- Joined
- Jan 10, 2023
- Messages
- 86
- Thread Author
- #1
நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருந்த புகழ் பெற்ற ஒன்பது தளங்கள் கொண்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. புற நோயாளிகள் ஒரு பக்கம் காத்திருக்க.. மறுபக்கம் மருத்துவர்களும் செவிலியர்களும் மேல் தளத்தில் அட்மிட் செய்யப்பட்டிருந்த நோயாளிகளின் வார்டுகளை விசிட் செய்த வண்ணம் பரபரப்பாக இருந்தனர்..!
கீழ் தளத்தின் வலது பக்கத்தில் மகப்பேறு பிரிவில் கர்ப்பிணி பெண்கள் அமர்ந்திருக்க.. அதை தொடர்ந்து மெட்டர்னிட்டி வார்டு..
உறவுக்கார கூட்டம் பிறக்கப்போகும் குழந்தைகளை காண வழி மேல் விழி வைத்து காத்திருந்தது..
பிரசவ அறைக்கு பக்கத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண்கள் ஒரு பக்கம்..
உள்ளே ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டு வலியில் கதறி கொண்டிருந்த பெண்கள் மறுபக்கம்..
வயிற்றை சுத்தம் செய்ய மருந்து கொடுக்கப்பட்ட பின் கழிப்பறை வாசலில் காத்திருந்த பெண்கள்.. என அடுத்த தலைமுறையை பூமிக்கு கொண்டுவர பெண்கள் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தனர்..
லேசான கலவரத்துடன்.. மிச்சம் ஆர்வம் கலந்த பரபரப்புடன்
இரண்டு மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டு பிரசவ வார்டை எட்டி எட்டி பார்த்தபடி தனது கணவனின் கரத்தை இறுக்க பற்றியிருந்தாள் சுப்ரியா..
"ஏய் என்னாச்சு ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க..! கையை முறுக்கி நசுக்கிடாதம்மா.. வலிக்குதும்மா விடு..!" என்று அவளிடமிருந்து மெல்ல தன் கையை உருவி கொண்டவன்.. அப்படி என்ன எட்டி எட்டி பாக்கற..? என்றபடியே அவள் பார்த்த திசையை தலை சாய்த்து பார்த்தான் அவள் கணவன் ராஜேஷ்..
பிரசவ வார்டுக்கு வெளியே சுத்திட்டு இருக்கிற பிரகனண்ட் லேடீஸ தான் பாத்துட்டு இருக்கேன்..! ஒருத்தர் முகம் கூட சரியில்லையே.. பாவம் ரொம்ப வலிக்குது போலிருக்கு.. எல்லாருமே ஒரு மாதிரி டென்ஷனா இருக்காங்க.. அதுலயும் அந்த ரெட் கலர் நைட்டி போட்டிருக்கற பொண்ணு அழறதை பார்த்தா எனக்கே பயமா இருக்கு..!"
"ஹாஹா.. இப்படித்தான் பயப்படுவாங்களாம்.. பிரசவ நேரத்தில் அந்த வலி அவஸ்தையால் இனி குழந்தையே பெத்துக்க கூடாதுன்னு பிரசவ வைராக்கியம் வரை போய் அப்புறம் அடுத்த ஒரே வருஷத்துல வயித்த தள்ளிக்கிட்டு அடுத்த குழந்தைக்காக ஹாஸ்பிடல்ல நிப்பாங்களாம்.. வலிச்சு பிள்ளை பெத்துக்கும் போதே நாட்டோட மக்கள் தொகை 140 கோடியை தாண்டி எங்கேயோ போய் நிக்குது .. இதுல இந்த பிரசவ வலியும் பாரமும் மட்டும் இல்லைன்னு வச்சுக்கோ.. ஒவ்வொருத்தனுக்கும் ஊர்ல இன்னைக்கு நிக்க கூட இடம் இருக்காது.." ராஜேஷ் கேலியாகச் சொல்ல அவன் தோளில் இடித்தாள் சுப்ரியா..
"என்னவோ எல்லாத்துக்கும் பொம்பளைங்க மட்டும் தான் காரணம்ங்கிற மாதிரி சொல்றீங்க..! பெண்களோட பிரசவ வலிக்கும் வேதனைக்கும் இப்படி ஒரு மோசமான விளக்கத்தை யாருமே தந்திருக்க முடியாது.." அவள் கொஞ்சம் கடுப்பாக உதட்டை சுழிக்க..
"சரி விடு என்னோட கருத்தை சொன்னேன்.. அங்க பாக்கறதுக்கு பதிலா இதோ இந்த பக்கம் பாரு.. பிறந்த குழந்தையை தூக்கிட்டு வந்து எவ்வளவு சந்தோஷமா பெத்தவன் கையில கொடுக்கறாங்க பாரு.. சொந்தக்காரங்க முகத்தில் சந்தோஷத்தை பார்..!"
அவன் சொல்லச் சொல்ல டெலிவரி வார்டை எட்டி பார்த்தவளின் முகத்தில் லேசான புன்னகை..
உண்மைதான்.. பூத்துண்டில் சுற்றப்பட்ட ஒரு பூக்குவியலை கொண்டு வந்து தகப்பனின் கையில் கொடுத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் அந்த செவிலி பெண்.. அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.. பாசத்தோடு குழந்தையின் முகத்தில் முத்தமிட்டதாய் தோன்றியது.. அந்த இடத்தில் தன் கணவன் ராஜேஷை பொருத்தி பார்த்துக்கொண்டே அவன் தோளில் சாய்ந்தாள் சுப்ரியா..
வரிசையாக டோக்கன் படி பெண்கள் ஒவ்வொருவரும் உள்ளே சென்றுவர.. நேரம் போக போக ராஜேஷின் முகத்தில் கடுகடுவென ஒரு காரத்தன்மை.
"உன் டோக்கன் எத்தனாவது நம்பர் பாரு..! அவள் கையிலிருந்த டோக்கன் நம்பரை வாங்கிப் பார்த்தவன்..
"நாப்பத்தி எட்டா..! அடேங்கப்பா..! இப்பதான் பத்து உள்ள போகுது.. இன்னும் முப்பத்தி ஏழு இருக்குதே..! இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கனுமோ..! ரெண்டு மணி நேரம்தான் பர்மிஷன் போட்டிருக்கேன்.." ராஜேஷ் சலித்துக் கொள்ள.. சுப்ரியாவிற்குள் சின்னதாய் மனச்சுருக்கம்..
"மாசம் ஒருமுறை தானே..! இந்த ஹாஸ்பிடல்ல இவ்வளவு கூட்டம் இருக்கும்னு தெரிஞ்சு தானே வந்தோம்..!"
"என்ன பெரிய கூட்டம்.. செக்கப் டெஸ்ட் மருந்துன்னு எவ்வளவு பணம் தண்டம் அழறோம்.. இதுல பார்க்கிங் வேற நூறு ரூபா கப்பங் கட்டணும்.. எத்தனை பேர் காத்திருக்காங்க.. ஒண்ணுத்துக்கு மூணு டாக்டரா போட்டு காத்திருக்கிறவங்களை பார்த்து முடிச்சு சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பலாம் இல்ல..! இதுக்குதான் அம்மா அப்பவே சொன்னாங்க கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்கு போங்கன்னு..!"
"கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலா..! அவ்வளவு எடுத்து சொல்லியும் கூட மறுபடி என்ன இப்படி பேசறீங்க.. உங்க அம்மா பழைய காலத்து ஆளு.. உங்களுக்கு தெரியாதா..? இது நமக்கு முதல் குழந்தை.. கவர்மெண்ட் ஹாஸ்பிடல் டிரீட்மென்ட் எப்படி இருக்குமோ என்னவோ..! அதுவும் இல்லாம அங்க ரொம்ப திட்டுவாங்களாம்.. வாய்க்கு வந்தபடி பேசுவாங்களாம்.. பக்கத்து வீட்டு தேவியக்கா சொன்னாங்க.. என்னால அதெல்லாம் பொறுத்துக்க முடியாது.."
"என்னடி பேசற.. அப்ப அங்க குழந்தை பெத்துக்கறவங்க எல்லாம் பொம்பளைங்க இல்லையா..! இல்ல அவங்க யாரும் எந்த பேச்சையும் வாங்கறதில்லையா..! முன்ன மாதிரி இல்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இப்ப நல்ல ட்ரீட்மென்ட்டும் கிடைக்குது.. கர்ப்பிணி பெண்களுக்கு நிறைய சலுகைகளும் தராங்க..! பிரைவேட் ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் கிடைக்கறதே பெரிய விஷயந்தான்.. இதோ இங்க பாரு.. பணத்தையும் கட்டி காத்து கிடக்க வேண்டியதான் இருக்குது..!" ராஜேஷின் வார்த்தைகள் நெருப்பு பொறிகளாய் அவளை சுட்டன..
ராஜேஷ் இப்படித்தான்.. சிரிக்க சிரிக்க பேசுவான்.. சட்டென மனநிலை மாறி எதிர்பாராத நேரத்தில் தேளாக விஷத்தை கொட்டுவான்..
எப்போது என்ன பேசுவான் என்று கணிக்க முடியாமல் அவனை புரிந்து கொள்ள முடியாமல் இன்றளவும் திணறிக் கொண்டிருக்கிறாள் சுப்ரியா..!
"ஏன் இப்படி பொருமிகிட்டே இருக்கீங்க..! நல்லாத்தானே பேசிட்டு இருந்தீங்க இப்ப திடீர்னு என்ன ஆச்சு..!"
"என் கஷ்டம் எனக்கு தான் தெரியும்..! பணம் செலவு பண்ணனுமே.. காசு மரத்திலிருந்து கொட்டுதா என்ன..! இதோ ரெண்டு மணி நேரம் பர்மிஷன்.. இந்த நேரத்தை ஈடு செய்ய நான் ராத்திரி எட்டு மணி வரைக்கும் உழைக்கணும்..! ஒரு வார்த்தை தாங்க மாட்டேன்.. ஒரு சொல் வாங்க மாட்டேன்னு வாழனும்னா ராஜா வீட்டு கன்னுக்குட்டியாத்தான் இருக்கணும்.. அவ்வளவு மான ரோஷம் பார்த்து பொண்ணே பூவேன்னு நோகாம வாழறவ என்னை கல்யாணம் பண்ணியிருக்க கூடாது.. என் கூட இருக்கிறதா இருந்தா கஷ்ட நஷ்டத்தையெல்லாம் சகிச்சுக்கணும்.. அவமானத்தை எல்லாம் தாங்கிக்க தான் வேணும்..!"
"இப்ப நான் என்ன கஷ்ட நஷ்டத்தை சகிச்சுக்காம போயிட்டேன்..! கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல டிரீட்மென்ட் எடுத்துக்க பயமா இருந்தது.. அந்த பயத்தோட நிம்மதியா எப்படி குழந்தை பெத்துக்க முடியும்.. அதனால பிரைவேட் ஹாஸ்பிடல் போகலாம்னு சொன்னேன்..!
எனக்காக உங்க குழந்தைக்காக இதைக்கூட செய்ய மாட்டீங்களா..?"
"இப்பவே எல்லாத்தையும் செலவழிச்சுட்டா.. அப்புறம் குழந்தை வளர்க்கறதுக்கு என்ன பண்ணுவீங்கன்னு அம்மா கேக்கறாங்க.. உன் வீட்டிலிருந்து யாரும் தட்டு தட்டா சீர்வரிசை கொண்டு வந்து கொட்ட போறது இல்ல.. நானும் ஒன்னும் ரத்தினபுரி மகாராஜா இல்ல..! கஜானா காலியாகற வரைக்கும் அள்ளி அள்ளி கொண்டு வந்து உனக்கு செலவு செய்யறதுக்கு..!
அவனை இமைக்காமல் பார்த்தாள் சுப்ரியா..! "இப்ப இவ்வளவு பேசுறவர் எதுக்காக நான் கேட்டதும் சரின்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்தீங்க..! அப்பவே முடியாதுன்னு மறுத்து பேசி இருக்க வேண்டியதுதானே.."
"ஆமா அப்பவே சொல்லியிருந்தா அழுது ஊரை ஒண்ணா கூட்டுவ..! நாலு நாள் என்கிட்ட பேசாம.. சாப்பிடாம உடம்பை கெடுத்துக்கிட்டு அதுக்கும் தனியா செலவு வைப்ப.. எதுக்கிந்த தலைவலி..! நாளெல்லாம் ஆபீஸ்ல போராடிட்டு வரேன் வீட்ல எனக்கு நிம்மதி வேண்டாமா..!"
"உங்க பெரிய அண்ணிக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்ல தானே பிரசவம் பார்த்தாங்க.. அப்போ உங்க அம்மா எதுவும் சொல்லலையே.?"
"பெரிய அண்ணிக்கு பிரசவ செலவு மொத்தமும் அவங்க வீட்டுல செஞ்சாங்க..! உனக்கு ஒத்த ரூபாயா இருந்தாலும் நானில்ல செலவு செய்யணும்.."
"என்ன.. எல்லா தப்பும் என் மேலதாங்கற மாதிரி பேசுறீங்க..! உங்களுக்காக தானே என் குடும்பத்தையே உதறி தள்ளிட்டு வீட்டை விட்டு ஓடி வந்தேன்.. அவங்க விருப்பத்துக்கு மாறா உங்களை உங்களை காதலிச்சதுனால தான் வீட்ல என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க.. இது வேண்டாம் கொஞ்சம் யோசிக்கலாம்னு எவ்வளவோ எடுத்து சொன்னேன்.. நீங்கதான் சூசைட் பண்ணிக்குவேன்னு பிளாக் மெயில் பண்ணி என்னை வெளியே வர வச்சீங்க..! நான் ஒன்னும் என்னை கல்யாணம் பண்ணிக்கங்கன்னு உங்க கால்ல வந்து விழல அத ஞாபகம் வச்சுக்கோங்க..!"
"போதும் சுப்ரியா.. இப்ப என்னாலதான் உங்க வீட்டோட நீ ஒட்டுறவு இல்லாம இருக்க.. இந்த அருத பழைய கதையை எத்தனை நாளைக்கு சொல்லி காட்டுவ..! எத்தனையோ வீட்டுல ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கற பிள்ளைகளை மன்னிச்சு சமாதானமாக சேர்த்துக்கறது இல்லையா.. இல்ல மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டியதையெல்லாம் செய்யறது இல்லையா..! ஊர்ல இல்லாத பெரிய ராஜ குடும்பம்னு இல்லாத கௌரவத்தை இழுத்து பிடிச்சுகிட்டு செலவு மிச்சம்னு அப்படியே கமுக்கமா ஒதுங்கிட்டாங்க..! இப்படி ஒரு பஞ்ச பரதேசி குடும்பத்துல போய் ஏன்டா பொண்ணு எடுத்தன்னு அம்மா என்னை அடிக்கடி குத்தி காட்டறாங்க தெரியுமா..?" கோபத்தில் பற்களை கடித்தான் ராஜேஷ்..
அம்மாவை கேட்டு தான் நீ என்னை காதலிச்சியா..! அம்மாவை கேட்டு தான் நீ இல்லனா நான் செத்து போயிடுவேனு ஃபோன்ல அழுதியா.. உன் அம்மாவை கேட்டு தான் என்னை திருட்டுத்தனமா கூட்டிட்டு போய் திருப்பதியில் தாலி கட்டினியா..? ஏகப்பட்ட கேள்விகளை கேட்க நாக்கு துடித்தாலும்..
இதற்கு மேல் பேச்சை வளர்த்தால்.. வார்த்தைகள் தடித்து சண்டையில் போய் முடியும் என்பதால்..
"சரி விடுங்க இப்ப எதுக்கு தேவையில்லாம இந்த பேச்சு..! நம்ம செக்கப்புக்காக வந்திருக்கோம்.. சீக்கிரம் அந்த வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு போவோம்..!" என்றாள் தனது ஆற்றாமையை அடக்கிக் கொண்டு..
"நீ வீட்டுக்கு போய் சொகுசா படுத்து தூங்குவ.. நான் அப்படியா..? ஆபீஸ்க்கு போய் மாங்கு மாங்குன்னு வேலை செய்யனுமே..! உங்க எல்லாருக்கும் உழைச்சு கொட்டணுமே..! சும்மா வந்துருமா காசு..!" அவளை வார்த்தையால் குத்தி விட்டு.. எழுந்து சென்று அந்த மருத்துவமனை காரிடோரில் மொபைலை பார்த்தபடி அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான் அவன்..
ராஜேஷின் வார்த்தைகள் இரக்கமில்லாத தொடர்ச்சியான தாக்குதலாய் அவளை காயப்படுத்தியிருக்க கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் சுப்ரியா..
கணவனின் தோள் சாய்ந்து கொண்டு.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து சிரித்துக்கொண்டு.. எழ முடியாமல் திணறும் மனைவியை கையைப் பிடித்து தூக்கியபடி.. அவ்வப்போது தன் மனைவிக்கு பாட்டிலை திறந்து.. தண்ணீர் பருக உதவி செய்தபடி என நெருக்கமாய் சந்தோஷமாய் எத்தனை எத்தனை தம்பதிகள்.. அத்தனை பேரிடமும் கணவன் மனைவிக்கான காதலை தவிர வேறு எதுவும் தெரியவில்லையே.. அங்கிருந்த எந்த கணவனும் ராஜேஷை போல் காத்திருப்புக்காக எரிந்து விழவில்லை.. குத்தி காட்டவில்லை..!
இந்த பேச்சையெல்லாம் தாங்கிக் கொண்டு அப்படியாவது இந்த ஹாஸ்பிடலில் செக்கப் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன..! இதற்கு பேசாமல் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று அவர்களை ஏச்சுக்களையும் பேச்சுக்களையுமே தாங்கிக் கொண்ட பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என வெறுத்துப் போனது அவளுக்கு..!
தானாக தேடிக்கொண்ட வாழ்க்கை..! திரும்பி போக வாய்ப்பில்லாத ஒரு வழி பாதை..! அவ்வப்போது கணவனும் அவன் குடும்பத்தாரும் சேர்ந்து வீசும் நெருப்பு கங்குகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்..!
குழந்தை பிறந்தவுடன் எல்லாம் சரியாகலாம்..! சரியாகிவிடும்.. வயிற்றிலிருக்கும் தன் சிசுவுக்காக மனதை வலுப்படுத்திக் கொண்டு கண்ணீரை துடைத்துக் கொண்டு மருத்துவரை காண்பதற்காக காத்திருந்தாள் சுப்ரியா.. மிகப்பெரிய இடி ஒன்று அவள் தலையில் விழப்போவது தெரியாமல்..
தொடரும்..

Last edited: