• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 10

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
85
தூக்கத்தில் சிரித்தார் ரமணி அம்மா..

"இவ சமைச்சு
சாப்பாட்டை அவன் சாப்பிடறதே பெரிய மாற்றம்தான்.. அது கூட தெரியாம கவலைப்படுது இந்த பொண்ணு.." இத்தனை தெளிவாக வார்த்தைகள் வரவில்லை.. உறக்கத்தில் அரைகுறையாக ஏதோ உளறி தள்ளினார்..

கால்நீட்டி அமர்ந்திருந்த பத்மினி அவர் பேச்சு சத்தத்தில் எட்டிப் பார்த்தாள்..

"அம்மா..?" அவர் கைதொட்டு மென்மையாக உலுக்க பேச்சு நின்று போனது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தார்..

"தூக்கத்துல உளர்ற பழக்கம் வேற இருக்கா..‌" தலையை இடம் வலமாக அசைத்து அலுப்புடன் படுத்துக் கொண்டாள்..

அடுத்த நாள் காலையில் ஆறு மணிக்கு யாரோ அவளை தட்டி உலுக்கியதில் "ஹான் சார்" என்று அடித்து பதறி எழுந்தாள்..

"ரமணியிடம் ஒரே சிரிப்பு.. எப்போதும் அவன் ஞாபகம்தானா..? அது சரிதான் இதே போல அவனும் சதா உன்னை நினைக்கிற மாதிரி ஏதாவது செஞ்சு மாத்திடு ..!!" அவர் பேச்சு காலையிலேயே கடுப்பேற்றியது..

"உண்மைதான்.. எப்போதும் உங்கள் மகன் என்னையேதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.. சதா எப்படி மிரட்டலாம் உருட்டலாம்.. கடுப்பேத்தலாம் காயப்படுத்தலாம்.." இதைத்தவிர அவருக்கு பெரிதாக வேறு என்ன தோன்றி விடப் போகிறது.. சயன மயக்கத்தில் தோய்த்தெடுத்த கண்களை கசக்கியபடி தலை தாழ்ந்து அமர்ந்திருந்தாள்..

"மணி ஆறாச்சு.. இன்னும் என்ன தூக்கம் பொண்ணே.. !! எழுந்து போய் வேலையை பாரு..‌" அவர் பேச்சில் அதிகாரம் தூள் பறந்தது..

"சாரிம்மா.. ஹாஸ்டல்ல ஏழு மணி வரைக்கும் தூங்கி பழக்கம் ஆகிடுச்சு..‌ இனி சீக்கிரமா எழுந்துக்கறேன்..!!"

"அதிகாலையில் அஞ்சு மணிக்கு எழுந்துக்கறது வீட்டுக்கு மட்டும் நல்லது இல்ல.. உடம்புக்கும் ஆரோக்கியம்.. இனி முடிஞ்சவரை காலையில் கொஞ்சம் சீக்கிரம் எழுந்துக்க பாரு.. சூரியன் உச்சிக்கு வந்த பிறகும் இப்படி பொம்பளைங்க தூங்குறது எனக்கு சுத்தமா பிடிக்காது.." என்றவரை நிமிர்ந்து பார்த்தாள்..

அக்மார்க் மாமியாராக தெரிந்தார் ரமணியம்மா..

"மாமியாரா பேசல.. என் பையனுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்த்தேனோ அதையேதான் உன்கிட்டயும் சொல்றேன்.. நைட் எவ்வளவு நேரம் கழிச்சு தூங்கினாலும் காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும்.. எவ்வளவு தாமதமா எழுந்துக்கிறியோ அவ்வளவும் உடம்பு கெட்டுப் போகும்.. புரியுதா பொண்ணே..! நானெல்லாம் ஐம்பது வயசு வரைக்கும் உழைச்ச கட்ட.. இப்ப உள்ள பொண்டுகள் இருபதிலேயே துவண்டு போய்டுதுங்க.. " ஆசிரியர் அல்லவா.. அறிவுரை வகுப்பை ஆரம்பித்து விட்டார்..

கண்டிப்பான தொனியில் சொன்னாலும் நல்ல விஷயத்தைதானே சொல்கிறார்.. அவர் இயல்பு இது.. மாற்ற முடியாது..!! இந்த வீட்டுக்கென்று சில சட்ட திட்டங்கள் உண்டு.. அதை கடைபிடிக்கத்தானே வேண்டும்.. ஆனால் நிதம் ஏழு மணி வரை தூங்கி இப்போது ஐந்து மணிக்கு எழுவதெல்லாம் ரொம்ப சிரமம்.. நாளையிலிருந்து அலாரம் வைக்க வேண்டும்.. என்று முடிவெடுத்து படுக்கையை விட்டு எழுந்தாள்.. அவளுக்கு முன் ரமணியம்மா குளியலறை புகுந்திருந்தார்..

பல் விலக்கி முகம் அலம்பிய பிறகுதான் அடுத்த வேலையை ஆரம்பிக்க வேண்டும்.. ரமணியம்மா வரும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தோடு கொட்டாவி விட்டபடி அந்த அறையின் பால்கனியில் வந்து நின்றாள்..

நீச்சல் குளம்.. உடற்பயிற்சி கூடம் பார்க் என அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர அப்பார்ட்மெண்ட் அல்லவா அது.. இவர்கள் அபார்ட்மென்ட் ஆறாவது மாடி என்பதால் அங்கிருந்து முழு பரப்பளவை எளிதாக காண முடிந்தது..

பச்சை பசேலென விதவிதமாய் பூச்செடிகள் வளர்க்கப்பட்ட பூங்காவின் நடைபாதையோரம் பழக்கப்பட்ட உருவம் ஒன்று தென்பட்டதில் தனது கண்களை கூர்மையாக்கினாள் பத்மினி..

வேறு யார்? சாட்சாத் உதய் கிருஷ்ணாதான்..‌ வட்டமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதையில் மிதமான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தான்.. அவன் முகத்தில் அரும்பு விட்ட வியர்வை தொலைவில் இருந்தவளுக்கு தெரியவில்லை என்றாலும் அவன் முழங்கையால் அடிக்கடி தன் முகத்தை துடைத்துக் கொண்ட கொண்ட விதம் வெகு நேரமாக ஓடிக் கொண்டிருக்கிறான் என்பதை சொன்னது..‌ அப்படியானால் தனக்கு முன்பு ஐந்து மணிக்கே எழுந்துவிட்டாரோ..!! சரிதான் டீச்சர் ரொம்ப கண்டிப்பு பேர்வழி.. இரண்டுமே ப்ரோக்ராம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள்தான்..

நல்லவேளை டீச்சரம்மா தன் மகனைப் போல என்னையும் பூங்காவில் சென்று ஓடு என்று சொல்லவில்லை.. அதுவரை சந்தோஷம்.. பத்மினியின் இதழோரம் லேசான புன்னகை.. எந்த இலக்குமின்றி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தவனை வெறித்தாள்.. பத்து நிமிடங்கள் தொடர்ந்து ஓடிவிட்டு இரு முழங்கால்களைப் பிடித்து குனிந்தபடி மூச்சு வாங்கியவன்.. பிறகு அதே வேகத்துடன் ஓடியவாறு அருகிலிருந்த உடற்பயிற்சி கூடத்திற்குள் நுழைந்திருந்தான்.. ஓஹோ வொர்க் அவுட் வேறயா..!! பலே பலே.. உதட்டைப் பிதுக்கினாள் பத்மினி..

குளியலறை கதவை திறக்கும் ஓசை.. ரமணியம்மா குளித்து முடித்து வெளியே வந்திருந்தார்.. அவரை பார்க்க சற்று மலைப்பாகத்தான் இருந்தது.. இவர் தன்னை அதட்டுவதில் தவறே இல்லை என்று தோன்றியது..

புடவையை மேலாக்க சுற்றிக் கொண்டு வந்தவர்.. நிதானமாக சேலையை உடுத்தி முடித்தார்.. பத்மினி அங்கிருந்து நகரும் நேரம்..

"கொஞ்சம் காபி கிடைக்குமா" என்றார் அசடு வழிந்தபடி..!!

"காலையில் வெறும் வயித்துல காப்பி குடிக்கக் கூடாது.. சத்துமாவு கஞ்சி மாதிரி ஏதாவது தரட்டுமா..!! நேத்து மூணாவது அடுக்குல ராகிமால்ட் பார்த்தேனே..!!" பத்மினி சொல்ல உதட்டை சுழித்தார் ரமணி..

"பால் ஊத்தாம கடுங்காபி மாதிரியாவது ஏதாவது கொடேன்.. வயிறு ஒரு மாதிரி கத்தறது.." என்றவரை பார்க்க பாவமாக இருந்தது..!!

"பால் ஊத்தியே காபி கலந்து தரேன்.. ஆனா சக்கரை போட மாட்டேன்.." என்று அங்கிருந்து சென்றிருந்தாள்..

ரமணியம்மா ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்துக்கொண்டு கூடத்தில் வந்து அமர்ந்தார்.. டிவி பார்க்கும் பழக்கமெல்லாம் இல்லை போலிருக்கிறது.. முந்தைய நாள் ஒரு மணி நேரம் நியூஸ் சேனல்களை சலிக்க சலிக்க பார்த்துக் கொண்டிருந்ததாக நியாபகம்..

சமையல் அறைக்குள் புகுந்து கொண்டாள் பத்மினி.. காபி கலந்து எடுத்து வந்து தந்தாள்..

ஒரு மிடறு விழுங்கி விட்டு கண்கள் விரிய பத்மினியை பார்த்தார் ரமணி..

"சர்க்கரை போட்டுருக்கியே..!!"

பதில் சொல்லாமல் மெலிதாக சிரித்தபடி தன் காபியை விழுங்கினாள்.. சர்க்கரை இல்லாத காபி அருந்துவது தண்டனை.. எதற்காக அவரை தண்டிப்பானேன்..

சக்கரை கலந்து கொடுப்பதுதானே தண்டனை.. அவர் மகன் சொல்வது போல் கண்டதையும் கொடுத்து மருத்துவமனையில் படுக்க வைத்து விடக்கூடாதே..!! என்று மனசாட்சி நெருடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சிறு பிள்ளை போல் காபி தர்றியா என்று அவர் கேட்கும் போது மனம் தாளவில்லை..

மாவு இல்லை.. இட்லி தோசை செய்ய முடியாது.. அரிசியும் சிறுபருப்பு கழுவி களைந்து குக்கரில் வைத்தாள்.. சப்ஜி செய்ய பிஞ்சு கத்திரிக்காயாக பார்த்து எடுத்து வைத்தாள்..

உயர்ந்த உருவமாக உதய் சமையலறையை கடப்பது தெரிந்தது..

இருபது நிமிடங்களில் டிராக் பாண்டும் டீ ஷர்ட்டுமாக வெளியே வந்தான்..

ரமணியின் எதிர் இருக்கையில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.. அன்பான பேச்சு இல்லை பொதுவான விவாதம்தான்.. என சமையலறையில் இருந்து கணிக்க முடிந்தது அவளால்..

கடவுளே இந்த பக்கம் வராம இருக்கணும்..!! அவர் டார்ச்சர் இல்லாம சமைக்கிற நிம்மதியை கொடு..‌ வேண்டுதல் முடியவில்லை அதற்குள் சமையல் அறையில் வந்து நின்றிருந்தான்..

"என்ன சமைக்கிற..?"

"பொங்கலும் கத்திரிக்காய் சப்ஜி..!!"

விசில் தூக்க.. நெய் மணக்கும் மிளகு பொங்கலின் வாசனை காற்றோடு தவழ்ந்து வந்து அவன் நாசியில் ஏறியது..‌ கத்திரிக்காய் கடைசலின் வாசனை வேறு ஆளை ஒரு வழி பண்ணியது.. கூடத்தில் வாசனை பிடித்து ரமணியம்மா உற்சாகமாக தலையை அசைத்தபடி அமர்ந்திருந்தார்..

"ப்ச்.. ஹெவி.. அப்படி சாப்பிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும்..!! கொஞ்சம் தள்ளு.." என்றான் கடுமையாக..

அவள் சற்று தள்ளி வழி விட்டு நிற்க.. காய்கறிகளும் அரிசியுமாக ஏதேதோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்..

"என்ன வேணும் உங்களுக்கு..!!"

அவள் பக்கம் மொத்தமாக திரும்பி நின்றான்.. "என் கிச்சன்ல வந்து நின்னுகிட்டு என்னையே என்ன வேணும்னு கேட்கிறது என்ன மாதிரியான ஆட்டிட்யூட்..?"

"நானும் ரென்ட் பே பண்றேனே..!! இப்ப இந்த கிச்சன் எனக்கும் சொந்தம் அப்படித்தானே.."

சில கணங்கள் அழுத்தமாக அவளை பார்த்தவன்.. "நீங்க ரென்ட் பே பண்றதுக்காக என்னை கேள்வி கேட்கணும்னு அவசியம் இல்லை.. நான் மத்தியானம் லஞ்ச் பேக் பண்ணி கொண்டு போறது வழக்கம்.. அம்மாவுக்கும் சேர்த்து சமைச்சு வச்சுட்டு போயிடுவேன்.. சோ சமைக்க வந்தேன்.. இந்த விளக்கம் போதுமா.." அவன் புருவங்கள் மேலும் கீழுமாக வித்தியாசமாக இறங்கின..

"எனக்கும் லஞ்ச் பேக் பண்ணனும்.. உங்களுக்கும் சேர்த்து சமைக்கிறதுல எனக்கொன்னும் ஆட்சேபனை இல்லை.." அவள் சொன்னதும் விவாதங்களின்றி ஒரு பார்வையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டான்..

மறுபடி சாப்பாட்டு மேஜையில் ஒரே அனத்தல்..‌

"முந்திரிப் பருப்பும் நெய்யும்.. எனக்கே திகட்டுது.. வயசானவங்க எப்படி சாப்பிடுவாங்கன்னு யோசிக்க வேண்டாமா..!!"

"ஏன்டா அவளை திட்டற..!! எவ்வளவு அருமையா சமைச்சிருக்கா.. ரொம்ப நாளைக்கு பிறகு இப்பதான் நாக்குல சுவையறிஞ்சு சாப்பிடறேன்..‌!!"

"இப்படி சாப்பிட்டா மொத்தமா கொண்டு போய் டாக்டர் கிட்ட தான் அழணும்.. கண்டதையும் சாப்பிட்டு உடம்பை பாழ்படுத்திக்காதீங்க.. உணவில் கட்டுப்பாடாக இருங்க..‌!!" சொல்லிவிட்டு மிளகும் நெய்யில் வதக்கிய கருவேப்பிலையும் சேர பொங்கலை வாய்க்குள் திணித்தான் உதய்..

"உதய்.. இன்னைக்கு ஒரு நாள் அவ வீட்ல இருக்கட்டுமே..!!" என்றவரை நிமிர்ந்து பார்த்தான்..

"ஏன்..!!"

"புது பொண்ணு.. கல்யாணம் ஆகின உடனே ஆபீஸ் போனா பாக்கறவங்க ஒரு மாதிரியா பேச மாட்டாங்களா..?"

"இல்லைனா மட்டும் அவளை யாரும் எதுவும் பேசறது இல்லையா..?" என்றபடி அவளை பார்த்தான் உதய் கிருஷ்ணா.. "மத்தவங்க என்ன பேசினா என்ன..!! நமக்கு நம்ம வேலை தான் முக்கியம் இது உங்க மருமகளுக்கு தெரியாதா..?"

"இல்லடா உதய் அது வந்து..!!"

"இங்க பாருங்கம்மா.. அவ வேலைக்கு போறதிலும் வீட்ல இருக்கிறதிலும் எனக்கு எந்த அக்கறையும் இல்லை.. ஆனா இப்ப அவ என்னோட ஆபீஸ்ல வேலை செய்றா.. எனக்கு என்னோட வேலைகள் சரியா நடக்கணும்.. வேலைகளை முடிச்சு கொடுத்துட்டு மொத்தமா நின்னுக்க சொல்லுங்க.. அதன் பிறகு அவ உங்களுக்கு பல்லக்கு தூக்கினாலும் சரி இல்லை பல்லாங்குழி விளையாடினாலும் சரி.. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.." அவன் பேச்சு சுத்தமாக பிடிக்காமல் போகவே இடைமறித்தாள் பத்மினி..

"அத்தை..!! எதுக்காக வீண் விவாதம்.. நான் இன்னைக்கு ஆபீஸ் போகத்தான் போறேன்.. தேவையில்லாம எனக்காக நீங்க எதுக்கு வாங்கி கட்டிக்கணும்.." பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு சென்று விட்டாள்..‌

ரமணி பரிதாபமாக மகனை பார்த்தார்.. "ஏண்டா அந்த பொண்ண இப்படி நோகடிக்கிற.. நெருப்பா வார்த்தைகளை கொட்டி தீர்க்கறியே.. கொஞ்சம் அன்பா பேசினாத்தான் என்னவாம்..!!"

"அன்பு கோழையாக்கும்.. ஏமாற வைக்கும்.. இந்த பொய்யான உலகத்துல அன்புக்கு மதிப்பே இல்ல.. நீங்க சொல்லிக் கொடுத்ததுதான்.. அதை நான் இப்ப வரைக்கும் கடைபிடிக்கிறேன்.. இதுல என்ன தப்பு..?"

முகத்தில் அடி வாங்கியதாக உணர்ந்தார் ரமணி..

"அதுக்காக கட்டின மனைவி கிட்டயும் இப்படி நடக்கிறது சரியில்லையேப்பா.."

"தாலி கட்டின புருஷன்தான் உங்களை ஏமாத்திட்டு போனார்.. உறவுகள்தான் நம்மை ஏமாற்றும் முதல் துரோகிகள்.. இதுவும் நீங்க சொன்னதுதான்.."

"வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்புகளும் இருக்கக் கூடாது.. உடம்பையும் மனசையும் இரும்பா வலுவாக்கிக்கணும்.. நீங்கதானே சொன்னீங்க..‌ அந்த கோட்பாடுபடிதான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. அந்தக் கோட்பாடுதான் எனக்கு வெற்றிகளையும் தருது.."

அதுக்காக பாக்கறவங்க எல்லார்கிட்டயும் எரிஞ்சு விழனுமா..? மத்தவங்களை விடு.. இந்த பொண்ணான்ட கொஞ்சம் கனிவா நடந்துக்கலாமே.."

"குழைஞ்சி பேச எனக்கு வராது.. உண்மைகளை சொல்றேன்.. அது சம்பந்தப்பட்டவர்களுக்கு காரமா உரைக்குதுன்னா நான் என்ன செய்ய முடியும்..‌!! இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க.. நீங்க உண்ணாவிரதம் இருந்து உடம்பை வருத்திக்கிட்டதனாலதான் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.. அதே டெக்னிக்கை ஃபாலோ பண்ணி மத்த வேலைகளையும் செய்ய வைக்கலாம்னு நினைக்காதீங்க.. அது நடக்காது.." அவர் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டு சமையலறைக்கு சென்றான்..

"தாய் பாசம் காட்டி வளர்த்திருக்கணும்.. என்னை மாதிரி நம்பிக்கை துரோகத்தில் வீணா போய்ட கூடாதுன்னு.. நான் சொன்ன அறிவுரைகள் அவன் வெற்றிக்கு உதவியாய் இருந்துச்சு.. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு..? படிப்பு படிப்பு முன்னேற்றம்ன்னு அவனை பந்தய குதிரை மாதிரி ஓட விட்டுட்டேன்.. அன்பு கனிவு அனுசரனைன்னு வாழ்க்கையோட இன்னொரு பக்கத்தை காட்ட மறந்துட்டேனே.." கவலை அவர் மனதை அரித்தது..

விட்டுக் கொடுக்கிறதும் தோக்கறதும் கூட சுகம் னு சொல்லி வளர்த்திருக்கணும்.. மத்தவங்களை அன்போடு அரவணைக்க கற்றுக் கொடுத்திருக்கணும்.. பெற்றோரின் வளர்ப்பில் நிகழும் சிறு கவனக் குறைவும் ஒரு குழந்தையின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்குது.. பள்ளியில் வித விதமான குணம் கொண்ட குழந்தைகளை பார்த்திருக்கிறார்.. எல்லோரிடமும் ஒரே கண்டிப்பு தான்.. தன் மகனைப் போல்.. ரமணி டீச்சர் என்றாலே கையில் பிரம்பை வைத்துக்கொண்டு கண்களை உருட்டி மிரட்டும் பாவனை தான் குழந்தைகளுக்கு நினைவில் வந்து போகும்.. மற்றவர்களை செதுக்கியவர் தன் மகனின் விஷயத்தில் கோட்டை விட்டு விட்டாரோ என்னவோ..!!

அது சரி எனக்கே அதெல்லாம் தெரியாத போது எங்கிருந்து அவனுக்கு கத்துக் கொடுக்க முடியும்.. இப்ப வரைக்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களை பார்க்கும்போது பயமும் எதிர்மறையான எண்ணமும்தானே வருது..‌

என்னால் அவனை மாத்த முடியல.. ஆனா சொல்ல வேண்டியவங்க சொன்னா கேட்பானா..!! பேராசைதான்.. ஆனா நடந்தா நல்லா இருக்குமே..!!

எண்ணங்கள் தானே வாழ்க்கையை தீர்மானிக்குது.. இதுவரைக்கும் என்னுடைய எதிர்மறையான எண்ணங்கள் அவன் வாழ்க்கையை இந்த நிலையில கொண்டு வந்து நிறுத்திடுச்சு.. இனியாவது நேர்மறையா யோசிக்கிறேனே..

பத்மினி என் மகனோட வாழ்க்கையில் கண்டிப்பா மாற்றத்தை கொண்டு வருவா..!! எதிர்பார்ப்போடு சமையலறையை பார்த்தார்..

அங்கே அவன் தட்டையும் அம்மாவின் தட்டையும் கழுவிக் கொண்டிருந்தான் உதய் கிருஷ்ணா.. என்ன ஏடாகூடமாக பேசினானோ.. கோபமாக பதிலளித்துக் கொண்டிருந்தாள் பத்மினி..

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Jan 26, 2024
Messages
65
அருமையான பதிவு
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Thoonga poradhuke 4.30 aagidudhu sister.. Enga 5 o'clock ezhundhirikuradhu, 9.30 dhan..

Udhay is correct.. Pongal will be heavy.. Kaalailaye pongal saaptaa adhu vera oru feel la afternoon varaikum velai odadhu..

Yes sister.. Petrorin valarpu romba mukkiyam.. Naan enna padikuren, padichen nu kuda ennoda parents ketadhilla.. Fail aanalum ketka matanga first mark vanginalum kanduka matanga.. Epadiyo education loan la padichu job la settle aagiyachu. But still I long for proper guidance..

Thaniyave irundhutaa yaarkudayum pesa thonadhu dhan.. Adhuvum yaraleyum namaku edhuvum aaga poradhilla nu thoughts vandhutaa apuram paarkuravangalai ellaam Udhay pola ignore pannadhan thonum.. Adhai dhan thalaikanam nu soldranga, but namma konjam decent ah thanmaanam nu sollikalam.. But anbu pola oru addiction illa.. Let's see how it changes his point of view towards life..

Nicely written, sister.. Delicious episode at lunch time.. Thank you...
 
Joined
Jul 31, 2024
Messages
58

டீச்சர் நீங்க வளத்தது தப்பில்ல அவ வளந்ததும் தப்பில்ல 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ இப்போ பத்மினி வந்தது தான் தப்பு 😟😟😟😟😟😟😟😟😟😟😟😟
இப்ப பேசுனானோ 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ அவன பேசலனா தான் தப்பு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Member
Joined
Jan 11, 2023
Messages
37

Indha design romba vithyaasama irukey Sana sis
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
140

😊😊😊😊😊
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
129
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😝😝😝😝😝😝😝😝💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
 
Member
Joined
Sep 14, 2023
Messages
153
உதய் உதய் தான் .... Superahna robot....😀😀😀😀😀😀😀
 
Top