• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 10

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
45
வேலை விஷயமாக வெளியூர் செல்கிறேன் என்று இரண்டு வாரங்களாக திரும்பி வராத மகன் இப்போது மருமகளோடு வந்து நிற்பதில் ஜெயந்திக்கு பெரும் அதிர்ச்சி.. வாசலில் நிற்கும் மகனையும் மருமகனையும் உள்ளே அழைக்காமல் வாய்க்கு வந்தபடி ஏசிக் கொண்டிருந்தாள் ஜெயந்தி..

"இப்ப எதுக்காக அவளை அழைச்சிட்டு வந்த.. தரங்கெட்ட நாயை வீடு வரைக்கும் போய் கூட்டிட்டு வந்துட்டியாக்கும்..!! அப்படி என்ன இவ பெரிய உத்தம பொண்டாட்டியா போய்ட்டா.. இவ நமக்கு செஞ்சதெல்லாம் மறந்து போச்சா ஹரி..? எவனுக்கோ குழந்தையை சுமந்து.."

"அம்மாஆஆ.." அவன் உச்சக்கட்ட சத்தமான அழைத்தலில் ஜெயந்தியின் வார்த்தைகள் தொண்டைக் குழியோடு நின்று போனது..‌ இந்த பேச்சுக்களை கேட்கத்தான் இங்கே அழைத்து வந்தாயா என்ற ரீதியில் மாதவி கண்ணீருடன் அவனை பார்க்க.. அவள் கரத்தை இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் ஹரி..

மதில் சுவருக்கு அந்த பக்கம் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரங்கநாயகிக்கோ மாதவியின் வாழ்க்கை சீர்பட்டதாக மனதெல்லாம் சந்தோஷம்.. இனி பிரச்சினைகளை ஹரி பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி..

மகனின் ஆக்ரோஷப் பார்வையில் வழிவிட்டு நின்றாள் ஜெயந்தி..

உள்ளே வந்த அடுத்த கணம் மாதவியின் கரத்தை விடாமல் அன்னையை அழுத்தமாக பார்த்தான் ஹரிச்சந்திரா..

"நான்தான் அவள போய் கூட்டிட்டு வந்தேன்.. என் தவறுகளுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு அவளை கூட்டிட்டு வந்திருக்கேன்.." அவன் சொல்லி முடிக்கும் முன்.. ஜெயந்தி அடப்பாவி என்ற ரீதியில் வாயை பொத்தி அதிர்ச்சியானாள்.. தன் மகன்தானா இவன் என்ற சந்தேகம் வந்திருக்க கூடுமோ என்னவோ..!!

"என் பொண்டாட்டியை யாரும் ஒரு வார்த்தை பேசக்கூடாது.. எனக்கு கொடுக்கிற அதே மரியாதையை அவளுக்கும் தரனும்.. அப்படி மீறி ஏதாவது பேசினீங்க.." என்று நிறுத்திவிட்டு அவன் பார்த்த பார்வை மிச்ச கதையை சொல்லாமல் சொல்லியது.. சரிதாவும் சபரிவாசனும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்..

"என்னடா பேசற.. அம்மா உனக்காகதானே இவ்வளவும் செய்யறேன்.. நீதானடா அன்னைக்கு ரூம்ல இவ வயித்துல வளர குழந்தை உன்னோடது இல்லைன்னு..!!" சொல்லி முடிக்கும் முன்..

"அது ஏதோ கோபத்துல சொன்னது.. கணவன் மனைவிக்கு இடையே சண்டை வர்றதும் கோபத்தில் நாலு வார்த்தைகளை பேசறதும் சகஜம்தானே.. ஒட்டுக் கேட்டதே தப்பு.. .. இதுல என் பொண்டாட்டி மேல பழி சொல்லி மிகைப்படுத்தினது அதைவிட பெரிய தப்பு.. என்னை சொல்லனும்.. நீங்க அவளை இழிவா நினைக்கிற அளவுக்கு நான் கேவலமா நடந்திருக்கேன்.. தப்பு முழுக்க என் மேல்தான்.. அழுத்தமாக சொன்னவன் அவள் பக்கம் திரும்பினான்

"ஐம் சாரி மாதவி" என்று மீண்டும் அவளிடம் மன்னிப்பு கேட்க ஆடிப் போனாள் ஜெயந்தி.

"கோபத்தில் சொன்ன வார்த்தைகள் மாதிரி தெரியலையே..?" ஜெயந்தி உதட்டை சுழித்தபடி கேட்டாள்.

"நீங்க கூடதான் சின்ன வயசுல அண்ணனையும் என்னையும்.. என் உயிரை வாங்கறதுக்கு செத்து தொலைங்கடான்னு திட்டியிருக்கீங்க..‌ அதுக்காக உண்மையிலேயே நாங்க செத்துப்போனா நீங்க சந்தோஷப்படுவீங்கன்னு அர்த்தமா..?

ஹரியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜெயந்தி பேச்சற்று நின்றாள்..

"இவ வயித்துல வளர்ற குழந்தை என்னோடது இல்லைன்னு பழி சுமத்தினா அப்புறம் நான் ஆம்பளயே இல்லைன்னு அர்த்தமாயிடும்.."

"அதெப்படி டா..!! ஆனா நீ அவ கூட சந்தோஷமா இருந்த மாதிரி தெரியலையே.." பிறகெப்படி குழந்தை.. கேட்டு முடிப்பதற்குள் அவளுக்குள் மூச்சு வாங்கியது..

"நாங்க சந்தோஷமா இருந்தோமா இல்லையான்னு இங்க யாராவது விளக்கு புடிச்சு பாத்தீங்களா..?"

"ஐயோ கடவுளே என்ன பேச்சு பேசறான்" ஜெயந்தி காதை மூடிக்கொண்டாள்..

"எங்களுக்குள்ள உருவாகற பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்குவோம்.. எங்களோட தனிப்பட்ட அந்தரங்கத்தில் தலையிட உங்க யாருக்கு உரிமை இல்ல..!!"

"டேய் ஹரி.. என்னடா ஆச்சு உனக்கு.. வேலை விஷயமா வெளியூர் போறதுக்கு முன்னாடி நல்லாத்தானே இருந்த.. அம்மாவை ஒரு நாளும் எதிர்த்து பேசினது இல்லையேடா.. என்னடா இப்படி மாறிட்ட..!!" கடைசி ஆயுதமாக ஜெயந்தி அழுகையை கையிலெடுத்தாள்..

"இப்பவும் நான் உங்க பிள்ளைதான்.. நிச்சயமா உங்க சொல்லுக்கு கட்டுப்படுவேன்.. அதுக்காக என் பொண்டாட்டிய தரக்குறைவா பேசுறத பார்த்துட்டு சும்மா நின்னா..‌ என்னை விட கேவலமானவன் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது.. எனக்கு என் பொண்டாட்டியும் அவ வயித்துல வளர்ற குழந்தையும் ரொம்ப முக்கியம்.." என்று மாதவியை தோளோடு அணைத்துக் கொண்ட ஹரிச்சந்திராவின் பார்வை அவளை அன்போடு வருடியது.. மாதவி இந்த உலகத்தில் இல்லை.. நிகழ்வதை நம்ப இயலாமல் சொப்ன லோகத்தில் மிதந்து கொண்டிருப்பதாக நினைத்தாள்.

தலையில் அடித்துக் கொண்டு ஜெயந்தி வாய்க்கு வந்தபடி புலம்பி கொண்டிருக்க அவளைக் கடந்து மனைவியை தன் அறைக்கு அழைத்துச் சென்றான் ஹரி..

"உட்காரு மாதவி.." அவளை கட்டிலில் அமர வைத்து இருக்கையை இழுத்து போட்டு எதிரே அமர்ந்தான்..

"இங்கே இப்போதைக்கு உனக்கு சாப்பிட எதுவும் கிடைக்காது..‌ பசிச்சதுனா சொல்லு உனக்காக ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரேன்.." என்றான் பரிவான குரலில்..

"எனக்கு எதுவும் வேண்டாம்.. இங்கே சாப்பிட எதுவும் கிடைக்காது.. யாரும் எந்த உதவியும் செய்ய மாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியுது இல்ல.. அப்புறம் எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்தீங்க.. என்னோட வீட்ல இருந்திருந்தா அம்மாவும் தங்கச்சிகளும் எனக்கு உதவியா இருந்திருப்பாங்க.. இங்கே உயிர் போற நிலையில் கூட தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்க ஆள் இல்லை.." ஆதங்கம் பொங்க கண்ணீர் வடிந்தது அவள் விழிகளிலிருந்து..

மெல்ல நெருங்கி அந்த கண்ணீரை துடைத்து விட்டான் ஹரி.. "ஏன் நான் இல்லையா..? உனக்காக நான் செய்ய மாட்டேனா..!! என்ன தேவைன்னாலும் நீ தயங்காம என்னை கேட்கலாம்.. என்னைத்தான் கேட்கணும்.." நிதானமாக அழுத்திச் சொன்ன அந்த குரலில் அத்தனை அன்பு.. ஆனால் அவளால் நம்ப தான் முடியவில்லை..

ஏன் இவன் இப்படி குழைகிறான்.. குழைவு.. அசட்டுத்தனமான இளிப்பு என்று சொல்லிவிட முடியாது.. நிறைந்த கர்வம் கொண்ட ஆண் சிங்கம்.. தன் இணையிடம் மட்டும் தனித்துவத்தை காட்டுவது போல்.. ஏதோ புதிதாக தெரிகிறான்..‌

ஒருவேளை தன் பெயரில் ஏதாவது கோடிக்கணக்கில் காப்பீடு எடுத்திருக்கிறானா.. தன்னைப் போட்டு தள்ளிவிட்டு.. அந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள இந்த திட்டமா..? வேறு ஏதேனும் சுயநல சூழ்ச்சிகள்..? ஹரிச்சந்திராவின் அதீத மாற்றத்தில் தலை வெடிப்பதாக உணர்ந்தாள் மாதவி..

எழுந்து கட்டிலில் நெருங்கி அமர்ந்தவனை மிரள மிரள பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் வயிற்றில் கை வைத்து தோள்பட்டையில் இதழ் புதைத்து அமைதியாக இருந்தான் அவன்.. விலக முடியாத அளவிற்கு அவன் மற்றொரு கரம் இடை வளைத்து இறுக்கமாக அணைத்திருந்தது.. அப்போதும் மாதவி திமிறினாள்..

"ப்ச்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு மாதவி.. நான் உன்னை முழுசா உணரணும்.." அவன் அழுத்தமான வார்த்தைகளுக்கு பிறகு அவளால் அசைய கூட முடியவில்லை.. அவன் பேச்சுக்கு அந்த அளவு சக்தி இருக்கிறதா அவளுக்கே புரியவில்லை..!! அவளை இறுக அணைத்தபடி வெகு நேரம் அமர்ந்திருந்தான்..

மரக்கட்டை போல் நரம்போடிய சாக்லேட் நிற வலிய கரங்கள் அவளை கட்டியணைத்திருந்த போதும்.. எந்த நிலையிலும் அதீத வன்மையை உணர வில்லை அவள்.. கூட்டு பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்து சிலீர் காற்றால் வருடி செல்லும் அடர்ந்த மரம்போல்.. ஏதோ இளைப்பாறுதலை உணர்ந்து கொள்ள முடிகிறது.. என்ன இது.. ஒரு அணைப்பில் மயங்கி அவன் வசம் என்னை இழந்து கொண்டிருக்கிறேனா..!! தன் மீதான கோபத்துடன் அவனை விட்டு விலகினாள் மாதவி..

ஆழ்ந்த பெருமூச்செடுத்த பார்வையுடன்.. அவள் தலையை வருடி கொடுக்க கரத்தை உயர்த்தினான்.. தலையை பின்னுக்கு இழுத்தாள்.. அவள் கரத்தை பற்றி கொள்ள முயன்றான்.. உதறி கொண்டாள்..

"ப்ச்.. என்ன மாதவி..?" சிறு கோபத்துடன் அதட்டல்..

"என்னால உங்களை ஏத்துக்க முடியாது.. மனைவியை உதாசீனப்படுத்தி இன்னொரு பொண்ணுகிட்ட போன புருஷன் திருந்தி வந்துட்டேன்னு சொன்னா ஏத்துக்க நான் ஒன்னும் கண்ணகி இல்ல"

"சரி மாதவியாவே இரு.." என்றான் நிதானமாக..

"என்ன சொல்றீங்க..?"

"நீ நீயா இருன்னு சொல்றேன்.. முதல்ல என்னை புரிஞ்சுக்கோ.. அப்புறம் ஏத்துக்கோ.. நிறைய காலம் இருக்கு.. ஒன்னும் அவசரம் இல்லை.. இப்ப கொஞ்ச நேரம் படுத்து தூங்கு.. எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு.." அவள் அனுமதி கேளாமல் தோள் பற்றி படுக்கையில் சாய்த்தான்..

"எப்படி படுக்கறது.. எப்படி தூங்கறது.. நீங்க போன உடனே உங்க வீட்டு ஆளுங்க வந்து என்னை கொஞ்சம் கொஞ்சமா குதறி எடுப்பாங்க..‌ அதிலும் உங்க அம்மா.." என்று முடிப்பதற்குள்..

"யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க மாதவி.. என்னை தாண்டி யாரும் உன்னை நெருங்க முடியாது.. பயப்படாம தூங்கு..!!" குனிந்த வாக்கில் இரு கைகளையும் அவள் இருபுறமும் ஒன்றி.. வெகு நேரம் அவள் முகம் பார்த்துக் கொண்டிருந்தான்.. இந்தப் பார்வைதானே அவளை தடுமாற வைக்கிறது.. என்றும் காணாத புதிய பார்வை.. ஏதோ காணாதது கண்டது போல்.. தேடியதை கண்டடைந்தது போல்.. மாதவிக்கு ஏதோ மாய உலகில் சுற்றி திரிவது போல் பிரமை..

"ஏன் இப்படி பாக்கறீங்க எரிச்சலா வருது.." விழிகளை மூடினாள்.. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை..

லேசாக கண்களை திறந்து பார்க்க.. இதழ் பிரிக்காமல் முறுவலித்தான் அவன்.. இப்போதுதான் அவன் சிரித்து பார்க்கிறாள்.. அட்டகாசமான சிரிப்பு.. லேசான புன்னகை கூட ஆளை மயக்கத்தான் செய்கிறது.. புகைப்படத்தில் புன்னகைத்ததைப் போன்ற அவன் உருவத்தை கண்டு மயங்கிதானே மணக்க சம்மதித்தாள்.. மீண்டும் இந்த புன்னகையில் கிறங்கி வலையில் விழ தயாராக இல்லை.. விழிகளை அழுத்தமாக மூடிக்கொண்டாள்.. கருமணிகள் அசைந்தது.. மூடிய இமைகளின் வழியே அவன் இன்னும் அதிகமாக சிரிப்பது தெரிந்தது.. அவன் மூச்சுக்காற்று தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தியது.. இன்னும் அதிகமாக விழிகளை மூடிக்கொண்டு மூச்சடக்கினாள்..

அவன் உதடுகள் மாதவியின் நெற்றியில் அழுத்தமாக பதிந்தன.. அதன்பிறகு எந்த மாற்றங்களும் இல்லாத போனதில் விழிகளை திறந்தாள் அவள்.. ஹரிச்சந்திரா விலகி சென்றிருந்தான்..

ஏதோ புரியாத புத்தகத்தை படிப்பதைப் போல் குழம்பிய மனநிலையில் இருந்தாள் மாதவி.. இருவருமாக சேர்ந்து ஆட்டோவில் தான் வீட்டுக்கு வந்தனர்.. அவள் இளந் தோள்களை அணைத்தபடிதான் பயணம் முழுக்க அமர்ந்திருந்தான்..

அவள் விழிகள் வினோதமாக அவனை திரும்பி பார்க்க.. என்னவென்று புருவங்களை உயர்த்தி வினவினான்..

அரிச்சந்திரா செய்திருந்த அநியாயங்களில் செத்துப் பிழைத்தவள் அவனை மன்னித்து மனம் மாற துளியளவும் வாய்ப்பு இல்லைதான்..

ஆனாலும் அவன் கண்களில் தென்படும் ஏதோ ஒன்று அவளை சலனப் படுத்துகிறது..

வெளியில் மாமியாரின் குரல் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது.. அக்ஷயா வந்திருக்கக்கூடும்.. மழைக்கால அவசர கூட்டத் தொடர் போல் இருவருமாக ஏதோ கலந்து பேசிக் கொண்டிருப்பார்கள் என புரிகிறது..

"இப்ப எதுக்காக வந்தாளாம்.. திமிரெடுத்துப் போனவ அப்படியே போக வேண்டியதுதானே..!! நீ உள்ளே விட்டிருக்க கூடாதுமா.. அண்ணன் வரட்டும் நான் பேசிக்கறேன்.." பிறந்த வீடு எனக்கு மட்டுமே உரிமைப்பட்டது என்பதை போல் அக்ஷயாவில் ஆணவ பேச்சு காதுகளில் தெளிவாக விழுந்தது..

ஆனால் ஹரியை தாண்டி யாரும் உள்ளே வரவில்லை.. அறைக்கு வெளியே அதிகபட்ச சத்தத்துடன் அவள் காதில் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒலித்துக் கொண்டிருந்த வார்த்தைகள் அவர்கள் கையாலாக தனத்தை பறைசாற்றியது.. நிச்சயம் ஹரிச்சந்திரா ஏதோ சொல்லி சென்றிருக்க வேண்டும்.. அதனால்தான் முப்பெருந்தேவிகளின் சாரல் மழை அறைக்குள் வீசவில்லை..

என் மனைவியை தொந்தரவு செய்யாதே என்று சொன்னானா..!! அல்லது கொஞ்சம் பொறுங்கள் மொத்தமாக முடித்து விடலாம் என்று சொல்லி சென்றானா தெரியவில்லை..

எதிர்காலம் மிச்சமிருக்கிறது.. இனிமையான பொழுதுகள் கனிந்து வரும் என்று நம்பி ஏமாந்த வரைக்கும் போதாதா..? கதையும் வாழ்க்கையும் வேறு.. வேறு..

இந்த ஆன்ட்டி ஹீரோ என்றுமே திருந்த போவதில்லை.. இவன் மாற்றத்தில் கூட ஏதோ உள்குத்து இருக்கிறது.. மிக கவனமாக இருக்க வேண்டும்.. யோசித்து யோசித்து மூளை சோர்ந்து போனதில்.. மெல்ல உறக்கத்தை தழுவியிருந்தாள் மாதவி..

தொடரும்..
 
New member
Joined
May 1, 2024
Messages
4
Thukathulayeaaa potu thalla porannnnn... Poooccchhhuuuuu... 😂😂😂😂

Irunthalum 1 கோடி la ayniyayam thalaivi... Oru 20 ila 30 லட்சம் irukum மாது
 
Member
Joined
Jan 11, 2023
Messages
24

Naanum hariya namba maaten sis. Madhavi neeyum avana nambadha...
 
Active member
Joined
Jan 18, 2023
Messages
81
Enakku enamo Evan divorce vanga tha intha scene podaran nu thonuthu.....pakkalam....epo enga ponalam antha rosi....🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼🫶🏼
 
Joined
Jul 10, 2024
Messages
26
மாதவி உனக்கு மட்டுமில்ல எங்களுக்கும் நம்பிக்கை வரமாட்டேங்குது. இத்தனை நாள் உணராதவன் இந்த ஒரு மாதத்தில் உணர்ந்துவிட்டானா.🤔🤔🤔🤔🤔🤔🤔

இல்லை அந்த ரோஷினியும் இவனும் ஏதாவது ப்ளான் போட்டிருப்பாங்களா. 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

ஒன்னும் புரியலையே.😱😱 🤨🤨🤨🙄🙄🙄🙄
 
Member
Joined
Sep 14, 2023
Messages
110
மாதவி நினைக்கிறது சரியோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 என்னாலும் நம்ப முடியவில்லை.... இதில் ஏதோ உள் குத்து இருக்குமோ...
 
Top