதி முடிவாக சொல்லிவிட பெருமூச்சுவிட்டு புன்னகைத்தபடி.. அந்த நகையை எடுத்துக்கொண்டு கவுண்டருக்கு சென்றாள் அனு..

பில் போட்டு முடித்து.. இலவச இணைப்பாக ஒரு மணி பர்சையும் சேர்த்து சுவாமி படத்தின் முன்பு வைத்து இரண்டு சாமந்திப்‌பூ இதழ்களை அந்த சின்ன பெட்டிக்குள் போட்டு மூடி வைத்து.. நகை வாங்கிய பெண்ணிடம்.. "இன்னும் நிறைய நிறைய தங்கம் வாங்கணும்" என்று புன்னகையோடு தந்ததும் பில் கவுண்டரிலிருந்த பெண்ணை தாண்டி கஸ்டமரின் பார்வை அனுவிடம் நின்றது..

"தேங்க்யூ மா.." என்று விடைபெற்றுக்கொள்ள.. அந்த நடுத்தர வயது பெண் தந்த காயத்திற்கு இந்த பெண் புன்னகையால் மருந்து போட்டு சென்ற உணர்வு..!

மீண்டும் தன் இடத்திற்கு வந்து ஒரு சின்ன ஸ்டூலை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்..

"அனு போன் அடிக்குது பாரு.." ராதிகா சொல்லவும் டிராயரை திறந்து தனது அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்..

"சொல்லுங்க அண்ணி..!"

"பணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செஞ்சியா அனு..!"

சில நொடிகள் மௌனத்திற்கு பின்பு..

"பண்ணிட்டேன் அண்ணி..! நீங்க கவலைப்படாதீங்க இன்னைக்கு சாயந்திரம் கொடுத்துடலாம்.."

"அன்னைக்கு அந்த ஆள் பேசின பேச்சு சரியில்ல.. உன்னையும் என்னையும் ஏதாவது சொல்லியிருந்தா கூட பரவாயில்லை.. பச்ச குழந்தைன்னு கூட பாக்காம நம்ம பவி குட்டியையும்..!" அதற்கு மேல் சொல்ல முடியாமல் எதிர்முனை விசித்து அழ ஆரம்பிக்க..

"அண்ணி.. அழாதீங்க.. நான்தான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொன்னேனே..! வாங்கின பணத்தை வட்டியோட அவன் முகத்தில் விசிறியடிச்சிட்டா போதும்.. இனிமே நம்ம வீட்டு பக்கமே அவன் வரமாட்டான்..‌ நீங்க கவலைப்படாம இருங்க.. நான் சாயந்திரம் பர்மிஷன் கேட்டு சீக்கிரமா வந்துடறேன்..!" இணைப்பை துண்டித்து விட்டு தலை குனிந்து அமர்ந்திருக்க பக்கத்தில் இருந்த ராதிகா ஆதரவை தோளை தொட்டாள்..

"என்னடி ஆச்சு..?"

"அண்ணன் வாங்கி வச்ச கடன்.. அவன் நிம்மதியா போய் சேர்ந்துட்டான்.. இப்ப கடங்காரன் வீட்டு வாசல்ல நின்னு அசிங்கமா கத்திட்டு போறான்.. பொம்பளைங்கன்னு கூட பாக்காம என்னையும் அண்ணியையும் கேவலமா பேசிட்டான் அந்த நாய்.."

"கடன வாங்கி வச்சுட்டு உன் அண்ணன். அவன் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டான்.. நீங்க ரெண்டு பேரும் கிணத்துல போட்ட கல்லாட்டம் அப்படியே இருந்தா என்ன அர்த்தம்.. என் பணத்துக்கும் வட்டிக்கும் என்னதான் வழி.. ரெண்டு நாள்தான் உங்களுக்கு டைம்.. அதுக்குள்ள பணத்தை வட்டியோட கட்ட பாருங்க இல்லனா பொம்பளைங்க ரெண்டு பேரையும் கொண்டுபோய் பாம்பேல வித்துட்டு என் பணத்தை புரோக்கர் கிட்ட வட்டியோட வசூல் பண்ணிக்குவேன் அதுலயும் அந்த சின்ன குட்டி இருக்குதே..‌!"

"அண்ணா ப்ளீஸ்.. ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க.. ஏற்கனவே நாங்க ரொம்ப நொந்து போயிருக்கோம்..‌! என்னை உங்க கூட பிறக்காத தங்கச்சியா நெனச்சு.."

"தங்கச்சியாவது மயிரா வது.. பணம் திரும்பி வரலைனா உன்னை இழுத்துட்டு போய் குடும்பம் நடத்தவும் தயங்க மாட்டேன்..! கோழி நொண்டியா இருந்தாலும் குழம்பு ருசியாந்தானே இருக்கும்.." கண்களில் நீர் வழிய நின்றவளை தலை முதல் கால் வரை விரசமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் அந்த வட்டிக்காரன்..

"ஏய் அனு..! என்னடி யோசிக்கற..?" என்ற பிறகு அந்த கோரமான காட்சியிலிருந்து வெளியே வந்தவள்..‌

"ஒன்னுமில்ல..! ஒரு குடும்பத்தில் ஆம்பள இல்லாம போனா எவ்வளவு கஷ்டம்.. கேட்க நாதி கிடையாது.. போறவன் வர்றவனெல்லாம் கை வச்சு பார்க்கணும்னு நினைக்கற அளவுக்கு எங்க நிலமை இளக்காரமா போயிடுச்சு..! துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்..

"ஏய் என்னடி பேசுற.. அதான் உங்க வீட்டோட ஒருத்தன் இருந்தானே..‌ உன் பாடிகார்ட் காளி..! அவன் எங்கடி போனான்..?"

"ப்ச்..! அவன் எங்கே போனான்னே தெரியல.. ஆள் ஒரு வாரமா காணும்.. அப்படியே போய் தொலையட்டும்.." சொன்னவளின் முகத்தில் அத்தனை வெறுப்பு..

"ஏன்டி இப்படி பேசற.. இந்நேரம் அவன் இருந்திருந்தா கண்ட நாயெல்லாம் நாக்கு மேல பல்ல போட்டு ஒரு வார்த்தை பேச முடியுமா.. கண்டமேனிக்கு பேசுற அந்த நாக்கை வெட்டி வீசி எரிஞ்சிருப்பான்.."

"அது.. அதுதான் பிரச்சினையே..! எங்களுக்கு நல்லது செய்யறேன் பேர்வழின்னு அவனால தேவையில்லாத வம்புதான் வந்து சேருது.. யோசிக்காம மூர்க்கத்தனமா இவன் கை நீட்டி வச்சிடுவான்.. பின்னாடியே வாலு மாதிரி பிரச்சனை ஒன்னு முளைச்சு வரும்.. அதை தீர்க்கறதுக்குள்ள எங்களுக்கு தாவு தீர்ந்து போயிடுது.. இனி அவன் வந்தாலும் வீட்டுக்குள்ள சேர்க்கறதா இல்ல..!"

"அட பாவமே அவ ரொம்ப நல்லவன்டி..!"

"அப்படியா.. உனக்கு பிடிச்சிருந்தா உன் வீட்ல சேர்த்து வைச்சு சோறு போடு.. தண்டசோறு.."

"என்னது என் வீட்ல சேர்த்து வச்சுக்கணுமா.. அந்த முரட்டுக்காளை உனக்கு மட்டும்தானே அடங்கும்.." ராதிகா அனுபமாவின் தோளை இடித்து ஒரு மார்க்கமாய் சொல்ல..

"இங்க பாரு ராதிகா தேவையில்லாம அவனை என் கூட சேர்த்து வச்சு பேசாதே..! எனக்கு பயங்கரமா டென்ஷனாகுது..! அவனுக்கும் அன்னைக்கு வீட்டுக்கு வந்து கேவலமா பேசிட்டு போன வட்டிக்கடைக்காரனுக்கும் பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை.. என்ன பொறுத்த வரைக்கும் இரண்டு பேரோட பார்வையும் ஒன்னு தான்.. அப்படியே உரிச்சு பாக்கற பார்வை.. ச்சீ.." அருவருப்போடு இதழ்கள் சுழிந்தன..!

ராதிகாவிற்கு அவள் பேச்சு ஆச்சரியமாக இருந்தது..!

எத்தனையோ நாள் அனுபமா வேலைக்கு வரும்போது பைக்கை உருட்டிக் கொண்டே பின்னால் வருவான்.. சில நேரங்களில் மாலை வரைக்கும் பைக்கில் ஏறி அமர்ந்தபடி அவளுக்காக காத்திருப்பான்..

கடையில் வேலை செய்யும் பெண்கள்.. கடைக்கு வரும் நாகரீக மேல் தட்டு இளம் பெண்கள்..! என எத்தனை பேர் அவனை கடந்து போனாலும் ஏறிட்டு பார்த்ததாய் சரித்திரமே இல்லை..!

அனுபமாவின் உருவத்தை கண்டால் மட்டும்தான் உடலை உதறிக் கொண்டு எழுந்து நிற்பான் கண்களில் மின்னல் வெட்டும்.. சட்டையை இழுத்து விட்டுக்கொண்டு ஆரம்ப புள்ளியிலிருந்து அவள் உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டே இருப்பான்..

ஏன் இங்கு வேலை செய்யும் பெண்களில் கூட சில பேருக்கு அவன் மீது சின்னதான ஒரு கிரஷ் உண்டு.. தாங்கி தாங்கி நடக்கும் அனுபமாவை விட எந்த விதத்தில் தாங்கள் குறைந்து போய் விட்டோம்.. என்ற கர்வத்தில் பளிச்சென்ற ஒப்பனையுடன் அவன் முன்னால் நடந்த சென்று பார்வையை கவர முயன்றதுண்டு..

செடி கொடி சிட்டுக்குருவி மரத்திலிருந்து அவன் தோள் மீது விழுந்து தாவிச் செல்லும் பூனை என அனைத்தையும் புது மாதிரியாக பார்ப்பவனின் பார்வை அந்த பெண்களின் நிழலையும் கூட தீண்டியதில்லை..!

இவ்வளவு ஏன்..? ஒரு வாரமாய் அவன் முகம் பாராமல் ராதிகாவிற்கு கூட என்னவோ போல் தான் இருக்கிறது.. ஆனால் அனுபமா கொஞ்சமும் சட்டை செய்யவில்லை..!

அடங்காத கேசம்.. ட்ரிம் செய்த தாடி.. எப்போதும் முறைக்கும் கண்கள்.. பெரிய மூக்கு.. அடர்த்தியான மீசை அழுத்தமான இதழ்கள் இறுகிய தாடை.. எந்நேரமும் பற்களை கடித்துக் கொண்டு கோபத்திலே இருப்பானா என்பது போல் ஒரு தோற்றம்..

அவன் பெயர் காளி.. காளீஸ்வரன்.. ஒரு முரட்டு பீஸ்..!

பொதுவாக இளம் பெண்களுக்கு தன் மணவாளனாக வரப்போகிறவன் ஒரு முரட்டு குழந்தையாக தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக்கூடியவனாக.. கொஞ்சம் வசீகரிக்கும் தோற்றத்தோடு என்னென்ன தகுதிகளுடன் இருக்க வேண்டுமென்ற கனவு இருக்குமல்லவா..

அந்த கனவுகளின் எழுபது சதவீதத்திற்கும் சொந்தக்காரன்..!

என்ன ஒன்று.. அதிகமாக பேச மாட்டான்.. அதிகமாக என்ன.. பேசவே மாட்டான்..! ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை வாயிலிருந்து உதிர்வதே கஷ்டம்..‌ அவன் செயல்கள் நிறைய பேசும்..!

உதாரணத்திற்கு ..

பேருந்தில் ஏற முடியாமல் சிரமப்பட்ட அனுபமாவை.. அலேக்காக தூக்கி வந்து வண்டியில் அமர வைத்து அழைத்துப் போன கதை..

இரண்டு நாட்களுக்கு அந்த கடையின் தூசு துரும்பு முதற்கொண்டு அத்தனை பேரும் இந்த கதையை பேசி சிரித்து வெட்கப்பட்டு கனவு கண்டு ஏங்கி தவித்து.. என பல மாதிரியான உணர்வுகள்..

"கொடுத்து வச்சவடி நீ..!" யாரோ ஒருத்தி வெளிப்படையாக சொல்லும் போது..

"தூரத்து பக்ச்சை கண்ணுக்கு குளுமையாத்தான் இருக்கும்.. பக்கத்துல நின்னு பார்க்கும்போதுதான் உள்ள மறைஞ்சிருக்கற விஷமும் ஆபத்தும் தெரியும்..! அனுபமா சொன்னதின் உள்ளர்த்தங்களை எல்லாம் ராதிகாவால் புரிந்து கொள்ள முடியவில்லை..

அரசு மருத்துவமனை..!

வட்டி கடைக்காரன் வேலாயுதம் கை கால் உடைந்து கட்டு போட்டு காலை விரித்தபடி படுக்கையில் கிடந்தான்..

அவன் முன்னால் சப் இன்ஸ்பெக்டர் முரளி முத்து நின்றிருந்தார்..

"அடிச்சது யாருன்னு தெரியுமாய்யா..?"

"மூஞ்சில துணி கட்டியிருந்தானே..! எடுத்தவுடனே இரண்டு கையாலேயே முகத்துல வச்சான் ஒரு குத்து..‌ கண்ணெல்லாம் கலங்கி போச்சு.. அதுக்கப்புறம் எதுவுமே தெரியலையே..!"

"இந்த மாதிரி சொன்னா ஆளை எப்படி பிடிக்க முடியும்..‌ சுத்தி இருந்தவனுங்களும் பயந்துகிட்டு ஒருத்தனும் சாட்சி சொல்ல மாட்டேங்றான்..!"

"எனக்கு தெரியும் அது அவன் தான்..!"

"அவன்னா.. எவன்..?"

"அந்த நொண்டி சிறுக்கி ஆசைக்கும் அடிதடிக்குமா வீட்டோட ஒருத்தனை சேர்த்து வச்சிருக்காளே..! அவனேதான்..! பணத்த பைசல் பண்ண சொன்னதுக்கு ஆள வச்சு அடிச்சுப்புட்டா.."

"ஓ அந்த காளி பயலா..! அவன் தான் ஒரு வாரமா ஊரிலேயே இல்லையாமே..! சந்தேக கேஸ்ல கூட அரெஸ்ட் பண்ண முடியாது.. இங்க பாரு வேலாயுதம் போற இடத்துல எல்லாம் வம்பு வளர்த்து ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதிச்சு வச்சிருக்க..! இத்தனை நாள் உள்ளுக்குள்ள பொறுமிகிட்டு இருந்த எவனோ ஒருத்தன் வச்சு செஞ்சுட்டான்.. யார் என்னன்னு சரியா கண்டுபிடிச்சு கேஸ் குடு.. நான் விசாரிக்கறேன்.. இப்ப கிளம்பறேன்.. உடம்ப பாத்துக்கோ.." தொப்பியை மாட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் சப் இன்ஸ்பெக்டர் முரளி..

இரவு ஏழு மணியை தொட்டுவிட பதட்டத்தோடு அலைபேசியில் அனுபமாவை அழைக்க முயன்றாள் அவள் அண்ணி நதியா..

கம்ப்யூட்டர் பெண் அனுபமாவின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கவலை இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்க.. "ஐயோ இந்த நேரம் பார்த்து அந்த காளி பைய எங்கே போனான்..!"

நெஞ்சில் தடக் தடக் என்று வேகமாக துடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்..

"ஏய்.. மரியாதையா சொல்லு நகையை எங்க வச்சிருக்க.. நேத்து நீதான் அந்த செக்ஷன்ல இருந்த.. அஞ்சு பவுன் ஆரம் யாருக்கும் தெரியாம கால் முளைச்சு குதிச்சு ஓடி போச்சுதா.. நீ யாருக்கும் தெரியாம அதை எடுத்து உன் கழுத்துல போட்டு பார்த்ததை சிசிடிவி கேமராவில் பாத்தாச்சு..! ஒழுங்கா சொல்றியா.. இல்ல ஒட்டு துணி இல்லாம மொத்தமா உருவி செக் பண்ணி பார்க்கணுமா..?"

"இ.. இல்ல சத்தியமா நான் அதை எடுக்கல..! தயவுசெஞ்சு நம்புங்க சார்.." விம்மி விசித்து அழுகையுடன் திணறினாள் அனு..

"டேய் முதல்ல அவளை முட்டி போட சொல்லுடா..! முட்டி போடுடி.."

அந்தக் குரலில் அதிருந்து முழங்காலிட முயன்றவாள் பாதம் ஒத்துழைக்காமல் போனதில் கீழே விழுந்து அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தாள்..

"ஓ.. நொண்டி..! இப்ப புரியுது உன்ன மாதிரி நொண்டி கழுதையை கல்யாணம் பண்ணிக்க ஆள் கிடைக்க மாட்டான்னு வரதட்சணைக்காக திருடி பணம் சேக்கறியாக்கும்.. டேய் போன் ஆன் பண்ணி வீடியோ எடுடா..! இந்த திருட்டு மு**யோட முகத்தை சோசியல் மீடியா முழுக்க காட்டணும்.. அப்பதான் இன்னொருத்தி இந்த மாதிரி யோசிக்க கூட பயப்படுவா.. போலீஸ்க்கு போன் செஞ்சியா..!"

"வேணா வேணா ப்ளீஸ் வீடியோ எடுக்காதீங்க.. சத்தியமா நான் திருடல.. அந்த நகை எங்க போச்சுன்னு எனக்கு தெரியாது..! கடைசியா நான்தான் செக் பண்ணி டிஸ்ப்ளேல வச்சேன்.. ஆனா எப்படி காணாம போச்சுன்னு எனக்கும் தெரியல.." அழுகையினூடே அவள் சொன்னதை பொருட்படுத்தாமல்.. மேஜை மீது அமர்ந்திருந்தவன் அனுபமாவின் கைப்பையை பரிசோதிக்க.. அதில் கட்டு கட்டாய் பணம்..

தொடரும்..
அய்யோ வட்டி காரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பார்த்து இவனுங்க அனு வை தப்பா எடுத்துப் பாருங்க போலயே 😳😳😳
என்ன வட்டி கடக்காரரே சேதாரம் கொஞ்சம் அதிகம் போல எல்லாம் காளி கைவண்ணம் தான் 🤣🤣🤣
இந்த மொரட்டு பீசுக்கு அனு மேல அப்படி என்ன பாசம் ரெண்டு பேருக்கும் இடையே என்ன சம்பந்தம் இருக்கும் 🤔🤔🤔
காலம் எவ்வளவு தான் மாற்றம் கண்டாலும் இன்னும் இப்படி பட்ட மனிதர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் 🤦🤦🤦 நீ கலங்காதே டா அனு விட்டு தள்ளு 🙋🙋🙋
 
Member
Joined
Apr 30, 2025
Messages
23

New story.... 😳👌👌👌💜💜💜💜💜💜.... Wow.... 👌👌👌.... Anu.... Ippave anuthabathai allura....... Kali......
 
Member
Joined
Jul 19, 2025
Messages
20
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Active member
Joined
Jul 10, 2024
Messages
45
அனு ஆரம்பமே அவஸ்தையில தான். வட்டிகாரனுக்கு கொடுக்க வச்சிருந்த பணம். இவனுங்க இதை தப்பா எடுத்துக்குவாங்களே.

காளியின் பாசமும், நேசமும் அனு மேல மட்டும் தான். இதை அனு புரிந்து கொள்ள வேண்டுமே.
 
Active member
Joined
Oct 26, 2024
Messages
31

New story.. 👌🥰
 
Active member
Joined
May 3, 2025
Messages
36
Very different start...all d best sana baby...

அனு...காளி ....combination super...y மா காளி ah பிடிக்கல உனக்கு.... போக போக அவனோட லவ் புரியும்...but அந்த வட்டிகாரனோட compare பண்ணாத அனு... அந்த வட்டிக்காரன் நீ மட்டும் இல்ல யாரா பார்த்தாலும் அப்டித பாப்பான்...but காளி அந்த type ah?..never..

பாவம் இவளோட வட்டி பணத்தை எடுத்துப்பானுங்களோ....பாவி பயலுக....
ஆன அனு கழுத்துல வெச்சு பார்த்ததா சொல்றாங்களே அது என்னவா இருக்கும்...🤔🤔..
 
Member
Joined
Jul 19, 2024
Messages
25

Pavam antha anu Ava kita vachu iruka kasa ah pathu thapa ah purunjuka poranga ah
 
Member
Joined
Jul 16, 2025
Messages
21
இன்னும் 1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாத பைத்தியங்கள் இவர்கள் எல்லாம் நல்ல காரியமாம் தப்பாயிடுமாம்😡...அதென்னடா பொண்ணுங்கனா அவங்க character பத்தி தப்பா பேசறக்கும் அவங்கள மானபங்க செய்யரத்துக்கும் எப்பவும் தயாரா இருப்பீங்க போல😈... எப்பவும் இப்படி காளி மாதிரி ஒருத்தனுக்கு காத்துட்டு இருக்க முடியுமா பொண்ணுங்க👿... எப்படா திருந்துவிங்க🤬😡👿 ..
 
New member
Joined
Jun 25, 2025
Messages
1

SVK means andha K kaali ahh🤗🤩
 
Member
Joined
Feb 15, 2025
Messages
35
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
 
Member
Joined
Feb 26, 2025
Messages
31
என்னடா இது சோதனைக்கு மேல் சோதனையா இருக்கு அனுவுக்கு
 
Top