- Joined
- Jan 10, 2023
- Messages
- 96
- Thread Author
- #1
தர்மன் செருப்பை மாட்டிக் கொண்டு வேலைக்கு புறப்படும் வேளையில்.. வாயை பொத்திக்கொண்டு பாத்ரூமை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தாள் சுப்ரியா..
"என்னங்க ஆச்சு..?" அவன் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை அவள்..!
குளியலறைக்கு முன்பிருந்த தண்ணீர் டேங்க் வரை ஓடியவன்.. அதற்கு மேல் செல்ல யோசித்து தயங்கி நின்றான்..
ஆனால் உள்ளிருந்து வந்த உவ்வாக்.. என்ற அடிவயிற்றிலிருந்து ஓங்கரிக்கும் சத்தத்தில் அதற்கு மேலும் தாமதிக்காமல் அங்கே சென்று வெளிப்புற சுவற்றில் கைவைத்தபடி உள்ளுக்குள் மெல்ல எட்டிப் பார்க்க.. வயிற்றிலிருந்த மொத்தத்தையும் வெளியேற்றிக் கொண்டிருந்தாள் சுப்ரியா..
உள்ளே சென்று அவள் தலையை இரு கைகளால் அழுத்தி தாங்கி பிடித்துக் கொள்ள உள்ளம் பரபரத்தாலும்.. உரிமை எடுத்துக் கொள்ள முடியாத ஏதோ ஒரு தயக்கத்தோடு வெளியிலேயே நின்று கொண்டிருந்தான் தர்மன்.. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செய்யும் உதவியென்பது வேறு.. தலையைப் பிடித்து உதவி செய்யலாம்.. தாங்கி கைபிடித்து அழைத்து வந்து அமர வைக்கலாம்.. ஆனால் இங்கே அப்படி நெருங்கி விட முடியாது..
முந்தைய நாள் இரவில் உண்டது கூட வயிற்றில் தங்கவில்லை போலும்..
"என்னவோ தெரியலங்க.. சாப்பிட்டது நெஞ்சு மேலேயே நிக்கிற மாதிரி இருக்கு.. நான் கொஞ்ச நேரம் இங்க நடக்கட்டுமா..?" இரவு பதினொறு மணிக்கு மேல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவன் பதறிக்கொண்டு விழித்தபோது விளக்கை உயிர்ப்பித்து சுப்ரியா இப்படி சொன்னதை நினைவு கூர்ந்தான்..
இன்று காலையில் பக்கத்து டிபன் கடையிலிருந்து இட்லி பார்சல் வாங்கி தந்துவிட்டு.. அதை அவள் பிரிக்கும் போது வீட்டை விட்டு புறப்பட்ட வேளையில் தான் இப்படி..!
தலையை பிடித்துக் கொண்டு.. இருமலும் தள்ளாட்டமுமாக நிமிர்ந்து பிடிமானத்திற்காக சுவற்றைப் பிடித்துக் கொண்டவள் தடுமாற்றத்துடன் மெல்ல அடியெடுத்து வைத்து எதையோ தேடிக் கொண்டிருந்தாள்..
"என்னங்க முடிஞ்சுதா..?"
"ம்.. ஆமா..!" அவள் குரலில் கூட பலவீனமான நடுக்கம்..
குழாயில் தண்ணீர் பிடித்து வாயை கொப்பளித்துக் கொண்டாள்..
"இங்கருந்த தொடப்பம் எங்க..?"
"அட.. நீங்க போங்க.. நான் கிளீன் பண்ணிக்கறேன்.." தர்மன் குளியலறைக்குள் வர முயற்சித்தான்.. ஆனால் சுப்ரியா விடவில்லை..
"இல்ல வேண்டாம்.. நீங்க தொடப்பம் எங்கன்னு மட்டும் சொல்லுங்க.." சுவற்றின் மீது ஒரு கைப்பதித்து நீளமான மூச்சு வாங்கலுடன் கண்களில் சோர்வு தாக்க அவனைப் பார்த்தாள்..
"உங்களால முடியாதுங்க.. நீங்க இந்த பக்கம் வாங்க.. நான் கிளீன் பண்ணிக்கறேன்.."
"ஐயோ ப்ளீஸ் வெளியிலிருந்து அந்த தொடப்பத்தை எடுத்துக் கொடுங்களேன்..!"
அதற்கு மேல் அவளோடு வாதிட முடியாது என்று தெரிந்து போக டேங்க் ஓரமாய் சாய்த்து வைக்கப்பட்டிருந்த துடப்பத்தை எடுத்து அவள் கையில் கொடுத்தான்.. வெளி குழாயிலிருந்து பக்கெட்டில் தண்ணீர் பிடித்துக் கொடுத்தான்..
பக்கெட் தண்ணீரை கவிழ்த்துவிட்டு.. அவள் குளியலறையை சுத்தம் செய்துவிட்டு.. புடவை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள்..
"என்னங்க ஆச்சு..?" தர்மனின் முகத்தில் கவலை படர்ந்திருந்தது..
"சாப்பிட்டது ஜீரணமாகலைன்னு நினைக்கிறேன்..! நேத்து ராத்திரியிலிருந்து வயித்த பிரட்டிகிட்டே இருந்தது.. நல்ல வேளையா இன்னைக்கு வாந்தி எடுத்துட்டேன்.. இல்லாட்டி போயிருந்தா தொண்டைக்கும் வயித்துக்குமா இடையில ரண வேதனை.. நல்லவேளை இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு.." நெஞ்சை நீவிக் கொண்டு மூச்சு விட்டாள்..
"ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கலையோ..!" தர்மன் கேட்க அவள் அமைதியாக இருந்தாள்.. அதுதான் உண்மை.. ஆனால் அதைச் சொல்லி அவனை சங்கடப்படுத்த விரும்பவில்லை..
இந்த மாதிரி நேரத்துல ஹோட்டல்ல வாங்கி கண்டதையும் சாப்பிடக்கூடாது.. வீட்ல சமைச்சு சாப்பிடுறது தான் உடம்புக்கு நல்லது என்று கேட்கும் நிலையிலா அவள் இருக்கிறாள்.. அல்லது அந்த உரிமை அவளுக்கு இருக்கிறதா..!
தெய்வம் போல ஒருவன் வீட்டில் அடைக்கலம் தந்திருக்க.. போட்டதை தின்றுவிட்டு.. மூலையில் ஒதுங்கி கிடக்காமல் இது வேண்டும் அது வேண்டுமென விருப்பப்பட்டதை கேட்டு அதிகாரம் செய்ய இதென்ன அவள் வீடா..! கணவன் வீட்டிலேயே அந்த உரிமை இல்லையே..! அவனுக்கு என்ன பிடிக்குமோ அதை தான் சமைக்க வேண்டும்.. தேங்காய் பூ தூவிய கருணைக்கிழங்கு வறுவல் அவளுக்கு மிகவும் பிடிக்கும்..! கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்போடு கருவேப்பிலை சேர்த்து தாளித்த தேங்காய் சாதம்.. தொட்டுக்க மிளகுக் கோழி வறுவல்.. தன் பிறந்த வீட்டில் அம்மா அடிக்கடி செய்யும் அவள் பேவரைட் உணவு.. சாதத்தோடு சேர்த்து துருவிய தேங்காய் பூக்களோடு உளுத்தம்பருப்பும் கடலைப்பருப்பும் பற்களுக்கு இடையே கடிபட வேண்டும்..
"ஐயே.. இதென்ன தேங்கா சாதமா..! இதெல்லாம் எங்க வீட்ல செஞ்சு பழக்கமில்ல.. சிக்கன் தொக்குல எதுக்காக இவ்வளவு மிளகுத் தூள் போட்டு வச்சிருக்க.. காரம் காது வரைக்கும் அடைக்குது..! சமைக்க தெரியலைன்னா சொல்லித் தொலைய வேண்டியதுதானே.. என் புள்ள அருமை பெருமையா உழைச்சு வாங்கி போட்ட பொருளையெல்லாம் இப்படித்தான் வீணாக்குவியா..?" மாமியார் சுகுணா காட்டு கத்தாக கத்த தேங்காய் சாதத்திற்கும் கோழி மிளகு வறுவலுக்கும் அன்றோடு மூடு விழா நடத்தப்பட்டது..
இப்படி எத்தனையோ உணவு வகைகள் சுப்ரியாவிற்கு பிடித்தாலும்.. விருப்பப்படி செய்ய முடிந்ததில்லை அந்த வீட்டில்..
இப்படித்தான் செய்யணும் இவ்வளவுதான் உப்பு போடணும்..! ஒரு பானை சோறு தான் வடிக்கனும்..
இஷ்டத்துக்கு காபி போட்டு குடிச்சா சக்கரையும் காபித்தூளும் காலியாகாம என்ன செய்யும்.. ஒரு கட்டுப்பாடு வேண்டாம்..! இப்படித்தான் உங்கம்மா வளர்த்து வச்சிருக்காங்களா..! சரி உங்க வீட்ல எப்படியோ.. எங்க வீட்ல எல்லாம் அளவுதான்.. ராட்சச பரம்பரை மாதிரி நாங்க தின்றதில்ல..!
மாமியார் நொடித்துக் கொண்டு செல்ல அடுத்த நிமிடமே.. சுப்ரியா ரொம்ப தலை வலிக்குது ஒரு டம்ளர் காபி போட்டு குடேன்.. என வந்து நிற்பாள் முதல் மருமகள் ஆராதனா.. ஒருவேளை அவள் வராமல் போனால் அண்ணன் அல்லது ராஜேஷ்..! இப்படி யாராவது வேளை கெட்ட வேளையில் காபி குடிக்கும் கணக்கை எதில் சேர்ப்பது..?
இதை வெளிப்படையாக சொல்லிவிட்டால் "அவங்க குடிக்கற காபிக்கும் திங்கற சோத்துக்கும் நீ கணக்கு பார்க்காதே..! உனக்கந்த உரிமை இல்லை.. நீயா உழைச்சு கொட்டற.. மாசம் பொறந்தா என் மொத மருமக அரிசி பருப்பு காய்கறின்னு பொறந்த வீட்டுலருந்து பைப்பையா தூக்கிட்டு வர்றா..! என் ரெண்டு பசங்களும் சம்பாதிக்கறாங்க.. என் வீட்டுக்காரருக்கு பென்ஷன் வருது.. நான் இந்த வீட்டுக்காக இத்தனை நாள் மாடா உழைச்சிருக்கேன் நீ என்ன செஞ்ச..! என்ற கேள்வி வரும்..
இந்த சுடுச் சொற்களுக்கு பயந்து யாருக்கும் பாரமா இருக்க விரும்பாது வேலைக்கு போக முடிவு செய்து கணவனிடம் அனுமதி வேண்டி நின்றால்..
"உன்னை முன்னாடி வேலைக்கு போக விட்டு பின்னாடி என்ன பிரச்சனை வரும்னு நான் வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கணுமா..! இந்த காலத்துல என்னென்னவோ நடக்குது.. நீ வேற பாக்க அழகா இருக்க..! பத்தாக்குறைக்கு உனக்கு வெளி உலக அனுபவம் குறைச்சல்.. உன்னால மேனேஜ் பண்ண முடியாது.. அதுவும் இல்லாம இப்ப வேலைக்கு போகணும்னு என்ன கட்டாயம்.. நான் தான் சம்பாதிக்கிறேனே..! நீயும் வேலைக்கு போயிட்டா அப்புறம் என்னை யார் பார்த்துக்குவாங்க.. அம்மாவுக்கு முன்ன மாதிரி இல்ல.. மூச்சு ரொம்ப இளைக்குது.. நடக்கவே சிரமப்படுறாங்க.. அண்ணிகிட்ட எதையும் எதிர்பார்க்க முடியாது.. நீ கொஞ்சம் அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கறத விட்டுட்டு வேலைக்கு போறேன்னு வந்து நின்னா என்ன அர்த்தம்..!" அவளை உட்கார வைத்து அப்போது மட்டும் உருக்கமாய் பேசுவான்.. இந்த வீட்டில் நீயின்றி அணுவும் அசையாது என்பதை போல்..
ஒவ்வொரு வாய் சோத்துக்கும் உங்ககிட்ட இடி வாங்க வேண்டியதா இருக்கே..! மாடு மாதிரி வேலை செய்யறதெல்லாம் எடுபடலையே.. தண்டசோறுன்னு ஒட்டுமொத்த குடும்பமும் குத்தி காட்டறீங்களே.. என வாய்வரை வந்த வார்த்தைகளை அப்போதைக்கு விழுங்கிக் கொள்வாள்..
"என்னங்க..! என்ன ஆச்சுங்க.." தர்மன் அழைக்க..
"ஆங்..!" என பேய் முழி முழித்தாள் சுப்ரியா..
"என்னங்க எப்ப பாரு கனவுலகத்துக்கு போயிடறீங்க.. நான் பேசுனது உங்க காதல விழுந்துச்சா இல்லையா..?"
"எ.. என்ன சொன்னீங்க..?"
இடுப்பில் கைவைத்து அவளை கண்கள் விரித்து பார்த்தான் தர்மன்..
"அடக்கடவுளே..! இவ்வளவு நேரம் நான் பேசினதெல்லாம் வேஸ்ட்டா..? இல்ல அது வந்து.. அன்னைக்கு கர்ப்பிணி பொண்ணுக்கு வரும் மசக்கையை பத்தி வாய் கிழிய பேசின நான்.. மாசமா இருக்கற பொண்ணுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காதுன்னு யோசிக்க மறந்துட்டேன் பாத்தீங்களா..? என்னை மட்டுமே யோசிச்சு கொஞ்சம் சுயநலமாக இருந்துட்டேன்.."
"அய்யோ..! அப்படியெல்லாம் இல்லைங்க.. நீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்கன்னு உங்களுக்கு புரியல.. அதுக்கு முன்னாடி இந்த சாப்பாட்டு விஷயமெல்லாம் ஒன்னுமே இல்ல.. பசிக்க விடாம வேளா வேளைக்கு சாப்பாடு வாங்கித் தருவதே என்னை பொறுத்த வரைக்கும் பெரிய உபகாரம்.. இந்த காலத்துல அதை கூட யார் செய்வா?"
"அப்படி இல்லைங்க..! கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டேன்.. இனி கவனமா இருந்துக்கறேன்.. அட சத்தியமா எனக்கு சமைக்க தெரியாதுங்க.. பொருளெல்லாம் வாங்கி போட்டா நீங்க சமைச்சிடுவீங்களா..! உங்களுக்கு சமைக்க தெரியுமா.. சமைக்க ஆள் ஏற்பாடு பண்ணலாம்.. ஆனா மாசம் எப்படியும் ஒரு அஞ்சாயிரத்துக்கு மேல கேப்பாங்க.."
"சமைக்க ஆள் எதுவும் தேவையில்லை.. எனக்கு நல்லாவே சமைக்க தெரியும்..!" அவன் தயக்கத்திற்கும் பொருளாதார புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சுப்ரியா..
அவன் கண்களில் ஒரு நிம்மதி தெரிந்தது..
"அப்ப சரி..! உடனடியா ரெண்டு நாளைக்கு தேவையான மளிகை சாமான் எழுதி எடுத்துட்டு வாங்க..! நான் எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டு வேலைக்கு கிளம்பறேன்.. மதியத்துக்கும் ராத்திரிக்கும் உங்களுக்கு தேவையானதை சமைச்சுக்கங்க.."
"பரவாயில்ல இருக்கட்டும்..! நீங்க ஃப்ரீயா இருக்கும்போது இதெல்லாம் பண்ணிக்கலாம்.. இப்ப நீங்க கிளம்புங்க.." சுப்ரியா நாசுக்காக மறுத்தாள்
"மதியத்துக்கு மறுபடியும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வாந்தியெடுக்க போறீங்களா..! சீக்கிரம் போய் எடுத்துட்டு வாங்க.. எனக்கு நேரமாச்சு..!" தர்மன் அவசரப்படுத்தவும் வேகமாக வீட்டிற்குள் ஓடியவளிடம் பேனாவையும் பேப்பரையும் எடுத்து தர அவசரமாக.. தன் மூளைக்குள் தோன்றியதையெல்லாம் லிஸ்ட் போட்டு எழுதி தந்தாள்..
லிஸ்ட்டை ஒருமுறை வாங்கி படித்துப் பார்த்தவன்.. "நல்லவேளை தமிழ்ல எழுதி இருக்கீங்க.. இங்கிலீஷ்ன்னா நமக்கு ஒன்னும் புரிஞ்சுருக்காது..!" என்று சிரித்தபடியே செருப்பை மாட்டிக் கொண்டு அவசரமாக மாடி படியிலிருந்து இறங்கினான்..
இரண்டு பாலிதீன் பைகள் நிறைய வேண்டிய பொருட்களை வாங்கி வந்தவன்.. "எல்லாம் சரியா இருக்கான்னு பாருங்க" என்று அங்கேயே தரையில் அமர்ந்துவிட..
"வேலைக்கு நேரமாகுதுன்னு சொன்னிங்களே..!" என்றபடியே கீழே அமர்ந்தாள் சுப்ரியா..
"எப்பவும் வேலை நேரத்தை விட அரை மணி நேரம் முன்னாடியே கிளம்பிடுவேன்.. இன்னைக்கு சரியான நேரத்துக்கு போய் சேருவேன்.. அவ்வளவுதான் வித்தியாசம்.. நீங்க பாருங்க..!" என்று அவசரப்படுத்தியதும்.. வாங்கிய காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் சரிபார்த்துக் கொண்டாள் சுப்ரியா..
"சரியா இருக்குது..!"
"எல்லா பொருளும் சேர்த்து ஆயிரம் வந்துடுச்சுங்க.. என்னங்க வெல வாசி இப்படி விக்குது.. போற போக்க பாத்தா தக்காளி வெங்காயம் தங்கம் ரேட்டுக்கு போயிடும் போலிருக்கு.." என்று விட்டு அவன் செருப்பை மாட்டிக் கொண்டு வேலைக்கு சென்று விட.. சுப்ரியாவிற்குள் ஏதோ முள்ளாக குத்தியது..
மதியம் சமைத்து உண்பதா வேண்டாமா என்ற நெடுநேர போராட்டத்திற்கு பின்பு தனக்கு மட்டும் சாதம் வடித்து கொஞ்சம் தயிர் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டாள்..! வாந்தியெடுத்து அமில கரைசலால் ரணமாகி போயிருந்த வயிற்றுக்கு புளிப்பும் குளிர்ச்சியுமான தயிர் கொஞ்சம் இதம் சேர்த்தது..
இரவில் அவளுக்கு மட்டும் சமைத்துக் கொள்ளவா.. அல்லது தர்மனுக்கும் சேர்த்து சமைக்க வேண்டுமா என தெரியவில்லை..!
அவன் அலைபேசி எண்ணை காலண்டரில் எழுதி வைத்துவிட்டுதான் போயிருந்தான்..
சுப்ரியாவின் அலைபேசி ராஜேஷ் வீட்டில் அந்த அறையை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தும் போது உள்ளேயே மாட்டிக்கொண்டது..! வெறுங்கையோடு அந்த ரிப்போர்ட்டை மட்டும்தான் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டு வந்தாள்..
இந்த வீட்டில் ஜியோ பட்டன் செல் ஒன்று இருந்தது.. ஏதாவது எமர்ஜென்சின்னா இதிலிருந்து கால் பண்ணுங்க..! என்று அந்த சின்ன கைபேசியை தூசி தட்டி தேடியெடுத்து அவளிடம் தந்து விட்டு தான் சென்றிருந்தான் தர்மன்..
வெகு நேர யோசனைக்கு பின் அவன் எண்ணுக்கு அழைப்பெடுத்திருந்தாள் சுப்ரியா..
வீல் சேரில் ஒரு நோயாளியை வைத்து ஸ்கேன் ரூம் வரை தள்ளி சென்று கொண்டிருந்த தர்மன் பாக்கெட்டிலிருந்த அலைபேசி ஒலிக்கவே எடுத்து பார்த்து கண்கள் சுருக்கியபடி காதில் வைத்தான்..
தேவையில்லாமல் சுப்ரியா அழைக்க மாட்டாள்.. வந்த நாளிலிருந்து ஒருமுறை கூட போனில் தன்னை தொடர்பு கொண்டதில்லை..
சொல்லுங்க என்றவனின் குரலில் லேசான பதட்டம்..
"இல்ல டிஃபன் செய்யப் போறேன்.. ராத்திரி எப்ப வருவீங்கன்னு சொன்னா உங்களுக்கும் சேர்த்து சமைச்சு வச்சுடுவேன்.."
என்ற கேள்வியில் வீல் சேரை இழுத்து பிடித்தவன் அப்படியே நின்றுவிட்டான்..
அவனுக்குள் ஏதோ சொல்ல முடியாத உணர்வுகளின் குறுகுறுப்பு..
"என்ன தர்மா.. என்ன ஆச்சு..?" சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தார்..
"ஒன்னுமில்ல" என்றபடி முகத்தை சாய்த்து கழுத்துக்கும் கன்னத்துக்கும் இடையில் ஃபோனை இடுக்கி கொண்டவன்..
வில் சேரை தள்ளியபடி "இல்லங்க நான் வர ரொம்ப லேட் ஆகும்.. நீங்க சாப்பிட்டு கதவை சாத்திட்டு படுங்க..! எனக்காக காத்திருக்க வேண்டாம்.." என்று சொல்லிவிட்டு அலைபேசியை துண்டித்தவன்.. தாராளமான புன்னகையுடன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு ஓடவும்..
"ஐயோ தர்மா மெதுவா..! ஏன் இப்படி ஓடற.. உன் சந்தோஷத்துக்கு என் உடம்பு தாங்காதுப்பா.." என அதில் அமர்ந்திருந்தவர் கத்தவும்தான் நிதானத்திற்கு வந்து.. "சாரிங்க" என்றபடி மீண்டும் மெதுவாக உருட்டினான்..
மறுநாள் காலையில் மருத்துவமனையில் தந்திருந்த ரத்த மாதிரிக்கான டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்குவதற்காக சுப்ரியாவையும் தன்னோடு அழைத்துச் சென்றிருந்தான் தர்மன்..
காயத்ரி முன்பு சுப்ரியா அமர்ந்திருக்க அவளுக்கு பின்னால் கைகட்டி தர்மன் நின்றிருந்தான்..
எப்படி சொல்வதென தெரியாமல் தயங்கியபடி இரு கைகளை கோர்த்தபடி அமர்ந்திருந்தான் காயத்ரி..
அவரிடம் சுப்ரியாவை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவிற்கு குற்றக் குறுகுறுப்பு..
"ஐ அம் சாரி சுப்ரியா..! உங்க பிளட் ரிப்போர்ட் நெகடிவ்.. ஆரம்பத்தில எடுத்த ரிப்போர்ட் பால்ஸ் ரிப்போர்ட்.." என்றதும் சுப்ரியா முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழத் துவங்க.. மனம் கனத்து அவளை நெருங்க ஒரு அடி முன்னால் எடுத்து வைத்த தர்மன் நான் பாத்துக்கறேன் என்று காயத்ரி கண்களை மூடி திறந்ததும் அப்படியே நின்று விட்டான்..
சந்தோஷம் நிம்மதியை காட்டிலும் இன்னும் பெருந்துயரமே அவளை தாக்கும் என்பதை உணர்ந்திருந்தார் காயத்ரி. இந்த மருத்துவ சோதனை குளறுபடியால் அவள் இழந்தது ஏராளம்..
வேற யாரோ ஒருத்தரோட ரிப்போர்ட்டை லேப்ல வேலை செய்யறவங்க தவறுதலா மாத்தி இருக்கணும்.. நாங்க பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டோம்.. இப்ப அந்த எச்ஐவி அஃபெக்டான ஆளு யாருன்னு கண்டுபிடிக்கலைன்னா எங்களுக்கு பெரிய பிரச்சனையாகிடும்.."
"உங்க பிரச்சனையை பாக்கறீங்களே.. என் நிலைமையை பத்தி யோசிச்சு பாத்தீங்களா..! நீங்க கொடுத்த தப்பான ரிப்போர்ட்னால நான் எங்க வந்து நிக்கறேன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா..?" சுப்ரியா முகம் சிவக்க கொதித்தாள்..
"என்னால உங்க நிலைமையை புரிஞ்சுக்க முடியுது சுப்ரியா..! தப்பு எங்க பக்கம்.. ஹாஸ்பிடல் நிர்வாகம் உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கு.. அன்ட் ரிப்போர்ட் காப்பி ஒன்னு எங்க ஹாஸ்பிடல் ஓனருக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கோம்..! இன்னைக்கு சாயந்திரம் அவர் உங்களை சந்திச்சு பேசுறதா சொல்லி இருக்கார்.. மன்னிப்பு கேட்கிறதை தவிர எனக்கு வேறென்ன சொல்றதுன்னே தெரியல..!" காயத்ரியின் தழைத்த பார்வையில் சுப்ரியா கோபம் தணிந்து அமைதியாய் இருந்தாள்..
தவறு தங்கள் பக்கம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்ட பிறகு.. அதன்பின் கத்தி கலாட்டா செய்வதில் எந்த உபயோகமும் இருப்பதாய் தெரியவில்லை அவளுக்கு..
ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து அமர்ந்தாள்..
அந்த நேரம் அவள் முன்பு வந்து நின்றான் ராஜேஷ்..
தொடரும்..

Last edited: