• வணக்கம், சனாகீத் தமிழ் நாவல்கள் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.🙏🙏🙏🙏

அத்தியாயம் 11

Administrator
Staff member
Joined
Jan 10, 2023
Messages
85
அலுவலகத்திற்கு வந்த பின்னர் அவள் கழுத்தில் மின்னிய புது மஞ்சள் கயிறை பார்த்து ஏகப்பட்ட பேச்சுக்கள்..

"கல்யாணம் ஆயிடுச்சா உனக்கு.. சொல்லவே இல்லையே.!! எங்களை அழைக்கவே இல்ல.. ஞாயிற்றுக்கிழமை முடியறதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறியே.. ரொம்பத்தான் ஃபாஸ்ட்.."

"எங்களுக்கெல்லாம் பார்ட்டி கொடுக்கணும்.. யாரு மாப்பிள்ளை.. போட்டோ இருக்கா..? வயசு என்ன..? உன்னை விட உயரமா..? உன் பாஸ்ட் லைப் பத்தி தெரியுமா.." அப்பப்பா எத்தனை பேச்சுக்கள்..

இதெல்லாம் அவள் முகத்திற்கு நேரான இயல்பான விசாரிப்புகள்.. அவள் முதுகிற்கு பின்னே..

"என்ன அந்த ஆள் வந்து பிரச்சனை பண்ணின சூட்டோடு சூடா கல்யாணம் பண்ணிக்கிட்டாளே.."

"என்ன விஷயம் தெரியலையே..!!"

"இவளோட தம்பி ஒருத்தன் இருக்கானே.. அவமானத்துக்கு பயந்து கிடைச்ச வரனுக்கு தள்ளிவிட்டு இருப்பானோ..!!"

"பின்ன பொண்டாட்டியோட அண்ணனை தன்னோட அக்கா கரெக்ட் பண்ணினா குடும்பத்தில் பிரச்சினை வரத்தான் செய்யும்.. தன்னோட வாழ்க்கையையும் பாக்கணுமா இல்லையா..!!"

"என்னவோ கல்யாணம் ஆகிடுச்சு இனியாவது ஒழுங்கா இருப்பாளா..?"

"சொல்ல முடியாது.. இது இன்னும் வசதி.. லைசன்ஸ் கழுத்துல இருக்குற தைரியத்தில் யார் கூட வேணும்னாலும் போகலாம்.. !!"

"மாப்பிள்ளை யாருன்னு தெரியலையே..!! அந்த இளிச்சவாயனை நிச்சயம் பார்க்கணும்.." பெண்களுக்குள் களுக்கென சிரிப்பு..

"நரை முடி கிழவனா இருக்குமோ..!! எதுக்கும் நம்ம கிளார்க் ஆபீஸ் வந்திருக்காரா செக் பண்ணிடுங்கோ..‌" முணுமுணுவென பேச்சு மீண்டும் வெடித்த சிரிப்பு..‌

அடக்கடவுளே இவர்கள் வாயெல்லாம் மூடவே மூடாதா..!! திருமணம் ஆகும்முன் அப்படி ஒரு பேச்சு.. திருமணமான பின் வேறு மாதிரியான பேச்சு.. இவர்கள் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைக்க திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் ஒரு விஷயம் நன்றாகவே புரிகிறது.. உலகம் அழியும் வரை இவர்கள் நாக்கும் பேச்சும் ஓயப் போவதே இல்லை.. இந்த மாதிரியான மனிதர்களுடன் இழைவதற்கு உதய் கிருஷ்ணா போல் தனித்து வாழ்வதே மேல் என்று கூட தோன்றியது.. ஆனால் எல்லாரும் கெட்டவர்கள் இல்லையே.. இது போன்ற மனிதர்கள் நடுவே நல்ல உள்ளம் கொண்ட நாணயமானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... என்னை போல்.. ரமணியம்மாவை போல்.. அக்கவுண்டன்ட் திவ்யாவை போல்.. என் சக தோழி ராகவியை போல்.. சரியாக இனம் கண்டு கொண்டு அவர்களோடு பழகுவதுதான் சாமர்த்தியம்..

ஒரே ஒரு விஷயம்தான் மனதை குடைந்து கொண்டே இருக்கிறது.. என்னை போல் ஒரு பெண் இவர்கள் வீட்டில் இருந்தால்.. இதே போல் சபையில் இழுத்து வைத்து கேலி கிண்டல் செய்து பேசுவார்களா..!! அடுத்தவர்களின் அந்தரங்கம் என்றால் மட்டும் இலுப்பை பூ சர்க்கரையாகி விடுகிறது..‌

காதுகளை மூடிக்கொள்ளத்தான் வேண்டும்..‌ கூட்டத்தின் நடுவே வாய் கூசாமல் கண்டதை பேசிவிட்டு தன்னிடம் வந்து பல்லை காட்டி இளிக்கும் போதுதான் ஓங்கி ஒரு அறை விட தோன்றுகிறது..

உதய் கிருஷ்ணாவும் பத்மினியும் வேலை விஷயம் தவிர வேறெதையும் பேசிக்கொள்ளவில்லை.. வழக்கமான சிடுசிடுப்பு.. அதே எரிச்சல்.. ஊழியர்களை பரபரப்பாக வேலை வாங்கும் முதலாளியின் கடுமை என வழக்கம் போல் அலுவலகத்தில் எந்த மாற்றங்களும் இல்லை..

வீட்டுக்கு வந்த பிறகு ரமணி அம்மாவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள்..

"சாயந்திரம் கொஞ்ச நேரம் காலாற வாக்கிங் போயிட்டு வாங்களேன் அம்மா.. பக்கத்துலதான் பார்க் இருக்கே..!!"

"அட போடியம்மா..!! தனியா வாக்கிங் போறது ரொம்ப போர்.. யாரும் என்கிட்ட பேசக்கூட மாட்டாங்க.. அந்த சிமெண்ட் திண்டுல உட்கார்ந்து வெக்கு வெக்குனு வேடிக்கை பாக்கறதுக்கு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கலாம்..!!"

"என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க.. வெளியில பார்த்து ரசிக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கு.. சுத்தமான காத்தை சுவாசிக்கிறதே மனசுக்கு இதம்.. அவங்க பேசலனா என்ன.. நாம அவங்க கிட்ட பேசுவோம்..!!"

"ஆமா பேசிட்டாலும்..!! ஏதோ ஜந்து மாதிரி வினோதமா பாக்கறதுங்க.. நமக்கு கோபம் தான் வருது..‌!!" ரமணி அலுத்துக் கொண்டாள்..

"யார் கூடவும் பேசாம தனிச்சிருக்குற மனுஷங்களை எல்லோரும் அப்படித்தான் பார்ப்பாங்க.. சகஜமா நாமளும் அவங்க கூட ஒன்றிப்போனா அவங்களுள் ஒருத்தங்களா நம்மள ஏத்துக்குவாங்க.."

பத்மினியின் பேச்சில் திருப்தி இல்லாமல் பார்த்தார் ரமணி.. தன் வாழ்க்கையில் நீண்ட கசப்பான அனுபவங்களின் மூலமாக மனிதர்களோடு சகஜமாக கலந்து கொள்ள அலர்ஜி..

உதய் கிருஷ்ணாவின் ஆரம்ப புள்ளி இவர்தான்..

"சரி உங்களோட நான் வரேன்.. ரெண்டு பேருமா சேர்ந்து அப்படியே காலாற நடந்துட்டு வரலாம்.."

"நடக்கிறதா..? முழுசா பத்து அடி கூட என்னால எடுத்து வைக்க முடியாது.. இடுப்பு விட்டுப் போயிடும்.. என்னை விட்டுடேன்.."

"நடக்க வேண்டாம் அப்படியே பார்க்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வரலாம்.. குழந்தைகள் விளையாடறதை பார்த்துக்கிட்டே இருந்தா கூட மனசுக்கு அமைதி கிடைக்கும்.." பத்மினி வற்புறுத்தி ரமணி அம்மாவை அழைத்துச் சென்றாள்..

அங்கே வாக்கிங் சென்று கொண்டிருந்த சில வயது முதிர்ந்த பெண்களோடு பேச்சு கொடுத்து அவர்களை ரமணி அம்மாவுடன் நட்பு பாராட்ட வைத்தாள்..

வெகு நாட்களுக்குப் பிறகு மனிதர்களோடு பழக ரமணி அம்மாவிற்கு அத்தனை கூச்சம்.. இயல்பாக பேச முடியவில்லை..

பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசும்போது அந்த இயல்பான கண்டிப்பு வெளிப்பட்டு விடுகிறது..

ஆனால் இங்கே சினேகமாக பேச தெரியவில்லை.. கறார் பேர்வழியாக அந்த அதட்டல் உருட்டல் குரல் தான் வெளிப்படுகிறது..

பத்மினி பழக்கப்பட்டு விட்டாள்.. மற்றவர்களுக்கு அவர் இயல்பு புரிய வேண்டுமே..!!

தனது மாமியாரை அந்த பெண்களோடு பேச வைத்து.. சற்று தொலைவில் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கிய விளையாடிய குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்தாள் பத்மினி.. ஒரே நாளில் வியக்கத்தகு முன்னேற்றம்.. இங்கே மகனை விட மகனின் அம்மாவுக்கு தான் மாற்றம் தேவை..

"நாளைக்கு வந்துடுங்க..!!" என்று இயல்பாக பேசி வழி அனுப்பி வைத்தனர் அந்த பெண்கள்..

"என்னம்மா.. சந்தோஷமா இருந்தீங்களா..?"

"சந்தோஷமா இருந்தேனா தெரியல.. மனசுக்கு ஒரு மாதிரி நிம்மதியா இருக்கு.. இந்த காத்து.. சுற்றுப்புற சூழ்நிலை.. நீ சொன்ன மாதிரி மனசுக்கு அமைதியை கொடுக்குது.. ஆனா வீட்டை விட்டு வெளியே வந்து யார்கிட்டயும் அவ்வளவா பேசினதே இல்லை.. இப்ப இவங்க கிட்ட எல்லாம் புதுசா பேசுறது ஒரு மாதிரி பதட்டமா இருக்கு..!!"

"ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப்போக பழகிடும்.. ஒருத்தர் ரெண்டு பேரால நம்ம வாழ்க்கையில் ஏற்பட்ட தேவையில்லாத சம்பவங்களால.. எல்லோரும் ஒரே மாதிரிதான்னு முடிவுக்கு வரக்கூடாது.. அப்படியே இருந்தாலும் இருந்துட்டு போகட்டுமே.. அவங்க இயல்புப்படி அவங்க இருக்கட்டும்.. நாம நாமளா இருப்போம்.."

"எனக்கு யாரோடயும் ஒத்து போக முடியல.. எல்லார்கிட்டேயும் ஏதாவது ஒரு குறை இருக்குதே.." என்றார் ரமணி அயர்வாக..

"குறை இருந்தாதானே மனுஷங்க.. தொழில் பண்ண மனுஷங்க வேணும்.. வாழ்வாதாரத்துக்கு மனுஷங்க வேணும்.. ஆனா பேசி பழக மட்டும் மனுஷங்க வேண்டாம்னு சொன்னா எப்படி..? மனுஷங்களை வெறுக்காதீங்க அம்மா.. எல்லார்கிட்டயும் சந்தோஷமா பேசி பழகுங்க.. இந்த வயசுக்கு மேல கலகலப்பான பேச்சு மட்டும்தான் உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.. ஒருத்தங்க தப்பானவங்கன்னு தெரிஞ்சா அவங்ககிட்ட இருந்து ஒதுங்கிடுங்க.. அதுக்காக எல்லாரையும் ஒதுக்கி வைச்சு இந்த உலகமே வேண்டாம்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.." ரமணியம்மாவின் கைகோர்த்துக்கொண்டு நடந்தாள் பத்மினி..

தந்தைக்கு உபதேசம் செய்த முருக பெருமானை போல்.. தனக்கு அறிவுரை சொன்ன மருமகளை ஊன்றிப் பார்த்தார் ரமணி..

என்ன செய்வது? குழந்தைகள் கூட வாழ்க்கையை மிக எளிதாக கற்றுக் கொடுத்து விடுகின்றனர்..

வன்மம் பகை எதையும் மழலைகள் அறிவதில்லை.. தலையில் தட்டி கையில் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் கள்ளங் கபடமில்லாத வெகுளித்தனம் வயது பிராயத்தை எட்டும் போது மறைந்து போய் விடுகிறது..

பத்மினி இப்போது சொன்ன அறிவுரைகளை காலா காலத்தில்.. ரமணி மனம் உடைந்து பரிதவித்த நேரத்தில் யாரேனும் சற்று ஆறுதலான வார்த்தைகளோடு கூறி இருந்தால் ஒருவேளை அவர் வாழ்க்கை வேறு மாதிரியாக மாறியிருக்கலாம்.. இந்த உதய கிருஷ்ணாவும் கோகுல கிருஷ்ணனாக குறும்போடு முத்து பற்கள் தெரிய மந்தகாசமாய் சிரித்து முற்றிலும் மாறுபட்ட குணங்களோடு வளர்ந்தருப்பானோ என்னவோ..

"நாளைக்கு நான் வரணும்னு எதிர்பாக்காதீங்க..!! உங்களுக்குதான் பார்ட்னர் கிடைச்சாச்சே.. இனி தினமும் சாயந்திரம் ஆறு மணிக்கு மேல அப்படியே காலாற நடந்துபோய் பார்க்ல உக்காந்துட்டு வாங்க.." பத்மினி சொல்ல.. "பாக்கலாம் பாக்கலாம்" என்றார் ரமணி..

இதுவும் ஒருவிதத்தில் மகளதிகாரம்.. மருமகளதிகாரம்..

பேசிக்கொண்டே இருவருமாக திரும்பி வரும் வேளையில் உதய் கிருஷ்ணா வீட்டில் இருந்தான்..

"எங்க போனீங்க..!!"

"பார்க்ல.. கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வர்றோம்.." என்ற அன்னையை வினோதமாக பார்த்தான் உதய் கிருஷ்ணா.. என்றுமில்லாத உற்சாகத்தில் கனிந்து போயிருந்தது அவர் முகம்.. என்றும் இப்படி பார்த்ததில்லை அவரை.. கண்கள் சுருக்கி இருவரையும் பார்த்தவன்.. பிறகு தனது அலைபேசிக்கு பார்வையை தார வார்த்தான்..

ரமணி அம்மாவை மாற்ற முடிந்த பத்மினியால் தன் கணவனை நெருங்க கூட முடியவில்லை..

ஒரே ஒரு பார்வைதான்.. பத்து அடி தள்ளி நிற்க வேண்டும்..

பாவம் அவளும் பெண்தானே..!! தனிமையில் அமர்ந்திருக்கும் நேரங்களில் எதிர்காலத்தை பற்றிய பயம் சூழ்ந்து அவளை கலவரப்படுத்துகிறது..

பாதுகாப்பான வாழ்க்கை..!! அனுசரனையான மாமியார்.. எல்லாம் சரிதான்.. ஆனால் கணவனின் அன்பு கிடைக்கவில்லையே.. அவளையும் மீறி ஏக்கம் ததும்புகிறது.. அதில் சமீப காலங்களாக உதய் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது சலனப்பட்டு போகிறாள்..

இந்த ஸ்வீட் கடுவனை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சோ..!! யாருக்குத்தான் இவரை பிடிக்காது.. கடிவாளம் போட்டு அடக்கி வைத்தாலும் மனதுக்குள் உணர்ச்சிகளோடு கூடிய ஒரு பெண் இப்படித்தான் புலம்பி தவிக்கிறாள்..

அன்று குளியலறையில் இருந்து வெளியே வந்து கண்ணாடியின் முன்பு நின்று உடைமாற்றும் போது தன் உருவத்தை கவனிக்கிறாள்..

என்ன மாதிரியான ஸ்ட்ரக்சர் தெரியுமா..!! ராகவி கண்களை உருட்டி பிரமித்து சொன்னது நினைவில் வந்து போனது..

பாவாடை ரவிக்கையோடு வெகு நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தாள்..

பெரிய கண்களும் சின்ன இதழ்களும்.. எடுப்பான மார்பகங்களும்.. வளைந்த இடுப்பும்.. வீணை குடங்களான பின்னழகும்.. வாழைத்தண்டு தொடைகளும்.. பூவான பாதங்களும்.. மென்மையான சருமமும் ரோஜாப்பூ நிறமும்.. உடையவனுக்கு பயனின்றி மண்ணுக்கு விருந்தாக போகிறது.. பெருமூச்சும் தாபத்தில் தீயாக கொதிக்கிறது..

இப்போதெல்லாம் அடிக்கடி காய்ச்சல் காணுவதைப் போல் உடல் சுடுகிறது..‌ தனக்குள் என்ன நடக்கிறது ஒன்றுமே புரிவதில்லை..‌ பூப்பெய்திய பருவம் போல் தன்னை மீறிய ஒரு கட்டுப்பாடற்ற நிலை.. கணவனின் விரல் நகம் கூட விபத்தாக தன்மீது படவில்லை என்பது கொடுமையான விஷயமாக தோன்றுகிறது.. என் மாதிரியான உணர்ச்சிகளின் தொந்தரவுகள் அவருக்கு ஏற்படுவதே இல்லையா..!! இரும்பு உடலுக்குள் இளமை ஹார்மோன்கள் உறங்குகின்றனவா..

"ஏன் ஒரு மாதிரி கலக்கமா தெரியற..!! எதுவாயிருந்தாலும் என்கிட்ட மனசு விட்டு பேசு.." இரவு படுக்கும் போது மாமியார் கேட்டாள்.

"என்ன சொல்ல முடியும்..!! விரகதாபத்தில் என் தேகம் தகிக்கிறது கணவனின் அணைப்பு வேண்டும்.." என்று அவரிடம் சொல்ல முடியவில்லை.. இளமையிலேயே கணவனை பிரிந்து கரடு முரடாக தன்னை மாற்றிக் கொண்டவருக்கு என் வேதனை எங்கிருந்து புரிய போகிறது..!!

அவள் கரத்தின் மீது தன் கரத்தை வைத்தார் ரமணி..

"அவன் குணாதிசயம் கண்டிப்பா மாறிடும்.. உன்கிட்ட கலகலன்னு பேசுவான்னு நான் சொல்ல மாட்டேன்.. ஆனா உங்களுக்குள்ள இயல்பான தாம்பத்தியம் மலரும்.. குடும்பம் குழந்தைன்னு கண்டிப்பா சந்தோஷமா இருப்பீங்க.. என் அடிச்சு மனசு சொல்லுது.." என்ற வரை திரும்பி பார்த்து வறண்டு புன்னகைத்தாள்..

"அவர் மாறவே மாட்டார் ரமணிம்மா.. உணர்ச்சிகளே இல்லாத மனித இயந்திரம்.. எதிர்பார்ப்பது வீண்.." என்று விரக்தியோடு சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த இடமே இருளானது..

"அடக்கடவுளே தூங்குற நேரத்துலயா கரண்ட் போகணும்.." சலித்துக் கொண்டார் ரமணி..

"ஏம்மா பத்மினி.. உன்னோட போன்ல ஃப்ளாஷ் லைட் போட்டு.. அந்த மேஜை மேல் ஒரு மெழுகுவர்த்தி இருக்கும் பாரு.. அதை எடுத்து பத்த வை" என்றார்..

பத்மினி எழுந்து மேஜை மீதிருந்த அந்த மெழுகுவர்த்தியை எடுத்தாள்..

"ஐயோ அத்தை.. இதுல திரியே இல்ல.. வேற மெழுகுவர்த்தி இருக்கா..!!" என்று மேஜையின் ட்ராயரை திறந்து தேடினாள்.. ரமணியின் மூளையில் பட்டென மின்னல் தெறித்ததை போல் ஏதோ யோசனை..

"அச்சோ மெழுகுவர்த்தி வீணா போச்சே.. சரி தூக்கி போடு.. வேற ஏதாவது மெழுகுவர்த்தி இருக்கான்னு பார்க்கிறேன்.."

"ஏன் அதை தூக்கி போடணும்.. ஏன் வீணாக போகுது.. கொஞ்சம் மெழுகை வெட்டி கூர்மையாக்கி திரியை வெளியே எடுத்து பத்த வச்சா மெழுகுவர்த்தி பளிச்சுன்னு எறிய போகுது.." என்று சொன்னவள் அத்தோடு நிற்காது.. பக்கத்தில் இருந்த நகைவெட்டியின் கூர்மையான பகுதி மூலம் மெழுகுவர்த்தியின் மேல் புறத்தை லேசாக வெட்டி உள்ளே அமிழ்ந்து கிடந்த திரியை கீறி வெளியே எடுத்தாள்..

அட எதுக்குமா இவ்வளவு "கஷ்டப்படுற.. தூக்கி போட்டுட்டு வேற மெழுகுவர்த்தியை எடுத்து பத்த வச்சா வேலை முடிஞ்சு போச்சு..!!"

"இதுல என்னமா கஷ்டம்.. கஷ்டம்னு நினைச்சா மூச்சு விடுறது கூட கஷ்டம் தான்.." என்றவர் தீக்குச்சியின் நெருப்புச் சுடர் மூலம் அந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாள்..

"பாத்தீங்களா எவ்வளவு ஜெகஜோதியா எரியுது.. சின்ன வேலைக்கு சங்கடப்பட்டு மெழுகுவர்த்தியை கீழே போட சொன்னீங்களே..!! ஒரு மெழுகுவர்த்தி வீணா போயிருக்கும்.."

பத்மினி அவரைப் பார்த்து மென்மையாய் சிரிக்க.. சலிப்பாக பெருமூச்சு விட்டார் ரமணி..

"மெழுகுவத்தி வீணா போகுதேன்னு நீ காட்டுற புத்திசாலித்தனத்துல ஒரு கால்வாசியை உன் வாழ்க்கைக்காக செலவழிச்சா நல்லா இருக்கும்.."

பத்மினி கேள்வியாக திரும்பினாள்..

"எனக்கு புரியல..!!"
"
மனுஷங்களா பிறந்தா உணர்ச்சி எப்படி இல்லாம போகும்.. சரி அப்படியே இருந்தாலும் உனக்கு உணர்ச்சிகள் இருக்குதானே.. எதுக்காக கட்டுப்படுத்தி வைக்கணும்.."

பத்மினி திகைத்தாள்..

"அவன் உன் புருஷன்தானே.. உன் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது அவன் பொறுப்பு.. அவனை நல்லபடியா கவனிச்சுக்க வேண்டியது உன்னோட கடமை.."

"சரிதான் அப்படியே உங்க புள்ள என் பணிவிடைகளை ஏத்துக்கிற மாதிரி பேசுறீங்க..!!" பத்மினி உதடு சுழித்தாள்..

"அவன்கிட்ட நீ என்னென்ன எதிர்பார்க்கிறியோ அதை அவனுக்கும் கொடு.. சாப்பாட்டு சுவை மட்டுமல்ல.. தாம்பத்திய ருசியையும் காட்ட வேண்டியது மனைவியோட கடமைதானே..!!"

"அவரை மயக்க சொல்றீங்க.. அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை.. ரெண்டு பேரும் மனமொத்து சங்கமிக்கிறதுதான் தாம்பத்தியம்"

"விளக்கை திரி தூண்டி சுடரேத்தி வச்ச மாதிரி.. உன் வாழ்க்கை விளக்கை நீதான் ஏற்றி வைக்கணும்.. அவனுக்குள் உணர்வுகள் இருக்கு.. அதை வெளியே கொண்டு வர வேண்டியது உன்னோட புத்திசாலித்தனம்.. கணவன் மனைவிக்குள்ள எதுவுமே தப்பில்ல.."

"போதும் அத்தை என்னால் அவர்கிட்ட அவமானப்பட முடியாது.. நானா நெருங்கினால் உங்க மகன் எனக்கு என்ன பெயர் வைப்பார்ன்னு யோசிச்சு பார்த்தீர்களா..?" என்றாள் வேதனையான குரலில்

"நெருங்கறதுன்னா மேலே விழுந்து இழையறது இல்ல.. மறைமுகமாக கூட அவன் கவனத்தைக் கவரலாமே.."

"எனக்கு ஒண்ணுமே புரியல..!!" தலையை உலுக்கினாள் பத்மினி..

"இதுக்கு மேல என்ன சொல்றது.. அவனை வெறுத்துடாதே.. நம்பிக்கையோடு இரு.."

"நம்பிக்கையா..? அதுவும் உங்க மகன் மேல.." பத்மினி சிரித்தாள்..

"இப்படி விரக்தியா பேசக்கூடாது..
முதல்ல ஒரு பேப்பர் பேனாவை எடு..!! அதோ அந்த கட்டில் மூலையில் இருக்கும் பார்.." ரமணி இருக்கும் இடத்தை காண்பித்தார்..

"கரண்ட் இல்லாத நேரத்தில் பேப்பர் பேனா வச்சு என்ன செய்யப் போறோம் அம்மா..!!" பத்மினிக்கு சலிப்பாக இருந்தது..

"எதுவாயிருந்தாலும் உடனே செய்யணும்..!! காலம் தாழ்த்தக்கூடாது.. நான் சொல்றதை கேளு.. உனக்கு என்னென்ன அவன் கிட்ட வேணுமோ.. உன் மனசுல உதய் எப்படியெல்லாம் நடந்துக்கணும்னு ஆசை படறியோ அதை இந்த பேப்பர்ல எழுதி வை.."

"எழுதி வச்சா..?"

"கண்டிப்பா மாற்றம் வரும்.. ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்.." என்றவரை வினோதமாக பார்த்தாள் பத்மினி..

"என்ன அப்படி பார்க்கற.. 108 தடவை ஸ்ரீராமஜெயம் எழுதறோம்.. நம்ம வேண்டுதல்களை ஒரு பேப்பர்ல எழுதி மாலையாக கோர்த்து விருப்பப்பட்ட தெய்வங்களுக்கு சாத்தறோம்.. எழுத்துக்களுக்கு சக்தி அதிகம்.. படிச்சதை எழுதி பார்க்கணும்னு சொல்றதில்லையா.. எழுதி வைக்கிறது மனசுல நல்லா பதியும்.. ஆழமா பதிஞ்ச விஷயம் முயற்சிக்கு வித்திடும்.. முயற்சி வெற்றியை தரும்..

சத்தமாக சிரித்து விட்டாள் பத்மினி..

"அம்மா நீங்க ஒரு டீச்சர்ன்னு நிரூபிக்கிறீங்க..!! பாடம் படிக்கிறது.. படிச்சதை எழுதி பார்க்கிறது.. ஏன் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி வைக்கிறது கூட ஓகேதான்.. ஆசைப்பட்ட விஷயங்களை காகிதத்தில் எழுதி வச்சா அது நடக்கும்னு சொல்றது பத்தாம் பசலித்தனமா இருக்கு.."

"இருந்துட்டு போகட்டுமே..!! காசா பணமா.. எழுதி வைக்கிறதுனால எதை இழக்க போற.. எழுதி வச்சுதான் பாரேன்..!!"

"ஆமா எழுதி வச்சா நடந்திடும்..!!" கேலியாக சொன்னாள் பத்மினி..

"ஒரு வேலை நடந்துட்டா..?" ரமணி சொல்லும்போது மீண்டும் மின்சாரம் வந்ததில் விளக்குகள் பளிச்சென எரிந்தன.. சுற்றிலும் பார்த்துவிட்டு ரமணியை பார்த்தாள் பத்மினி..

உன் ஆசைகளை உன் எங்கேயாவது ஒரு இடத்தில் அழுத்தமா பதிய வை.. இந்த உலகம் உன்னை ஏமாத்தினாலும் உனக்குள்ள இருக்கிற மகாசக்தி உன்னை ஏமாத்தாது.. இப்போது மாமியார் டர்ன்..

"அப்ப நீங்க ஏன் இதை செய்யல.." கேலி புன்னகையை உதட்டோடு மறைத்துக் கொண்டு கேட்டாள்..

"நான் தவற விட்டதை உன்னை செய்யச் சொல்றேன்.. எனக்கு யார் சொல்லித் தந்தா.."

"உன் விருப்பங்களை ஒரு பேப்பர்ல எழுதி வை.. நடந்துட்டா டிக் அடி.. இல்லைன்னா அப்படியே விட்டுட்டு அடுத்த வேலையை பார்.. இப்ப மெழுகுவர்த்தியை அணைச்சுட்டு தூங்கு.." ரமணி உறங்கி விட்டார்..

"இந்த டீச்சரமா தொல்லை தாங்க முடியலையே.. ஸ்கூல்ல பசங்களை டார்ச்சர் செஞ்சது பத்தாதுன்னு.. வீட்ல வேற.. லிஸ்ட் போடு.. கரெக்ஷன் பண்ணுனு.." என்று கண்களை உருட்டினாள்..

"ஆசைகளை வரிசையா எழுதி வச்சா மட்டும் பெருசா மேஜிக் நடந்து இவங்க பையன் மாறிடுவாரா..!! பத்தாம் பசலித்தனமான பேச்சு..!!" மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டு படுத்துவிட்டாள் பத்மினி..‌

தொடரும்..
 
Last edited:
Member
Joined
Apr 7, 2023
Messages
63
👌👌👌👌👌👌👌👌👌👌 interesting
 
New member
Joined
Jun 2, 2024
Messages
13
கீத் இப்படியும் நடக்குமா? எப்படி எல்லாம் சிந்திக்கறீங்க? அபாரம்...
 
Joined
Jul 31, 2024
Messages
58
அப்ரம் எண்ணப்பா நாமளும் ஒரு பேப்பர் எடுத்துட்டு போய் எழுதுவோமோ 🥰
நான் போயிட்டேன் நீங்க 💃💃💃💃💃💃💃💃💃💃
 
இதோ கிளம்பிட்டேன் என் ஆசை கனவுகளை எழுத 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
நம்பிக்கை அதானே வாழ்க்கை 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அடுத்த எபிக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் ஆவலோடு சீக்கிரம் போடுங்க டார்லு🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Member
Joined
Dec 23, 2023
Messages
73
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Jun 27, 2024
Messages
60
Nice epi. Waiting for next... 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
 
Member
Joined
Aug 8, 2024
Messages
26
Enga sister ellaarkiteyum pesi pazhaguradhu.. Naan pesinaale adhu sarcastic ah poidudhu sometimes.. Actually apadidhan pesa varudhu.. Innoru psy-chic gunam nalla knowledge ullavanga kita matum dhan pesuven nu brain adam pidikudhu.. I myself is a fool sometimes, but still indha friendship ellaam set aaguradhu illa..

Ezhudhi vaikuradhu nalladhu la.. Super sister.. I am doing this, but still have to improve some things. Thank you..

Super episode, sister.. Some hidden and several explicit suggestions.. You are giving more reasons to be proud of you.. Nice nice.. Very happy about this chapter.. Thank you...
 
Active member
Joined
Jan 16, 2023
Messages
140

🌼🌼🌼🌼🌼🌼
 
Member
Joined
Jan 11, 2023
Messages
37

True va nadakuma sis naanum ezhudhuren...
 
Member
Joined
Jan 26, 2024
Messages
65
அருமையான பதிவு
 
Top